09 March 2013

விழியில் வலி தந்தவனே -10


 பிடித்தவர்களைக்கண்டால் மனம் பித்துப்பிடித்து பேதலிக்கும் .ஆர்ப்பரிக்கும் இன்பத்தின் வெளிப்பாடு ஆனந்தக்கண்ணீர் விடும்.

 அதுவும் பெண்கள் அதிகம் அழுவதில் இன்பம் காணுபவர்கள் நீண்டநாள் காணாத மகன் நேரில் வந்தால் அழுது ஆனந்தப்படும் அன்புத்தாய் உள்ளம் .அதுபோல ரகுவை கண்டது சுகி அழுதாள். 

அன்பைத்தேடும் இதயத்தால் அழுது புலம்பத்தான் முடியும்.

 அதிகாரத்தினால் ஆசைக்காதலை அடைய முடியாது.அதுபோலவே அந்த பெண்ணால் வேறு என்ன செய்யமுடியும்.?

 எல்லாம் இந்த காதல் செய்யும் மாயம் விடாத தூவானம் போல விழியில் வலி!


 ஏன் அழுகிறீங்க சுகி.? என்ன ஆச்சு ?

பார்ரா நாங்க காய்ச்சல் என்று சொன்னம் தானே ! என்ன வானொலி மீள் ஒலிப்பரப்புச் சேவை போல அவள் வேற சொல்லணுமாக்கும் என்று  தோழிகள் கிண்டல் செய்தனர்.

இந்த பூமியில் தீராத இன்னொரு யுத்தம் இந்த மலேரியாக் காய்ச்சல்.

 இங்கு வந்த மூத்த குடியினரின் பலரின் மூடிய கதைகள் கேட்டால் மலேரியாவில் மாண்டு போனவர்கள் வரலாறு சொல்லும் .

இன்னும் நியாயமான முறையில் பதிவு செய்யவில்லை ஈழத்து இலக்கியம் என்பது வேதனையே!!! 

இனவாதிகளின் இடம்பிடிக்கும் செயலில் விரடிவிட்டப்படவர்கள் ஒரு புறம் என்றால் ,

இருக்கும் இடம் விவசாயத்திற்கு உகந்த சூழ்நிலை இல்லாத இடம் என்பதால் !விவசாயம் செய்ய புறப்பட்டு வன்னியில் குடியேற வந்தவர்கள் வரலாற்றை படம் பிடிக்கும் "வெளிக்கிடு விசுவமடுவுக்கு "நாடகம் விளம்பி நிற்கும்.


 இன்றும் இந்த நாடகம் வாழம் கலையாக வானொலி நிலையங்களில்!

 அதிலும் வந்து போகும் வசனம் "பிழைக்க வந்தால் பிணி போல மலேரியாக் காய்ச்சல் பரியாரியிடம் போக பையில் பணம் இல்லை வெளியில் இருக்கும் வேப்ப மரத்தில் வேப்பம் பட்டை வெட்டிஅவித்துக்குடித்தும் இன்னும் சுகம் வரவில்லை. இந்தக்கதை எல்லாம் ஊரில் இருக்கும் கொப்பருக்கு எழுதிவிடு சீமாட்டி என்று முன்னாள் தமிழ்வாத்தி படிப்பித்தார். 


முதல் நிலையில் படித்த வகுப்பினர்களுக்கு வெளிக்கிடு விசுவமடு நாடகத்தின் சிறப்பு பற்றி .இது எல்லாம் அடுத்த வகுப்பில் இருந்து கேட்டு ரசித்தவன் ரகு .


அதே காய்ச்சல் தான் இவழுக்குமோ என்று கேட்க நினைத்தாலும் ! இரண்டு மூன்று நாளா ஒரே காச்சல் ரகு உங்களை பத்தி நினைச்சு நினைச்சுதான் எனக்கு காச்சல் .

ஏன் ரகு நான் தொல்லை பண்ணுவதாக சொன்னீங்க? சரியான கவலையா இருந்திச்சு ரகு !. என்று சுகி சொல்லவும் ரகுவின் உதடுகள் பேச வார்த்தை இன்றி  சிலை செதுக்கும் சிற்பியைப்போல சிறிது நேரம் அவளை பார்த்துக்கொண்டு நின்றான்.

 பிறகு போயிட்டு வாரன் என்று சொல்லிவிட்டு சென்று விட்டான். அவன் வாங்கிவந்த நெஸ்டமோல்ட் டின் மட்டும் சுகியுடன் இருந்தது.அவளின் கட்டில் அருகில் இருந்தது அவன் மனம் போல! 


இரண்டு நாள் கழித்து மறுபடியும் பாடசாலைக்கு வந்தாள் சுகி. 

ஈரமான ரோஜாவே மோகினி போல இம்முறை ரகுவாக போய் அவளிடம் கதைத்தான்.அது அவளுக்குநீண்டகாலத்தின் பின் சிறிமா மகள் சந்திரிக்கா மூலம் வெற்றி பெற்ற சுதந்திரக்கட்சியின் ஆட்சி போல அவள் முகத்தில் அந்த பழைய பிரகாசத்தை கண்டான்!

 அதன் பிறகு சுகியை கண்டால் ஜெயலலிதாவை தேடிச்செல்லும் தேசிய திராவிடமுன்னேற்றக்கழக சட்டமன்ற உறுப்பினர் போல ரகுவாக போய் கதைப்பான்.

 அவளும் சந்தோசமாக அவனிடம் உரிமையுடன் கதைப்பாள்,சண்டை போடுவாள் அவள் நினைப்பில் அவன் தன் கலாபக் காதலன். அவன் நினைப்பில் அவள் மேல்" மோகமுள் "நாவல் நாயகி போல ஒரு பரிதாபம்.ஆனால் அது காதலாக மாறும் என்று சுகி காத்திருந்தாள்! 


"என்னிடம் வருவாய் என் யாசகனே ஏங்கித்தவிக்கின்றேன் ஏகாந்தப்பொழுதில் 
 என்னை அறிவாயா ? 
எண்ணும் எழுதும் கவிதைகளில் என்றும் ஏற்றும்!
 என் முதல் பாடகனே !
என் தோழில் சாய்ந்து கொள் என்னையும் சாய்த்துக்கொள்! உன் பொன்வசந்தம்  நான் என்று! எப்போதும் என் எண்ணம் ஏங்கும் .என்று நாம் சேர்வோம் !
எழுதிச் செல்லும் விதியின் வழியில்!
!!!!!!

// பரியாரி-ஆயுள்வேத வைத்தியர்
கொப்பர்-தந்தை யாழ் வட்டாரச்சொல்!
வாத்தி-ஆசிரியர்

16 comments:

  1. ஆஹா இம்முறை மட்டின் பிர்ராஆஆஆணி எனக்கே..

    காதலனை நினைச்சதால காதலிக்கு காச்சல் வந்ததாமோ..?:).. இருக்கும் இருக்கும்...

    தொடருங்கோ ஆவலாய்ப் படிக்கிறேன்ன்..

    ReplyDelete
  2. எப்படித்தான் தொடர்ந்தும் தொடர்கதைகள் எழுதுகின்றீர்கள் !...
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சிறப்பாகத் தொடரட்டும் சகோ .

    ReplyDelete

  3. வணக்கம்

    விழியில் வலியை விளைத்துள்ளீா்! நல்ல
    வழியில் தமிழை வகுத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  4. /// ஜெயலலிதாவை தேடிச்செல்லும் தேசிய திராவிடமுன்னேற்றக்கழக சட்டமன்ற உறுப்பினர் போல ///

    ஹா...ஹா...

    நல்ல கண்ணொளி பாடல்...

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரர் நேசன்...
    சிறு வயதில் நாடகம் கேட்க...
    வானொலி முன்னர்...
    தவமாய் தவம் கிடப்பேன்...
    இப்போது அந்தப் பழக்கமே இல்லை...
    அப்படி உட்கார்ந்து காதுகொடுத்து
    கேட்பது..ஒரு தனி சுகம்...

    ReplyDelete
  6. அழகிய இனிமையான பாடல் பகிர்வு...

    ReplyDelete
  7. மலேரியாவின் ஆபத்தையும் காதலின் தாகத்தையும் ஒருங்கே சொல்லிச் செல்கிறது தொடர். கலக்குங்கள்

    ReplyDelete
  8. ஆஹா இம்முறை மட்டின் பிர்ராஆஆஆணி எனக்கே..//வாங்கோ அதிரா ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ!

    காதலனை நினைச்சதால காதலிக்கு காச்சல் வந்ததாமோ..?:).. இருக்கும் இருக்கும்...

    தொடருங்கோ ஆவலாய்ப் படிக்கிறேன்ன்..!நன்றி கருத்துக்கு!


    9 March 2013 15:02

    ReplyDelete
  9. அழகிய பாடல்..//ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் அதிரா!

    ReplyDelete
  10. எப்படித்தான் தொடர்ந்தும் தொடர்கதைகள் எழுதுகின்றீர்கள் !...
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சிறப்பாகத் தொடரட்டும் சகோ .

    9 March 2013 15:41 //நன்றி அம்பாளடியாள் பலரின் ஆதரவு இன்னும் எழுத வைக்கின்றது!நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்!

    ReplyDelete
  11. வணக்கம்

    விழியில் வலியை விளைத்துள்ளீா்! நல்ல
    வழியில் தமிழை வகுத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    9 March 2013 16:18 //நன்றி கவியாழி ஐயா! வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  12. றுப்பினர் போல ///

    ஹா...ஹா...

    நல்ல கண்ணொளி பாடல்...

    9 March 2013 17:29 //நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  13. வணக்கம் சகோதரர் நேசன்...
    சிறு வயதில் நாடகம் கேட்க...
    வானொலி முன்னர்...
    தவமாய் தவம் கிடப்பேன்...
    இப்போது அந்தப் பழக்கமே இல்லை...
    அப்படி உட்கார்ந்து காதுகொடுத்து
    கேட்பது..ஒரு தனி சுகம்...

    9 March 2013 19:40 //வணக்கம் மகி அண்ணா! உண்மைதான் வானொலி நாடக காலம் ஒரு வசந்த காலம்!ம்ம்ம்

    ReplyDelete
  14. அழகிய இனிமையான பாடல் பகிர்வு...//ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!மகி அண்ணா!

    ReplyDelete
  15. மலேரியாவின் ஆபத்தையும் காதலின் தாகத்தையும் ஒருங்கே சொல்லிச் செல்கிறது தொடர். கலக்குங்கள்//நன்றி,செங்கோவி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete