10 September 2011

சிற்பி இருக்கு சிந்தனை?!!

மெரினா போனால்  அருகில் இருவரின் சமாதியை கண்டிப்பாக  பார்க்கனும்! ஒன்று பேர் அறிஞ்ஞர் அண்ணாத்துரையின் ஆத்மா.

 இவரின் இதயத்தை கடன் கேட்டு ஆட்சி செய்தவர் .இப்போது திஹார் ஜெயிலுக்கு நடைபயணம் போகின்றார்.

அண்ணாவின் வேலைக்காரி  நாவல்
மிகவும் சுவாரசியமாக இருக்கும் வாசிக்க

 .
மற்றயைய சமாதி எங்கள் இதயதெய்வம் M.G.இராமச்சந்திரான் அவர்களுடையது .அணையா தீபம் ஒளிர்கின்றது .


பல்லாயிரக்கணக்கானவர்கள் தினமும் வந்து பார்வையிடும் இடம் நானும்  தொடர்ந்து வருகின்றேன்.

 இங்கு . பார்ப்பதற்கு மிகவும் அமைதி தரும் இடம் .




இதோ இந்த கடைத் தொகுதியில் கடலில் இருந்து பெறும் சிற்பி , சங்கு சோகியில் அழகியச் வேலைப்பாடுடன் கூடிய மாலை மற்றும் ஞாபகச் சின்னங்கள், ஆடை ஆபரணங்கள் அலங்கரிக்கின்றது.

உங்களுக்குப் பிடித்தவர்களின் மச்சாள் பெயராகவும்.  இருக்கலாம் எதிர் வீட்டு பிரியவதனாவின் பெயராகக்கூட அரிசியில்

எழுத்துருக்கள்  பொறிக்கப்பட்டு  உடனடியாக பெறமுடியும்.

இந்தப் பகுதியில் பலருடன் நீங்கள் கைகுழுக்கலாம் கட்டிபிடிக்கலாம் .ஏன்? பிரென்ஞ் முத்தம் கூடக் கொடுக்கலாம்.

 இவர்களைத் தேடி நீங்கள் அவர்கள் வீட்டுக்கோ! படப்பிடிப்புத் தளத்திற்கோ!

 வீண் காசு செலவலித்துப் போகத்தேவையில்லை.

 உங்களை காத்திருக்க வைத்து பொறுமையை சோதிக்க மாட்டினம் .

ஆர்வக் கோளாற்றில் கையை அங்கே இங்கே தொட்டு  விட்டால் அதற்காக பாதனியால் சங்காரம் செய்ய மாட்டினம்.

 இத்தனை சிறப்பு மிக்க


இடம் தான் பிரபல்யங்களுடன் புகைப்படம் எடுக்கும் காட்சியறை இருக்கின்றது.

  நானும் எனக்குப் பிடித்த நடிகையுடன் படம் எடுக்க தொடர்ந்து முயற்ச்சிக்கின்றேன். முடியவில்லை  அவங்க யாரு தெரியுமா?

தமிழ்சினிமாவில் முதல் முறையாக டேய் எடுபட்ட பயலே !வக்கனையா பேசத்தெரியுது?அடிப்பாவி நான் பெத்த மயிலு வசனம்


 புகழ் காந்திமதி தான் எனக்குப் பிடித்தவங்க.

 எங்க பாட்டி மாதிரியே திட்டுவாங்க பாருங்க.

 அதிகாலைத் தூக்கம் பறந்து போய்விடும் .கடைசியா அவங்க அஸ்தியை கடலில் கரைத்து விட்டாங்க இந்தப் பேரன் இல்லாமல் .!

அதுதான் கடலில் தேடுகின்றேன் சில மெனங்களுடன்!

எப்போதும் சுருக்குப் பையில் வைத்திருந்து தரும் சில்லறைகள்,பேய் பிசாசு காத்துக்கருப்பு பிடிக்கக் கூடாது என் பேரனை என்று வாஞ்சனையோடு பூசிவிடும் வீபூதி!

வளரும் பிள்ளை என்று பசுப்பால் கோப்பியை எனக்கு பாசத்துடன் அதிகாலையிலும் ,இரவிலும் பரிமாறும் அவங்களை நினைக்கும் போது மனசு மீண்டும் என் கிராமத்து தெருக்களில் அலைகின்றது.

 வெள்ளைச் சாரியில் பலதடவை என் உயிர்காத்த  செயல் என்னி!

பேரன் பசிதாங்கமாட்டான் என்று பண்போடு தான் இடித்து ஊட்டிவிட்ட அரிசிப் பொறிமா!

நான் பட்டணம் போனாலும்!   பக்கத்து வீட்டு சீலா கிராமத்துக்கு தேருக்குப் போனபோது இதை அவனிடம் கொண்டு போய் கொடு என்று அனுப்பியவை !

ஏதோ மணக்கின்றது அந்த ஆச்சி தந்துவிட்டா என்று எள்ளி நகையாடினால்  பட்டணத்தின் வாசத்தில் ஊறிய சீலா !அவளுக்குத் தெரியாது அது  அரிசிப்பொறிமா மணம் அல்ல மறக்காத பாசம் என்று!!

இந்தப்பதிவு  காந்திமதிக்கு அஞ்சலி



 
அந்தப் பாட்டிக்கு என்ன செய்தேன் இந்தப் பேரன்?
நான் கிறுக்கியவை இங்கே!http://nesan-kalaisiva.blogspot.com/2011/05/blog-post.html?m=1

20 comments:

  1. பாட்டி காந்திமதி ஒரு நல்ல நடிகை...கடல்கரை அனுபவ பதிவு நல்லாயிருந்தது...

    ReplyDelete
  2. ஈடுபட்ட சிறுக்கி எண்டு அந்த அம்மா பேசும்

    ReplyDelete
  3. வணக்கம் சார், மெரீனா பீச்சுக்கே போய் வந்த மாதிரி இருக்கு! அப்புறம் காந்திமதி மேடம்! - கலைஞர்கள் காலத்தால் சாவதில்லை! அருமையான தொகுப்பு சார்!

    ReplyDelete
  4. அருமையான நெகிழ்ச்சியான பதிவு மக்கா, மனசு கிடந்து துடிக்குது...

    ReplyDelete
  5. அழகான மனசை தொட்ட பதிவு

    ReplyDelete
  6. காந்திமதி அம்மா எனக்கும் ரெம்ப பிடித்த நடிகை...
    ரெம்ப வித்தியாசமான தனி தன்மை வாய்ந்தது அவங்க நடிப்பு...
    அவங்க இழப்பு மிக பெரியதே...
    காந்திமதி அம்மாவை தமிழ் சமிபத்திய சினிமா நன்கு பயன் படுத்தாமல் விட்டது துரதிஸ்ரமே....

    ReplyDelete
  7. காந்தியம்மா பேசிய வசனங்கள் மிக பிரபலம்.அதுவும் அவர் வெற்றியின் சாட்சிதான்,

    ReplyDelete
  8. மெரீனாவில் ஆரம்பித்து காந்திமதிவரை நல்ல சிந்தனை தான்..

    ReplyDelete
  9. நல்லா இருக்குது.....

    ReplyDelete
  10. // இவரின் இதயத்தை கடன் கேட்டு ஆட்சி செய்தவர் .இப்போது திஹார் ஜெயிலுக்கு நடைபயணம் போகின்றார்///

    மிகவும் அற்புதமான வரிகள்.

    மறக்கக்கூடிய நடிகையா காந்திமதி இனி இப்படி ஒரு நடிகை எப்போது தமிழ் சினிமாவுக்கு கிடைக்கப்போகின்றாரோ..அவரது ஆத்மா சாந்திஅடைய பிராத்திப்போம்

    ReplyDelete
  11. வணக்கம் பாஸ்,
    சிப்பி பற்றிய நினைவுப் பகிர்வுகளோடு, காந்திமதி அம்மா பற்றிய நினைவுகளையும் பகிர்ந்திருக்கிறீங்க.

    காந்திமதி அம்மாவிற்கு என் அஞ்சலிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  12. நன்றி ரெவெரி உங்களின் கருத்துக்கும் வருகைக்கும்!

    ReplyDelete
  13. நன்றி கவிஅழகன் உங்களின் கருத்துக்கும் வருகைக்கும்! நீங்க என்னப்பேசுறீங்கலோ! ஹீ ஹீ

    ReplyDelete
  14. நன்றி ஐயா ஐடியாமணி சார் உங்களின் கருத்துக்கும் வருகைக்கும்! ஏதோ உங்க பக்கம் காற்றுவாங்கப் போனோம் இப்படியும் இந்தப்பக்கம் பதிவை செய்தோம்!

    ReplyDelete
  15. நன்றி மனோ உங்களின் கருத்துக்கும் வருகைக்கும்! மனசு துடிக்கும் மெரினாவில் நாஞ்சில் குளிக்கனும் என்று/ ஹீ ஹீ

    ReplyDelete
  16. நன்றி துஷ்யந்தன் உங்களின் கருத்துக்கும் வருகைக்கும்!  உண்மையில் காந்திமதியின் நாடகமேடை அனுபவம் அவரை காத்திரமான பாத்திரங்கள் செய்ய உதவியிருக்கும்!

    ReplyDelete
  17. நன்றி செங்கோவி ஐயா உங்களின் கருத்துக்கும் வருகைக்கும்!  உந்த சிந்தனை எல்லாம் கமலா காமேஸ் அம்மாவின் வழிகாட்டல்தான் புரிந்து கொண்டு பின் தொடர்வதற்கு!

    ReplyDelete
  18. நன்றி ஆகுலன் தம்பி உங்களின் கருத்துக்கும் வருகைக்கும்!  இந்த ஓட்டம் ஓடுறீங்க ஓ டெனிஸ் விளையாட நேரம் வந்திட்டுதோ!

    ReplyDelete
  19. நன்றி கே.எஸ்.எஸ் .ராஜ் தம்பி உங்களின் கருத்துக்கும் வருகைக்கும்!  

    ReplyDelete
  20. வணக்கம் //இது காலை நேரம்...
    !நன்றி  நிரூபன் உங்களின் கருத்துக்கும் வருகைக்கும்!  

    ReplyDelete