26 January 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன் -அறிமுகம்...2

வணக்கம் உறவுகளே.
 மீண்டும் தனிமரம் மலையகத்தில் முகம் தொலைத்தவன்  புதிய தொடருடன் உங்களை நாடி வருகின்றேன்.

இந்தத் தொடரில் வரும் பாத்திரங்கள் யாவும் நிஜமே .பெயர்கள் மட்டும் சில தனிப்பட்ட காரணங்களுக்காக மாற்றப்பட்டுள்ளது.

கதையின் நாயகன் ராகுலுக்கும் எனக்கும்(தனிமரம் நேசன்) நீண்டகால
நட்பு உண்டு. இன்றும் அவன் என்னுடன் முகநூலில் நட்பை தொடர்கின்றான்.

 ஐரோப்பிய தேசத்தில் அடைக்கலமாகிவிட்ட அவனின் கடந்தகால ஞாபகங்களை. சொல்லாத காதல் செல்லாத காசு என்பதைப் போல சமுகச் சூழலும், பொருளாதார சுழ்நிலையாளும் மெளனித்துப் போன காதலை. இந்த தொடரில் மீட்டிப் பார்க்கும் ராகுல் பாத்திரம் நிஜம்.

 அவனின் சில தவறுகளை என்னோடு பகிர்ந்தபோது பதிவுலகில் சொல்வதற்கு அனுமதி தந்திருந்தான்.

 அந்த நண்பனின் கதையை உங்களுடன் என் சிந்தனை செதுக்கல் மூலம் வலையில் ஏற்றி உங்களுடன் இணைக்கின்றேன்.

 இந்த கதைக்களம் நடக்கும் பகுதியில் விற்பனைப்பிரதிநிதியாக  நானும் இருந்தவன்(1999-2001  காலப்பகுதியில்) என்பதால் இந்தப் பகுதியை கொஞ்சம் தெரிந்து கொண்டேன்.

 நட்பு அனுபவமே அதிகம் ஆசானாக இருந்து வழிநடத்தும் என்பதை நண்பர்களின் செயல்பாடுகள் மூலம் உணர்ந்து கொண்டதன் பயனை இந்தத் தொடரில் அலசுகின்றேன்.

 இங்கே எழுத்தாணியாக மட்டும் தனிமரம் இயங்கும். மூலக்கருத்து ராகுலனின் சொந்தக்கதை என்பதால் முடிவையும் அவனிடமே விட்டு விடுகின்றேன். என் தளத்தை வாசிக்கும்   அவனும் ஒரு பார்வையாளனாக இருப்பதால் கல் எறி /சொல் எறி எல்லாம் அவனைச் சேரட்டும்.

தொடரை இயக்கும் நண்பனாக தனிமரம் தொடரின் சில இடங்களில் பிடித்த பாடல்களுடன் உட்புகுந்து கொள்கின்றேன்

.வாரத்தில் ஒரு நாள் தொடர் தொடர்ந்து வரும். அறிமுகம் ஆகுவதற்கு முதல் இரு அங்கத்தையும் தொடர்ந்து தருகின்றேன். மூன்றாவது அங்கத்தின் பின் வாரத்தில் ஒருநாள் என எண்ணுகின்றேன்.

 சித்தன் செயல் சிவன் செயல் என்பது போல அப்பன் செயல் எப்படியோ நான் அறியேன். அடுத்த பதிவு முதல் தொடர் நாடி வரும்.

முகப்புப் படத்தை தந்த நிகழ்வுகள் தளத்தின் ஓனர் கந்தசாமிக்கு சிறப்பு நன்றி .

.கதைக்களம் மலையகத்தின் எழில் கொஞ்சும் தேசம். இலக்கியச் சாரலில் தெளிவத்தை ஜோசப்,தமிழ் ஓவியன் என கலையுலகும்.

 இலங்கை அரசியலில்  நீதித்துறையில் பயிற்ச்சி பெற்று சந்திரிக்கா அம்மையார் வரவின் பின் அரசியலில் புகழ் பெற்று சமாதானப்பேச்சு வார்த்தையில் முக்கிய அரசபகுதி அமைச்சர் ஆக இருந்த   நிமால் சிரிபால டி சில்வா.

 மற்றும் சட்டத்துறை பிரதி அமைச்சர் டிலான் பெரேரா போன்றோரின் பூர்வீக தேசமான துங்கிந்தைச் சாரலின் விளைநிலம்.

ஊவா மாகாணத்தின் தலைநகரம்  பதுளைப் பகுதியில் பயணிக்கும் தொடர்.

 மூவின மக்களும் அன்புடன் இனிதே வாழும் பகுதி. பதிவுலகில் இந்தப்பகுதியில்  இருந்து நகரும் முதல் தொடராக மலையகத்தில் முகம் தொலைத்தவன் இருக்கும் என்ற ஆவலுடன் இதை பகிர்கின்றேன்.


மூவினம் வாழும் பூமி என்பதால் சில இடங்களில் பேச்சில்  வரும் சகோதரமொழி (சிங்களம்) தவிர்க்கமுடியாதது. கதையின் உண்மைத் தன்மைக்காக இணைக்கின்றேனே தவிர அந்த மொழிப் புலமை தெரிந்த பண்டிதன் அல்ல தனிமரம். மொழித் தினிப்பும் அல்ல.

 பதுளை பற்றிய சில விடயங்களை தொட்டுச் செல்லும்





. இந்த தொடரில்  யார் மனதையும் காயப்படுத்தும் எண்ணம் எனக்கில்லை. என்னையும் அறியாமல் மனம்
நோகடித்தால்! இங்கேயே மன்னிப்பை கோருகின்றேன்.

 புலம்பெயர் பொருளாதார தேடல்  அதிகம் தனித்தனியே மன்னிப்புக் கேட்கும் அளவுக்கு தனிமரம் சுதந்திரப்பறவை  அல்ல என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்..
என்றும் நட்புடன்
தனிமரம் நேசன்.

இந்தத் தொடருக்கும் தனிமரம்  நேசனுக்கும்  தொடர்பு இல்லை !இல்லை!! இல்லை!!!

இணையத்தின் இதயங்கள் வாழ்த்திய நொந்து போகும் ஓர் இதயம் தொடரினைப்  இங்கே-படிக்கலாம்-http://www.thanimaram.org/2011/09/blog-post_24.html

20 comments:

  1. பதுளை,ஹற்றன் என்றாலே மனம் குளிர்ச்சியாகிக் குதூகலிக்குது.அவ்வளவு சந்தோஷம் எனக்கு.அந்த இடங்களில் குடியிருக்கலாம் என்றுதான் விருப்பம்.யாழில் வசித்துப் பழக்கபாட்ட அம்மாவால்....மிக மிக ஆவலோடு காத்திருக்கிறேன் உங்கள் தொடருக்காக நேசன் !

    ReplyDelete
  2. வணக்கம் பாஸ்

    எழில் கொஞ்சும் மலையகத்தில் சில மாதங்கள் நானும் வாழ்ந்திருக்கின்றேன்.மிக மிக அழகான ஊர்கள் அவை.

    அங்கு நடந்த ஒரு சம்பவம் தொடராக வருவது மிக மகிழ்ச்சியாக இருக்கு வாசிக்க ஆவலுடன் காத்திருக்கின்றேன்

    தொடருங்கள் தொடர்கின்றேன்

    ReplyDelete
  3. நன்றி ஹேமா உங்களின் வருகைக்கும் ,கருத்துரைக்கும், ஊக்கத்திற்கும். இந்த தொடரில் பல விடயங்களை உங்களுடன் பகிர்கின்றேன் இனி வரும் நாட்களில்.

    ReplyDelete
  4. நன்றி ராச் வருகைக்கும் கருத்துக்கும் தொடரும் ஆதரவுக்கும்.

    ReplyDelete
  5. நன்றி ரத்தினவேல் ஐயா வருகைக்கும் கருத்துக்கும் .

    ReplyDelete
  6. பாஸ்!!! ஒரு ச்சின்ன டவுட்டு.....
    பதுளை மலையக்த்தில் சேராதே!!! அது “ஊவா மாகாணத்துலதானே வரும்...

    ReplyDelete
  7. வாங்க பாஹி நானா  உங்கள் முதல் வரவை தனிமரம் இன் முகத்துடன் வரவேற்கின்றேன்.
    நிற்க.
    மலையகத்தின் பிரிவுக்குள் தான் ஊவா மாகணமும் வருகின்றது.இதில் சந்தேகம் வேண்டாம் பாஸ். ஊவாவின் தேர்தல் தொகுதியில் பதுளை ஒரு முக்கிய தொகுதி. தொடர்ந்து வாருங்கள் தனிமரம் அதன் அழகை விபரிக்கும்.
    நன்றி உங்கள் வருகைக்கு நானா.

    ReplyDelete
  8. ஆஹா பதுளை பற்றி தொடரா!!!! படிக்க ஆவலாக இருக்கிறேன் நேசன். தொடருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. இன்று தான் உங்கள் தளத்திற்கு வருகிறேன்.

    ஆகா நாமளும் பதுளை தான். நம்ம ஊரில் நடந்த விஷயம்னு சொல்றீங்க. ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
  10. நல்ல அழகாக பதுளை பற்றி அறிமுகம் செய்திருக்கீங்க. மிகவும் நன்றி.

    ReplyDelete
  11. மற்றுமோர் இனிய தொடர் நேசரே...தொடர்ந்து கலக்குங்கள்...மன்னிப்புகளை காற்றில் விட்டபடியே....
    உணர்வுபூர்வமாய் எழுதுவதுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  12. புத்தாண்டு வாழ்த்துக்கள் காற்றில் என் கீதம் தோழி நீண்ட இடைவெளியின் பின் தனிமரம் வலையில் வாருங்கள்!
    நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும். இந்தத் தொடரில் சுவாரசியம் அதிகம் ரசியுங்கள். நன்றி வாழ்த்துக்கு!

    ReplyDelete
  13. இருகரம் கூப்பி இன்முகத்துடன் வரவேற்கின்றேன் ஹாலிவுட் ரசிகன் நண்பரே! நன்றி உங்களுக்கு தங்கள் வருகையும் கருத்துரைகளும் தனிமரத்தின் செயல்களை பட்டை தீட்டட்டும். தெரிந்த பகுதியைச் சொல்வதில் தனி ஆனந்தம் தானே.எதற்கு நன்றி .

    ReplyDelete
  14. நன்றி ரெவெரி உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்.

    ReplyDelete
  15. மயக்கும் மலையகத்தின் கதைப்புலத்தில் அருமையான ஆரம்பம்.
    தொடரும் பதிவுகளிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்

    ReplyDelete
  16. கதையில் சகோதர மொழியின் பயன்பாட்டை பார்க்கும்போது தொடரில் சகோதர இனத்து கதைமாந்தரும் வருவார்கள்போல் இருக்கிறதே?. நேசன் ஆவலில் B.P. ஏறுகிறது. கண்டி, ஹற்றன், பதுளை, தலவாக்கொல, மகியங்கனை என மீண்டும் ஒரு சுற்று உங்கள் கதையுடன் பயணம் செய்யலாமோ?
    மலையகத்தில் முகம் தொலைத்தவன் படிக்க காத்திருக்கும் மலையகத்தின் (எழிலில்) மனம் தொலைத்தவன்.

    ReplyDelete
  17. நன்றி அம்பலத்தார் தனிமரத்துடன் இணைந்து இருப்பதற்கு தொடர்வேன் பாருங்கள் உங்கள் நினைவுகள் என்னுடன் பின் வரும் வண்ணம்.

    ReplyDelete
  18. உங்களைப் போன்றோரின் மூத்தவர்களின் வாழ்த்து இருக்கும் போது சகோதரமொழி மக்களின் இன்னொரு உறவு முறையை தயக்கம் இன்றி இந்தத் தொடரில் சொல்வேன் ஐயா எனக்கு வரும் கல் எறிக்கு நீங்கதான் பலிக்கிடா ! ஆமா  நீங்க தானே அம்பலத்தார் அப்பி ரயோ மே சமாரு வேலா அப்பி மோடமினியோ ! இது பதிவுலகில் ஆமா.

    ReplyDelete