11 July 2011

பிடித்த மரம்!!

ஆடியும் வரப்போகுது  ஊர் என்றால் எங்காவது ஓடிப் போய் மரத்தில் ஏறி உஞ்சல் ஆடலாம் .


இல்லை மரத்தில் ஏறி நின்று குளிக்கப் போகும் எதிர்வீட்டு ராஜகுமாரியை அப்பப்ப வம்புக்கு இழுக்கலாம் .ஆத்தாடி பாவாட கூத்தாட என்றும்.

 குமரிகுளிக்க கிணற்றில் தண்ணி அள்ளித்தரவா என் இதயத்தைத் தரவா என்று  ஜாடைகாட்ட நாங்கள் ஏறி இருக்கும் மரம்தான் பூவரசு மரம்.

 இது எங்கள் ஊரில் அதிகம் சில இடங்களில் குளிக்கும் கிணறுக்கு அருகில் இருக்கும் .சில குடிக்கும் தண்ணீர் கிணறுக்கு அருகில் பச்சைப் பசேல் என்று குளிர்ச்சியாக இருக்கும்.

 மரத்தில் ஏறி கிணற்றுக்குள் குதித்தல் ஒரு இன்பம் அதற்கு நீச்சல் தெரியனும் மூச்சடக்கி அடிவரைபோய் மண் எடுத்துவந்தால் நண்பர்களிடம் நீங்களும் ஒரு விஜய்தான்

.பூவரசு மரம் ஒரு வித்தியாசமான பயன்பாடு கொண்டது நல்ல கதியால் தரும்,
 விறகு நிண்டு எரியக்கூடியது இடியப்ப உரல் செய்யலாம் ,

சிறுவர்களுக்கு நாதஸ்வரம் அதில்தான் தொடங்கும் பூவரசு இலையை சிறுபகுதியாக கிழித்து பீப்பீ என்றால் அழகான நாதம் வரும். கொஞ்சம் இலை கிழிந்தால் சாத்துவாய்(எச்சில்/வீனி/)வரும் அதில் கவனமாக இருப்பது உங்களின் கில்லாடித்தனம்.


பூவரசு மரத்தில் அழகான பூ பூக்கும் இது நான் மூன்று நிறத்தில் பார்த்திருக்கிறேன் .மஞ்சல் /வெள்ளை ,செம்மஞ்சல் என பார்த்தால் மனதில் மனோரஞ்சிதம் உண்டாகும் .

தலையில் சூடுவதும் இல்லை சாமிக்கு இது சாத்துவதும் இல்லை என்ன சாபம் என்று நான் அறியேன்.

 சில தேவதைகளுக்கு இதை கொடுத்து டூயட் பாடும் ஏழைக்காதாலர்களையும் பார்த்திருக்கிறேன்.

 இது எல்லாம் எங்கள் கிராமத்து பொற்காலம் பூவரசு இலையில் பாட்டி வடைசுட பயன்படுத்தும் கையில் உழுந்து ஒட்டாமல் நேர்த்தியாக மெதுமெதுப்பாக வரவும் எண்ணைத் தாச்சியில் தெறிக்காமல் இருக்க இப்படிச் செய்வதாக அன்நாளில் இன்ஜினியர் படிக்காத பார்வதி பாட்டி சொல்லியது இன்று பேரன் உளுந்து வடை சுட்டாலும் கையில் பாதி மாவு என்ன செய்வது பூவரசு இலை ஏற்றுமதி செய்ய இங்கு யாரும் முன்வரவில்லை.

பூவரசுவசு இலையை காணியில் இயற்கைப் பசலையாக போட்டால் எந்த கிருமியும் வந்து சேராது என எங்க தாத்தா விவசாய விஞ்ஞானம் படிக்காத மேதை சொல்லியதி ல் இப்படி ஒரு பாடத்தை பின்னாலில் படித்த போது பட்டதாரி ஆசிரியர் சொல்லித்தரவில்லை கேட்டதற்கு பூவரசம் கம்பால் பூசைதான். விழுந்தது.


பூவரசம்மரத்தில் குறுஞ்சாய் இலைக் கொடி செழிபாக படரும் நாங்கள் காசு ஒளித்துவைகும் உண்டியல் இந்த மரம்தான்.

 பெரிய பொந்துகள் இருக்கும் சிலருக்கு இதில் பாம்பு இருக்கு என்று கதை விட்டால் கிட்டவும் வரமாட்டார்கள் எங்க உண்டியல் பத்மநாமசுவாமிகோயில் போல கருணா நிதியின் குடும்பத்துக்கும் போகாது.

பூவரசம் மரத்தில் எப்போதும் கோடைகாலமான பங்குனியின் காண்டாவனம் பகுதியில் கவனமாக இருக்கனும்.

 அப்பத்தான் கறுப்பான முரளியை சிவப்பான ஹான்சிஹா ஆக்கும் மசுக்குட்டிகள்  குடும்பம் படை எடுக்கும் போர்க்காலம்.

அவை உடம்பில் பட்டால் சரியான கடி சொரி அதனால் உடம்பில் சிவப்பு கொப்பளம் வரும் நாங்கள் சண்டைகுப் போனால் கையில் ஆயுதம் தராது சர்வதேசம் .

மெதுவாக பூவரசம் இலையில் மசுக்குட்டியைப் பிடித்துக் கொண்டு போய் மல்யுத்த வீரனின் மேனியில் படவிட்டால் மாப்பூ சொரியும் நேரத்தில் நாங்கள் புறமுதுகிடவேண்டியது தான்.பிறகு என்ன கொஞ்சக்காலம் நாங்களும் ஓடி ஓளியனும் இல்லை எனில் பிறகு  வடிவேல் பாணிதான் அடிபலமோ ?

 கிராமத்து வெய்யிலுக்கு பூவரசம் நிழல் அகதியாகப் போனவனுக்கு புகழ் இடம்கொடுக்கும் தேசம்.

 நல்ல காற்று வீச பகல் நித்திரை கொள்ள சாக்குக்கட்டில் கொண்டு போகும் தாத்தாக்கள் பலரைப் பார்த்திருக்கிறேன் .குடித்த கள்ளு தெளியும் வரை அவர்கள் விடும் கொறட்டை யாழ்தேவி மிஞ்சாத ஒலி.

இந்த பூவரம் மரம் பல காதல்ஜோடிகளைக் கண்டிருக்கும் அவர்கள் வரம்பு மீறாத உள்ளத்தை நேசித்தவர்கள் .

சிலர் இதில் ஒரு முளக் கயிற்றில் உயிரை விட்ட கோழைகள் என்றாலும் இந்தமரத்தில் பலர் தமக்குப்பிடித்தவர்கள் பெயர்கள் பச்சைகுத்தும்  மாமல்லபுரம் கல் வெட்டு .

.
இப்படியான மரத்தில் மாற்றுக் கொள்கை கொண்டவர்களையும் மண்டையில் போட்ட போதுநடுநிலமை என்று மரமண்டையாக நின்ற அப்பாவிகள் பலர் வாய் போசாத நின்ற நிலையையும் பல எங்கள் ஊர் பூவரசு  பார்த்திருக்கிறது.

இதனை சிறப்பான மரங்களை எல்லாம் யுத்தம் என்ற கொடிய வாள் குற்றியிரும் கொலையுமாக எரித்தும் வெட்டியும் போட்டு எங்கள் கிராமத்துத் எழில் கெட்டுப் போய்விட்டது .

நாங்களும் பூவரசம் பூப்பார்த்து பலவருடங்கள் போய்விட்டது


.இந்தப்பாடலின் ஆரம்பமே பூவரசுடன் தொடங்குவது  சிறப்பு  பாடல் வரிகள் முத்துலிங்கம் என நான் ஜோசிக்கின்றேன்  நிச்சயம் இல்லை.

26 comments:

  1. பூவரசு விறகு நம்மூரில் அந்த மாதிரி விலை போகுமே ... உண்மையிலே பயனுள்ள மரம் அது ... இனி எப்போ காண்பேன் ((

    ReplyDelete
  2. நண்பா இன்டிலியில் இணைப்பதில்லையா ??

    ReplyDelete
  3. வாங்க பாஸ் நலமா?
    என்ன செய்வது இதன் பெறுமதி தெரியவில்லை பலருக்கு.

    ReplyDelete
  4. இனைத்திருக்கின்றேன் நண்பா. தமிழ்-10 இல் என்னால் முடியவில்லை பலதடவை முயன்றும். வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  5. வணக்கம் பாஸ், பூவரசு தொடர்பாக ஒரு கலக்கலான் பதிவினை எழுதியிருக்கிறீங்க. தூர தேசத்தில் வாழ்ந்தாலும் மண்வாசனையோடு இருக்கிறீங்க என்பதற்கு இப் பதிவில் வரும் இயற்கை வர்ணனை சான்று பகர்கின்றது.

    ReplyDelete
  6. வணக்கம் நண்பா!
    உணர்வுகள் இன்னும் ஊரைச்சுற்றியே வாழ்கின்றது ஆவிமட்டும் அங்கு உடல் இங்கு இப்படித்தான் பலரின் வாழ்வு நான் மட்டும் விதிவிலக்கா?

    ReplyDelete
  7. //மரத்தில் ஏறி கிணற்றுக்குள் குதித்தல் ஒரு இன்பம் அதற்கு நீச்சல் தெரியனும் மூச்சடக்கி அடிவரைபோய் மண் எடுத்துவந்தால் நண்பர்களிடம் நீங்களும் ஒரு விஜய்தான்//
    அடி தூள் மாப்பு!!

    ReplyDelete
  8. ம்ம் நிரூபன் கூறியபடி உங்கள் பதிவுகள் பெரும்பாலும் ஊரை சுற்றியே!!வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  9. அப்புறம் கந்தசாமி கூறியபடி இன்ட்லி பிரச்சனை பாஸ்,,,ஒன்றில் டிவோர்ஸ் எடுங்கோ அல்லது வடிவ்பா மெயின்டெயின் பண்ணுங்க பாஸ் ஹிஹி

    ReplyDelete
  10. நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  11. இனிமையான காலங்கள் கிராமத்துக்குள் வாழ்ந்த காலகட்டம் அதுதான் பதிவுகள் எல்லாம் அதன் எண்ணங்களைத் தாங்கிவருகிறது.

    ReplyDelete
  12. இண்ட்லி, தமிழ்-10 தொடர்ந்து கழுத்தறுக்குது என்ன செய்வது என தொழில்நுட்பம் தெரியாமல் முழிக்கின்றேன்.

    ReplyDelete
  13. இப்படித்தான் மாப்பிள அம்மா ஒரு தடவ கூப்பிட்டா...
    டேய் காட்டான் நல்ல ஒரு கம்பா முறிச்சுக்கொண்டு வாடான்னா நானும் குரங்கு ஏறாத கொப்பெல்லாம் ஏறி ஒரு பூவரசம் கம்ப முறிச்சு அம்மா கையில கொடுத்தேன் அதவாங்கி இந்த காட்டானை சாத்தியெடுத்துவிட்டா  காட்டானின் ஒரு களவை கண்டு பிடித்ததால்..!

    அன்றிலிருந்து அம்மா யாருக்கு கம்பு கேட்டாலும் கிளுவங்கம்புதான் மாப்பிள..?

    ReplyDelete
  14. ஆதவனின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி  நான் எல்லாம் அதிஸ்ட சாலி  பிரப்பம் கம்புதான் பேசியது.

    ReplyDelete
  15. மயிர்கொட்டிக்குப் பயந்த வீரன் நேசன்...அதுசரி எந்த வீரனும் இந்தச் சின்னப் புழுவுக்குப் பயப்படாமல் இல்லையே எங்கள் ஊரில்.

    பழைய நினவுகள் நீங்கள் கொட்டி எங்களை அள்ளவிட்டிருக்கிறீர்கள்.மனம் பறந்துகொண்டிருக்கிறது கோண்டாவிலுக்கும் சுவிஸ்க்குமாய்.

    இரவில குழப்படி செய்தா வெளில இருட்டுக்குள்ள அம்மா இருத்திவிடுவா.பிறகென்ன நிலவு வெளிச்சத்தில பூவரசு அசைய ஐயோ அம்மா பேய் வருதெண்டு ஒரே குழறுதான்.அதுக்குப் பிறகுதான் அடி வாங்கி உள்ளுக்குப் போய்ப் படுக்கிறது !

    எங்கள் அம்மம்மா தனக்கு நெஞ்சாங்கட்டை வைக்கெவென்றே 40-50 வருடப் பூவரசு மரமொன்றை வெட்டாமல் வச்சிருந்தா.அதேபோல அவ இறந்த அன்றைக்கே அதுவும் இறந்தது !

    ReplyDelete
  16. ஹேமா இந்தப்பதிவை எழுதும் போது ஒரு ஆதங்கத்துடன் தான் பதிவு செய்தேன் ஆனால் பலருக்கு இந்த நண்பனுடன் பழைய நினைவுகளைக் ஞாபகப்படுத்தும் ஒரு பதிவா இருப்பது பலரின் பின்னூட்டம் மூலம் தெரிகின்றது இப்போது இதை பணம்காய்க்கும் மரமாகப்பார்ப்பது வேதனையானது. கோண்டாவில் சந்தியில் ஒரு சாப்பாட்டுக்கடை இருக்கிறது வடமராட்சி போகும் வியாபாரிகள் கோப்பிகுடிக்கவும் சாப்பிடவும் நிறுத்துவது அதன் முன்னால் இருக்கும் பூவரசு மரத்துடந்தான் நான் பலதடவை அவ்விடத்தில் குட்டித்தூக்கம் போட்ட காலங்கள் இன்னும் கண்ணுக்குள். கால ஓட்டம் இழப்புக்குகள் ஈழத்தமிழனுக்கு  கொஞ்ச நஞ்சமா?
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.

    ReplyDelete
  17. பாஸ் எனக்கு ரெம்ப புடித்து இருக்கு இந்த பதிவு
    பல நினைவுகளை மீண்டும் மீட்ட உதவியதற்கு நன்றிகள் பல

    ReplyDelete
  18. உங்கள் அழகிய எழுத்துக்குள் அடைபட்டு பூவரசம் மரமும் பெருமைப்பட்டு விட்டது நண்பா

    ReplyDelete
  19. நன்றி துஷ்யந்தன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  20. எப்போதும் பூவரசு அழகுதான் நண்பா தனிமரம் தலையில் ஐஸ்மழையைத் தூவாதீர்கள் இன்று வெளியில் அதிகமழை.

    ReplyDelete
  21. பூவரசைப்பற்றி சொன்ன விதம் அழகு,,
    வாழ்த்துக்கள்...

    சகோ..அப்பவும் தொடக்கத்தப்பார்த்திட்டு இன்று பாட்டு ரசனை ஒன்றும் இல்லையோ என்று படித்துக்கொண்டு வந்தேன்...கடசியில அப்பிடியே நடந்திச்சு.

    ReplyDelete
  22. சிறுவர்களுக்கு நாதஸ்வரம் அதில்தான் தொடங்கும் பூவரசு இலையை சிறுபகுதியாக கிழித்து பீப்பீ என்றால் அழகான நாதம் வரும். கொஞ்சம் இலை கிழிந்தால் சாத்துவாய்(எச்சில்/வீனி/)வரும் அதில் கவனமாக இருப்பது உங்களின் கில்லாடித்தனம்./


    பழைய நினைவுகள் படமாய் ஓடுது..
    எத்தனை பீப்பீயை ஊதி கிழிச்சிருப்பம்....hahaha
    எங்க schoolற்கு பக்கத்தில பூவரசு மரம்தான் அதிகம்..sirஅடிக்கிறதுக்கு அதிலதானே முறிச்சு வைக்கிறது அதுவும் மொத்ததடியாய்..
    ஏனென்றால் boys தான் கூட அடி வேண்டிறது,,,,,,haha

    ReplyDelete
  23. பாடல் இல்லாமல் தனிமரம் இல்லை பொருத்தமான வேளையில் பாடல் சேர்க்கனும் என்பதே என் ஆவல்!

    ReplyDelete
  24. நன்றி விடிவெள்ளி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.உண்மையில் பூவரசம் கம்பால் வாங்கின அடிதான் அதன் மீது பாசம் வரக்காரணம் போலும்!

    ReplyDelete
  25. யோவ் மாப்பிள இன்னோரு கருத்தும் போட்டன் அது எங்கே வெட்டிபுடுவன் வெட்டி..

    ReplyDelete
  26. வாங்க காட்டான் உங்கள் கருத்தை கூகுள் சதி செய்துவிட்டது என்னிடம் சேர்க்காமல்.

    ReplyDelete