06 April 2022
மங்கோலியா மாடு!
மயில்தோகை போல
மலைச்சாரல் போல
மனதில் விழுந்த
மரவியாபாரி
மன்னார் மாங்கனியே!
மறதியில் மக்கள் தலைவன் போல
மடிப்பிச்சையில் சம்மந்தர் போல
மஹிந்த மல்லாக்க தொங்குவது போல
மறுபடியும் கெஞ்சுகின்றேன்!
மரியாதை பாடல் போல
மண்ணெண்ணை கியூவில் நிற்பது போல
மடிக்கணனி செயல் இழப்பு போல
மலர்ந்திடாத புன்னகையில்
மந்திரப்புன்னகை படம் போல
மன்றாடும் மன்னவன் குரல் கோளாதோ?
மன்றம் விடுதலை தருமோ?
மருவி அழுது புலம்பும் குரல்
மலட்டு அரசியல் போலவோ?
மண்மீது கொண்ட நேசம்
மறவாத கண்மணியே!
மண்டியிட்ட கோத்தா
மறுபடியும் புலம்பெயர் முதலீடு
மஞ்சல்பத்திரிக்கை செய்தி போல
மஞ்சத்தில் உன்னையும்
மடியோடு அணைத்து
மறுபடியும் மடியிட
மங்கோலியா மாடும்
மலம்வீசியது அனுரகாரில்
மறைக்கப்பட்ட செய்திகளுடன்
மரையுபோல் உக்கிரேய்ன் நகரில் இருந்து
மறு அழைப்பில் வருவேன்!
மணித்தியாளம் மாறியது
மறந்தாயோ உருகும் பிரெஞ்சுக்காதலி போல
மன்றாடும் மரம்!
(யாவும் கற்பனை)