24 September 2011

நொந்து போகும் ஒரு இதயம்!!

என் அருமை பதிவாளர்களே! இந்தத் தனிமரம் புதிய நீண்ட தொடருடன் உங்களிடம் வருகின்றேன்.
இதில் என்னுடன் முரன்பட்டிருக்கும் முன்னால் நண்பனின் கதை சில மாற்றங்களுடன் .
.விடை தேடுகின்றேன் .கதையில் யாரையும் புண்படுத்தும் என்றால் மன்னிப்பை இங்கேயே கேட்கின்றேன்
.தனித்தனியாக வருவதற்கு புலம் பெயர் தேடலில் தொலைந்து போகின்ற நேரம் அதிகம் என்பதால்!

நொந்து போகும் ஒரு இதயம்!!

வவுனியா இதுபல குளங்களையும் இனிய பல இயற்கை வளங்களையும் கானுவோரை கண்மயங்க வைக்கும் விவசாய பூமி.
.
வடக்கின் ஒரு சிறு தீவில் இருந்து யுத்த அரக்கன் போர் என்று தம்பட்டம் அடித்து எங்களை ஒரு சாக்குப் பைகளிலும் ,வண்டில்களிலும் முடிந்தவையை மட்டும் ஏற்றிக்கொண்டு பூனை குட்டியைக் காவியது போல் உயிரைக்காவிக்கொண்டு பல இடங்களில் வாடகை இருப்பிடங்களில் தாவித் தத்தளித்த எங்கள் குடும்பத்தில். இருந்து ஆப்பிரிக்க கவிஞன் சொல்லுவான் பாத்தியில் இருந்து பிடுங்கிப் போட்ட நாற்றைப் போல் என் குடும்பத்தில் இருந்து.

அக்காலப் பகுதியில் நடந்த போர்ச் சூழ்நிலையில் நானும் ஒரு பின்கதவு வழியாக தாண்டிக்குளம் ஊடாக சேற்றில் தத்தளித்து படையினரின் பலத்த விசாரனைகளைத்தாண்டி கோழிக்கூட்டு முகாமில் முத்தம் இட்டு ஒரு மாத பந்தியில் பருப்புடன்.


சில தலையாட்டிகளின் சில்மிசங்களைச் சந்தித்து,.

தந்தையின் பாசம் தன் மகனை மீட்க தன் முதுசகம் காணியை அறிந்தவரிடம் ஆதனமாக கொடுத்து. வட்டிக்கு பணம் வாங்கி அரச அதிகாரிகளிக்கு அன்பளிப்பு கொடுத்து கூட்டிச் சென்றது கோவில் குளம் என்ற வவுனியாவில் இருக்கும் ஒரு இடத்திற்கு.


ஹொரவப் பொத்தானைக்கும் மடுக்கந்த சந்திக்கும் வழிகாட்டும் நீண்ட பெரும் பாதை அவ்வழி .அயலில் இருந்தார்கள் மூவினமக்களும்.

தமிழர் ஒரு காலத்தில் அதிகம் வியாபாரம் செய்த பூமியில் சிலர் எல்லைதாண்டி வந்து வியாபாரம் செய்யும் இடமாகிப் போனது ஹொரவப் பொத்தானை எனப் பெயர் மாற்றிய மாம்பழச் சந்தி.


இங்கு நானும் எனது தந்தையின் தொழில் ஸ்தாபனத்தில் ஒரு ஊழியனாக சேர்ந்து கொண்டேன்.

தந்தையும் மகனும் வேறு பிரிவுகளில் வேலை புரிந்தோம்.

சிலகாலத்தில் சந்தைப் படுத்தல் அதிகாரி வேலையும் வந்து சேர கோழி மேய்த்தாலும் கோபுர மெந்தையில் மேய்க்கனும் என்ற அரச வேலை பார்க்கும் மாமியின் கனவில் பசிலன் 2000 போட்டுவிட்டு சேர்ந்தேன் தனியார் வேலையில்.

அருகில் ஒரு வீடும் வாடகைக்கு வந்தது சுதந்திரமாக இருப்பதற்கும் உறவுகள் வந்து சேர்ந்து விடும் என்ற காத்திருப்பில் முண்டியடித்து.

தந்தையை பொருளாதார சுமையில் தள்ளி நானும் அவர் தோல்களில் என் ஆசைகளை ஏற்றிவைத்தேன் .


ஏற்கனவே ஒருத்தனை தனியே விட்டு அவன் போன பாதை தெரியாமல் முகச் சவரம் மறந்து தாடிக்குள் தன்னை மூடிக்கொண்ட ஒரு பாசத்தின் கருனை உள்ளத்திற்கு! பொறுப்புணர்வு இல்லாத நவநாகரிக மன்னன் வாரிசு நானே எனத் திரிந்ததை என்னி !
இன்று நான் ஒரு தந்தை ஆனபின்பு துயர் உறுகின்றேன் .

தந்தையின் நிழலில் குடி கொண்ட தருணத்தில் நண்பனாக வந்தான் பிரபு!

இவனின் பூர்வீகம் ஒரு விசித்திரமானது தந்தை ஒரு பூர்வீக விவசாய செட்டிகுளம் வாசி. ஒரு மந்திரி போல் அமைதியானவர்.
அதிக மான்,மரைகள் என வேட்டையாடும் விவசாயப் பிரதேசத்தில் வளர்ந்தவர்.

அங்கே அக்காலத்தில் விவசாய சாகுபடிக்காலத்தில் பிறமாவட்டத்தில் இருந்து தொழிலாளர்கள் இடம் பெயர்ந்து பொருளாதார தேடலுக்காக வருவார்கள்.
அப்படி வரும் எல்லைக்கிராமத்தவர்களில் சகோதரமொழி உறவுகளும் இருப்பார்கள். அப்போது ஊர்காவல்படை என்ற ஒன்று தோற்றம் பெறவில்லை.

அப்புஹாமியின் லொறிகளில் பல வெட்டித்தங்கம் சுட்டு எடுத்து தட்டிச் செய்த பளபளக்கும் மேனியழகு குசுமாவதிகளும், அனோமாவதிகளும் அன்றாடம் பிழைப்புக்கு விவசாய காணிகள் தேடி அங்கும் இங்கும் போனார்கள்.
அவர்கள் காலத்தில் இனவாதப் பேய் கொஞ்சம் அடங்கியிருந்து மெல்ல மெல்ல வளரவெளிக்கிட்டது. குசுமாவதிக்கும் கந்தசாமிக்கும் இடையில் பிரபு வளரத்தொடங்கியது போல்.!


அவனைப் பெற்றதுடன் அவர்களுக்கு இருவீட்டாரின் உறவுகளுக்கும் பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழிக்க்ப்பட்டது போல் இவர்களும் வெளியேற்றப் பட்டார்கள்.

இருவரும் கைக்குழந்தையான பிரபுவுடன் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் அனுப்பிய மலையக மக்கள் போல் குடியுரிமை இழந்து தலைமன்னாரில் கப்பலுக்கு காத்திருந்த நிலை

..அவர்களை கோவில்குளம் அழைத்து வந்து இருப்பிடம் கொடுத்து உதவியாக தானும் இருந்தான் தேவன் என்ற கந்தசாமியின் நண்பன்!.

தொடரும்!...

பசிலன்..-2000 (வீரமறவர்களின் சுதேச கண்டுபிடிப்பு) மீள் பதிவு 23571

24 comments:

  1. மீள்பதிவா..தொடருமா? தேடிப்பார்க்கிறேன் தொடர்ச்சியை...நேசன்...

    ReplyDelete
  2. உள்ளேன் ஐயா,,

    அடுத்த பாகத்திற்காக வெயிட்டிங்.

    ReplyDelete
  3. பதிவிற்குத் தலைப்பு போடலையே...

    என் மச்சி.

    ReplyDelete
  4. வித்தியாசமான எழுத்து நடை

    ReplyDelete
  5. ஆகா.....அருமையான தொடர்..இந்தக்கதைக்களம் நகரும் இடங்கள் எனக்குத்தெரியும் என்பதால்..அந்த ஊர்கள் பற்றி மேலும் அறிய உதவும்..

    அப்பறம் எங்க தலைப்பை கானவில்லை..தலைப்பை போடுங்க அண்ணே..

    ReplyDelete
  6. இன்ட்லி எனக்கு வேலை செய்யுதில்ல,404 எரேர் வருது..

    ReplyDelete
  7. அன்பு உறவே நலமா?
    மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி.


    விறு விறுப்பாக போகிறது கதை...
    காத்திருக்கிறேன் அடுத்ததிற்காக..
    இப்படி கதையென்றால் எங்களுக்கு ரொம்ப பிடிக்குமே..

    ReplyDelete
  8. மனசு கனக்கும் தகவல் தொடரில் வரும்னு மனசு தவிக்குதே....!!!

    ReplyDelete
  9. சார் உங்கள் தொடர் அருமையா இருக்கு.

    ReplyDelete
  10. மனம் சங்கடத்தில் ஆழ்கிறது.தொடருங்கள்.

    ReplyDelete
  11. ஃஃஃஃஅவனைப் பெற்றதுடன் அவர்களுக்கு இருவீட்டாரின் உறவுகளுக்கும் பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழிக்க்ப்பட்டது போல் இவர்களும் வெளியேற்றப் பட்டார்கள்.
    ஃஃஃஃஃ

    எம் தனிப்பட்ட வாழ்க்கையில் அரசியலின் ஒவ்வாரு நகர்வுடனும் ஒப்பிட்டு உரைக்கக் கூடியவையே...

    காத்திருக்கிறேன்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    7 ம் அறிவு பாடலில் ஹரிஷ் ஜெயராஜ் அரைத்தமாவும், சுட்ட வடையும்

    ReplyDelete
  12. நன்றாயிருக்கிறது,ஆரம்பமே அமர்க்களமாக!வாழ்க!

    ReplyDelete
  13. நன்றி ரெவெரி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் தொடர் தொடரும் முழுவேகத்துடன் இணைந்து இருங்கள்!

    ReplyDelete
  14. என்ன நிரூ நான் என்ன பள்ளிகூட வாத்தியார் டாப்பு வாசிக்கிறனா உள்ளேன் ஐயா என்பது/ஹீ
     தொடரும் தொடர் இடையில் பயணங்கள் தடுத்த தால் மீண்டும் உத்வேகத்துடன்! 

    ReplyDelete
  15. தலைப்பு கீழே கொடுத்திருந்தேன் மீண்டும் திருத்தியுள்ளேன் நிரூ!

    ReplyDelete
  16. நன்றி கவி அழகன் வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  17. நன்றி ராச்  வருகைக்கும் கருத்துரைக்கும்!நீங்கள் உலாவும் திசைகளில் தனிமரம் தவழ்ந்தது நடந்தது!
    தலைப்பு மீள் பதிவில் சேர்த்திருக்கின்றேன்!

    ReplyDelete
  18. நன்றி மைந்தன் சிவா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்! இன்று எல்லாருக்கும் இண்ட்லி கஞ்சிதான்!

    ReplyDelete
  19. வாங்க விடிவெள்ளி நலம் நலம் அறிய ஆவல்! 
    நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் தொடர்ந்து வாசியுங்கள் கருத்துரையும் கூறுங்கள்!

    ReplyDelete
  20.  
    நன்றி மனோ அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் தொடர்ந்து வாசியுங்கள் கருத்துரையும் கூறுங்கள்!

    ReplyDelete
  21.  
    நன்றி கஞ்சிபாஜார் நாராயணா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் தொடர்ந்து வாசியுங்கள் கருத்துரையும் கூறுங்கள்!

    ReplyDelete
  22.  
    நன்றி சண்முகவேல் ஐயா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் தொடர்ந்து வாசியுங்கள் கருத்துரையும் கூறுங்கள்!
    தனிமரத்தின் தாழ்மையான வேண்டுகோள்!

    ReplyDelete
  23. நன்றி மதிசுதா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் .நேரம் இருக்கும் போது வாசித்து ஒரு கருத்துரையும் கூறுங்கள் அதுதான் என் வலைப்பயணத்திற்கு மெருகூட்டும்!

    ReplyDelete
  24. நன்றி ஜோகா அண்ணாவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நீங்கள் வாழ்த்துவதில் தனிமரம்  பெருமைப்படுகின்றது.

    ReplyDelete