06 November 2014

தேடலும் நினைவுகளும்-6

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் என்று பிறமொழியில் இருந்து வந்து தென்னகத்தில் பிரபல்யம் ஆனவர்கள் என்று சிந்தித்தால் ஒரு சிலர் ஞாபகத்தில் வந்து செல்வார்கள் .லக்சுமன் பியாரிலால் இரட்டையர்கள் போல!

ஆனாலும் இளையராஜா காலத்தில் தொடங்கி ரகுமான் காலம் வரை தமிழில் தனக்கும் ஒரு இடம் உண்டு என்று நிரூபித்தவர் தெலுங்கு இசையமைப்பாளர் மரகதமணி


. இன்று இவரை தேடினால்...ஏனோ புதிய படங்களில் இவரின் இசையை கேட்கும் நிலை இல்லை. .



முன்னைய தேடல் இங்கு-http://www.thanimaram.org/2014_10_01_archive.html

இளையராஜாவுடன் முரண்பட்ட கே. பாலச்சந்தர் அதிகம் மரகதமணியை தமிழில் பயன் படுத்தினார்.

அழகன்.படத்தில் சாதிமல்லி இன்னும் மறக்கமுடியாது.

அதன் பின் அவரின் இயக்கத்தில் வானமே எல்லை மரகதமணியை இன்னும் பிரபல்யம் ஆக்கியது .


ஒரு பாட்டுக்கு நடிகை நடனம் ஆடும் புதிய பாதையை முதலில் பானுப்ரியா தொடங்கியது இதில் என்றாலும்! "நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம்" பாலச்சந்தர் தன்னை அழகன் படத்தில் முக்கிய பாத்திரம் கொடுத்து  ஒரு கைமாறு என்று எண்ணலாம்!


 பாலச்சந்தர் பின் ஜாதிமல்லி படத்துக்கும் இவரையே ஆஸ்தான இசையமைப்பாளர் ஆக்கியது அன்றைய சினிமா உலகு!




ஜாதிமல்லி மறக்கமுடியவில்லை பாடல் இன்னும் மறக்கமுடியவில்லை.


பாலச்சந்தர் வழிகாட்ட  அர்ஜின் இயக்கி நடித்த சேவன் பாடலில் இவரின் கை ஓங்கியது!-

பின் அர்ஜின் ஹிட்சில் இந்த பிரதாப் இன்னும் இவரின் இசைக்காக என் தேர்வாகியது  தனிக்கதை!




ஆனாலும் தெலுங்கு இசையின் முக்கிய தோல்  வாத்தியம் தமிழில் பறை மரகதமணியின் தனித்திறமை! அவரின் இசையில் அதிகம் இது மேலோங்கி இருக்கும் ஒரு வேளை தெலுங்கின்  பிரதான இசையோ நான் அறியேன்!
ம்ம்



! அதன் பின் தமிழில் மலையாளத்தில் மொழிமாற்றி வந்த அசுரன் படம் மோகன்லால் நடித்த படப்பாடல்  அதில் குளிர் குளிர் என சுடுகின்றதே பாட்டு இலங்கை வானொலியில் மட்டும் இருக்கும் ஒலிப்பேழை. சீடி. .

அதன் பின் யாருக்கு மாப்பிள்ளை யாரோ என்று தமிழில் வந்த ராஜசேகர் நடிப்பு படம்.

 அதன் பாடல்கள் இன்னும் சமூகதளம் யூட்டிப்பில் இல்லை இலங்கை கடந்து.

 இன்று புரட்சிFM,வானொலியிலும், தமிழ் அருவிFM வானொலியிலும் மட்டும் இதன் முழுப்பாடல்களும் இருப்பது நேயர் என்  சந்தோஸம்.



 ஆனால் ஐரோப்பாவில் முக்கிய வானொலி லங்காசிரியிடம் இது பற்றி கேட்டாள் அப்படி ஒரு படம் இருக்கா???


 என்று ஒரு புன்னகை மழுப்பல்!


ஹீ சரி விடயத்துக்கு மரகதமணி இசை மீட்டிய படங்கள் பல தமிழில் ஆனாலும் இவரும் போலி ஐடியில் வரும் பதிவர் போல ஹாம்சலோகா, ராஜ்கோட்டி, கீரவாணி என்று வந்தாலும்!
http://www.andhrawishesh.com/telugu-film-movies/movie-news/46289-happy-birthday-keeravani.html

 இசையில் ஒரு சாயல் இருக்கும் இது நிஜமா இல்லை என் நினைப்பா என்று நான் அறியேன் யாராவது திரையுலக ஜாம்பாவாங்கள்  இந்த சந்தேகத்தை தீர்த்துவைக்கட்டும் இசை எனக்கு பிடிக்கும் மரகதமணி மீண்டும் வரட்டும் வாழ்த்துவோம்.!


அன்னமா உன் பேர்  அன்னமா-தமிழில்  யாருக்கு மாப்பிள்ளை யாரோ இன்னும் தமிழ்பாடல் யூட்டிப்பில் யாராவது ஏற்றுவார்களா?, இதன் ஒரியினல் இது-



16 comments:

  1. மோகன் நதியா நடிச்ச படம் உயிரே உனக்காக .அதில் .லக்ஷ்மி காந்த் பியாரிலால் ..இசை அமர்க்களம் !
    மரகதமணி இசையில் சங்கீத ஸ்வரங்கள் எத்தனை முறையும் கேட்கலாம் !!

    ReplyDelete
  2. கண்டும் கேட்டும் மகிழ்ந்தேன் நண்பரே
    நன்றி

    ReplyDelete
  3. மரகதமணி பற்றிய அறிமுகம் நன்று. சில் பாடல்களுக்கு யார் இசை அமைத்தது என்பது தெரிவதில்லை. நீங்கள் குறிப்பிட்ட பாடல்கள் எல்லாம் இசை அமைத்வர் வேறு ஒருவர் என்றே நினைத்திருந்தேன்.
    நன்றி

    ReplyDelete
  4. நீங்கள் கூறி விஷயங்கள் எனக்குப் புதியன.
    பாடலை ரசிப்பதோடு நின்றுவி்டும் என்னைப் போன்றவர்களுக்குத் தங்களின் பதிவு நிசச்யம் பயன்படும்.
    நன்றி

    ReplyDelete
  5. ரசிக்க வைக்கும் பாடல்கள்...

    ReplyDelete
  6. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  7. மோகன் நதியா நடிச்ச படம் உயிரே உனக்காக .அதில் .லக்ஷ்மி காந்த் பியாரிலால் ..இசை அமர்க்களம் !
    மரகதமணி இசையில் சங்கீத ஸ்வரங்கள் எத்தனை முறையும் கேட்கலாம் !!// வாங்க அஞலின் நீண்டநாட்களின் பின் வருகை முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ. உண்மைதான் இன்னும் உயிரே உனக்காக மறக்கமுடியாது பாடல் தனிரகம்.மரகதமணி இசை அதிக மெலோடிதான் !நன்றி அஞ்சலின் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  8. கண்டும் கேட்டும் மகிழ்ந்தேன் நண்பரே
    நன்றி// நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  9. மரகதமணி பற்றிய அறிமுகம் நன்று. சில் பாடல்களுக்கு யார் இசை அமைத்தது என்பது தெரிவதில்லை. நீங்கள் குறிப்பிட்ட பாடல்கள் எல்லாம் இசை அமைத்வர் வேறு ஒருவர் என்றே நினைத்திருந்தேன்./ அது எல்லாம் மரகதமணி இசைதான் முரளி அண்ணாச்சி!
    நன்றி/ வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி முரளி அண்ணாச்சி!

    ReplyDelete
  10. நீங்கள் கூறி விஷயங்கள் எனக்குப் புதியன.
    பாடலை ரசிப்பதோடு நின்றுவி்டும் என்னைப் போன்றவர்களுக்குத் தங்களின் பதிவு நிசச்யம் பயன்படும்.
    நன்றி// வரலாறு மிக்கியம் தானே ஐயா ஊமைக்கனவுகள். நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  11. ரசிக்க வைக்கும் பாடல்கள்...// நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  12. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்// நன்றி யாழ்பாவண்ணன் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  13. மரகதமணியின் இசை அருமையாக இருக்கும்தான்! கீரவாணி என்பது தெலுங்கில் இவர் பெயர் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  14. மரகதமணியின் இசை அருமையாக இருக்கும்தான்! கீரவாணி என்பது தெலுங்கில் இவர் பெயர் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்! பகிர்வுக்கு நன்றி!// நன்றி சுரேஸ் தகவலுக்கும் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  15. அருமை.. அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறீங்க.. வாழ்க அறிவிப்பாளர் நேசன்!!

    ReplyDelete