28 October 2012

கிறுக்கலும் கீதமும் -2

விரும்பி வந்ததும் விலகிச் சென்றதும் நீயடி.
விருப்பம் கேட்டேன்? விடை சொன்னாய்
விசா இல்லாதவன் விடலைப்பையன்
விடியல் இல்லாதவன் வடிவு இல்லாதவன்.
வாடிப்போகவில்லை வடிவான மனைவி
வந்துவிட்டாள் வாழ்வில்! சொர்க்கம் பாரடி
விலகிப் போனவளே! வாழ்த்துகின்றேன்.
வாழ்வில் நிறைவாக வாழ வேண்டி
வழிப்போக்கன் வாழ்த்துகின்றேன் வாழ்க
வாரிசுகளுடன் வளமாக!


//
தோற்றுப்போக தொலைந்து போகவில்லை
தோல்வி எனக்கு வழிகாட்டும் .
தோல் கொடுக்க ஆயிரம் நட்பு
தோற்றுப்போவேன் என்று விலகிச் சென்றாயா??
தோலில் ஆயிரம் பூமாலை
தோலில் சாய உருகாதே ?
தோழியாக வந்துவிட்டாள் மனைவி!
தொலைத்துவிட்டு உருகி ஆவது எல்லாம்
தொலைதூரப்பயணத்தில் தொலைத்த
தொன்மையான அன்புப் பரிசை!
தொலைக்க முன் யாசிக்காமல் விட்டாயா?
தொடர்ந்து சொல்வேன் தொல்லை இவன்!

:::
விசா- வதிவிட அனுமதி ஐரோப்பாவில்!

21 comments:

  1. அட நம்ம நேசன் அண்ணாவுக்கும் அழகாய் காதல் கவிதா வருது :))))

    ReplyDelete
  2. தோழியாக வந்துவிட்டாள் மனைவி!
    தொலைத்துவிட்டு உருகி ஆவது எல்லாம்
    தொலைதூரப்பயணத்தில் தொலைத்த
    தொன்மையான அன்புப் பரிசை!
    தொலைக்க முன் யாசிக்காமல் விட்டாயா?
    தொடர்ந்து சொல்வேன் தொல்லை இவன்!///

    அனுபவிச்சு எழுதுறீங்களோ.... ஹா ஹா.... நல்லாத்தான் இருக்கு :)))

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. கவிதை எல்லாம் நல்லா இருக்கு நேசன். ஆனால்... ரெண்டாவதில... அது தோ'ள்' இல்லையா! நான்தான் பிழையாக நினைக்கிறேனோ!

    ReplyDelete
  5. கவிதை / அனுபவம் மிகவும் ந்ல்லா இருக்கு. இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறிங்க போல

    ReplyDelete
  6. தோற்றுப்போக தொலைந்து போகவில்லை
    தோல்வி எனக்கு வழிகாட்டும்//

    சத்தியமான உண்மை, தோல்வியே என்றும் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது...!

    ReplyDelete
  7. விசா- வதிவிட அனுமதி ஐரோப்பாவில்!//

    புரியலையே...?

    ReplyDelete
  8. உணர்ச்சிப் பிழம்பான கவிதை
    மனம் தொட்டது\
    நாஞ்சிலார் குறிப்பிட்டதைப் போல எனக்கும்
    அது புரியவில்லை
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. தோற்றுப்போக தொலைந்து போகவில்லை
    தோல்வி எனக்கு வழிகாட்டும் .
    தோல் கொடுக்க ஆயிரம் நட்பு..

    அசத்தலான வரிகள்.

    ReplyDelete
  10. விசா இல்லாதவன் விடலைப்பையன்
    //////////////////////////////////

    அப்போ பாஸ் போர்ட் இல்லாதவன் ?
    ரசித்தேன் தொடருங்கள் சகோ

    ReplyDelete
  11. அட நம்ம நேசன் அண்ணாவுக்கும் அழகாய் காதல் கவிதா வருது :))))//வாங்க துசி முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!க்விதையா? ஏதோ கிறுக்கல்!ம்ம்

    ReplyDelete
  12. தோழியாக வந்துவிட்டாள் மனைவி!
    தொலைத்துவிட்டு உருகி ஆவது எல்லாம்
    தொலைதூரப்பயணத்தில் தொலைத்த
    தொன்மையான அன்புப் பரிசை!
    தொலைக்க முன் யாசிக்காமல் விட்டாயா?
    தொடர்ந்து சொல்வேன் தொல்லை இவன்!///

    அனுபவிச்சு எழுதுறீங்களோ....// ஏன் இந்த கொலவெறி துசி!
    ஹா ஹா.... நல்லாத்தான் இருக்கு :))) நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    28 October 2012 11:30

    ReplyDelete
  13. கவிதை எல்லாம் நல்லா இருக்கு நேசன். ஆனால்... ரெண்டாவதில... அது தோ'ள்' இல்லையா! நான்தான் பிழையாக நினைக்கிறேனோ!

    28 October 2012 15:40 // வாங்க் இமா அக்காள் நீங்கள் சொல்லுவது சரி எழுத்துப்பிழை அது தோள் என்று தான் வரணும்! அடிக்கடி இந்த எழுத்துப்பிழை என்னை கவுக்கின்றது! நன்றி வருகைக்கும் பிழையை சுட்டிக்காட்டியதுக்கும்.

    ReplyDelete
  14. கவிதை / அனுபவம் மிகவும் ந்ல்லா இருக்கு. இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறிங்க போல// ஹீ அது ஒரு கற்பனை மூர்த்தி அண்ணா! நன்றி முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  15. தோற்றுப்போக தொலைந்து போகவில்லை
    தோல்வி எனக்கு வழிகாட்டும்//

    சத்தியமான உண்மை, தோல்வியே என்றும் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது...!

    28 October 2012 17:55 // உண்மைதான் மனோ அண்ணாச்சி !

    ReplyDelete
  16. விசா- வதிவிட அனுமதி ஐரோப்பாவில்!//

    புரியலையே...// புலம்பெயர்நாடுகளில் ஈழத்தவர் வாழ்வதுக்கு அரசு அகதி என்று ஏற்றுக்கொண்டு வழங்கும் குடியுரிமை சான்று அங்கிகாரம் இது பலபெயரில் இருக்கு ! உ!பி தொடரில் விளக்கமாக சொல்லுகின்றேன் அண்ணாச்சி! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  17. உணர்ச்சிப் பிழம்பான கவிதை
    மனம் தொட்டது\
    நாஞ்சிலார் குறிப்பிட்டதைப் போல எனக்கும்
    அது புரியவில்லை
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்// நன்றி ரமணிசார் வருகைக்கும் கருத்துரைக்கும் விளக்கம் தந்துவிட்டேன்!

    ReplyDelete
  18. உண்மை வரிகள்...
    // நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்

    ReplyDelete
  19. தோற்றுப்போக தொலைந்து போகவில்லை
    தோல்வி எனக்கு வழிகாட்டும் .
    தோல் கொடுக்க ஆயிரம் நட்பு..

    அசத்தலான வரிகள்.// நன்றி சசிக்கலா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  20. விசா இல்லாதவன் விடலைப்பையன்
    //////////////////////////////////

    அப்போ பாஸ் போர்ட் இல்லாதவன் ? //நாடுவிட்டுப்போகாதவன்!ஹீ

    ரசித்தேன் தொடருங்கள் சகோ! நன்றி சிட்டு வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete