27 March 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-23

தேவராம் பாடிவிட்டால். அதுவரை வசந்த மண்டபத்தில்  இருந்து வாசித்த
 ஈழத்தில் தவில் நாதஸ்வர  வித்துவான்கள்.

  தங்களின் திறமையை மழையாகப் பொழிவார்கள் தோளில் தொங்கவிட்டு தவில் அடிப்பவர்கள். டிண்டடிண்டக்க டிண்டடின்=

 காட்சியின்பின்னால் ஒலியைக் கேளுங்கள்



என்று ஒலி எழுப்ப நாதஸ்வரம் பீபீபீ பீபீபீ என்ற ஒற்றை ஒலிக்க  அம்மனுக்கு ஆராட்டு நடக்க அம்மன் உள்வீதி  வலம் வந்து கொண்டிருந்தா!

அம்மனுக்குப் பின்னால் அங்கப்பிரதட்சனையில் முதலாவதாக மூர்த்தி மாமா வருவார்.

 முதலில் ஆண்பிள்ளை பிறக்கணும் ஆத்தா .அடுத்துவருவார் கதிரேசன் இந்த முறை என்ஜினியர் ஆக இடம் கிடைக்கணும் கம்பஸ்சுக்கு கைவிடாத தாயே!
தட்டிவிடுவான் பின்னால் இருந்து தங்கவேல் சாமி போகுது தொடர்ந்து போ பின்னால் பலர் வருகினம் என்று அவன் மனதில் அடுத்த வீட்டுக் கிளியிருப்பாள் இந்த வருடம் சரி தன் காதலை ஏற்றுக்கொள்வாளா? என்று .

இடது புறத்தில் முத்தாச்சிப்பாட்டி கற்பூரச் சட்டியோடு வருவா .

அடுத்து வருவா அம்புஜம் பாட்டி ஆத்தா என்ற பிள்ளை இன்னும் உயிரோடு இருக்கிறானா ஊரெல்லாம் தேடிவிட்டேன்.

இந்தியன் ஆமி எங்கே கொண்டு போனான் என்ற ஒரு பிள்ளையை கற்பூரச்சட்டியை விட அந்தப்பாட்டியின் மனசு சுடும் .

எத்தனை குடம் தண்ணீர் அந்தப் பாட்டியின் கண்களில் பல காலமாகப் பார்த்திருக்கின்றான் ராகுல்!

 இப்படியும் சிலர் ஊருக்குள் உண்டு  கற்பூரச்சட்டிக்குப் பின்னால் பாக்கியம் மாமி பால்குடத்துடன் வருவா.

 பச்சைச் சாரி கட்டி பாலன் மாமி வருவா கூடவே பஞ்சவர்ணக்கிளி போல தேவகி அடி அடிப்பாள் அம்மனுக்கு.

 அடுத்து  முறை ராகுலை விட அதிகம் மார்க் வாங்கனும் என்று.

எப்படித்தான் இவன் குதிரை ஓடுவான் என்னைவிட எட்டு புள்ளி முன்னுக்கு.இரண்டு பேரும் கடைசி வாங்கில் இருந்து தானே படிப்போம்!ராகுலுக்கு

அம்மா எழுப்பி விட்டு அதிகாலையில் தேவாரம் பாடமாக்கி அதிகம் சமயத்தில் புள்ளிவாங்கும் திறமை அவளுக்குத் தெரியாது.அந்தக்கிராமத்தில் படிக்கும் போது.

 இதை  எல்லாம் அனோமாவிற்கு சின்னத்துரைத் தாத்தாவின் தோளில் தூக்கி வைத்து அம்மனைக்கும்பிடு என்ற போது அனோமாவுக்குச் சொல்லியிருந்தான் ராகுல்.


வெளிவீதி வலம் வரத்தேருக்கு ஏற்றினதும் !தீபராதனை காட்டியதும் தேர் நகரப் போகின்றது என்ற செய்தி கிடைக்க அதுவரை தேரடியில் அடிக்கக் காத்திருக்கும் சிதறு தேங்காய்களுக்கு சின்னச் சின்ன களைகளுக்கும் முதியவர்களுக்கும் போர்த்தேங்காயாக யார் உடைப்பது எத்தனை தேங்காய் என்று  போட்டி முடிய .

குருக்கள் மணி அடிக்க அரோகரா என்றால் தேர் பவனி!  ஆசைகளைக்கடந்து தான் ஆன்மீகத்திற்கு வரனும் .என்பதைச் சொல்லும் வடம்பிடிக்கும் கயிறு பலர் இழுக்க இழுக்க இடையில் சில்லுக்கு சக்கை வைப்பது தேர் எத்தனை தடைகள் இருந்தாலும் தாண்டி வரும் என்ற ஐதீகத்தில் .

அப்படித் தாண்டி மேற்கு வீதியில் வரும் போது தேர் கொஞ்சம் சரிந்துவிட்டது.
 அப்போதே சொன்னார்கள் ஊருக்குள் அம்மன் ஆடிவிட்டது.

 எங்களை அசைத்துப் பார்க்கப் போறா என்று அப்படியில்லை .

மூடத்தனம் உங்களுக்கு அதிகம்.

வட்டிக்காரமுருகேசு வாயடைத்தார்.

 அந்தப்பக்கம் கொஞ்சம் பள்ளம் அது தேர் சரியவில்லை.

 கொஞ்சம் சாய்ந்தமாதிரித் தெரியும் சங்கடம் இல்லை பங்கஜம் .எல்லாம் அவன் செயல் என்று சொன்ன போது பாட்டியின் மனதில் தைரியம் இருந்தது .

திருவிழா முடிய தவில் காரர் எல்லோருக்கும் ரூபன் தட்சனை வெற்றிலையில் வைத்துக் கொடுத்த போது அருகில் இருந்தவன் ராகுல்.

 அப்போது சிஞ்சா போட்ட பொடியனை பின்நாளில் ஐரோப்பாவில் பார்ப்பான் என்று அன்று நினைக்கவில்லை.ராகுல்!

அது எல்லாம் ஒரு காலம் !

அடுத்த நாள் தீர்த்தம் முடிந்து தங்கமணி மாமாவும்,செல்வம் மாமா,செல்லன் மாமா குடும்பம்கள்  பதுளை போனார்கள் .

பேரன்  ராகுல் இனி இங்கே படிக்கட்டும் என்று பங்கஜம் பாட்டி மீண்டும் கிராமத்தில் படிக்கச் செய்துவிட்டா .

மருமகளையும் சேர்க்கவில்லை .பேர்த்திமாருக்கு சங்கிலின்போட்டுவிட்டா..

அன்று போகும் போது அனோமா கைகாட்டிவிட்டுப் போனாள்!

 அப்போது தெரியாது அவனைவிட்டு அவள் தொலைந்து விடுவாள் என்று!

இந்தப்பாட்டு!அந்தக்காட்சிக்குப் பொருந்தும் என்று இந்தத் தனிமரம் எண்ணுகின்றது கேட்டுப்பாருங்கள்!-

              தொலைந்தவன் வருவான் தொடர்ந்து
///////////////
அங்கப்பிரதட்சனை- இந்து ஆண்கள் செய்வது /உருலுதல் பேச்சு வழக்கு

54 comments:

  1. நான்தான்.நான்தான்....கலை,யோகா அப்பா வரமுதல்...எனக்குத்தான் இண்டைக்கு எல்லாம் !

    ReplyDelete
  2. வாங்க ஹேமா ஒரு பால்கோப்பி குடியுங்கோ! நல்ல பொரிமா இருக்கு சாப்பிடுங்கோ!

    ReplyDelete
  3. தாங்கோ தாங்கோ.எல்லாரும் நித்திரையாப் போச்சினம்போல.யோகா அப்பாவுக்கு மட்டும் கொஞ்சம் குடுப்பன் இப்ப வந்தால்.பிறகெண்டால் அதுவும் முடிஞ்சுபோகும்.கலைக்கு இல்லவே இல்லை இண்டைக்கு !

    ReplyDelete
  4. பூனையார் கண்டி தெப்பக்குளத்தில் என்னக்கு மாம்பழயூஸ் தாரன் என்று பொய் சொல்லிப்போட்டா! வரட்டும் பூனைக்கு சட்டினிதான்/ ஹேமா ! யோகா ஐயா நல்லத்தான் படிக்கின்றார் !

    ReplyDelete
  5. தாங்கோ தாங்கோ.எல்லாரும் நித்திரையாப் போச்சினம்போல.யோகா அப்பாவுக்கு மட்டும் கொஞ்சம் குடுப்பன் இப்ப வந்தால்.பிறகெண்டால் அதுவும் முடிஞ்சுபோகும்.கலைக்கு இல்லவே இல்லை இண்டைக்கு !//கலை பரீட்சைக்கு தயாராகுது போல படிக்கட்டும் படிச்சு என்ஜினியர் ஆகட்டும்! ஹீ

    ReplyDelete
  6. பூஸாருக்கும் அவவுக்கும் அண்டாட்டிக்கவில அடிக்கடி என்ன வேலையாம்.கேட்டு வைக்கவேணும் ஒருக்கா !

    ReplyDelete
  7. அண்டாட்டிக்காவோ ஆப்பிரிக்காவோ ஹேமா வேலை செய்யுறா! ராகுல் என்ன சொல்லு்றான்!

    ReplyDelete
  8. Hopping in & out...Catch up with u later Nesare...

    ReplyDelete
  9. Hopping in & out...Catch up with u later Nesare...//ஐயோ அண்னாச்சி நான் சின்னவன். அதிகம் படிக்கவில்லை!யாரைப் பிடிக்கப்போறீங்கலோ ரெவெரி அண்ணா்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

    ReplyDelete
  10. வாசிச்சிட்டேன் நேசன்.அந்த சுவாமி சுத்தும்போது நாதஸ்வர மல்லாரி இசை ஒரு பக்திச் சூழலையே தந்துவிட்டது.வாசிச்சது எல்லாம் மறந்து போச்சு !

    ReplyDelete
  11. மல்லாரி இசைதான் பலர் ஜோசிப்பார்கள் என்பதால் சொல்லவில்லை மல்லாரி மீண்டும் வரும் ,இன்னொரு அங்கத்தில்! மீளவும் வரும் ஹேமா இடம் வேற!பொறுங்கோ ராகுல் கல்பனா என பலர் இன்னும் வரனும்!

    ReplyDelete
  12. ஆஆஆஆஆஅ வந்துட்டேன் ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

    ReplyDelete
  13. என்னது இண்டைக்குப் பாலக் காப்பி ஹேமா அக்கக்கா ...

    வாழ்த்துக்கள் ஹேமா அக்கா..

    அண்ணா இண்டைக்கு பால் இல்லாம சுகர் இல்லமா காப்பி கொடுங்க அண்ணா ...

    ReplyDelete
  14. வணக்கம் சகோதரரே,
    நலமா?

    அப்படியே ஒரு கிராமத்து கோவில் திருவிழாவில் கலந்துகொண்ட திருப்தி.
    கிராமிய சிறு தெய்வ வழிபாடுகளில் இருந்து அந்தப் பகுதி மக்களின்
    குணநலன்களையும் அவர்களின் வாழ்க்கை நடை முறைகளையும்
    தெரிந்து கொள்ளலாம்.
    அந்த வகையில் ஒரு அற்புதமான பகுதி இன்றைய பகுதி.

    அக்கினிச்சட்டி ஊர்வலமும், மஞ்சள் நீராட்டும் கண்ணுக்குள் நிலைகுத்தி
    நிற்கிறது.

    ReplyDelete
  15. ஹேமா said...
    பூஸாருக்கும் அவவுக்கும் அண்டாட்டிக்கவில அடிக்கடி என்ன வேலையாம்.கேட்டு வைக்கவேணும் ஒருக்கா !////////////



    காதல் கீதலில் விழுந்து கைல இதயத்தோட ப்ளாக் சுற்றி வருபவர்களுக்கு எப்புடி நல்ல வழிக் கொட்டனும் எண்டு தான் சியான் சுவான் சிங்கா சாமியிடம் KETTU வரச் சென்றோம்

    ReplyDelete
  16. அண்ணா ப்ளாக் இல் பதிவு போட்டு இருப்பிங்கோ எண்டு தான் இப்போ வந்தனன் ...படித்துக் கொண்டு இருந்தினம் ..

    அண்ணா நான் எஞ்சினீர் இல்லை ...இயற்பியல் அறிந்கையை வேலை செய்து கொண்டு இருக்கிரணன் ,,,Ph.D க்கு தயாராகிக் கொண்டு இருக்கிரணன் ...

    ReplyDelete
  17. சீனி இல்லாவிட்டாள் சுவையில்லை பால்க்கோப்பி!

    ReplyDelete
  18. நேரில் பாருக்குற மாறி இருக்குது திருவிழா ...

    ReplyDelete
  19. தனிமரம் said...
    சீனி இல்லாவிட்டாள் சுவையில்லை பால்க்கோப்பி!

    அது தான் மீ இண்டர் நேஷனல் பிளான் ஆக்கும் சீனி பால் இல்லாமல் காப்பி கொடுக்கணும் ஹேமா அக்காக்கு

    ReplyDelete
  20. இண்டு ராகுல் பார்க்கத்தான் நெட் வந்தினனேன் ..

    யோகா மாமா இன்னுமா ரெஸ்ட் எடுக்கினம் ...

    வந்தால் மாமா வ கேட்டேன் எண்டு சொல்லிடுங்கோ

    ReplyDelete
  21. வாங்க மகேந்திரன் அண்ணா!
    நலம் நலம் அறிய ஆவல்! கோவில் நிகழ்வுகளைப் பதிவு செய்யவேண்டிய சமுகம் ஆகிக்கொண்டிருக்கும் இனம் நாம்!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

    ReplyDelete
  22. ஓகே அண்ணா டாடா ,நான் கிளம்புரணன் ...

    ஹேமா அக்கா யோகா மாமா மற்றும் அனைத்து உறவுகளுக்கும் டாடா மற்றும் வணக்கம்

    ReplyDelete
  23. காதல் கீதலில் விழுந்து கைல இதயத்தோட ப்ளாக் சுற்றி வருபவர்களுக்கு எப்புடி நல்ல வழிக் கொட்டனும் எண்டு தான் சியான் சுவான் சிங்கா சாமியிடம் KETTU வரச் சென்றோம்// சாமி அருள் வாக்குச் சொன்னிச்சா! கலை

    ReplyDelete
  24. அண்ணா நான் எஞ்சினீர் இல்லை ...இயற்பியல் அறிந்கையை வேலை செய்து கொண்டு இருக்கிரணன் ,,,Ph.D க்கு தயாராகிக் கொண்டு இருக்கிரணன் //ஹா ஹா க்லாநிதி டாக்டர் கலை என்று சொல்லுங்கோ000000000

    ReplyDelete
  25. நேரில் பாருக்குற மாறி இருக்குது திருவிழா ...// ராகுல் சொன்னதை எழுதுகின்றேன் கலை அவ்வளவும் தான்!

    ReplyDelete
  26. கருவாச்சி....வாழ்த்தோட வந்திட்டாவே.யோகா அப்பா சொல்லியிருக்கிறார்....கோப்பி,வடை எல்லாம் இருக்குமாம்.தருவமாம்.முட்டை மட்டும் கொண்டு வந்தால்
    உதையாம் !

    பாருங்கோ பாருங்கோ அதிலையும் லொள்ளு.பால் விடாம கோப்பியாம் எனக்கு !

    //காதல் கீதலில் விழுந்து கைல இதயத்தோட ப்ளாக் சுற்றி வருபவர்களுக்கு//....நேசன் கவனியுங்கோ இந்தாளை.எனக்குத்தான் எவ்வளவு பூடகமா சொல்லுப்படுதெண்டு!

    ReplyDelete
  27. இங்கும் அப்படித்தான் நான் போட்டுத்தான் குடிப்பேன் பால்க்கோப்பி கலை!

    ReplyDelete
  28. இரவு வணக்கம் நேசன்!திருவிழா..............ஹும்.இங்கே எங்கே கோவிலுக்குச் சென்று "நிம்மதி"யாக கும்பிட முடிகிறது?உங்கள் எழுத்தில் ஊர் ஞாபகங்களில் அம்மனைக் கும்பிட வேண்டியதுதான்.எல்லோரும் வந்து சென்றிருக்கிறார்கள்.பிள்ளைகள் கம்பியூட்டரில் இருப்பதால் அடிக்கடி வர முடிவதில்லை.சிறிய இடைவெளிகளில்,இல்லாவிடில் பாடசாலை சென்றபின்பே வர முடிகிறது.

    ReplyDelete
  29. யோகா ஐயா கொஞ்சம் ஓய்வு போல! போய் வாருங்கோ நாளைப்பொழுது நல்லதாக அமையட்டும்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் கலை

    ReplyDelete
  30. //காதல் கீதலில் விழுந்து கைல இதயத்தோட ப்ளாக் சுற்றி வருபவர்களுக்கு//....நேசன் கவனியுங்கோ இந்தாளை.எனக்குத்தான் எவ்வளவு பூடகமா சொல்லுப்படுதெண்டு// காட்டான் சொல்லித்தான் நான் அங்கு வந்தேன் ஹேமா இப்ப வந்து கலை முடிச்சை அவிழ்த்துவிட்டுப் போறா! ம்ம்ம்

    ReplyDelete
  31. இருக்குமாம்.தருவமாம்.முட்டை மட்டும் //ஹா ஹா வாத்து முட்டை நல்ல ருசி ஹேமா ஹீ ஹீ நான் வாங்காத முட்டையா ஹீ தமிழில்!

    ReplyDelete
  32. நேற்றைய பயணத்தை நினைக்க சீ.... என்று ஆகிவிட்டது.திடீரென அழைத்ததால் செல்ல வேண்டியதாகி விட்டது.காலையில் வீடு வந்து சேர பதினோரு மணியாகி விட்டது.சரியான தூக்கமில்லை.கண்கள் எரிச்சல்.நாளை பார்ப்போம் நேசன்.

    ReplyDelete
  33. வாங்க யோகா ஐயா! உண்மைதான் ஊர்க்கோயில் போல் இங்கு இல்லை கால் நீட்டமுடியாத அளவு சிலைகள் வைத்து நூதனசாலையாக்கிவிட்டினம் நான் அந்த இடத்துக்கு போறதில்லை!

    ReplyDelete
  34. கலை ஹேமா வீட்டுக்குப் போய் ஹையா நான்தான் முதல்,எனக்குத்தான் வடை கோப்பி எல்லாம் என்று......................!அது தான் பரீட்சையில் "முட்டை" மட்டும் வாங்கி வந்தால் சேதி தெரியும் என்று சொல்லியிருக்கிறேன்!கோங்கம் மிரட்டி(வெருட்டி)வைக்க வேண்டுமே?(எங்கள் பிள்ளைகள் மிரளாதே?ஹ!ஹ!ஹா!!!)

    ReplyDelete
  35. நல்லாக ஓய்வு எடுங்கோ யோகா ஐயா!சந்திப்போம் !

    ReplyDelete
  36. சொல்லியிருக்கிறேன்!கோங்கம் மிரட்டி(வெருட்டி)வைக்க வேண்டுமே?(எங்கள் பிள்ளைகள் // நானும் அதுதான் நேற்றுச் சொல்லி விட்டேன் ஐயா!

    ReplyDelete
  37. உண்மை தான்.அதிலும் "பக்தர்"கள் கூடி விட்டால் வேறு வினையே வேண்டாம்.நான் அடிக்கொரு தரம் செல்வதில்லை,விஷேட நாள்களில் அதிகாலையே சென்று வணங்கிவிட்டு ஓடி வந்துவிடுவேன்!சாமியைப் பார்ப்போரை விட எங்களைப் பார்ப்போர் தான் அதிகம்,ஹி!ஹி!ஹி!!!!!!

    ReplyDelete
  38. உண்மைதான் யோகா ஐயா! இனிய இரவு வணக்கம் ! நல்ல நித்திரை கண்கலுக்கு!

    ReplyDelete
  39. நேசன் அண்ணா நித்தா வருது :( நான் என்ன பண்ணட்டும்.... :( பிறகு வாறன் :(

    ReplyDelete
  40. நினைவூட்டலுடன் கூடிய பாடலும் அருமை

    ReplyDelete
  41. நானும் வந்துட்டேனே.....

    ReplyDelete
  42. எனக்கு பிளாக் கோப்பிதான் வேணும்.

    ReplyDelete
  43. காலை வணக்கம் நேசன்!///துஷ்யந்தன் said...

    நேசன் அண்ணா நித்தா வருது :( நான் என்ன பண்ணட்டும்.... :( பிறகு வாறன் :////என்ர செல்லமெல்லோ,பாப்பா குச்சிட்டுப் படுங்கோ!ஹ!ஹ!ஹா!!!!!!

    ReplyDelete
  44. MANO நாஞ்சில் மனோ said...

    எனக்கு பிளாக் கோப்பிதான் வேணும்.///ப்ளாக்கில எல்லாம் கோப்பி கிடைக்காது மனோ சார்!வூட்டுக்குத்தான் போயிக் குடிக்கணும்.வந்தீங்கன்னா நரசூஸ் காப்பி தருவாங்க!!!!

    ReplyDelete
  45. இலங்கையில் இருந்து கொண்டு பல இடங்களை பார்க்காது விட்டு விட்டேனே...

    ReplyDelete
  46. நேசன் அண்ணா நித்தா வருது :( நான் என்ன பண்ணட்டும்.... :( பிறகு வாறன் :(

    27 March 2012 14:19 
    // நல்லா ஓய்வு எடு துசி நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  47. நன்றி விக்கியண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  48. வாங்க மனோ அண்ணாச்சி!பிளாக் கோபியா இருந்தாலும் பாலும் கலந்து தான் தருவேன் பிளாக்கில் பலது கலக்கலாம் அண்ணாசி!

    ReplyDelete
  49. நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  50. காலை வணக்கம் நேசன்!///துஷ்யந்தன் said...

    நேசன் அண்ணா நித்தா வருது :( நான் என்ன பண்ணட்டும்.... :( பிறகு வாறன் :////என்ர செல்லமெல்லோ,பாப்பா குச்சிட்டுப் படுங்கோ!ஹ!ஹ!ஹா!!!!!!

    27 March 2012 22:48 
    // அவரு ரெட்பூல் தான் குடிப்பார் யோகா ஐயா!

    ReplyDelete
  51. MANO நாஞ்சில் மனோ said...

    எனக்கு பிளாக் கோப்பிதான் வேணும்.///ப்ளாக்கில எல்லாம் கோப்பி கிடைக்காது மனோ சார்!வூட்டுக்குத்தான் போயிக் குடிக்கணும்.வந்தீங்கன்னா நரசூஸ் காப்பி தருவாங்க!!!!

    27 March 2012 22:51 
    //ஹீ ஹீ யோகா ஐயா மனோவும் நல்ல கோப்பிப் பிரியர்!

    ReplyDelete
  52. தொடர்ந்து பார்க்கலாம் தொடரில் சில இடங்களை எஸ்தர்-சபி.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

    ReplyDelete