01 June 2015

இன்னும் உன்னோடுதான்!!

இசை  என்னும் ஜீவநதியே
இளையராஜா என்னும் அரசே!



இசையாழ்மீட்டி எத்தனை ஆயிரம்
இணையில்லா கீதம் படைத்தாய்!
இந்திய சினிமாவில் நீ ஒரு
இமயம் என்று இன்னும் சிலர்
இன்றும் கொண்டாவில்லை!
இந்திய தமிழன் நீ  என்று போலும்
இருந்தாலும் நீ போட்ட
இன்னிசை கலையை
இருட்டில் திருடியோர் இங்கு பலர்!



இணையப்பரப்பிள் இன்றும் பல
இணைய வானொலிகள்
இனிதாய் உன் கீதம் பல
இரவில் தாலாட்டும்.

இசையாசிக்கும்
இந்த தனிமரமும்  உன்னை
இன்றைய நாளில் இனிதே
இதயம் நிறைய போற்றுகின்றேன்!



இன்றைய நாள் உன் வாழ்வில் 2/6
இன்னொரு உதயம்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
இசையானி இராகதேவன்
இளையராஜாவே!


இன்னும் உன் இசையில்
இவனும் உன்னோடு
இந்தக் காதல் போல!


இன்னும் பல பாடலுடன்
இன்னும் உன்னோடுதான்.
இப்படி நீ மெட்டுப் போட்டாலும்


இன்றும் உன் பாட்டுத்தான்
இதயத்தில்!

16 comments:

  1. இளையராஜா என்றும் ராஜாதான்
    தம +1

    ReplyDelete
  2. ஆஹா! அருமை! ராஜா...ராஜாதி ராஜன் இந்த ராஜா!

    ReplyDelete
  3. இசை - மருந்தாய் நமக்கு தரும் இவர் வாழ்க பல்லாண்டு
    மெல்லிசை காதுகளைத் தழுவ உயிர் அழகாய் சிரிக்கிறது...நன்றி சகோ

    ReplyDelete

  4. இசையானி இராகதேவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. இளையராஜாவுக்கு அணிவித்த
    ரோஜாவாசமிகு கவிதை அழகு!

    பிறந்த நாள் நல்வாழ்த்துகள் இசை ஞானிக்கு!
    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete

  6. இசையின் ராஜா இனையராஜாதான்
    தமிழ் மணம் எங்கே...

    ReplyDelete
  7. வணக்கம்
    நாள் உணர்ந்து பதிவாக பதிவிட்டமைக்கு நன்றி இன்று இளையராஜாவின் பிறந்த தினம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. காலம் அறிந்து பதிவிட்டீர்கள். அருமை. வாழ்த்துக்கள் அவருக்கும் உங்கள் பதிவுக்கும். நன்றி.

    ReplyDelete
  9. அன்புடையீர்! வணக்கம்!
    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (13/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    வலைச்சர இணைப்பு:
    http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  10. இசையின் ராஐா இளையராஐா
    அமைதியையும்/மௌனத்தையும்
    இசையாக்கிய இளையராஐாவிற்கு
    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  11. அன்புள்ள சகோதரர் தியாகராஜா சிவநேசன் (தனிமரம்) அவர்களுக்கு வணக்கம்! உங்கள் பதிவுகளை தமிழ்மணத்தில் அடிக்கடி படிக்கும் வாய்ப்பு பெற்ற வாசகர்களில் நானும் ஒருவன்.

    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அய்யா அவர்கள், தங்களின் வலைத்தளத்தினை இன்றைய (13.06.2015) வலைச்சரத்தில் அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    வலைச்சர இணைப்பு இதோ:
    வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள்
    http://blogintamil.blogspot.in/2015/06/13.html

    ReplyDelete
  12. அன்புள்ள சகோதரர் தியாகராஜா சிவநேசன் (தனிமரம்) அவர்களுக்கு வணக்கம்! உங்கள் பதிவுகளை தமிழ்மணத்தில் அடிக்கடி படிக்கும் வாய்ப்பு பெற்ற வாசகர்களில் நானும் ஒருவன்.

    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அய்யா அவர்கள், தங்களின் வலைத்தளத்தினை இன்றைய (13.06.2015) வலைச்சரத்தில் அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    வலைச்சர இணைப்பு இதோ:
    வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள்
    http://blogintamil.blogspot.in/2015/06/13.html// நன்றி இளங்கோ ஐயா தகவல் தந்தமைக்கு வலைச்சரத்தில் கோபு ஐயாவுக்கு நன்றி சொல்லிவிட்டேன் மீண்டும் மீண்டும் நன்றிகள் .

    ReplyDelete
  13. வணக்கம் நேசன் !

    இனிமையான வாழ்த்து இசையின் இமயத்திற்கு

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  14. ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்த அற்புத சாதனையாளர்.வாழ்த்துகள்

    ReplyDelete
  15. "இந்த கால இளைஞர் செய்யும் காதலுக்கு இளையராஜா எந்தன் இசை இருக்கு....."

    ReplyDelete