07 November 2011

நொந்து போகும் ஓர் இதயம்--19

புலரும் பூபாளப் பொழுதில்.
 வாப்பாவுடன் ரிஸ்வானா,பார்த்திமா மூவரும் பஸ்தரிப்பு நிலையத்தில் இருந்தார்கள்.

 இயல்பாக இந்தப்பக்கம் நானும் வந்தேன் !

என்ன வாப்பா தூரக்கிளம்பீட்டிங்க போல  ?
இல்ல
மவன்.

 தாத்தாவை  ஒருக்கா ரிஸ்வானா நிக்கா விடயமா போய் அழைப்புக் கொடுக்கப் போறன்.

 அப்படியே பார்த்திமாவையும் ஊர் பார்க்க கூட்டிட்டுப் போறன்.

 நல்லம் பாய் போயிட்டு வாங்க நமக்கும் நாளை முதல் கம்பளைக்கு பொறுப்பாக வேலை செய்யபோகச் சொல்லியிருக்கிறார் பெரியவர்.

 அதனால் இப்பவே போற  வேலைகள் பார்க்கனும்.

 கவனமாக போய் வாங்க பாய்! போனதும் எனக்கு பேசுங்க.

 .என்ன பார்த்திமா மெளனம்!

 இல்ல நானா நல்லத்தானே இருக்கின்றன்.

 சொல்வாயே வாய் திறந்து?

அல்லாவின் ஆணைப்படி எல்லாம் நடக்கும்.

என்னைச் சொல்லிச் சொல்லிக் குற்றம்மில்லை .

நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம்!

போடாப்போடா புண்ணாக்கு!

சில் வண்டு என்பது சில காலம் வாழ்வது!

இதயமே நாளும் நாளும் காதல் பாடவா?

ஆசையே அலைபோலே நாம் எல்லாம் அதன் மேலே!

காலம் உள்ள காலம் மட்டும் வாழும் இந்தக் காதல் !


நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் .

 கடவுள் உள்ளமே
 கருணை  இல்லையோ!

ஈஸ்வர அல்லா இடையில் வா வா கண்ணாவா ??

மதங்கள் கடந்தால் ?

காதல் என்பது பொது உடமை படிப்புத் தான் நம் உடமை

நானா !


நான் நல்லவன் இல்லை
கெட்டவன் தான்.

போய் வா நதி அலையே நல்ல பூச்சுடும் நாள் பார்த்துவா  .

நன்றி சொல்லிப் பாடுவேன் நாயகி நான் ஆவேன்!

நலம் வாழ் என் நாளும் நல்வாழ்த்துக்கள்!

என்ன இரண்டு பேரும்
 லலித்தாவின் பாட்டுக்குப் பாட்டுப் போட்டிக்கு பங்கு பெறப்போர்கிறீங்களா?

இல்ல ரிஸ்வானா பிடித்த பாடல்களை வரிசைப்படித்தினோம்!

" சரி நீங்கள் போய் வாங்கோ  சொகுசு பஸ் ரோசா வாகனம் காதல் ரோஜாவின் மயக்கத்தில் இருக்கும்
 பார்த்திமா வினை வெள்ளை வான் போல  இந்த நகரத்தின் இருப்பில் இருந்து வெளியேற்றிக் கொண்டு போனது!

 அதன் பின் அவளை நான் 5வருடங்கள் சந்திக்கவில்லை!

வாகனம் போனதன் பின் வேலைத்தளத்திற்குப் போய் விட்டு ரவியின் வீட்டை போனேன் .

பள்ளிக்கூட நாள்
 என்பதால் ரவி வீட்டில் இருக்க மாட்டான் .குசுமாவதி அம்மாவுடன் எல்லாவற்றையும் கதைக்கலாம் என்ற என்னத்தில் போனேன்.

.காதல் பிரிவு என்றாள் ரவி போன்றவர்கள் டமரோன்,நெஞ்சா கொசுத்திரி, போன்றவற்றை எப்படிச் சத்தம் இல்லாமல் தொண்டைக்குழியின் ஊடாக நெஞ்சுக்குழியில் நஞ்சாக்குவார்கள் என்பதைத் தெரிந்தவன்.

 இப்படி ஒரு முட்டாள்த்தனம் அந்தச் சூழ்நிலையில் நடக்கும் இல்லையோ  கட்டுப்பாடு அல்லத பகுதியில் போய் மறவர் அணியில் கலந்து போவார்கள் .

தன் இன்னொரு தேடலாக இருக்கும் வழிகள்.

 இதை எல்லாம் எப்படித் தடுக்கலாம் என்ற சிந்தனையில் வீட்டின்  உள்ளே சென்றேன்.





" வாங்க துரை.
 இப்ப எல்லாம் ஒரே பிஸி போல வீட்டை எல்லாம் வாரது இல்லை"

 இல்ல அம்மா கொஞ்சம் சோலிகள்!

தொடரும்.

டமரோன் -பூச்சி நாசினி.
நெஞ்ஜா -நுளம்புத்திரியின் வியாபார சின்னம்

30 comments:

  1. அட நான்தான் முதலா...... :)

    ReplyDelete
  2. பாஸ் பேச்சு நடை மிக இயல்பாய் இருக்கு....மிக எதார்த்தமான தொடர்...

    ReplyDelete
  3. அவருக்கு மிக நல்ல ரசனை... அவர் குறிப்பிட்ட பாடல்கள் எல்லாம் அருமை... நான் அதில் ஒருசில பாடல்களை விட மற்றவையை அடிகடி கேட்டு இருக்கேன்....

    ReplyDelete
  4. வாங்க துஸி முதலில் ஒரு பால் கோப்பி குடியுங்கோ?

    ReplyDelete
  5. நன்றி துசி உங்க வரவிற்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  6. பாடல் கேட்ட அவரும் ஒரு காலத்தில் இலங்கை ஒலிபரப்புக்குக் கூட்டுத்தாபனத்தில் மூன்று பரீட்சையை எதிர் கொண்ட பகுதி நேர அறிவிப்பாளராக முயன்ற சாமானிய ரசிகர் பாஸ் சத்தியமாக தனிமரம் இல்லை!

    ReplyDelete
  7. அடப் பாவமே...

    இரு உள்ளங்களும் நான் நினைத்தேன் சேருவார்கள் என்று,
    ஆனால் பிரிந்தல்ல்வா போயிட்டாங்க.

    ReplyDelete
  8. ரவிக்கு என்ன நடந்தது.பாத்திமா,ரவி இப்ப என்ன செய்கின்றார்கள் போன்ற விடயங்களை அறிய ஆவலாக உள்ளேன்

    ReplyDelete
  9. நடுவில பாட்டுப்போட்டிஎல்லாம் நடக்குது.

    தொடருங்கள்!

    ReplyDelete
  10. தொடராடும் தொடர்

    ReplyDelete
  11. சென்ற பதிவில் சினிமா தலைப்பு பட்டுயலிட்டு இணைத்தீர்
    இப் பதிவில் பாடலா
    ஆகா அருமை!


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. முள்ளில் இருந்து சேலையை எடுப்பது போல், ஃபாத்திமாவைப் பிரித்து விட்டீர்கள்..

    ReplyDelete
  13. ரவியின் நிலைமை என்னவாயிற்று, உங்களை எப்படி எடுத்துக்கொண்டார் என்று சொல்லுங்கள்...

    ReplyDelete
  14. மறக்கமுடியாத பாடல்களை எல்லாம் நினைவூட்டி அசத்திட்டீங்க போங்க, தொடர் சூப்பரா நகருது...!!!

    ReplyDelete
  15. இன்ட்லில இணைப்பு குடுத்துட்டேன் மக்கா...

    ReplyDelete
  16. அப்படியே நிகழ்வுகளை நேரே பார்ப்பதுபோல இருக்கு நேசன்.அதுவும் இஸ்லாமியர்கள் பேசும் தமிழ் ஒரு அழகுதான்.மகன்,மகள் என்று அழைப்பதே அதீத பாசம் !

    ReplyDelete
  17. வழக்கம்போல நன்று சிவா அய்யா! விட்டதையும் படித்துவிட்டேன்.தொடருங்கள்

    ReplyDelete
  18. Bye..ஃபாத்திமா... பாடல்கள் எல்லாம் அருமை...தொடருங்கள்...

    ReplyDelete
  19. ஈர்ப்புத்தானே உண்மைக்காதலா மதம் தாண்டி மணம்முடிக்க நிரூபன் 
    நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  20.  
    நன்றி ராச்  வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  21.  
    நன்றி கோகுல்  வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  22.  
    நன்றி ராஜாபாட்டை ராஜா  வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  23.  
    நன்றி புலவர் ஐயா  வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  24.  
    முள்ளை எடுக்கப் போய் மூக்குடைந்த கதையைத் தான் சொல்லிக்கொண்டு இருக்கின்றேன் செங்கோவி அண்ணாச்சி ரவியின் நிலையை தொடர்கின்றேன் இனி

    ReplyDelete
  25. நன்றி செங்கோவி வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  26. நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்! இணைப்புக்கும்!

    ReplyDelete
  27. நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்! 

    ReplyDelete
  28. நன்றி சண்முகவேல் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்! 

    ReplyDelete
  29. நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும்! 

    ReplyDelete