13 November 2014

கவிதை எழுதுவோம்....!-2

வலையில் படம் பகிர்ந்து கவிதை பாட அழைதார் !


இவ்வார வலைச்சர ஆசிரியரும் மூத்த பதிவாளரும்  வெங்கட் நாகராஜ் அண்ணாச்சி இங்கே-

 ஏதோ ஆசையில் நானும் கிறுக்கின்றேன்!

முன்னர் இவர் அழைப்பு இங்கே-http://www.thanimaram.org/2014_01_01_archive.html


மாமலை மீது நானும் ஓடுவேன் நதிபோல
மனம் அமைதியாக
மலையக அரசியல் இலங்கையில் போல!
மனம் கொதித்தால் மழை பொழிந்தால்
மனைகள் எல்லாம்
மலையக பூமியில்\
மீரியபெத்த போல
மலையும் சாயும்
மணல் வீதியும்
மற்றவர் பார்வையில்
மறைந்து போகும்.
மறக்க வேண்டாம்
மாமன்னர் போல ஜனாதிபதி முதல்\
மாகாண முதல்வர் தொடக்கம்
 மலையகம் நம் இரத்த உறவு என்றுவருவார்
மதியாத மாமியார் வீடு
மலையக அரசியல் போல அல்ல
மனித நேயம்
மலைகள்  மயான அமைதி கொள்ளும்
மனைகள் போல மனையின் பெறுமதி
மரித்த பாலுமகேந்திரா இல்லம் என்று
மறறக்கமுடியாத திரைப்படம் சொல்லியும்
மாசான அரசியல்வாதிகள்
மறந்த லயம் என்று பேச்சு
மலையக பூமியில் போட்ட சிறை
மறந்தும் பேசாத மலை இந்த நதி
மலைகள் வழிகாட்ட நதியும் ஓடுகின்றேன்
மாணிக்க கங்கையும் மார்பில் பாயும்
மலையகத்தின் வீதியில்
மறக்க நினைக்கின்றேன் மலையக வாசம்
மீண்டும் நீயே  மரங்களின் வேர்களின் மீது
மண்ணெண்ணை போல எரிகின்றாய்
மனித வெடிகுண்டு நானும் நதி போல
மரம் என்று மறு பெயரில் மக்கள்
மனதை  வீதிபோல பேசும் வலையில்
மகிழ்ந்து பேசுகின்றேன் மா மனங்கள் அறியாது
மலையில் ஓடும் நதியும் மரங்களின்  வேர்களும்
மனம் விட்டு அகலாது மறந்த வீடு போல!


யாவும் கற்பனை!
//

மலையகத்துக்கு இன்று தேவை
மன ஆற்றுப்படுத்தல்!ம்ம் 

18 comments:

  1. ஆறும் மலையும் தங்கள் எழுத்தில் மிளர்கின்றன அய்யா!
    வாழ்த்துகள்
    த ம 2

    ReplyDelete
  2. ///மறக்க நினைக்கின்றேன் மலையக வாசம்//
    எப்படி மறக்க இயலும்

    ReplyDelete
  3. கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. நீங்க எங்கேயோ போயிட்டீங்க நேசன்... கலக்குறீங்க. அதுசரி எந்தப் பதிவிலும் நீங்க மலையகத்தை தொடர்பு படுத்தாமல் எழுதமாட்டீங்க போலிருக்கே..:).

    ReplyDelete
  5. மறக்க இயலாத மலையக வாசம்.....

    நீங்கள் இருந்த இடத்தினை எப்படி மறக்க முடியும் நண்பரே.

    கவிதை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  6. மறக்க இயலாத மலையக வாசம்//

    ம்ம்ம் தங்கள் தாய்கத்தின் நினைவோ?!! புரிகின்றது தங்கள் உணர்வுகள்! அருமையான கவிதை!@ நண்பரே!

    ReplyDelete
  7. ஆறும் மலையும் தங்கள் எழுத்தில் மிளர்கின்றன அய்யா!
    வாழ்த்துகள்//// நன்றி ஊமைக்கனவுகள் ஐயா முதல் வருகைக்கு பரிசாக ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  8. மறக்க நினைக்கின்றேன் மலையக வாசம்//
    எப்படி மறக்க இயலும்//நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும் வாக்குக்கும்.

    ReplyDelete
  9. கவிதை அருமை! வாழ்த்துக்கள்!//நன்றி சுரேஷ் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  10. நீங்க எங்கேயோ போயிட்டீங்க நேசன்... கலக்குறீங்க. //
    ஆஹா நான் பாரிசில் தான் இருக்கின்றேன் அதிரா!ஹீ
    :).

    ReplyDelete
  11. அதுசரி எந்தப் பதிவிலும் நீங்க மலையகத்தை தொடர்பு படுத்தாமல் எழுதமாட்டீங்க போலிருக்கே..// சில நேரத்தில் சில மனிதர் போல மலையகமும் மந்தமாருதம் வீசும் .நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  12. மறக்க இயலாத மலையக வாசம்.....

    நீங்கள் இருந்த இடத்தினை எப்படி மறக்க முடியும் நண்பரே.

    கவிதை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.//நன்றி வெங்கட் அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  13. மறக்க இயலாத மலையக வாசம்//

    ம்ம்ம் தங்கள் தாய்கத்தின் நினைவோ?!இருக்கலாம் அண்ணாச்சி!ம்ம்


    ! புரிகின்றது தங்கள் உணர்வுகள்! அருமையான கவிதை!@ நண்பரே!//நன்றி துளசிதரன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  14. மலையக பூமியில்
    மீரியபெத்த போல...
    இனியும்
    நகழக் கூடாதையா!

    ReplyDelete
  15. மலையக வாசம்
    மலைக்க வைக்கிறது
    மவின் மணம்
    மணம்பரப்பி முடிகிறது.

    வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  16. மலையக பூமியில்
    மீரியபெத்த போல...
    இனியும்
    நகழக் கூடாதையா!//நிஜம் தான் ஐயா! நன்றி யாழ்ப்பாவண்ணன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  17. மலையக வாசம்
    மலைக்க வைக்கிறது
    மவின் மணம்
    மணம்பரப்பி முடிகிறது.

    வாழ்த்துக்கள் சகோ.//நன்றி உமையாள்காயத்ரி தனிமரம் வலைக்கு முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete