10 November 2014

மாயா உனக்காக-2

 மாயா முதல்ப்பாகம் இங்கே-http://www.thanimaram.org/2014/11/1.html


மாயா நீ ஒரு மயக்கும்
மலையக நங்கை
மனதில் இன்னும்
மயக்கும் உன் முகம்\
மாதுரி நடித்த தில்தோ பாஹல் கைய் போல
மறக்கத்தான் முடியுமா?,


மஞ்சக்காட்டு மைனா என்று
மலையக வீதியில்
மடியில் சாய்ந்து
 மலர்களே மலர்களே என்று
மார்பில் நீ பாடவில்லை.
மச்சனைப் பார்த்தீர்களா என்று
 மாமியார் வீடு வந்து தேடாத
மாமன் மகள் என்று எழுத மறக்கவில்லை
மாயா எல்லாம் உனக்காக்த்தான்!


மாயா உன் அழகு ஒரு
மார்கழிப்பூவே என்று பாடவா?,
மயங்கினேன் சொல்லத்தயங்கினேன்,
மல்லிகையே மல்லிகையே,
மாப்பிள்ளைக்கு நல்ல யோகம்,
மாயா மச்சந்தா என்று
மாவனல்ல வீதியில்
மப்பில் புலம்பவில்லை.
மாயா உனக்காகத்தான்.



மாமா சொல்லி `
மானரோஷத்தில் மாடு மேய்த்தாலும்
மரியாதை வேண்டி ஓட்டகம்போல
மளிகைக்கடைக்கு கடைநிலை ஊழியர் போல
மாயமாக இங்கு வந்தேன்!
மச்சான் உதவியில்..


மாய உலகம் இப்ப புரியுது
மச்சாள் வேண்டாம் என்று
மஞ்சள் வெயிலும்
மலையகத்தில் சுடாத பூமி
மீரிய் பெத்த மழையில்
மாண்ட செய்தி கேட்டேன்
மனசெல்லாம் ஒரு மயக்கம் !
மலையகம் எல்லாம் ஏனோ
மத்திய ஐரோப்பாவில் இருப்போருக்கு
மனதில் தோன்றவில்லைப்போலும்
மாலையில் தேனீர் குடிக்கும் போது!


மலேசியா முதலாளி வாங்கும் வேலையாள்
மரப்பெட்டியில் வருவேன்  நீவருவாய் எனப் போல
மருகி அழுகின்றேன் உன்னால் தானடி.
மாயா . மறந்துவிடு என்னை
மரணம் வரும்  வரை உன்னுடன்
 மஞ்சத்தில் வரமாட்டேன்.


மாலைப்பொழுதின் மயக்கத்திலே என்று.
மயக்கம் என் தாய்மொழி.
மாதாவின் கோவிலில்.
மாயம் செய்தாயோ?, என்று
மறக்கு நினைக்கும் என்
மன்மதன் முகம் தேடாதே
மாயா !


மாலையில் மறு வேடத்தில்
மன்சூர் பாய் எனக்கும்
மறு பாதை காட்டிவிட்டார்!
மரோக் நாடு போய் அங்கிருந்து
மலை கடந்து மறு வாழ்வு தேடிப்போறேன்.


மரணத்திலும் என் பெயர்
மறக்கமுடியாது மாயா
மன்னிக்கவும் மச்சாள்
மறப்போம். மன்னிப்போம்.
மணிதான் இந்த மாய உலகில்
மார்க்கம்! எல்லாம் அதன் பின்னே
மாயா வரமாட்டேன்!!!
மரணம் நோக்கி மலையின் பாதையில்
மலர் தூவும் ஒரு மலர் நான்
மார்ஷ அல்லா என்னை மன்னிப்பாயா!
மனித வெடிகுண்டு சந்தேகத்தில்


மரோக் நாட்டில் இலங்கை குடிமகன்
மறுநாள் நாளிதழலில் !


யாவும் கற்பனை.....

10 comments:

  1. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  2. ஆஹா வர வரக் கலக்குறீங்க நேசன்... கவிதையில்.

    அதுசரி இந்த மாயா ஆரு??? ஆணா பெண்ணா?:) நேக்கு ஏதும் புரியல்ல.. கொஞ்ச நாளா மாயா கவியாவே இருக்கே... :)

    ReplyDelete
  3. கவிதையை ரசித்தேன். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. நன்றி நண்பரே// நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  5. அஞ்சலி...?// நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்

    ReplyDelete
  6. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்//நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் யாழ்ப்பாவண்ணன் சார்

    ReplyDelete
  7. ஆஹா வர வரக் கலக்குறீங்க நேசன்... கவிதையில்.// நன்றி அதிரா!

    அதுசரி இந்த மாயா ஆரு??? ஆணா பெண்ணா?:) நேக்கு ஏதும் புரியல்ல.. கொஞ்ச நாளா மாயா கவியாவே இருக்கே... :)// ஹீ அது பெண்தான் அதிரா மாயா ஒரு கற்பனை. ஹீ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  8. கவிதையை ரசித்தேன். பாராட்டுக்கள்.//நன்றி ஜம்புலிங்கம் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete