12 April 2012

GAME OVER - எனது பார்வையில்..

போரியல் வரலாற்றில் பெண்களின் பங்களிப்பை ஈழம் பலருக்கு கற்றுக்கொடுத்திருக்கின்றது. ஒப்பற்ற தலைவனின் வழி நடத்தலில் பெண் போராளிகள் எத்தனை வீரகாவியங்களை செய்தார்கள் என்று வரலாறு பதிவு செய்திருக்கின்றது. அந்த வகையில் ஒரு பெண் போராளிக்கு வழங்கப்பட்ட பணியை எவ்வாறு பலத்த சிரமத்திற்கு இடையிலும் போர்க்களத்தில் துணிகரமாக செய்வாள் என்பதை சுமந்து வந்திருக்கும் குறும்படம்தான் game over.

இரு பாத்திரங்கள் ஊடாகவும்  புதிய தொழில்நுட்பம் ஊடாகவும் போர்க்களத்தில் நிகழும் ஒரு சம்பவம் தொடர்பாக ஒரு போராளியின் செயல்பாடு என்பதை மையமாக கொண்டு 8.45 நிமிடங்கள் ஓடும் குறும்படம் பதிவு செய்கின்றது.

ஈழத்தின் இயற்கை வளத்தை அழகிய காட்சிகளாக கண்முண்ணே கொண்டு வருகின்ற கமராவின் பார்வை. தேர்ந்த பின்னனி இசையில் காட்சியின் நிகழ்வோடு ஒன்றிவிடுகின்றது மனம். சிலநிமிட்ம் என்றாலும் என்ன நடக்கும் அடுத்த கனம் என்ற அங்கலாய்ப்பு ஏற்படும் வண்ணம் காட்சியை நகர்த்தி இயக்கியிருக்கும் இயக்குனர் மணிவண்ணனுக்கு பாராட்டுக்கள். சில குறியீடுகள் மூலம் சிறுபான்மையினர் மீது வெள்ளரசுகளின் அடக்கு முறையை அதன் கோட்டையில் இருந்து கொண்டே பதிவு செய்திருக்கும் game over குறும்படம் ஒரு துணிச்சல் மிக்க கலைஞனின் படைப்பு.

இத்திரைப்படத்தின்,
ஒலிஒளி மற்றும் எண்ணமும் இயக்கமும் - நடராஜா மணிவண்ணன்
நடித்த இரு முகம்களில் ஒருவர் - ஆனந்து
மற்றவர் - சோபா.
படத்தொகுப்பு - டானியல் மற்றும் டினூஸன்

குறும்படங்களை ஊடகங்கள் கண்டு கொள்ளவேண்டும்! சமுகத்தளங்களின் வருகை, முகநூல், வலைப்பதிவுகள் மட்டும் பலரிடம் கொண்டு போக போதிய கவனம் செலுத்துகின்ற இன்றைய நிலையில், ஊடகங்களின் வழித்துனை கிடைத்தால் இவ்வாறான குறும்படங்கள் மக்களிடம் அதிகம் செல்லும் என்பது என் எதிர்பார்ப்பு. இக்குறும்படத்தின் காணொளி வடிவை  நண்பரின் முகநூலில் காணும் வாய்ப்பை எனக்குத் தந்திருந்தார் மணிவண்ணன். இது அவரின் மூன்றாவது கைவண்ணம். இந்த குறும்படத்தில் அதிகம் ஒலிக்கலவை.
கொஞ்சம் சரி செய்யப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்!

ஈழத்தின் மொழி நடை பொதுவாக சினிமாவிற்கு ஒரு தடையாக இருக்கின்றது என்று மீண்டும் மீண்டும் வைக்கும் குற்றச்சாட்டை எப்போது தாண்டப்போகின்றோம் ? அதிகம், பார்வையாளரின் கற்பனைக்கு விடயத்தை தீர்மானிக்க விட்டிருக்கும் விடயத்தை சாமானியர்கள் எல்லாரும் புரிந்துகொள்வார்களா என்றால்?? முடிவில் ஏன் இப்படி நடந்தது? அதற்கான காரணத்தை கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். சில நேரங்களில் ரசிகர்களின் கற்பனைக்கே விட்டு இருந்தாலும் இயக்குனர் தன் எண்ணத்தை நிறைவாக பதிவு செய்திருக்கும் குறும்படம் game over.

இக்குறும்படத்தின் இயக்குனர் மணி இன்னும் ஒரு வித்தியாசமான கதையுடன் தயாராகிக்கொண்டு இருக்கின்றார் என்பதை அறியும் போது தனிமரம் அடுத்த படைப்புக்கும் அறிமுகம் தரக் காத்திருக்கின்றது. குறும்படங்கள் பல வெளிவந்துகொண்டு இருக்கும் நிலையில் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.
குறும்படத்தினைப் பார்க்க இங்கே..


வலைத்தள உறவுகள் அனைவருக்கும் தனிமரத்தின் இனிய சித்திரைப் புது வருட நல்வாழ்த்துக்கள்.


38 comments:

  1. புது வருட நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இரவு வணக்கம்,நேசன்!வருடப்பிறப்பிற்கு முதல் நாள் ஒரு குறும்படத்தை அறிமுகம் செய்திருக்கி றீர்கள்.நன்றிகள்!படத்தைப் பார்த்து விட்டு...................

    ReplyDelete
  3. இரவு வணக்கம் ரெவரி!இன்றைக்கு பால்கோப்பி உங்களுக்குத்தான்!

    ReplyDelete
  4. ஓலா ரெவெரி அன்ணா! ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!

    ReplyDelete
  5. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வாங்க யோகா ஐயா நலமா இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் முன்கூட்டியே !

    ReplyDelete
  7. நான் நாளை காலையில் சொல்லலாம் என்றிருந்தேன்.இப்போதே சொல்லி விடலாம்,நாளை கொஞ்சம் வேலை அதிகம் தான்!இனிய "நந்தன" வருட வாழ்த்துக்கள்!(இனிதாக இருக்கும் போலவே தோன்றுகிறது,இன்று கொஞ்சம் வரவு வந்தது,ஹி!ஹி!ஹி!)

    ReplyDelete
  8. நான் பூரண நலம்!நீங்கள் எல்லோரும் எப்படி?பெரிய பெண் வேறு கவிதை போட்டிருந்தார்.பகலில் கொஞ்சம் வெளி வேலை,அதனால் மாலையில் தான் பார்க்க முடிந்தது.

    ReplyDelete
  9. குறும்படம் நன்றாயிருந்து.அந்தத் துணிச்சல் எமக்கு வராது.அது இருந்திருந்தால் நான் ஏன் இப்படி ஓடி வந்திருக்கப் போகிறேன்?ஹும்............!

    ReplyDelete
  10. குறும்படம் நன்றாயிருந்து.அந்தத் துணிச்சல் எமக்கு வராது.அது இருந்திருந்தால் நான் ஏன் இப்படி ஓடி வந்திருக்கப் போகிறேன்?ஹும்.//எனக்கும் மட்டும் இருந்து போல! ஹீ

    ReplyDelete
  11. ஒட்டு மொத்தமாக அழித்து,ஒழித்து விட்டு இப்போதும் "பகடை"க் காய்களாக்கி வேடிக்கை பார்க்கிறார்கள்.தலைஎழுத்து.

    ReplyDelete
  12. ஒட்டு மொத்தமாக அழித்து,ஒழித்து விட்டு இப்போதும் "பகடை"க் காய்களாக்கி வேடிக்கை பார்க்கிறார்கள்.தலைஎழுத்து.//உண்மைதான் யோகா ஐயா!!!

    ReplyDelete
  13. காலையில் கொஞ்சம் நேரத்துக்கு எழ வேண்டும்.(நீங்களும் தான்)வந்தவர்கள்,வர இருப்பவர்கள் அனைவருக்கும் இரவு வணக்கம்!மீண்டும் எல்லோருக்கும் இனிய நந்தன வருட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. செவ்வாய் இரவு சந்திப்போம் யோகா ஐயா! நன்றி மீண்டும் சந்திப்போம் புத்தாண்டின் பின்!

    ReplyDelete
  15. வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நல்லதொரு குறும்படத்தை அறிமுகம் செய்துவைத்தமைக்கு நன்றி நேசன்

    ReplyDelete
  16. Game over என்ற தலைப்பை பார்த்து என்ன ஏதோ... என்று பயந்துபோய் பதிவை படித்தால்..... இறுதியில் அருமையான ஒரு படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

    ReplyDelete
  17. இண்டைக்கு நல்லாப் பிந்திப்போச்சு.எல்லாரும் வந்து கோப்பி குடிச்சிட்டுப் போய்ட்டினம்.நாளைக்கு எல்லாருக்கும் சக்கரைப்பொங்கல் தருவீங்கள்தானே நேசன் !

    ReplyDelete
  18. ”நந்தன” வருடம்.சொல்லவே சுகமா இனிமையா இருக்கிறமாதிரி இருக்கு.எல்லாருக்கும் முக்கியமா ஊரில இருக்கிற உறவுகளுக்கு நிறைவான நின்மதி சந்தோஷத்தைத் தரவேணும் எண்டு கடவுளிட்ட கேட்டுக்கொள்வம் !

    ReplyDelete
  19. பதிவோட வீரமான குறும்படம்.நன்றி நேசன்.என்னை நினைக்க எனக்கே எரிச்சலா இருக்கு.எதையாவது சாதிச்சுத்தான் சாகவேணும் !

    ReplyDelete
  20. நாளைக்கு மத்தியானம் கோயிலுப்போய் அப்பிடியே வேலைக்குப் போய்ட்டு வந்து சக்கரைப்பொங்கல் சாப்பிட வருவன்.வச்சிருக்கவேணும்.எல்லாருக்கும் என் அன்பு கலந்த சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்.அப்பா,நேசன்,கலை,அம்பலம் ஐயா செல்லம்மா மாமி,மணி,காட்டான் மாமா ,நிரூ எல்லோரையும் இப்ப நினைக்கிறன் !

    ReplyDelete
  21. Game Over என்ற தலைப்பைப் படித்து பயந்துதான் ‌போனேன். குறும்படத்திலோ திரைப்படத்திலோ ரசிக்க இலங்கைத் தமிழ் எனக்கு உறுத்தலாகவே இருந்ததில்லை. நல்லதொரு குறும்படம் உங்களால் காணக் கிடைத்தது. பிறக்கும் இந்த நந்தன வருடம் நல்லன்வற்றையே கொண்டு வரட்டும் என்று உங்களுக்கும் உங்களைச் சேர்ந்த அனைவருக்கும் என் இதயம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்ததுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!

    ReplyDelete
  22. படம் பார்க்க இயலவில்லை!பிறகு பார்பேன் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய
    தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


    குறும்படம் நல்லா இருக்குது நேசன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. game over நேரம் கிடைக்கும் போது பார்கிறேன். சித்திரை புது வருட வாழ்த்துக்கள். அண்ணா

    ReplyDelete
  25. காலை வணக்கம் நேசன்!இனிய நந்தன வருட வாழ்த்துக்கள்!மீண்டும் "செங்கோவி" களத்தில்!சந்தோஷமாக உணர்கிறேன்!!

    ReplyDelete
  26. எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.bonjour நன்றி யோகா ஐயா தகவல் தந்து உதவியதற்கு.

    ReplyDelete
  27. அப்பாவுக்கு நன்றியும் என் சந்தோஷத்தையும் சொல்லிவிட்டு உடை மாற்றிப்போக அவசர அவசரமாக வீடு வந்து போகிறேன்.

    அப்பா....வருடம் பிறக்கிற நேரம் கோவிலில்தான் நின்றேன்.வேலை இடத்தில் மேலதிக 2 மணித்தியாலம் பிந்தி வருவதாகச் சொல்லிவிட்டு அமைதியாகச் சாமி கும்பிட்டு அக்கேயே சாப்பிட்டு...இதில இன்னொரு சந்தோஷம்.அநேகமாக ஒருவருடத்திற்குப் பிறகு கோயில்,சேலை,பொட்டு உங்களின் அன்பான வார்த்தைக்குக் கட்டுப்பட்டு.பொய் சொல்ல மனம் வரவேயில்லை.மனம் சந்தோஷமாக உணர்கிறேன்.அன்புக்கு இத்த்னை சக்தியா என்று !

    அன்பின் சொந்தங்கள் எல்லோருக்கும் மனம் நிறைந்த சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் !

    ReplyDelete
  28. hemaa akkaa ,ree ree annaa ,maamaa ,uncle mattrum anaivarukkum puththaandu vaazththukkal...


    hemaa akkaa neenga eppotihum ithe maariye romba santhosamaa irukkonummnu pray pannikiren

    ReplyDelete
  29. வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நல்லதொரு குறும்படத்தை அறிமுகம் செய்துவைத்தமைக்கு நன்றி நேசன்//இந்த நன்றி கந்துவுக்குச் சேரனும்அவர்தான் இனைப்பு செய்தார் அம்பலத்தார்

    ReplyDelete
  30. Game over என்ற தலைப்பை பார்த்து என்ன ஏதோ... என்று பயந்துபோய் பதிவை படித்தால்..... இறுதியில் அருமையான ஒரு படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

    12 April 2012 14:06 //அது மணியின் கற்பனை!!!

    ReplyDelete
  31. இண்டைக்கு நல்லாப் பிந்திப்போச்சு.எல்லாரும் வந்து கோப்பி குடிச்சிட்டுப் போய்ட்டினம்.நாளைக்கு எல்லாருக்கும் சக்கரைப்பொங்கல் தருவீங்கள்தானே நேசன் !

    12 April 2012 15:45 //மதியம்சைவச் சாப்பாடு பின் பால்ச்சோறு எல்லாம் தருவேன்! ஹேமா! ஹீ

    ReplyDelete
  32. ”நந்தன” வருடம்.சொல்லவே சுகமா இனிமையா இருக்கிறமாதிரி இருக்கு.எல்லாருக்கும் முக்கியமா ஊரில இருக்கிற உறவுகளுக்கு நிறைவான நின்மதி சந்தோஷத்தைத் தரவேணும் எண்டு கடவுளிட்ட கேட்டுக்கொள்வம் !

    12 April 2012 15:48 /*/எப்போதும் வேண்டுவது தானே!!!

    ReplyDelete
  33. பதிவோட வீரமான குறும்படம்.நன்றி நேசன்.என்னை நினைக்க எனக்கே எரிச்சலா இருக்கு.எதையாவது சாதிச்சுத்தான் சாகவேணும் !

    12 April 2012 15:53 // ]புலம் பெயர்ந்தும் சாதிக்கின்றோம் தானே!!

    ReplyDelete
  34. Game Over என்ற தலைப்பைப் படித்து பயந்துதான் ‌போனேன். குறும்படத்திலோ திரைப்படத்திலோ ரசிக்க இலங்கைத் தமிழ் எனக்கு உறுத்தலாகவே இருந்ததில்லை. நல்லதொரு குறும்படம் உங்களால் காணக் கிடைத்தது. பிறக்கும் இந்த நந்தன வருடம் நல்லன்வற்றையே கொண்டு வரட்டும் என்று உங்களுக்கும் உங்களைச் சேர்ந்த அனைவருக்கும் என் இதயம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்ததுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!
    // நன்றி கணேஸ் அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்,வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  35. நன்றி புலவரே வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  36. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய
    தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


    குறும்படம் நல்லா இருக்குது நேசன்.
    வாழ்த்துக்கள்.

    12 April 2012 19:15 
    //நன்றி மகேந்திரன் அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  37. game over நேரம் கிடைக்கும் போது பார்கிறேன். சித்திரை புது வருட வாழ்த்துக்கள். அண்ணா

    12 April 2012 19:20 
    //நன்றி எஸ்தர்-சபி வருகைக்கும் வாழ்த்துக்கும்,கருத்துரைக்கும்.

    ReplyDelete