31 December 2011

மனம் கவர்ந்தவர்!

தமிழ் திரை உலகில் திரைப்படம் இயக்கும் இயக்குனர். என்ற ஒரு பதவி முள்கிரீடம் என்றால் மிகையாகாது.

 இது பலர் கோதாவில் குதித்தாலும் !வெற்றி பெறுவோர் என்றாள் மிகவும் விரல் விட்டு எண்ணி விடமுடியும்.

 ரசிகர்கள் மனநிலையை கணித்து படம் இயக்குவது .என்பது ஒரு திரைக்கலைதான்! அந்த வகையில் பலர் எனக்குப் பிடித்திருந்தாலும் .!

!குடும்பத்துடன் துணிந்து போகக்கூடிய ஒரு இயக்குனர் என்றால் ?

அது விக்ரமன் அவர்கள்தான் என்பது என் தெரிவு!

 நடிகையின் சதையை நம்பி ஓடும் குதிரை அல்ல அவர் பாதை .தன் கதை எப்படி ரசிக்கப்படுகின்றது என்பதை தீர ஜோசித்து இயக்கும் பொறுமையான நடைவண்டி இயக்குனர் தான்!

 என்பதை ஒரு பேட்டியில் கூறி இருந்தார். புதுவசந்தம்(1990)  என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு இயக்குனர் அடி எடுத்து வைத்தவர்.

 பல மேடு பள்ளம் கண்டு இன்றும் தமிழ் சினிமாவில் நின்று பிடிப்பவர்.

 இதுவரை 17  படங்கள் இயக்கிய அவர் அதிகம் நல்ல புகழில் இருந்த காலம் என்றாலும் !பின் தடக்கிவிழுந்த காலகட்டம்  என்றாலும்! புகழ் போதையில் நிலை தடுமாறாத ஒருவர் .

அதிகபடம் இயக்கும் சூழல் இருந்தும் அதை பயன்படுத்தாத இயக்குனர் எனலாம்!

பார்த்தீபனுடன் உதவி இயக்குனராக புதியபாதை படத்தில் இருந்தவர்.

 பின்தான் இயக்குனர் பதவியில் ஆசனம் அமைத்தார்.

 இவரிடம் இருந்து இன்று பலர் புதுமுக இயக்குனர் ஆகி தமிழில் வலம் வருகின்றார்கள்.

 ரமேஸ் கண்ணா(தொடரும்-அஜீத்) இவரின் சிஸ்யர் ,தேவயாணியின் கணவர் ராஜகுமாரன்,புன்னகைதேசம் ஷாஜகான்  ,வருசம் எல்லாம் வசந்தம் ரவிசங்கர் எனப்பலர் படங்களை இயக்கி அவரின் நன்மதிப்பைப் பெற்றவர்கள்!

விக்ரமன் படங்கள் எப்போதும் அன்பும் ,காதலும் ,நட்பும் அடிநாதமாக பரவிக்கிடக்கும்!

 வில்லன் என்பது யாரும் இல்லை எனலாம் !அதிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து. பெண்களையும் தன்நம்பிக்கை உள்ளவர்களாக புரட்சி செய்வதில் இவர் என்றும் முக்கியமானவர் .

இவர் படநாயகிகள் என்றாள்! சித்தாரா(புதுவசந்தம்), மோகினி (நான் பேச நினைப்பது எல்லாம்) ,பானுப்பிரியா (கோகுலம்) , ரோஜா இவரை ஒரு சிறந்த நடிகை என்று நிரூபித்தவர் விக்ரமன் தான் !(உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் )

என பலரையும் சொல்வது என்றால் பதிவு நீண்டுவிடும்!

விக்ரமன் படத்தில் பாடல்கள் மிகவும் பேசப்படும் .ராஜ்குமார்,சிற்பி இவருக்கு ஏற்ற கூட்டணி இசையமைப்பாளர்கள்.


சூப்பர் குட் செளத்திரியின் அறிமுகம் என்பதால் !
அவருக்குத் தான்  அதிகம் படம் இயக்கியிருக்கின்றார் .

அவை எல்லாம்
வெற்றிப்படங்கள். பெரும்புள்ளி படம் தான் இவர்கள் இணைவில் வந்து கரும்புள்ளியான  தோல்விப்படம் எனலாம் .

.இவர் இயக்கிய புதியமன்னர்கள் படம் தவிர மற்றப்படங்களைத் தவர விட்டது இல்லை .

அத்தனையும் முதல் நாள் பார்க்கும் ரசிகன் .அத்தனை தூரம் அவரின் இயக்கம் எனக்குப் பிடிக்கும்!.

 இடையிடையே இவர் தன் பாணியில்பிருந்து விலகும் போது அது ரசிகர்களால்   தோல்வி முத்திரை குத்தப்படுகின்றது .

எப்போதும் பெண்களுக்குப் பிடித்த இயக்குனர் இவர்.

இன்று விஜய் அவர்களிக்கு ஒரு மாற்றுமுகத்தைக் கொடுத்தது பூவே உனக்காக மூலம் விக்ரமன் தான்.

 அந்த நன்றிக்கடனுக்கு இந்த டாக்குத்தர் கொடுத்த விசுவாசம் உன்னை நினைத்து படத்தில் கொஞ்சக் காட்சிகள் நடித்துவிட்டு முரண்பட்டு படத்தினை இழுத்தடித்தது .

அதன் பின் சூர்யா அந்தப்படத்தில் நடித்தார் .என்பது சினிமா எக்பிரஸ் பதிவு செய்த ஒரு செய்தித் துளியாகும்!

முரளி  முதல்  பரத்  என்றாலும், சரத் முதல் விஜய்காந்த  என்றாலும் அவரின் ஹீரோவாகவே இருப்பார்கள்.

 .சூரியவம்சம் நடிகர் பட்டாளம் அதிகம் கொண்டது.

 2000 ஆண்டில் முதல் வந்த படமான வானத்தைப் போல படம் விஜய்காந்திற்கு ஒரு திருப்புமுனை.

 அதன் பின்பு வந்த பிரியமான தோழி, சென்னைக்காதல் படங்கள் தோல்வியைத் தழுவியது என்றாலும் பாடல்கள் ஹிட்ஸ்.

 .வானத்தைப்போல படம் தேசியவிருது பெற்றது!
 இத்தனை ஆண்டுகளில் இவர் மெதுவாகவும், குறைந்தளவு படங்களும் இயக்கியது இவருக்கு ஒரு பின்னடைவு எனலாம் .

ஒரே குடும்ப அம்சம் என்பதால் தற்போதைய சின்னத்திரை ஆதிக்கம் இவரின் ரசிகர் வட்டத்தை மாற்றிவிட்டது எனலாம் .

கூட்டுக்குடும்பம் போய் தனிக்குடித்தனமே கோட் வாசலில் அல்லல்படும் போது .


இவர் படங்களில் வரும் விட்டுக் கொடுத்தல் வாழ்வு முறை நடைமுறையில் சாத்தியம் இல்லை.
 தற்போதைய நிலையில்.!


 என்றாலும் திரைப்படத்துறையில் சமுகக்கட்டுப்பாட்டுப் பொறுப்பை மீறாத இயக்குனர் என்றாள் அது விக்ரமன் மட்டுமே !

 இவர் பல புதிய பாடல் ஆசிரியர்களை தந்தவர்  தபுசங்கர் ,ரவிசங்கர்,கலைக்குமார் என நீளும் அவர்களில் பழனிபாரதி (பெரும்புள்ளிபடம்) பட்டி தொட்டி எல்லாம் பேசப்பட்டவர்.

ரவிசங்கர்,கலைக்குமார்,  எனப்பலர் இவரின் உதவியாளராக இருந்து பின் திரைப்பட பாடல் ஆசிரியராக வலம் வருப்பவர்கள்.

 கலைக்குமார் உதவி இயக்குனர் என்பதை த் தாண்டி நல்ல தோழன்  ,விமர்சகன் தனக்கு என
அண்மையில் ஒரு பத்திரிக்கையின் தொடரில் படித்த ஞாபகம் .

.ரமேஸ்கண்ணா இன்று பலபடத்தில் அவருடன் இணைஇயக்குனராகவும், பின் நகைக்சுவை நடிகராகவும் ,இயக்குனராகவும் பட்டைகிளப்புகின்றார் .

.இவர் படங்களில் எப்போதும் ஒரு சுயதொழில் முன்னேற்றம் பற்றி நம்பிக்கையூட்டும் வழியினைக் காட்டுவார்.

புதுவசந்தம் தெருப்பாடகன் முன்னேற்றம்,சூரியவம்சம் வாகன தொழில் சிறப்பு ,வானத்தைப்போல ஊறுகாய்த் தொழில்,கோகுலம் அப்பளம் தயாரிப்பு உ.எ.கொ பேப்பர் போடும் தொழில் என பல
முன்னூதாரணங்களை பதிவு செய்வதில்  விக்ரமன் ஒரு ஆலோசகர் எனலாம்!

இவர் படத்தில் பாடல்கள் எப்போதும் சொற்சுவை இசைக்கலவை சேர்ந்த பஞ்சாமிர்தம்.

 .தன் கதையின் கருவை கவிஞர்களிடம் கலந்து போயி கவிவடிக்க இசைவாக தன் உதவி இயக்குனர்களை கவிஞர்களாக்கி அவர்களையும் வளர்த்துவிட்டவர்.

 .வைரமுத்துவை நாடாத ஒரு இயக்குனர். தன் கருத்தை ஊதாசினம் செய்தார் என்பதால் சேர்ந்து இயங்க முடியவில்லை என்று ஒரு பேட்டியில் கூறியதாக ஞாபகம் .
விக்ரமன் படத்தில் எல்லாப்பாடலும் கதையுடன் ஒன்றிப்போய் வருவது அவர் சிறப்பு.

பாடல்கள்  எப்போதும் அமைதியாக ரசிக்கலாம் ஆபாசமும் கலக்கமாட்டார்! இவர் படப்பாடல்கள் என் தனிப்பட்ட வாழ்க்கையில் பல நினைவுகளைச் சுமந்து வந்து கொண்டு இருக்கிறது.

ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஊர்களில் பார்த்து ரசித்தவன். அந்த காலகட்டங்கள் மகிழ்ச்சியும் ,வருத்தங்களும் கலந்த நினைவுச் சின்னங்கள்.

 இந்தப்பாடல் அதிகம் பிடிக்கும் !. பழனிபாரதியின் கவிதை நயத்தை ரசிக்க வெளிக்கிட்ட காலகட்டத்தில் !

இதில் வரும் அணி சிறப்பு  தாளம் தந்தது தென்றல் அதை கேட்டு வாங்கும் மூங்கில் புல்லாங்குழல் வீசும் காற்று அருமையான நினைவுகள் .மனம் போகுதே நதி மாதிரி!
மின்னல் வந்து தோரணங்கள் சூடிடும்!
சரணாலயம் ! பிருந்தாவனம் என பழனியின் அழகு தமிழ் கீதை போல் வாழுமே !

இன்றும் வாழ்கின்றது.  மனதை நெகிழ வைக்கின்றது.

சிற்பி இசை.இசைஞானிக்குப் பிறகு இந்தப்பாடலில் அதிகம் புல்லாங்குழல் சுருதி சேர்ப்பது சிற்பியின் சிறப்பு.

  இந்தப்படம் வெளியாகும் தருனம் வரை சிற்பியின் இசை ஆர்வம் முத்துக்குள் இருந்தது.

அதன் பின்புதான் அதிகம் தமிழ்சினிமாவில் பிரபல்யம் ஆகினார்.

 சிற்பியின் வரவால் அதிகம்  ஆரேபிய இசை தமிழ்சினிமாவில் புகுத்தப்பட்டது என்றாள் மிகையாகது!

  சித்திராவின் குரல் ,பானுப்பிரியாவின் நடிப்பு என இந்தப்பாடல் அதிகம் கவரும்.

இந்தக்காட்சியில் தோன்றும் கோயில் பிரகாரம் உண்மையான சிரிரங்கம் என்று என்னியது ஒரு காலம் !

அது ஒரு செயற்கை(செட்)என்று பின்நாளில் விக்ரமனின் தொடரில் படித்த ஞாபகம்.

என்றாலும் சிரிரங்கத்தில் இப்படியான பின் இரவுப் பொழுதில்  தர்சனம் செய்வதும் ஒரு புண்ணியமே!

 அதையும் தாண்டி என்னுடன் பழகிய ஒரு சிலரின் வாழ்வில் இந்தப்பாடல் எந்தளவு தாக்கம் செலுத்தியது !

என்பதை விரைவில் வரும் தொடர் அலசிச் செல்லும்!

  தொடர்ந்தும் விக்ரமன் நல்ல படங்களைத் தரவேண்டும் என்பதே என் ஆவல்!

 அனைவருக்கும் இனிய புத்தாண்டு  நல் வாழ்த்துக்கள் .பிறக்கும் 2012 எல்லோருக்கும் இனிய ஆண்டாக அமையட்டும்!

30 comments:

  1. பூத்துவரும் பொன்னெழிலாய்
    பூக்கட்டும் புத்தாண்டு!
    ஏழுவண்ண வானவில்லாய்
    வண்ண வண்ண இன்பங்கள்
    நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. பொதுவாகவே இயக்குனர் விக்கிரமன் அவர்களின் படம்
    குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கக் கூடியது என்பது மறுக்க முடியாத உண்மை.
    அவரின் கதைகளில் காதல் தோல்வி எனும் ஒன்று
    இழையோடி இருக்கும். அல்லது குடும்பத்துக்காக காதலை
    தூர எறியும் ஒரு குனாச்சித்திரம் இருக்கும்.
    அவரின் வானத்தைப்போல படம் மறக்க முடியாத ஒன்று..
    எதிர்குணம் அடங்கிய குணச்சித்திரத்தை காண முடியாது அந்தப் படத்தில்.
    இப்படியும் இருக்கலாமா என்று அதிசயிக்க வைக்கும் படம்.

    பகிர்வுக்கு நன்றிகள் பல நண்பரே.

    ReplyDelete
  3. நேசன் பிறக்கிற 2012 சுகமாய் சந்தோஷமாய்ப் பிறக்கட்டும் எங்கள் எல்லோருக்குமே.வேண்டிக்கொள்வோம்.அன்பு வாழ்த்துகள் !

    ReplyDelete
  4. நேசன் அண்ணா எனக்கு மிக பிடித்த பதிவு..
    காரணம் எனக்கும் விக்ரமனை ரெம்ப புடிக்கும்...

    அவரின் எல்லா படங்களும் பார்த்துவிட்டேன்.

    உங்கள் தொடரில் அவர் பற்றிய ஒரு முக்கிய விடயத்தை தவற விட்டு விட்டிர்களே....!!

    விக்கிரமனின் சிஷ்யன் தான் (உதவி இயக்குனர்) கே.எஸ் ரவிக்குமார்.

    இவர் குருவை மிஞ்சிய சீடன். கமல் ரஜனி என்று விக்ரமனுக்கு கிடைக்காத வாய்ப்பு புகழ் அவரால் வளர்க்கப்பட்ட ரவிக்குமாருக்கு கிடைத்தது.

    ReplyDelete
  5. விக்கிரமன் படத்தை நம்பி குடும்பத்தை கூட்டி போகலாம் என்பது நூறு சதவீதம் உண்மை...!!!

    ReplyDelete
  6. டாகுடர் விக்கிரமனுக்கு காட்டிய நன்றி விசிவாசம் இருக்கே, அடி செ....பால ரகம்...!!!

    ReplyDelete
  7. பாரதிராஜா
    டூ
    பாக்கியராஜ்
    டூ
    பார்த்திபன்
    டூ
    விக்கிரமன்
    டூ
    கே எஸ் ரவிக்குமார்
    டூ
    சேரன்
    இப்படியாக இவர்கள் பட்டியல் நீள்கிறது....!!!

    ReplyDelete
  8. புத்தாண்டு வாழ்த்துக்கள் மக்கா...

    ReplyDelete
  9. எனக்கும் பிடித்த இயக்குனர்தான் விக்கிரமன்..
    விரைவில் நல்லதொரு கதையோடு வரப்போகிறார்..காத்திருப்போம்.

    ReplyDelete
  10. இயக்குநர் விக்ரமன் தங்கள் பார்வை சரியானதே!

    ReplyDelete
  11. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. நன்றி மகேந்திரன் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும்!

    ReplyDelete
  13. நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும்!

    ReplyDelete
  14. நன்றி நண்டு@நொரண்டு  வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும்!

    ReplyDelete
  15. நன்றி துசியந்தன் வருகைக்கும் கருத்துரைக்கும்!
    கே.ஏஸ்.ரவிக்குமாரை இன்னொரு தனிப்பதிவில் கூற இருப்பதால் தான் சேர்க்கவில்லை. உண்மையில் கே.எஸ்.ஆர் ஒரு குருவை மிஞ்சிய சீடன் தான் . 

    ReplyDelete
  16. நன்றி மனோ அண்ணாச்சி  வருகைக்கும் கருத்துரைக்கும்!
     . வாழ்த்துக்கும்!

    ReplyDelete
  17. நன்றி மதுமதி அண்ணாச்சி  வருகைக்கும் கருத்துரைக்கும்!
     . நல்ல தகவலுக்கும் !காத்திருக்கின்றேன் அவர் இயக்கத்தைக் கான!

    ReplyDelete
  18. நன்றி சண்முகவேல் ஐயா   வருகைக்கும் கருத்துரைக்கும்!வாழ்த்துக்கும்!
     .

    ReplyDelete
  19. இயக்குனர் விக்ரமன் பற்றிய சிறப்பான பார்வை,,

    இவரை எனக்கும் ரொம்ப பிடிக்கும்..

    இவரின் படப்பாடல்கள் எல்லாமே ஹிட்தான்..

    இப்போது இவரை முன்பு போல் நல்ல படங்களுடன் கானமுடிவதில்லை

    ReplyDelete
  20. நன்றி ரியாஸ்   வருகைக்கும் கருத்துரைக்கும்! விரைவில் வருவார் என்ற தகவலை மதுமதி பாடல் ஆசிரியர் தகவல் தந்துள்ளார் காத்திருப்போம்! உண்மையில் பாடல்கள் எல்லாம் சுகமானதாக இருக்கும் இவர் படங்களில் அதனால் எனக்கு அதிகம் இவரைப்பிடிக்கும்!

     .

    ReplyDelete
  21. வணக்கம், நேசன்!எனக்கும் விக்கிரமன் படங்கள் பிடிக்கும். நீங்கள் குறிப்பிட்டவை அத்தனையும் நிஜம்.ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  22. பாடங்கள் பார்த்திருக்கிறேன் அனால் இவர்தான் இயக்குனர் எண்டு தெரியாது...

    ReplyDelete
  23. வணக்கம் ஜோகா ஐயா!
    நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  24. வணக்கம் ஆகுலன்
    நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் விஜய் காந்துடன் இருப்பவர்தான் விக்ரமன்! இருவரையும் பிடிக்கும் இந்தப்படமும் பிடிக்கும் என்பதால் ஒரே படத்தினை இனைத்துவிட்டேன்!

    ReplyDelete
  25. சினிமா பற்றி பெரிசாக எனக்கு தெரியாது அண்ணாச்சி..

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் புதுவருட வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  26. நன்றி கந்தசாமி வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும்! உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  27. சமூகப்பொறுப்புணர்ந்த இயக்குனர்களில் முதலிடம் விக்ரமனிற்குத்தான்

    ReplyDelete
  28. நேசன், எனக்கு பிடித்த இயக்குனரை விமர்சித்து பதிவிட்டதில் எனக்கும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  29. நன்றி அம்பலத்தார் வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete