என்னைக்கவர்ந்த நம்மவர்பாடகரில் N.k.ரகுநாதன் முதலானவர் இவர் பாடிய பாடலில் 'மூங்கிலின் நாதமும் தென்றலின் கீதமும் உன்புகழ் பாடுதம்மா' மிகவும் பிடித்தது .இன்று நம் வானொலிகள் நம்மவர்களை புறக்கணித்துக்கொண்டிருந்தாலும் ,அவர்கள் பாடியபாடல்கள் இனையங்களில் கிடைக்கின்றது.மெல்லிசை என்றால் இலங்கை வானொலி என்ற இடம்தடம்மாறிவிட்டது.அன்று சந்தனமேடை .முற்றத்து மல்லிகை,இன்று ஞாபகம் இல்லைபலருக்கு .N.k.ரகுநாதன் சிலமேடைகளில் இப்போதும் தோன்றுகிறதை சின்னத்திரை ஊடாக பார்பதில் ஆனந்தம் .காலம் நம்மவர் மெல்லிசையை மீட்டுத்தருமா.T.s.m.கூடசேர்ந்து மேடையில் பாடி அவர்கூட இவர் குரலைசிலாகித்துப் பாராட்டியதை நேரில் பார்தேன்.ரகுநாதனுக்கு வயசானாலும் அவர் குரல் இன்னும் என்னை வசிகரிக்கிறது.
No comments:
Post a Comment