23 September 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -16

அரசியல் படிக்காதவன் இன வெறியூட்ட மாட்டான். அரசியல் மற்றும் சட்டம், மொழி, நிர்வாகம் படித்த பட்டதாரிகள்தான் தங்கள் சுயநலத்துக்கு சமவுடமை என்றும் மதம் என்றும் இனம் என்றும் தூரநோக்கு இல்லாது இன வாக்கு அரசியல் செய்வார்கள். இன்றும் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் பல பிரதிநிதித்துவம் இல்லாமல் போக காரணம் இந்த உணர்ச்சிவசப்படும் அரசியலைத் தூண்டிவிடும் பட்டதாரிகள்தான்.


சாமானிய படிக்காதவன் தன் வழியில் வழிப்போக்கனாக ஓட்டுப் போட்டுவிட்டு சாதனை செய்துகொண்டே போவார்கள்.

மக்கள் தலைவர் காமராஜர் போல இப்படி எல்லாம் மனம் விட்டுப்பேசும் ராகுல் இங்கு இருந்திருந்தால் தேவனுக்கும் அவனுக்கும் நிச்சயம் கைகலப்பு வந்திருக்கும். சுடுவன் என்பவனும் வெட்டுவன் என்பவனும் போர் முனையில் இருக்காமல் தாய்லாந்தில் வந்து வீரம்பேசும் வாய்ச்சொல்லில் வீராட்டிகள். சில புலம்பெயர் விமர்சகர்கள் இனவாதம் வேண்டாம் என்றால் சிங்களவன் வாழ்பிடி என்பது போல!

கண்ணாடி வீட்டில் கல் எறிய வெளிக்கிட்டால் எல்லோருக்கும் படும். எட்டுப் பேருக்கு இடையில் 1956 இல் வந்த தனிச்சிங்களச் சட்டம் போல தமிழ் உணர்வு வந்து போனவர்கள் ஒருபக்கம் என்றால் இன்னும் மிதவாதம் பேசி சிறிமாவின் முந்தானையில் சீரழிந்த சமசாமாயக் கட்சி என்.எம்.பெரேரா போல ஒரு பக்கம். நீங்களும் வேண்டாம், இந்த அரசியலும் வேண்டாம் என்று துறந்து போன சாமானியன் வரிசையில் சிலர் இருப்பர்.

என்னையும் சேர்த்துக்கொண்டு நாமலுக்கு சுடுதண்ணியால் முகத்தைத் துடைத்துவிட்டு வெளியில் வந்த போது தங்கன் கேட்டான், மச்சான் இன்னொரு முகவர் இருக்கின்றார் அங்கு அவரிடம் போவோமா? விரைவாக அனுப்பி வைக்கின்றேன் என்று சொல்லுகின்றார். இந்த குழுவை விட்டுப் போவோமா? நீயும் நானும் ஏண்டா இப்ப தானே குழுவாக வந்தோம்? அதுக்குள் குழுச்சண்டையா? இப்ப இவங்களை விட்டு ஓடினால் பயந்து போய்விட்டோம் என்பார்கள் வெளியில் பார்த்தவர்கள்.

இவங்கள் ஓற்றுமை இவ்வளவுதான் விட்டுக்கொடுத்துப் போகத் தெரியாதவங்கள் என்று நினைப்பாங்க இல்லையோ தங்கன்? ரவி ஆரம்பத்தில் இருந்து இவங்கள் யாருமே பழக்கம் இல்லையே? ஒரே ஊரா ? இல்லைத்தானே விட்டுட்டுபோறது என்று முடிவு எடுத்த பின், இவங்களையும் சுமந்து கொண்டு செல்ல இது நட்புப் பயணம் இல்லை. ரயில் பயணம். பதிவுலகில் ஹிட்ஸ் வெறியன் போல இருக்கக்கூடாது, நான் இப்பவே அவர்கூட போகப்போறன் ரவி.

உன் சிந்தனையில் தெளிவு இருக்கும் என்றால் திரட்டியில் நல்லது எழுதுபவர்கள் போல இவர்களுடன் இரு. பயணம் வந்தவர்களில் ஏதோ உன் கூட கொஞ்சம் சந்தோஷமாக பழகியவன் என்பதால் சொன்னேன். முகவர் வந்து கேட்டால் வெளியில் போனவன் கதி என்னாச்சு என்ன என்று தெரியவில்லை என்று சொல்லு.

அடப்பாவி என்னையும் வம்பில் மாட்டிவிட்டாயே? பதிவுலகில் இனவாதி / மதவாதி அன்னக்காவடி என்பது போல இது நியாயம் இல்லை உண்மையில் தங்கன். சரி பரவாயில்லை நீ போகும் வழிகிடைத்தால் போய்ச் சேரு சந்தோஷம் என்றாவது ஒரு நாள் ஐரோப்பாவில் சந்திப்போம் மச்சான். தங்கனுடன் போய் இருந்தால் பின்நாட்களில் என் பயணம் சிறப்பாக இருந்து இருக்கலாம் என்று சொல்லும் நாள் வந்தது!

23 comments:

  1. அரசியல் படிக்காதவன் இன வெறியூட்ட மாட்டான்...
    //////////////////////////

    இது ரொம்பப் பழசு போல தெரியுது சகோ..இப்பவெல்லாம் அரசியல் படிக்காதவன் தான் இன வெறியூட்டுகிறார்கள்..

    ReplyDelete
  2. பதிவுலகில் ஹிட்ஸ் வெறியன் போல இருக்கக்கூடாது
    /////////////////////

    ஆஹா... இந்தப் பெயர எங்கயோ யாரோ யூஸ்பன்னின மாதிரி கேள்விப் பட்டிருக்கிறேனே.. அவரையா சொல்லுறீங்க..

    ReplyDelete
  3. விட்ட பதிவுகளைப் படித்துவிட்டு வருகிறேன்

    ReplyDelete
  4. அரசியல் படிக்காதவன் இன வெறியூட்ட மாட்டான்...
    //////////////////////////

    இது ரொம்பப் பழசு போல தெரியுது சகோ..இப்பவெல்லாம் அரசியல் படிக்காதவன் தான் இன வெறியூட்டுகிறார்கள்..// வாங்க சிட்டுக்குருவி நலமா பார்த்து நாளாச்சு ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ பேசலாம்!ம்ம்

    ReplyDelete
  5. இரவு வணக்கம்,நேசன்!எங்கே அடிக்க வேண்டும் என்று தெரிந்து அடிக்கிறீர்கள்,ஹ!ஹ!ஹா!!!

    ReplyDelete
  6. அரசியல் படிக்காதவன் இன வெறியூட்ட மாட்டான்...
    //////////////////////////

    இது ரொம்பப் பழசு போல தெரியுது சகோ..இப்பவெல்லாம் அரசியல் படிக்காதவன் தான் இன வெறியூட்டுகிறார்கள்..//ம்ம் இருக்கலாம் கால மாற்றம் போல!ஹீ நான் அறியேன் அரசியல்!

    ReplyDelete
  7. சிட்டுக்குருவி said...
    அரசியல் படிக்காதவன் இன வெறியூட்ட மாட்டான்...////சிட்டுக் குருவி சொல்வதிலும் உண்மை இருக்குமோ?

    ReplyDelete
  8. பதிவுலகில் ஹிட்ஸ் வெறியன் போல இருக்கக்கூடாது
    /////////////////////

    ஆஹா... இந்தப் பெயர எங்கயோ யாரோ யூஸ்பன்னின மாதிரி கேள்விப் பட்டிருக்கிறேனே.. அவரையா சொல்லுறீங்க..

    23 September 2012 10:21//ஹீ ஐயா யார் யூஸ்ப்ண்ணினார்கள் நான் அறியேன்!

    ReplyDelete
  9. ஆனாலும் பழம்பெரும்?!அரசியல் வாதி கு.அ.சேகர......................முன்னாள் பிரதமர் ...........................இருக்கிறார்கள்!

    ReplyDelete
  10. வாங்க யோகா ஐயா நலமா சந்திச்சு நாள் ஆச்சு மாலை வணக்கம் முதலில்!ம்ம்

    ReplyDelete
  11. விட்ட பதிவுகளைப் படித்துவிட்டு வருகிறேன்// ஆறுதலாக படியுங்கோ சகோ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  12. இரவு வணக்கம்,நேசன்!எங்கே அடிக்க வேண்டும் என்று தெரிந்து அடிக்கிறீர்கள்,ஹ!ஹ!ஹா!!!

    23 September 2012 10:46 //ஹீ அடித்தாட வேண்டிய நிலை மைதானத்தில் !ம்ம்

    ReplyDelete
  13. ஆனாலும் பழம்பெரும்?!அரசியல் வாதி கு.அ.சேகர......................முன்னாள் பிரதமர் ...........................இருக்கிறார்கள்!

    23 September 2012 10:49 // ம்ம்

    ReplyDelete
  14. சிட்டுக்குருவி said...
    அரசியல் படிக்காதவன் இன வெறியூட்ட மாட்டான்...////சிட்டுக் குருவி சொல்வதிலும் உண்மை இருக்குமோ?

    23 September 2012 10:47//ம்ம் இருக்கலாம் யோகா ஐயா அவர்தானே இப்ப அரசியல் பதிவு அழகாக எழுதுகின்றார்!ம்ம்

    ReplyDelete
  15. அரசியல் வாதி கு.அ.சேகர...//ம்ம் அபயகுனசேகரவும் தடுமாற்றம் தான்!ம்ம்

    ReplyDelete
  16. Kunathasa Amarasekara. //ஓ சமசமாஜாக்கட்சி ஆள் அப்படித்தானே ?யோகா ஐயா .நான் டியூ குனசேகர என்பதுக்கு பதிலாக அபயகுனசேகரவை எண்ணிவிட்டேன்!நன்றி தகவலுக்கு!

    ReplyDelete
  17. pala visayangal enakkuputhusu...
    neengal solliyathil.....

    thodarkiren....

    ReplyDelete
  18. அரசியலில் பட்த்தவர் படிக்காதவர் அனைவரின் நோக்கமும் ஒன்றே!பதவி,பணம்

    ReplyDelete
  19. //// தங்கனுடன் போய் இருந்தால் பின்நாட்களில் என் பயணம் சிறப்பாக இருந்து இருக்கலாம் என்று சொல்லும் நாள் வந்தது!////

    சில சமயம் ரிஸ்க் எடுப்பதும் நல்லதுக்குத்தான்

    ReplyDelete
  20. K.s.s.Rajh said...சில சமயம் ரிஸ்க் எடுப்பதும் நல்லதுக்குத்தான்!/////நேசனை "ரஸ்க்" சாப்பிடச் சொல்லுறியள்,ஹ!ஹ!ஹா!!!

    ReplyDelete
  21. ////Yoga.S. said...
    K.s.s.Rajh said...சில சமயம் ரிஸ்க் எடுப்பதும் நல்லதுக்குத்தான்!/////நேசனை "ரஸ்க்" சாப்பிடச் சொல்லுறியள்,ஹ!ஹ!ஹா!!////

    ஹா.ஹா.ஹா.ஹா...........

    ReplyDelete
  22. பணம் எல்லாவற்றையும் செய்து விடுகிறது...

    சிறப்பான (உன்னால் முடியும்...) கண்ணொளி பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றி...

    ReplyDelete