02 June 2014

நீயே கரை சேர்க்கின்றாய்!!

இசைத்தேவனுக்கு இன்று
இன்னும் ஒரு ஆயுள்கூடும்
இன்நாளில் இவர் பெயரில்
இடும் பதிவுகளும் பாடல்களும்
http://dirononline.blogspot.fr/2014/06/blog-post_2.html
இன்னும் நீளும் இந்த அகிலம்
இருக்கும் வரை!

இசைக்குத்தான் எத்தனை
இதயராகங்கள் இணைய வானொலிகளில்
இன்றும் இடைவிடாது இவரின்
இசையில் பொக்கிஷம் பலபாடல்!



இன்னும் நீளும் நேயர் விருப்பம் என்று
இசைப்பேழையுடன்
இனிய குரல்கள் இமைக்காத இமைகள்,
இதயராகம், இமையும் இசையும்,
இன்னிசை இளையராகம், என்று
இலங்கை வானொலிகள்
இவருக்கு மட்டும் எப்படி
இதயங்களை இசையாள்
இணைக்கும் வரம்
இந்த நாதம் இந்தப்பாடல்
இந்த ராகம் இசையில் பல ஜாலம்
இப்படியே ஜனனீ ஜனனீ என்று
இசைபிரித்து, இசைப்பித்தில்
இடும் ஒலி/ஒளிப்பரப்பிள்
இந்த தேசம் எங்கும்!



இவருக்கு இன்னும் ஒரு முகம்
இலக்கியம் பால்நிலா பாதை முதல்
இதயநரம்பூவீணை ,வெண்பா ,
இலக்கியவழி என்று நூலகள் பல
இயல் இசையாக!


இந்த ராகமாமலை
இன்னும் பல்லாண்டு
 இளமையுடன் வாழ்
இறைவனிடம் இறைஞ்சி நிற்கின்றேன்!


இசைஞானி இன்னும் வாழ்வேண்டும்!
இன்னும் பல பாடல் என்றும்
இசைக்கவேண்டும்!


இவரை வாழ்த்த வயதில்லை
இவர் பாதம்  பணிந்து நிற்கின்றேன்!
இனிய மலர்கள் தூவி!

இன்றும் பல பாடல் கேட்கும் செவிக்கு என் முதல் காதல்
இன்னும் என்னோடு ஐபோனிலும் ! இதுக்கு ஆயிரம் தொடர்
இன்னும் எழுத ஆசை!

இசை என்றால் இளையராஜா என்னோடு
இந்த  ஏதிலி   வாழ்க்கையிலும்!!
இன்னும் வானொலி ஆசைதான்
இந்த தேசம் வந்தும்!
!//



20 comments:

  1. இசை ஞானிக்கு என்னுடை வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் சகோதரா !

    ReplyDelete
  2. இசை மேதைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. இசைஞானிக்கு வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  4. இசைஞானிக்கு வாழ்த்துகள்..உங்களுக்கும் சொந்தமே

    ReplyDelete
  5. ஆயிரம் தொடர் போதாது தோழரே...

    ReplyDelete
  6. விமர்சனங்களுக்கு அப்பால்,இசையில் இவர் மேதை தான்,வாழ்த்துக்கள் இராக தேவரே(னே)!

    ReplyDelete
  7. வணக்கம்
    இசை ஞானிக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. இசை ஞானிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! சிறப்பான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  9. இசை சூறாவளிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. ராமராஜன் பாட்டை ஹேமா அக்காளுக்கு டேடிகட் பண்ணுறேன்

    ReplyDelete
  11. இசை ஞானிக்கு என்னுடை வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் சகோதரா// வாங்க அம்பாளடியாள் முதல் வருகைக்கு பரிசாக ஒரு பால்க்கோப்பி.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  12. இசை மேதைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்// நன்றி சொக்கன் சார் முதல் என் தள் வருகைக்கும் முதல் பின்னூட்டத்துக்கும்.

    ReplyDelete
  13. இசைஞானிக்கு வாழ்த்துக்கள் நண்பரே// நன்றி கரந்தை ஐயா!

    ReplyDelete
  14. இசைஞானிக்கு வாழ்த்துகள்..உங்களுக்கும் சொந்தமே// வாங்க அதிசயா நலமா நீண்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட காலத்தின் பின் தனிமரம் தளத்தில் சந்திப்பது அதுவும் ராஜாவின் வாழ்த்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  15. ஆயிரம் தொடர் போதாது தோழரே.../ நிஜம் தான் தனபாலன் சார்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  16. விமர்சனங்களுக்கு அப்பால்,இசையில் இவர் மேதை தான்,வாழ்த்துக்கள் இராக தேவரே(னே)!// நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  17. வணக்கம்
    இசை ஞானிக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    3 June 2014 06:40 Delete// நன்றி ரூபன் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  18. இசை ஞானிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! சிறப்பான பகிர்வு! நன்றி!// நன்றி சுரேஸ் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  19. இசை சூறாவளிக்கு வாழ்த்துக்கள்// நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  20. ராமராஜன் பாட்டை ஹேமா அக்காளுக்கு டேடிகட் பண்ணுறேன்//ஹீ அக்காள் கருக்குமட்டையோடு வருவா! அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete