16 October 2011

நொந்து போகும் ஒர் இதயம்-6

//
இத் தொடரில் யாரையாவது மனம் நோகும் வகையில் எழுதியிருந்தால்..................
 இங்கேயே மன்னிப்பைக் கோருகின்றேன்!

//////:::::///
சாத்தியம் இல்லை." நீ வேறுமதம் அவள் வேறு மதம் "

"உனக்கு இன்னும் உலகம் புரியலடா .நீ போகவேண்டிய தூரம் இன்னும் தொடங்கவில்லை.

 உயர்தரம் இப்போது தான் தொடங்கியிருக்கின்றாய். கல்வி என்ற பெருங்கடலில் இது இரண்டாம் பாகம் நீ இருப்பது.

 இப்போது உன் சிந்தனை உயர்தரம் முடித்து பல்கலைக்கழகம் போவதாக இருக்கனும்.

 அதைவிடுத்து அடுத்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாமல் இருக்கும் யுத்த நிலைப்பகுதியில் நின்று கொண்டு காதல் செய்யப்போறியா?

 அதுவும் ஒரு இஸ்லாமிய மங்கையை! எப்போதும்  நம் கனவுகள்  நம் கைகளுக்கு இருக்கனும். கைகள் நீண்டு அடுத்தவன் மூக்கில் குத்துவது சமூகப் பிரச்சனையாக மாறிவிடும்.

 ஏற்கனவே நாம் இங்கு பிரித்தாலும் ஆட்சிக் குழுக்கலால் முட்டிமோதுகின்றோம்.

 இந்த நிலையில் இது உனக்கு தேவையில்லாத ஒரு வலியான விடயம்.

 நான் முத்தவன் உனக்கு." என் சொல் கேள் காதல் கருமம் என்று உன் கல்வி என்ற வாழ்க்கைத் தீபத்தை அணைத்து விடாதே"

 மீண்டும் ஏற்ற அதிககாலம் பிடிக்கும்.
 2 வருடம் மிகவும் ஒரு துறவி போல் எதிலும் பற்று வைக்காமல் கல்வியை நேசி .

உன் குடும்பத்திற்கு வழிகாட்ட வேண்டிய
நீயே வழிமாறிப் போய் விட்டில் பூச்சி ஆகதே.

"இன்னொரு பெண்மனசில் வீணாக காதல் தீயை வார்த்து . அவர்களின்  கல்வி முன்னோற்றத்திற்கு தடை போடாதே.  "

தரப்படுத்தல் கல்வித்திட்டம் போல் ! அதுவரை அமைதியாக இருந்த ரவி என்னிடம்.

 இதப்பாரு தனிமரம்  உனக்கு உள்ளுக்குள் இருக்கும் இஸ்லாமியர் மீதான  தப்பான அபிப்பிராயத்தை! மாற்றப்பாரு.

 நீங்கள் எல்லாம் சேர்ந்து அவங்கட நிலத்தைப் பறித்துக் கொண்டு வெளியேற்றி  விட்டு நல்லவர்கள் போல் நடிக்காத..


  எனக்கு இப்ப உதவி செய்ய முன்வராட்டியும் பறுவாயில்ல.

 உபதேசம் செய்யாத!

 நான் ஒன்றும் உன்னைப் போல சீதனத்துக்கு பார்த்துக் கொண்டு இருக்கும் ஆம்பிள்ளை இல்ல.

 மனசுக்குப் பிடித்த விடயத்தை செயலில் செய்ய நண்பனாக உதவாட்டியும் பறுவாயில்லை .
"மூலச் சலவை  செய்து என் காதலை முளையில் கிள்ளியெறியும் காரியத்தில் கோடாரி போல் முன்வராத"  அது நம் நட்புக்கு கேடாக அமையும்.




 நான் போறன் என்று என் மீது இருந்த கோபத்தை சைக்கிள் பெடல் மீது காட்டி எட்டி மித்துதுப் போய்க்கொண்டே இருந்தான். .

எதிரே இந்திரா திரையில் முஸ்த்தப்பா விளம்பரத்தில் நெப்போலியன் என்னைப் பார்த்து கண்கலங்குவது போல் இருந்தது.




 இவனிடம் இப்படி ஒரு வார்த்தை வரும் என்ற கோணத்தில் நான் ஜோசிக்கவில்லை.

 ஒரு காதல் ஆரம்பமே மனதில் மறக்க நினைக்கும் வலிகளை மீளவும் தட்டி எழுப்பும் .எண்ணங்கள் ஊடாக இவன் என்னைப் புரிந்து கொண்டது இவ்வளவு தானா?
 எங்கோ நடந்த தவறுக்கு

நான் என்ன செய்ய முடியும் இத்தனை இஸ்லாமிய உறவுகளுடன் தொழில் நிமித்தம் பழகும் எனக்கு அவர்கள் மீது உள்மனதில் வெறுப்பு என்ற கருநாகத்தையும் அல்லவா விதைத்துவிட்டுடான் .

 குழப்பத்தில் நான். பிரதான பாதையில் நிற்கும் போது .







ஐயே கோமத. மொக்கட்ட மெத்தனம் இன்னே?
(அண்ணா நலமா,என்னத்திற்கு இங்கே நிற்கின்றீர்கள்)  என்றவாரே என்  அருகில் தன் கரங்களை  நீட்டினாள் சாலிக்கா.

 . ஒரு நண்பன் வருவான் மதவாச்சி போகனும் என்றேன் நிஜம் என்பதைப் போல் பாவனையில். அப்படியா! நானும் அங்காலதானே போறன் நீங்களும் வாங்கோ என்றாள் .நண்பனுக்கு கைபேசியில் அழைத்துப்பாருங்கள்.

" எங்கே இருக்கான் என்று கேளுங்க" என்றவாரே கேட்டவள் என் பின் புறப்பக்கத்தின்  பொக்கட்  மீது  கைவைத்தாள்!

28 comments:

  1. "மூலச் சலவை செய்து என் காதலை முளையில் கிள்ளியெறியும் காரியத்தில் கோடாரி போல் முன்வராத" அது நம் நட்புக்கு கேடாக அமையும்.
    //
    இப்படித்தாங்க நாம அவங்க நல்லதுக்கு சொல்றது முதல்ல அவங்களுக்கு புரியாது,ஆனா சீக்கிரத்தில் புரிஞ்சுக்குவாங்க!

    ReplyDelete
  2. வணக்கம் பாஸ்,
    கதை சுவாரஸ்யமாகப் போகிறது.

    பின் பாக்கட்டில் கை வைத்த போதே சஸ்பென்ஸ் தொடங்குகிறது...

    ReplyDelete
  3. கூடா நட்பு கேடாகும் எனும் வாக்கிற்கு மாற்றாக இங்கே நண்பனை நல் வழிப்படுத்தி இன மோதலை உருவாக்கும் காதலில் இருந்து பிரிக்க நினைக்கும் தனி மரத்தின் நல்ல செயலைத் தாங்கியவாறு பதிவு நகர்கிறது.

    ReplyDelete
  4. நல்லாருக்கு!அட்வைஸ் பண்ணினால் கேட்கும் மனநிலையுள்ளோருக்கே பண்ணலாம்!இல்லாவிடில் வேஸ்ட்!

    ReplyDelete
  5. நட்பிற்கு இலக்கணம்
    நண்பனை நல்வழிப்படுத்தல்
    என்பதற்கு அச்சாணியாய்
    உங்கள் தொடர் நகர்கிறது...
    நன்று..

    ReplyDelete
  6. அருமையாய் நகர்ந்து போகிறது கதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. வணக்கம் பாஸ் கொஞ்சம் லேட்டாகிடுச்சி

    ////
    " எங்கே இருக்கான் என்று கேளுங்க" என்றவாரே கேட்டவள் என் பின் புறப்பக்கத்தின் பொக்கட் மீது கைவைத்தாள்/////

    கதை அருமை இப்படி சஸ்பென்ஸ்வைத்து முடித்திருக்கீங்க...அடுத்த பகுதி எப்பவரும்..

    ReplyDelete
  8. //எப்போதும் நம் கனவுகள் நம் கைகளுக்கு இருக்கனும்.//

    அருமையாச் சொன்னீங்க நேசரே.

    ReplyDelete
  9. பின்புறப் பாக்கெட்டிலா....அப்புறம்?

    ReplyDelete
  10. நீங்கள் கூறியுள்ள அறிவுரைகள் வாலிபர் அனைவருமே கவனத்தில் கொள்ள வேண்டியவை...செய்வார்களா?

    ReplyDelete
  11. சுவாரஸ்யமாகப் போகிறது...பின் புறப்பக்கத்தின் பொக்கட்டில் நிறுத்தி....

    நட்புக்கு இலக்கணம்...

    ReplyDelete
  12. நேசன்....சுகமா !

    நீண்ட நாட்களின்பின் உங்கள் தொடரை வாசிக்கத்தொடங்குகிறேன்.உங்கள் எழுத்தாற்றல் வளர்ச்சியடைந்திருக்கிறது.
    சந்தோஷமாயிருக்கிறது நேசன் !

    ReplyDelete
  13. உண்மைதான் கோகுல் நாம் நல்லது சொன்னால் கேட்கவா போறார்கள்!
    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!

    ReplyDelete
  14. நன்றி நிரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  15. நன்றி இராஜேஸ்வரி அம்மா உங்கள் வதுகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  16. நன்றி யோகா ஐயா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  17. நன்றி இராஜேஸ்வரி அம்மா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  18. நன்றி மகேந்திரன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  19. நன்றி நண்டு@நொரண்டு  உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  20. நன்றி கவி அழகன்  உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  21. நன்றி ராச்  உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  22. நன்றி சென்னைப்பித்தன்  உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  23. நன்றி செங்கோவி   உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்! அப்புறம் தொடரும் தொடர். கருத்துரைகளை வாலிபர்கள் யார் உள்வாங்குகின்றார்கள் .

    ReplyDelete
  24. நன்றி ரெவெரி  உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!  .

    ReplyDelete
  25. விடுமுறை கொண்டாடி பதிவுலகம் வரும் தோழி ஹேமா அவர்களே வருக வருக!

    ReplyDelete
  26. என்னையும் ஒரு பதிவாளன் ஆக்கியதில் பெரும் பங்கு உங்களுடையதும் தோழி நீங்கள் தரும் ஊக்கம் கருத்துரைகள் தான் இந்த முன்னோற்றம் அந்தவகையில் உங்கள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சியளிக்கின்றது.
    நன்றி விடுமுறையின் பின் பதிவில் இனைவதில் !

    ReplyDelete