22 February 2013

வாங்க குடிப்போம்.!!!!!!



முன்பணிக்காலத்தில் பாரிஸ் வாழ்க்கை இந்த வருடம் அதிக பனிமழையை கொண்டு வந்த நிலையில் தனிமரம் தனிக்குடித்தனம் தொடங்கிய நிலையில் !

தனிமரம் தாங்குமா ,,???????????????ஹீஈஈஈஈஈஈஈஈ:)))


ஐபோனின் வருகை சும்மா இருந்த நானும் .தனிமரம் என்று அறிமுகம் ஆகி அன்பாகவும் ,வம்பாகவும் வலையில் வந்த என் ரயில் பயணம் யார் கண்பட்டதோ வழிப்பறியில் நடந்த இழுபறியில்  கைபேசியை களவு கொடுக்காமல் காப்பாற்றினாலும்,கண்ணில் காயம் வராமல் இருக்க முடியாதநிலை கடந்த மாதம்!

 இந்த நிலையிலும் விடாது வேட்டை :)) என்று முகநூல் என்று என் முகத்தை இன்னும் என்ன தோழா குழுமத்தில் கும்மியில் கலகலத்தது !மூன்றுநாள் ஓய்வில் ஹேமாவின் ஆலோசனைப்பாடல்கள் ஒரு புறம் என்றால் இந்த வாசிப்பு இன்னொரு புறம் ஒரு கண்ணில் தானே வலி மறுகண்ணில் இந்த தொடர் நினைப்பு :)))) !

கண்திருஸ்ட்டி போக்க  கைபேசிக்கு சுத்திப்போட வாங்கிய பொருள்தான் இந்த பூசனிக்காய்:))))


கண்ணில் வலி தூக்கம் இல்லை என்ன செய்வது எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேனே:)))

என்ன செய்வது எப்படி வீட்டுக்காரி வரும் நேரத்தில் டூயட் பாடுவது !


என் மேல் அதிகாரி சொன்னார் மாப்பூ நீ சூப் குடி என்று இதுதாங்க அது:)))

 தேவையான பொருட்கள்
ஒரு பூசனிக்காய்த் துண்டு
ஒரு வெங்காயம்
ஒரு தேக்கரண்டி உப்பு
ஒரு கப் தண்ணீர்
ஒரு கப் தடித்த பால்(creme liquid)
இரண்டு கரண்டி எண்ணெய்(விரும்பிய)
ஒரு சட்டி
ஒரு கரண்டி
ஒரு அடுப்பு
செய்முறை-


முதலில் பூசனியின் வெளிப்புறத்தையும் ,உள்புறத்தின் வழுவழுப்பையும் அகற்றிவிட்டு சிறுசிறு துண்டாக வெட்டவும். ஒரு வெங்காயத்தையும் வெட்டவும் . பின் அடுப்பில் ஒரு சட்டியை வைத்து முதலில் எண்ணெய்யை சூடாக்கவும் .சூடான எண்ணெய் மீது பூசனியையும் வெங்காயத்தையும் கொட்டுங்கள்!சட்டிக்குள் அடுப்பில் அல்ல:)))


அதன் பின் சிறிது நேரத்தில் உப்பினையும் தண்ணீரையும் சேர்த்து சட்டியில் ஊற்றுங்கள் !30 நிமிடங்கள் கொதிக்கவிட்ட பின் அடுப்பில் இருந்து இறக்கவும் அதன் பின் மிக்சியில் அல்லது கிரேண்டரில் அடிக்கவும் அடிக்கும் போது தடித்த பால் சேர்த்த பின் நீங்களும் குடிக்கலாம் பூசனிக்காய் சூப்!




6 comments :

Seeni said...

udamapai paarthukkanga sako....


hemaa avarkalai naan kettathaaka sollunga...

nalla irukkaakalaaa....!?

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... ரசித்தேன்... சுவைத்தேன்...

K.s.s.Rajh said...

சமையல் குறிப்புகளும் எழுதத்தொடங்கியாச்சா கலக்குங்க

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வித்தியாசமா இருக்கு.

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!நல்லா இருக்கிறியளோ?///ஒரு சட்டி
ஒரு கரண்டி
ஒரு அடுப்பு!.///சூப் தயாரிக்க இது போதும்!ஹ!ஹ!ஹா!!!

அன்னபூரணி அதிரா:) said...

பூசணி சூப் சூப்பர். என்னாச்சு நேசன் கண்ணுக்கு? பார்க்கவே அந்தரமாக இருக்கு.