25 February 2015

தொட்டால் சினிங்கி!

இசை ஒரு போதை வானொலியோடு இயங்கும் சிலருக்கு. பல வேளைப்பழுவையும் . அன்றாட உணர்வுச்சிக்கலையும் தீர்ப்பது இசையாக இருப்பது  சிலருக்கு வாய்க்கும் வரமாகும்.



 இவர்கள் கடமையும். வருமானம் தரும் தொழிலாக அமைவதும் எல்லோருக்கும் கிடைக்காத அம்சம் அதுதான் வானொலி அறிவிப்புப்பணியாகும்.



 இலங்கையில்  நடிகர்/நடிகைகளுக்கு இல்லாத புகழ் இந்த வானொலியில்  இருப்போருக்கு கிடைத்து ஒரு காலம்!

 என்றாலும் இன்று பல்லாயிரம் இணைய வானொலி வந்தாலும். அதனை இயக்கும் ஆரம்பக்கல்வியைக்கொடுத்து இலங்கை வானொலி என்பதனை நாம் மறக்முடியாது.


 அந்த வானொலி நேயர்களில் தனிமரம் நேசனும்  ஒருவன் என்பதில் எப்போதும் எனக்கும் பெருமைதான் சில பாடல்களை  மீண்டும் இணையத்தில் கேட்கும் போது.


  தபால் அட்டையில் கேட்ட காலம் போல இன்று மனம் இல்லை என்றாலும் அது ஒரு காலம் நெகிழ்ச்சியில் இரவு நேர இசைத்தேடல்  இந்தப்பாடல்! இப்போது எல்லாம் இப்படியான பாடல் குறைவு எனலாம் கால அவசரகதியில் !


அவுஸ்ரேலிய இசையமைப்பாளர்கள் தமிழில் முதல் இசைமீட்ட தென்னகம் வந்த  பிலிப்-ஜெரி இசையமைத்த இந்த தொட்டால்சினிங்கி படம் இன்னும் மறக்கமுடியாது கதை  திரைக்கதை இயக்கம் தந்த  k. s.அதியமான் !



 தலைமுறை படத்தில் ஹீரோவாக வந்து போனவர் நினைப்பு இன்று   பலருக்கு ஞாபகம் இல்லாவிடினும்/

 இந்தப்பாடல் இன்னும் நினைவில் இருக்கும்..


ஆனால் இவர் இயக்கிய சொர்ணமுகி படத்தின் கதையை அன்நாட்களில் ஆனந்தவிகடனில் தொடர்கதையாக எழுதிய பின் திரையில் இயக்கி வெற்றிகண்டார் என்பதும் வரலாறு.


3 comments:

  1. இலங்கை வானொலி தமிழ்நாட்டிலும் பிரபலமல்லவா. நல்ல நினைவூட்டல்

    ReplyDelete
  2. நாங்க எல்லோரும் அந்தக் காலத்துல இலங்கை வானொலி தவிர வேறு எதுவும் கேட்டது இல்லை...இங்கு தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். நாங்கள் எல்லோரும் ரசிகர்கள். நினைவுகள் மீண்டது...அருமையான பாடல் பகிர்வு. துளசிதரன், கீதா

    கீதா: நான் இலங்கையில் மூன்றாம் வகுப்பு வரை படித்தவள். கொழும்புவில் இருந்தோம், அப்பா, தாத்தா வேலி நிமித்தமாக..அப்பா அப்போது இந்திய தூதரகத்தில், பாஸ்போர்ட் கொடுக்கும் எழுத்தாளராக, இருந்தார். அப்போது இலங்கை வானொலியில், ராஜேஷ்வரி சண்முகம் அவர்களின் மடியில் அமர்ந்து நான் கதை சொன்னதுண்டு, பாடியது உண்டு. மயில்வாகனன் அவர்களையும் பார்த்திருக்கின்றேன். ராஜேஸ்வரி அவர்களுடன், இந்தியா வந்த பிறகும் தொடர்பில் இருந்தோம். தற்போது ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் இல்லை என்பதும் வருத்தமாக இருந்தது. என் சிறு வயது நாட்கள் எனக்கு மிகவும் பிடித்த நாட்கள் அவை. இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது....

    மிக்க நன்றி நண்பரே!



    ReplyDelete