16 November 2011

இதயத்தில் இருந்து உறவுகளுக்கு ஒருவரி.

இன்று பிறக்கும் கார்த்திகை( 17/11/2011தமிழக்கு)மாதம்.

 ஈழத்தமிழர் வாழ்வில் பல மறக்க முடியாத நிகழ்வுகளையும் இன்னுயிர் நீத்த மாவீரர் பரணி பாடும் இந்த  நாட்களில் சில கவிதைகளை சூடவும்.


 உலகநாடுகளிடம் விலைபோகாத தமிழ் இனத்தலைவர் அவர்கள் பிறந்த இந்த மாதத்தில் இன்னும் சில பதிவுகள் போட இருந்தேன். ஆனாலும்!

இந்துக்களில் இந்த மாதம் சிறப்பான இன்னொரு மாதம்.

  வீடுகளில் தீபம் ஏற்றும் கார்த்திகைத் தீபத்திருநாள்(விளக்கீடு) வரும் அடுத்த நாள் வரும் சார்வாலய(சொக்கப்பானை) தீபத்திருநாள்.

 வீட்டில் தீபம் ஏற்ற குமிழந்தடி தேடி பந்தம் சுற்றி அழகிய நாட்சாரம் வீட்டில் ஒவ்வொரு அறையிலும் தீபம் ஏற்றியதும்.

 கிணற்றடியில் விளக்கு எரிந்து கொண்டிருக்காமல் விரைவில் அணைந்து விடும். என்பதற்காக! தகரவாளியைக் கவுட்ட குறும்பான பாழ்யகாலம் .

அப்போது பார்த்த நேவிக்காரன் விட்ட வெளிச்ச லைட் பற்றிய உணர்வுகள்!

 .மறுநாள் மாலையில் நிலவு வரும் நேரத்தில் கோயில் பிரகாரத்தில் சர்வாலய தீபமாக பட்டபனை மரம் 1/2 வாசியில் சோலைக்காட்டுப் பொம்மைபோல் காவோலை, தென்னோலை சுற்றி அதில் கற்பூரம் ஏற்றிய சொக்கப்பானை பற்றிய நீங்க நினைவுகள்.!

 பிள்ளையார் கதையில் கோயிலில் வடைக்கும் ,அவளுக்கும்,மோதகத்துக்கும் அடிபட்ட சிறுவயதுக் குறும்புகள்.

திருவெம்பாவையில் நண்பர்கள் குழுவாக இல்லாத வீட்டுக் வாசல் படலையில் எல்லாம் நித்திரையில் இருக்கு இளவரசிகளையும், மச்சாள் மார்களையும், துயில் எழுப்ப சங்கூதிய திருவெண்பா கால சுகமான சுமைகள்!

 நண்பர்களுடன் இடம்பெயர்ந்து கொண்டாடிய கிருஸ்மஸ் பண்டிகைகள்.

 நண்பனின் காதலைத் தூக்கியெறிந்து கன்னியாஸ்த்திரியாக போக நினைத்தவள் நாட்டுக்காக்கப் போய் பெட்டியில் வந்தபோது!
 கலங்கிய நினைவுத்தோழிக்குப் பிடித்த பாடல் பகிர்வு .

என சிலதை சொல்ல இருந்தேன்!

 ஆயினும் ஐரோப்பிய கொண்டாட்டங்களுக்கான முன் ஆயத்தப்பணிகளும். ஓடிஓடி ஊழைக்கனும் என்ற கவியரசர் அவர்களின் காத்திரமான கவிதையைப்போல!

 தனிப்பட்ட தேடல் நிமித்தம் இந்தப்பதிவுடன் தனிமரத்தின் சகல செயல்பாடுகளையும் இனிவரும் இரண்டு மாதம் தற்காலிகமாக வலைப்பதிவை இடை நிறுத்துகின்றேன்.!

நேரம் கிடைக்கும் சிறுதுளியிலும் நண்பர்கள் தளத்திற்கு காத்திரமான விடயங்களுக்கு.
 முன்னுரிமை அடிப்படையில்    என் தார்மீக பின்னூட்டத்தையும், வாக்கினையும் அளிக்க முயல்கின்றேன்.

நேசன்-கலைசிவா வலைப்பதிவை. தனிமரம் என்று வலையுலகப் பிரவேசத்திற்கு பின்னனியில் இருந்த இயக்குனர்களில் என் குடும்பத்தின் மூத்த மருமகன், மூத்த சகோதரியும் தந்த ஊக்கிவிப்புத்தான் நான் பதிவு எழுத காரணம்.

 அவர்களின் ஒத்துழைப்புக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் முதலில்.

 என் வலையை தன் தொழில்நுட்பத்திறமையை மற்றவர்களுடன் பொறாமையில்லாமல் பகிர்ந்து. மற்றவர்களையும் காத்திரமான பதிவுகள் தர வேண்டும் என்று பின்னனியில் நின்று ஊக்கிவிக்கும் என் பதிவுலக வழிகாட்டியும், தன் தளத்தில் தனிமரத்தை அறிமுகம் செய்தும்!

 பலவிவாதங்களில் வார்த்தைஜாலம் காட்ட இடம் தந்தவர்கூட. சில கருத்துக்காக மின்னஞ்சலில் முட்டிமோதினாலும். கருத்து பதிவு உடன் அன்றி தனிநபர் மீதல்ல என்பதை பலதடவை நிறுவிய என் நண்பன்.  தமிழிலில் எல்லாவற்றையும் எழுதத் துணிந்தவன்.

 நாற்றின் வலைப்பதிவாளர் திருவாளர் நிரூபன் செல்வராஜாவுக்கு.

 என் பதிவுலகில் இத்தனை (80 கோகுல் +
சேர்த்து) உறவுகளைப் பெற்றுத்தந்து.
உறுப்பினர்கள் (75)


 என்னையும் ஒரு பதிவாளன் ஆக்கிய  உங்களுக்கு என் வெற்றியைப் பரிசாக அளிக்கின்றேன் நன்றியுடன்.

.நன்றி சொல்லி உங்களைப் பிரித்துக்காட்ட விருப்பம் இல்லை என்றாலும் காலம் உணர்ந்து செய்த உதவிக்கு நன்றி சொல்வது தவறல்ல சகோதரா!

 என்தளத்திற்கு அதிக நண்பர்களை இனம்காட்டிய நண்பன் துசிக்கும்,  செங்கோவி ஐயாவுக்கு என் சிறப்பு நன்றிகள்!

  உங்கள் ஊடாகத்தான் பலரை நான் பெற்றேன்..

 எப்போதும் என் பாடல் பதிவுகளில் காத்திரமான பின்னூட்டம்மிடுவதுடன் என் எழுத்துப்பிழையையும் திருத்தும் அன்புச் சகோதரி ஹேமா அவர்களுக்கு நன்றிகள் பலகோடி!

.ஆரம்பத்தில் இருந்து என்னுடன் பயணிக்கும்  மைந்தன் சிவா, ,மனோ,ரெவெரி,கந்தசாமி,ஆகுலன் தமிழ்வாசி, விக்கியண்ணா,சி.பி,புலவர் ஐயா விடிவெள்ளி,கனாவரோ,மதுரன், மதிசுதா,மதுரை சரவணன் சண்முகவேல் ஐயா,ரட்ணவேல் ஐயா ரமனி ஐயா கவி அழகன்,கோகுல்,ஐடியாமணி. மகேந்திரன்,அம்பாள்ளடியாள், அன்புத்தம்பி ராச். லோசன், மற்றும் பலர்  என பட்டியல் நீளும்!

 இவர்களுடன் என்னோடு பயணிக்கும்  அனைவருக்கும். தனிமரத்தின் தாழ்மையான நன்றிகள் .கருத்துக்காக சிலருடன் மோதினாலும் அவர்களும் என் நண்பர்கள்தான்.

பதிவுலகில் என்னை ஊக்கிவிக்கவும் சமயங்களில் வழிதவறும் போது தட்டி அடக்கும் யோகா ஐயா, ,காட்டானுக்கு சிறப்பு விருந்தினர் நன்றிகள்.!












. திரட்டியில் இணைப்புக்கொடுத்து என் தொடரை பலரிடம் சேர்த்த என்  அண்ணன் குற்றால மன்னன் நாஞ்சில் மனோவுக்கு விசேட நன்றிகள்(..உங்களை வரும் ஆண்டில் சரி நேரடியாக சந்திக்கனும் தமிழக்கத்தில் மறக்கமாட்டன் ஜின் பாட்டில் ஹீஹீ) 

என் பதிவுகளில் அவசரத்தில் நான் விடும் எழுத்துபிழைகளைத் திருத்திய பதிவாளர்கள் அனைவருக்கும் .


பார்வையாளர்கள் வாசகர்கள் அனைவருக்கும் இனிய இதயம் கனிந்த நன்றிகள் .



இத்தனைக்கும் பக்கபலமாக இருக்கும் என் மனைவிக்கு இன்னொரு சிறப்புநன்றிகள்.!

 மகனும் பிளாக் எழுதுறான் என்று மற்றவர்களுக்கு பல்புக் கொடுக்கும் என் தாய்க்கு  மொத்த நன்றிகள்.


புத்தாண்டில் புதிய  தொடர் மற்றும் பாடல்பதிவுகளுடன் சந்திக்கும் வரை !

.
நட்புடன் தனிமரம் நேசன்!

மீண்டும் என் வலைப்பதிவு ஊங்களை நாடி வரும் !

எல்லாரின் படமும் சேர்க்க ஆசை பதிவு நீண்டுவிட்டது! உறவுகளே!

30 comments:

  1. ////தனிப்பட்ட தேடல் நிமித்தம் இந்தப்பதிவுடன் தனிமரத்தின் சகல செயல்பாடுகளையும் இனிவரும் இரண்டு மாதம் தற்காலிகமாக வலைப்பதிவை இடை நிறுத்துகின்றேன்.!////

    அண்ணே மன்னிக்கவேண்டும் உங்கள் இந்தப்பதிவை வாசிக்காமல் நான் என்பதிவில் தொடர் பதிவு எழுத அழைத்துவிட்டேன்.....

    மீண்டும் வலையுலகில் பிரகாசித்து கலக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தனிப்பட்ட தேடலில் வெற்றி பெற்று புத்துணர்வுடன் புத்தாண்டில் மீண்டும் வர வாழ்த்துக்கள் தனிமரம்! அப்பப்ப நண்பர்கள் பதிவுகளைக் கண்டுக்கறேன்னு நீங்க சொன்னதுக்கு நன்றி.

    ReplyDelete
  3. உங்கள் பயணம் சிறப்பாக அமையட்டும் மீண்டும் வரும்போது
    சுவாரசிமான தகவலுடன் உங்கள் வலைத்தளப் பணி தொடரட்டும் .
    வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு ....

    ReplyDelete
  4. உங்கள் தேடுதல் சிறப்புற வாழ்த்துக்கள் மீண்டும் உங்கள் வரவிற்காய் காத்திருப்போம்

    ReplyDelete
  5. Super. Pls come qiuck

    ReplyDelete
  6. .உங்களை வரும் ஆண்டில் சரி நேரடியாக சந்திக்கனும் தமிழக்கத்தில் மறக்கமாட்டன் ஜின் பாட்டில் ஹீஹீ)//

    கண்டிப்பாக சிந்திப்போம் மக்கா, வரும்போது லோக்கல் ஜின் கொண்டு வந்தால் ஆபிசரின் பெல்டுக்கு வேலை வந்துரும் அதனால, கார்டன் ஜின் என்ற வெளிநாட்டு சரக்கை கொண்டுவரவும் ஹி ஹி...!!!

    ReplyDelete
  7. சந்தோசமா போயிட்டுவாங்க நாங்கள் காத்து இருக்கிறோம் வாழ்க வளமுடன் சுகமுடன் தமிழுடன்...!!!

    ReplyDelete
  8. மகிழ்வை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

    ReplyDelete
  9. நன்றி ராச் புரிந்துகொண்டமைக்கும் வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  10. நன்றி கனேஸ்  வருகைக்கும் கருத்துரைக்கும்!வாழ்த்துக்கும்!

    ReplyDelete
  11. நன்றி சகோதரி அம்பாள்ளடியாள் வருகைக்கும் கருத்துரைக்கும்!வாழ்த்துக்கும்!

    ReplyDelete
  12. நன்றி தமிழ்த்தோட்டம்  வருகைக்கும் கருத்துரைக்கும்!
    முயல்கின்றேன் நேரம் கிடைக்கும் போது!

    ReplyDelete
  13. நன்றி அம்பலத்தார்  வருகைக்கும் கருத்துரைக்கும்! நிச்சயம் உங்கள் ஆசிர்வாதம் வெற்றி பெறச்செய்யும்!
    என்னை!

    ReplyDelete
  14. நன்றி தமிழ்வாசி  வருகைக்கும் கருத்துரைக்கும்! நிச்சயம் உங்கள் விருப்பப்படி மீளவும் நல்ல பதிவுகள் தருவேன்.

    ReplyDelete
  15. நன்றி பெயரில்லா  வருகைக்கும் கருத்துரைக்கும்! நிச்சயம் உங்கள் விருப்பப்படி மீளவும் வருவேன்!

    ReplyDelete
  16. நன்றி மனோ அண்ணாச்சி  வருகைக்கும் கருத்துரைக்கும்!  வாழ்த்துக்கும்  நிச்சயம் உங்கள் விருப்பப்படி மீளவும் வருவேன்!

    ReplyDelete
  17. நன்றி சுரஜீவா  வருகைக்கும் கருத்துரைக்கும்! 

    ReplyDelete
  18. உங்கள் தேடல் வெற்றிகரமாக நிறைவேறி,வேண்டியது கிடைத்து,புது வேகத்துடன் திரும்பி வாருங்கள்.வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. நேசன்...பெரிசா நன்றி சொல்லித் தூர வைக்கிறீங்களே.திரும்பவும் சுகமா வந்து எழுதத் தொடங்குங்கோ.
    காத்திருக்கிறோம் !

    எமக்காக தம்முயிரைத் தியாகித்த அத்தனை உயிர்களையும் என்றும் வணங்குவோம் !

    ReplyDelete
  20. சனி?!வணக்கம்!பொன் ஜூர்!!!!கம்பியூட்டர் குளறுபடியால் கடந்த சில நாட்கள் பதிவுலகப் பக்கமோ,ஏனைய செய்தி தளங்களுக்கோ வர முடியவில்லை.இன்று சரியாக்கி விட்டோம்.தொடரும்!

    ReplyDelete
  21. நன்றி சென்னைப்பித்தன் ஐயா வருகைக்கும் வாழ்த்துரைக்கும்!

    ReplyDelete
  22. நன்றி சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லனும் என்பது என் விருப்பு ஹேமா மீண்டும் வருவேன் என் கனவுலக பதிவுகளுடன் .
    நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  23. வணக்கம் ஜோகா ஐயா இனி வரும் காலத்தில் என் பதிவை படித்து பின்னூட்டங்களையும் பதிவு செய்து வையுங்கள் புதிய ஆண்டில் கைகுழுக்குவோம்.
    நன்றி வருகைக்கும் தகவலுக்கும்!

    ReplyDelete
  24. வணக்கம் பாஸ்
    இப்போதுதான் பார்க்கிறேன்.....
    உங்களின் ரெண்டு மாத லீவு கவலை தருது.. ;)
    மீண்டும் வாருங்கள்
    காத்து இருக்கிறோம்....

    குத்துப்பாட்டு
    சோகப்பாட்டு
    என்று ஒவ்வொருத்தரின் பதிவும் ஒரு ரகம்உங்கள் பதிவுகள்
    சுகமான மேலோடி பாடல்கள் போன்றது...உங்கள் மென்மையான எழுத்துக்கு எப்போதும் நான் ரசிகனே......

    ReplyDelete
  25. நன்றி துஷ்யந்தன் வருகைக்கும் கருத்துரைக்கும் தனிப்பட்ட தேடல் முடிந்ததும் மீண்டும் நிச்சயம் வருவேன்! பதிவுடன் ! மெலோடிப் பாடல் தான் என் சாந்த நிலைக்கு காரணம்!

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள் சகோதரம்... தங்களின் ஏறுமுகம் இன்னுமின்னும் ஏறிக்கிட்டே இருக்கணும்..

    மனம் நிறைந்த இம்மாதத்தை வார்த்தைகளுக்கள் அடக்க முடியல..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution

    ReplyDelete
  27. மனசைத் தொடும் நல்ல பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  28. என்ன இரண்டு மாசம்தானே...
    வாருங்கள்

    ReplyDelete
  29. என்ன நேசண்ணே புளொக் கடவுச் சொல் மறந்திடுச்சா..

    ReplyDelete