18 August 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-23


அவசர உலகம் இந்த தலைநகரவாழ்க்கை .அதில் அந்திமாலையின் அழகை ஆழ்ந்து ரசிக்க அனுதினமும் எல்லோராலும் முடியாது .
அவசரமாக இல்லம் செல்லவேண்டிய குடும்பத்தவர்கள் ;அடுத்த வகுப்புக்கு வெவ்வெறு பகுதியில் கல்விகற்கவேண்டிய பட்டதாரிக்கனவுகள் , இந்தவாரம் போய்ச்சேரலாம் என்ற வெளிநாட்டுக்கனவின் தவிப்பில் வாலிபத்தையும், வாழ்வையும் தொலைக்கும் பலர் .

இந்த தலைநகரத்தில் இருந்து தண்ணீராக ஓடும் பணத்தைக்க்காபாற்ற அடுத்த பஸ் பிடித்து தன் ஊர் போகத்துடிக்கும் கிராமத்தவர்களின் பட்டின வருகை என பல விடயத்தை பெட்டா பஸ்நிலையத்திலும் ;ரயில் நிலையத்திலும் மாலையில் கண்டு ரசிக்கலாம்  .

அப்படித்தான் இரவு பண்டாரவளைப் பயணத்திற்க்கான பஸ் முன்பதிவுக்கு சேகர் பெட்டா பஸ்நிலையத்தில்  பாபுவுடன் காத்திருந்தான் தேர்தலில் ஓட்டுப்போடும் வாக்காளர் போல வரிசைக்கிரமத்தில். முன்பதிவு செய்யவிட்டாளும் கொஞ்சம் காசு அதிகம் கொடுத்தாள் சீட் கிடைக்கும் தேர்தலில் அதிகம் கொடுப்போருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைப்பது போலத்தான்

!எப்போதும் ஞாயிறு இரவுப்பயணம் மக்கள் அதிகம் வெவ்வேறு ஊருக்கு பயணித்துக்கொண்டே இருப்பார்கள் .அதுவும் இன்ரசிற்றியின் வருகையால் நீண்டதூர போக்குவரத்தை இலகுபடுத்திவிட்டது.

சரிடா சேகர்  நீ தனியாக போவாய் பண்டாரவளை .உனக்கு மலையகம்  ஒன்றும் புதுசு கண்ணா புதுசு போல இல்லையே ?
முகநூல் குழுமத்தைவிட்டோடும் முகநூல்பாவனையாளர் போலதான் நானும் விடைபெறப்போறன் !

நீ செய்த உதவி எப்போதும் மறக்கமாட்டன் எங்க என் முதல்காதல் உருகும் காதல் போல இல்லை .

என்றும் நேசிக்கும் உயிர் இருக்கும் வரை. நீ செய்த உதவி மறக்கமாட்டோம்  .

இல்லை மச்சான் பாபு  நல்ல இதயங்கள் இரண்டு இணைவது முன்னம் எழுதிய தீர்ப்புக்கள் போல அதில் ஒரு உறவுப்பாலம் இட நான் வந்தேன் அவ்வளவும் தான் .

இனி உன் கடமையிலும், காதலிலும் சரியான இலக்கினை  நோக்கிப் பயணிக்க வேண்டியது உங்களின் பொறுப்பு .

சரி மச்சான் நான் கிளம்புகின்றேன்போய் வாங்க அண்ணா  இந்த ஊர் உங்களுக்கு இன்னொரு மாற்றம் தரும்.


 போய் வாங்க அண்ணா என்று மிரூனா அன்று அனுப்பிய பயணம் என்றும் என் வாழ்வை எதிர்காலத்தில் மாற்றும் என்று நான் அறியாமல் பண்டராவளை நோக்கிப்போன 1999 ஆண்டின் பிற்பகுதி பல கணனி வல்லுனர்கள் y2k பற்றி  கணனி பிரச்சனைக்கு தீர்வு தேடிக்கொண்டு இருந்தார்கள் .

சாஸ்த்திரம் சொல்வது போல ஆரூடங்கள் அதிகம் வார நாளிதழ்களில் கணனிக்கே இடத்தை ஒதுக்கினார்கள். இராணுவ முன்னேற்றம் எதுவும் மந்தகதியில் மாவீரர்களின் நாட்கள் நெருங்குவதால் எங்கே இன்னொரு களம் திறக்கப்படுமோ ?என்ற அச்சத்தில் இருக்க இன்றசிற்றியில் இரவுப்பயணத்தைத் பண்டாரவளை நோக்கி பயணித்தான்  சேகர் ..


தொடரும்.....

10 comments:

  1. தொடர்ந்து நானும் பயணிக்கிறேன்

    ReplyDelete
  2. இடையில இருந்து வாசிப்பதால் சரியாக புரியவில்லை ...
    ஆரம்பத்தை தேடி செல்கிறேன்

    ReplyDelete
  3. நானும் வருகிறேன்,பண்டாரவளைக்கு!

    ReplyDelete
  4. அழகாய்த் தொடர்கிறது ..பயணம்... தொடர்.

    ReplyDelete
  5. தொடர்ந்து நானும் பயணிக்கிறேன்

    18 August 2013 17:19 Delete//வாங்க கரந்தை ஐயா ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  6. இடையில இருந்து வாசிப்பதால் சரியாக புரியவில்லை ...
    ஆரம்பத்தை தேடி செல்கிறேன்

    18 August 2013 17:50 Delete//ஹீ ம்ம் அப்படியா ஆத்மா ஆறுதலாக் வாசியுங்கோ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  7. இனி தொடர்கிறேன்...//நன்றி தனபாலன் சார் நீங்கள் நலமாகி மீண்டு வந்ததே போதும்!ம்ம் நன்றி சார்.

    ReplyDelete
  8. நானும் வருகிறேன்,பண்டாரவளைக்கு!//நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  9. அழகாய்த் தொடர்கிறது ..பயணம்... தொடர்.

    19 August 2013 02:58 Delete//நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete