நாட்டுக்கு வா என்று கூறும் உன்னிடத்தில் எப்படி உறைப்பேன் வாழ்ந்து கெட்டவீடு வீழ்ந்து கிடக்குது வயிறடங்க உணவழித்த என்வயல்கள் பொசுபரசு குண்டுவீசி எரிந்துபோய் கிடக்கும் புதரான பூமி,ஊருக்கு வந்துவிட்டோம் என்பதை எட்டத்தில் காட்டும் ஊர்கோயில் கொடிக்கம்பம் குப்புறக்கிடக்கும் துயரம்,ஊரை காவல்காத்த எம்கண்மணிகளின் கல்லறைகள் காணாமல் போன வரலாற்றை எல்லாம் தாங்கும் இதயம் தொலைந்து பலகாலம்,அனுதினமும் அழுது கண்ணீறும் வற்றிய கண்களால் எந்தேசத்தை பார்க்கும் பக்குவம் எனக்கில்லை ஏப்போதும் என்நெஞ்சில் கனவான காட்சிகளுடன் அகதியாக முகம்தொலைந்து முகாரி வாசித்துக்கொண்டு இன்னொரு சந்ததிக்கும் என்கதையைச் சொல்லி என் காலத்தை கடத்திவிடுவேன்.என்னை வா என்று அழைக்காதீங்கோ என் உறவுகளே.
எங்களூரின் வரலாற்றுக்களுக்குள் புதைந்தும், நினைவுகளில் இன்றும் நிழலாடிக் கொண்டிருக்கும் நிஜங்களைப் பதிவில் கூறியுள்ளீர்கள். கவிதையினைப் பிரித்து எழுதியிருந்தால் அருமையாக இருக்கும். இன்னும் நிறைய எழுதுங்கோ.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete