13 October 2011

நொந்து போகும் ஒர் இதயம் -5

இந்தத் தொடரில் யாரையும் மனம் நோகும் எனில் இங்கேயே மன்னிப்பைக் கோருகின்றேன்!


//>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>மன்னாரும் என் பிரிவுக்கு உட்பட்டதால் அங்கும் ,வேலை செய்வதால் மொயூத்தின் அங்கிருக்கும் கடைக்கும் போய் வருவதால் அவர்களின் குடும்பத்தவர்கள் எல்லோரையும் எனக்குத் தெரியும்!

முன்னர் இவர்களும் வடக்கில் இருந்தவர்கள்! அக்காலத்தில் நடந்த துயரமான சம்பவத்தால் மதவாச்சியில் இருந்துவிட்டு மீண்டும் தொழில் நிமித்தம் மன்னாரில் குடியேறியவர்கள்!

   மொயூத்தின் திறமையால் இரு இடங்களிலும் வியாபார நிறுவனத்தை நடத்துகின்றார் !

அவரின் முத்த மருமகன்  ராபீக் இங்கும். மற்றவர்கள் மன்னாரிலும்   இருக்கின்றனர்.

 அக்ரம் மொயூத்தின் இரண்டாவது மருமகன்.  என்னுடன் வேலை செய்பவன் .

அதனால் இவர்கள் குடும்பத்துடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.

 மதங்கள் கடந்து நாங்கள் நண்பர்களாக இருப்பது பல இடங்களில் வேலையில் நண்மையைத் தருகின்ற செயல்.

 ஏன் எனில் தனியார் துறையில் விற்பனை அளவு நிர்னையம் இருக்கின்றது.

 ஒவ்வொரு மாதமும் எங்கள் விற்பனை அதிகரிக்க வேண்டும். அப்போது தான் நம் வருமானம் கூடும் !

அடிப்படைச் சம்பளத்தை விட இந்த செயல் மூலம் தான் அதிகமான வருவாயை ஈட்ட முடியும்.

 மண்ணைக் கட்டிக் கொடுத்தாலும்   பொன் என்று விற்பவனே விற்பனையாளன்  அப்படித்தான் நம் தனியார் துறையின் தாரகமந்திரம் ஒரு விற்பனைப் பிரதி நிதிக்கு

 .இது மட்டுமல்ல வியாபாரத்தில் சிலருடன் அதிக தொடர்புகள் உறவு முறையைக் கைக்கொண்டால் நம் செயல்பாடு வெற்றிகரமாக இருக்கும் என்பதை என் தந்தை எனக்கு கற்றுத்தந்த பாடம்.

மொயூத்திற்கு ஆண் வாரிசு இல்லை என்ற ஏக்கம் தனிமையில் கதைக்கும் போதெல்லாம் என்னிடம் வெளிப்படையாக பேசுவார் .

அல்லா எனக்கொரு குறையும் வைக்கல ஆனால் ஒரு மவன் இருந்தால் இன்னும் உதவியாக இருந்திருக்கும்!

 நாலாவது  மகளுக்கும் நிக்கா வைக்கப் போறன் மாத்தயா!

 அந்த நேரம் உங்கட உதவி வேனும் .

நிச்சயமா செய்வன் பாய் நீங்க ஜோசிக்காமல் கேளுங்கோ என்ன இப்படி மாத்தயா போட்டு மட்டும் பிரிச்சுப் பார்க்காதீங்கோ என் பெயரையே சொல்லிக் கூப்பிடுங்கோ !
பாய் உங்கமகனின் வயது என்று நினையுங்கோ

!நானும் மொயூத் வாப்பா என்றும் சமயங்களில் பாய் என்றே அழைப்பேன் !

இதுவும் ஒரு உளவியல் தன்மை எனலாம் பெரியவர்களை கொஞ்சம் மதிப்புக்கொடுத்தால் நாம் நம் தேவைகளை நிறைவேற்றலாம் தானே!

என்னிடம் பாய் உதவி கேட்டது என் பொருளாதார நிலமை அறிந்து அல்ல!

  விற்பனைப் பிரதி நிதி வேலையில் பணம் புரலும்!
 தேவையான போது ஒருநாள் ஒரு வாரம் என சுழற்ச்சி முறையில் பணத்தினை கைமாற்றம் செய்யலாம்!

 இப்படி கைமாற்றி சிலர் கையாடல் செய்து பணத்துடன் ஓடிப்போனதும் பலர்!

 என்றாளும்!

 வீழ்ந்து போன விற்பனைப் பிரதிநிதிகளும் அதிகம்!

இப்படியான சில நடைமுறைச் சிக்கல் பல தனியார் துறையின் வியாபார நிறுவனங்களுக்கு வந்த படியால் தான் !
பின்நாளில் முற்பணமாக (டிப்போசிட்) வரைமுறை நடைமுறையில் வந்தது என்பதும் நிஜம்.

  மொயூத்  போய்க் கொண்டிருக்கும் போதே மறுபக்கமாக பிரபு தன் சைக்கிளை மிதித்த படி வசந்தித் தியேட்டர் அருகால் பாடசாலைவிட்டு  வெளிவந்தான்  !

அவனும் என்னிடம் வந்து கதை கொடுத்தான் அப்புறம் தனிமரம் யாரோ சொந்தங்களுடன் பேசிக்கொண்டிருந்திச்சு!

 . அப்ப இனி நமக்கு எல்லாம் உதவி என்கிறாய்! என்று பீடிகை போட்டான்!என்ன சொல்கிறாய் ரவி? ஒன்றும் புரியவில்லை!

 சரி அதை விடு உன் விடயமாகத்தான் இங்காலப்பக்கம் வந்தன் அந்தப்பிள்ளையைக் காட்டவில்லையே?
 உன் எதய தேவதை யாரு ? அக்காலத்தில் லவ்டுடே நகைச்சுவை மிகவும் புகழ்பெற்றது. இதய தேவதை என்பதை அப்பட இயக்குனர் பாலசேகரன் இப்படி மாற்றிப்பேச வைத்து வையாபுரியையும் தாமுவையும் கலாய்த்திருப்பர்.

 பின்னாலில் பாலசேகரன் இன்னொரு படத்துடன் திரையுலகை விட்டு மாயமாகிவிட்டார்!

 நம்மாளுகூடத்தான் நீ பேசிக்கொண்டு இருந்தாய் நம்ம மாமா உனக்கு தோஸ்த்து   எனக்கும் தைரியம் கூடியிருக்கு!

 என் காதலைச் சொல்லப் போறன் பார்த்திமாவிடம்!ரவி விளையாடுகிறாயா! இல்லை சீரியஸ் என்ன தனிமரம் இதில் விளையாட என்ன இருக்கு எனக்கு அவளைப் பிடித்திருக்கு!
 அவளுக்குப் பிடிக்குமா ? பிடிக்குறமாதிரி நடக்கிறன்.

 எனக்கு அவள்தான் இனி எல்லாம் ! தலையில் இடி விழுந்ததைப் போல் நான் சிந்தனை குழம்பி நின்றேன்!


மாத்தயா-சகோதரமொழியில்- அதிகாரி  copy

26 comments:

  1. இனிய காலை வணக்கம் பாஸ்.

    விற்பனைப் பிரதிநிதிகளின் தொழில் தந்திரங்களையும், ஒருவரைக் கையிற்குள் போட்டு காரியம் ஆற்றும் சமயோசித வேலைகளையும் சொல்லியவாறு தொடர் நகர்கிறது.

    அடுத்த பாகத்தில் பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. உங்கள் கதையில் நிரூபன் பாஸ் சொன்ன மாதிரி விற்பனை பிரதிநிதிகளின் தந்திரங்களையும் அவர்களின் வலிகளையும் தொட்டுச்செல்கின்றது

    ReplyDelete
  3. அடுத்த பகுதியில் ஒரு காதல் காவியம் வரும் போல..

    ReplyDelete
  4. தனிமரம் துணை மரம் தேடுதா..
    தொடரட்டும் தொடர்கிறேன்

    புலவர் சா இராமாநுசம்





    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  5. தொடருங்கள் தொடர்கிறேன்

    ReplyDelete
  6. கரெக்டா தலையில் இடி விழும்போதா நிறுத்துவது? அப்புறம் என்னா சொன்னீங்க/பண்ணீங்க....சொல்லுங்க நேசரே.

    ReplyDelete
  7. ஒருவர் பேசுவதைக் குறிப்பிடும்போது “ “ - என இரட்டை அடைப்பானுக்குள் குறிப்பிடுவது தொன்று தொட்டு வரும் வழக்கம். அது இல்லாமல் பேசுகிறீர்களா, யோசிக்கிறீர்களா என்பதே குழம்புகின்றது...புது ஸ்டைல் எதுவும் முயற்சி செய்கிறீர்களா?

    அதே போன்றே ஒவ்வொரு வாக்கிய முடிவிலும் ஆச்சரியக்குறி எதற்கு? ஆச்சரியமான விஷயத்தைச் சொல்லும்பொது தானே ஆச்சரியக் குறி தேவை..

    நான் கேட்பது சரி தானே?

    ReplyDelete
  8. ஆதலினால் காதல் செய்வீர்...!

    ReplyDelete
  9. தனிமரத்தில் காதல் கனி...!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  10. இனிய காலை வணக்கம் நிரூ!
    நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் !

    ReplyDelete
  11. நன்றி நண்டு@நொரண்டு வருகைக்கும் கருத்துக்கும்!

    ReplyDelete
  12. நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும் பொறுத்திருங்கள் என்ன நடந்தது என்று சொல்கின்றேன்!

    ReplyDelete
  13. நன்றி புலவரே வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  14. நன்றி M.R  வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  15. அப்படி நிறுத்துவது தானே நாடக இயக்குனர்கள் செயலாக இருக்கு அதை நானும் கையாண்டேன்! செங்கோவியாரே!

    ReplyDelete
  16. இனி வரும் தொடரில் இதனை சரி செய்கின்றேன் நன்றி  தவறினைச் சுட்டிக்காட்டியதற்கு .வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி செங்கோவி பாஸ்!

    ReplyDelete
  17. மனோ அண்ணாச்சி இப்படி காதல் கனி என்றாள் நான் வாத்தியாரிடம் தான் போகனும் இதயக்கனியைத் தேடி /ஹீ ஹீ
    நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  18. கொஞ்சம் பிஸி.படிக்காததையும் படித்துவிட்டேன்.தொடருங்கள் ,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. தனி மரம் தோப்பு போல...

    தொடருங்கள் ...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  20. வியாபாரத்துக்கு அப்பால் இருக்கும் அந்த உறவு எனக்கு பிடிச்சிருக்கு இது தான் கட்சிமட்டும் மகிழ்வை தரும்

    ReplyDelete
  21. காதல் வந்திருச்சோ.. ஆஹா ஓடி வந்தேன்ன்... விற்பனையாளர்களின் தந்திரங்களை பற்றிய பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  22. நன்றி சண்முகவேல் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  23. நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  24. நன்றி கவி அழகன் வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  25. நன்றி மாய உலகம் வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete