20 October 2011

நொந்து போகும் ஒர் இதயம்-8

சிலப்பதிகாரத்தில் மாதவி தொடக்கம் வானம் படத்தில் அனுஸ்கா முதல் இந்தப் பாத்திரங்களை விரும்பியா செய்கின்றார்கள்?


 சமூகத்தில் நடக்காமல் இருக்கவில்லைத்தானே!
 காலகாலம் இது தடுக்க முடியாது.

 தாய்லாந்து மங்கைகள் விரும்பி உடல் விற்பதில்லை. வறுமை அல்லது இன்னொரு தொழில் .ஜப்பானில் அமெரிக்கா பாதுகாப்புப் படை வீரர்கள் உடல்பசி தீர்க்க அங்கே நடக்கும் சீரலிவை சர்வதேச நாளிதல்கள் தாங்கி வந்தாலும் பின்னாள் மறைக்கப்படுகின்றது.

 . இந்த விடயங்களை தாங்கி அதாவது உடல் பசியைத் தீர்த்தவர்கள் பலர் பெண்கள் பெயரில் தன் தேன் நிலவு இரவு மறக்கமுடியாத நாட்கள் என்று சகோதரமொழியில் சிற்றிதல்கள் பல (ஆரலிய,பிந்து,ரந்துரு,ரோச,) வாராவாரம் வெள்ளி, புதன் கிழமைகளில் வெளிவரும்.

 இந்த இதழ்கள் வந்த வேகத்தில் விற்பனையாகிவிடும்.

 பல இராணுவச் சிப்பாய்கள் சில கடைகளில் சந்தாதாரர்களாக இருந்தார்கள்.
 நண்பர்கள் குழுவில் சிலர் இதை வேலை நேரத்தில் எங்காவது வாகனத்தை நிறுத்திவிட்டு வாசித்து விட்டு ஒழித்து வைத்து விடுவோம்.

 இமேச்  பிரச்சனை அப்போது. நம்மவர்கள் கண்களில் பட்டால் மானம் காற்றில் சொந்தச் செலவில் சூனியம் வைப்பார்கள்.

 சமயத்தில் சோதனை செய்யவரும் படையினர் இந்தப் பத்திரிக்கையைக் கண்டால் நமட்டுச் சிரிப்புடன் சோதனை செய்யாமல் பத்திரிக்கையை கொண்டு போய்விடுவார்கள்.


 என் நண்பர்கள் வாகனம் சோதனைச் சாவடியில் அதிக நேரங்கள் நிறுத்தப்படும் .

நானோ விரைவில் வெளியேறிவிடுவேன் இரட்டைப் பெரியகுளம் பகுதி என்றாளும், மன்னார்ச் சாவடி நுழைவாயில், நானாட்டான் பகுதி என்றாளும்,

 என் வாகனத்திப் முன் பகுதியில் இந்தப்பத்திரிக்கை சிரித்துக்கொண்டிருக்கும்.

 இது எல்லாம் ஒரு வியாபார தந்திரம் கில்மா பதிவு போட்டு ஹிட்ஸ் கொடுப்பது போல்தான்!

அன்று வாங்கிய அந்த இதழ் என் பின்புற பொக்கட் இல் இருப்பது சாலிக்காவுக்குத் தெரியும்!
  அதை எடுக்கவே என் பின்புறத்தின் பொக்கட்டில் கைவைத்தாள்.

சில வார்த்தைகள் விளங்கா விட்டாள் அவளிடம் கேட்டாள் சொல்லுவாள் எனக்கும்  அவளுக்கும் வயது ஒன்றே வித்தியாசம்.

 நாங்கள்  இருவரும் அனுராதபுரம் போகும் சொகுஸ பஸ்சில் ஏறினோம்   வழிகள் ஊடே அவள் அந்த இதழை படித்து விட்டு தன்  வீட்டில் சாப்பிடுங்கோ என்று என்னை நச்சரித்தாள்.

 இல்லை இன்று அக்ரம் வீட்டில் தான் சாப்பாடு காலையில் அவனுடன் திருகோணமலை   போகனும் என்றேன்.

 அவர்களின் பொருளாதார நிலை அறிந்தவன் நடைமுறைகள் எங்களுக்குத் தெரியும்.

 அதையும் தாண்டி இப்போதெல்லாம் சாலிக்கா என் மீது அதிகம் உரிமை எடுத்துக் கொள்வாள் இதனை தொடரக்கூடாது என்று என்மனதிற்குல் சங்கல்ப்பம்  கொண்டேன் !

பேஜர் எனக்கு நிறுவனம் கொடுத்த காலத்தில் இருந்து சாலிக்கா அனுப்பும் குறுஞ்செய்தி தொல்லை தாங்காமல் தான் கைபேசிக்கு மாறினேன்!

 ஆனால் அதன் பின்பு இன்னும் அதிகமான தொடர் குறுஞ்செய்தி அனுப்புவாள்.
 இதை எல்லாம் நானும் அனுமதிக்கக் முடியாது.

  என்று ஆரம்பத்தில் அவளுக்கு சொல்லியிருந்தேன் .

"உங்கள் அளவுக்கு யாரும் புரிந்துகொள்ளவில்லை என்னை "என் ராஜகுமாரன் வரும் வரை ஒரு நண்பியாக என்னை நடத்த மாட்டாயா ?தனிமரம் என்று அவள் வைக்கும் ஒப்பந்தம் என்முன்னே!

 இருக்கும் போது நானும்  பண்டாராநாயக்க கிழித்துப் போட்ட செல்வா ஒப்பந்தம் போல் இல்லாமல் தமிழ்ர் கூட்டணிபோல் மதில் மேல் பூனைதான் .

வவுனியாவில்  எங்காவது குண்டு வெடித்தால் ,துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தால் அவள் கடமை புரியும் செட்டிக்குளம் பகுதியில் இருந்து கைபேசியில் அழைத்து நலமாக இருக்கின்றேனா ?
என்று கேட்பாள் மிகவும் வெகுளித்தனம் அவள் !

மாத்தயா என்று என் பெயரையும் சேர்த்துச் சொல்லும் போது.
மனதுக்குள் பட்டாம் பூச்சி பறக்கும்.

  என்றாளும் நடைமுறைச் சிக்கல்கள் அறிந்தவன் பிழைவிட்டால் வரலாறு மன்னிக்காது என்று பிரமிள் கவிதை ஒன்று சொல்லும் .


மாத்தயா- அதிகாரி
தொடரும்

49 comments:

  1. சமூகத்தில் நடக்காமல் இருக்கவில்லைத்தானே!
    காலகாலம் இது தடுக்க முடியாது.
    //

    தடுப்பது கஷ்டம தான்!

    ReplyDelete
  2. என் வாகனத்திப் முன் பகுதியில் இந்தப்பத்திரிக்கை சிரித்துக்கொண்டிருக்கும்.
    //

    என்னமா யோசிக்கிரிங்க?
    //
    இது எல்லாம் ஒரு வியாபார தந்திரம் கில்மா பதிவு போட்டு ஹிட்ஸ் கொடுப்பது போல்தான்!
    //

    அட இது வேறையா?

    ReplyDelete
  3. இது எல்லாம் ஒரு வியாபார தந்திரம் கில்மா பதிவு போட்டு ஹிட்ஸ் கொடுப்பது போல்தான்!//

    சிபி'யின் டவுசர் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....மாட்னான் வசமா ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  4. எழுத்துப்பிழைகள் இருந்தாலும் உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது...!!!!

    ReplyDelete
  5. காலகாலம் இது தடுக்க முடியாது//

    தடுப்பது கஷ்டம தான நேசன்...

    கில்மா பதிவு=HITS //

    ஹி ஹி...

    ReplyDelete
  6. இப்போதெல்லாம் சாலிக்கா என் மீது அதிகம் உரிமை எடுத்துக் கொள்வாள் இதனை தொடரக்கூடாது என்று என்மனதிற்குல் சங்கல்ப்பம் கொண்டேன் !////இது நல்ல புள்ளைக்கு அழகு!

    ReplyDelete
  7. நன்றி கோகுல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  8. மனோ அண்ணாச்சி இப்படி சி.பி அண்ணாவுடன் தனிமரத்தை கோர்த்துவிடுவதா??

    ReplyDelete
  9. முடிந்தளவு எழுத்துப்பிழைகளைத் தவிர்க்கின்றேன் ஆனாலும் வந்து விடுகின்றது மனோ அண்ணாச்சி நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  10. நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  11. நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும். நான் நல்ல பிள்ளையாகத்தான் எப்போதும் இருக்க விரும்புகின்றேன்.

    ReplyDelete
  12. நன்றி அருள் வருகைக்கு!

    ReplyDelete
  13. தனிமரம் கூறியது...
    நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும். நான் நல்ல பிள்ளையாகத்தான் எப்போதும் இருக்க விரும்புகின்றேன்./// நானும் அதனைத் தான் சொன்னேன்!எங்கள் பிள்ளைகள் எப்போதும் நல்ல பிள்ளைகளே!

    ReplyDelete
  14. ஐயா, நானும் நல்ல பிள்ளை தானே...

    ReplyDelete
  15. அந்தப் புத்தகம் மீது, அந்த வயதில் ஆர்வம் வருவது சகஜம் தான். ஆனால் தோழியுடன் படிப்பது என்பது....கொஞ்சம் ஓவர் தான்..

    ReplyDelete
  16. உங்கள் நிதானம் எனக்கு வியப்பளிக்கிறது நேசரே..தெளிவான மனது..வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. நன்றி யோகா ஐயா உங்கள் புரிதலுக்கும் ஊக்குவிப்புக்கும்.

    ReplyDelete
  18. வாங்க செங்கோவியாரே நீங்கள் நல்ல பிள்ளை என்பதால் தானே இத்தனை தூரம் ஓடிவாரம்.உங்கள் பின்னால்.

    ReplyDelete
  19. செங்கோவியாரே அது பத்திரிகை அதுமட்டும்மல்ல சகோதரமொழி நங்கைகள் நம் குலப் பெண்கள் போல் பம்முவது இல்லை (மன்னிக்கவும் நான் அதிகம் சகோதரமொழி நங்கைகளுடன் தான் தொழில் நிமித்தம் பழகியிருக்கின்றேன்  ) அவர்கள் பத்திரிகையில் என்ன படிக்கின்றார்கள் என்பது அருகில் இருக்கும் போது தானே தெரியும் அதில் மறைக்க எதுவும் இல்லை அத்துடன் ஆமியில்/நேவி/எல்லைபடை பெண்கள் ஆண்கள் அதிகம் a ஜோக்ஸ் தான் கதைப்பினம் நல்ல புரிந்துணர்வுள்ளோர் ஆபிஸ்களில் கதைப்பதைப்போல் தான் நாங்கள் பேசிக்கொள்வது.

    ReplyDelete
  20. நன்றி செங்கோவியாரே வாழ்த்துக்கு!
    கடவுள் எப்போதும் என்னை பல இணக்குழுமத்துடன் பழகவிட்டதால் வந்த தெளிவு அதையும் தாண்டி இந்த எல்லைக்கிராமத்து வேலை நிச்சயம் அற்ற நிலையில் கரணம் தப்பினால் மரணம் தான்.

    ReplyDelete
  21. உங்கள் பின்னுட்டத்தை பற்றி என் பதிவில் எழுதியிருக்கிறேன் . நேரம் இருந்தால் பார்க்கவும்
    http://manasaali.blogspot.com/2011/10/01_21.html

    ReplyDelete
  22. அப்பவே ரொம்ப தெளிவாவும் பக்குவமாவும் இருந்திருக்கீங்க...

    ReplyDelete
  23. நன்றி மனசாலி என்னையும் உங்கள் மகுடத்தில் சிறப்பித்தற்கு!

    ReplyDelete
  24. காலம் சிலரை பக்குவப் படுத்தும் என்பார்கள் அது எனக்கு இயல்பாக அமைந்து விட்டது பன்னியாரே !
    நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  25. மாத்தையா என்று ஒரு மாது அழைத்தால் மகிழ்ச்சி வருவது இயல்பு தானே ஹி ஹி

    ReplyDelete
  26. தோழியுடன் புத்தக படிப்பு, பேஜர் தொந்தரவுகள், ராஜகுமாரன் வரும் வரை தானே.... மாத்தையா.. என்று அழைப்பு... மொத்தத்தில் மாத்தையா மீது ஈர்ப்பு அதிகாமவிட்டது... ஆபத்தா.. அல்லது அழகா... என்னாகிற்று என அடுத்த பதிவில் பார்த்துவிடுவோம்....

    ReplyDelete
  27. எழுத்து நடை இண்ட்ரஸ்டிங்க் நண்பா சூப்பர்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  28. ////அன்று வாங்கிய அந்த இதழ் என் பின்புற பொக்கட் இல் இருப்பது சாலிக்காவுக்குத் தெரியும்!

    அதை எடுக்கவே என் பின்புறத்தின் பொக்கட்டில் கைவைத்தாள்./////

    இதுக்குத்தான் பாஸ் காத்திருந்தோம் ஏன் கைவைத்தாள் என்று அறிய..ஹி.ஹி.ஹி.ஹி............

    ReplyDelete
  29. பல விடயங்களை தொட்டுச்செல்கின்றது...இப்பவும் அப்படி சின்ன புத்தகங்கள் சகோதரமொழியில் வருது..என்ன எனக்கு சகோதர மொழி ஓரளவு நன்றாக கதைக்கவரும் வாசிக்க வராது அதனால் சின்ன வருத்தம் ஹி.ஹி.ஹி.ஹி...

    ReplyDelete
  30. உண்மைதான் மாய உலகம்!

    ReplyDelete
  31. நன்றி மாஜ உலகம் வருகைக்கும் கருத்துரைக்கும் .

    ReplyDelete
  32. நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும் சில இடங்களில்  சகோதர மொழி படிக்க முடியும் அந்த இடங்கள் இந்தத் தொடரில் வரும்  அதன் பின் தனி மெயில் போடுகின்றன் விரும்பினால் படிக்க முடியும்!

    ReplyDelete
  33. வார்த்தைக் கோர்வைகள் அருமை.
    அகிலம் இருக்கும் வரை தடுக்க முடியாத
    விஷயம் இது.
    பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  34. ஊழல் போல இதுவும் ஒழிக்க
    இயலாது சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  35. நன்றி மகேந்திரன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  36. நன்றி புலவரே  வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  37. பண்டாராநாயக்க கிழித்துப் போட்ட செல்வா ஒப்பந்தம் போல் இல்லாமல் தமிழர் கூட்டணிபோல் மதில் மேல் பூனைதான் மாத்தயா நீங்கள் !

    ReplyDelete
  38. நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  39. //இது எல்லாம் ஒரு வியாபார தந்திரம் கில்மா பதிவு போட்டு ஹிட்ஸ் கொடுப்பது போல்தான்!/
    :))!

    ReplyDelete
  40. மாத்தே சிங்கள தென்னுவா?

    ReplyDelete
  41. யோ, சிங்களத்தில அ, ஆ தெரியாமலே நாம இருக்கோம், நீங்க அந்த மகசின் படிக்கிற வரைக்கும் போயிட்டீங்களா...

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  42. இது எல்லாம் ஒரு வியாபார தந்திரம் கில்மா பதிவு போட்டு ஹிட்ஸ் கொடுப்பது போல்தான்!
    ..//


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    இது யாருக்கு....

    ReplyDelete
  43. பாஸ்..தொடர் சுவாரஸ்யமாம வேண்டிய இடங்களில் உவமைகளைக் கையாண்டு நகர்த்தும் கதாசிரியரின் உதவியோடு நகர்கிறது.

    ReplyDelete
  44. நன்றி சென்னைப்பித்தன் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  45. வாங்க நிரூ!
    கொஞ்சம் எழுத, வாசிக்க,பேசத் தெரியும் சகோதரமொழி.

    ReplyDelete
  46. அந்த நேரம் கணனி இல்லை படிக்க ஆர்வம் இருந்துச்சு அந்த வயசு அந்த இதழ் வாசித்தோம்.

    ReplyDelete
  47. தொப்பி  பொறுந்தியவர்களுக்கு உவமை. ஹீ ஹீ.

    ReplyDelete
  48. நன்றி நிரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  49. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete