04 July 2011

பார்வைகள் ! !

மெளனத்தின் புன்னகையா !இல்லை
மெளனத்தின் யுத்தங்களா?
உன் கயல்விழிகள் சொல்வது
என்னைக் கொல்வது இனியும்
அந்தப் பார்வைகள் வேண்டாம்!

இவன் யாசிப்பது உன் இதயத்தை
மெளனங்கள் தங்கம் தான் அதையும்
உரசித்தான் புனிதம் கானலாம்!

உன் மெளமும் புனிதமாக
ஒரு சொல்லாவது பொய் சொல்.
இவன் என் காதலன் என உயிர் வாழ்வேன் காலம் எல்லாம் உனக்காக!

கவிதைகள் கூட வற்றிவிட்டது உன் வரவின்மையால்
மெனங்கள் இசையால் கரையும் என்று
என்னிய எண்ணங்கள் சிதறப்பட்டுவிட்டது!
உன் இதயம் என்னும் பாறை இவனுக்காக
இளகவும் உருகவும் என் கவிதையும் காதலும் தெரியாத வானவில்லா?

நீ வந்து ஏற்றுவாய் என் காதல் அகழ்விளக்கு
பூபாளம் பாடுவேன் ஜீவ நதி உன்னை!

17 comments:

  1. //கவிதைகள் கூட வற்றிவிட்டது உன் வரவின்மையால்
    //

    ஹும்.. உங்களுக்கு கவிதைகள் வற்றவில்லை என்பதற்கு இந்த அசத்தல் வரிகளே சாட்சி

    ReplyDelete
  2. சூப்பர் பாஸ்

    ReplyDelete
  3. அருமையான கவிதை

    ReplyDelete
  4. இது ஒரு முயற்ச்சிதான் துஷ்யந்தன்.

    ReplyDelete
  5. நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் துஷ்யந்தன்.

    ReplyDelete
  6. நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மதுரன்.

    ReplyDelete
  7. கொல்லுற மாப்பிள..! எப்படி முடியுது மாப்பிள ஒவ்வொரு நாளும் ஒரு பதிவ ஏத்த இதில வேற நேரமில்ல நேரமில்லன்னு புலம்பல்வேற..!!??

    ReplyDelete
  8. கொல்லுற மாப்பிள..! எப்படி முடியுது மாப்பிள ஒவ்வொரு நாளும் ஒரு பதிவ ஏத்த இதில வேற நேரமில்ல நேரமில்லன்னு புலம்பல்வேற

    ReplyDelete
  9. அருமையான கவிதை மாப்ள!

    ReplyDelete
  10. நன்றி விக்கியண்ணா உங்கள் வருகைக்கும்  கருத்துக்கு!

    ReplyDelete
  11. நன்றி ஆதவன் வரவிற்கு எல்லாம் ஒரு முயற்ச்சிதான் காரணம் பதிவு போட அதுமட்டுமல்ல முத்து நெடுமாறனின் எழுத்துரு உதவியும் கூகுள் இலவசமாக விட்டதால் நாங்களுன் பயன்பெறுகின்றேன்.

    ReplyDelete
  12. முயற்சிதான் என்று நீங்கள் கூறினாலும் சிறப்பானதாகவே உள்ளன ஒவ்வொரு வரிகளும்.
    அப்புறம் என் நீண்டநாளாக பதிவுகளை காணவில்லை.. வேலை அதிமோ?

    ReplyDelete
  13. நன்றி ஜனா அண்ணா உங்களைப் போன்ற மூத்தவர்கள் வருகை மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. முடிந்தளவு பதிவுகளை தொடர்ந்து தனிமரத்தில் மட்டும் பதிவு செய்து வருகின்றேன். கோடைகாலம் கொஞ்சம் வேலை அதிகம் தான்.

    ReplyDelete
  14. முன்னதாக என வலையில
    வந்து சிக்கியதற்கு நன்றி

    தனி மரம் அல்ல நீங்கள்-நாளும்
    தமிழினில் கவிதை தா(ரு)ங்கள்
    நனிமரம் தோப்பு எனபர்-நம்
    நற்றமிழ் கற்ற அன்பர்
    கனிமரம் ஆவீர் தம்பீ -மேலும்
    கவிதனை வளர்ப்பீர் நம்பீ
    இனிமரம் நடுதல் வேண்டும்-பழைய
    இயற்கையை காண மீண்டும்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. உங்கள் அன்பு வலையில் தனிமரம் கிளைபரப்புவது கவிதை என்னும் ஆலமரத்தில் கூடுகட்டுவதைப் போல்!
    தனிமரத்தையும் கவிநயத்துடன் வாழ்த்தும் பெருங்கவிதைப் பெரியவர் இராமநுசம் அவர்களை இராமனைக் கண்டு பாதம் பணிந்த வாயு மைந்தன் போல் பாதம் பணிகின்றேன் தங்கள் வரவை என்னி!

    ReplyDelete
  16. வாவ்....முதல் படமும் வரிகளுமே போதும் உங்கள் காதல் மனசை சொல்ல !

    ReplyDelete
  17. நன்றி ஹேமா சின்ன சின்ன முயற்ச்சிதான் இவை .

    ReplyDelete