18 July 2011

தீராநதி விமர்சனம் 

 பாரிஸ் தேசத்தில் நடக்கும் கதைக்களம் .இங்கு வரும் புலம்பெயர் மக்களின் இன்னொரு புதிய விடயமான வதிவிட அனுமதி என்ற ஒரு நடைமுறை தெரியாமல் தாயகத்தில் இருந்து அகதியாக வரும் என் போன்றவர்களின் விடியலுடன் படம் தொடங்குகின்றது.


நாயகன்  ஊரில் இருக்கும் தெய்வங்களை துணைக்கு அழைப்பதுடன் படம் கதை ஓட்டத்தைக் கூறுகிறது.காலையில் மதன் வெளியே போவதும் அதன் பின்னே கமராவும் பயணிக்கிறது.

 மதன் தன் நண்பனுடன் போகும் வழி நெடுக கதைவிரிந்து செல்லுகின்றது .அதற்கிடையில் மதனுக்கு வீடுவாடகைக்கு எடுத்துக் கொடுத்த அவரின் மாமானார்(அருனாகிரி) வீட்டிற்கு வந்து பார்க்கும் போது! நம் நாயகனும் ,அவரின் நண்பர்களும் வீட்டை  எப்படி நாறடித்து வைக்திருக்கிறார்கள் என்பதூடாக நம் சமுகத்தின் இன்றைய நிலையையும் புலம் பெயர்வில் நண்பர்களாக வாழும் குடியிருப்புக்களை வெளிப்படையாக காட்சிப்படுத்தி கைதட்டலை வாங்கிக்கொள்கின்றார்.
மதன் எங்கே போகின்றான் என்பதன் ஊடாக கதை பின்னோக்கி விரிகின்றது .நண்பர்கள் படைசூழ  இங்கு நடக்கும் ஒரு விழாவில் கலந்து கொண்டிருக்கும் போது கதையின் ஊடே வருகின்ற இன்னொரு கிளைக்கதைதான் புலம்பெயர்வில் தீராநதியாக ஓடும் குழுவன்முறை !

இதற்கு நாயகன் எவ்வாறு உள்நுழைகின்றான். என்றாள் நாயகனுக்கு முதலில் வதிவிடத்தைத் தீர்மானிக்கும் (offra) காரியாலாயத்தில் இருந்து வரும் கடிதத்தை மொழி தெரியாமல் இருப்பதால் யாரிடம் காட்டி வாசித்து தெரிந்து கொள்வது என வீதிக்கு வரும் போது கானும் தமிழ் பெண்தான் கதாநாயகி !

பார்க்கும் போது தயக்கத்துடன் நாயகன் கடிதத்தை நீட்ட நாயகி ஒருக்கனம் காதல் கடிதமோ !என நினைத்து பின்னடிக்கும் போது நம்ம நாயகன் என்ன விஜய் போலவா? பார்த்ததும் காதல்கடிதம் நீட்ட .இது வதிவிடக்கடிதம் தயவு செய்து வாசித்துச் சொல்லுங்கள் என கேட்க வாங்கி வாசித்து அவரின் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டதை .சொல்லும் போது ஈழத்து அகதியானவன் படும் துயரத்தை தத்ரூபமாக மதன் காட்டும் போது !

இதன் வலி புரிந்து அழுதவர்களில் தனிமரமும் சேர்ந்துதான் கலங்கிவிட்டது.!

 கடிதம் படித்து அழுதுகொண்டு செல்லும் மதன் மீது பரிதாபப்பட்டு நாயகி .மறு நாளும் இவ்வழியால் தான் போவேன் தேவையான உதவியை தயங்காமல் கேளுங்கள் என கூறிச் செல்ல மறு நாள் காத்திருக்கும் நாயகன் தன் வதிவிட கோப்புக்கள்  எல்லாவற்றையும் நாயகியிடம் கொடுப்பதுடன் அவர்கள் உறவு தொடங்கிறது .

இது  புலத்தில் நடக்கும் உதவி அதை நம்மவர்கள் பிரிதொரு அர்த்தத்தில் கொள்வதும். கதாநாயகியின் உறவினர்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதும் .கதாநாயகியின்  பின்புலம் என்ன என என்னும் போது! கதை ஓட்டத்தில் நிறுத்தம் போட்டுவிட்டு !

யாதார்த்தத்தில் அவன் பின்னால் சிலர் மோட்டார்சைக்கிளில் துரத்தும் போது இருவரும் இரு திக்கில் ஓடி ஓளிகிறார்கள். அவர்கள் மூச்சு வாங்க நாங்களும் வாங்குறோம் .

ஊரில்  இருந்து பின்கதவாள் வந்துவிட்டு இங்கு வந்து நாம் காட்டும் வீரம்  பிறநாட்டவருக்கு ஈழத்தவன் வன்முறைவாதிகள் என்ற பிம்பம் பதியப்படுகிறது. இதை நாயகனின் மாமா (அருனகிரி)சரியாக  கூறி .அதே நேரம் கத்தி மேல் நின்று  சிந்திக்கவைத்து கைதட்டலையும் இளையோரின் கண்டணத்தையும் பெறுகிறார் .

புத்திமதி சொன்னால் இப்போது புரிவதில்லை பலருக்கு.
நண்பன் ஒருவன் தன் கடந்தகால தவறை மதனுக்கு கூறுகின்றான். தானும் உடம்பில் வலுஇருந்த போது கொலை செய்ததும் அதன் பலன் சிறைவாசம் அனுபவதித்து விட்டு மீண்டும் திருந்தி அமைதியான வாழ்வை பாரிஸ்சின் புறநகர்ப் பகுதியில் வாழ்கின்றேன் என்று கூறிமுடியும் போது !

நிகழ்காலத்தில் மீண்டும் மோட்டார் சைக்கிளில் இவர்களை அவர்கள் தூரத்தும் போது.  இருவரும் ஒடும் காட்சி தமிழ்சினிமாவின் பாதிப்பு அதிகமாக இருக்கின்றது எனலாம் .

காட்சியமைப்பில் முன்னும் பின்னும் என படத்தை நகர்த்தும் உத்தி கஜனி படச்சாயல் தெரிகிறது .உதவி செய்யும் பெண்மீது ஏப்படி மதனுக்கு காதல்வந்தது என்றும்  அதனை நாயகன் எப்படி வெளிப்படுத்தினார் .?
இதன்பின்னே மையக்காட்சியில் கதாநாயகிவீட்டிற்கு வரும் போதுதான் இவர்கள் தூரத்தப்படுகிறார்கள் என்று கூறுவதனூடாக படத்தின் மறுபகுதியில் என்ன நடந்தது என்று காட்சிகளாக விரிகின்றது .

கதாநாயகி வீட்டில் காத்திருக்கும் போது வியக்க வைக்கின்றார் படத்தில் ஹீரோ !இவர் பல இடங்களில் சேரனைப் போல் முகத்தை மூடி அழுவது கொஞ்சம் அதிகம் என்றாலும் .

ஈழத்து அகதி உறவுகள் யாரும் அருகில் இல்லாத போதும் ,பொருளாதார நெருக்குதல், தனிமை ,எதிர்கால பயம் என நினைக்கும் போது அழுவதைத்தவிர கனவுகளுடன் வாழும் ஈழத்து சராசரி இளைஞன் பாத்திரம் கச்சிதமாக பொருந்துகின்றது.

 கதாநாயகி கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார் .ஹீரோவிற்கு கொஞ்சம் அக்காள் போல் இருப்பது அன்று வாடைகைக்காற்று தொடக்கம் இன்று தீராநதி வரை .

எங்கள் வீட்டுப் பெண்கள் ஒரு நடிகையா ?என்ற பார்வையால் நல்ல திறமை இருந்தும் வெளிக்காட்டாமல் பலர் இருப்பது இந்த நாயகியைப் பார்க்கும் போது தெரிகின்றது.

.சோக பாவம் வரமறுக்கிறது .கவலையளிக்கிறது.
 சில காட்சியில் கமரா பயம் இருப்பது புரிகின்றது. என்றாலும் புதுமுகம் நாளடைவில்  இன்னொரு சினேஹா கிடைத்திருக்கிறது .கோடம்பக்கம் இனி படை எடுக்கும் .கதாநாயகி வீட்டில் காத்திருக்கும் போது என்ன நடக்குது !

என்பதை விறுவிறுப்பாகவும் குழுவன்முறையில் யார் வென்றார்கள் ?இந்தக்குழுவன்முறைக்கு முடிவு இல்லையா  ?என பல கேள்விகளுடன் இறுதியில் என்ன நடந்தது என்பதை தீராநதியை  திரையில் கானுங்கள்.!
வில்லனில்  இவனும் ஒருவன்.இவனுடன் ரயில் சிநேகம் 5 வருடம்!


இரு பாடல்கள் அறிமுகப் பாடலே கதையை கூறிவிடுகிறது sujeethG
.அடிதடி வெட்டுக்குத்து  எழுதியவர் சதாபிரனவன் .பாடியிருப்பவர் சுஜித்.காட்சியைப் பாருங்கள்.
http://youtu.be/VFQa42fAJ8U+

  மற்றபபாடல்  கண்ணில் விழுந்த என்ற கனவுப் பாடலும் நல்ல தெரிவு கவிஞர்  கவனிக்க வைக்கிறார்.
படத்திற்கு இசை பலம் சேர்க்கிறது இன்னும் முயன்றால் மற்றொரு நிருவாகலாம் கோடம்பாக்கம்.
 இசையமைப்பாளர் சிறியவர் கஜானந்தன் இவர் லண்டனில் வாழ்கிறார் படத்தின் வெளியீட்டுக்கு வந்திருந்தார் பின்னனி இசை ஆடவிடாமல் கதையை உள்வாங்கி சிறப்பாக செய்திருக்கிறார். சில கீழைத்தேச இசைக்கருவிகளை சேர்த்திருக்கலாம் என்பது என் ஆவல் ஐரோப்பிய வாத்தியக் கருவிகளே அதிகம் இசைக்கப் படுகிறது.இவரின் பேட்டி இதோ!GAJINATH GJ ARTSGAJINATH GJ ARTS

 படத்தொகுப்பு மிகவும் சிறப்பாக தொய்வு இல்லாமல் விறுவிறுப்பாக இருக்கிறது இதை செய்திருப்பவர்  சங்கர்
.
கமரா k.கவிநாத்.!

 கதை திரைக்கதை வசணம் இயக்கம் என்ற பணியுடன் நடிப்பும் மதன் என்கின்ற பாஸ்கரன்.

.படத்தின் சிறப்பு  நடிகர் என்பதைத் தாண்டி வசனகர்த்தாவாக பல இடங்களில் பாஸ்கரன்  கவனிக்க வைக்கிறார் .

புலம்பெயர் புதிய தலைமுறை இளைஞர்களுன் ஒழுக்க நெறிகளை துணிச்சலாக காட்டியிருக்கிறார் .பல பெண்களுடன் உறவு ,தான் போகும் குழுவன்முறை பாதை .எத்தனை பெண்களுடன் இவர்கள் சல்லாபம் ! தான் கட்டும் ஈழத்துப் பெண் மட்டும் கன்னித்தன்மையாக இருக்கனும்  என்ற எதிர்பார்ப்பு கபட நாடகம்!

சபாபதியின் புலம் பெயர் சாதியம் படிமம். முதியவர்களின் தனிமை, முற்போக்கு எண்ணம் ..சபாபதியுடன் தனிமரம்.
.நண்பர்களை உசுப்பேத்தினாலும் தன் சகோதரி இரானுவத்தால் சீரலிக்கப்பட்டதை பத்திரிகையில் படத்துடன் போட்டதால் தன் தமக்கைக்கு நல்ல வாழ்வு கிடைக்கவில்லை. நீ கதாநாயகியை கைவிடக்கூடாது என்று முற்போக்கு வாதியாக தன் நண்பனை அழுகையூடே வழி மொழியும் போது நியத்தில் எத்தனை பேர் அழுதார்கள் என்று பார்த்த போது எல்லோர் முகமும் இருந்த கோலம் என்னால் விபரிக்க
 முடியாது !பல பிரென்சில் பிறந்த அடுத்த தலைமுறை யுவதிகள் அழுது புலம் பியபோது சினிமா ஊடகம் என்பதா? இல்லை ஈழத்து உணர்வு என்பதா?நானும் இதே திரையரங்கில் எத்தனை படம்
 பார்த்திருக்கின்றேன் இப்படி உணர்வுடன் பார்ப்பது இது இரண்டாவது முதலில் ஆணிவேர்.இப்படியான படத்துக்கு கை கொடுப்பது யார் ? புலத்தில் நாம் மற்றவர்களுக்கு பாலா?,கற்பூரமா?பீர் ஊத்துவோரா? இல்லை கோப்பை கழுவினாலும் நம் துயர் சொல்லும் மதனுக்கு கைகொடுத்து ஊக்கிவிக்கும் ஈழத்தவனா??????
.தயாரிப்பாளர் ராணி  கலையகம் இவர் ஒரு பண்முகத்தன்மை  அறிவிப்பாளர் குறும்படத்தயாரிப்பாளர் கஜன்.

 படத்தில் குறை என்றாள் புதிதாக இங்கு வந்த யுவதி விரைவில் ஒரு சட்ட அறிவாளியாக காட்டப்படுவது என்னைப் பொருத்தளவில் காதில் பூ !

பலவிடயங்களை சொல்ல நினைத்து சில விடயங்களை ஆழமாக நோக்கவில்லை !படத்தில் வில்லன் பாத்திரம் தெளிவற்ற முடிவு . !படத்தின் இறுதிக்காட்சி வேறாக இருந்திருக்கலாம்!

 நாயகியின் உடையில் கவனம் செலுத்தியிருக்கலாம் .முக்கியமாக முதல் இரவுக்காட்சியில் தென்னக சின்னத்திரையின் பாதிப்பு அதிகமாக ஆட்கொள்கிறது.

 கலியாணப்பெண்ணின் நகை அலங்காரம். சேலை. இது புதியவர்களுக்கு  சேலை கட்டுவதில் உள்ள சிக்கல்  நாயகியின் உடலில் சேலை நழுவி விடுவது போல் இருக்கிறது.
இந்த வில்லன் பாத்திரத்துடன் தனி மரத்திற்கு நாலு வருட ரயில் சினேகம்!
தென்னக சினிமாவின் தாக்கம் அங்கங்கே எட்டிப் பார்த்தாலும் .ஒட்டு மொத்தத்தில் நம்மவர் படைப்பை தொடர்ந்து குறை கூறுவோர். இதைச் சரியாக இயக்கவில்லை என்போரும் ,நம்மவர்களுக்கு சினிமா சரியாக தெரியவில்லை என்பவர்களுக்கும் பதிலாக வந்திருக்கிறது தீராநதி!

 480 ஆசனங்கள் கொண்ட திரையரங்கில் மிகக்குறைந்தவர்கள் பார்வையாளராக இருந்தது கவலைதருகின்றது.
 இன்னும் நம் கலையின்  ஆர்வம் எழுச்சி பெறவில்லையா ?புதிய பாதையில் போகும் புலம் பெயர் படைப்பும் இன்னொரு சரித்திரம் படைக்க நாம் உதவுவது காலத்தின் கட்டாயம்! தீராநதி தீராத வலி!


  

  

47 comments:

  1. சுடு சோறு ஏதாச்சும் கிடைக்குமா ?

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

    ReplyDelete
  2. ஃஃஃஃஊரில் இருந்து பின்கதவாள் வந்துவிட்டு இங்கு வந்து நாம் காட்டும் வீரம் பிறநாட்டவருக்கு ஈழத்தவன் வன்முறைவாதிகள் என்ற பிம்பம் பதியப்படுகிறது. ஃஃஃஃஃ

    இது நீண்ட நாளாக என்னுள் இருக்கும் கேள்வி...

    ReplyDelete
  3. வாங்க சுதா முதலில் பால்கோப்பி குடியுங்கோ பிறகு தான் சுடுசோறுச் சாப்பாடு!

    ReplyDelete
  4. எனக்கும் அதே மன உளைச்சல் தான் நண்பா இவர்களின் ஆட்டத்தால் சில இடங்களுக்கு நிம்மதியாக போகமுடியாத நிலை! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுதா!

    ReplyDelete
  5. எனக்கு முட்டை கோப்பி தான் வேணும்.....
    கூகிளுக்கு ஏன் இந்த வேலை????

    ReplyDelete
  6. இப்பதிவை படித்த பின் உள்ளத்தின் ஊடே ஏதோஇனம் தெரியாத சேகம் ஏற்படுகிறது ஆனால்
    காரணம் தெரியவில்லை

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  7. வாங்க ஆகுலன் முட்டைக்கோப்பி தரலாம் மூக்குப் பேனி நிறைய !

    ReplyDelete
  8. நன்றி ஆகுலன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் கூகிள் அடிக்கடி தனிமரத்துக்கு தொழில்நுட்ப திறமை இல்லை என்பதை சுட்டி நிற்குது!

    ReplyDelete
  9. நன்றி புலவர் ஐயா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் புதிய தலைமுறையின் நெறிகெட்ட போக்கு என்று சொல்லமுடியும் !

    ReplyDelete
  10. மாப்பு உனக்கிருக்கு ஆப்பு காட்டான் கத்தி தூக்கீட்டான் லாச்சபல் பக்கம் வாடா காட்டான் கோஸ்டி  எண்டு ஒண்டு புதுசா உருவாக்கியாச்சு ..

    இப்ப காட்டான் வெய்யில் காலம் என்பதால் கோவணத்தோடு கொக்குத்தடிய வைச்சிருகான்யா ..

    அதென்ன ஒரே வீடியோவ இரண்டிடத்தில போட்டிருக்க நேற்று ராத்திரி என்ன மப்போ..?

    இனி நீ லாச்சபல்ல வெத்தில போட்டுக்கொண்டிருக்கிரவைய பாத்து வெருலப்போர என்னனு எங்கட அனுமதி இல்லாம எங்கள பத்தி எழுதுவா..? 

    எதில நாங்க ஒற்றுமை இல்லையோ இதில நாங்க ஒற்றுமை மாப்பு காட்டான் கோஸ்டி மட்டுமல்ல எல்லா கோஸ்டிக்கும் sms பன்னீட்டான் இந்த காட்டான்..!

    இப்ப உனக்கு குழய வைக்கிறேன் பெந்து வாரன் ஆபோட ..!

    ReplyDelete
  11. படத்தில் முன்னும் பின்னும் வருவது போல காட்சி இருக்கு அதுதான் தனிமரமும் இரண்டு இடத்தில் ஒரே காட்சியை சேருகி அழகு பார்க்கின்றது காட்டான் தனிமரம் லாச்சப்பல் போகாது இருப்பது தொலைவில்!

    ReplyDelete
  12. நல்ல விமர்சனம்,
    இன்னும் படம் பாக்கவில்லை பாஸ்
    இனித்தான் பாக்கணும்

    ReplyDelete
  13. நன்றி துஷ்யந்தன் வருகைக்கும் கருத்துரைக்கும் . தரமான நம்மவர் படைப்பு நிச்சயம் பார்க்க வேண்டிய படம்!

    ReplyDelete
  14. பாஸ் விமர்சனம் சூப்பர்...பட லின்குகளுக்கும் நன்றி...
    புலம்பெயர்ந்தவர்கள் என்ற விசயத்துள் எத்தனை விஷயங்கள் ஒளிந்திருக்கின்றன என்பது மேலோட்டமாக பார்த்ததால் தெரியப்போவதில்லை..
    அவர்கள் வெளிநாட்டு மாப்பிளைகலாவே தெரிவர் ..
    அங்கு உள்ள நிலைமை வேறாக இருக்கலாம்.எல்லாரையும் கூறவில்லை,
    இந்தப்படம் உண்மையில் சிறந்த கருத்தாழமிக்க படம் என நினைக்கிறேன் உங்கள் விமர்சனத்திலிருந்து..
    இங்கு இருப்பவர்கள் அனைவருக்கும் இது திரையிட்டு காட்டப்பட வேண்டும்!!

    ReplyDelete
  15. நன்றி மைந்தன் சிவா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்! நிச்சயம் தாயகத்திலும் இப்படம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவுத்துள்ளார்கள்!தரமான படைப்பு என்பதில் எனக்கு ஐயம்மில்லை.

    ReplyDelete
  16. மாப்பிள இப்பதான் நிரூபன் என்ர தோற்றத்த அறுவை சிகிச்ச செய்து மாத்தினார்..!

    நானும் என்ர போட்டோவ ஊருக்கு அனுப்ப முடிவெடுத்திருந்தேன் அதுக்குள்ள எங்கட குறூப் சண்டைய பற்றி வந்த படத்துக்கு விமர்சனம் என்ற பேரில புது மாப்பிளைகளுக்கு நீ ஆப்பு அடிச்சிட்டா..


    காட்டான் புதுசா ஒரு ஜாதகம் ரெடி பண்னிவைச்சிருந்தான் ... எல்லா கிரகமும் காட்டாண்ட வீட்டுக்க குந்தி குழவுற மாதிரி அதுக்கெல்லாம் நீ ஆப்பு வைச்சிட்டாய் என்று நினைக்காதே..!? வீர கேசரியில நான் ஒரு விளம்பரம் போட்டாவே பொண்னுங்க வருவார்களோ தெரியாது விளம்பரத்த பாத்திட்டு அவங்க ஆத்தாமார் என்ர பொண்னத்தாரன் உன்ர பொண்னதாரன்னு கியூவில நிக்க போறாங்க 
    காட்டானின் விளம்பரம் இதோ..!
    நன்கு முதலாம் வகுப்பு வரை படித்த நாற்பது வயது இளைஞனுக்கு அழகான சிவப்பு நிறமுடைய நன்கு படித்த பட்டதாரிப்பெண் தேவை  மாப்பிளை பாரீசின் உயர்ந்த கட்டிடமாம் மொம்பர்நாசின் சொந்தக்காரர்..!

    இந்த விளம்பரத்த பார்த்த பிறகும்  எனக்கு பொண்னு தரமாட்டார்கள் என்று நீ நினைத்தால் உன்னை நான் என்னவென்று அழைப்பது..!?

    ReplyDelete
  17. மாப்பிள இப்பதான் நிரூபன் என்ர தோற்றத்த அறுவை சிகிச்ச செய்து மாத்தினார்..!

    நானும் என்ர போட்டோவ ஊருக்கு அனுப்ப முடிவெடுத்திருந்தேன் அதுக்குள்ள எங்கட குறூப் சண்டைய பற்றி வந்த படத்துக்கு விமர்சனம் என்ற பேரில புது மாப்பிளைகளுக்கு நீ ஆப்பு அடிச்சிட்டா..


    காட்டான் புதுசா ஒரு ஜாதகம் ரெடி பண்னிவைச்சிருந்தான் ... எல்லா கிரகமும் காட்டாண்ட வீட்டுக்க குந்தி குழவுற மாதிரி அதுக்கெல்லாம் நீ ஆப்பு வைச்சிட்டாய் என்று நினைக்காதே..!? வீர கேசரியில நான் ஒரு விளம்பரம் போட்டாவே பொண்னுங்க வருவார்களோ தெரியாது விளம்பரத்த பாத்திட்டு அவங்க ஆத்தாமார் என்ர பொண்னத்தாரன் உன்ர பொண்னதாரன்னு கியூவில நிக்க போறாங்க 
    காட்டானின் விளம்பரம் இதோ..!
    நன்கு முதலாம் வகுப்பு வரை படித்த நாற்பது வயது இளைஞனுக்கு அழகான சிவப்பு நிறமுடைய நன்கு படித்த பட்டதாரிப்பெண் தேவை  மாப்பிளை பாரீசின் உயர்ந்த கட்டிடமாம் மொம்பர்நாசின் சொந்தக்காரர்..!

    இந்த விளம்பரத்த பார்த்த பிறகும்  எனக்கு பொண்னு தரமாட்டார்கள் என்று நீ நினைத்தால் உன்னை நான் என்னவென்று அழைப்பது..!?

    ReplyDelete
  18. இப்படித்தான் கொஞ்சப் பேர் நினைப்பில் இருக்கினம் அதற்கு முன்னர் போல் இல்லை தாயகம் பல தொழில்நுட்ப முன்னேற்றம் கண்டுவிட்டது இனியும் ஏமாற்ற முடியாது என்று ஓட்டைவடை இப்போது தான் மின்னஞ்சல் போட்டவர் காட்டான்!
    நிரூபன் தான் வருத்தப்படும் வாலிபர் சங்கத் தலைவராக இருந்து தாயகத்தில் கலியாணப் பெண்களை புறக்கனியுங்கள் என்று தொடர்ந்து அழைப்பு விடுவதை கவனிக்கவில்லைப் போலும் நீங்கள்! அவரின் பல பதிவுகள் என்னிடம் உண்டு ஆதாரம் காட்ட இது விடயமாக விரைவில் கருணாநிதி தலைமையில் கூடும் பொதுக்குழுவில் மேல்நாட்டு மருமக்கள் ஆகும் ஆலோசனையை முன்மொழிய இருக்கின்றது தனிமரம்!

    ReplyDelete
  19. நன்றி சி.பி.அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!

    ReplyDelete
  20. விமர்சனம் நல்லாயிருக்கு.கட்டாயம் பாக்கவேணும் !

    ReplyDelete
  21. நன்றி உங்கள் கருத்துக்கு ஹேமா நிச்சயம் பாருங்கள் கவனிக்க வேண்டிய படைப்பு!

    ReplyDelete
  22. என்னமோ ஃபீலிங்கா இருக்கே மக்கா....!!!

    ReplyDelete
  23. இந்த குழுவன்முறையும்  வேர் அறுக்கப்படவேண்டிய சமூக நோய் மனோ அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  24. பாரிஸ் தேசத்தில் நடக்கும் கதைக்களம் .இங்கு வரும் புலம்பெயர் மக்களின் இன்னொரு புதிய விடயமான வதிவிட அனுமதி என்ற ஒரு நடைமுறை தெரியாமல் தாயகத்தில் இருந்து அகதியாக வரும் என் போன்றவர்களின் விடியலுடன் படம் தொடங்குகின்றது.


    நாயகன் ஊரில் இருக்கும் தெய்வங்களை துணைக்கு அழைப்பதுடன் படம் கதை ஓட்டத்தைக் கூறுகிறது.காலையில் மதன் வெளியே போவதும் அதன் பின்னே கமராவும் பயணிக்கிறது.//

    வணக்கம் பாஸ்,

    கதையினை விடப் படம் பற்றிய அறிமுகத்தினைக் கொண்டு விமர்சனத்தை முன்னகர்த்தியிருக்கலாம். ஆரம்பத்திலேயே கதையின் கருவினைக் கூறுவதால், படம் பார்க்க வேண்டும் என மனைதினுள் எழும் ஆவல் ‘அடச் சீ...இது தானா கதை...’ எனும் ஐயப்பாட்டின் காரணமாக இல்லாமல் போகலாம்.

    விமர்சனங்களில் எம்மை நாமே முன்னிறுத்துவது அழகல்ல. படத்தின் கதையுடன் தொடர்புடைய வகையில் சம்பந்தப்பட்டவர்களை முன்னிறுத்தியிருந்தால் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  25. பாரிஸ் தேசத்தில் நடக்கும் கதைக்களம் .இங்கு வரும் புலம்பெயர் மக்களின் இன்னொரு புதிய விடயமான வதிவிட அனுமதி என்ற ஒரு நடைமுறை தெரியாமல் தாயகத்தில் இருந்து அகதியாக வரும் என் போன்றவர்களின் விடியலுடன் படம் தொடங்குகின்றது.


    நாயகன் ஊரில் இருக்கும் தெய்வங்களை துணைக்கு அழைப்பதுடன் படம் கதை ஓட்டத்தைக் கூறுகிறது.காலையில் மதன் வெளியே போவதும் அதன் பின்னே கமராவும் பயணிக்கிறது.//

    வணக்கம் பாஸ்,

    கதையினை விடப் படம் பற்றிய அறிமுகத்தினைக் கொண்டு விமர்சனத்தை முன்னகர்த்தியிருக்கலாம். ஆரம்பத்திலேயே கதையின் கருவினைக் கூறுவதால், படம் பார்க்க வேண்டும் என மனைதினுள் எழும் ஆவல் ‘அடச் சீ...இது தானா கதை...’ எனும் ஐயப்பாட்டின் காரணமாக இல்லாமல் போகலாம்.

    விமர்சனங்களில் எம்மை நாமே முன்னிறுத்துவது அழகல்ல. படத்தின் கதையுடன் தொடர்புடைய வகையில் சம்பந்தப்பட்டவர்களை முன்னிறுத்தியிருந்தால் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  26. மதன் எங்கே போகின்றான் என்பதன் ஊடாக கதை பின்னோக்கி விரிகின்றது//

    மதன் தன் நண்பனுடன் போகும் வழி நெடுக கதைவிரிந்து //

    இங்கே கதை சொல்லும் பாணிக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறீங்களே தவிர, விமர்சனத்திற்கல்ல. கொஞ்சம் அழகாகவும், ஆழமாகவும் அலசியிருக்கலாம். ஆனால் விமர்சனம் எனும் தலைப்பின் கீழ் தீராநதி படம் பற்றிய பார்வையினைக் கொண்டு வர வேண்டும் என்றால் கொஞ்சம் ஆழமான கண்ணோட்ட்டத்தை விமர்சனத்தைப் படிப்பவர்கள் பெற்றுக் கொள்ளும்படி செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  27. இதன் வலி புரிந்து அழுதவர்களில் தனிமரமும் சேர்ந்துதான் கலங்கிவிட்டது.!//

    தனி மரம்.....அடிக்கடி நான் வலைப் பதிவுகளில் காணும் விடயம், அப்போ நீங்கள் ஒரு அஃறிணைப் பொருள் என்றா சொல்லவிளைகிறீர்கள்?

    ReplyDelete
  28. பார்க்கும் போது தயக்கத்துடன் நாயகன் கடிதத்தை நீட்ட நாயகி ஒருக்கனம் காதல் கடிதமோ !என நினைத்து பின்னடிக்கும் போது நம்ம நாயகன் என்ன விஜய் போலவா?//

    ஒப்பீட்டு அரசியல் கொஞ்சம் சறுக்கலாக இருக்கிறது, காரணம் புலம் பெயர் சமூகத்தின் படைப்பினை முன்னூதாரணப்படுத்தி இன்னோர் சினிமாவை தாழ்த்தும் நிலையினை மேற்படி வசனம் தருகின்றது.

    ReplyDelete
  29. வாங்க நிரூ நலமா?
    நீங்கள் சொல்லுவதும் சரிதான் இப்படி ஒரு கோணம் இருக்கு என்று முயன்று இருக்கலாம்! இது முதல் முயற்ச்சி !

    ReplyDelete
  30. ஊரில் இருந்து பின்கதவாள்//

    இங்கே கதவாள் என்று தாழ்ப்பாளைத் தானே குறிக்கின்றீர்கள். ஆனால் கருத்துப் பிழையாக இருக்கின்றதே,
    தாழ்ப்பாள் ஊடாக எப்படிப் புலம் பெயர முடியும்?

    ReplyDelete
  31. ஆழமாக விமர்சனம் செய்யும் அளவுக்கு  முன்னேன்ற வில்லை நண்பா!

    ReplyDelete
  32. இன்னும் என்னை உணர்ந்து கொள்ளவில்லை என்றும் பொருள் படும் அதனால்தான் தனிமரம் என்று கூறவிலைகின்றேன்!

    ReplyDelete
  33. கோடம்பக்கம் இனி படை எடுக்கும் .கதாநாயகி வீட்டில் காத்திருக்கும் போது என்ன நடக்குது //

    சகோதரம், இந்த வசனத்தை முழுமையடையச் செய்திருக்கலாம். ஆனாலும் தொக்கியும்- தொக்காமலும் நிற்கும் வண்ணம் எழுதியிருப்பது விமர்சனத்திற்குப் பொருந்தாது. கவிதைக்குச் சரியாக அமையும், ஆனால் விமர்சனம் எனும் நிலமையில் பூரணமான பொருள் புலப்படும் வகையில் கூறினால் பலருக்கும் சிறப்பாக நமது படம் பற்றிய பார்வை சென்று சேரும்.

    ReplyDelete
  34. இங்கே பலர் விஜய் போல் நினைப்பதால் தான் உவமை சொன்னேன் அவரின் படங்களை மட்டம்தட்ட வில்லை நண்பா! 

    ReplyDelete
  35. வெளிநாட்டுக்குள் வருவது பலர் வேற ஒருவருடைய கடவுச் சீட்டைப் பயன்படுத்தி என்பதாகத்தான் பின்கதவாள் என்று கருத்துரைத்தேன் நண்பா!

    ReplyDelete
  36. என்பதை விறுவிறுப்பாகவும் குழுவன்முறையில் யார் வென்றார்கள் ?இந்தக்குழுவன்முறைக்கு முடிவு இல்லையா ?என பல கேள்விகளுடன் இறுதியில் என்ன நடந்தது என்பதை தீராநதியை திரையில் கானுங்கள்.!
    வில்லனில் இவனும் ஒருவன்.இவனுடன் ரயில் சிநேகம் 5 வருடம்!//

    இப்போது இரண்டாம் முறை படிக்கும் போது தான் நீங்கள் மேற் பந்தியில் பாதிக் கருத்தினையும், கீழ்ப் பந்தியில் பாதிக் கருத்தினையும் வசனம் முடிவடையாமலே பிரித்திருக்கிறீங்க. இது வேண்டாமே. காட்டான் கூட ஐ போனில் தான் எழுதுகிறார். ஆனால் ஒரு பதிவினை நான்கு ஐந்து முறை பார்த்துத் திருத்தி வெளியிடுகின்றார். அப்போது தான் பின்னூட்டங்களைப் படிக்கின்ற, பதிவினைப் படிக்கின்ற நபர்களுக்கு நம் மீதான ஈர்ப்பு ஏற்படும். ஒரு வாசகனை ஒரு போதும் நாம் சிரமப்படுத்த முயலக் கூடாது பாஸ்.

    ReplyDelete
  37. @Nesan கூறியது...
    வெளிநாட்டுக்குள் வருவது பலர் வேற ஒருவருடைய கடவுச் சீட்டைப் பயன்படுத்தி என்பதாகத்தான் பின்கதவாள் என்று கருத்துரைத்தேன் நண்பா!//

    அது பின் கதவால்.

    நீங்கள் சொல்வது பின் கதவாள்...

    கதவாள்....தாழ்ப்பாளாக இருக்குமோ என்று ஐயம் ஏற்படுகின்றது.

    ReplyDelete
  38. நன்றி நிரூ எழுத்துபிழையைச் சுட்டிக்காட்டி குட்டு வைத்ததற்குவ அது பின் கதவால் தான் ஐயம் வேண்டாம்! முடிந்தவரை படிப்பவர்களை குழப்பாமல் ஏழுத முயல்கின்றேன் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நிரூ!

    ReplyDelete
  39. இரு பாடல்கள் அறிமுகப் பாடலே கதையை கூறிவிடுகிறது sujeethG
    .அடிதடி வெட்டுக்குத்து எழுதியவர் சதாபிரனவன் .பாடியிருப்பவர் சுஜித்.காட்சியைப் பாருங்கள்.
    http://youtu.be/VFQa42fAJ8U+
    //

    ஒட்டியும் ஒட்டாமலும், வெட்டியும் வெட்டாமலும் என எழுதப்பட்ட விமர்சனம் இது என நினைக்கின்றேன். முதல் விமர்சனம் என்றாலும் கொஞ்சம் கூடிய கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் பின்னணி இசை, தொழில்நுட்பம், பாடல்வரிகள் பற்றிக் கொஞ்சம் விரிவாக அலசியிருக்கலாம்.

    ReplyDelete
  40. மிக மிக முக்கியமான விடயத்தினை இங்கே தவற விட்டு விட்டீங்க. அது தான் மொழி நடை. தாயகத்தில் உள்ள பலருக்கு(நான் உட்பட) புலம் பெயர்ந்த தமிழர்களின் மூன்றாவது தலை முறை- புலம் பெயர் நாட்டின் மொழியில் கல்வி பயிலும் தலை முறை இன்றைய கால கட்டத்தில் தமிழைச் சரிவர உச்சரிக்கிறார்களில்லை, பிற மொழி மோகத்தால் தமிழைப் புறக்கணிக்கிறார்கள் எனும் நிலமை காணப்படுவதாக கூறுக்ன்றார்கள்.

    அவர்களின் கருத்துக்களை உடைத்தெறியும் வண்ணம் படத்தின் கதை- வசனம்- மொழி நடை- உரையாடும் பாங்கு முதலியவற்றினை அலசியிருக்கலாம். தவற விட்டு விட்டீர்கள். கவலைக்குரிய விடயமாக இருக்கிறது..

    ReplyDelete
  41. மிக மிக முக்கியமான விடயத்தினை இங்கே தவற விட்டு விட்டீங்க. அது தான் மொழி நடை. தாயகத்தில் உள்ள பலருக்கு(நான் உட்பட) புலம் பெயர்ந்த தமிழர்களின் மூன்றாவது தலை முறை- புலம் பெயர் நாட்டின் மொழியில் கல்வி பயிலும் தலை முறை இன்றைய கால கட்டத்தில் தமிழைச் சரிவர உச்சரிக்கிறார்களில்லை, பிற மொழி மோகத்தால் தமிழைப் புறக்கணிக்கிறார்கள் எனும் நிலமை காணப்படுவதாக கூறுக்ன்றார்கள்.

    அவர்களின் கருத்துக்களை உடைத்தெறியும் வண்ணம் படத்தின் கதை- வசனம்- மொழி நடை- உரையாடும் பாங்கு முதலியவற்றினை அலசியிருக்கலாம். தவற விட்டு விட்டீர்கள். கவலைக்குரிய விடயமாக இருக்கிறது..

    ReplyDelete
  42. தீராநதி....உங்களது எழுத்துலகில் விமர்சனம் எனும் வகையில் உங்களின் முதல் அடியாக இருந்தாலும், கொஞ்சம் ஆழமான உதையினை- ஆழமான பார்வையினைத் தந்திருந்தால் சிறப்பாக இருக்கும்.

    தாமதமான பின்னூட்டங்களோடு,
    நேசமுடன்,
    செ.நிரூபன்.

    ReplyDelete
  43. தாமதமான வருகை என்றாலும் தரமான விமர்சனப் பார்வையுடன் வந்திருக்கீறீங்கள் நிரூ .பாடல்களை விமர்ச்சிக்கும் போது தவறு வரச் சந்தர்ப்பம் அதிகம் அதையும் தாண்டி ஒரு  பாடலை இனைத்தும் இருக்கின்றேன் !
    தொழில்நுட்பம் பற்றி சொல்லும் தகுதி எனக்கில்லை !
    மொழி நடை பூராகவும் தமிழ் உரையாடுவதால் நேரம் ஒதுக்கவில்லை அதையும் கடந்து இந்த விமர்சனத்திற்கு பாதாகமாக இருக்கக்கூடாது என்ற ஆவல் பாஸ்கரின் கடும் உழைப்பில் கல்லெறிய மனசில்லை! ஒவ்வொரு நிமிட தூக்கத்தின் வலியை ஒரிரு வார்த்தையில் இது சரியில்லை என்று மட்டும் சொல்லக்கூடாது!
    தனிமரமும் தனியாக தமிழ்கடைப்பக்கம் போகனுமே நண்பா!

    ReplyDelete
  44. நன்றி விடிவெள்ளி உங்கள்  வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete