09 July 2013

குறும்பா போல ஒரு பூ! காதில்!


எழுத நினைக்கின்றேன்
ஏராளம் கவிதை
எனக்குப்பிடித்த பூவே உனக்காக
என்னுயிர் நீதானே !
என்றும் அன்புடன் என்றெல்லாம்
ஏனோ இடையில் ஒரு எதிர்க்காற்று
என்னையும் தூற்றுது என்னைவிட
எந்த தேசத்தில் எப்படிப்பிறந்தாள்!
என்னை மீறி உன்னை மயக்க அப்படி
என்ன கண்டாய் ??அவள் சிறுக்கியா??
என்னிடம் சொல்லு என் ஆசை மச்சானே!


எந்தன் காதலன் உயிர் வாங்க எங்கே பிறந்தாள்
என்னிடம் சொல்லுங்கோ ?,என்னவனே!
எப்படி உரைப்பேன் என் காதல் எங்கேயும்
எப்போதும் என்றா?? என்னை நேசிக்கும்
என்னவள் என்ற எதிர்பார்ப்பில்
எப்படி எறிவேன் தீச்சுவாலை போல
எதிரி என்று போட்ட இனவாத எறிகணையா ??


என் நினைப்பு அழித்துவிடு என்று?
எனக்கே என்னைப்பிடிக்கவில்லை
என்று மட்டும் என்னாள் பாட
என்நிலமை என்ன ஆட்டோக்கிராபா??
எனக்கும் உன்னைப்பிடிக்கும்
என்றாலும் என் நிலை
ஏதிலியன்றோ என்னருமைக்காதலியே
என்னபாட்டுக் கேட்க ?
எனக்கும் தெரியாதே??,


எப்படி இருக்கின்றாய் ,என்னை
ஏனோ பிடிக்காமல் போய் என்னை
என்றும் நலம் விசாரிக்கும் என் ரயில்
ஏறும் என் முன்னால் காதலியே!
என்றும் நலமுடன் எல்லா சுகமும்
என்றும் பெற்று எப்போதும் வாழ
என் அன்பு கீதம்
என்றும் இசைக்கும்!


ஏதிலி இவன் எல்லாம் பெற்றுவிட்டான்
ஏதிலி தேசத்தில் !
என்றாலும்
என் முன்னால் காதலியே!
ஏப்படி இருக்கின்றாய் என்னை
என்றும் தூற்றி !என்றும் படையப்பா
என்ற நாயகியோ!!!
என்றும் நான் அறியேன்,!




16 comments:

  1. ada...

    konjam ezhuthu pizhaiyai kavanikkavum...

    ReplyDelete
  2. தூக்க கலக்கத்தில் எழுதின கவிதையா ? காதலி கனவில் வந்தது போல தெரிகிறது கவிதையில்...!

    ReplyDelete
  3. கவித... கவித...! சின்னச் சின்ன எழுத்துப் பிழைகள் என்கிற நெருடல்களை விட்டுவிட்டால் ரசித்துப் படிக்க முடிகிறது நேசன்! பாராட்டுகளும் வாழ்த்துகளும்! தொடர்ந்து கலக்குங்க!

    ReplyDelete
  4. கலக்கல் கவிதை...

    ReplyDelete
  5. காலை வணக்கம்,நேசன்!நலமா?///கீறல் வீழ்ந்த நெஞ்சிலிருந்து சொட்டும் குருதி!§§§§§§ 'ஐ' போனில் தட்டச்சுவதால் லகர/ளகர ங்கள் சீராக எழுத முடிவதில்லை,நண்பர்களே!

    ReplyDelete
  6. உள்ளத்தில் உதித்த வார்த்தைகள் கவிதையானது போல அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. ada...

    konjam ezhuthu pizhaiyai kavanikkavum...

    9 July 2013 13:37 // வாங்க சீனி முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!ம்ம் எழுத்துப்பிழைக்கு மன்னிச்சுடுங்க! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  8. தூக்க கலக்கத்தில் எழுதின கவிதையா ? காதலி கனவில் வந்தது போல தெரிகிறது கவிதையில்...!// ஆஹா அப்படி எல்லாம் இல்லை மனோ அண்ணாச்சி சும்மா ஜாலிக்குத்தான்!ஹீ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  9. கவித... கவித...! சின்னச் சின்ன எழுத்துப் பிழைகள் என்கிற நெருடல்களை விட்டுவிட்டால் ரசித்துப் படிக்க முடிகிறது நேசன்! பாராட்டுகளும் வாழ்த்துகளும்! தொடர்ந்து கலக்குங்க!

    9 July 2013 18:17 //நன்றி கணேஸ் அண்ணாச்சி வருகைக்கும் கருத்துக்கும் அன்புக்கும் பாராட்டுக்கும் ! எழுத்துப்பிழை என்னுடன் மோதுகின்றது!ம்ம் என்ன செய்ய!

    ReplyDelete
  10. கலக்கல் கவிதை...//நன்றி சங்கவி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  11. காலை வணக்கம்,நேசன்!நலமா?///கீறல் வீழ்ந்த நெஞ்சிலிருந்து சொட்டும் குருதி!§§§§§§ 'ஐ' போனில் தட்டச்சுவதால் லகர/ளகர ங்கள் சீராக எழுத முடிவதில்லை,நண்பர்களே!

    9 July 2013 22:52 //மாலை வணக்கம் யோகா ஐயா தாங்கள் நலம் தானே! நன்றி ஐயா ஐபோனின் புரிதலுக்கு!ம்ம் முடிந்தளவு தவிர்க்க முயல்கின்றேன்! முடியல!ம்ம்.

    ReplyDelete
  12. உள்ளத்தில் உதித்த வார்த்தைகள் கவிதையானது போல அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!

    10 July 2013 02:23 //நன்றி சுரேஸ் வருகைக்கும் கருத்துரைக்கும்

    ReplyDelete
  13. அழகான படைப்பு...//நன்றி இரவின் புன்னகை வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  14. கவிதையில் காதல் பூக்கிறேதே...!

    ReplyDelete
  15. கவிதையில் காதல் பூக்கிறேதே...!//நன்றி குமார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete