18 March 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன் -19

பங்கஜம்  பாட்டிக்கு  உடல்நலம் இல்லை என்று  சொல்லி கடிதம் போட்டது முத்தாச்சி பாட்டி.

 தன் பேர்த்தி சுகியைப் பார்க்கவும் ஊர்த்திருவிழா  வரப்போறதாலும்  இப்படி ஒரு செய்தி அனுப்பியது  குடும்பத்தில் எல்லோரும்  இணையும் ஒரு சந்தர்ப்பமாக  இருந்தது   !

ஊரில் எந்த வீட்டு ஆம்பிள்ளையும் ஒன்றாக காணவேண்டும் என்றால்!

 ஊர்க் கோயில் திருவிழா நடக்கனும்.

 அப்போது தான் நாட்டின் பலபாகத்திலும்  தனியாக வியாபாரம் செய்வோரும்  அங்கே வேலை செய்வோரும் என ஒடி  வருவதும்.

 ஒன்றாகத் திருவிழா செய்வதும்.

 அது பரம்பரைக் கோயில் திருவிழா புதியவர்கள் வழிவிடுங்கள் என்றாலும் பாராளுமன்றத்தில் இன்னும் இருப்பது அனுபவம் கொண்ட பெரியவர்கள் என்று எண்ணுவது போல. அவர்கள் குடும்ப க்கெளரவம் இந்த திருவிழாக்களில் தான் பட்டொளி மின்னும் .அம்மனுக்கு சாத்துப்படி சொல்லும் இன்று எந்தக்கடைக்காரர்களின் உபயம் என்று!


ஆனால் பங்கஜம் பாட்டி தங்கமணி  மாமா மற்றும்  ,செல்வம்  மாமா குடும்பத்தை சேர்க்கவில்லை.

  தன் புருஷன் செத்தும் வராத தாலும் தனக்குத்தெரியாமல்  கலியாணம் கட்டின இந்த நாம்பன்கள் வீட்டுக்கு வரப்பிடாது என்று  குசினிக்குள்  போனதும்.

  அம்மாவோ ஒன்றும் செய்யமுடியாததால்  வந்தவர்களை வா என்று கூப்பிடவும் முடியாமல் தொங்கு பாராளு மன்றம் போல  நின்றா!

 அந்த சமயத்தில் .
சின்னாத்தாத்தா   அவங்கள்  என் வீட்டில் இருந்து விட்டு  திருவிழா முடியப்போகட்டும்.

  திருவிழா நேரத்தில் வெளியூரில்   இருந்து யார்  வந்தாலும் பேரம்பலத்தார்  உடனே   அனுப்பமாட்டார்

.  நான்   என்ற பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் யாரையும்  அனுப்பமாட்டன் .

 எனக்கும் வீடு இருக்கு  .நான் செத்தா நாளைக்கு கொள்ளிப்பந்தம்  பிடிக்க பேரப்பிள்ளைகள்  வேணும். என்று விட்டு  சின்னத்தாத்த தன் வீட்டை போய் விட்டார் மாமாமார்கள் குடும்பத்தைக் கூட்டிக் கொண்டு.

அடுத்தநாள்  சின்னத்தாத்தா  எல்லாருக்கும் அவர் வீட்டில் .!

பூவரசு மரத்தில் தூங்கிய சேவல்கோழி ஒரு முழக்கயிற்றில் தொங்கியதில் கிடைத்தது.  கோழிக்குழம்பு ,கோழிப்பொரியல்,முட்டை அவித்தது,..திருக்கையில் ஒரு துவையல் ,சுறாவில் ஒரு சுண்டல். ,அகத்தியிலையில் ஒரு சொதி என மதியம் சாப்பாடு

. நீண்ட நாட்களின் பின் மச்சானுடன் கள்ளுப்போத்தலுடன் இருந்தார் எங்க ஐயா !

சின்னப்பாட்டி இடைக்கிடை சூடைமீன் பொரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தா குடிப்பவர்களுக்கு சுவைக்க!


இரவு மரக்கறியில் ஓடியல்கூழ் என வீடு களைகட்டியது

. இன்னும் இருநாட்களில் குல தெய்வம் அம்மனுக்கு திருவிழா  தொடக்கம்.  

மச்சக்கோப்பையும் ,சட்டிகளும் கோடியில் போய் விட்டது.

 மீன்கள் எல்லாம் கருவாடாகும் !கள்ளுக்கடையில் ஈ ஓடும் ஆட்கள் இல்லாமல்
ஆன்மீகப் பதிவு எழுதிவிட்டு பின்னூட்டம் வராமல் காத்திருக்கும் பதிவாளர்கள் போல!

அதுவரை ஊரில் இருக்கும் பொடியங்களின் குற்றாலக் குளியல் கோயில் கேணி .

புத்துசாக இறைத்து புத்தம் புதிய வீடு போல காட்சியளிக்கும்.

 நானும் இப்ப நீந்துவன் தெரியுமா ?
ரூபன் மச்சான் என்று சவால் விடக்கூடியதாக சேர்ந்து குளிபது கடலில் என இடம் மாறிவிட்டது.

 சின்னத்தாத்தா கோவணத்துடன் கடலில் குதித்து எங்களை தேட விடுவார்.

 மூச்சடக்கிக் கொண்டு நிலத்தில் இருந்து கொண்டு.

 கரையில் நின்று மச்சாள்மார்கள் எண்ணுவார்கள் .

தாத்தா என்று அவர்கள் சேர்ந்து கொண்டார்கள் .

அதுவரை கடல்கரை பார்க்காதவர்களுக்கு சிற்பி,சோகி,சங்கு என்று எடுத்துக் கொடுத்தார் சின்னத் தாத்தா

.அனோமா சிற்பி தேடும்போது தள்ளிவிட்டதில் கொஞ்சம் கோபமாகி கதைக்கமாட்டன் உன்னுடன் என்று போய் சின்னத்தாத்தாவிடம் விளக்கம் வைத்தால் .

சின்னத் தாத்தா நல்லாக சகோதரமொழி கதைப்பார் .
என்பதால் அவளுக்கு இன்னொரு உதவிக்கு ஆள் இருக்கின்றது என்ற தைரியம்.

வீட்டை வரும் போது பூவரசு  இலையில் பீப்பீ செய்து ஊதிக்காட்டும் போது சுகி!தனக்கும் செய்து தரச் சொல்லிக்கேட்ட சாட்டில் வந்து என்னக்கும் வேண்டும் என்றாள் அனோமா.

 எப்ப பார்த்தாலும் இவள் ராகுலோடு மட்டும் கதைக்கின்றாள் என்று யோகனும் ரூபனும் சண்முகம் மாமியிடம். புகார்மனுக் கொடுத்த போது.

 மாமி சொன்னா மச்சாளைக்கட்டுவது அவன் தானே!

 அந்த உரிமையில் ஒட்டுறான் என்ற போது!

 சின்னத்தாத்தா சொன்னார் வடலி வளர்த்துக் கள்ளுக்குடிக்கப் பார்க்கின்றான் போல என் பேரன் .அதன் அர்த்தம் அப்போது புரியாது ராகுலுக்கு.

அதுமட்டும் நடக்காது இந்தப் பங்கஜம்  ஆட்சியில் இருக்கும் மட்டும்.
 என்று இடையில் வந்த பாட்டியை யாரும் கவனிக்வில்லை!

     தொடர்ந்து தொலைத்தவன்  வருவான் விரைவாக!


 ///////////////////////////////////////
நாம்பன்கள்- காளைமாடு-யாழ்வட்டார் மொழி.
ஒட்டுவது-சேர்வது-யாழ்வட்டார் மொழி
வடலி-பனைமரத்தின் சிறு பருவம்.

58 comments:

  1. வணக்கம் நேசன்!///ராகுல் கடைசியில் வடலி வளர்த்து கள்ளு குடிச்சாரோ,இல்லையோ?///இப்ப சொன்னால் சுவாரசியம் போய் விடும்,இல்லையா????ஹ!ஹ!ஹா!!!!!

    ReplyDelete
  2. வணக்கம் யோகா ஐயா!
    ஒரு பால்கோப்பி குடியுங்கோ!ஹீ ஹீ
    வடலி வளர்த்துக் கள்ளுக்குடித்திருந்தால் என்னைப்போல ...தனிமரமாக!
     கொஞ்சம் போறுங்கோ சொல்லுகின்றன் ஹீ ஹீ சுவாரசியம் !

    ReplyDelete
  3. யோகா ஐயாவுக்கு வடலி வளர்த்து கள்ளுக்குடிக்கும் கதை தெரிந்து இருக்கு !ஹீ நீங்க றொம்ப மோசம் !

    ReplyDelete
  4. "பழசு"களுக்கு தெரியாத கதையோ?பழமொழியோ???ஹி!ஹி!ஹி!!!!!!

    ReplyDelete
  5. இண்டைக்கு எங்கட அயலில பழைய(BROCANT) மாக்கற்.ஒன்றிக்கு வந்து தான் சாப்பிட்டது.பால்கோப்பி இப்ப....................!////நிரூபன் பதிவில பாத்தன்!உங்களுக்குத் தெரியாததில்ல,"ம்" மோட முடிச்சாச்சு!

    ReplyDelete
  6. நாளுபேருக்கு நம்ம இயல்பு வாழ்க்கையை சொல்லிக்கொடுக்கனும் பருவத்தில் யோகா ஐயா ! என்னசெய்வது பாட்டிமாரும் தாத்தாக்களும் அருகில் இல்லாமல் வெளிநாட்டு பேரன்கள் பேத்திகள் வாழ்கின்ற துயரம் ஈழத்தவனுக்கு!

    ReplyDelete
  7. வணக்கம் தனிமரம் சார்..

    இந்த தொடரின் பல பாகங்களை தவற விட்டு விட்டேன்.
    என் ஓட்டுப் பங்களிப்பை மாத்திரம் நல்கி விட்டு நகர்கிறேன்.

    யோகா ஐயா, இங்கேயா நிற்கிறார்?

    நாளை அவரை வைத்து ஓர் நக்கல் கவிதை எழுதப் போறேன்.

    ReplyDelete
  8. யோகா ஐயாவையும், மணியையும் ஒத்துமையாக்கனும்!
    நானும் முயற்சிக்கிறன்.

    தனிமரமும் முயற்சிக்கவும்!

    ReplyDelete
  9. நாளுபேருக்கு நம்ம இயல்பு வாழ்க்கையை சொல்லிக்கொடுக்கனும் பருவத்தில் யோகா ஐயா ! என்னசெய்வது பாட்டிமாரும் தாத்தாக்களும் அருகில் இல்லாமல் வெளிநாட்டு பேரன்கள் பேத்திகள் வாழ்கின்ற துயரம் ஈழத்தவனுக்கு!

    ReplyDelete
  10. present annaa ji.........

    ReplyDelete
  11. அண்ணா கொஞ்ச நேரம் படிச்சிப் போட்டு பின்னரம் வாறன் .....

    ReplyDelete
  12. வாங்க நிரூபன்!
    நேரம் இருக்கும் போது படியுங்கோ ஒரு அவசரமும் இல்லை! யோகா ஐயா  இப்பத்தான் போனவர் !கொர்ர்ர்ர்ர்ர்ர்!

    ReplyDelete
  13. மனங்களில் விரிவு வந்தால் மணப்பது கடினம்  நிரூபன்!  முயலுங்கள் நீங்கள் யோகா ஐயாவுக்கும் மணிக்கும் சமாதானம் பேசும் அளவுக்கு தனிமரத்திற்கு தகுதியில்லை ஐ ஆம் சாரி பாஸ்! 

    ReplyDelete
  14. வாங்க கலை  பரீட்சைக்குப் படிச்சிட்டு பிறகு வாங்கோ!நன்றி வருகைக்கு!

    ReplyDelete
  15. நான் நாளைக்கு லீவு எடுக்கலாமேண்டு பாக்கிறன்!

    ReplyDelete
  16. ஏன் நாளைக்கு நாற்றில் உங்களை நிரூபன் வேட்டியை உருவப்போறான் என்ற பயமோ!ஹீ ஹீ 

    ReplyDelete
  17. //பூவரசு மரத்தில் தூங்கிய சேவல்கோழி ஒரு முழக்கயிற்றில் தொங்கியதில் கிடைத்தது. கோழிக்குழம்பு ,கோழிப்பொரியல்,//
    இது நேசன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.........
    இன்றைய பதிவில் ரசித்தது இது.

    ReplyDelete
  18. //சின்னப்பாட்டி இடைக்கிடை சூடைமீன் பொரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தா குடிப்பவர்களுக்கு சுவைக்க!//
    ஓகோ அது வேற நடந்திருக்கா

    ReplyDelete
  19. 19":

    //பூவரசு மரத்தில் தூங்கிய சேவல்கோழி ஒரு முழக்கயிற்றில் தொங்கியதில் கிடைத்தது. கோழிக்குழம்பு ,கோழிப்பொரியல்,//
    இது நேசன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.........
    இன்றைய பதிவில் ரசித்தது இது. //
    நன்றி அம்பலத்தார் அந்த இயல்பு மக்களை நேரில் பார்த்தவன் ராகுல் சொல்லியதைப் பதிவு செய்கின்றேன்.

    ReplyDelete
  20. //சின்னப்பாட்டி இடைக்கிடை சூடைமீன் பொரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தா குடிப்பவர்களுக்கு சுவைக்க!//
    ஓகோ அது வேற நடந்திருக்கா 
    //அது இயற்கையான கிராமம் மக்கள் எல்லா விடயங்களையும் ரசித்தார்கள்  ! நன்றி அம்பலத்தார் வருகையும் கருத்துக்கும்!

    ReplyDelete
  21. //வீட்டை வரும் போது பூவரசு இலையில் பீப்பீ செய்து ஊதிக்காட்டும் போது சுகி!தனக்கும் செய்து தரச் சொல்லிக்கேட்ட சாட்டில் வந்து என்னக்கும் வேண்டும் என்றாள் அனோமா.//ம்.............புரியுது புரியுது.

    ReplyDelete
  22. //வீட்டை வரும் போது பூவரசு இலையில் பீப்பீ செய்து ஊதிக்காட்டும் போது சுகி!தனக்கும் செய்து தரச் சொல்லிக்கேட்ட சாட்டில் வந்து என்னக்கும் வேண்டும் என்றாள் அனோமா.//ம்.............புரியுது புரியுது. // ஹாஹா அது ராகுலின் மச்சாள் கோபப்பட்டாளும் மச்சாள் இல்ல ஹீ ஹீ அப்பி நமுத் ஆதரனே ஹீ இது ராகுல் சொல்லுறான் தனிமரம் இல்லை!

    ReplyDelete
  23. //சுகி!தனக்கும் செய்து தரச் சொல்லிக்கேட்ட சாட்டில் வந்து என்னக்கும் வேண்டும் என்றாள் அனோமா.

    எப்ப பார்த்தாலும் இவள் ராகுலோடு மட்டும் கதைக்கின்றாள் என்று யோகனும் ரூபனும் சண்முகம் மாமியிடம். புகார்மனுக் கொடுத்த போது.//

    ஆகா பத்திக்கிச்சு பத்திக்கிச்சு

    ReplyDelete
  24. //சுகி!தனக்கும் செய்து தரச் சொல்லிக்கேட்ட சாட்டில் வந்து என்னக்கும் வேண்டும் என்றாள் அனோமா.

    எப்ப பார்த்தாலும் இவள் ராகுலோடு மட்டும் கதைக்கின்றாள் என்று யோகனும் ரூபனும் சண்முகம் மாமியிடம். புகார்மனுக் கொடுத்த போது.//

    ஆகா பத்திக்கிச்சு பத்திக்கிச்சு // ம்ம்ம்ம் காலம் வழிவிட்டிச்சா பெருசுகள் வழிவிட்டிச்சா பொறுத்திருங்கள் அம்பலத்தார் !ஹீ முடிவை எப்படிச் சொல்வது அடுத்த பதிவில்  ஹீ

    ReplyDelete
  25. Yoga.S.FR said...
    //நான் நாளைக்கு லீவு எடுக்கலாமேண்டு பாக்கிறன்!//
    என்ன யோகா. இரண்டு நாளுக்கு முன்னம் தலையிடி என்று லீவு. திரும்ப நாளைக்கு லீவு எடுக்கப்போறன் என்கி'றியள். அடிக்கடி லீவு எடுத்தால் வேலை காலியாகிடுமெல்லோ ஹி ஹி.

    ReplyDelete
  26. தனிமரம் said...
    // ம்ம்ம்ம் காலம் வழிவிட்டிச்சா பெருசுகள் வழிவிட்டிச்சா பொறுத்திருங்கள் அம்பலத்தார் !ஹீ முடிவை எப்படிச் சொல்வது அடுத்த பதிவில் ஹீ//
    OK. பொறுத்தார் பூமி ஆள்வார் என்று சொல்லுறவை பொறுத்துக்கொண்டு காத்திருக்கிறன்.

    ReplyDelete
  27. Yoga.S.FR said...
    //நான் நாளைக்கு லீவு எடுக்கலாமேண்டு பாக்கிறன்!//
    என்ன யோகா. இரண்டு நாளுக்கு முன்னம் தலையிடி என்று லீவு. திரும்ப நாளைக்கு லீவு எடுக்கப்போறன் என்கி'றியள். அடிக்கடி லீவு எடுத்தால் வேலை காலியாகிடுமெல்லோ ஹ// அவனவன் கோவணத்தையும் உருவது மட்டும்மல்லாமல் மானத்தையும் விற்கும் போது எப்படி லீவு எடுக்காமல் இருப்பது அம்பலத்தார் கொள்கை முக்கியம் இல்ல!!!!ஹ்ஹ்

    ReplyDelete
  28. நான் வேலைக்குப் போன பிறகு எல்லாரும் கும்மியடிச்சு நேசனிட்ட பால் கோப்பியும் வாங்கிக் குடிச்சிருக்கிறீங்கள்.எனக்கிப்ப பால்கோப்பி வேணும்.மணியத்தாரும் கடையை மூடிப்போட்டார்.மூடிப்போட்டாரோ இல்லாட்டி அவரையே மூடிப்போட்டீங்களோ !

    ReplyDelete
  29. தனிமரம் said...
    // ம்ம்ம்ம் காலம் வழிவிட்டிச்சா பெருசுகள் வழிவிட்டிச்சா பொறுத்திருங்கள் அம்பலத்தார் !ஹீ முடிவை எப்படிச் சொல்வது அடுத்த பதிவில் ஹீ//
    OK. பொறுத்தார் பூமி ஆள்வார் என்று சொல்லுறவை பொறுத்துக்கொண்டு காத்திருக்கிறன். 
    //ஐயோ காத்திருக்காதீங்கோ அப்புறம் தனிமரம் ஆகிவிடுவீங்கள் என்று ராகுல் நக்கல் பண்ணுறான்  நேசனைப் என்னைப்பார்த்து அம்பலத்தார் அவனைக் கொலை செய்தால் சர்க்கோசி சிறையில் சாப்பாடும் ஓய்வும் தருவார் ஆனால் என்ற மனிசியின் நிலை????lolu!

    ReplyDelete
  30. நான் வேலைக்குப் போன பிறகு எல்லாரும் கும்மியடிச்சு நேசனிட்ட பால் கோப்பியும் வாங்கிக் குடிச்சிருக்கிறீங்கள்.எனக்கிப்ப பால்கோப்பி வேணும்.மணியத்தாரும் கடையை மூடிப்போட்டார்.மூடிப்போட்டாரோ இல்லாட்டி அவரையே மூடிப்போட்டீங்களோ ! 
    //ஹா ஹா நான் அவர் கடை வைத்திருக்கும் பக்கம் போய் நீண்ட வருடஸங்கள் ஆச்சு அக்காள்!

    ReplyDelete
  31. அடுக்கு மண்சட்டியில மச்சச் சாப்பாடு மணம் வருது.அதை சொல்லேக்கையே வாய் ஊறுது.எப்பதான் அப்பிடிச்சாப்பாடு இனிக் கிடைக்குமோ.பகல் சாப்பாடு பிறகு கூழ்.....ம்ம்ம்ம் !

    ReplyDelete
  32. அடுக்கு மண்சட்டியில மச்சச் சாப்பாடு மணம் வருது.அதை சொல்லேக்கையே வாய் ஊறுது.எப்பதான் அப்பிடிச்சாப்பாடு இனிக் கிடைக்குமோ.பகல் சாப்பாடு பிறகு கூழ்.....ம்ம்ம்ம் ! 
    //அக்காள் இது எல்லாம் ராகுல் பயல் சாப்பிட்டது! தனிமரம்  பழைய கஞ்சி குடித்த  பன்னாடை!அவ்வ்வ்வ்

    ReplyDelete
  33. ஹேமா said...

    //நான் வேலைக்குப் போன பிறகு எல்லாரும் கும்மியடிச்சு நேசனிட்ட பால் கோப்பியும் வாங்கிக் குடிச்சிருக்கிறீங்கள்.எனக்கிப்ப பால்கோப்பி வேணும்.//
    எங்க ஆஸ்தான கவிஞருக்கு இல்லாத கோப்பியே. என்ரை செல்லம்மாவின்ரை ஸ்பெசல் கைப்பக்குவத்தில மல்லிக்கோப்பி இந்தாங்கோ குடியுங்கோ ஹேமா வேலைசெய்த அலுப்பு பறந்திடும்

    ReplyDelete
  34. நான் வேலைக்குப் போன பிறகு எல்லாரும் கும்மியடிச்சு நேசனிட்ட பால் கோப்பியும் வாங்கிக் குடிச்சிருக்கிறீங்கள்.எனக்கிப்ப பால்கோப்பி வேணும்.//
    எங்க ஆஸ்தான கவிஞருக்கு இல்லாத கோப்பியே. என்ரை செல்லம்மாவின்ரை ஸ்பெசல் கைப்பக்குவத்தில மல்லிக்கோப்பி இந்தாங்கோ குடியுங்கோ ஹேமா வேலைசெய்த அலுப்பு பறந்திடும் 
    //ஹீ அம்பலத்தார் மல்லிக்கோப்பியைவிட மல்லி ரசம் சூப்பர் தெரியுமோ?! பங்கஜம் பாட்டி செய்யும் ரசம் ஹீ அலுப்போ ஒரு அலுப்பு மருந்து குடியுங்கோ அந்த அலுப்பு மருந்து எப்படி என்றால் ...கொஞ்சம் பொறுங்கோ ராகுல் வரட்டும் சொல்லுவான்'

    ReplyDelete
  35. எங்க ஆஸ்தான கவிஞருக்கு இல்லாத கோப்பியே. என்ரை செல்லம்மாவின்ரை/:கவிதாயினி ஹேமா அக்காள் 
    என்று சொல்லனும் அம்பலத்தார்!ஆனாலும் எனக்கு கடுப்பூ நான் ஐராங்கனியை டாவடிப்பதால் துரோகியாம் எப்படித்தாங்கும் இதயம்!!!!

    ReplyDelete
  36. நன்றி நன்றி செல்லம்மா மாமிக்கு.மல்லிக் கோப்பி.ம்ம்ம்ம்ம்.....வாசம் !

    ஆஸ்தான கவிஞர்,கவிதாயினி ஹேமா.காது குளிருது.சந்தோஷமான பட்டம் வந்திருக்கு.இப்பிடி நீங்கள் ஆராச்சும் பாவப்பட்டுத் தந்தாத்தான் !

    இப்பத்தான் நாற்று பக்கம் போய்ட்டு வாறன்.பல்லு விளக்காதவருக்கும் பட்டம் குடுத்திருக்கிறார் நிரூ.

    ஏனாம் யோகா அப்பா நாளைக்கு லீவு எடுக்கிறாராம்.நேசன் ஏதாவது அரசியல் கூட்டம் வச்சு அவரைக் கூட்டிக்கொண்டு போய் மாட்டி விடாதேங்கோ.பாவம் அவர் !

    நேசன்....அதென்ன சைட் அடிக்க அந்த ஜராங்கனியைத் தவிர வேற ஆரும் கிடைக்கேல்லையோஓஓஓ....எனக்கும் பிடிக்கேல்ல 1

    ReplyDelete
  37. இப்பத்தான் நாற்று பக்கம் போய்ட்டு வாறன்.பல்லு விளக்காதவருக்கும் பட்டம் குடுத்திருக்கிறார் நிரூ.

    ஏனாம் யோகா அப்பா நாளைக்கு லீவு எடுக்கிறாராம்.நேசன் ஏதாவது அரசியல் கூட்டம் வச்சு அவரைக் கூட்டிக்கொண்டு போய் மாட்டி விடாதேங்கோ.பாவம் அவர் !

    நேசன்....அதென்ன சைட் அடிக்க அந்த ஜராங்கனியைத் தவிர வேற ஆரும் கிடைக்கேல்லையோஓஓஓ....எனக்கும் பிடிக்கேல்ல 1 // வாங்கோ  எங்களுக்கு சைட் அடிக்கஅவாங்கதான் இருந்தாங்க வேலை இடத்தில் ஹீ ஹீ நானும் நாளைக்கு விடுமுறை எடுக்கலாம் யார் வேட்டி உருவினாலும் நமக்கு அரசியல்தான் முக்கியம் வரலாறு சொல்லும் ஹீ !

    ReplyDelete
  38. கடை பூட்டிப்போட்டார் முதலாளி நாளை பார்ப்பம் வேலை நேரத்தில் ரயில் வருகுது இதயம் போகுதுதே பாடல் ஒலிக்குது கைபேசியில்!!!கொர்ர்ர்ர்ர்ர்!

    ReplyDelete
  39. நான் யாழ்பாணகாரிதான் என் பாடசாலையில் கற்ற கிரந்த மொழி எனும் இலக்கண பாடம் உங்கள் பதிவிக் மூலம் மீண்டும் நான் கற்றேன் போல் உள்ளது.

    ReplyDelete
  40. அம்பலத்தார் said...

    Yoga.S.FR said...
    //நான் நாளைக்கு லீவு எடுக்கலாமேண்டு பாக்கிறன்!//
    என்ன யோகா. இரண்டு நாளுக்கு முன்னம் தலையிடி என்று லீவு. திரும்ப நாளைக்கு லீவு எடுக்கப்போறன் என்கி'றியள். அடிக்கடி லீவு எடுத்தால் வேலை காலியாகிடுமெல்லோ ஹி ஹி.
    ///வேலையை "காலி"யாக்கி வருடம் இரண்டாச்சு அம்பலத்தார்,ஹ!ஹ!ஹா!!!!!!!

    ReplyDelete
  41. தனிமரம் said...

    ஏன் நாளைக்கு நாற்றில் உங்களை நிரூபன் வேட்டியை உருவப்போறான் என்ற பயமோ!ஹீ ஹீ ////உருவினா என்ன,நான் ........... போட்டிருக்கனே,ஹி!ஹி!ஹி!!!!!!!

    ReplyDelete
  42. அம்பலத்தார் said...

    Yoga.S.FR said...
    //நான் நாளைக்கு லீவு எடுக்கலாமேண்டு பாக்கிறன்!//
    என்ன யோகா. இரண்டு நாளுக்கு முன்னம் தலையிடி என்று லீவு. திரும்ப நாளைக்கு லீவு எடுக்கப்போறன் என்கி'றியள். அடிக்கடி லீவு எடுத்தால் வேலை காலியாகிடுமெல்லோ ஹி ஹி.
    ///வேலையை "காலி"யாக்கி வருடம் இரண்டாச்சு அம்பலத்தார்,ஹ!ஹ!ஹா!!!!!!! 
    // வேலையை விட்டாளும் ஆயிரம் வீட்டுவேலையிருக்கும் மனசு சொல்லும் பேசாமல் வேலைக்கே போய்ட்டு வந்திடலாம் என்று!ஹீ

    ReplyDelete
  43. தனிமரம் said...

    ஏன் நாளைக்கு நாற்றில் உங்களை நிரூபன் வேட்டியை உருவப்போறான் என்ற பயமோ!ஹீ ஹீ ////உருவினா என்ன,நான் ........... போட்டிருக்கனே,ஹி!ஹி!ஹி!!!!!!! 

    // இன்னும் நாற்றுப்பக்கம் போகவில்லை கோப்பி நேரம் வரவில்லை பார்ப்போம் நிரூபன் ...அதையும் உருவி விடுறானா என்று மீஈஈஈஈஈ!

    ReplyDelete
  44. தனிமரம் said..வேலையை விட்டாலும் ஆயிரம் வீட்டுவேலையிருக்கும்.////உண்மைதான் நேசன்!ஆயிரம் அல்ல ஆயிரத்தெட்டு!!!ஹ!ஹ!ஹா!!!!!!!

    ReplyDelete
  45. தனிமரம் said....நிரூபன், ................ அதையும் உருவி விடுறானா என்று மீஈஈஈஈஈ!/////அதுக்கு "மேலயும்" ஒண்டு போட்டிருக்கிறன்,ஹய்யோ!ஹய்யோ!!!!!

    ReplyDelete
  46. //ஆன்மீகப் பதிவு எழுதிவிட்டு பின்னூட்டம் வராமல் காத்திருக்கும் பதிவாளர்கள் போல!//
    ஹா,ஹா.பாருங்கள் இந்த ஆன்மீகப்பதிவு
    http://shravanan.blogspot.com.

    ReplyDelete
  47. ரசித்தேன்...தொடருங்கள் நேசரே...

    ReplyDelete
  48. //வீட்டை வரும் போது பூவரசு இலையில் பீப்பீ செய்து ஊதிக்காட்டும் போது சுகி!தனக்கும் செய்து தரச் சொல்லிக்கேட்ட சாட்டில் வந்து என்னக்கும் வேண்டும் என்றாள் அனோமா.//

    எனக்கும் கூட ரொம்ப பிடிக்கும்.வளர்ந்து பெரியவளான பின்னாடியும் கூட எங்க ஊருக்கு போகும்போதெல்லாம் பூவரசு இலையில பீப்பீ செய்து ஊர் முழுக்க ஊதிக்கொண்டு திரியும்போது எவ்வளவு சந்தோசம் தெரியுமா?

    ReplyDelete
  49. பார்க்கின்றேன் சென்னைப்பித்தன் ஐயா!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  50. நன்றி  ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  51. நன்றி  சித்தாரா மகேஸ்  வருகைக்கும் கருத்துரைக்கும்! அது ஒரு காலம்!!!!ம்ம்ம்

    ReplyDelete
  52. நன்றி  எஸ்தர்-சபி   வருகைக்கும் கருத்துரைக்கும்! கிரந்தம் தனித்துவமானது!

    ReplyDelete
  53. காலை வணக்கம் நேசன்!நல்ல ஓய்வில்லா வேலை போலும்?பிற்பகல் முடிந்தால்......................

    ReplyDelete
  54. வணக்கம் யோகா ஐயா!நலம்தானே!
    நண்பனின் புதுவரவு மைந்தனைப்பார்க்கவும் சில உறவுகளிடம் போய் மகிழ்ந்து குலாவியதில் கொஞ்சம் ஓய்வு இன்று மாலை வழமை போல  வருவேன்!
    நன்றி உங்களின் ஆதரவுக்கும் அன்புக்கும்!

    ReplyDelete
  55. ராகுல் நலம் தானே?ஹ!ஹ!ஹா!!!!!!!!!

    ReplyDelete
  56. ராகுல் நலம் தானே?ஹ!ஹ!ஹா!!!!!!!!! 
    //அவனுக்கு என்ன குறை யோகா ஐயா குடியும் குடித்தனமுமாக குடியுரிமை பெற்று அயல்நாட்டில் வாழ்கின்றான் கல்பனா தான் !!!!!!!!விரைவில்  வெளிப்படும் குட்டு!ஹீ

    ReplyDelete
  57. தனிமரம் said...

    ராகுல் நலம் தானே?ஹ!ஹ!ஹா!!!!!!!!!
    //அவனுக்கு என்ன குறை யோகா ஐயா குடியும் குடித்தனமுமாக குடியுரிமை பெற்று அயல்நாட்டில் வாழ்கின்றான் கல்பனா தான் !!!!!!!!விரைவில் வெளிப்படும் குட்டு!ஹீ!!!!////என்னது "குடி"யா?????உடம்புக்குக் கூடாதெண்டு சொல்லுங்கோ!ஹி!ஹி!ஹி!!!!!!!

    ReplyDelete