03 January 2012

வரம் தருவாய்!

வலையுலக உறவுகளுக்கு !பிறந்திருக்கும்(ஆங்கிலப்) இப்புத்தாண்டு வளமான ஆண்டாக அமையட்டும்!


முன் எச்சரிக்கை!! !
_________________________
இந்தப்பதிவு ஆன்மீகப் பிரியர்களுக்கு மட்டும் !!விரும்பியவர்கள் எந்த  எதிர்க்குத்துப்பதிவு போட்டாலும் தனிமரம் பதில் சொல்லாது!!
////////::/:/




ஆண்டாலின் அழகனே! கருனையின் வடிவமே! உன் திருப்பள்ளி எழுச்சியின் திருக்கோலம் காட்டும் சொர்க்க வாசல் திறப்பு இன்று !(4/1/2012)

அன்று உன் கோலம் கான காத்திருந்தேன்! புன்னாலைக் கிருஸ்ணர் கோயில் எழுந்தருளி மண்டபத்தில்!

நித்திரை கெட்டு நின் நாமம் நினைத்து !அந்தனர் வேதம் ஓத அயராது பூத்த விழிகளுக்கு!
 அன்புருகி ஆனந்தமாய் அழகு மணிமண்டபம்! நிலைக் கண்ணாடியில்! சொர்க்க வாசல் திறப்பினை  
பரவசத்துடன் பார்க்க வழி செய்த காலங்கள் எத்தனை வருடங்கள் போனாலும் விழியில் நீங்காது மாதவா!

எல்லாம் உன் கிருபை என்று நினைத்த போது !
அகதியாக்கி ஆழ்கடல் தாண்டச் செய்து அடுத்த தேசம் கடக்க வைத்தாய் கோதையின்  தாமரைக் கண்ணா!

தயாபார நின் திருப்பள்ளி எழுச்சி சிரிரங்கத்தில் சொர்க்க வாசல் திறக்கும்  கானும்  வரம்  !
எனக்கருள்வாய் என்று நின் பாதம் பற்றுகின்றேன்.!
 பார்ப்பதனே!
 கேட்டதைத் தரும் கிருஸ்ணசுவாமியே!
 என் ஆசையில் உனக்கு ஒரு தூது பள்ளிகொண்டப் பெருமாளே! 
உனைத் தேடி சிரிரங்கம் ! வருவேன் யாத்திரையாய்!
 என்றாவது ஒரு நாளில் உன் கருனைப் பார்வை பட்டாள்!
 சொர்கனுக்கு வாய்த்த சுந்தரியோடு !

பிற்சேர்க்கை-

கிருஸ்ணர் மீது பாடப்படும் ""ஆனந்த சாகரா முரளீதரா மீராப் பிரபு ..என்ற பாடலின் வடிவமான வேற்று மொழிப்பாடல் இது!
மொழிகள் தாண்டிய இசையும் .ஆன்மீகமும் இணைந்த இந்த பக்திப்பாடலை!
 கடந்த மாதம்   ஆலயம் ஒன்றில்  மொரீசியஸ் நாட்டுச் சிறுமி  ஒருத்தி மிகவும் அனுபவித்துப்பாடிய போது!  மனதில் ஒரு குளிர்ச்சி.
 .இந்த திருவெம்பாவைக் காலத்தில் இப்படியான பாடல்கள் இன்னும் பெருமாள் மீது பக்தியைக் கூட்டுகின்றது!

24 comments:

  1. காணொளியுடன் கூடிய அருமையான பாடல்
    விளக்கமாக அமைந்த பதிவும் அருமை
    பகிர்வுக்கு நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு
    நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. ////
    முன் எச்சரிக்கை!! !
    _________________________
    இந்தப்பதிவு ஆன்மீகப் பிரியர்களுக்கு மட்டும் !!விரும்பியவர்கள் எந்த எதிர்க்குத்துப்பதிவு போட்டாலும் தனிமரம் பதில் சொல்லாது!!
    ////////::/

    ஹி.ஹி.ஹி.ஹி

    ReplyDelete
  4. நான் அடுத்த பதிவுக்கு வாரன் பாஸ்

    ReplyDelete
  5. நன்றி ரமனி ஐயா வருகைக்கும் வாழ்த்துக்கும்.தங்களுக்கும்
    அவ்வண்ணம் அமையட்டும்!

    ReplyDelete
  6. நன்றி ரத்தினவேல் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  7. நன்றி ராச்! வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  8. ஆன்மிகம் மனதுக்கு அமைதியை தருகிறது.. அந்த பாடல் லிங்க் மிகவும் அருமை

    ReplyDelete
  9. பாஸ்.... நான் அவரவர் நம்பிக்கைகளை மதிக்கிறேன். ஆன்மீக விரும்பிகளுக்கு நல்ல விருப்பமான பதிவு :)

    ReplyDelete
  10. வணக்கம் நேசன்!ENGLISH புத்தாண்டு
    நல் வாழ்த்துக்கள்.யார் சொன்னது ஆன்மீகப் பதிவுக்கு எதிர்ப்பதிவு போடுவதாக?பிடித்தவர்கள் படிப்பார்கள்,கருத்திடுவார்கள்.விட்டுத் தள்ளுங்கள்.பாடல்,காட்சி யாவும் அருமை!தமிழில் கூட இந்தப் பாடல் இருக்கிறதே???

    ReplyDelete
  11. நன்றி எனக்குப் பிடித்தது வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  12. நன்றி துஷ்யந்தன் வருகைக்கும் கருத்துரைக்கும்! என்ன செய்வது சிலர் புரிந்துகொள்கின்றார்கள் இல்லை ஆன்மிகத்தை தனிமரம் தினிப்பதாக குறைபட்டுக் கொள்கின்றார்கள்!

    ReplyDelete
  13. வணக்கம் யோகா ஐயா!
    உங்களுக்கும் ஆங்கிலபுத்தாண்டு வாழ்த்துக்கள்! விட்டுத்தள்ளித்தான் நானும் பதிவு போடுகின்றேன் இடைக்கிடை! இப்பாடல் தமிழில் இருக்கின்றது என்றாலும் இந்த மொழியில் என்னை அதிகம் வசியம் செய்கின்றது அதனால் தான் பகிர்ந்து கொண்டேன்!
    நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் ஐயா!

    ReplyDelete
  14. எப்பிடியோ பதிவைப் படிக்கும்போதே பாதி சாமிபக்தி வருது நேசன் !

    ReplyDelete
  15. ஆகா புதுவருடம் பக்திமார்க்கமாக ஆரம்பமா?

    ReplyDelete
  16. நான் அறிந்தவரையில் வடமரட்சி வல்லிபுரக்கோயிலும் புன்னாலைக் கிருஸ்ணர் கோயிலும்தான் தாயகத்தில் இரு பிரசித்தி பெற்ற கிருஸ்ணர் ஆலயங்கள் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  17. நேசன் உங்களுக்கும் உங்கள் குடும்ப உறவுகளுக்கும் அன்பான ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள். பிறக்கும் இந்தப் புத்தாண்டில் உங்கள் எண்ணங்கள் யாவும் ஈடேற நீங்கள் வணங்கும் புன்னாலைக் கிருஸ்ணர் அருள்புரியட்டும்.

    ReplyDelete
  18. நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும் பக்தி வந்தால் முக்தி கிடைக்குமாம் ஊரில் பெரியவர்கள் சொல்லுவார்கள்!

    ReplyDelete
  19. பக்தியில் ஊரிய மரம் தனிமரம் அம்பலத்தார் ஐயா!

    ReplyDelete
  20. இவை இரண்டும் தான் நானும் கேள்விப்பட்டும் பார்த்தும் மகிழ்ந்தது!

    ReplyDelete
  21. நன்றி அம்பலத்தார் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்  நல் ஆசிக்கும்!

    ReplyDelete
  22. நன்றி சி.பி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  23. வணக்கம் பொஸ்,

    வைகுண்ட ஏகாதசிக்கு ஏற்றாற் போல கண்ணனின் பெருமைகளை எடுத்துக் கூறும் அருமையான பதிவினையும், பாடலையும் கொடுத்திருக்கிறீங்க.

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

    ReplyDelete