05 March 2019

வசந்தம் வருமா?!!!

வார்த்தைகள் கொண்டு
வாரியனைப்பேன்
வசந்தகாலத்தில்
வரிக்கு வரியாக
வந்திடாதே
வாசலில் ஒரு கோலம் போல!)))
வந்தாள் மகாலட்சுமி என்றெல்லாம்
வந்தாரை வாழவைக்கும்
வடக்கும்கிழக்கும்,





வார்த்தைகளில் வாக்குகேட்ட
வாத்தியார்கள் எல்லாம்!
வசதியான அறைகளில்
வாதாடும் வங்குரோத்து,
வக்காளாத்து,
வாடியோர் முகங்களில்
வரவில்லை இன்னும்
வானவில் போல
வரலாற்றுச்செய்தி!



வந்து போகும்
வதனங்கள் எல்லாம்
வட்டமிடும் அரசியல்தானோ?



வருகின்ற மேடையும்,
வரப்பிரசாதங்களும் ,
வலிந்த தீண்டல்களும்,
வடைவிற்கும் அப்பக்கூட்டணியின்
வட்டமேசைதானா?
வாருங்கள் ஜெனிவாவிற்கு!

வாடும் உறவுகளின்
வாழ்வாதரக்கேள்விகளில்
வார்த்தையும் விக்கி நிற்கின்றது!

(யாவும் கற்பனை)






6 comments:

  1. யாவும் உண்மை அண்ணா. தமிழகத்திலிருந்து முருகேசன் குமரேசன்

    ReplyDelete
  2. உண்மைநிலை மாற்றம் வரும் நம்புவோம்

    ReplyDelete
  3. அங்கும்மா....????வந்தாரை வாழ வைக்கும் வடக்கும் கிழக்கும் வசந்தம் வராது..

    ReplyDelete
  4. கவிதை அழகு நேசன்.. வசந்தம் வராமல் போயிடுமோ?:).

    ஜேசுதாஸ் அங்கிளின் பாட்டு சூப்பர்.

    ReplyDelete