28 May 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன் --56

கோயில் திருவிழாக்களில் தான் மனம் குதூகலிக்கும் .

நாஸ்திகம் பேசுபவர்களும், ஆத்திகம் பேசுபவர்களும் ,ஆரவாரத்துடன் பார்க்கும் விழா இந்த அம்மனின் வீதி உலா .!

தீவில் இருந்து வந்த மச்சாள்மார்களுக்கும் ,மாமிமார்களுக்கும் சகோதரமொழி தெரியாது அப்போது .

அதனால் அவர்களை பின் தொடரும் வேலை ராகுலுக்கு செல்லன் மாமா சொல்லியது.

 இவர்களுக்கு முதலில் எங்கே வீதியின் பெயர் என்றே தெரியாது .ஊருக்குப் புதுசு .

.தீவில் தேர்திருவிழா என்றால் குடும்பங்கள் ஒன்று சேர்வது போல இருந்த  காலம் யுத்த நிலையாலும் ,பாதுகாப்பு பிரதேசம் என்றும் எங்கள் குலத்தெய்வம் சிறைப்பட்ட பின் .

அதே சாயலில் இருக்கும் அம்மனைக்கான மனதில் ஆனந்தம் வரும் .

பரம்பரையாக தேர்த்திருவிழா செய்தவர்கள் ,விடுபட்டாச்சு ,

வலிகள் தந்த நினைவுகளால் கோயில் போகாத நிலை இருந்த மனங்களுக்கு கொஞ்சம் மறுமலர்ச்சி கொடுத்த கோவில் தேர் வீதியில் வரும் நிலை.

 தீவில் தேர்கள் எல்லாம் உள்வீதி, வெளிவீதி மட்டும் வரும் எப்போதும் .

முதல் முறையாக மச்சாள்களுக்கும் மாமிமார்களுக்கும் சிதம்பர சக்கரம் பார்த்த உணர்வு .காளி அம்மன் வீதி உலா வரும் காட்சி!

 கோயில் இருப்பது நகரில் இருந்து அன்னளவாக 4 மைல் தொலைவில் .

உடரட்டை ரயிலைப்போல நடந்து சென்றால்  1 மணித்தியாலம் பிடிக்கும் ,யாழ்தேவியாக வவுனியாவில் இருந்து காங்கேஸன் துறை போகும் வேகத்தில் சென்றால் 35 நிமிடத்தில் ரொக்கில் போய் சேரலாம் .

ஆலயத்திற்கு ஆண்டுக்கு ஒரு முறை அந்த அம்மனே அன்பர்ளுக்கு நகருக்கு வந்து தர்சனம் கொடுக்கும் காட்சி .அழகர் ஐயா ஆற்றில் இறங்க மதுரை வரும் அழகைப்போல இருக்கும்!

வீதி உலாவுக்கு அம்மன் ரொக்கிலில் இருந்து பசரைவீதியூடாக காம்ன்ஸ்தாண்டி விகாரக்கொடை வந்தால் .

முதலில் புத்தனின் வாசலில் இருக்கும் யானை மணியடித்து வணங்கி
நிற்கும் .யானைப்பாகன் மகோ பத்தினி தெய்யோ ! என்று பாதம் குனிந்து வணங்கி நிற்பான் .

அம்மன் மெதுவாக வருவா நல்ல படங்கள் சத்தம் இல்லாமல் தியேட்டருக்கு வருவதைப்போல .

அது நீண்டு வங்கி வீதி ,கீழ்வீதி ,ஊடாக நகருக்கு வந்து பஸ்தரிப்பு நிலையம் தாண்டி பாசார் வீதி ஊடாக வலம் வந்து !

அந்த வீதியில் வரும் போது தான் அமைதியாக வந்தவர்கள்.

 தேருலாவில் தங்கள் இன்னொரு முகத்தை  காட்டுவார்கள் .

மைக்டெஸ்ரின் ,வணக்கம் உறவுகளே !!

ரொக்கில் காளியம் தேர் ஊற்சவம் இப்போது இந்த வீதியில் இருந்து உலாவந்துகொண்டிருக்கின்றது ,

மலையகசேவையூடாக அம்மனின் பெருமைகளை,
" மலைகள் எங்கள் கலைமகள்  "
ரொக்கில் காளியம்மன் வீதியுலா சிறப்புக்களை சேர்ந்தளிக்க
என்னோடு சக அறிவிப்பாளர் சீத்தாரமனிடம் ஒலிவாங்கியை கையளிக்கின்றேன் !"

நன்றி முத்தையா ஜெகன் மோகன் என்று அவர் விடைபெறும் விடயத்தை மச்சாளுக்கு காட்டும் போது !

ராகுல் சொல்லுவான் .

இஞ்ச பார்த்தியோ நேரடி அஞ்சல் நடக்குது .

இவர்தான் சீத்தாராமன். அறிவிப்பாளர் , நாடக எழுத்தாளர் ,வானொலி நாடகம் செய்வார் .

முத்தையா ஜெகனின் பாடல்கள் வித்தியாசம் , அவரும் ஒரு கவிஞர் தெரியுமோ ?

"ஏன்டா நீ அப்ப இங்க படிக்கிறதே இல்லையா "

இப்படியே ஊர்சுத்தியே பழகப்போறீயோ ?

இரு சித்தப்பாவிடம் சொல்லிக்கொடுக்கின்றேன் .

நீ சொன்னால் பயமோ ?

இப்படியே விட்டுட்டு ஓடினால் உனக்கு வீட்டை போகத்தெரியுமோ ?

இடம் தெரியாதவிடங்களில் விட்டுவிட்டாள் மச்சாள்மார்கள் வாயை அடைக்கலாம் என்பதை தெரிந்த பின் தான் ராகுல் அவர்களுடன் வம்பளப்பது.

வா இங்க பார்த்தியோ.

 இது தான் கரகம் .

நம்ம மூக்கையா ஆடும் ஆட்டம் பாரு .

என்று மச்சாளுக்கு காட்டும் போது .

எங்க பார்க்க?

 இவ்வளவு கூட்டமாக இருக்கு

."கூட்டம் மூக்கையா ஆட்டம் பார்க்க இல்லை ."

"முத்தழகு தட்டு எடுக்கும் போது கரகத்தின் சிறப்பைப் பார்க்கும் சிலபார்வைகள்

"சில்லறையாக அவளின் ஆட்டத்திற்கு சுருதி மீட்டும் ,

இலங்கையிலும் கரகம் ஆடும்  கலைஞர்கள் .நாவலப்பிட்டி ,ஹாட்டன் பதுளையில் மடுல்சீமைப்பக்கம் இருக்கின்றார்கள் .

இவர்களுக்கு ஊக்கிவிப்பு இல்லாத நிலையில் தான் .

இந்த கரகாட்டம்   ஆடும் கலைஞர்கள் எல்லாம் இன்று அரபுலக்கதில் வேறு தொழில்லில் இருக்கும் வேதனையை என்ன சொல்வது ?

 தாய் ஏற்றிவிட்ட பூங்கரகத்தை ஆடும் முத்தழகு .

குலமகள் அவளை விலைமகளாக பார்க்கும் சில கூட்டம் இந்த வீதி உலாவில் !

ஆடவந்த பின் அம்பலத்தில் ஆடினாலும் ,அந்த வீதியில் ஆடினாலும், ஆட்டக்காரி என்று சொல்லும் உள்ளங்களுக்குத் தெரியாது !

அந்த முத்தழகு வீட்டில்  இருக்கும் வறுமை நிலை .

மூத்த அக்காள் கலியாணம் தள்ளிப்போகும் நிலை.

 மூக்கையாவின் கலைமீதான ஆர்வம் தான் அவரை ஊர்தாண்டி நாவலப்பிட்டியில் கரகம் ஆடிவந்த காமாட்சியை கைபிடித்து கரகாட்டம் ஆடும் ஜோடியாக பல மலையக கோவில்களில் கரகம் ஆடும் நிலையைப்பற்றி!

கரகம் ஆடப்போவதால் அடிக்கடி விடுப்பு எடுப்பதால் தான் செல்லன் மாமா வேலைக்கு வரவேண்டாம் என்று நிறுத்தியது .

எங்கே கண்டாலும் மூக்கையா  ராகுலுக்கு வாசிக்க வேண்டியருவார் ஞானம் சஞ்சிகை, அகிலம் சஞ்சிகை என அதற்கு பரிசாக கொடுப்பது வெற்றிலையும் பாக்கும் தான் !

கொஞ்சம் வெள்ளைச்சுருட்டான திரிரோஸ்!

 அப்போது கரகம்  ! பார்க்க தோழில் தூக்கிய மச்சாள் சுகியும்  அவள் தோழில் சின்ன மச்சாள் ரதியும் தூக்கியிரிக்கும் போது  !

சரோஜா மாமி திட்டுவா .

"இறக்கிவிடு அவளை ,தோழில் எத்துறவயசா அவளுக்கு .

சும்மா அவளோடுட தனகாத .

நல்ல காலம் என் அம்மா பார்க்க இங்கு இல்லை இல்லையோ !

இந்தக்குமரியை இப்படி வளர்க்கிறீயோ ?என்று ஒப்பாரி வைப்பா "

சும்மா இருங்கோ மாமி  .

அவள் சின்னவள் குழந்தையில் இருந்து தூக்கும் எனக்கு சுகியின் பாரம் எல்லாம் ஒருமூட்டை கோர அரிசியும் வராத ,அக்காளும் ,தங்கையும் என்ன ஒரு புகையிலைச்சிற்பம் பாரம் கூட இல்லை .


கரகாட்டம் தெரியவில்லை தூக்கிக்காட்டினால் என்ன ?

இவளை நான்  விழுத்தியா போடுவன் .

மீசைமுளைச்சாலும்  உனக்கு அறிவு வளரல பெரியமச்சாள் பொறுமும் போது புரிந்து கொண்டான் .

அவளைமட்டும் தூக்கிறீயே சுகியோடு மட்டும்தான்  தூக்குக் காவடியோ ?

ஏன் உன்ற கொப்பர் சொல்லியிருந்தாரே மறந்துவிட்டியோ ?

குடிகாரன் மகன் கிட்ட வரமுடியுமோ என்ற மோள் கிளிமாதிரி என்று!

நான் பேரம்பலத்தார் பேரன் .

ஏதோ பாவம் கோயில் திருவிழா காட்டச் சொன்னதால் கூட வந்தன்.

 ஐயா வழியில் செம்பு எடுக்கமாட்டன்  எப்போதும் மச்சாள் .

ஓ அப்படியோ ?

பார்ப்பம் முதலில் பரீட்சையில் யார் பாஸ் ஆகுவது !

என்று இன்னும் 6 மாதம் இருக்கு  அடுத்த கடை போட எங்க அப்பாவும் வருவார் !

சுருட்டுக்குப் பாணிபோடுவது நீதான் .

அன்றே பெரியமச்சாள் முகத்தில் கரிபூசணும் என்று காத்திருந்தான் ராகுல்  !

இந்தப் பெரிய மச்சாளும் ராகுலும் ஒரு மாதம் வயது விதியாசம் ராகுல்  மூப்பு .

அவள் பெண்கள் கல்லூரியில் சாதாரண தரம் சேர்ந்து இருந்தால் .

சுகி போல அவளும் ,அவள் தங்கைகளும் அங்கே தான் படித்தார்கள் .

 வெளியில் பலருக்கு  அது தெரியாது !

செல்லன் மாமா  இந்த மச்சாள்மாருக்கு சித்தப்பா என்று மட்டும் எல்லாருக்கும் தெரியும் .!

அந்த வீதியில் கரகம் வர அதன் பின்னே வரும் ஆட்டம் யாழில் எங்கும் கானத ஆட்டம் !

தொடரும்!

//மோள்- மகள் யாழ்வட்டார மொழி!
தனகாத! - உரசாத யாழ் வட்டார மொழி!
பத்தினி தெய்யோ- அம்மனை சிங்களவர் பார்க்கும் பார்வை சீதையை அப்படித்தான் சொல்லுகின்றது அவர்கள் இதிகாசம்!
 அகிலம்/*ஞானம் சிறு சஞ்சிகைகள் முன்னர் மலையகத்தில் வெளிவந்தது!

85 comments:

  1. திருவிழக்கு நான் தான் முதலில் வந்து இறுக்கினான் ....


    அண்ணா எனக்கு புது கண்ணாடி வளையல்,பெரிய தோடு எல்லாம் வாங்கி வையுங்கள் ...மீ பதிவை படிசிட்டு வந்து போட்டுகிறேன் ....

    ReplyDelete
  2. இரவு வணக்கம்,நேசன்!"அவரை" ஒரு வழி பண்ணாம விட மாட்டியள் போல தான் தெரியுது!ஒரு பால் கோப்பி பிளீஸ்!தங்கை பூனைக் கொட்டில்ல இருந்தா!

    ReplyDelete
  3. வாங்கோ கலை இரவு வணக்கம் நலம்தானே! முதலில் ஒரு பால்க்கோ]ப்பி குடியுங்கோ!

    ReplyDelete
  4. இது கள்ளாட்டம்!பதிவு படிக்காம,ஆஆஆஆஆஆ எண்டு கத்திறது,வளையல் வாங்கித் தாங்கோ எண்டு கேக்கிறது.நான் செல்ல மகளுக்கு தங்கக் காப்பு வாங்கிப் போடுவன்.கண்ணாடி வளையல் எல்லாம் உடைஞ்சிடும்,ஹ!ஹ!ஹா!!!!!

    ReplyDelete
  5. திருவிழக்கு நான் தான் முதலில் வந்து இறுக்கினான் ....


    அண்ணா எனக்கு புது கண்ணாடி வளையல்,பெரிய தோடு எல்லாம் வாங்கி வையுங்கள் ...மீ பதிவை படிசிட்டு வந்து போட்டுகிறேன் ....

    28 May 2012 11:14 // வாங்கோ தங்கைக்கு இல்லாத்தா அப்புறம் தானே கலாப்பாட்டிக்கு ஹீ மச்சாளுக்கு!

    ReplyDelete
  6. இரவு வணக்கம்,நேசன்!"அவரை" ஒரு வழி பண்ணாம விட மாட்டியள் போல தான் தெரியுது!ஒரு பால் கோப்பி பிளீஸ்!தங்கை பூனைக் கொட்டில்ல இருந்தா!

    28 May 2012 11:15 // வாங்கோ யோகா ஐயா நலம் தானே அவருக்கு அங்கே பலர் கட்டவுட் வைத்து ம்ம்ம் தொடருங்கோ சொல்லுகின்றேன்/ஹீஇ நண்பன் சொல்லியதைச்சொல்லி விட்டுதுத்தான் தம்பி ராச் கேட்டபதில் சொல்லுவேன்!ம்ம்ம்

    ReplyDelete
  7. அது என்ன பிள்ளையார் படம் புதுசாக!ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  8. இரவு வணக்கம்,மருமகளே!நலமா?மாமா வந்திருக்கேன்ன்ன்ன்.......................!!!!!!!!!

    ReplyDelete
  9. இது கள்ளாட்டம்!பதிவு படிக்காம,ஆஆஆஆஆஆ எண்டு கத்திறது,வளையல் வாங்கித் தாங்கோ எண்டு கேக்கிறது.நான் செல்ல மகளுக்கு தங்கக் காப்பு வாங்கிப் போடுவன்.கண்ணாடி வளையல் எல்லாம் உடைஞ்சிடும்,ஹ!ஹ!ஹா!!!!!//ஆஹா நான் சாமாணியன்!ஹீ எனக்கு நதியா காப்பு! வாங்குவம்!ஹீ

    28 May 2012 11:17

    ReplyDelete
  10. நான் மிக்க நலம் அண்ணா ...நீங்கள் நலமா ....


    மாமா இரவு வணக்கம் ...நலமா மாமா ....சாப்டீங்களா ...


    உங்கட செல்ல மகள் இன்னும் காணும் ...என்னாச்சி ...

    ReplyDelete
  11. தனிமரம் said...

    அது என்ன பிள்ளையார் படம் புதுசாக?//////அந்த ஆள் இல்லாட்டி எனக்குப் பொழுதே விடியாது!அப்பிடியே சக்கப்பணிய இருந்து கொண்டு,அந்தாள் படுத்திற பாடு!

    ReplyDelete
  12. யாரு,உங்க அக்காவா?வருவா!

    ReplyDelete
  13. தனிமரம் said...
    வாங்கோ யோகா ஐயா நலம் தானே அவருக்கு அங்கே பலர் கட்டவுட் வைத்து ம்ம்ம் தொடருங்கோ சொல்லுகின்றேன்/ஹீஇ நண்பன் சொல்லியதைச்சொல்லி விட்டுதுத்தான் தம்பி ராச் கேட்டபதில் சொல்லுவேன்!ம்ம்ம்////பார்த்தேன்,காலையில்.என் பங்குக்கு அடிச்சு விட்டிருக்கிறன்.இன்னுமொரு ஆள் மெண்டு,முழுங்கினார்,ஹ!ஹ!ஹா!!!!

    ReplyDelete
  14. உங்கட செல்ல மகள் இன்னும் காணும் ...என்னாச்சி ...// அவாவுக்கு வேலை கலை!ம்ம்ம்

    ReplyDelete
  15. அந்த ஆள் இல்லாட்டி எனக்குப் பொழுதே விடியாது!அப்பிடியே சக்கப்பணிய இருந்து கொண்டு,அந்தாள் படுத்திற பாடு!

    28 May 2012 11:24// ஹீ வட இந்தியாவில் அவர் சம்சாரியாம்!ம்ம்ம்

    ReplyDelete
  16. அண்ணா பதிவு சூப்பர் ...உங்க ஊர் கரகாட்டும் நல்லா இருக்குங்க அண்ணா ,,,,,,


    மீ யும் நொங்கு காயை தலையில் வைத்து கரகாட்டம் ஆடுவம் விளையாட்டுக்கு சின்ன வயதில ..

    கிராமத்தில் இண்டும் கரக்காட்டம் ஊர்த த்ருவிழ்வில் இருக்கு அண்ணா ..இரவு எட்டு மணிக்கு ஆரம்பித்து காலை அந்து மணிக்கு முடிப்பார்கள் போல ...எங்க ஊரு கரகாட்டம் சேம் சேம் பப்பி சேம் ஆ இருக்கும் ...டிரஸ் நல்லாவே இருக்காது ...சின்ன வயதில் ஆசையா பார்த்தினான் ...இப்போ பார்க்க புடிக்கிரதிள்ள திருவிழாவில் ... ....

    ReplyDelete
  17. பார்த்தேன்,காலையில்.என் பங்குக்கு அடிச்சு விட்டிருக்கிறன்.இன்னுமொரு ஆள் மெண்டு,முழுங்கினார்,ஹ!ஹ!ஹா!!!!

    28 May 2012 11:27// ஓம் பார்த்தேன் என்ன செய்வது!ம்ம்ம்

    ReplyDelete
  18. Yoga.S. said...
    தனிமரம் said...

    அது என்ன பிள்ளையார் படம் புதுசாக?//////அந்த ஆள் இல்லாட்டி எனக்குப் பொழுதே விடியாது!அப்பிடியே சக்கப்பணிய இருந்து கொண்டு,அந்தாள் படுத்திற பாடு!///


    மாமா சேம் சேம் ஸ்வீட் ...எனக்கும் ரொம்ப பிடிக்கும் அவரை .....என் கூடவே இருக்க மாறி பீளின்ஸ் ...

    ReplyDelete
  19. Yoga.S. said...
    யாரு,உங்க அக்காவா?வருவா!///


    மாமா அக்கா வே தான் ...



    உங்கட மகளுக்கான ஸ்பெஷல் பாட்டு வேற அண்ணான் போட்டு இருக்கங்கள் ..


    அண்ணா பாட்டு உண்மையாவே ஜூப்பர் ....


    எனது சார்பா நன்றி அண்ணா

    கவிதாயினி அக்கா சார்பாக கோடி நன்றி கள் அண்ணா

    ReplyDelete
  20. கலை said...

    மாமா சேம் சேம் ஸ்வீட் ...எனக்கும் ரொம்ப பிடிக்கும் அவரை .....என் கூடவே இருக்க மாறி பீளின்ஸ்.///அவ்ளோ பெரிய அப்பாடக்கரா அவரு?ஹி!ஹி!ஹி!!!!!

    ReplyDelete
  21. கிராமத்தில் இண்டும் கரக்காட்டம் ஊர்த த்ருவிழ்வில் இருக்கு அண்ணா ..இரவு எட்டு மணிக்கு ஆரம்பித்து காலை அந்து மணிக்கு முடிப்பார்கள் போல ...எங்க ஊரு கரகாட்டம் சேம் சேம் பப்பி சேம் ஆ இருக்கும் ...டிரஸ் நல்லாவே இருக்காது ...சின்ன வயதில் ஆசையா பார்த்தினான் ...இப்போ பார்க்க புடிக்கிரதிள்ள திருவிழாவில் ... ....

    28 May 2012 11:29 /// அப்படியா அவையல் பாவம் குழுவை காசு கொடுத்து அப்படித்தானே ஆடச்சொல்லுகிறார்கள் அவர்கள் வீட்டு!ம்ம் பாவம் அவர்கள் மனசு புரியாத !ம்ம் யாரை நோவது கலைஞர் பாடு திண்டாட்டம் நண்பர் குடும்பம் ரோட்டில் நிக்குது!ம்ம் என்னால்லும் முடிஞ்ச அளவுதானே செய்ய முடியும் ரொம்ப கொடுமை !ம்ம்ம் அது எல்லாம் யாருமே பேச மாட்டாங்க தாயி எனக்கொரு உண்மை தெரியனும் சாமி இந்த தொடர் முடியா பார்க்கலாம் தாயி!ம்ம்ம், நிச்சயம் பேசுவன் கலை இன்னும் சில வாரத்தில்!ம்ம்ம்

    ReplyDelete
  22. மருமகளே,அதென்ன உங்க குரு ப்ளாக்கில வேத்த்ரீ வேத்த்ரீ ன்னு என்னமோ.....................................Ha!Ha!Haa!!!!!

    ReplyDelete
  23. கவிதாயினி அக்கா சார்பாக கோடி நன்றி கள் அண்ணா// நான் என்ன செய்வேன் நண்பன் சொன்ன கதைக்கு பொருத்தமான பாடல் போடணும் அதுவும் இல்லாமல் அக்காள் அதிகம் வடக்கில் இருந்தவா ராகுலோ மலையகம் அதிகம் அப்படியே எல்லாரையும் கொண்டு வரணும் இது என்ன விஜ்ய படமா வாழ்க்கை உணர்வு யாதார்த்தம் வேண்டும் பார்க்கலாம் முடிவில்!

    ReplyDelete
  24. //அவ்ளோ பெரிய அப்பாடக்கரா அவரு?ஹி!ஹி!ஹி!!!!!///



    ஏன் மாமா இப்புடிலாம் ...அவரை எதுக்கு வம்புக்கு இழுகீங்க ...பாவம் அவரே ...


    மாமா உங்களுக்கு ஒன்னு தெரியுமா .....

    போன வருடம் செய்யுற வேலை விட எனக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சது (இப்போ பார்க்கிற வேலை மாமா )....நான் பழைய வேலை ரிசைன் பண்ணுறேன் நு லெட்டர் டைப் பண்ணிட்டு ஆபீசில் எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன் மாமா ...கடைசி நாள் லெட்டர் பிரிண்ட் அவுட் எடுத்துட்டு இருக்கும் போது அப்ப்பா ரீசின் பண்ணத சொல்லிட்டாங்க ...நான் அப்பாவிடம் சண்டை போட்டிணன் முதலில் ஓகே சொல்லிட்டு கடைசி நாள் வேனமுன்னு எப்புடி சொல்லுரிங்கள் எண்டு ...அப்புறம் நான் அப்பா மனசு கஷ்டப் படுத்த வேனமுன்னு வந்த ஒப்பர் வேணாம் சொல்லுடன் ...

    அப்புறம் அப்பவின்ர கனவில் பிள்ளையார் வந்தாராம் ....எனக்கு புது வேலைக்கு பெர்மிச்சொன் கொடுதன்கலாம் ...மறுநாளே அப்பா ஓகே சொல்லி தடங்க மா ...



    ஆச்சரியம் என்னன்ன அப்பாவின் கனவில் வந்த அதே பிள்ளையார் சிலை தான் மீ ஆபீஸ் கோவிலில் இருக்கும் பிள்ளையார் சிலையாம் கொஞ்சம் கூட வடிவு மாறாமல் ..அப்பா க்கு என் ஆபீஸ் பிள்ளையார் பார்தவுடன் ஆச்சரியமா போச்சி ...


    அம்மாடி மீ டயர்ட் ஆகிட்டேன் மாமா கதை சொல்லி ...

    ReplyDelete
  25. மருமகளே,அதென்ன உங்க குரு ப்ளாக்கில வேத்த்ரீ வேத்த்ரீ ன்னு என்னமோ.....................................Ha!Ha!Haa!!!!!

    28 May 2012 11:37// ஆஹா நான் இப்போது இதில் அதிகம் இருப்பதால் பக்கத்து வீடுகள் போறது குறைவு வீட்டைக்காலி பண்ண வேண்டுமே சாட்டை அடி தம்பியின் பின்னுட்டத்தில் யோகா ஐயா!ம்ம்ம்

    ReplyDelete
  26. ம்ம்ம் அது எல்லாம் யாருமே பேச மாட்டாங்க தாயி எனக்கொரு உண்மை தெரியனும் சாமி இந்த தொடர் முடியா பார்க்கலாம் தாயி!ம்ம்ம், நிச்சயம் பேசுவன் கலை இன்னும் சில வாரத்தில்!ம்ம்ம்///


    ஹ ஹ ஹ ஹா தாயி உண்மை ....என்ன உண்மை அண்ணா எனக்கு ஒன்டுமே விளங்களயே .....

    ReplyDelete
  27. எல்லாரும் இங்க இருக்கினம்.....ஆரது பிள்ளையாரப்பா....எப்பிடி எப்பிடி பிள்ளையார் மாமா எண்டு சொல்ல ஏலாது.....கருவாச்சி...!

    நேசன் கனநேரமா நேற்றையான் பதிவை ரீ ஃபிரஸ் பண்ணிக்கொண்டு பதிவு போடேல்லையாக்குமெண்டு பாத்துப் பாத்துக்கொண்டு இருக்கிறன்....அவ்வ்வ்வ் !

    ReplyDelete
  28. மருமகளே,அதென்ன உங்க குரு ப்ளாக்கில வேத்த்ரீ வேத்த்ரீ ன்னு என்னமோ.....................................Ha!Ha!Haa!!!!!///


    ஹ ஹ ஹா ஹா .....மாமா உங்கட விளக்கவுரை தான் தெளிவா இருஞ்சே ....நீங்க சொன்னது கரீகட்டு ...

    ReplyDelete
  29. //இது கள்ளாட்டம்!பதிவு படிக்காம,ஆஆஆஆஆஆ எண்டு கத்திறது,வளையல் வாங்கித் தாங்கோ எண்டு கேக்கிறது.நான் செல்ல மகளுக்கு தங்கக் காப்பு வாங்கிப் போடுவன்.கண்ணாடி வளையல் எல்லாம் உடைஞ்சிடும்,ஹ!ஹ!ஹா!!!!!//

    காக்காஆஆஆஆஆஇது இது எப்பிடி....அப்பா....!

    அதுசரி எப்ப முதல் வந்தாலும் காப்பு வாங்கித் தருவீங்களோ நேசன்.அப்பிடியெண்டா நேற்று நான் வந்தனான்...அப்ப எனக்கும் தரவேணும்.காக்காக்கு மட்டும் குடுத்தால் பாப்பம் ஒருக்கா !

    ReplyDelete
  30. நேசன் கனநேரமா நேற்றையான் பதிவை ரீ ஃபிரஸ் பண்ணிக்கொண்டு பதிவு போடேல்லையாக்குமெண்டு பாத்துப் பாத்துக்கொண்டு இருக்கிறன்....அவ்வ்வ்வ் !

    28 May 2012 11:45 // வாங்கோ ஹேமா நலம்தானே இப்போது தனிமரம் யாழ் தேவி வேகத்தில் போகுது அத்தனை அவசரம்!ம்ம் கொஞ்சம் உடரட்டை வேண்டாம் பாரீஸ் கோச்சி எல்லாம் கொஞ்சம் வேகம் ஏன்னா முடிவாகி விட்டால் அப்புறம்!!! ஓட்டம் தான் ரயில்!

    ReplyDelete
  31. ஐஈஇஈஈ ஹேமா அக்கா வந்துட்டங்கள் ...ஜாலி ஜாலி ,,,


    இனிய இரவு வயக்கம் காஆஅக்காஆ ....



    பிள்ளையார் அப்பா எப்போதும் பிள்ளையார் அப்பா தான் ,...


    யோகா மாமா எப்போதும் யோகராசா மாமா தான் ...


    ரீ ரீ அண்ணா எப்போதும் ரீ ரீ அண்ணா தான் ...

    ரே ரீ அண்ணா எப்போதும் ரே ரீ அண்ணா தான் ...

    குரு எப்போதும் குரு தான் ....

    கவிதாயினி காக்கா எப்போதும் காஆஆஆஆக்காஅ தான் ...

    கலை எப்போதும் இளவரசி தான் ....

    ReplyDelete
  32. அதுசரி எப்ப முதல் வந்தாலும் காப்பு வாங்கித் தருவீங்களோ நேசன்.அப்பிடியெண்டா நேற்று நான் வந்தனான்...அப்ப எனக்கும் தரவேணும்.காக்காக்கு மட்டும் குடுத்தால் பாப்பம் ஒருக்கா !
    // நதியா காப்பு கொடுக்கலாம் அது ஒன்றும் தங்கம் இல்லைத்தானே அதவிட நம்ம உறவுகள் வலைக்காப்புக்கு அண்ணா இல்லாமல் போக மாட்டினம் நாத்தனார் முக்கியம் ஆக்கும்!ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    28 May 2012 11:48

    ReplyDelete
  33. ஹேமா said...
    //இது கள்ளாட்டம்!பதிவு படிக்காம,ஆஆஆஆஆஆ எண்டு கத்திறது,வளையல் வாங்கித் தாங்கோ எண்டு கேக்கிறது.நான் செல்ல மகளுக்கு தங்கக் காப்பு வாங்கிப் போடுவன்.கண்ணாடி வளையல் எல்லாம் உடைஞ்சிடும்,ஹ!ஹ!ஹா!!!!!//

    காக்காஆஆஆஆஆஇது இது எப்பிடி....அப்பா....!//


    ஆமாம் நான் தான் சொன்னினான் மாமா கிட்ட.... மருமகளுக்கு வைரத்தில் காப்பு செய்யணும் ஆசைப் பட்டங்கள் மாமா ...அதன் நான் சொன்னிணன் மகளுக்கு தங்கத்தில் வாங்கிக் கொடுங்கோ மாமா அப்புறமாய் மருமகளுக்கு வைரம் வைடுரியத்தில் கொடுக்கலாமேண்டு ...

    நல்லப் படியுங்கோ கவிதாயினி ரீ ரீ அன்னவின்ர கண்ணாடி வளையலையும் மாமா அதுக்காகத் தான் என்னை உடைச்சி போட சொன்னவை ....

    ReplyDelete
  34. கலை...பிள்ளையார் கதை சூப்பர்.சரி நம்பிக்கைதான்.

    அப்பா...எப்பிடியாச்சும் சாமி கும்பிட வைக்கவெண்டு நேர்த்திக்கடனோ பிள்ளையாருக்கு.உதுதான் இப்ப 4-5 நாளா பிள்ளையார் துணை சொன்னனீங்கள் !

    ReplyDelete
  35. வாங்க,மகளே!////ஆரம்பிச்சுட்டாய்யா ,மறுபடி அரசி,அரிசி ன்னு !!!ஹ!ஹ!ஹா!!!!!!

    ReplyDelete
  36. ஹேமா என் முகம் தெரிந்த தோழி வந்தா நேற்று உசுப்பி விட்டா இன்று முகத்தில் ஒரு குத்து பார்க்கலாம்!ம்ம்ம்

    ReplyDelete
  37. நேசன்...வேணுமெண்டே வெறுப்பேத்தப் பாட்டுப் போட்டிருகிறீங்கள்போல.சகிக்கமுடியேல்ல.ஒரு நல்ல பாட்டுக் கேக்கிற நேரத்தை வீணாக்கிட்டீங்க.போங்கோ நேசன்....!

    ReplyDelete
  38. வலைக்காப்புக்கு அண்ணா இல்லாமல் போக மாட்டினம் நாத்தனார் முக்கியம் ஆக்கும்!///


    ச்ய்க்கில் கேப் கிடைச்சாலும் ப்ளைன் ஒட்டிடுவான்கள் ரீ ரீ அண்ணான் கலா அன்னிய ஒசத்தி பேசுனும் எண்டால் .....

    ReplyDelete
  39. வலைக்காப்புக்கு அண்ணா இல்லாமல் போக மாட்டினம் நாத்தனார் முக்கியம் ஆக்கும்!///


    ச்ய்க்கில் கேப் கிடைச்சாலும் ப்ளைன் ஒட்டிடுவான்கள் ரீ ரீ அண்ணான் கலா அன்னிய ஒசத்தி பேசுனும் எண்டால் .....

    ReplyDelete
  40. அப்பா...எப்பிடியாச்சும் சாமி கும்பிட வைக்கவெண்டு நேர்த்திக்கடனோ பிள்ளையாருக்கு.உதுதான் இப்ப 4-5 நாளா பிள்ளையார் துணை சொன்னனீங்கள் !

    28 May 2012 11:55// ஏன் நல்லாத்தானே இருக்கு படம் ஹேமா!

    ReplyDelete
  41. ஹேமா said...

    கலை...பிள்ளையார் கதை சூப்பர்.சரி நம்பிக்கைதான்.

    அப்பா...எப்பிடியாச்சும் சாமி கும்பிட வைக்கவெண்டு நேர்த்திக்கடனோ பிள்ளையாருக்கு.உதுதான் இப்ப 4-5 நாளா பிள்ளையார் துணை சொன்னனீங்கள் !////ஏதாவது ஒன்றில் நம்பிக்கை வைக்கத்தான் வேண்டும்.பிறந்த காலத்திலிருந்து எங்கள் அயல் பிள்ளையாருடன் தான்,நல்லது கெட்டது எல்லாமே!எங்களைக் கொவிலடியார் என்று தான் ஊரில் விழிப்பார்கள்!

    ReplyDelete
  42. இது கள்ளாட்டம்!பதிவு படிக்காம,ஆஆஆஆஆஆ எண்டு கத்திறது,வளையல் வாங்கித் தாங்கோ எண்டு கேக்கிறது.நான் செல்ல மகளுக்கு தங்கக் காப்பு வாங்கிப் போடுவன்.கண்ணாடி வளையல் எல்லாம் உடைஞ்சிடும்,ஹ!ஹ!ஹா!!!!!

    28 May 2012 11:17 //இப்போது யார் பதிவு படித்தாலும் படிக்காட்டியும் நான் முடிக்காமல் முகத்தில் வாந்தி எடுத்தாலும் ஓட மாட்டன் ஐயா இது சிலருக்கு புரியனும் அதுதான் இந்த மங்காத்தா குத்து!ஹீஈஈஈஈஈ

    ReplyDelete
  43. மாமா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ
    மாமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ
    எங்க போநீங்கள் ....ஆளையே காணுமே

    ReplyDelete
  44. ஹேமா said...

    நேசன்...வேணுமெண்டே வெறுப்பேத்தப் பாட்டுப் போட்டிருகிறீங்கள்போல.சகிக்கமுடியேல்ல.ஒரு நல்ல பாட்டுக் கேக்கிற நேரத்தை வீணாக்கிட்டீங்க.போங்கோ நேசன்....!////பாட்டு என்னமோ நல்ல பாட்டுத்தான்!இந்தாளுக்கு???????????????????????????????????????????

    ReplyDelete
  45. கருப்பிக்கு வைரத்திலயும் தங்கத்திலயும் முத்திலயும் போட்டாத்தான் உண்டு.இல்லாட்டி ஒரு கருப்பனும் வரமாட்டான்.எங்களுக்கெல்லாம் அப்பிடியில்ல.சும்மாவே தூக்கிக்கொண்டு போவினம்.நான்தான் வேணாமெண்டு இருக்கிறன்......!

    ReplyDelete
  46. எங்களைக் கொவிலடியார் என்று தான் ஊரில் விழிப்பார்கள்!// மாம்பழம் ம்ம்ம் சந்தியில் மறக்கத்தான் முடியுமா! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நானும் நின்றேன்!ஹீஈஈஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  47. // மாட்டன் ஐயா இது சிலருக்கு புரியனும் அதுதான் இந்த மங்காத்தா குத்து!ஹீஈஈஈஈஈ.///


    சத்தியமா எனக்கு புரியல அண்ணா ,,,அவ்வவ்

    ReplyDelete
  48. ஹேமா said...

    கருப்பிக்கு வைரத்திலயும் தங்கத்திலயும் முத்திலயும் போட்டாத்தான் உண்டு.இல்லாட்டி ஒரு கருப்பனும் வரமாட்டான்.எங்களுக்கெல்லாம் அப்பிடியில்ல.சும்மாவே தூக்கிக்கொண்டு போவினம்.நான்தான் வேணாமெண்டு இருக்கிறன்......!/////அம்மாச்சி!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  49. கலை said...

    // மாட்டன் ஐயா இது சிலருக்கு புரியனும் அதுதான் இந்த மங்காத்தா குத்து!ஹீஈஈஈஈஈ.///


    சத்தியமா எனக்கு புரியல அண்ணா ,,,அவ்வவ்!////அப்பாடா,நிம்மதி!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  50. நேசன்...வேணுமெண்டே வெறுப்பேத்தப் பாட்டுப் போட்டிருகிறீங்கள்போல.சகிக்கமுடியேல்ல.ஒரு நல்ல பாட்டுக் கேக்கிற நேரத்தை வீணாக்கிட்டீங்க.போங்கோ நேசன்....!

    28 May 2012 11:57 // அதுக்கு நான் என்ன செய்ய ராகுல் தானே எல்லாம் சொல்லுகிறான் அவன் அங்கே செய்த எல்லாத்தையும் எழுதச் சொல்லும் போது நான் என்ன செய்ய ஏன்னா அரபுலகம் அந்த ராகுலைத்தானே தேடுது இன்னும்!ஹீஈஈஈஈஈஈஈ அவனை மீற என்னால் முடியாது சாமி ஹேமா!

    ReplyDelete
  51. //ஏன் நல்லாத்தானே இருக்கு படம் ஹேமா!//

    நேசன் படம் நல்லாயிருக்கு.அப்பான்ர உருவம்தான் மனசில பிள்ளையாரப்பாவா மாறிட்டார் !

    அப்பா...நீங்க நல்ல அப்பு சாமிதான்.என்னையும் மாத்திடுவீங்கள் போல சாமீஈஈஈஈஈஈஈ !

    ReplyDelete
  52. கருப்பிக்கு வைரத்திலயும் தங்கத்திலயும் முத்திலயும் போட்டாத்தான் உண்டு.இல்லாட்டி ஒரு கருப்பனும் வரமாட்டான்.எங்களுக்கெல்லாம் அப்பிடியில்ல.சும்மாவே தூக்கிக்கொண்டு போவினம்.நான்தான் வேணாமெண்டு இருக்கிறன்......!///


    ஹ ஹ ஹா பாருங்கோ மாமா உங்கட மகள் சொல்லுறதை ..... மீ க்கு இளவரசன் வந்து நிரிய தங்கத்துல வைரத்துள வாங்கிக் கொடுத்து குதிரை மேல ஏற்றி கூட்டிட்டு போவாறக்கம் ....
    காக்கா வந்து வடை தூக்கிட்டு போகுமே அதே மாறி தான் அயித்தான் காக்கா வந்து உங்களை சும்மாவே தூக்கிட்டு போவினம் ....

    ReplyDelete
  53. நேசன்.....நாளைக்கு 2 பாட்டுப் போடவேணும் சொல்லிப்போட்டன்.பாட்டுக்காகவே முதல்ல ஓடி வருவன்.ராகுலிட்ட சொல்லுங்கோ ஒருக்கா.ஏமாத்திப்போட்டீங்கள்.... !

    ReplyDelete
  54. ஹேமா said...

    //ஏன் நல்லாத்தானே இருக்கு படம் ஹேமா!//

    நேசன் படம் நல்லாயிருக்கு.அப்பான்ர உருவம்தான் மனசில பிள்ளையாரப்பாவா மாறிட்டார் !

    அப்பா...நீங்க நல்ல அப்பு சாமிதான்.என்னையும் மாத்திடுவீங்கள் போல சாமீஈஈஈஈஈஈஈ !////புள்ளையார் நல்லவர்!புத்திசாலி!தம்பியார் மயில்ல ஏறி உலகம் சுத்தப் போக,அப்பா,அம்மா தான் உலகம் எண்டு அவையளைச் சுத்தி வந்து மாம்பழத்தை லபக்கின புத்திசாலி,ஹ!ஹ!ஹா!!!!!!!!!!

    ReplyDelete
  55. ஹ ஹ ஹ ஹா தாயி உண்மை ....என்ன உண்மை அண்ணா எனக்கு ஒன்டுமே விளங்களயே .....///



    அண்ணா ஆஆ என்னா அண்ணா அது

    ReplyDelete
  56. சத்தியமா எனக்கு புரியல அண்ணா ,,,அவ்வவ்// ஆஹா இது புரியாது தாயி முதல் மரியாதை சிவாஜி நடிப்பு!ஹீஈஈஈஈஈஈ

    ReplyDelete
  57. ச்ய்க்கில் கேப் கிடைச்சாலும் ப்ளைன் ஒட்டிடுவான்கள் ரீ ரீ அண்ணான் கலா அன்னிய ஒசத்தி பேசுனும் எண்டால் .....// ஹீ அவா நத்தானார் கலை எப்படி விட்டுகொடுக்க முடியும் குலவிளக்கு சினேஹா!ஹீஈஈஈஈஈ

    ReplyDelete
  58. !////புள்ளையார் நல்லவர்!புத்திசாலி!தம்பியார் மயில்ல ஏறி உலகம் சுத்தப் போக,அப்பா,அம்மா தான் உலகம் எண்டு அவையளைச் சுத்தி வந்து மாம்பழத்தை லபக்கின புத்திசாலி,ஹ!ஹ!ஹா!!!!!!!!!!//

    அதுசரி.....உவையெல்லாம் சரியா இருந்தா நாங்கள் ஏன் இப்பிடி இருக்கிறம்......அப்பா தயவு செய்து பதில் வேண்டாம்.விடுங்கோ ஃப்ரீயா !

    ReplyDelete
  59. சரி மீ க்கு டைம் ஆகுது ...மாமா அடிக்கடி எஸ் ஆனவர் .....
    மாமா கிட்ட இன்னைக்கு சரியாவே பேசாத மாரி பீலிங்க்ஸ் ...அண்ணா புரியாத பாசை நிறைய பெசுரங்கள்


    சரி மாமா டாட்டா
    அண்ணா டாட்டா


    அக்கா செல்லமே ரோசப்பூ கன்னத்தில எனது அன்பின் முத்தங்கள் டாட்டா ...

    ReplyDelete
  60. அது சும்மா அண்ணா உங்களைப் பேய்க் காட்டுறார்,கண்டுக்காதீங்க,இளவ(ரி)ரசி!

    ReplyDelete
  61. இது கள்ளாட்டம்!பதிவு படிக்காம,ஆஆஆஆஆஆ எண்டு கத்திறது,வளையல் வாங்கித் தாங்கோ எண்டு கேக்கிறது.நான் செல்ல மகளுக்கு தங்கக் காப்பு வாங்கிப் போடுவன்.கண்ணாடி வளையல் எல்லாம் உடைஞ்சிடும்,ஹ!ஹ!ஹா!!!!!//

    காக்காஆஆஆஆஆஇது இது எப்பிடி....அப்பா....!// யார் படிச்சாலும் படிக்காவிட்டாலும் இதுதான் இந்த தனிமரத்தின் முடிவு ஹேமா முடிவு எடுத்தாச்சு இனி ஆட்டம் தான்!ம்ம்ம் பார்க்கலாம் ஆடி வேட்டியின் நீளத்தை!

    ReplyDelete
  62. ஆஹா இது புரியாது தாயி முதல் மரியாதை சிவாஜி நடிப்பு!ஹீஈஈஈஈஈஈ///



    அய்யோஒ அண்ணா ஆஆ யாரை சொல்லுரிங்க .......எனக்கு தூக்கமே வராது புரியல எண்டால்

    ReplyDelete
  63. ஐயய்யோ மருமகளே!அது ஒரு அஞ்சு நிமிஷம் குட்டீஸ் என்னமோ படிக்கிற விஷயம் பாத்தாங்க!நான் தான் எப்பயும் போல பேசினனே?கோச்சுக்காதீங்க செல்ல மருமகளே!மாமா நாளைக்கி ரொம்ப நேரம் பேசுவேன்.குட் நைட்டுடா செல்லம்!

    ReplyDelete
  64. அண்ணா டாட்டா// அப்படி இல்லை கலை சில விசயம் புரிய காலம் பிடிக்கும் செல்ல இளவரசிக்கு இனிய இரவு வணக்கம் நாளை இரவு சந்திப்போம் !குட் நைட்!

    ReplyDelete
  65. தூக்கிக்கொண்டு போவினம்.நான்தான் வேணாமெண்டு இருக்கிறன்......!

    28 May 2012 12:01 // ஹீ ஹேமா அப்படிச்சொன்ன ஒரு ஆள்தான் உருகின்றா துரதிஸ்ரம் அந்த தொடரை எழுதும் எண்ணம் எனக்கில்லை இப்போது ராகுலோடு எல்லாம் முடிக்க இருக்கின்றேன்! போதும் !ம்ம் ம்ம்ம்ம்

    ReplyDelete
  66. //மாமா கிட்ட இன்னைக்கு சரியாவே பேசாத மாரி பீலிங்க்ஸ் ...அண்ணா புரியாத பாசை நிறைய பெசுரங்கள்
    //

    இவவின்ர பாஷை மட்டும் நல்லா விளங்குதாக்கும்.ஹாஹாஹஹாஹா !

    இவ்வளவு நேரம் பிச்சு பிச்சு மாமாவோட கதைச்சுப்போட்டு...கதையைப் பாருங்கோ......நான் கொஞ்சம் கதைப்பன் இனி காக்கா கொத்தாமல் !

    சரி....காக்கா ஓடிப்போய் கூட்டுக்குள்ள அடையுங்கோ....நாங்கள் இனித்தானே ஜாலியா இன்னொருக்கா கோப்பியும் வச்சுக்குடிச்சுக்கொண்டு கதைக்கப்போறம்.நீஙக் நித்திரை கொள்ளுங்கோ.கனவில சிவ கார்த்திகேயன் வருவார் கலகலப்பா.அன்பு முத்தங்கள் கருப்புக் கன்னத்தில செல்லக்குட்டிக்கு!

    ReplyDelete
  67. தனிமரம் said...

    யார் படிச்சாலும் படிக்காவிட்டாலும் இதுதான் இந்த தனிமரத்தின் முடிவு ஹேமா முடிவு எடுத்தாச்சு இனி ஆட்டம் தான்!ம்ம்ம் பார்க்கலாம் ஆடி வேட்டியின் நீளத்தை!////நேசன்,தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்.அது கலையைக் கலாய்ப்பதற்காகச் சொன்னது.பதிவைப் படிக்காமல் இருப்போமா?.

    ReplyDelete
  68. பத்தினி தெய்யோ---------பத்தினித் தெய்வம்.

    ReplyDelete
  69. யார் படிச்சாலும் படிக்காவிட்டாலும் இதுதான் இந்த தனிமரத்தின் முடிவு ஹேமா முடிவு எடுத்தாச்சு இனி ஆட்டம் தான்!ம்ம்ம் பார்க்கலாம் ஆடி வேட்டியின் நீளத்தை!////நேசன்,தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்.அது கலையைக் கலாய்ப்பதற்காகச் சொன்னது.பதிவைப் படிக்காமல் இருப்போமா?.// இல்லை யோகா ஐயா நான் அறிவேன் உங்களை அந்த்தம்பி கொஞ்சம் வேலியில் நின்று கொண்டு நெல்லுப்புடுங்குறார் அதுதான் விரைவில் மொத்தமாக வீட்டில் வ்ந்து சொல்லுகின்ரேன்! தம்பியில் கொஞ்சம் அதுதான் பேசினேன் நேரம் போதவில்லை!ம்ம்ம்

    28 May 2012 12:24

    ReplyDelete
  70. ரெண்டு பேருக்கும் காலை வேலை!கொஞ்சம் கதைச்சுப் போட்டுப் போய் சாப்பிட்டு நிம்மதியா எல்லாத்தையும் மறந்து கண் உறங்க வேணும் சொல்லீட்டன்!

    ReplyDelete
  71. கோயில் திருவிழாவை நேரில பாக்கிறமாதிரி வர்ணிச்சிருக்கிறீங்கள் நேசன்....அதுக்குப் பிறகு மச்சாளைத் தூக்கிறதும் பொறாமைப்படுறதும்....அப்பிடியே வீடுகளில நடக்கிறாப்போல !

    ReplyDelete
  72. பத்தினி தெய்யோ---------பத்தினித் தெய்வம்.///ஓம் யோகா ஐயா நன்றி நம்மவர் அப்படிச் சொல்லுவார்கள்!

    28 May 2012 12:28

    ReplyDelete
  73. ஓம் அப்பா....இண்டைக்கு நேரத்துக்குப் படுக்கலாம்.களைப்பா இருக்கு.

    நேசன் போய்ட்டு வரட்டோ...அப்பா நாளைக்கும் கதைப்பம்...அழகான இரவு எனக்கும் உங்களுக்குமானதாய் சந்தோஷமாய் விடியும் எல்லாருக்கும் !

    ReplyDelete
  74. கோயில் திருவிழாவை நேரில பாக்கிறமாதிரி வர்ணிச்சிருக்கிறீங்கள் நேசன்....அதுக்குப் பிறகு மச்சாளைத் தூக்கிறதும் பொறாமைப்படுறதும்....அப்பிடியே வீடுகளில நடக்கிறாப்போல !// சில மச்சாள் மார் யார் வேணும் என்று சொல்லமாட்டார்கள் அதுவும் குடும்ப அரசியல் ம்ம்ம் ஆனால் அந்த சுகி ஒரு அப்பாவி விதி ம்ம்ம் அறியாமை செல்லம் !ம்ம் கடவுள் கொடியவன் அவள் விடயத்தில்!ம்ம்ம்

    ReplyDelete
  75. தனிமரம் said...
    இல்லை யோகா ஐயா நான் அறிவேன் உங்களை அந்த்தம்பி கொஞ்சம் வேலியில் நின்று கொண்டு நெல்லுப்புடுங்குறார் அதுதான் விரைவில் மொத்தமாக வீட்டில் வ்ந்து சொல்லுகின்ரேன்! தம்பியில் கொஞ்சம் அதுதான் பேசினேன் நேரம் போதவில்லை!ம்ம்ம் ////விடுங்கள் நேசன்!துட்டனைக் கண்டால் தூர விலகு என்று பெரியோர் சொல்லியிருக்கிறார்கள்.அவரால் ஆகப் போவது என்ன?குரைக்கட்டும்!!!!

    ReplyDelete
  76. நேசன் போய்ட்டு வரட்டோ...அப்பா நாளைக்கும் கதைப்பம்...அழகான இரவு எனக்கும் உங்களுக்குமானதாய் சந்தோஷமாய் விடியும் எல்லாருக்கும் !

    28 May 2012 12:34// நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும் நாளை இரவு சந்திப்போம்!குட் நைட்!

    ReplyDelete
  77. நல்லது மகளே!நாளை சந்திப்போம்!நல்லிரவு!!!!!

    ReplyDelete
  78. குரைக்கட்டும்!!!!// ம்ம் என்ன செய்ய சில நேரம் தொழில்நுட்பம் படிக்கவில்லை என்ன செய்வது வசதி எல்லாருக்கும் வாரது இல்லை!ம்ம் அதுதான் கொஞ்சம் அமைதியாக இந்த வழியில் போறன் !நன்றி ஐயா புரிந்துணர்வுக்கு!

    ReplyDelete
  79. நேசன்,நீங்களும் சாப்பிட்டுப் படுங்கள்.எல்லாம் நன்மைக்கே என்றிருப்போம்.நல்லிரவு!!!தொடர்வோம்,நாளை!

    ReplyDelete
  80. பதிவும், மாங்குயில் பூங்குயிலும் சூப்பர்...

    கலை கேட்டிருந்தா கவிதாயினுக்காக ராமராஜன் பாட்டுப் போடச் சொல்லி:)) நேசன் அந்த ஆசையை நிறைவேத்திட்டீங்கள்...

    ReplyDelete
  81. காலை வணக்கம்,நேசன் !இன்றைய பொழுது நன்றாக அமைய ஆண்டவன் துணை இருப்பார்!

    ReplyDelete
  82. நான் கிறிஸ்தவள் என்பதால் பெரும் பாலும் இந்து ஆலயங்களுக்கு போனது கிடையாது. ஆனால் நம்ம ஊரு நல்லுார் கந்தன் கோவிலுக்கு போயுள்ளேன்....அண்ணா..

    ReplyDelete
  83. மாலை வணக்கம்,நேசன்!

    ReplyDelete
  84. எங்க ஒருத்தரையும்ம் காணேல்ல.சுகம்தானே நேசன்,அப்பா,கருவாச்சி,ரெவரி......கொஞ்சம் அலுப்பா இருந்துது.வேலையால வந்து நித்திரையாகிப்போனன்.

    ஆகா.....பிள்ளையாரப்பாஆஆஆஆஆ நல்லூர்க் கந்தனா மாறிட்டார் போல.அப்பா........என்ன நடக்குது உங்க !

    ReplyDelete