11 April 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன் -30

இராமன் வனவாசம் போகின்றான் என்று செய்தி  கேட்டு மக்கள் முண்டியடித்து அஸ்தினாபுரம் விட்டுச் சென்றதை விபரித்த கம்பன் சொல்லிய போது அது வெறும் கற்பனை என்று இருந்தோம் நாங்களும் !

ஆனால் அதிலும் உண்மை இருந்திருக்கும் என்பதைச் சொல்லியது1991 ஆவணியில் பின் வந்த நாட்கள்.

பல பக்கத்தில் இருந்தும் யாழ் கோட்டையை முற்றுகையிட்டு இருக்கும் போராளிகளை வெற்றி கொள்ள இராணுவம் தீவின் பல பக்கத்தில் இருந்து முன்னேறியது.

  இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இருந்து இன்று இரவு எல்லோரும் வெளியேறி விடுங்கோ என்று போராளிகளின் குரல் ஒலித்தது.

 அன்று ஆவணி இறுதிவார  பின் இரவில் 2 மணிக்கு  நாங்கள் கையில் இருந்த பொருட்களுடன் ,மாட்டுவண்டியிலும்,சைக்கிள்களிலும் நடையுமாக வானத்தில் ஹெலிகப்படர் வேற பக்கத்தில் சுட்டுக்கொண்டு இருந்த போது பயந்து பயந்து பாலம் கடக்க தயாரானோம் பலர் !

வாழ்வில் அன்று தான் ஊரைவிட்டு பாலம் தாண்டி இருப்பார்கள்.!


பங்கஜம் பாட்டி அப்போது வட்டக்கச்சியில் இருந்து வந்திருந்த சின்னத்தாத்தாவிடம் .

மச்சான் என்ற பேரன்களையும் பேர்த்தியையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளப்பா..
என்ன மச்சாள் நேவி வார வரத்தில் எல்லாரையும் சுடுவான் .வெட்டுவான் தெரியும் தானே !

"என்னால் என்ற ஊரைவிட்டு வரமுடியாது. நான் செத்தாலும் இங்க கிடந்தே சாகின்றேன்.
 யாராவது திரும்பி வந்தால் தூக்கி எரிப்பினம் .என்று பாட்டி சொன்னபோது "

விசர்க்கதை கதைக்காமல் வா மச்சாள் .
என்று முத்தாச்சிப்பாட்டி கெஞ்சியது.

 இல்ல நீங்கள் போங்கோ.

 சகலி வராமல் நானும் வரல என்று சின்னப்பாட்டி சென்னபோது !

சின்னத்தாத்தா தலையில் அடித்துக் கொண்டார் !!

ஆத்தா என்ன இது சோதனை.

 இப்படி பிரிந்து நின்று பேசிக்கொண்டு இருக்கும் நேரம் நேவி வந்து விடுவான் மாமி .என்று புனிதா மாமி சொன்ன போதும்.

நீ சண்முகத்தின் மனுசியோட போ .அவங்களைத் தனியவிடாத என்ற மோளே என்று பாட்டி கண்ணீர் விட்ட இரவுகளை எப்படி மறப்பது.

மாமிக்கு ஏற்ற மருமகளாக இருந்த சண்முகம் மாமி .
பாட்டியிடம்.

 நீங்க வராட்டி நானும் போகமாட்டன் மாமி.
 அவர் இல்லாத பொழுது நான் இந்த மூன்று பொடியங்ளையும் கூட்டிக்கொண்டு என்ன செய்யபோறன்?

 என்று அழுத மாமியின் கண்ணீர் துடைத்த ரூபன் மச்சான் சொன்னான் .

அம்மா நாங்க போவம் நேவிக்காரன் வந்தா சுடுவான் .
வாங்கோ என்ற அச்சாப்பாட்டி.

 இனி நான் கோபிக்க மாட்டன் உங்களோடு. என்ற பாட்டியை விட்டுப் எங்கும் போக மாட்டன் .

முதலில் எல்லோரும் பாலம்தாண்டுவம்.

 இல்லையடா என் பேரா .

நீ தான் என்ற வம்சம்

!எதுக்கும் கிறுங்கக் கூடாது .

என்ன பங்கஜம் இன்னும் போகவில்லையா ?
எல்லாரும் போய்க்கொண்டு இருக்கினம் என்றார் வட்டிக்காரமுருகேசு தாத்தா.

 முருகேஸர் என்னால் ஊரைவிட்டு போகமுடியாது.

 என்ற பேரன் பேர்த்திகளையும் கவனமாக பார்த்துக்கோ .

தேவை என்றாள் உறுதி தருவன் .

பேரன் ,பேர்த்திகள் பசிகிடந்து அனுபவம் இல்லை .

என்ன பங்கஜம் .

இந்த கட்டின வேட்டியோட தான் நானும் போறன் .

என்ற பிள்ளைகள் சகிதம்.

உன்ற உறுதி என்னத்துக்கு?

 ஏதோ கையில் கிடைச்சதுகளை கொடுக்கின்றேன் .

நேரம் ஆகுது வாங்கோ நிற்காமல் என்று முருகேஸரின் மகள் கூப்பிட்டது கேட்டு அவர் போகும் போது சொன்னார்.

 எங்க ஆத்தா எல்லாரையும் எங்க கிராமத்தைவிட்டு ஓட்டி ,இப்ப ஊரைவிட்டு ஓட்டிப்போட்டா !!

இனி யார் பூசை செய்வா உன்னை நம்பினோர் நாங்க பாலத்தில் நின்று படும் வேதனையை ஏன் தந்தாய் .

நீ எல்லாம் தெய்வமோ??

 அன்று வெளிக்கிட்ட முருகேஸரின் பேரன் அந்த ஆத்தாவை பார்க்க 2011 வரை காத்திருந்தான் உயிரோடு.

  20 வருடத்தின் பின் கோயில் திறந்தார்கள். பாதுகாப்பு வலையம் நீக்கி .

ஆனால் பேய்கள் ஆட்சியில் இன்று மூலவிக்கிரகம் களவு போய்விட்டது விரைவில் பொலிசார் மீட்டுத்தருவார்கள்  என்று இந்தவார யாழ்நாளிதழல் விளம்பரம் செய்கின்றது.
!!
எத்தனை மாற்றம் பலர் வாழ்வில் அன்று பாலம் தாண்டும்  பின்னிரவில்!
//////////////////////////
தொடரும்.

விசர்க்கதை-முட்டாள்தனமான கதை.யாழ் வட்டார மொழி!
உறுதி-சொத்துப் பத்திரம்

50 comments:

  1. இரவு வணக்கம்,நேசன்!படித்து விட்டு.................

    ReplyDelete
  2. வாங்க யோகா ஐயா ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!

    ReplyDelete
  3. கிறுங்கக் கூடாது ---தடுமாறக் கூடாது/தயங்கக் கூடாது என்று பொருள்படும்.

    ReplyDelete
  4. தனிமரம் said...

    வாங்க யோகா ஐயா ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!///தாங்க் யூ,தாங்க் யூ!(வாறவை எரியட்டும்,ஹி!ஹி!ஹி!!!)

    ReplyDelete
  5. கிறுங்கக் கூடாது ---தடுமாறக் கூடாது/தயங்கக் கூடாது என்று பொருள்படும்.

    11 April 2012 11:24 /பலருக்கு உபயோகம் உங்கள் விபரிப்பு நன்றி !

    ReplyDelete
  6. 1995-இடப் பெயர்ப்பின் போது,எனது அம்மா,பெரியய்யா இன்னும் அநேகமான வயதானவர்கள் ஒரு வீட்டில் பெயராதிருந்தார்கள்!வீடு ,வீடாக தேடுதல் நடத்திய கொடூரர்கள் உயிருடன் விட்டு வைத்தார்கள்!

    ReplyDelete
  7. வாங்க யோகா ஐயா ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!///தாங்க் யூ,தாங்க் யூ!(வாறவை எரியட்டும்,ஹி!ஹி!ஹி!!!)// இந்த வாரம் கலைக்கு கஸ்ரமாக இருக்கும் அவலம்!

    ReplyDelete
  8. 995-இடப் பெயர்ப்பின் போது,எனது அம்மா,பெரியய்யா இன்னும் அநேகமான வயதானவர்கள் ஒரு வீட்டில் பெயராதிருந்தார்கள்!வீடு ,வீடாக தேடுதல் நடத்திய கொடூரர்கள் உயிருடன் விட்டு வைத்தார்கள்!// பலர் தப்பினார்கள் வயதானவர்கள் உண்மைதான்.

    ReplyDelete
  9. தனிமரம் said...

    வாங்க யோகா ஐயா ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!///தாங்க் யூ,தாங்க் யூ!(வாறவை எரியட்டும்,ஹி!ஹி!ஹி!!!)// இந்த வாரம் கலைக்கு கஸ்ரமாக இருக்கும் அவலம்!///கலைக்கு மட்டுமில்ல,பெரியவவுக்கும் இந்த வாரம் நோண்டி நொங்கெடுக்கிறாங்கள் போலயிருக்கு.பாவம்,ஹும்.......

    ReplyDelete
  10. அன்று வெளிக்கிட்ட முருகேஸரின் பேரன் அந்த ஆத்தாவை பார்க்க 2011 வரை காத்திருந்தான் உயிரோடு.////நான் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை,கடைசி வரை!2007-சித்திரை வருடப்பிறப்பன்று என் தாயார்..........................

    ReplyDelete
  11. பெரியவவுக்கும் இந்த வாரம் நோண்டி நொங்கெடுக்கிறாங்கள் போலயிருக்கு.பாவம்,ஹும்.......// வேலைக்கு என்று வெளிக்கிட்டால் இப்படித்தானே ! அதுவும் தனியார் துறை இன்னும் மோசம் கொழும்பில் பலருடன் பட்டபாடு !!!ம்ம்ம்

    ReplyDelete
  12. அன்று வெளிக்கிட்ட முருகேஸரின் பேரன் அந்த ஆத்தாவை பார்க்க 2011 வரை காத்திருந்தான் உயிரோடு.////நான் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை,கடைசி வரை!2007-சித்திரை வருடப்பிறப்பன்று என் தாயார்..........................

    11 April 2012 11:37 //ம்ம்ம் கொடுமையான துயரம் .

    ReplyDelete
  13. நான் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை,// நான் கூப்பிட்டு வைத்திருக்கின்றேன் என்னாலும் போகமுடியாது யோகா ஐயா.no nfr

    ReplyDelete
  14. vanakkaam hemaa akkaa ,REE Ree annaa ,maamaa,uncle

    ReplyDelete
  15. வாங்க கலை நலமா!

    ReplyDelete
  16. கொஞ்சம் நேரம் கழித்து...................(ஒரு தொ(ல்)லை பேசி!vanakkam kalai!wel come!!!

    ReplyDelete
  17. ஹேமா இன்னும் வரவில்லை கொப்பி பண்ணி வைத்து விட்டாச்சா!

    ReplyDelete
  18. naan nalam annaa ..........neengal nalamaa

    maamaa nalamaa ................


    hemaa akkaa nalamaa...akkaa aalaiye kaanum...ennaachi akkaa ,,,,,,,,,,,,,,,,,,,,

    ReplyDelete
  19. ஹேமாவுக்கு வேலைப்பளு அதிகம் கலை! நான், யோகா ஐயா நலமே!

    ReplyDelete
  20. கலை said...

    hemaa akkaa nalamaa...akkaa aalaiye kaanum...ennaachi akkaa ,,,,,,,,,,,,,,,,,,,,////உங்களையும் தான் பார்க்க முடியவில்லை!நேற்று ஹேமா வந்திருந்தா.நீங்கள் தான் வரவில்லை.அக்கா நலமேயிருக்கிறார்!என்ன,கொஞ்சம் வேலை ஜாஸ்தி சொன்னார்.அவரவர் வயிற்றுப்பாட்டைப் பார்க்க வேண்டுமே?

    ReplyDelete
  21. உங்களையும் தான் பார்க்க முடியவில்லை!நேற்று ஹேமா வந்திருந்தா.நீங்கள் தான் வரவில்லை.அக்கா நலமேயிருக்கிறார்!என்ன,கொஞ்சம் வேலை ஜாஸ்தி சொன்னார்.அவரவர் வயிற்றுப்பாட்டைப் பார்க்க வேண்டுமே?
    //உண்மைதானே கலை யோகா ஐயா சொல்வதும்.
    11 April 2012 12:32

    ReplyDelete
  22. செங்கோவி வந்து போயிருக்கிறார் போலிருக்கிறதே சொல்லவேயில்லை??

    ReplyDelete
  23. கலைக்கும் களைப்பு போலிருக்கிறது,அம்பலத்தார் வீட்டுக்கும் போயிருக்கிறா!"சுனாமி"எச்சரிக்கை பார்த்து பயந்திருக்கிறா.

    ReplyDelete
  24. செங்கோவி வந்து போயிருக்கிறார் போலிருக்கிறதே சொல்லவேயில்லை??

    11 April 2012 12:40 //எனக்கே அதிசயம் ஐயா செய்தியில் இருந்தேன் அவர் வந்துவிட்டுப் போய்விட்டார்!

    ReplyDelete
  25. கலைக்கும் களைப்பு போலிருக்கிறது,அம்பலத்தார் வீட்டுக்கும் போயிருக்கிறா!"சுனாமி"எச்சரிக்கை பார்த்து பயந்திருக்கிறா.//ம்ம் வேலை நேரத்தில், கேட்டேன் அதிகம் பயம் இல்லை நல்லதே நினைப்போம்.

    ReplyDelete
  26. போலிருக்கிறதே சொல்லவேயில்லை??

    11 April 2012 12:40 //மறைக்கனும் என்பது நோக்கம் அல்ல!!

    ReplyDelete
  27. நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும் முடிந்தால் நாளை சந்திப்போம்.

    ReplyDelete
  28. தனிமரம் said...

    போலிருக்கிறதே சொல்லவேயில்லை??

    //மறைக்கனும் என்பது நோக்கம் அல்ல!!///அட என்னப்பா இது,கொஞ்சம் விளையாடக் கூடாதா?நாளை சந்திப்போம்.Bon Nuit!

    ReplyDelete
  29. அப்பா,நேசன் இருக்கிறீங்களோ.கருவாச்சியம்மா இரண்டு நாளா உப்ப்மடச்சந்திலயும் அக்கா அக்காவெண்டு தேடுறா.எனக்கு வேலை இந்த நேரத்திலதான் முடிஞ்சு வாறன்.

    அப்பா நேசன் சுகமோ.பதிவை விட உங்களைக் காணவெண்டே மனம் ஓடி வருது இங்க.

    கலைக்குட்டி நான் நல்ல சுகமடா.பகலில் நின்றால் கதைத்துக்கொள்ளலாம்.எப்பவெண்டு சொல்லத் தெரியவில்லை.சுகமாய் இருந்தால் சரி சந்தோஷம் !

    ReplyDelete
  30. என்ன செய்வது ஹேமா நேரமாற்றம் வேலையில் மாறுபடுகின்றது.நலம் தானே!

    ReplyDelete
  31. ஹேமா said...

    அப்பா,நேசன் இருக்கிறீங்களோ.கருவாச்சியம்மா இரண்டு நாளா உப்ப்மடச்சந்திலயும் அக்கா அக்காவெண்டு தேடுறா.எனக்கு வேலை இந்த நேரத்திலதான் முடிஞ்சு வாறன்.

    அப்பா நேசன் சுகமோ.பதிவை விட உங்களைக் காணவெண்டே மனம் ஓடி வருது இங்க.

    கலைக்குட்டி நான் நல்ல சுகமடா.பகலில் நின்றால் கதைத்துக்கொள்ளலாம்.எப்பவெண்டு சொல்லத் தெரியவில்லை.சுகமாய் இருந்தால் சரி சந்தோஷம் !////எல்லோரும் நலமே இருக்கிறோம்,மகளே!நீங்கள் நேற்றுச் சொன்னதை(வேலை)கலைக்கு சொல்லியிருக்கிறேன்.பாவம்,அவவுக்கும் கொஞ்சம் வேலை கடுமை போலவே தெரிகிறது.ஓய்வெடுங்கள் நன்றாக,நேரம் கிட்டும்போது கும்மியடிக்கலாம்!எனக்கு மனது கஷ்டமாக இருக்கிறது,சந்திப்போம் மகளே,நேரிலும் "ஒரு நாள்"!

    ReplyDelete
  32. தனிமரம் said...

    போலிருக்கிறதே சொல்லவேயில்லை??

    //மறைக்கனும் என்பது நோக்கம் அல்ல!!///அட என்னப்பா இது,கொஞ்சம் விளையாடக் கூடாதா?நாளை சந்திப்போம்.Bon Nuit!
    // இனிய உறக்கம் கண்களுக்கு.

    ReplyDelete
  33. ஹேமா,நேசன்,கலை நாளை சந்திப்போம்.

    ReplyDelete
  34. அப்பா நேசன் சுகமோ.பதிவை விட உங்களைக் காணவெண்டே மனம் ஓடி வருது இங்க.//என்ன செய்வது மனம் அமைதி காண்பது நல்ல உறவுகளிடம் தானே  ஹேமா. யோகா ஐயா கலை இருக்கும் போது ஒரு ஜாலி
    மூட் வந்துவிடும்.

    ReplyDelete
  35. நிச்சயம் சந்திக்க முயல்கின்றேன் யோகா ஐயா!

    ReplyDelete
  36. இந்த அவலங்களை நாள் நேரத்தோடு நினைவில் வைத்துப் பதிவிடுவது பெரும் சிறப்பு நேசன்.

    எனக்கும் கோப்பி இருக்கோ.ஆறிப்போயிருக்கும் எண்டாலும் தாங்கோ.காக்கா சொன்ன சுடுதண்ணி இல்ல கோப்பி வேணும்.சீனி போடாமல்.அப்பாக்குத்தான் இப்ப எப்பவும் வாச்சுப்போச்சு !

    ReplyDelete
  37. வருச நேரம் யோகா ஐயாவுக்கு பால்க்கோப்பி அதிகம் கைராசியாம் ஹேமா !ஹீ

    ReplyDelete
  38. சரி நேசன் கோப்பியை எடுத்துக்கொண்டே போறன்.கொஞ்ச வேலை இருக்கு.அலுப்பு நித்திரை நாளைக்கும் வேலை இதேநேரம் வருவன்.சக்கரமானது வாழ்வு.அழகான இரவை வரவேற்றபடி போய்ட்டு
    வாறன் !

    ReplyDelete
  39. நெஞ்சு நோகிறது நேசன்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  40. காலை வணக்கம்,நேசன்!புது வருடத்துக்கு முந்தைய நாள் வாழ்த்துக்கள்,ஹ!ஹ!ஹா!!!!!!!(ஒருத்தரும் இப்பிடி இதுவரைக்கும் சொன்னதில்ல)

    ReplyDelete
  41. நன்றி புலவரே வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  42. காலை வணக்கம்,நேசன்!புது வருடத்துக்கு முந்தைய நாள் வாழ்த்துக்கள்,ஹ!ஹ!ஹா!!!!!!!(ஒருத்தரும் இப்பிடி இதுவரைக்கும் சொன்னதில்ல) 
    //காலை வணக்கம்யோஜா ஐயா.
    வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்ப உறவுகளுக்கும்.இனிச் சொல்வோம்.ஐயா கோடு போட்டால் நான் ரோடு போடுறன் .ஹீ

    ReplyDelete
  43. வணக்கம் நேசன்,
    இடப்பெயர்ச்சியின் ஆரம்பம் இன்றைய பதிவில்.
    சொல்லுவதை படிக்கும் போதே
    மனம் ஏதோ செய்கிறது..
    அனுபவிப்பது எவ்வளவு பெரிய கொடுமை..
    என் கல்லூரிக் காலத்தில் புலம் பெயர்ந்த
    நண்பர் ஒருவர் என்னோடு கல்வி பயின்றார்..
    அவர் இப்போது எங்கு இருக்கிறார் என்பது
    தெரியவில்லை..
    ஆனால் அவரிடமிருந்து நிறைய கேட்டு
    தெரிந்திருக்கிறேன்...

    ReplyDelete
  44. அப்பா,நேசன்,கருவாச்சி நானும் புதுவருஷ வாழ்த்துச் சொல்றேன்!

    ReplyDelete
  45. இடப்பெயர்ப்பில் எனக்கு கிடைத்த ஒரே நல்ல விஷயம்...நிறைய நண்பர்கள் கிடைத்தது தான்...காலப்போக்கில் அவர்களும் பல திசைகளில் செல்ல வாழ்க்கை உருமாறித்தான் போனது நேசரே...

    என் அந்த நேரக்கவிதை...

    வத்தளையில்
    வெறி நாய்களிடையில்
    அப்பா


    இந்தியாவிலேதோ
    ஓரத்தில்
    அம்மா


    தொலைவில்
    தொலைந்த
    என்
    சகோதரர்


    மண்டபம்
    முகாமில்
    என்
    முதற் காதல்


    இருப்பதாய்
    மனதை தேற்றி
    ஜெர்மனியில்
    பதுங்கி
    நான்...

    ReplyDelete
  46. வணக்கம் நேசன், முன்புபோல அடிக்கடி வந்து பின்னூட்டம் இடவில்லை என குறை நினைக்கவேண்ண்டாம் புலிவாலை பிடித்தவன் கையை விடமுடியாது என்பதுபோல, பணம் பணம் என ஒட்டும் இயந்திரமயமான ஐரோப்பிய வாழ்விலிருந்து மீளமுடியாமல் நானும் நேரத்தையும் வாழ்வையும் தொலைத்துக்கொண்டு இருக்கிறேன் என்பதே உண்மை.

    ReplyDelete
  47. மலையகத்தில் முகம் தொலைத்தவன் ஒரு கதை என்பதை தாண்டி ஆவணப்படுத்தப்படவேண்டிய நிகழ்வுகளின் ஒரு வரலாற்றுப்பதிவாகவே உணர்கிறேன்.

    ReplyDelete
  48. இந்த சித்திரை வருடப்பிறப்பு உண்மையிலேயே எமது தமிழ் வருடப்பிறப்பு இல்லை. இடையில் வந்த வட இந்திய மேற்குடியினர் சேர்த்துவிட்டது. ஆயினும் வாழ்த்துவதும் வாழ்த்தப்படுவதும் மகிழ்வுதரும் விடயம்தானே அதனால் நானும் உங்கள் எல்லோருக்கும் எனது சித்திரை வருடப்பிறப்பு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  49. அக்கா எனக்கும் கொஞ்சம் வேலை பளு தான் அக்கா...முடிந்தால் இண்டு இரவு கதைக்கலாம் .... மாமா வோடும் கதைச்சி நாள் ஆச்சி ....

    ஹேமா அக்கா ,ரீ ரீ அண்ணா மாமா மற்றும் அங்கிள் க்கு இரவு வணக்கம் ...


    ஹேமா அக்கா ,ரீ ரீ அண்ணா ,மாமா ,அங்கிள் மற்றும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  50. இரவு வணக்கம்,எல்லோருக்கும்!புது வருடம் நாளை (ஐரோப்பிய நேரம்)நண்பலுக்குப் பின்னரே பிறக்கிறது.அச்சொட்டாக பிற்பகல் இரண்டு மணி பதினைந்து நிமிடமளவில் என்று சொல்கிறார்கள்!எது எப்படியோ,நான் காலையில் எழுந்து தோய்ந்து விட்டு கோவில் செல்வதாக இருக்கிறேன்!வீட்டார் பகலில் செல்லலாம் என்று தீர்மானம்!கோவிலுக்குப் போவதாகச் சொன்னவர்கள்(நலமே இருப்பின்)மறந்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்,ஹி!ஹி!ஹி!!!!

    ReplyDelete