31 October 2012

அந்த நாள் ஞாபகம் தொடர் -5

அந்த நாள் ஞாபகம் ஊடாக மீண்டும் தனிமரம்:))))))))).
தாயகத்தில் விற்பனைப்பிரதிநிதி வேலை நிமித்தம் இடமாற்றம் ,அல்லது குழுவேலை நிமித்தம் என புதிய புதிய ஊர்களுக்குப் போனால். அங்கு
இருக்கும் திரையரங்குகளில் ஏதாவது ஒரு படம் பார்ப்பது என் வாடிக்கையான நிகழ்வு .

அப்படி வேலை மாற்றம் வந்து போன இடம் தான் கம்பளை.

மலையகம் எனக்கு இன்னொரு தாய்வீடு இந்த மலையகம் எனக்கு அதிகம் நட்புச் சொந்தங்களை நிஜத்திலும் முகம் தெரிந்தவர்கள் பலரையும் பாசப்பிணைப்புக்களாக இன்றுவரை என்னோடு பயணிக்க வைக்கின்றது.


இந்த வலைப்பதிவு உலகில் தனிமரம் இருப்பதுக்கு அடிநாதமே இந்த மலையக சொந்தங்களின் பின்புலம் தான்.

இப்படியான நட்பு வட்டம் ஒரு புறம் என்றால் !

வலையுலகில் தனிமரம் நேசன் அதிகம் நட்பினைக் கடந்து நல்ல ஒரு குடும்ப உறவாக அக்காள்மார்கள் என அன்போடு பழகும் பலரையும் ,தங்கைகள் என பலரையும் ,அண்ணாக்கள் என பலரையும் ,தம்பிகள் என சிலரையும், ஐயா என , நாத்தனார் என உறவு தந்த தொடர் .என இந்த மலையகம் எனக்கும் பல மாற்றங்களைத் தந்து இருக்கின்றது.!


கம்பளையில் இருந்து தான் நான் அதிகம் மலையகத்தின் பல நகரங்களுக்கு விற்பனைப் பிரதிநிதியாக நுவரெலியா வரை போய் வந்து இருக்கின்றேன்.

.நீண்டதூர வாகனப் பயணத்தில் பெரும்
பகுதி நேரம் வாகனத்தில் பல்வேறு மொழிப் பாடல்களுடன் வானொலியோடு பயணிக்கும் நேயர் என்றால் மீண்டும் இருப்பிடம் திரும்பிவிட்டாள் திரையரங்கில் பொழுது கழியும் .!

அதிகமழையும் குளிர்ப்பிரதேசமுமான கம்பளையை ஒரு கோப்பியுடன் அந்தி மாலையில் ரசித்தால் ஊர் மிகவும் ரம்மியமான காட்சிகள் மனதில் பதியும்.

வேலை செய்ததைவிட திரையரங்கில் இருந்த நாட்கள் அதிகம் எனலாம்.)))) ஏதோ தனிமரம் மாதிரி ஒரு அப்பாவி கைப்புள்ளையை எந்த அதிகாரியும் பாடாய்ப்படுத்தவில்லை விற்பனை அளவை அதிகரிக்கணும் என்று இந்த ஊரில்.:)))) !

ஆனால் இனவாத இராணுவச்சோதனையில் தான் நீயும் போராளிகளுக்கு உளவு பார்க்கும் வேலையில் இருக்கின்றாயோ ?என்று குடையும் போது இந்த ஊரில் நிகழும் மண்சரிவைவிட மனச்சரிவு வரும்.!

அருண்டவன் கண்களுக்கு இருண்டது எல்லாம் பேய்தானே?

கம்பளையில் இரு தியேட்டர் ஆனந்தா,சந்தியா,இருக்கின்றது.இரண்டிலும் பல படம் பார்த்து இருக்கின்றேன்.:)))))

அதிலும்!ஆனந்தா வில் பார்த்த இந்த ஹிந்திப் படம் அதிகம் பிடிக்கும் என்னுடன் இருக்கும் சிங்கள நண்பர்களுக்கு ஹிந்திப்படங்கள் மீது அலாதியான விருப்பம் எப்போதும் இருக்கும்.


.அவர்களின் நட்பு என்னையும் அதிகம் ஹிந்திப்படம் பார்க்கும் ஆவலைத்தூண்டிவிட்டது எனலாம். அதுவும் சாருக்கான் படங்கள் மீது அதிக எதிர்பார்ப்புக்களை விரும்பும் பல ரசிகர்களில் நானும் ஒருவன்!

இப்போது அதிகம் படம் பார்க்காவிட்டாலும் பார்த்த படங்களை மீள அசைபோடுவதும் ஒரு சுகம் உண்டு தானே !
இந்தப்படம் மனதில் தங்கிவிட்டது காஜலின் நடிப்பு,அவரின் நேசம், ராணி முகர்ஜின் உருக்கமான காதல் என இந்த முக்கோணக் காதல் கதை பலருக்கு பிடித்திருக்கும் படம் .

இந்தப்பாடல் சிங்களமொழியில் இறுவட்டாக வந்து இருப்பதும் பல இன்னிசை விழாக்களில் பலமேடைகளில் பாடப்படுவதும் சிறப்பு ஒரு புறம் என்றால் !

என் உயிர் நண்பர்களில் பலரில் ஒரு நண்பனின் (ரவியின்) காதலியும் என் அன்புத் தோழியுமான சகோதரமொழி நங்கை சாலிக்கா(பெயர் மாற்றம்) இறுதியாக இந்த ஊரில் தான் ஒன்றாக ஒரு இரவு நாம் இருந்து இந்தப்படம் பார்த்து இருந்தோம் கம்பளையில் !

இங்கு இருந்து அவள் திரும்பிய மூன்றாம் நாள் சாலிக்கா ஒரு குண்டுவெடிப்பில் உயிர் பிரிந்ததும். நான் அவள் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு மலர்வளையம் வைத்ததும் அதன் பின் இன்றுவரை கம்பளை போகாமல் இருப்பதும் நட்பு என்று சொல்வதா??!

ஆனாலும் நண்பி ஞாபகம் மறக்க முடியாது அவள் சிங்களத்தி என்றும் நீ தமிழன் என்றும் உனக்கு வெட்கம் இல்லையா என்று யார் துரோகி பட்டம் கொடுத்தாலும் நான் கவலைப்படமாட்டேன் !!எனக்கு அரசியலைவிட அன்பு முக்கியம்!
தொடரும்!ம்ம்ம்ம்

16 comments:

  1. ஆஹா.. எனக்குத்தான் முதல் ரீ:)

    ReplyDelete
  2. சாலிக்காவை நினைக்க நெஞ்சு கனக்கிறது... என்னதான் இருப்பினும் மனிஷர்தானே...

    ReplyDelete
  3. வேலை செய்த நாட்களை விட படம் பார்த்த நாட்கள்தான் அதிகமோ?:) கொடுத்து வச்சவர் நீங்கள் தனிமரம்.

    ReplyDelete
  4. எத்தனையோ நட்பு வட்டத்தோடுஇ இருந்துவிட்டு, இப்போ தனிமரம் எனப் பெயர் சூட்டி.. இருப்பது கொஞ்சம் கவலையாகவே இருக்கிறது.

    ReplyDelete
  5. வாங்க அதிரா நலமா ?முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!:)))

    ReplyDelete
  6. சாலிக்காவை நினைக்க நெஞ்சு கனக்கிறது... என்னதான் இருப்பினும் மனிஷர்தானே... ::ம்ம் உண்மைதான் அதிரா   ஆனால் அரசியல்!ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  7. வேலை செய்த நாட்களை விட படம் பார்த்த நாட்கள்தான் அதிகமோ?:) கொடுத்து வச்சவர் நீங்கள் தனிமரம். ::ம்ம் அது ஒரு நல்ல மேலதிகாரி என்பதால் தப்பிவிட்டேன்!ம்ம்

    ReplyDelete
  8. எத்தனையோ நட்பு வட்டத்தோடுஇருந்துவிட்டு, இப்போ தனிமரம் எனப் பெயர் சூட்டி.. இருப்பது கொஞ்சம் கவலையாகவே இருக்கிறது. ::தனியாகத்தானே போகப்போறம் இந்த உலகைவிட்டு :))) நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும்.!

    ReplyDelete
  9. கம்பளையில் ஹிந்தி திரைப்படம் எல்லாம் ஓடுமா ?? ஹும்..

    அந்த ச்சாருகாசன் கஜோல் நடித்த திரைப்படம்... வாவ் இப்போ போட்டாலும் கண் வெட்டாமல் பார்ப்பேன்.... சூப்பர் திரைப்படம்

    ReplyDelete
  10. சாலிக்காவின் நினைவு வாரணம் ஆயிரம் சூர்யாவை ஞாபகப்படுத்திவிட்டது :(

    ReplyDelete
  11. நல்ல பாடல்...

    கண்ணொளிக்கு பகிர்வுக்கு நன்றி...
    tm5

    ReplyDelete
  12. சாலிக்கா !!!! :( !  ம்ம்);;;

    ReplyDelete
  13. கம்பளையில் ஹிந்தி திரைப்படம் எல்லாம் ஓடுமா ?? ஹும்..
    //ஹிந்தி தமிழ்,சிங்களம்,ஆங்கிலம் என எல்லாப்பாடமும் ஓடும் நான் பார்த்து இருக்கின்றேன்!

    அந்த ச்சாருகாசன் கஜோல் நடித்த திரைப்படம்... வாவ் இப்போ போட்டாலும் கண் வெட்டாமல் பார்ப்பேன்.... சூப்பர் திரைப்படம் !உண்மைதான் துசி அருமையான படம்.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  14. சாலிக்காவின் நினைவு வாரணம் ஆயிரம் சூர்யாவை ஞாபகப்படுத்திவிட்டது :( 
    //நன்றி சிட்டு வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  15. நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete