11 December 2011

ஒரு அறிமுகம். ஒரு கேள்வி??

என் இனிய வலையுலக உறவுகளே தனிப்பட்ட தேடலில்

தொடர்ந்து இணைந்து இருக்க முடியாத நிலையில் !மீண்டும் தனிமரம் ! அவசியமான, அவசரமான ஒரு நண்பனை ஊக்கிவிக்கும் ஒரு  பதிவுடன் உங்களை நாடி வருகின்றேன்!


ஈழத்துச் சினிமா என்ற ஒரு  வரலாறு தொலைக்கப்பட்டு.  இன்று நாம் கானலைத் தேடும் மான்களாக இருக்கும் துயரம் வேற எந்த தேசத்திற்கும் வராத ஒரு சாபம் .அப்படியும் சில விடிவெள்ளிகளாக பலர் இன்று நம் சினிமா மீண்டும் புத்துயிர் பெறவேண்டும் என்ற ஆவலில் பலர் முயற்சிகளைச் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

 .ஈழத்துச் சினிமாவை விரும்பும் பலர் மீண்டும் சிரிமாவின் சுதேசியக் கொள்கைக்கமைய எம் தயாரிப்புக்களை மீளவும் தொடங்கமாட்டோமா? அன்னிய வரவினைக் கட்டுப்படுத்தி நம்மவர் திரைக் கலையை ஊக்கிவிக்கமாட்டார்களா? அதன் மூலம் மீண்டும் தரமான வாடகைக்காற்று, பொன்மணி,நாடு போற்ற வாழ்க, கோமாளிகள் வரிசையில் நம் படைப்பும் பெயர் சொல்லும் வண்ணம்.

 உறக்கத்தில் இருக்கும்   திரைப்படக் கூட்டுத்தாபனமும், அதன் துணை நிறுவனங்களும் ,கண்விழித்து சூரிய ஒளியினைப்பரப்பி நம் திரையுலக வாழ்வினை வெளிச்சம் போடாதா ?என ஏங்கும் பலர் வாழ்கின்ற நிலையில்.

 எங்களுக்கும் பூபாளம் இசைக்காதா? என  தேவதாசனின் மாநகரக் காதல்,அம்மா என
முழுநீளப் படங்கள்  இன்னும் முடிவுறாமல் பல ஆண்டுகள் பெட்டிக்குள் மூழ்கிப் போன
நிலையில்!

 அப்படத்துடன் இருந்தோர் சிலர் புலம் பெயர்ந்தும் விட்டார்கள் .என்பது வேதனையான விடயம். இப்படியான நிகழ்வுகளைத் தாண்டியும் இன்றும் பலர் தயாகத்தில் தம் கலைத்தாகத்திற்காக குறும்படங்களை இயக்கி வெளியீடு செய்கின்றார்கள்.

  அந்த வரிசையில் கடந்த மாதம் வெளியாகி இருக்கும் ஒரு குறும்படம் தான் தேஞ்ச செருப்பு.

அம்மா என் இல்லம் வருவாயே அலமேலும் மங்கா என் இல்லம் வருவாயே!
 என்றும் உன்னிடத்தில் சொல்லாமல் வேர் யார் இடத்தில் முறையிடுவேன் என் தாயே என்று!
 அம்மன் மீது பஜனையில் பாடும் சில பாடல் வரிகள்.


  தாய் என்னும் கோயிலைக் காக்க மறந்திட்ட பாவியடிக் கிளியே! என்று இளையராஜா பாடல் புனைந்ததும் தாய் என்ற ஒர் தெய்வத்தின் புகழை இன்னும் மெருகூட்டவே!

 .இன்று சிலர் பொருளாதார தேடலில் தாயினைத் தாயகத்தில் தவிக்கவிடுவதும் .தாயுக்குத் தெரியாமல் இல்லறத்தில் இனைவதும் ,
போலியான மேல்தட்டு வர்க்கமாக தம்மைக் காட்டிக் கொள்ளுவதற்கும் சிலர் தாயின் அருமை, பெருமைகளைத்

தெரியாமல் எருமைபோல்! இருக்கும் நவயுக மாந்தர்களின் மனதையும். பாசத்தின் வேர்வை வீதியில் வேதனையில் வாடவிடும்  சமுக நிகழ்வைச் சாடி நிற்கும் இந்தக்குறும்படத்தை!

 நடராஜா மணிவண்ணன் எழுதி இயக்கி  இருக்கின்றார்.

 மில்ரோய் அவர்களின் ஒலி/ஒளி வண்ணத்தின் ஊடாக  நம் கண்களுக்கு விருந்தாக்கி இருக்கின்றார்.

 .செவிக்கு இதமாக பின்னனி இசையை தந்து கதையின் மையத்தை சிதைக்காமல் ஜீவனுடன் கலந்து போகின்ற இசைக்கோலம்.

இயல்பான நடிப்பு  தந்திருப்போர்
வீராம்மா மற்றும் ஜனா,விசு ஆகியோர்.

  தாயின் உணர்வலைகளையும் ,மகனின் இயல்பையும் தாங்கி வந்து நம் சமுகத்தின் அவலத்தினைச் சொல்லிச் செல்லும் குறும்படத்தினை. மிகவும் தன் பொருளாதாரச் சுமைகளுக்கிடையிலும் நம் விழிகளுக்கு விருந்தாக்கி சமூகத்தில் இன்று ஏற்பட்டு வரும் பொருளாதார மாற்றத்தின்  நவீன இளைஞர்களுகளின் கருங்காலி முகத்திரை கிழியும் வண்ணம் சிறுதுளி நேரத்தில் சொல்ல வேண்டிய விடயத்தை கச்சிதமாக  சொல்லியிருக்கும் திறமையை  நிச்சயம் பாராட்ட வேண்டும்.


  பொருத்தமான கலைஞர்களின் தேர்வில் மிகவும் குறுகிய இடப்பரப்பினை பின்புலமாக கொண்டு. சாதாரண மக்களின் உள்ளக்குமுறலைப் பிரதி பலிக்கும் தேஞ்ச செருப்பு ஈழத்து குறும்படத்தில் ஒரு முத்திரை பதிக்கும் காவியம்

.அதிகமாக நிழலில் இயக்கியிருக்கும் காட்சியினை கொஞ்சம் ஒளி அதிகம் படரும் வண்ணம் காட்சிப் படுத்தினால் இன்னும் தெளிவான ரசிக்க முடியும்.

 என்றாலும் கதையின் தன்மை நிழலில் இருப்பதால் அதை தாங்கிக் கொண்டு ரசிக்கலாம் .இப்படத்தினைக் கண்டு களிக்க இங்கே -tsnஉள்நுழையுங்கள் உறவுகளே!

மனம் கொதிக்கின்றது மலைவாசா!
மாலைபோட்டால் மனிதவடிவில் மணிகண்டன் வருவான்!
மகிழ்ச்சியை தருவான் எண்ணம் போய்!
மாலை போட்ட சாமிமார்கள் மீது மகிரிசியை மர்த்தனம் புரிந்தது போல்!மலையாளிகள் இன்று தமிழர் மீது
ஆடும் நர்த்தனம் கண்டு !


குருவாயூரப்பன் நாமம் சொல்லும
நாவில் இருந்து!
குருவாயூரப்பன் மைந்தன் மாலைதாங்கிய பக்தர்கள் மீதிலும் இரக்கம் இல்லாது! காடைத்தனம் புரியும் கயவர்கள் மீது கதகளி ஆடிடத் தோன்றுது ஐயனே!

ஆண்டுக் கொருதரம் ஆனந்தமாய் அணிதிரளும் குமிழி வழி தேனி ஓரம் எல்லைதாண்டி  பவனி போகும் சபரிமலை யாத்திரைக்க
முல்லைப்பெரியாறு வடிவில்  கடை உடைப்பு காடைத்தனம்! கல் வீச்சு ! இந்தவருடம்!
சாமிமார்களையும், சன்னியசிகளையும் சண்டைக் இழுப்பதில் என்ன சந்தோஸம் இந்தச் சதிகாரர்களுக்கு!
முள்ளிவாய்க்காலில் நரபலி குடித்தவர்களுக்கு இன்னும் தீரவில்லை தமிழரின் இரத்த வெறி  வாடை
இதுதான் கலியுகமோ????
கலியுகவரதனே!

இந்தவாரம்-:  சபரிமலைக்குப் போன ஐயப்ப அடியார்கள் மீது புனித மாலையை அறுத்துத் தாக்கினார்கள் என்றதை கேள்விப்பட்டதன் தாக்கம் இந்த உரைநடை!

அதிகமான சாமிமார்கள் திருச்சியிலும் பழனிமலையிலும் தம் மண்டல விரதத்தை முடிக்கின்றார்கள். என்ற செய்தி வரும் நிலையில் தமிழக அறநிலைத்துறை வாரியம் என்ன செய்கின்றது?  ??





பிள்ளையார் பெருங்கதை இன்று தொடங்கிவிட்டது. மோதகப்பிரியனுக்கு இனி தொடர்ந்து அவளும் மோதகமும் படையல்தான்!

ஆன்மீகப் பிரியர்களுக்காக ஒரு பாடல் இதோ:-

மீண்டும் சில வாரத்தின் பின் தனிமரம் வலையில் காற்று வீசும்.

31 comments:

  1. குறும் படமல்ல உள்ளம்
    குமுறும் படம்! சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  2. அந்த தாய் கேட்கும் கேள்வி
    உரைக்க வேண்டியவர்களுக்கு நிச்சயம் உரைக்க வைக்கும்.

    ReplyDelete
  3. வணக்கம், நேசன்!அது குறும்படம் அல்ல,குறுமனம் கொண்ட ஒரு குரூரனின்.......................................

    ReplyDelete
  4. பாஸ் என்ன படம் இது ??? குறும் படம் மனதை ரெம்ப பாதித்து விட்டது :(

    ReplyDelete
  5. ஜப்பனிடம் நீங்கள் முறையிட்டு வடித்த கவிதை ஒவ்வொரு பக்தனினதும் உள்ளக்குமுறல்....... ரியல் குட். திரும்ப திரும்ம்ப படித்தேன்...... மாலை போட்ட உங்களையும் பேச வைத்துவிட்டார்களே !!! உந்த கொடூரக்காரர்கள் :(

    ReplyDelete
  6. அது என்னவோ தெரியவில்லை எங்கே இருந்தாலும் தமிழனை நிம்மதியாக இருக்க விடுகிறார்கள் இல்லை... தமிழன் முகத்தில் என்ன இழிச்சவாயேன் என்றா எழுதி இருக்கு :( நினைக்கவே நெஞ்சு பொறுக்குது இல்லையே........................

    ReplyDelete
  7. படத்தில முதல் வாரவர் பண்டாரவள மணிவண்ணன் எண்டு நினைக்கிறன்

    படத்தொகுப்பு மன்னார் மில்ரோய் (சக்தி டிவி)எண்டு நினைக்கிறன். அல்ரொயா
    மில்ரோயா பாவம் நானே குழம்பிட்டன்

    இந்த அம்மா நிச்சயம் மலையகத்தை சேர்ந்த அம்மாவா தான் இருக்கணும்

    மணிவண்ணன் மிக திறமை வாய்ந்தவர்

    ReplyDelete
  8. முடிவில் சொல்லப்பட்ட கருத்து ஒன்றே படத்தின் அழுத்தத்தை மேலும் கூட்டி விட்டது...

    தாயின் பாத்திரத்தில் தோன்றுபவர் ஆழமாய் தொட்ட விட்டார் சகோ...

    ReplyDelete
  9. நல்லதொரு குறும்படம் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  10. நேசன் அண்ணா, குறை நினைக்காதீங்கோ! நான் சோகப்படங்கள் + அவல சம்பவங்கள் + நாடகங்கள் பார்ப்பதில்லை! அவற்றை மனதிலும் வாங்குவதில்லை!

    எங்கெங்கு மகிழ்ச்சி இருக்கிறதோ அங்குதான் மனம் நாடுகிறது!

    எல்லா அவலங்களையும் அனுபவித்த சலிப்பாக இருக்கலாம்! இப்போது இதெல்லாம் எனக்குப் பிடிப்பதில்லை!

    அண்ணா குறை நினைக்காதீங்கோ!

    ReplyDelete
  11. பின் கவிதை வரிகள் அழகாக வந்துள்ளது ...அந்த அரக்கர்களுக்கு எனது கண்டனங்கள்.

    ReplyDelete
  12. குறும்படமும் கவிதையும் நெஞ்சில்
    நீங்கா சுவடுகளை பதித்துப் போகிறது
    மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள் த.ம 8

    ReplyDelete
  13. வணக்கம் பாஸ் தாமதத்திற்கு மன்னிக்கவும் என்ன திடீர் என்று பதிவெல்லாம் போட்டு இருக்கீங்க

    குறும்படம் நெஞ்சில் நிற்கின்றது இப்படியான முயற்சிகள் வரவேற்கப்படவேண்டும்

    ReplyDelete
  14. வணக்கம் புலவர் ஐயா முதலில் தனிமரத்திடம்  வந்திருக்கின்றீர்கள் ஒரு பால் கோப்பி குடியுங்கோ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  15.  நன்றி  கோகுல் வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  16. வணக்கம் யோகா ஐயா நலமா?
    நிச்சயம் இப்படியானவர்கள் மனது குரூரம்தான். நன்றி
    வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  17. நன்றி துசி வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டுக்கும். என்ன செய்வது கோபம் கூடாது இந்த நேரத்தில் என்றாலும் வலி அதிகம் தாங்கமுடியாது .

    ReplyDelete
  18. நன்றி கவி அழகன் வருகைக்கும் கருத்துரைக்கும் .மணிவண்ணன் இதில் தோன்றவில்லை இயக்கியது மட்டும் தான். ஊர் பண்டாரவளைதான்.

    ReplyDelete
  19. நன்றி மதிசுதா வருகைக்கும் கருத்துரைக்கும் .

    ReplyDelete
  20. நன்றி சி.பி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும் .

    ReplyDelete
  21. நன்றி ஐடியாமணி சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.
     நான் குறை நினைக்கவில்லை. ஒவ்வொருத்தர் ஒவ்வொரு ரசனை. இதில் ஏன் முரண். அத்துடன் நான் எப்போதும் விரும்பும் வரிகள்" குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்திக்கண்ணா ". மலைவாச என்பது என் தெரிவு மணிசார்  அதுதான் இப்போது பதிவுலகில் வராது இருப்பது.

    ReplyDelete
  22. நன்றி கந்தசாமி வருகைக்கும் கருத்துரைக்கும்.
     

    ReplyDelete
  23. நன்றி ரமணி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.
     

    ReplyDelete
  24. வணக்கம் ராச்!
    பதிவில் சொன்னது போல் அவசியமான அவசரமான ஒரு நண்பன் அதுதான் திடீர் பதிவு .நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  25. மனம் கவர்ந்த பகிர்வுக்கு பாராட்டுகள் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

    ReplyDelete
  26. வணக்கம் பாஸ்,
    நல்லா இருக்கீங்களா?
    உங்கள் புதிய தளத்திற்கு வாழ்த்துக்கள்!

    ஏன் பாஸ் தமிழ்மணம், இண்ட்லி, தமிழ்10 இல் இணைக்கவில்லை?

    ReplyDelete
  27. விமர்சனம் அருமை பாஸ்..மென்மையான உரை நடை விமர்சனம் ஊடே படத்தினைப் பார்க்கும் ஆவலை ஏற்படுத்தியிருக்கிறீங்க. மிக்க நன்றி பொஸ்.

    ReplyDelete
  28. காலத்திற்கேற்றவாறு கேரளத்தின் மீதான பரி பாடலும், மோதகப் பிரியன் மீதான இசைப் பாடலும் அமைந்திருக்கிறது. நன்றி பாஸ்.

    ReplyDelete
  29. நேசன்...இப்பத்தான் பதிவு பார்க்கிறேன்.நீங்க பதிவு போடேல்லையெண்டு பார்க்காம இருந்திட்டேன்.

    படம் பார்த்தேன்...மனதுக்குக் கஸ்டமாயிருக்கு !

    ReplyDelete
  30. நன்றி நிரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  31. நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete