08 February 2013

இதயம் பேசுகின்றது- இனிய நல் வாழ்த்துக்கள்


ஒவ்வொரு சாமானியனின் கடந்தகால நினைவுகள், நிஜங்கள் ,நிம்மதிகள் ,இழந்தவை ,கலந்தவை ,கதறியவை ,காயங்கள், என எல்லாவற்றையும் ஞாபகத்தில் இருந்து அகற்றும் நாள் தான் பிறந்தநாள்! 

இனிச்சாதிக்க வேண்டியவை என்ன ?அதுக்கான சாத்தியமான வழி என்ன ?நிச்சயம் எப்படியும் சாதிக்க வேண்டும் !என்று நெஞ்சிலும், இதயத்திலும் ,எழுதிச் செல்லும் நாள் இந்த பிறந்த நாள் என்றால் மிகையில்லை .

அப்படி நினைக்கும் பலரில்! இன்று என் உடன் பிறவாத, முகம் தெரியாத  தம்பிகள் பலரில் .

தனிமரத்தின் தம்பிகளில்  ஒருவருக்கு இன்று பிந்தநாள் .!


இந்த நன்நாளில் கடல் கடந்து தனிமரம் குடும்பத்துடன் சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் நோய் நொடியின்றி எப்போதும் சந்தோஷத்துடன் வாழ இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அன்புத்தம்பி K.S.S.ராஜ்.!


இந்த மூன்று வருட பதிவுலக வாழ்வில் நான் சேமித்த பல உறவுகளில் இவனை நேரில் சந்திக்கவேண்டும் என்ற ஆசையுண்டு. காலம் கிடைத்தால் நிச்சயம் தவறவிடக்கூடாத ஒரு உறவு நம் தேசத்தில்.என்று நினைப்பு எப்போதும் எனக்குண்டு!

 எழுத்தார்வம் எல்லாருக்கும் வருவது இல்லை அதே போல வலைப்பதிவு ஆசையும் எல்லாருக்கும் வருவது இல்லை என்னைப்போல மொக்கையில் பிரபல்யம் ஆகவேண்டும் என்றும் நாமும் எழுத்துக்கொலைகளுடன் எழுதுகின்றோம் :)))) என்று சொல்லுவதுக்கும் கூகுல் ஆண்டவர் தந்த இலவச அறிமுகம் தான் தனிமரம் வலைப்பதிவு.:)))))))!

எனக்கு ராச் அறிமுகம் ஆனது  மறக்க முடியாத பாடசாலைக்காலம்  தொடரில் தான் .http://www.nanparkal.com/2011/09/8.html
சகபதிவாளர் காட்டானின் அறிமுகம் மூலம் தான்  தம்பியை நான் கண்டது.

 கண்டதும் பிடித்து விட்டது அது என்னவோ குணாப்படப்பாடல் போல என்ன மாஜமோ :)))

  நேரம் கிடைக்கும் போது முதலில் பால்க்கோப்பி கேட்டு ஓடிச்செல்வேன் இவன் தளத்திற்கு .

தனிமரத்தின் பிரசன்னம் பிடிக்காதவர்கள் இந்த ஓட்டத்தை வால் பிடிக்கின்றான் என்றார்கள். அயலில் ஜால்ரா ,மொய்க்கு மொய் என்றார்கள் .சந்தியில் எப்படி தனிமரத்திற்கு உள்குத்து போட்டு வேட்டியை உருவலாம் என்று ஒரு சிலர் விசில் ஊதியும்.

 தனிமரம் தண்டிச் செல்லும் பிடித்தவன் என்றால் தயங்காது என்று மங்காத்தா ஆடியது இவன் தளத்தில்  கடந்த காலங்களில் ,சிலர் தனிமரம் வாந்தி என்றார்கள் இவனிடம் என்பதையும்  அறிவேன்!

 இன்றும் இவனிடமும் அதிகம் நான் கற்கின்றேன் அனுபவத்தில் தொடர் எழுத ,மொக்கை  போட ,ஜாலியாக கலாய்க்க [டாக்குத்தரை))))   ],

தனிமரம்  பொறுமை இல்லாதவன்  எனக்கு வரும் பின்னூட்டங்களில் இருக்கும் செய்தியைக் கூட தேடி எடுக்க முடியாத அவசரக்குடுக்கை .அதை எப்படி எடுக்கலாம் என்று நிரூபன் முதல் கந்தசாமி வரை கைபேசியில் மெயில் போட்டு  விரட்டி எடுப்பவன் என்பதை நன்கு அறிந்தவன்   .

தனிமரமத்திற்கு தொழில்நுட்பத்தில் பரீட்சை  வைத்தால் பெயில் ஆகும் சாமி என்பதை நன்கு அறிந்தவர்களில் ஒருவன் . :))))

என் ஆன்மீகப் பாதையை முதலில் அறிந்தவன் என்பதாலும் எனக்கு இவன் இயல்பு அதிகம் பிடிக்கும் .

ஒரே சிந்தனையில் நட்புக்கள் கிடைப்பது அருமை .அதுவும் நம் இயல்புகளை ஏற்றுக்கொண்டு நட்பாகுவது மிகவும் கடினம் அந்த வகையில் தம்பி ராச் என் இயல்பை புரிந்தவன் 

.எனக்குப் பிடித்த அவன் பதிவுகளில் வருவேன் .பிடிக்காத விடயத்தில் (கிரீக்கட்)வருவதில்லை நம்ம ஏரியா இல்லை அது:))))!

 இந்த பிறந்த நல் நாளில் அவன் இன்னும் பதிவுலகு தாண்டி சந்தோஷம் ,சூபீட்சத்துடன் ,சகோதரத்துவத்தும் பேணி என்றும் வெற்றிவாகை சூட வேண்டி ஒரு அண்ணனாக பிரார்த்திக்கின்றேன்!

 எப்போதும் தம்பிகளின் சந்தோஷம் தானே ??அண்ணாக்களின்  எதிர் பார்ப்பு.


இதுவரை என் தொடர்களுக்கு முதல் அறிமுகம் இவனிடம் இருந்து வரும்!


(நட்பில் அன்றி விலைகொடுத்து விளம்பரம் செய்தது இல்லை சினிமா போல)

இரண்டு தொடருக்கு விருந்து தந்து இருக்கின்றான்  .ஒன்று வலையில் இருக்கு அடுத்தது இனித்தான் பதிவு செய்ய வேண்டும் .

இப்ப எல்லாம் தனிமரம் தோப்பு ஆகியதில் கொஞ்சம் உலாத்தல்))))))

இதுவரை இவன் அன்புக்கு தனிமரம் கைமாறு  ஒன்றும் செய்தது இல்லை.  முதல் முதலாக சகபதிவாளராக இவனின் அடுத்த தொடருக்கு முன்னோட்டம் இந்தக் காட்சிப்படம் விரைவில் விஸ்வரூபம் காணும் என்ற நம்பிக்கையில் முன்கூட்டிய நல் வாழ்த்துக்கள்.


கடல் கடந்து ஒரு  உறவாக 
என்றும் நட்புடன் 
வாழ்த்தும் 
தனிமரம்! 

18 comments:

  1. ஆவ்வ்வ்வ் மீத 1ஸ்ட்டூஊஊஊஊ.. எனக்குத்தான் கேக்க்க் சொல்லிட்டேன்ன்:)

    ReplyDelete
  2. ராஜ் க்கு இன்று பிறந்தநாளோ? பப்ளிக்கில படம் போட்டு விட்டீங்களே நேசன்:).. மிக்க நன்றி உங்கள் மூலமாக ராஜ் ஐப் பார்க்க கிடைத்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஜ்...

    நேசன் கீழே ஒரு பொம்பிளைப்பிள்ளையின்:) படம் போட்டிருக்கிறீங்க:), அவவுக்கும் ராஜ் க்கும் ஏதும் உறவோ?:)

    ReplyDelete
  4. மிக்க நன்றி அண்ணா
    உங்கள் அன்புக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.
    இந்த பதிவில் ஒரு சின்ன தவறு ஏற்பட்டுவிட்டது இதில் நீங்கள் பகிர்ந்திருக்கும் போட்டோ என்னுடையது இல்லை அது என் நண்பன் ஒருவனுடையது என் போட்டோ உங்கள் பேஸ்புக்கிற்கு அனுப்பியுள்ளேன் மாற்றிவிடுங்கள் நன்றி

    ReplyDelete
  5. ////
    athira said...
    ராஜ் க்கு இன்று பிறந்தநாளோ? பப்ளிக்கில படம் போட்டு விட்டீங்களே நேசன்:).. மிக்க நன்றி உங்கள் மூலமாக ராஜ் ஐப் பார்க்க கிடைத்ததில் மகிழ்ச்சி.//// அந்தப்போட்டோவில் இருப்பது நான் இல்லை அக்கா நேசன்னா மாறி போட்டுவிட்டார் என் படம் அனுப்பியுள்ளேன் மாற்றிவிடுவார் மாற்றிய பின் என்னை பார்த்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  6. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மச்சான் சார்! இந்த 24 வது வயதில் “நல்லது” நடக்க வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  7. எனக்கு்ம் அவனை ரொம்பப் பிடிக்கும் நேசன். தம்பி K(I)SS ராஜ் என்றும் மகிழ்வோடு வாழ்வில் எதிலும் வெற்றியே காண இதயம் நிறைந்து என் இனிய பிறந்ததின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  8. தம்பிக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. ராஜ்! உங்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    நேசன் இதனை எம்முடன் பகிர்ந்து கொண்ட உங்களும் மிக்க நன்றி!

    ReplyDelete
  10. வாங்க அதிரா நலமா ,? முதல் பால்க்கோப்பி குடியுங்கோ!

    ReplyDelete
  11. ராஜ் க்கு இன்று பிறந்தநாளோ? பப்ளிக்கில படம் போட்டு விட்டீங்களே நேசன்:).. மிக்க நன்றி உங்கள் மூலமாக ராஜ் ஐப் பார்க்க கிடைத்ததில் மகிழ்ச்சி.

    8 February 2013 14:12 //ஆம் இன்று பிற்ந்தநாள் ராச்சுக்கு.

    ReplyDelete
  12. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஜ்...

    நேசன் கீழே ஒரு பொம்பிளைப்பிள்ளையின்:) படம் போட்டிருக்கிறீங்க:), அவவுக்கும் ராஜ் க்கும் ஏதும் உறவோ?:)/ஹீஹீ ஒரு கன்வுக்கன்னி போல ஹீ!! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் அதிரா!

    ReplyDelete
  13. மிக்க நன்றி அண்ணா
    உங்கள் அன்புக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.
    இந்த பதிவில் ஒரு சின்ன தவறு ஏற்பட்டுவிட்டது இதில் நீங்கள் பகிர்ந்திருக்கும் போட்டோ என்னுடையது இல்லை அது என் நண்பன் ஒருவனுடையது என் போட்டோ உங்கள் பேஸ்புக்கிற்கு அனுப்பியுள்ளேன் மாற்றிவிடுங்கள் நன்றி

    8 February 2013 15:04//நன்றி தவறைச்சுட்டிக்காட்டியதுக்கு ராச் திருத்திவிட்டேன்!

    ReplyDelete
  14. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மச்சான் சார்! இந்த 24 வது வயதில் “நல்லது” நடக்க வாழ்த்துக்கள் :)

    8 February 2013 15:44 //நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும் மணிசார்!

    ReplyDelete
  15. எனக்கு்ம் அவனை ரொம்பப் பிடிக்கும் நேசன். தம்பி K(I)SS ராஜ் என்றும் மகிழ்வோடு வாழ்வில் எதிலும் வெற்றியே காண இதயம் நிறைந்து என் இனிய பிறந்ததின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    8 February 2013 16:53 //நன்றி கணேஸ் அண்ணா வருகைக்கும் வாழ்த்துக்கும்!

    ReplyDelete
  16. தம்பிக்கு வாழ்த்துக்கள்...

    8 February 2013 19:18 //நன்றி தனபாலன் சார் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  17. ராஜ்! உங்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    நேசன் இதனை எம்முடன் பகிர்ந்து கொண்ட உங்களும் மிக்க நன்றி!

    9 February 2013 07:08 //நன்றி இளமதி வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  18. வணக்கம்,நேசன்!உங்கள் தளமூடாக ராஜூக்கு இனிய காலம் கடந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!///பெப்ருவரி எட்டா?அதானே பார்த்தேன்,என்னடா(என்னோடு) 'ஒத்துப்' போகுதே என்று!ஹ!ஹ!ஹா!!!!

    ReplyDelete