08 February 2012

அன்புத் தம்பிக்கு ஒரு பாட்டு!

ஆத்ம திருப்திக்கு எழுதும் என் வலையைத் தாண்டி .

நண்பர்களின் பதிவுகளில் சில விடயங்கள் வரும் போது காரசாரமான விடயத்தை விவாதிப்பதும் கருத்திடுவதும் என் செயல் .

எல்லோருக்கும் ஒரு சினிமா நட்சத்திரம் பிடிக்கும் .நடிகை பிடிக்கும் ,அது அவரவர் விருப்பம் .

ஆனால் வெறித்தனமாக நடிகர்களுக்கு ரசிகர்களாக இருக்ககூடாது! இளைய சமூகம் என்பதில் எனக்கு கொஞ்சம் அதிக சிரத்தை.

 காரணம் காவலன் படத்தினை பாண்டிச் சேரியில் ஓட விடவில்லை என்பதற்காக வாய்த்தர்கத்தில் ஈடுபட்டு, பின் அடிபாட்டில்  போய் மரணித்த ஒரு ரசிகன் என் நண்பன் .
அவனுடன் ஒரு ஆன்மீகப் பயணத்தில் 3 வருடங்களாக ஒன்றாகப் பயணித்தவன் . அவனின் இழப்பு அவர்கள் குடும்பத்தை  எந்தளவு பாதிக்கின்றது என்பதை ஒவ்வொரு வருடப் பயணத்தின் போது நேரடியாக உணர்கின்றேன் .

அதனால் தான்  நடிகரை வெறித்தனமாக விசுவாசிக்கும் சில நம்மவர் உறவுகளுக்கு சீற்றமாக பின்னூட்டம் இடுவேன் .

அதன் போது தனிமரம் நேசன் அதிகம் தன்னை சீண்டுவதாக  சகபதிவாளர் மதுரன் என் நண்பரிடம் கோபித்துக் கொண்டார் .

ஆகவே இனி வரும் காலத்தில் சினிமா விடயத்தில் கருத்துச் சொல்வதில்லை என்ற முடிவில் இருக்கின்றேன்.

அப்படி எண்ணிக்கொண்டிருக்கும் இந்த மொக்கைப் பதிவாளருக்கு! என்னையும் ஊக்கிவித்து ஒரு சகபதிவாளர், அன்பு நண்பர், சரண்யா மோகனுக்கு இதயக் கோயில் கட்டும் படைப்பாளி ராஜ் அவர்கள் .லீபீஸ்டர் என்னும் ஜேர்மனிய
ஒரு விருதினைக் கொடுத்து என்னையும் கொஞ்சம் கர்வப்பட வைத்துவிட்டார்.

 விருது பற்றிய விளக்கத்தினை நண்பர் மதுமதி தளத்தில் பார்க்கலாம்! இதோ அந்த விளக்கம் http://writermadhumathi.blogspot.com/2012/02/blog-post.html?showComment=1328527929802

இந்த விருதினைப் பெறும் தகுதி எனக்கு இல்லை என்ற போதும். இல்லை தனிமரம் உங்களுக்கு இந்த விருது கட்டாயம் பொருத்தம் என்று சொல்லி என் மீது அதிக பொறுப்பினையும் சுமர்த்திவிட்டார்.

 புதியவர்கள் ஐவருக்கு இந்த விருதினைக் கொடுத்து நானும் அவர்களை ஊக்கிவிக்கனும் என்பது இந்த விருதின் ஒரு விதிமுறை.

பெற்றதைக் கொடுத்து மகிழ்வதிலும் ஒரு சந்தோஸம் உண்டு அல்லவா.!
ஒரு குறிப்பிட்ட வட்டத்தினுள் இயங்கும் என்னிடம் பலரையும் தெரிவு செய் என்றால் மிகவும் கடினம்.

என்றாலும் என்னால் முடிந்த அளவு வலையில் நான் பலரைப் படிப்பவர்களில் 5 பேருக்கு  மட்டும் இந்த விருதினை முன் மொழிகின்றேன் .

அவர்களின் வலையில் இந்த விருதுச் சின்னத்தை அலங்கரிப்பதுடன் அவர்களும் இன்னும் 5 வலைப்பதிவாளர்களுக்கு அதனைப் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பதை ஞாபகம் ஊட்டுகின்றேன்

பிறந்த தேசத்தில் இருந்து தொலைந்து போனாலும். புகுந்த வீட்டின் பெருமையை கண்கவர் புகைப்படக்காட்சிகள் மூலம் பதிவு செய்து காத்திரமான தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு வலைப்பூத் தான்
சொர்க்கத்தின் வாசல்படி.

அதனை எழுதும் சகபதிவாளர் பிரெஞ்சுக்காரனுக்கு விருதினை அளிக்கின்றேன்.

அவரின் தளத்திற்கு செல்ல இங்கே http://france19450506.blogspot.com/
தனிமரம் என்பதால் சொர்க்கத்தின் வாசல்படி என் வீட்டுக்கு வருவதற்கு விரும்புவது இல்லை. என்றாலும் நான் வாழும் தேசத்தின் அழகு என்னை அங்கே இழுத்துச் செல்கின்றது. என் நண்பர்கள் அவருக்கு இதைத் தெரிவிப்பார்கள் என்று நம்புகின்றேன்..(ஆமா இவர் தூதுவிடுவது எரிக்சொல்கையூம் மூலமோ??)

.
இலக்கியவாசகனை தேடி வாசிக்கத் தூண்டும் பதிவுகளைத் தரும் ஒரு பதிவாளர் குறைவாக எழுதினாலும் நிறையவிடயங்களைத் தொடும் அம்பலத்தார் ஐயாவுக்கு இந்த விருதைக் கொடுக்கின்றேன். அவர் பக்கத்திற்குச் செல்ல.http://ampalatharpakkam.blogspot.com./



ஆலயம் தொழுவது சாலவும் நன்று ஆன்றோர் வாக்கு .

இன்று ஆலயம் செல்வது வேலை மினைக்கேடு என்று நவீன மொழி பேசுவோரை நினைக்காது .

ஆன்மீகப்பிரியர்கள் தெரிந்து கொள்வதற்கு ஆலயத்தின் தலப்புராணம் முதல் திருவிழாக் கோலங்களையும் காட்சியாக பதிவு செய்யும் இராஜாராஜேஸ்வரி அம்மாவிற்கு விருது கொடுக்கின்றேன் .அவங்களின் தளத்திற்கு செல்ல.http://jaghamani.blogspot.in/2012/02/blog-post_06.html

எப்போதும் கவிதைகள் ஆகட்டும் ஊர் விடயங்கள் ஆகட்டும் மிகவும் இதயம் நெருடும் வண்ணம் பதிவு செய்வதிலும் ,புதியவர்களை ஊக்கிவிப்பதிலும் ,பாடல் ரசனைமிக்கவருமான ஹேமாவிற்கு இந்த விருது கொடுக்கின்றேன். .

ஹேமாவின் தளத்திற்குச் செல்ல இங்கே-:/http://santhyilnaam.blogspot.com/2011/11/blog-post_16.html
அவர்களின் பல பதிவில் என்னைக் கவர்ந்த பதிவு மண்வாசனை.
அந்தப்பதிவில் சொல்லிய சில விடயங்கள் மலையகத்தில் முகம் தொலைத்தவன் தொடரில் ஒரு அங்கத்தில் அந்த மாந்தர்கள் வருவார்கள்.
ஆனால் காப்பி பேஸ்ட் கிடையாது பார்வைகள் வேறு வேறு அல்லவா!

காத்திரமான விடயங்களை மிகவும் நீண்ட பதிவாக ,விவாதக்களமாக பதிவு செய்வதில் தன் திறமையைப் பறைசாற்றும் ஒரு வலைப்பதிவின் சொந்தக்காரி ரதி அக்காவிற்கு இந்த விருதைக் கொடுக்கின்றேன் ..
அவர்களின் தளத்திற்கு செல்ல-இங்கே என் மனவானில் -http://lulurathi.blogspot.com











இணையத்தில் பல உறவுகள் பாசமாக தனிமரத்தில் கலந்துவிடுகின்றார்கள் .அந்த வகையில் என்னைத் தொடரும் என் தம்பிகளில் ஒருவருக்கு நாளை மலரும் நல்ல நாளில் பிறந்தநாள் காணுகின்றார்.(9/2)
கடல் தாண்டி தனிமரம் காற்றில் ஒரு வாழ்த்தை கானமாக கொடுக்கின்றேன்.

கவலைகள் மறந்து களிப்புடன் வாழ வாழ்த்துகின்றேன்.

 இணையத்தில் நண்பர்கள் என்று
மறக்க முடியாத பாடசாலையின் பருவக்காதலை பதிவிட்டாய்.
 படிக்க வந்தேன் பாசத்தில்
பின் தொடர்ந்தேன்..நேசத்தில் .
என் உயிர் நீதானே என்று
தொடர் இட்டு
எனக்குப்பிடித்தவர்கள் வாழ்வை ஏற்றிவைத்தாய்.
அன்பைத் தேடும் இதயம் என்று அதிரடியாய் வந்து அவசரத்தில் முடித்தாய்!

அடித்தாடுவதில் கங்குலி என் ஹீரோ என்றாய் .
ஹீரோவுக்கு எல்லாம் பாடல் தந்தாய் பலவிடயங்கள் பதிவு செய்தாய் கன்னிப்பருவத்தில் விமர்சனம் என்றாய் .
எல்லா நடிகையும் பிடிக்கும் என்றாய் எனக்கு பிடித்தவர்கள்  ராதிகா, பானுப்பிரியா ,சினேஹா ஏனோ ?
உனக்குப் பிடிக்காமல் போனது குட்டிப்பையன் என்று கேட்டால் கோபிக்கமாட்டாய் .

எவ்வளவு அடித்தாலும் நல்ல நட்பாக அண்ணா என்றாய்
 அப்பி ஜாலுவோ என்று இனங்களிடையே பிரிவு வேண்டாம்!
 இணையத்தில் என்று வந்தாய் சகோதரமொழி கூட்டனியில் சந்தோஸமாக.

சொன்னால் புரியாது சொல்லச் சொல்ல அடங்காத பதிவுகள்
இன்னும் எழுதனும் நீ என்று வாழ்த்துகின்றேன் ஒரு வாசகனாக .
வாழ்க பல்லாண்டு
குடியும் குடித்தனமுமாக!
நட்புடன் வாழ்த்தும்
தனிமரம்-நேசன் .

33 comments:

  1. நன்றி அண்ணா

    நீங்கள் விருதுக்கு தேர்வு செய்தவர்கள் மிக பொருத்தமானவர்களே

    அப்பறம் என்னை பற்றி கவிதை......நன்றி பாஸ்

    ReplyDelete
  2. வணக்கம் நண்பர் நேசன்,
    விருது பெற்ற உங்களுக்கும் அதனை
    உவகையுடன் அருமையான பதிவர்களுக்கு
    விரும்பி கொடுத்தமைக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. தாங்கள் விருதினைப் பெற்றமைக்கும்
    தரமான பதிவர்களாகத் தேர்ந்தெடுத்து
    அதனைபகிர்ந்து கொணடமைக்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வணக்கம் தனிமரம் சார்,

    விருதினைப் பெற்றுக் கொண்ட உங்களுக்கும், உங்களிடமிருந்து விருதினை வாங்கும் அத்தனை உள்ளங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

    ReplyDelete
  5. ராஜ் இன் பிறந்த நாள் கவிதை, பதிவுலகில் ஓர் நண்பனின் இயல்புகளைச் சொல்லி நிற்கிறது.

    மீண்டும் ராஜ் இற்கு உங்கள் வலையூடாகவும்
    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  6. திரட்டிகளில் இணைத்து விட்டேன்.

    ReplyDelete
  7. வணக்கம் நேசன் அண்ணா

    விருது பெற்றுக்கொண்டதுக்கு வாழ்த்துக்கள். உங்களிடம் விருது பெற்றவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. அதன் போது தனிமரம் நேசன் அதிகம் தன்னை சீண்டுவதாக சகபதிவாளர் மதுரன் என் நண்பரிடம் கோபித்துக் கொண்டார் //

    நேசன் அண்ணா.. தயவு செய்து என்ன விடயமானாலும் என்னிடம் நேராகவே சொல்லுங்கள். நான் ஒருபோதும் கோபித்துக்கொள்ளமாட்டேன். எங்கள் பிழைகளை சுட்டிக்காட்டுவதற்குரிய முழு உரிமையும் உங்களுக்கு இருக்கிறது..

    நீங்கள் நேரடியாக என்னிடம் சொல்லாமல் வேறு இடங்களில் உள்குத்தாக போட்டபடியால் கோபப்பட்டேன். மன்னித்துவிடுங்கள்

    ReplyDelete
  9. நீண்ட நாளாயிற்று உங்கள் பக்கம் வநது. எந்த ஒரு தனி நபருக்கும் வெறியனாய் இருக்கக் கூடாது என்பதை நீங்கள் சொன்னதும், அன்புத் தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னதும் மிகப் பிடித்திருந்தது. விருது பெற்றதற்கும் தகுதியானவர்களுக்கு வழங்கியதற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. இன்று வலைச்சரத்தில் படித்தது:
    ===============================
    //தனிமரம் said...
    ”காதல் வங்கி” எனக்குப்பிடித்த சிறுகதை. மற்றவையும் இனி நேரம் கிடைக்கும் போது வாசிக்கின்றேன்.//

    மிக்க நன்றி, நண்பரே.

    இப்படிக்கு
    “காதல் வங்கி”
    உரிமையாளர் vgk
    ==============================
    [ஒரு சின்ன சந்தேகம் எனக்கு:
    தங்களுக்கு மிகவும் பிடித்ததாகச்
    சொல்லும் அந்தக்கதைக்கு இதுவரை பின்னூட்டம் தராதது ஏனோ?]
    ==============================

    விருது பெற்ற தங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

    தங்களிடமிருந்து இந்த விருது பெற்ற அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.vgk

    ReplyDelete
  11. விருது பெற்ற உங்களுக்கும் அதனை உங்களிடமிருந்து பெற்ற
    பதிவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நேசன்...

    ReplyDelete
  12. அன்புத் தம்பி கிஸ்ராஜாவுக்கு நேசருடன் இணைந்து நானும் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  13. நன்றி ராச்   விருது பற்றிய வருகைக்கும் கருத்துரைக்கும்!
    அண்ணாவுக்கு ஏன் நன்றி சொல்கின்றாய் அன்புத் தம்பி.

    ReplyDelete
  14. நன்றி மகேந்திரன் அண்ணா    விருது பற்றிய வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  15. நன்றி ரமனி ஐயா விருது பற்றிய வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  16. வணக்கம் நிரூபன் சார்.
    நன்றி என்னை  வாழ்த்தியதற்கு . உங்களுடன் சேர்ந்து நானும் மற்றவர்களையும் இன்னொரு முறை வாழ்த்துகின்றேன்.

    ReplyDelete
  17. .
    நன்றி  நிரூபன். நண்பர்களின் நல்ல நாட்களில் அன்பை இனிதே வெளிக்காட்டுவோம் அது ராச் இல் இருந்து தொடக்கமாக இருக்கட்டும் .

    ReplyDelete
  18. நன்றி மதுரன் வாழ்த்தியதற்கும் வாழ்த்துக்களை மற்ற நண்பர்களுக்கு கூறியதற்கும்.

    ReplyDelete
  19. இனி வரும் காலத்தில் இந்த உள்குத்தே தேவையில்லை மதுரன் எப்போதும் நல்ல நண்பர்களாக இருப்போம் . நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  20. வாங்க கனேஸ் அண்ணா. பதிவுகளுக்கு வர நீண்ட நாள் என்றாலும் அன்பினால் எப்போதும் பக்கத்தில் தான் மின்னல்வரி கனேஸ் அண்ணா.என்னோடு இருக்னின்றார். போதிய ஓய்வு கிடைக்காததும் மின்சாரத்டையையும் நன்கு அறிவேன். நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  21. வண்ணக்கம் ஐயா!
    கதையை வாசித்தது சென்னையில் இருந்தபோது மீண்டும் பாரிஸ் வந்ததும் பின்னூட்டம் இடனும் என்று நினைத்திருந்தேன் ஆனாலும் சோம்போறித்தனத்தால் விட்டுவிட்டேன்.வார இறுதியில் மீண்டும் பின்னூட்டம் கண்டிப்பாக இடுவேன் ஐயா.
    நன்றி சின்னவனையும் வாழ்த்தியதற்கு.
    தனிமரத்தை நாடி வந்ததற்கும்.

    ReplyDelete
  22. நன்றி ரெவெரி வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  23. வாருங்கள் செங்கோவி ஐயா .நலம்தானே நீண்ட விடுமுறையில் நீங்கள் இருப்பது தனிமரத்திற்கு வருத்தம் அளிக்கின்றது விரைவில் வாருங்கள் காத்திருக்கின்றோம்.
    நன்றி ராச்சிற்கு வாழ்த்துக் கூறியதற்கு உங்கள் நல்வாழ்த்து அவரைச் சேரட்டும்.
    நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும் இன்னொரு முறை செங்கோவி ஐயா.

    ReplyDelete
  24. விருது பெற்ற தங்களுக்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்...

    ReplyDelete
  25. எமக்கு விருதளித்து பெருமைப்படுத்தியமைக்கு நிறைவான நன்றிகள்..

    ReplyDelete
  26. உப்புமடச் சந்தியில் உங்களுக்கும் விருது தருகிறேன் நேசன்.வந்து எடுத்துக்கொள்ளுங்கோ!

    நன்றி நன்றி எனக்குப் பிடித்த ஜேர்மனிய விருது உங்கள் கையால் மிக மிகச் சந்தோஷம் !

    ReplyDelete
  27. நன்றி இராஜாராஜேஸ்வரி அம்மா வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  28. நன்றி இராஜாராஜேஸ்வரி அம்மா வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  29. நன்றி ஹேமா வருகைக்கும் ,வாழ்த்துக்கும். விருது தந்து என்னை ஊக்கிவிப்பதற்கும்.

    ReplyDelete
  30. ஹொந்தய் அபே யாலுவோ..

    ReplyDelete
  31. ஒயாகே போஸ்ட் சேரம் கியவனவா கமண்ட் தாண்ட பெரிவெனவா மொகுத் ஹிதண்ட எபா சகோதரயா..

    ReplyDelete
  32. எண்ட மல்லி ரியாஸ்.
    சப்பேன் இன்னவத!
    எயா ஹித்த ஒந்த கொல்லோங் ராஜ்.

    ReplyDelete
  33. ஹிசிமதெக்கக் ஹித்தந்னா தனிமரம் ஹாவாதாவத் அப்பி ஜாலுவோவே.ஹாவட்ட ஸ்தூத்தி வந்தவெனவா!ரியாஸ்.

    ReplyDelete