29 September 2011

பிடித்த பாட்டுக் குரல் மீள்பதிவு

இசையாள் வசமாகாத உள்ளம்கள் இருக்குமா?தமிழ் திரையுலகில் பிரிக்கமுடியாத பாகம் பாடல்கள் ! ஒவ்வொருபாடல்களும் பலதொழில் நுட்பக்க கலைஞர்கள் பங்களிப்புடன் காற்றில் தூதுவிடப் படுகிறது! ..
பாடல்கள் பாடி நடித்த காலம் போய் பின்னனி பாடுவதற்கு பலபாடகர்கள் திரையிசையில் குரலில் அறிமுகமானார்கள். முகம் தெரியாவிட்டாலும் குரல் அவர்களை பல்லாயிரம் ரசிகர்களை அவர்கள் பின் தொடரக் காரணமானார்கள் .அந்த வழியில் என்னைக் கவர்ந்த பின்னனிப் பாடகர்/ பாடகிகளில் என்றும் முதன்மையானவர்! ..

பாடகி ஜென்சி !
இவரின் குரலில் ஏதோ ஒரு மயக்கம் எனக்கு இன்று மூன்று தசாகப்தமாக என் செவிகளுக்கும் மனதிற்கும் ஒரு தாயைப்போல் ,சகோதரியாக ,காதலியாக,வழித்துனையாக வருகின்ற இசைப்பிடிப்பூ.
தமிழ் திரையில் குறிப்பிட்ட பாடல்களைப் பாடிய ஜென்ஸியின் கிறீச் குரல் வழியே நம்ராஜாவின் இசையில் அவருடன் டூயட் பாடிய காதல் ஓவியம் பாடும் காவியப் பாடல் பொங்கும் பூம்புனல் ஊடாக வந்து கிரமர்போன் (எங்க ஊரில் ரொட்டியில் பாட்டுப் பாடும் கறுப்பு நாடா) எங்கள் வீட்டில் காலையிலும் மாலையிலும் கீதம் இசைக்கும் எப்படி மனதில் நுழைந்தது என்று( காதலைப் போல்) இன்றுவரை தெரியவில்லை !
., .....இடப்பெயர்வு வரமுன் நம் ஊர்களில் குழாய் புட்டில்(லக்ஸ்பீக்கர்) பாட்டுப்போடும் கலியான வீடுகளில் எல்லாம் அழையாத விருந்தாளி ஜென்சியின் பாடல் அடங்கிய டெப்(tape) .எப்போதும் தாலாட்டும் ராஜாவின் குரலுடன் அந்த அலைகள் ஓய்வதில்லைப் படப்பாடல் என்னுடன் பலமுறைகளில்( ரொட்டி,tape,cd,mp3, ipod) இன்று ஐ-போன் ஊடாகவும் மீளா அடிமையாக வாழ்வில் ஒரு பாகமாக தொடர்கிறது .காலமாற்றம் தொழில் நுட்பங்களில் பாடல் பதிவு முறைமாருகின்றது மனம் மாறுதில்லை.
..
காதல் ஓவியம் பாடலின் இடையில் "தாங்கு மோ என் தேகமே மன்மதனின் என்ற "வரியை ஒரு சுற்று ஹம்மிங்கில் ஆலாபனை
செய்வதாகட்டும் முடியும் வேளையில் ராஜாவின் பின்னே செல்லும் லாலா லாலா ஹம்மிங்கில் ஒரு தேவதை கூடவருவது போன்ற உணர்வை எனக்கு எப்போதும் கேட்கும் போது தரும் அந்தக்குரலில் ஒரு ஈர்ப்பு !

..
இன்னொரு சிறப்பான பாடல் ராஜாவின் ராஜாங்கத்தில் உல்லாசப்பறவைகள் படத்தில் வரும்" ஏதோ தெய்வீக ராகம் கேட்காத பாடல்"" என்ற பாடலில் ஒரு மயக்கமான குழைவை குரலினுடே தந்தாலும் படத்தில் இப்பாடல் காட்ச்சி சொதப்பல் என்பேன் .
என்பின்னிரவுப் பயணங்களில் தாலாட்டாகவும் மன புத்துணர்ச்சிக்கும் பாடலின்" தந்தன் தந்தன் ஹம்மிங் சரியாக ஜென்ஸியிடம் கைபிடித்து போகையில் என் தேவதை வருவதைப் போன்ற பரவசம் ஏற்படுகிறது!

நிறம்மாறாத பூக்கள் படத்தில் இருபாடல்களும் இசையானியின் ஆத்மாவான பாடல் சிறப்பாக ஜென்ஸின் குரலினுடே என்னை கட்டிப்போட்ட பாடல்களில்
""..
இனிய ஹம்மிங் உடன் ஆயிரம் மலர்களே மலர்களே! இப்பாடலின் வைரமுத்துவின் வரியை ரசித்து அதன் பாவத்தை குரலில் தருவதில் எனக்கு எப்போதுமே இவர்குரலில் தனியின்பம்"
மற்றப்பாடல்" இருபறவைகள் மலை முழுவதும் "பாடலில் மலையடிவாரத்தில் காட்சிகள் படம்பிடிக்கப் பட்டிருக்கும் பாடலின் பின்னே அவரின் குரலில் மலையலகை ரசிக்க முடியும்!
..
இன்னும் ஜானியில் ஒரு சிறியபறவை,கீதா சங்கீதா என்று ஜெயச்சந்திரனுடன் சேர்ந்து பாடிய அன்பே சங்கீதா படப்பாடல், கரும்புவில்  படத்தில் ஜேசுதாஸ் உடன் பாடிய மீண்பிடித்தேரில் மன்மத ராஜன் ,பாடல்களும் என் இரவுப் பொழுதுகளை தாலாட்டும் ஜென்ஸி சில பாடல்களை பாடினாலும் முத்திரை பதிதவர். கேரளாவில்
குடித்தனம் நடத்தும் இந்தக்குயில் மீண்டும் பாட சந்தர்பம் கிடைத்தாள் தமிழ் திரைக்கு குரலில் இசை மீட்ட தயார் என அன்மையில் ஒரு வார சஞ்சிகையில் கூறியிருந்தார்...
..

மொழியை சிதைக்கும் பாடகர்களும், குத்துப்பாட்டில் கும்மியடிக்கும் இன்றைய சூழலில் குரலில் அமைதியான இசையை மதிப்பவர்கள். பின்னனிபாடுவது வியாபாரம் என என்னும் நிலையில் மீண்டும் ஒருவலம் வரத்துடிக்கும் இந்தக் கீதம் சிந்துபாட முடியுமா?

38 comments:

  1. பதிவின் தலைப்பு இல்லையா என்ற நண்பர்களுக்காக இதோ தனிமரம் மீண்டும் அதே பதிவுடன் !
    நண்பர்களின் பின்னூட்டம் பின்னர் வெளியிடப்படும் இப்ப விழிகளுக்கு உறக்கம் !( நன்றி கனேஸ் மற்றும் நிரூபனுக்கு)

    ReplyDelete
  2. நல்ல பதிவு.நல்ல பகிர்வு.நல்ல பதிவு.நல்ல பகிர்வு.

    ReplyDelete
  3. என்ன பாஸ் இது புது ஸ்டைலா இருக்கு நேத்தைக்கு போட்ட பதிவை இன்னைக்கு மீள் பதிவா அட இது நல்லா இருக்கே.ஹி.ஹி.ஹி.ஹி

    ReplyDelete
  4. ஜென்சி பாடல்கள் எனக்கும் ரொம்ப பிடிக்கும்...

    ReplyDelete
  5. ல் க்கு பதில் நிறைய ள் உபயோகிக்கிறீங்க நேசன்...பார்த்துக்குங்க...(எனக்கே ஒழுங்கா தமிழ் வராது,,,-:)

    Please delete this comment after reading...

    ReplyDelete
  6. நல்ல பதிவு பாஸ்..

    பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  7. Powder Star - Dr. ஐடியாமணி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"இசையாள் வசமாகாத உள்ளம்கள் இருக்குமா?தமிழ் திரையுலக...":

    வணக்கம் நேசன் அண்ணை! எனக்கும் ஜென்சி அக்காவை ரொம்ப பிடிக்கும்! காதல் ஓவியம்...... அந்த அனுபவத்தை வார்த்தைக்குள் அடக்க முடியாது!



    28 செப்டெம்ப்ர், 2011 3:34 pm அன்று தனி மரம் இல் Powder Star - Dr. ஐடியாமணி ஆல் உள்ளிடப்பட்டது

    ReplyDelete
  8. K.s.s.Rajh உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"இசையாள் வசமாகாத உள்ளம்கள் இருக்குமா?தமிழ் திரையுலக...":

    வணக்கம் பாஸ் நான் இவங்கள் பாடல்கள் பலவற்றை கேட்டு இருக்கின்றேன் ஆனால் இவங்க பத்தி தெரியாது உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது நன்றி



    28 செப்டெம்ப்ர், 2011 6:49 pm அன்று தனி மரம் இல் K.s.s.Rajh ஆல் உள்ளிடப்பட்டது

    ReplyDelete
  9. K.s.s.Rajh உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"இசையாள் வசமாகாத உள்ளம்கள் இருக்குமா?தமிழ் திரையுலக...":

    பதிவுக்கு தலைப்பை எங்க காணவில்லை பாஸ்...ஒரு வேளை தலைப்பு போடாமல் பதிவு போடுவதுதான் இப்ப ஸ்டைலோ



    28 செப்டெம்ப்ர், 2011 6:50 pm அன்று தனி மரம் இல் K.s.s.Rajh ஆல் உள்ளிடப்பட்டது

    ReplyDelete
  10. Ramani உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"இசையாள் வசமாகாத உள்ளம்கள் இருக்குமா?தமிழ் திரையுலக...":

    நானும் ஜென்சி ரசிகனே
    மிக அழகாக அவருடைய குரலின் சிறப்பை
    விவரித்துப் போகிறீர்கள்
    நல்ல குரல் என்பதையும் மீறி அவருடைய
    குரலில் உள்ள வசீகரம் அனுபவித்தால்தான் புரியும்
    அருமையான பதிவைத் தந்தமைக்கு நன்றி



    28 செப்டெம்ப்ர், 2011 6:51 pm அன்று தனி மரம் இல் Ramani ஆல் உள்ளிடப்பட்டது

    ReplyDelete
  11. கணேஷ் உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"இசையாள் வசமாகாத உள்ளம்கள் இருக்குமா?தமிழ் திரையுலக...":

    ஜென்சி எனக்கும் அபிமான பாடகி. மீன்கொடித் தேரில் பாடல் இடம் பெற்ற படம் கரும்பு வில். பூந்தளிர் அல்ல. பூந்தளிர் படத்தில் ஞான் ஞான் பாடணும் என்ற ஜென்சியின் அருமையான பாடல் உள்ளது.



    29 செப்டெம்ப்ர், 2011 12:20 am அன்று தனி மரம் இல் கணேஷ் ஆல் உள்ளிடப்பட்டது

    ReplyDelete
  12. சின்ன தூறல் உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"இசையாள் வசமாகாத உள்ளம்கள் இருக்குமா?தமிழ் திரையுலக...":

    எப்போதுமே பாடுபவரின்
    குரல் இனிமையாகத்தான்
    இருக்கிறது...

    பாடலின் வரிகளும்,
    இசையும்தான்
    மனதை மயக்குவதாகவும்..,
    பாடுபவரின் குரல்
    மயிலிறகாய் வருடவும்
    செய்யும்...

    இக்காலத்தில் அதை
    எதிர்பார்க்க முடியாது..
    இனிமையான பாடல்கள்
    மனதை மயக்கும் பாடல்கள்
    நீங்கள் கூறிய காலங்களில்
    தான் அதிகமாய் கிடைத்தது



    29 செப்டெம்ப்ர், 2011 3:25 am அன்று தனி மரம் இல் சின்ன தூறல் ஆல் உள்ளிடப்பட்டது

    ReplyDelete
  13. வைரை சதிஷ் உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"இசையாள் வசமாகாத உள்ளம்கள் இருக்குமா?தமிழ் திரையுலக...":

    தலைப்பயே கானோம்.

    தலைப்பு எங்க போச்சி



    29 செப்டெம்ப்ர், 2011 4:16 am அன்று தனி மரம் இல் வைரை சதிஷ் ஆல் உள்ளிடப்பட்டது

    ReplyDelete
  14. shanmugavel உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"இசையாள் வசமாகாத உள்ளம்கள் இருக்குமா?தமிழ் திரையுலக...":

    ஜென்சி ஒரு அருமையான வளம் கொண்டவர்.அப்புறம் முதலில் சொன்ன விஷயம் ,இசைக்கு மயங்காதவர் யாருமில்லை.



    29 செப்டெம்ப்ர், 2011 6:50 am அன்று தனி மரம் இல் shanmugavel ஆல் உள்ளிடப்பட்டது

    ReplyDelete
  15. MANO நாஞ்சில் மனோ உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"இசையாள் வசமாகாத உள்ளம்கள் இருக்குமா?தமிழ் திரையுலக...":

    காதல் ஓவியம பாடும் காவியம், மனசுக்கு தாலாட்டு...!!!



    29 செப்டெம்ப்ர், 2011 12:37 am அன்று தனி மரம் இல் MANO நாஞ்சில் மனோ ஆல் உள்ளிடப்பட்டது

    ReplyDelete
  16. இது மீள் பதிவு வாரமோ ?? அவ்வ்

    பட் அழகு பதிவே

    ReplyDelete
  17. ஜென்சி எனக்கும் மிக பிடித்தமான பதிவர்

    ReplyDelete
  18. நன்றி விமலன் வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  19. நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும் நீங்கள் தானே முதலில் தலைப்பு எங்கே என்று கேட்டீர்கள் அதனால் தான் இப்படி ஹீ ஹீ!

    ReplyDelete
  20. நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  21. நன்றி ரெவெரி  எழுத்துப்பிழைகளை சுட்டிக்காட்டியதற்கு இனி வரும் காலத்தில் கவனமாக இருக்கின்றேன் .தனிமரன் தவறுகளை சுட்டிக்காட்டினால் தயங்காமல் வரவேற்கும் என்பதற்காக இந்த பின்னூட்டம் இப்படியே இருக்கட்டும் நண்பா!

    ReplyDelete
  22. நன்றி நிரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும் உதவிக்கும்!

    ReplyDelete
  23. நன்றி ஐடியா மணிசார் வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  24. நன்றி ராச் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  25. நன்றி ரமனி ஐயாஉங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்! ஜென்சி ஒரு கீதம் சங்கீதம்!

    ReplyDelete
  26. நன்றி கனேஸ் ஐயாஉங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்! பாடல் பிழையை திருத்தி விட்டேன் தவற அறியத்தந்த தற்கு நன்றி!

    ReplyDelete
  27. நன்றி சின்னத்தூரல் வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  28. நன்றி வைரை சதீஸ்  வருகைக்கும் கருத்துரைக்கும்! தலைப்பு இப்போது சரி செய்துவிட்டேன்!

    ReplyDelete
  29. நன்றி சண்முகவேல் ஐயா  வருகைக்கும் கருத்துரைக்கும்! 

    ReplyDelete
  30. நன்றி மனோ அண்ணாச்சி   வருகைக்கும் கருத்துரைக்கும்! காதல் ஓவியம் ஒரு கீதம் மனதில் இன்னும்!

    ReplyDelete
  31. வாங்க துஸ்யந்தன் விடுமுறை நல்லதாக இருந்திச்சா! உங்களை பாட்டோடு வரவேற்கத்தான் மீள் பதிவு! ஹீ ஹீ

    ReplyDelete
  32. நன்றி துசியந்தன் கருத்துரைக்கும் வருகைக்கும் என்னைப் போல் உங்களுக்கும் கைபேசி எழுத்துப் பிழையை அதிகம் தருகின்றது போலும் பாடகி என்பதற்குப் பதிலாக பதிவர் என்று  பதிவு செய்திருக்கின்றது.

    ReplyDelete
  33. நல்லபதிவு .பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  34. பாடகி ஜென்சி ! இவரின் குரலில் நானும் மயங்கியிருக்கேன்.. அதிகளவா பாடவில்லையென்றாலும்.. பாடிய் ஒவ்வொன்றும் முத்துக்கள்..

    நல்ல பதிவு

    ReplyDelete
  35. நன்றி கோபிராச் வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  36. நன்றி ரியாஸ் வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  37. நல்ல பாடலைப் பற்றிய பதிவு ,பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  38. நன்றி M.R வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete