11 March 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-15

காலை எழுந்ததும் படிப்பு.  பின் மாலை முழுவதும் நல்ல விளையாட்டு என்றான் முட்டாசுக் கவிஞன்.

  சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் அன்று.

 இன்று எங்கே சிறுவர்கள் எல்லாம் கணனியில் அமெரிக்கன் ஆமி ஈராக்கில் எப்படி  தீவிரவாதிகளை(மக்களைச்) சுட்டது என்று துப்பாக்கியுடன் அல்லவா விளையாடுகின்றார்கள் .கணனி கேம் என்று.

 எங்கள் பாரம்பரிய விளையாட்டு என்று புலம்பெயர் தேசத்தில் தமிழர் விளையாட்டு விழா  நடக்கும் நாட்களில் விளையாட்டா !
 உழைக்க வந்தனியா  ?வருமானவரி கட்டினியா .நாலு வீடு கொழும்பில் வாங்கினியா ?

என்ன சாதித்தாய் இங்க வந்தது. விளையாட வா வந்தாய் நீ ? என்று எண்ணும்  மனநிலையில்  இருக்கும் உறவுகளுக்கு என்ன சொல்வது .  என்று எண்ணும் நிலையில் இருக்கும் ராகுல் .

ஊரில் இருக்கும் போது கிளித்தட்டும்,,தாயம்,கல்லுக்கொத்தல், பட்டம்கட்டி விட்டது ,மரதன் ஓடியது,சாக்குப்போட்டி,தேசிக்காயை வாயில் கரண்டியில் வைத்து விழாமல் ஓடியது ,ஊஞ்சல் ஆடிய நினைவுகளோடு !

அன்று பின்னேரம் அனோமாவுடன் கள்ளன் பொலிஸ் விளையாட்டு விளையாடினான் மாலை நேரத்தில் .!

எப்போதும்.  தேயிலைத் தோட்டத்தின் கீழே பலர் வந்து போவார்கள் .

எங்களுடன்  சேர்ந்து விளையாட  வருவோரின் சிலரின் அம்மாக்கள் எல்லாம் கொழுந்து எடுக்கப் போய் விடுவார்கள் .

அப்பா கவாத்து வெட்டுவார் கை காய்த்துப் போகும் அளவுக்கு.

 தேயிலைச் செடி மரத்தை வெட்டுவது ஒரு சிற்பியைப் போல தேவையில்லாத வாதினை(காம்பு) கீழ் இருந்து வெட்டி மரம் செளிப்பாக வளர விட்டாள் தேயிலைக் கொழுந்து சிலித்துக்கொண்டு சிரிக்கும்.

 அதனை பறிக்கும் பெண்கள்  மனதில்  எரிமலை குமுறும் இந்த மாத வீட்டுச் செலவுக்கு எங்கே துண்டு விழும்.

  இன்றக்கோ நாளைக்கோ பெரியமனிசியாக வரப்போகும் வள்ளியம்மைக்கு ஒரு பவுன்  சங்கிலி வாங்கனும்.

 இந்தப் பாவி மனுசன் இராவானா கசிப்பைக் குடித்திட்டு வந்து மூத்தமவன் கூட சண்டை போடுது .

ஒழுங்காகாகப் படிக்காட்டி வேலைக்கு கடைக்கு கூட்டிக்கொண்டே விடப்போறன் என்று .

எப்பதான்   இந்த ஏழைகளுக்கு நாட்கூலிச் சம்பளம்  கூட்டுவார்களோ ?மரத்துப் போன முதலாளிமார்கள்

. என்று எண்ணும் செல்லம்மாக்கா ஒரு புறம் என்றால் .

அம்மா காலையில் போனா சாயந்திரம் வாரதுக்குள்ள விளையாடலாம் என மனதில் எண்ணும்  சின்னவன் சுகுமார் .

இந்த .மனிதர்களுக்கு இருக்கும் உணர்வுகளைச் சுமப்பது போல  தேயிலைக்கூடையை சுமக்கின்ற பலரிடம்
முதுகில்  பாரம் அதிகம். வலியைத் தந்தாலும் செல்லமா மாமி  சுகுமார் முன் கூட வலியை வெளியுலகிற்குத் தெரியாமல் எரிமலையாய்  இருக்கும்
 .
இப்படி எத்தனை தாய் மார்கள் எங்கள் தேசத்தில் .

அன்று  நாங்கள் கொஞ்சம் அதிகமான நேரம் கள்ளன் பொலிஸ் விளையாட்டு   விளையாடினோம் .அனோமா பிடிக்கனும் சுகுமார்,அயலில் இருக்கும் துசாரா,மூக்கையா மகன் பாலு  வள்ளியம்மை என ஒரு 12 பேர்கள் சேர்ந்து விளையாடினோம்

.ஒளிந்து கொள்வதற்கு தேயிலைச் செடியின் கீழ் ஒதுங்கினோம்!

 அப்போது வேலை முடியும் நேரம் ,மாலைச் சாப்பாடு செய்யனும் அவசரத்தில் இருந்தாலும் கங்கானி நேரத்தைப் பார்த்து கையசைக்கும் வரை இருக்கனும் மலையில்.

 இந்த வேலைக்கு வராமல் வள்ளியம்மையை படிப்பிக்கனும் என மனதில் உறுதி கொள்ளும் மனது செல்லம்மாக்காவுடையது.

செல்லம்மக்கா செய்யும் ரொட்டிக்கு இந்த உலகில் ஈடு இணையில்லை. பீஸா கிட்ட வாராது.

  கோதுமை மாவில் தண்ணீர் ,,தேங்காய் என்ணை ,ஆப்பச் சோடா ,பச்சமிளகாய்,சின்ன வெங்காயம் சேர்த்து குழைத்துவிட்டு சத்த நேரம்  கழித்து தோசைக்கல்லில் வாட்டி .
அதனுடன் தேங்காய்ச் சம்பல் செய்து தரும்.

அப்போது அவர்கள் வீட்டில் சாப்பிடும் போது மனதில் வஞ்சகம் ,சூதுவாது இல்லை  .
கோதுமை மா விலை ஏறும் போதெல்லாம் ரொட்டியின் அளவு கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆனது போல !

விலைவாசி ஏற்றம் பற்றி லயத்திற்கு வந்து ஓட்டுக் கேட்ட உதவாத ஜென்மங்களுக்கு பாராளமன்றத்தில் உதவியது இருக்க ஒரு கதிரை .
எங்கள் வயிற்றில் இருந்தது பசியின் கொடுமை மட்டும்தான்!

தன்பிள்ளையின்
நண்பர்களிடம் தன்னால் தன் பிள்ளைகளுக்கு கொடுக்கக்கூடிய நட்சத்திர ஹோட்டல் சாப்பாடு இது தான் என்று ஏங்கும்.

செல்லம்மாக்கா தேயிலைக் கொழுந்து எடுத்துக் கொண்டிருந்தா..!

அப்படி எடுக்கும் போது இரட்டைஇலைக்கொழுந்து ஒன்று  அன்று வந்தது.

 கையில் இப்படி வருவது அபூர்வமான செயல் .அந்த இலையைப் புடுங்கி தன் பாக்குப்பையில் வைத்துக்கொண்டா ,கொழுந்து தாங்கும் கூடையில் போடவில்லை.

 இரட்டைக் கொழுந்து எடுத்தால் அதைச் சிறியவர்களிடம் வெளியே தெரியாமல் கையை மூடிக்கொண்டு கொடுக்கனும் என்பது ஐதீகம் .

சிறியவர்கள் யாரிடம் அதைக் கொடுக்கின்றார்களே! அவர்கள் சிறியவர்களுக்கு பரிசுப் பொருளாக  புத்தாடை அல்லது பழங்கள் வாங்கிக் கொடுக்கனும் .

இல்லையேல் அவர்கள் கடன் கார்களாக இருப்பார்கள் என்பது ஐதீகம்.

 அப்படி அன்று எடுத்த இரட்டைக்கொழுந்தை செல்லம்மாக்கா என்கையில் தினித்தா .நானும் அதை வாங்கிக் கொண்டேன்.

ஜயந்த மாமா வழமைக்கு மாறாக அன்று எல்லோருடன் தானும் விளையாட வாரன் என்று வந்தார்.

 இடையில் நிறுத்திவிட்டு கதை சொல்லுறன் என்றார்.

புரட்சி செய்தால் எங்களுக்கு கஸ்ரம் போய் விடும் இந்த ஆளும் வர்க்கம் ஏழைகளை அரசியல் தீயில் ஆகுதியாக்குது அப்பாவிகளை என்று அவர் கதை சொல்லும் போது புரிந்துகொள்ள முடியாதவர்களாக முழித்தோம்.!

நீங்கள் புரிந்துகொள்வீர்கள். வருங்காலத்தில் என்று தன் கதைப் பிரசங்கத்தை முடித்தார்.

ராகுல் நீ பெரியவனாகினாய் அனோமாவுக்கு நல்லா உதவி செய்யனும் சரியா.

அனோமா உனக்கு மாம்பழம்,கொய்யாப்பழம் எல்லா தாரது தானே .

நீ விரும்பிச் சாப்பிடுவீயே அலிக்கடபேர(??)

அதில் சீனியுடன்  நீ விரும்பும் லக்ஸ்பிறே பால் மா  வீட்டில் இல்லாத போதெல்லாம் அனோமா உங்க வீட்டில் வாங்கியந்து மெனிக்கே மாமியைக் கொண்டு செய்துதாரது  ஏன் தெரியுமா?

என்றபோது .

தென்னக்கோன் மாமா இடையில்  வந்து ஜயந்த.

 சின்னப் பிள்ளைக்கள் முன் என்ன பேச்சு மகன் .ஜயந்த .

உனக்கு மூளையில்லை  என்று திட்டி தடுத்தார்.

தென்னக்கோன்  மாமா அவர் தடுத்ததில் நாங்கள் புரியாத அரசியலில் இருந்து
தப்பித்தோம். என்ற ஆவலில் கையில் இருந்த இட்டைக் கொழுந்து இலையைக் கொடுத்தேன்  ஜயந்த மாமாவிடம்.

அவர் சிரித்துக் கொண்டு வாங்கினார் மேலும் விளையாடிய களைப்புத் தீர


ஆற்றில் குளிர்த்துவிட்டு வீடு வந்தோம் .



அது 1989 இன் பிற்பகுதியை நெருங்கிக் கொண்டிருந்த மாதங்கள்.

 . அவர் எனக்குப் பரிசுப்பொருள் தருவார் என்ற ஆசையில் இருந்தேன் விதி வலியது.. //


மவன் -மகன்
சத்தநேரம்-சற்று நேரம்-
அலிக்கட பேர-???இதன்  தூயதமிழ் யாரவது  பின்னூட்டத்தில் சொல்லுங்க.

85 comments:

  1. வணக்கம் நேசன்!படிக்கிறேன்.

    ReplyDelete
  2. கள்ளன்,பொலிஸ் விளையாட்டெல்லாம் விளையாடியிருக்கிறியள்???

    ReplyDelete
  3. ஹேமாவுக்கு பாலப்பமும் இல்ல,கோப்பியும் இல்ல,ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!!!(என்னை மாதிரி வேலைவெட்டி இல்லாமலோ மற்றவை இருக்கீனம்?)

    ReplyDelete
  4. தனிமரம் said...

    அப்ப கண்ணாடி யோகா ஐயாவா இப்ப ?ஹீ ஹீ!///என்ன,ஹீ!ஹீ?கண்பார்வை மங்கல் எண்டா கண்ணாடி போடத்தானே வேணும்?அதிலயும் ஒரு லுக் இருக்கு,தெரியுமோ????????ஐ லைக் தற்.

    ReplyDelete
  5. வணக்கம் யோகா ஐயா!
    மெதுவாக  படியுங்கோ!

    ReplyDelete
  6. சின்ன வயசில் இது எல்லாம் விளையாடத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?? ஹீ ஹீ(இப்ப யாரு எல்லாம் கால மாற்றம்)

    ReplyDelete
  7. இன்று பால்கோப்பி உங்களுக்குத்தான் யோகா ஐயா.ஆறுதலாககுடியுங்கோ ஞாயிறு விடுமுறையைக் கழித்துக்கொண்டு!

    ReplyDelete
  8. வெட்டியாக இருப்பதுதான் சரியான கஸ்ரம் வடிவேல் ஒரு படத்தில் சொல்லுவாரே!ஹீ ஹீ

    ReplyDelete
  9. கண்ணாடியில் ஒரு அழகு இருக்கத்தான் செய்யும் கூலிங்கிளாஸ் போட்டாலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்யும்.ஹீ ஹீ

    ReplyDelete
  10. கடவுளே....எல்லாம் போச்சு எல்லாம் போச்சு.சரி இனித்தான் பதிவு படிக்கப்போறன்.அப்பா யோகா வேணுமெண்டே ஓடி வந்திருப்பார்.வீட்ல சமைச்சுத் தரேல்லப்போல.பாவம் சாபிடுங்கோ சாப்பிடுங்கோ.வயிறு வலிக்கும் பாருங்கோ !

    ReplyDelete
  11. அலிக்கடபேரக்கைக்கு தமிழ் நீங்க கூறுவீர்கள் என்று பார்த்தேன் என்னாச்சு யோகா ஐயாவுக்கு avocat பிரென்சில் சொல்லுவார்.
    நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  12. தனிமரம் said...

    "அலிக்கடபேர"க்கு தமிழ் நீங்க கூறுவீர்கள் என்று பார்த்தேன் என்னாச்சு யோகா ஐயாவுக்கு avocat பிரென்சில் சொல்லுவார்.
    நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.///நான் என்ன வச்சுக்கொண்டா வஞ்சகம் பண்ணுறன்?"பேரிக்காய்"என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறன் !சுத்தமான தமிழில்???????????????????????

    ReplyDelete
  13. நேசன்...சின்னப்பிள்ளைக்கால விளையாட்டை அடுக்கி நினைவுகளை ஊஞ்சலில் வைத்து ஆட்டிவிட்டீர்கள்.

    நான் அனுபவித்த தேயிலைத்தோட்டக் காட்சிகள்.இரத்தம் உறிஞ்சும் றப்பர் அட்டையைத் தவறவிட்டுவிட்டீங்களே.அவர்கள் சுடும் ரொட்டியும் சம்பலும் என்று நினைத்துக்கொண்டே வாசிக்க நீங்கள் அந்த வாசனையைத் தருகிறீர்கள்.என் கவிதைப் பகுதியில் மலையடிவாரத் தோழி படியுங்கோ.நானும் சொல்லியிருக்கிறன் !

    அவகாடுக்கு தமிழ் தெரியவில்லை நேசன்.பாலும் சீனியும் போட்டு கிரைண்டரில அடிச்சுக் குடிச்சா....நான் இங்கயும் வெயில் காலங்களில் செய்து குடிப்பது வாக்கம்.நல்லாப் பிடிக்கும் !

    ReplyDelete
  14. ஹேமா said...

    கடவுளே....எல்லாம் போச்சு எல்லாம் போச்சு.சரி இனித்தான் பதிவு படிக்கப்போறன்.அப்பா யோகா வேணுமெண்டே ஓடி வந்திருப்பார்.வீட்ல சமைச்சுத் தரேல்லப்போல.பாவம் சாபிடுங்கோ சாப்பிடுங்கோ.வயிறு வலிக்கும் பாருங்கோ !///வயிறு வலிக்கிறத பாக்கேலாது,உணரலாம்!ஒருகிழமையா வயிற்றுவலி.மருந்து சாப்பிடுகிறேன்.போகட்டும்,ஹேமா,காத கிட்டக் கொண்டுவாங்கோ,ஒரு ரேசியம்(இரகசியம்)சொல்லப்போறன்:அரைவாசி நாள் வீட்டில நான் தான் சமையல்!சுடுதண்ணி வைக்கிறதில இருந்து பிரியாணி வரைக்கும்..................!

    ReplyDelete
  15. இல்லையோகா ஐயா!
    பேரிக்காய் சரியாக இருக்காது என நினைக்கின்றேன் பார்ப்போம் யாராவது பதில் சொல்லுவினம் தானே!

    ReplyDelete
  16. பொறுமையாக படியுங்கள் ஹேமா!

    ReplyDelete
  17. எனக்குப் பாலப்பமெண்டா நல்ல விருப்பம்.ஆனா சுடத்தெரியாது.3 வருசத்துக்கு முந்தி ஊருக்குப் போகேக்க அம்மா சுட்டுத்தந்ததுக்குப் பிறகு இன்னும் சாப்பிடேல்ல.எனக்கு இல்லாமச் சாப்பிட்டா வயித்து வலிக்காம என்ன செய்யும்.ஆனாலும் நீங்கள் பாவம்.வீட்ல அம்மாச்சி என்ன செய்றவ.பிரியாணியும் சமைக்கத் தெரியுமோ.கண் சரியாத் தெரியாட்டியும் நல்ல அப்பாதான் நீங்கள் !

    ReplyDelete
  18. நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும். நினைவுகள் ஊடே ராகுலின் முகம் காட்டனும் என்பதால் சில பின் விடயங்களை முன்னுக்குச் சொல்லவில்லை அதில் நீங்கள் சொல்லும் மலையட்டை(ரப்பர் அட்டை) கொஞ்சம் வேறபார்வையில் நிச்சயம் சொல்லுவார் ராகுல் அதற்கு இன்னும் அவன் வயது போதாது இப்ப சின்னப்பிள்ளை அந்தப்பகுதியில். ஹீ ஹீ

    ReplyDelete
  19. அலிக்கடப்பேரக்கு நல்ல ஐஸ்கட்டியும் லக்ஸ்பிறே மாவும் கலந்து சினிபோட்டு முள்ளுக்கரண்டியால் அடித்துக் குடித்தான் தனிச் சுகம் தான் ஹேமா. நன்றி வதுகைக்கும் கருத்துரைக்கும் உங்கள் கவிதையைப் படிக்கின்றேன்.

    ReplyDelete
  20. நல்ல வேளை ஹேமா!அவ ப்ளாக் படிக்கிறேல்ல!!!தப்பிட்டீங்கள்.பொன்விழா போன வரியம் தான் கொண்டாடினவ?!

    ReplyDelete
  21. பாவம் ஜோகா ஐயா !வாரத்தில் பாதி நாள் குசினியில் நாங்க வருஸம் பூராகவும் குசினியில்தான் ஹீ ஹீ(தொழில்)

    ReplyDelete
  22. மனதில் ஊற்றெடுத்து நின்ற
    சிறு பிராய விளையாட்டுகள் எல்லாம்
    நிழலாடுது சகோ..

    "ஏ புள்ளே சின்ன புள்ளே
    எங்கே போறே
    சொல்லு புள்ளே
    ..
    வாடாப்பா ராசப்பா
    சந்தைக்கு போறேன் பா
    ஒரு பழம் பத்து பைசாவாம்
    நூத்திரெண்டு வாங்கப் போறேன்
    எம்புட்டு காசாகும்னு
    கணக்கு பாரு
    கணக்குபுள்ளே.."

    அப்படின்னு அப்படியே பொழுது போக்கா
    விடுகதை போட்டதெல்லாம்
    ஞாபகம் வருது...

    ReplyDelete
  23. எனக்குப் பாலப்பமெண்டா நல்ல விருப்பம்.ஆனா சுடத்தெரியாது.3 வருசத்துக்கு முந்தி ஊருக்குப் போகேக்க அம்மா சுட்டுத்தந்ததுக்குப் பிறகு இன்னும் சாப்பிடேல்ல.எனக்கு இல்லாமச் சாப்பிட்டா வயித்து வலிக்காம என்ன செய்யும்.ஆனாலும் நீங்கள் பாவம்.வீட்ல அம்மாச்சி என்ன செய்றவ.பிரியாணியும் சமைக்கத் தெரியுமோ.கண் சரியாத் தெரியாட்டியும் நல்ல அப்பாதான் நீங்கள் !// இந்தக்கால மனிசன் மார் பருவாயில்லைப்போல அப்பம் சுடுகின்றாங்க புரியானி,ரொட்டி எல்லாம் செல்லமே சாப்பிடு என்று செய்து கொடுக்கினம் அப்பா காலத்தில் அடுப்படிக்குப் போகமாட்டினம் அம்மாக்கள் பின் தூங்கி முன் ஏழம்புவினம் இப்ப நாங்கள் மறுதலை!ஹீ

    ReplyDelete
  24. என்குழப்பம் தீரவில்லை,ஹேமா!இன்றைய பால்கோப்பி,பாலப்பம் எல்லாம் உங்களுக்குத்தான்.கிளீயர் மை டவுட் பிளீஸ்!

    ReplyDelete
  25. நல்ல வேளை ஹேமா!அவ ப்ளாக் படிக்கிறேல்ல!!!தப்பிட்டீங்கள்.பொன்விழா போன வரியம் தான் கொண்டாடினவ?! 
    /. ஹேமா அக்காள் எனக்கு பதிவுலகில் இப்படியும் எழதமுடியும் தனிமரம் என்று குட்டிச் சொல்லும் மூத்தவர் அல்லவா பொன்விழா மட்டுமா நூற்றாண்டு விழா கொண்ட வாழ்த்துவோம் ஐயா!

    ReplyDelete
  26. நன்றி மகேந்திரன் அண்ணா அழகிய கவிதையோடு இன்னொரு சிறுபல்யகால நினைவுகள் கவிதை தந்து மெய்சிலிக்க வைத்துவிட்டீர்கள்.
    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  27. மூன்று ஆண்டுகள் வேலைக்காக யானை நடமாடும் காட்டில் வாழ்ந்து பழக்கப்பட்டவன்.சிறு வயதிலேயே கொஞ்சம்,கொஞ்சம் சமையல் கற்றதால்?!எங்கேயும் எப்போதும்(படமல்ல)தனித்து நிற்கப் பழகிவிட்டது!

    ReplyDelete
  28. யோகா ஐயா!
    குழப்பம் தீரவில்லை என்றாலும் முதலில் வந்தது நீங்கதான் ஆகவே பால்கோப்பி உங்களுக்குத்தான் புளிச்சுப்போன பால்க்கோப்பி இல்லை தனிமரம் கொதிக்கக் கொதிக்க பால் விட்டு ஊத்தும் பால்கோப்பி !ஹீஹீ

    ReplyDelete
  29. யோகா ஐயா அப்ப காட்டில் வேட்டைத்துப்பாக்கியோடு திரிந்தவர் என்று சொல்லுங்க.ஹீ ஆனால் பாலப்போன வேண்டாம்.....அரசியல்!

    ReplyDelete
  30. யோகா ஐயா காட்டு அனுபவத்தை இப்ப சொன்னால் ராகுல் அழுதிடுவான் அவனின் பலவிடயத்தை முன்னுக்கே சொல்லவேண்டி வரும் இல்லையா !! பொறுமை ஐயா! ஹீ ஹீ

    ReplyDelete
  31. என்ன குழப்பம் என்ன குழப்பம் யோகா அப்பாவுக்கு.தீர்க்க முயற்சிப்போம்.சரி பாதி பாதி பால்கோப்பியும் பாலப்பமும்.ஓகேயா.

    அம்மாச்சின்ர புளொக்கர் ஐடி தரலாமே.உங்களைப் பற்றி நிறையச் சொல்லக் கிடக்கு !

    ReplyDelete
  32. அம்மாச்சின்ர புளொக்கர் ஐடி தரலாமே.உங்களைப் பற்றி நிறையச் சொல்லக் கிடக்கு ! 
    /. யோகா ஐயா மெளனமாக இருபது எனக்கு கொஞ்சம் சலிப்புத்தான் மீண்டும் எழுத அவர் வரனும் அக்காச்சி!

    ReplyDelete
  33. நான் எழுத ஆரம்பித்தால் விபரீதம் ஆகிவிடும் என்பதால் மௌனம் காக்கிறேன்,மன்னிக்கவும்!நீங்கள் எல்லோரும் எழுதுங்கள்,விமர்சிப்பது சுலபமானது,ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!

    ReplyDelete
  34. நீங்கள் ஏழுதும் போது ஒரு ஈர்ப்பு இருக்கும் மனதுக்குல் நீண்டகால ஒரு நண்பர் 8/3 ஒரு பதிவுடன் வந்த போது எனக்கு சரியான சந்தோஸம் ஐயா அவரும்  அங்கே தான் கவிதை சேர்த்திருந்தார். (இடம் சொல்லமாட்டன் ஐயாவுக்கு பிடிக்காது என்பது எனக்குத் தெரியும்) அவருக்கு பின்னூட்டம் நேற்றுப்போட்டேன்!

    ReplyDelete
  35. சில இடங்களில் பின்னூட்டம் போடுவது எழுதுவதைவிட சிறப்புத்தான்.

    ReplyDelete
  36. அம்பலத்தாரும் பதிவு போட்டிருக்கிறார்!அதுவும் சமையல் பதிவு.இப்போது தான் பார்க்கக் கிட்டியது!பெருமையாக வேறு இருந்தது,ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!

    ReplyDelete
  37. தனிமரம் said...

    நீங்கள் ஏழுதும் போது ஒரு ஈர்ப்பு இருக்கும் மனதுக்குல் நீண்டகால ஒரு நண்பர் 8/3 ஒரு பதிவுடன் வந்த போது எனக்கு சரியான சந்தோஸம் ஐயா அவரும் அங்கே தான் கவிதை சேர்த்திருந்தார். (இடம் சொல்லமாட்டன் ஐயாவுக்கு பிடிக்காது என்பது எனக்குத் தெரியும்) அவருக்கு பின்னூட்டம் நேற்றுப்போட்டேன்!///அதனாலென்ன?திறமை எங்கிருந்து வந்தாலும் வரவேற்க வேண்டியதுதான்!கொமென்ட்)அடித்துத் தூள் கிளப்புங்கள்.ஒத்து வராவிட்டால் ஒதுங்கி விடுவது என்பழக்கம்!அதிலும் வேண்டாத ஒரு பிரச்சினையில்,ஒருவர் .....................வேண்டாம்,விட்டுவிடலாம்!

    ReplyDelete
  38. நீங்கள் சொன்னது சரிதான் நேசன்!பேரிக்காய் என்பது சரியல்ல.நான் நினைக்கிறேன் அவர்கள்(பெரும்பான்மை இனத்தவர்)பேரிக்காய் என்று சொல்வது,நம்மூரில் வத்தகப்பழம் என்று சொல்வோமே,அதுவோ?பிள்ளைகளிடமும் கேட்டேன்,ஆவுக்கா பழத்துக்கு தமிழ்.மொழிபெயர்ப்பிலும் தேடி கிட்டவில்லை!.

    ReplyDelete
  39. இன்று இத்துடன் முடித்துக் கொள்ளலாம்.காலையில் வேலை இருக்கிறதே?????

    ReplyDelete
  40. அவகாடோ என்பதன் தமிழ் பெயர் "யானை கொய்யா". சுவையான, நல்ல போசாக்கு நிறைந்த பழம்.

    இதனை அடிக்கடி சாப்பிட்டால் எடை கூடும். எடையை கூட்டி கொள்ள விரும்புபவர்கள் தினமும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு நன்றாக கொடுக்கலாம். நிறைய கொழுப்பு சத்து உள்ளது. அதனால் தான் எண்ணெய் சருமம் உள்ளவர்கள் சாப்பிட்டால் முகத்தில் எண்ணெய் தன்மை கூடி பருக்கள் போடும். அவர்கள் சருமத்துக்கும் அடிக்கடி போடக்கூடாது. ஆனால் வரண்ட தோல் உள்ளவர்கள் இதனை போட்டு மசாஜ் செய்து வந்தால் தோல் அழகு பெறும்.
    இவ்வளவு எப்படி தெரியும் என்று கேட்கிறீர்களா? நான் பிறந்த இலங்கை நாட்டில் குறிப்பா நான் வளர்ந்த சூழலில் நிறைய கிடைக்கின்றது.

    Luxmy


    கூகிளில் எடுத்தேன்.

    ReplyDelete
  41. ஆஹா!இது பிள்ளை.கூகிள் ஆண்டவர் சன்னதிக்குப் போய் விளக்கம் சொல்ல எவ்வளவு முயற்சி எடுத்திருக்குது?உண்மையாக சொல்கிறேன்!கிண்டல்,கேலி அல்ல நம்புங்கள்!

    ReplyDelete
  42. யோகா ஐயா அம்பலத்தார் சாப்பாடு மதியம் சாப்பிட்டு விட்டேன்!

    ReplyDelete
  43. உங்களுக்கு மனவருத்தம் செய்யும் எந்த செயலிலும் கருத்துச் சொல்லமாட்டன் யோகா ஐயா நான் ஒரு சின்னவன் அவ்வளவும் தான் !

    ReplyDelete
  44. யானைக் கொய்யா எனக்குச் சந்தேகம் ஹேமா அக்காள்! பதுளைப்பகுதியில் வட்டாரச் சொல்லு கொஞ்சம் ஆபாசமாக இருக்கும் குதிரை ..இன்னொரு வார்த்தை வரும் அப்படிச் சொல்லித் தான் சந்தையில் ராகுல் பழம்வாங்குவான் !

    ReplyDelete
  45. கூகில் சொல்வதால் நானும் ஏற்றுக் கொள்கின்றேன் அக்காச்சி!உங்ககவிதை என்னையும் ராகுலையும் அவனா இவன் என்று போராட வைக்கின்றது !ஹீ

    ReplyDelete
  46. நீங்கள் சொல்லும் மருத்துவக் குணம் எல்லாம் உண்மைதான் ஹேமா அதை தனிமரமும் ராகுலும் சேர்ந்தே வழிமொழிகின்றோம் இருவரும் அந்தப்பகுதியில் இருந்தவர்கள்.ஹீ ஹீ

    ReplyDelete
  47. ஹேமா அக்காளின் தேடல் என்னை சிலநேரங்களில் இப்படி எல்லாம் எப்படி முடியுது குடும்பதுக்கும் நேரம் ஒதுக்கி வேலைக்குப் போய் இத்தனை களைப்புடன் எங்களுக்கு ஊக்கிவிப்புத் தாரா என்று ஜோசித்தே இல்லாத மூளையைக் கசக்குவேன்!யோகா ஐயா!

    ReplyDelete
  48. வேலை ஒருபுறம் ஆர்வம் ஒருபுறம் யோகா ஐயா.இருந்தாலும் முடிந்த அளவு ஓய்வு முக்கியம்தான் நன்றி உங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் ஊக்லிவிப்பு வார்த்தைக்கும்.அம்பலத்தார் வரும்போது கூழ் குடிக்க வயிற்றுவலி எல்லாம் இல்லாமல் சுகதேசியா இருக்கனும் சொல்லிப்போட்டன் அடித்துத் தூள்கிளப்பனும் அம்பலத்தார்கூட நீங்க தான் அவருக்கு இனை நாங்க எல்லாம் பொடிப்பசங்க!

    ReplyDelete
  49. நன்றி ஹேமா இன்று என் சந்தேகத்தை தீர்த்த படியால் பங்கஜம் பாட்டியின் பொறிமாப்பக்கட் இலவசமாக அனுப்பி வைக்கின்றேன்.ஹீ ஹீ

    ReplyDelete
  50. உண்மைதான் நேசன்.எனக்கும் ஞாபகம் வருகிறது.அதே குதிரைப்....க்குத்தான்.மலைநாட்டுப்பக்கம் இந்தப் பெயரில்தான் சொல்வதாக அப்பாவும் சொன்னார்.போன் பண்ணிக் கேட்டேன் !

    ReplyDelete
  51. ஐயோ ஹேமா அக்காள் பாவம் பெரியவர் அப்பாவையும் என் தொடருக்காக நித்திரையைக் கெடுத்து தொலைபேசியில் தொல்லை கொடுக்கனுமா? என்றாலும் அந்த முகம் தெரியாத அப்பாக்கும் ஒரு நன்றி சொல்லுங்கோ ரத்தினபுரி போல ஒரு ரத்தினக்கல் இடத்தில் ரத்தினமாக இருந்து மனசில் மாமா வீட்டை ஞாபகம் வரவைத்து விட்டார்.

    ReplyDelete
  52. //கோதுமை மா விலை ஏறும் போதெல்லாம் ரொட்டியின் அளவு கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆனது போல !//
    யதார்த்தம் கூறும் வரிகள்.

    ReplyDelete
  53. உண்மையில் ஹேமா அக்காள் நீங்களும் நானும் எதிர்பார்க்கும் இந்த நம் மலையக சொந்தங்கள் ஏன் தான் இப்படி இருக்கினம் என்று புரியவில்லை பலர் வலையுலகில் இருக்கினம் என் தோழியைத் தவிர வேற யாரும் இந்த தொடர்பற்றி ஒரு வார்த்தையும் இங்கு ஹாலிவூட் ரசிகனையும் காற்றில் என் கீதம் பதிவாளினியையும் தவிர வாசிப்பது இல்லையே என்று புரியாத புதிராக இருக்கு ! எல்லாம் ஒரு வட்டத்துக்குள் தான் இருப்பினமா ஏன் புதியவர்களிடம் வரமாட்டார்களா ???இது உங்களிடம் சொல்லனும் என்று தோன்றியது.

    ReplyDelete
  54. //அவர் எனக்குப் பரிசுப்பொருள் தருவார் என்ற ஆசையில் இருந்தேன் விதி வலியது.. //
    என்னப்பா ஆச்சு நேசன் இப்படி ஒரு சஸ்பென்சோட நிறுத்திப்போட்டியள். சீக்கிரமாக அடுத்தபதுதியை எழுதுங்கோ

    ReplyDelete
  55. வாங்க அம்பலத்தார்!
    யாதர்த்தவரியும் யதார்த்த வலியும் கூட ஐயா அந்தச் சமுகத்தின் நிலையில் இருப்போருக்கு!

    ReplyDelete
  56. விரைவில் வருவேன் ஐயா .நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  57. நான் ரொம்ப தாமதமாக வந்திட்டன். யோகா, ஹேமா, நேசன் எல்லோருமாக பின்னூட்டத்திலையே ஒரு பெரிய பட்டிமன்றமே நடத்தி முடித்திட்டியள்.

    ReplyDelete
  58. அவக்காடோ - பட்டர்புரூட்- அலிக்கடபேரவுக்கு பேச்சு வழக்கில் ஊரில் ஹேமா சொன்னதுபோல யானை கொய்யா என்று சொல்லுறவை. கூகிளில் தமிழ்ப்பெயர் வெண்ணைப்பழம் என எழுதியிருக்கிறது.

    ReplyDelete
  59. நேரம்கிடைக்கும் போது மனம்விட்டுப் பேசுவது நல்லதுதானே அம்பலத்தார் ஐயா.இங்கு எங்களுக்குப் பிரச்சனையே ஒன்றாக இணைந்து கதைக்கமுடியாத வேலைப்பளுதானே?

    ReplyDelete
  60. ஆஹா வெண்ணைப்பழமா ஹீ ஹீ வெண்ணைக்கு நான் எங்க போவன் மாடும் வளர்க்க முடியாது இருப்பது அடுக்கு மாடியில்.ஹீ ஹீ

    ReplyDelete
  61. ஆஹா... தாமதமாக தலைப்புக் கண்ணில் பட்டதும் நல்லதாகிவிட்டது, ஏனெண்டால் தனிமரம் ஊத்திய பால் கோப்பியை யோகா அண்ணன் குடிச்சிட்டார்:)) உஸ்ஸ் அப்பா... அது முடியட்டும் என்றுதான் வெயிட் பண்ணினேன்.

    ReplyDelete
  62. ஆற்றைப் பார்க்கும்போதே குதிக்கோணும்போல ஆசையாக வருது.. இந்த விஷயத்தில் சிங்கள மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

    ReplyDelete
  63. //Yoga.S.FR said...
    தனிமரம் said...

    அப்ப கண்ணாடி யோகா ஐயாவா இப்ப ?ஹீ ஹீ!///என்ன,ஹீ!ஹீ?கண்பார்வை மங்கல் எண்டா கண்ணாடி போடத்தானே வேணும்?அதிலயும் ஒரு லுக் இருக்கு,தெரியுமோ????????ஐ லைக் தற்.///

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் கஃப் இஸ் இட்?:))

    ReplyDelete
  64. அந்தப் பழம் கொக்கோ பழம் என நான் சின்னனில் சாப்பிட்ட ஞாபகம். நாங்கள் சின்னப்பிள்ளைகளாக இருக்கும்போது வீட்டிலே எப்பவும் ஒரு சேவண்ட் போய் இருப்பார். அவர்கள் கண்டி, ஹற்றன், பதுளைப் பக்கமிருந்துதான் வருவார்கள்.

    அப்படி ஒருவர், நான் பிறக்க முன்பே எங்கட வீட்டில் நின்றவர் சேவண்ட் ஆக. பின்பு அவர் வளர்ந்ததும், அவரை ஒரு வேலையில் எங்கட அப்பா சேர்த்துவிட்டார். பின்னர் அவர் தானாகவே பதுளையில் போய், நல்ல ஒரு பிஸ்னஸ்ஸில் பங்காளராகச் சேர்ந்து, பெரிய பணக்காரனாகி விட்டார்.

    3,4 மாதத்துக்கொருமுறை எம் வீட்டுக்கு வந்து போவார். வரும்போது மலைநாட்டு மரக்கறியிலிருந்து பழவகைகள் எல்லாம் விதம் விதமாக கொண்டு வருவார்.

    அப்படிக் கொண்டு வந்ததில் ஒன்றுதான்.. உதேபோல பழம்... அது கொக்கோ பழம் எனச் சொன்னதாக எனக்கு நினைவு.

    ReplyDelete
  65. avocado என இங்கெல்லாம் கிடைக்கிறதே.. அதுதானாக்கும்... அது நான் வீட்டில் சாடியில் அழகுக்காக குட்டிக் கன்று வளர்க்கிறேன். என் பக்கத்தில் படமும் போட்டிருக்கிறேன், எங்கே எனத் தெரியவில்லை, தேட வேண்டும்.

    ReplyDelete
  66. athira said...

    ஆற்றைப் பார்க்கும்போதே குதிக்கோணும்போல ஆசையாக வருது.. இந்த விஷயத்தில் சிங்கள மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.////இப்ப எனக்கு விளங்குது,ஏன் தேம்சுக்கை குதிக்கப் போறன்,தேம்சுக்கை குதிக்கப் போறன் எண்டு சொல்லுறா எண்டு,ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!!

    ReplyDelete
  67. athira said...

    //Yoga.S.FR said...
    தனிமரம் said...

    அப்ப கண்ணாடி யோகா ஐயாவா இப்ப ?ஹீ ஹீ!///என்ன,ஹீ!ஹீ?கண்பார்வை மங்கல் எண்டா கண்ணாடி போடத்தானே வேணும்?அதிலயும் ஒரு லுக் இருக்கு,தெரியுமோ????????ஐ லைக் தற்.///

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் கஃப் இஸ் இட்?:))///ஏப்ரல் மாதக் கடைசியில உந்தப்பக்கம் வருவன்.பாருங்கோ!!!!

    ReplyDelete
  68. நிரூபன் அவளை(லை)நினைத்து உரலை இடிக்கிறாராம்!!!!!

    ReplyDelete
  69. அதிரா அக்காளுக்கு நெஸ்ரமோல்ட்,ஹாலிக்ஸ் கொடுக்கும் அளவுக்கு தனிமரம் வசதியான
    ஆள்கிடையாது.அவ்வ்வ்வ்

    ReplyDelete
  70. இந்த ஆற்றில் சிங்களம் மட்டுமல்ல யாழ்ப்பாணத்தவர் குறிப்பாக தீவார்(கல்லு எடுக்கக் கூடாது) மலையக உறவுகள்,மட்டக்களப்பு உறவுகள் என பலர் குளிர்த்தார்கள் குளிக்கின்றார்கள் இந்த ஆறு எப்படி எல்லாம் ராகுலுடன் சேர்ந்து குளிர்த்தது என்பதை வரும் பகுதியில் பயணிக்கலாம் அதிரா!

    ReplyDelete
  71. சின்னம்மா !அது கொக்கோ பழம் வேற இது அலிக்கடப்பேர அத்தோடு இது மரமாகினால் மாம்பழத்து மரம் போல நீண்டு வளரும் ஏறித்தான் பேர புடுங்கனும் கொக்கத்தடி கட்டியும் புடுங்களாம் மரத்தில் ஏறி விழுந்து முதுகில் காயம்பட்ட ராகுலுக்கு மஞ்சலும் நல்லெண்ணையும் கலந்து பூசிவிட்டவள் அனோமா என்று வேற அடித்துச் சொல்லுறான் அதிரா அக்காள்! தனிமரம் சொன்னாலும் ராகுல் பயல் சொல்லுறான் சின்னம்மா என்று கூப்பிடனுமாம் சர்வண்ட வீட்டு (வேலையாள்)  கிட்ட அதிகாரம் செய்து இருக்கும் இந்த பாப்பா என்று !ஹீ ஹீ 

    ReplyDelete
  72. avocado என இங்கெல்லாம் கிடைக்கிறதே.. அதுதானாக்கும்... அது நான் வீட்டில் சாடியில் அழகுக்காக குட்டிக் கன்று வளர்க்கிறேன். என் பக்கத்தில் படமும் போட்டிருக்கிறேன், எங்கே எனத் தெரியவில்லை, தேட வேண்டும். // அலிக்கடபேர பிரென்சில் மட்டும்மல்ல மொறீசியஸ் உணவுவகை,சீனுவ உணவுவகையில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது.அடுக்குமாடியில் வளர்க்க முடியாது நிலத்தோடு வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க முடியும் .லண்டனில் சாத்தியம் எதுக்கும் வளர்ந்த பிறகு சொல்லுங்கோ தனிமரம் வரும் போது ஈஸ்டம் அம்மன் கோயிலில் படைத்துப் போட்டு சாப்பிடும் !ஹீ ஹீ

    ReplyDelete
  73. ஆற்றைப் பார்க்கும்போதே குதிக்கோணும்போல ஆசையாக வருது.. இந்த விஷயத்தில் சிங்கள மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.////இப்ப எனக்கு விளங்குது,ஏன் தேம்சுக்கை குதிக்கப் போறன்,தேம்சுக்கை குதிக்கப் போறன் எண்டு சொல்லுறா எண்டு,ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!! 
    // ஹீ ஹீ யோகா ஐயா அவா சொன்னது குளிக்கப் போறன் என்று நீங்க பிழையாக விளங்கி விட்டியல் .அவ்வ்வ்வ்

    ReplyDelete
  74. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் கஃப் இஸ் இட்?:))///ஏப்ரல் மாதக் கடைசியில உந்தப்பக்கம் வருவன்.பாருங்கோ!!!! 
    //அதுக்குள்ள தொடரை முடிக்கமுடியாது யோகா ஐயா வேலைப்பளு அதிகம் தனிமரத்திற்கு. ஹீ ஹீ

    ReplyDelete
  75. நிரூபன் அவளை(லை)நினைத்து உரலை இடிக்கிறாராம்!!!!! 
    //ஆமா விதானையாற்ற மகள் இவரை உலக்கையால் இடிக்கத்தான் போறாள்!ஹீ ஹீ(கோர்த்துவிடுவம் இல்ல!

    ReplyDelete
  76. நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  77. இரவு 1.30 க்கு படுக்கைக்குப் போன பிறகுதான் யோகா அப்பாவுக்கு என்ன குழப்பமெண்டு யோசிச்சால் வந்திட்டுது.நிலான்ர பிறந்தநாளுக்கு வந்திருக்கு அந்தக் குழப்பம்.நிலா கனடாவில அவவின்ர அப்பா அம்மாவோட இருக்கிறா.என் அண்ணாவின் குழந்தை அவள்.குடும்பத்துக்கு மூத்த செல்லம்.என் புளொக்கரோடு சேர்ந்து அவளும் வளர்ந்துகொண்டு வாறாள்.குழப்பம் தீர்ந்துப்போச்சோ யோகா அப்பா !

    வயிற்றுவலி எப்பிடி இருக்கு.ஏன் கண்ட நிண்ட ஆங்கில மருந்துகளைப் பாவிக்கிறீங்கள்..வெந்தயத்தை ஊறப்போட்டுத் தயிரில கலந்து குடியுங்கோ.நிறையத் தண்ணி குடியுங்கோ.விளக்கெண்ணையோ நல்லெண்ணையோ வயித்துக்குப் பூசுவினம்.நல்லெண்ணை வச்சு நிறையக் குளியுங்கோ....பாத்தீங்களே அடிக்கடி யார் குளிக்காத ஆள் எண்டு !

    ReplyDelete
  78. மலையகத்தின் பெருமையை சுவைபட கூறியிருக்கிறீர்கள்... மிக அருமையாக உள்ளது தாங்கள் இலங்கை மலையகத்தை சேர்ந்தவரா? சகோதரரே

    ReplyDelete
  79. இரவு 1.30 க்கு படுக்கைக்குப் போன பிறகுதான் யோகா அப்பாவுக்கு என்ன குழப்பமெண்டு யோசிச்சால் வந்திட்டுது.நிலான்ர பிறந்தநாளுக்கு வந்திருக்கு அந்தக் குழப்பம்.நிலா கனடாவில அவவின்ர அப்பா அம்மாவோட இருக்கிறா.என் அண்ணாவின் குழந்தை அவள்.குடும்பத்துக்கு மூத்த செல்லம்.என் புளொக்கரோடு சேர்ந்து அவளும் வளர்ந்துகொண்டு வாறாள்.குழப்பம் தீர்ந்துப்போச்சோ யோகா அப்பா !

    வயிற்றுவலி எப்பிடி இருக்கு.ஏன் கண்ட நிண்ட ஆங்கில மருந்துகளைப் பாவிக்கிறீங்கள்..வெந்தயத்தை ஊறப்போட்டுத் தயிரில கலந்து குடியுங்கோ.நிறையத் தண்ணி குடியுங்கோ.விளக்கெண்ணையோ நல்லெண்ணையோ வயித்துக்குப் பூசுவினம்.நல்லெண்ணை வச்சு நிறையக் குளியுங்கோ....பாத்தீங்களே அடிக்கடி யார் குளிக்காத ஆள் எண்டு ! // எனக்கும் குழப்பம் தீர்ந்து போச்சு நிலாவுக்கு எப்படி பாப்கட்டு வெட்டின முடியிருக்கும் சுவீசில் என்று!ஹீ ஹீ
    யோகா ஐயா    அதிராவின் ஆப்பம் சாப்பிட்டுத்தானாம் வயிற்றுவலி !

    ReplyDelete
  80. வாங்க எஸ்தர் சபி தங்களின் முதல் வருகைக்கு தனிமரத்தின் வாழ்த்துக்கள். உங்கள் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது   என்றாலும் மலையகம் எனக்கு புகுந்தவீடு . ஹீ ஹீ தொடரை நேரம் இருக்கும் போது முழுமையாக படியுங்கள் முழுமையான பதில் வரும். நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  81. வணக்கம் அண்ணே இடையில் இந்த தொடரை மிஸ் பண்ணிவிட்டேன் இப்பவும் வாசிக்கவில்லை ஓட்டு மட்டும் போட்டுவிட்டு கெளம்புறேன் ஆறுதலாக முழுவதும் படித்து முடிக்கவேண்டும்

    ReplyDelete
  82. நன்றி ஹேமா!குழப்பம் தீர்ந்தது.மருமகள் என்று சொல்லியிருக்கலாம்!தெரியாமல் நான் அதிராவுக்கு ..........என்று சொல்லி......................!பரவாயில்லை,எல்லாம் ஒன்றுதானே???

    ReplyDelete
  83. வணக்கம் ராஜ் ஆறுதலாக படியுங்கள் எந்த அவசரமும் இல்லை. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  84. ஆஹா யோகா ஐயாவுக்கு இதில் வேற குழப்பமா மருமகளாம் நிலாக்குட்டி நானும் மாத்தியோசித்துப் போட்டன்.ஹீ ஹீ நன்றி ஹேமா .

    ReplyDelete
  85. உண்மைதான் அம்பலத்தார் பதுளை ,பசரை,நமுனுக்கொல்ல,பண்டார
    வெல,வெலிமட,நுவரெலியா என்று நம்மவர்கள் களப்பணி ஆற்றியது அதிகம் அன்நாட்களில் அதற்கு அவர்களின் பிரச்சாரம்,வீதி நாடகம் ,ஓற்றுமை என பலவிடயம் பின்னால் இருந்தது முக்கியமாக மாணவர் அணி!

    ReplyDelete