22 March 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன் -21

கிராமியக் கலைகள் வளர்ப்பதில் எப்போதும் ஆலயங்கள் தான் முன்னுரிமையில் இருந்தது ஒரு காலம்!

 இன்று கலைகள் வளர்க்காட் விட்டாலும் நல்ல களைகள் வளர்க்கப்படும் இடம் ஆலயமாகிப்போனது கலியுகம்.

சங்கம் வளர்த்த மதுரை ஆதினம்,தெல்லிப்பளையில் அப்பாக்குட்டியின் அரவனைப்பு,நல்லூர் ஆதினம் ,என சமயம் வளர்க்கும் பணிகள் இருப்பதால் தான் !

இன்றும் சமயம் கொஞ்சம் நெறியோடு இருக்கின்றது .

இப்படித்தான் எங்கள் ஊர்  8 ம் திருவிழாவில் ஊருக்குள் வில்லுப்பாட்டுச் சின்னமேளம் வந்து .

. எல்லா கிராமங்களிலும் இருந்து இரவு பார்த்து ரசிக்க புல்லுப்பாயுடன் பலர் வந்து அமர்ந்தார்கள் கோயில் வீதியில்.

இரவு திருவிழா இனிதே முடிய.

 அன்று திருவிழா செய்த எதிர்வீட்டு சிங்காரி செளந்தரம் என்றால் ஊருக்குள் ஒரு  வாயாடி என்ற பேச்சு இருக்கு  ஆனாலும் இந்த பங்கஜம் என்றால் பணிந்து போவாள்  .

அப்படி எங்க குடும்பம் என்று பக்கத்தில் இருந்த பங்கஜம் பாட்டி பெருமை பேசிக்கொண்டிருந்தா பேர்த்திமார்களுடன்.வில்லுப்பாட்டுப் பார்க்க!

புழுதிமணலில் புல்லுப்புடுங்கும் எங்கள் விரல்கள் .சில்லறைக்காசு தோண்டி எடுக்கும் .

வில்லுப்பாட்டு என்றால் சின்னமணிதான் .அழகாய்ப் பாடுவார். எதுகை மோனையுடன். வந்தனம் வந்தனம்
என்று எல்லாரும் வந்து இந்த வில்லூப்பாட்டில் குந்தனம் என்று கும்பிட்டு தொடங்குவார். கதை சொல்ல.

வில்லங்கம் பண்ணவே விடலைக் காதல் மன்னர்கள்  டவுஸர் மேல் வேட்டிகட்டி வருவார்கள். திருவிழாவிற்கு.

எழுதிக்கொடுத்த காதல்கடிதம் வாங்கிய எதிர் வீட்டுச் சாந்தியின் பதில் காணாமல் தவிர்த்து நிற்கும் பாலன் அண்ணாவுக்கு வில்லுப்பாட்டு விடை சொல்லும் என்ற எண்ணத்தில் நண்பர்கள் சேர்ந்து கூட்டத்துடன் வந்தார். திருவிழாவிற்கு!

வில்லுப்பாட்டு என்றால் சின்னமணிதான் .அழகாய்ப் பாடுவார். எதுகை மோனையுடன். வந்தனம் வந்தனம்
என்று எல்லாரும் வந்து இந்த வில்லூப்பாட்டில் குந்தனம் என்று கும்பிட்டு தொடங்குவார். கதை சொல்ல.

ராமயணக்கதையில் ஆர்வமாக இருந்தார்கள்  பெரியவர்கள்.

சாந்தியின் பதில் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் கல்லு எறிந்து சைகைகாட்டிய பாலன்  அண்ணனுக்குத் தெரியாது .

சாந்தியின் மச்சான்  பரமசாமி பின்னால் பார்த்துக் கொண்டு இருப்பது.

 நிலவு வெளிச்சத்தில் நிறையக்கதை சொன்னார் வில்லுப்பாட்டில் சின்னமணி.

 பின் இருந்த பரமசாமி காத்திருந்தவன் பொண்டாட்டியை நேற்றுவந்தவன் கொண்டு போன கதையைக் கேள்விப்பட்டவர்  .என்பதால் .

எடுத்தார் சைக்கிள் செயின்.
விழந்தது நிலவு வெளிச்சத்தில் நிறைய இடங்களில் அடி  பாலன் அண்ணாவுக்கு .பதிலுக்கு அவரும் இடுப்புப்பட்டியாளும் விளாசினார்.

 புழுதிமண்ணில் புரண்டு எழுந்தார்கள். அதற்குள் சலசலப்பு வர . அதில் இருந்த ஒரு பாட்டி இவள் சாந்தியிடம் யாரோ வம்பு செய்தவையாம் .

அதுதான் அவள் மச்சான் அடிக்கின்றானாம் .என்று காற்றில் ஒரு பக்கம் கதை வர .

வேட்டி தொலைந்து டவுசர் மட்டும் தெரிய உன்னை விடமாட்டன் பரமசாமி .

வருவேண்டா என்று அவமானத்தில் சொல்லிப் போட்டுப் போனார்!

என்னைக் காதலிக்காத சாந்தியை நினைத்து இயக்கத்துக்குப் போறன் என்று எழுதிவைத்துவிட்டுப் போவது அப்போதுதான்  ஊருக்குள் புதிய வழிமுறையாக  !ஒருதலையாக காதலித்த காதலர்கள்  கண்டு கொண்ட விடயம்.

சாந்தியும் பின் நாட்களில் போராளியாகிய போது  தான் ராகுலும் நினைத்திருந்தான் பாலன் அண்ணா மீது அவளுக்கும் மையல் இருந்து இருக்கு என்று.

. அப்போது
இவனுக்கு சின்னமணியின்  பத்துவிரலிலும் இருப்பது தங்கமோதிரம் தானா !என்ற மயக்கம் இருந்தது .

அப்போது நல்ல நிலவு நேரம்
.ஊரில் .

புழுதியில் புரண்டு படுக்க வேண்டாம் வாங்கோ
வீட்ட போவம் .
நாளைக்கு எங்கள் திருவிழா தேர்த் திருவிழா! என்று பங்கஜம் பாட்டி சொல்ல .

சின்னத்தாத்தா கொஞ்சம் இருங்கோ. வில்லுப்பாட்டு முடியும் போது போகலாம் மச்சாள் .

ராகுல் உனக்கு நித்திரை வரவில்லையா ?என்றாள் அனோமா .

ஊருக்கு வாரதே திருவிழாவிற்குத்தான். நான் பதுளை போகும் போது ரயிலில் நித்திரைகொள்ளுவன்.

இப்ப இந்த அரிச்சந்திரன் மயாணகாண்டம் கேட்டு முடித்துவிட்டுத்தான் வருவேன்.

உனக்கு
நித்திரைவந்தால் பாட்டியின் மடியில் சாய்ந்து கொள்! சினத்தாத்தா தூக்கிக் கொண்டு வருவார்.

 வில்லுப்பாட்டு விரைவாக முடிந்ததும் செளந்தரம் பாட்டி வில்லுப்பாட்டுக் குழுவிற்கு!பொண்ணாடையும் போர்த்து வெற்றிலையில் காசும் கொடுத்தா !

அப்போது செளந்தரம் பேர்த்தி போட்டு இருந்தது. அக்கோபார் துணியில் கையில்லாத் சட்டை   .

இப்போது அந்த வடிவம் பழக்கத்தில் இல்லை .

பின் நாட்களில்  ஐரோப்பாவில் அவளைப் பார்த்தபோது ராகுல் கேட்டவன் என்னைத் தெரியுமா? என்று  ஓம் என்றாள் பல நிமிடங்களின் பின் .

சின்னமணியின் காரில் எப்போதும் இனிமைதான பாடல் ஒலிக்கும் இந்தப்பாடல் அவர் காரில் ஒலித்தது அன்று!
///////////////////////////////////////////////////////


விரைவாக தொலைந்தவன் வருவான்!........

வம்பு-மோசமான செயல்
சின்னமணி -ஈழத்து வில்லுப்பாட்டு கச்சேரி செய்வதில் பிரபல்யமான ஒரு கலைஞர்!

52 comments:

  1. இரவு வணக்கம் நேசன்!சின்னமணி போட்டிருந்தது பவுண் மோதிரம் தான்,ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!(வெளியில சொல்லிப் போடாதயுங்கோ,உருவிக் கொண்டு போயிடுவங்கள்:)

    ReplyDelete
  2. கருவாச்சிக்கு இன்று கோப்பி இல்லை,ஹி!ஹி!ஹி!!!!!!!!

    ReplyDelete
  3. நான்கு நாட்கள் ஊரில் இருக்க மாட்டேன்.

    ReplyDelete
  4. சாந்தியும் பின் நாட்களில் போராளியாகிய போது தான் ராகுலும் நினைத்திருந்தான் பாலன் அண்ணா மீது அவளுக்கும் மையல் இருந்து இருக்கு என்று!////இப்படி எத்தனை சோகக் கதைகள்!எங்கள் ஊரிலும் ஒரு பையன்.......................கடைசியில்,தற்கொலை செய்து கொண்டான்.அவனும் இ...........ல் இருந்தவன் தான்!

    ReplyDelete
  5. வாங்கோ யோகா ஐயா இன்று உங்களுக்குத்தான் பால்க்கோப்பி குடியுங்கோ!

    ReplyDelete
  6. கருவாச்சிக்கு இன்று கோப்பி இல்லை,ஹி!ஹி!ஹி!!!!!!!!

    //கருவாச்சி ஏதோ பரீட்சையாம் நான் ஒரு ...,

    ReplyDelete
  7. நான்கு நாட்கள் ஊரில் இருக்க மாட்டேன்.

    //அவசரவேலையாக்கும் முடித்துவிட்டு லெதுவாக வாங்கோ வார இறுதி முதுகு போய்விடும் தெரியும் தானே அடுப்படிவேலை வெய்யில் வேற!

    ReplyDelete
  8. சாந்தியும் பின் நாட்களில் போராளியாகிய போது தான் ராகுலும் நினைத்திருந்தான் பாலன் அண்ணா மீது அவளுக்கும் மையல் இருந்து இருக்கு என்று!////இப்படி எத்தனை சோகக் கதைகள்!எங்கள் ஊரிலும் ஒரு பையன்.......................கடைசியில்,தற்கொலை செய்து கொண்டான்.அவனும் இ...........ல் இருந்தவன் தான்!//என்ன செய்வது நம் இலக்கியம் பேசமறக்குது ஐயா உண்மையை கோபம் வருகுது நீங்கள் கட்டுப்படுத்துவதால் மெளனம் காக்கின்றேன் ! பதிவுலகில் மட்டும்!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  9. சின்னமணி போட்டிருந்தது பவுண் மோதிரம் தான்,ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!(வெளியில சொல்லிப் போடாதயுங்கோ,உருவிக் கொண்டு போயிடுவங்கள்:)
    //ஹீ ஹீ இது தெரியாமல் ராகுலும் என்னிடம் கேட்டபோது நான் சொன்னேன் அது ஒரு டூப்பு என்று உண்மையா பத்துவிரலிலும் இனி தங்கம் போடமுடியாதே !அவருக்கு கைகொடுத்து உருவி விடுவம் !ஹீ

    ReplyDelete
  10. என்ன நேசன் ரொம்ப வேகமாக தினத்திற்கு இரண்டு பதிவு?

    ReplyDelete
  11. கிராமியக் கலைகள் வளர்ப்பதில் எப்போதும் ஆலயங்கள் தான் முன்னுரிமையில் இருந்தது ஒரு காலம்!//
    ஆனால் இன்று கோவிலின் வங்கி கணக்குகளை வளர்ப்பதில் முன்னுரிமை என்ன கொடுமையிது

    ReplyDelete
  12. இல்லை அம்பலத்தார் நாளுக்கு ஒன்று தவிர்க்கமுடியாமல் தனிமரத்தின் கடையை விரைவில் மூடனும்!ஹீ ஹீ ஹிட்சா முக்கியம் நமக்கு குடும்பம் தானே!!!!

    ReplyDelete
  13. ஆலயங்கள் தான் முன்னுரிமையில் இருந்தது ஒரு காலம்!//
    ஆனால் இன்று கோவிலின் வங்கி கணக்குகளை வளர்ப்பதில் முன்னுரிமை என்ன கொடுமையிது 
    //காலத்தின் கட்டாயம் ஆலயத்தை நடத்தவும் காசு தேவைதானே !ஒரு நடிகரைக்கூட்டியந்து கோட்டலிம் ரூம் போட்டு குத்தாட்டம் பார்ப்போம் ஒரு கோயில் நடத்த ஒரு பூசை செய்ய கணக்குப் பார்க்கும் மனநிலையில் இருக்கும் போது எப்படி தப்புச் சொல்வது அம்பலத்தார் ஐயா????

    ReplyDelete
  14. கோயிலை நடத்த பணம் சேர்ப்பதில் தவறில்லை நேசன். ஆனால் இன்று பல கோயில் நிரவாகத்தினரும் அதை ஒரு பணம் கொட்டும் வியாபாரமாக நினைத்து செயற்படுகின்றனரே

    ReplyDelete
  15. எப்படியும் தொடரை முடித்ததும், ஒரு மின்னூலாக போட்டுவிடுங்கள் நேசன். மீண்டும் ஒருக்கா முழுசாப் படிக்கோணும்.

    ReplyDelete
  16. நிச்சயம் கலைகள் வளர்க்குமிடமாக இருந்த ஆலயங்கள் இன்று????? அது எல்லா மதத்துக்கும் பொருந்தும்.....

    ReplyDelete
  17. தனிமரத்தில் ஈழப்பூ மணக்கிறது
    வாழ்க! வளர்க!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. கோயிலை நடத்த பணம் சேர்ப்பதில் தவறில்லை நேசன். ஆனால் இன்று பல கோயில் நிரவாகத்தினரும் அதை ஒரு பணம் கொட்டும் வியாபாரமாக நினைத்து செயற்படுகின்றனரே // இங்க நான்  மெளமாக இருக்க நினைக்கின்றேன் இதற்குபதில் சர்சையைத் தரும் என்றாலும்  வியாபாரிகள் எல்லா இடத்திலும் புகுந்து கொள்ளக்கூடாது ஆன்மீகம் வேற வியாபாரம் வேற சினிமா வேற அது அது அவரவர்கைகளில் இருக்கனும் அம்பலத்தார்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.தொடர்ந்து சிரமப் படுத்துவதற்கு மன்னிக்கவும்!

    ReplyDelete
  19. நல்ல ஜோசனைதான் ஹாலிவூட் ரசிகன் பார்க்களாம் !நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  20. உண்மைதான் எஸ்தர்-சபி. 
    நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  21. நலமா புலவரே?
    தங்களின் வருகையும் கவிதையும் மனதிற்கு சந்தோஸம் தருகின்றது.
    மிக்க நன்றி உடலுபாதைகளையும் பொறுத்துக்கொண்டு  பின்னூட்டம் இட்டு என்னை ஊக்கிவிற்பதற்கு.
    நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  22. கோயில்கள் இன்று பணம் காய்க்கும் மரம் என்றே சிலர் செயல்படுவது வேதனையான விஷயம்தான் இல்லையா....

    ReplyDelete
  23. காலை வணக்கம் நேசன்!இன்னும் சிலமணித் துளிகளில் கிளம்பி விடுவேன்!முடிந்தால் அங்கிருந்து.......................

    ReplyDelete
  24. Sinnamani yalpaanathu ale malayakathilum villuppadu seithaara.

    ReplyDelete
  25. உண்மைதான் மனோ அண்ணாச்சி சிலரின் செயலினால் தான் சிலர் கோயில் பக்கம் போவது இல்லை என்பதும் நிஜம் தான்!
    நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  26. வணக்கம் யோகா ஐயா!
    பயணித்துக் கொண்டு இருப்பீர்கள் என நினைக்கின்றேன்.போகும் பயணம் நல்லபடியாக முடித்து விட்டு மனநிறைவோடு வர  எல்லாருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்!

    ReplyDelete
  27. வணக்கம் கவிக்கிழவன்!
    உங்கள் கேள்வி  இரு பொருள் படுகின்றது எனக்கு யாழ்ப்பாணத்து ஆள் !ஏன் மலையகத்தில் கலையை யாழ்ப்பாணத்தவன் கற்றுக்கொடுக்கக்கூடாது என்ற பிரதேசவாதம் என்று எடுக்கவா?? இல்லை சின்னமணி வில்லுப்பாட்டை பல இடங்களிலும் மேடை ஏற்றினார் ஏன்ற தகவல் அறிய ஆசையா??? 
    எப்படி என்றாலும் சின்னமணி யாழ்ப்பாணம் என்றாலும் சிலமலையக ஆசிரியர்களுக்கு எப்படி வில்லுப்பாட்டு செய்யலாம் என்று அறிவுரை கொடுத்தார் அப்படி பெற்றவர் எனக்கு ஒரு நண்பர் ஆசிரியர் அவர் கடமையாற்றுவது கண்டியில்!

    ReplyDelete
  28. வந்துட்டேன்ன்ன் அண்ணா ....

    ReplyDelete
  29. எங்கட மாமா என்னைப் பற்றி ஏதோ சொல்லினார்ப் போல ...

    அங்கிள் க்காகத்தன் பால்க்கப்பி விட்டுக் கொடுத்தினம்

    ReplyDelete
  30. அண்ணா நான் அப்புறமா படிச்சி கம்மேண்ட்ட் போர்டுராணன் அண்ணா ....
    திங்கட் கிழமை பரீட்சை இர்க்கு ......

    ReplyDelete
  31. வணக்கம் யோகா ஐயா!
    பயணித்துக் கொண்டு இருப்பீர்கள் என நினைக்கின்றேன்.போகும் பயணம் நல்லபடியாக முடித்து விட்டு மனநிறைவோடு வர எல்லாருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்!/////////////////



    நானும் எங்க மாமாக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.... இனிய பயணமாக அமைய வேண்டும் ...

    ReplyDelete
  32. //என்னைக் காதலிக்காத சாந்தியை நினைத்து இயக்கத்துக்குப் போறன் என்று எழுதிவைத்துவிட்டுப் போவது அப்போதுதான் ஊருக்குள் புதிய வழிமுறையாக !ஒருதலையாக காதலித்த காதலர்கள் கண்டு கொண்ட விடயம்.//
    காதலில் தோல்வியால், பரீட்சையில் சித்தியடையாததால், தகப்பன் கண்டித்ததிற்காக, அடித்ததற்காக என்பதுபோன்ற காரணங்களிற்காக போராட்டத்தில் இணைந்துகொண்டவர்களால் இயக்கத்தின் நற்பெயருக்கு கெடுதல் உண்டான சந்தர்ப்பங்களும் உண்டு.

    ReplyDelete
  33. கிளம்பும் நேரம் வந்து விட்டது!பாய்!!!!!!(Revoir!)

    ReplyDelete
  34. Yoga.S.FR said...

    நான்கு நாட்கள் ஊரில் இருக்க மாட்டேன்.//
    சந்தோசமாக சென்றுவாருங்கள் யோகா.

    ReplyDelete
  35. மேளக்கச்சேரி, வில்லுப்பாட்டு, கூத்து, கதாப்பிரசங்கம், சின்னமேளம்.... கோயில் திருவிழா என்றால் இப்படி எத்தனை நிகழ்வுகள் கண்முன் வருகிறது.

    ReplyDelete
  36. இன்னைக்கும் மாம்ஸ் இல்லை ..சோ ஜாலியா கும்மி அடிக்கலாம் எண்டு நினித்து வந்தேன் அனால் ஆருமே இல்லை போல ...

    ReplyDelete
  37. சின்னமணி வில்லிசையை மறக்க முடியுமோ?

    ReplyDelete
  38. உந்த வில்லுப்பாட்டு நேற்றே நடந்திட்டுதோ.நான் நினைக்கவே இல்ல.அதுவும் எனக்குத் தெரியாமல் எல்லாரும் வில்லுப்பாட்டுக் கேட்டிருக்கிறீங்கள்.யோகா அப்பா,அம்பலம் ஐயா,கருவாச்சி...மனசுக்குள்ள திட்றனாம்.ஆரெண்டாலும் என்னைத் தேடினவையோ !

    ReplyDelete
  39. நேசன்...ம் எனக்கும் ஒரு சின்னதா ஞாபகம் இருக்கு.ஒருவேளை அவர்தானோ தெரியேல்ல.அவரின்ர வில்லுப்பாட்டு யூ ட்யூப்ல இல்லயோ ?

    முந்தி நடா மோகன்ர ரேடியோவில அவரின்ர மகன் இல்லையெண்டா மருமகன் அறிவிப்பாளரா இருந்தவர் !

    ReplyDelete
  40. யோகா அப்பா 4 நாள் லீவாமோ.அதுக்கிடையில நிறையப் பதிவு போடுங்கோ நேசன்.கருவாச்சியைக் கலைச்சுப்போட்டு எனக்கு மட்டும் பால்கோப்பியும் வடையும் தாங்கோ.அவர் வாறதுக்கிடையில பாருங்கோ 4 நாளையில 8-10 கோப்பி குடிச்சிடுவன் !

    ReplyDelete
  41. வந்துட்டேன்ன்ன் அண்ணா ....

    /.வாங்க கலை நல்லாப் படிச்சீங்களா???

    ReplyDelete
  42. எங்கட மாமா என்னைப் பற்றி ஏதோ சொல்லினார்ப் போல ...

    அங்கிள் க்காகத்தன் பால்க்கப்பி விட்டுக் கொடுத்தினம்

    //பால்க்கோப்பி விட்டுக்கொடுத்தீங்களா சொல்லுறன் யோகா ஐயாவிடம்!

    ReplyDelete
  43. அண்ணா நான் அப்புறமா படிச்சி கம்மேண்ட்ட் போர்டுராணன் அண்ணா ....
    திங்கட் கிழமை பரீட்சை இர்க்கு ......

    //வருகைக்கு நன்றி நல்லாப்படிச்சு வெற்றிவாகைசூடி வாங்க!

    ReplyDelete
  44. நானும் எங்க மாமாக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.... இனிய பயணமாக அமைய வேண்டும் ...// நன்றி அவர்சார்பில் சொல்லுகின்றேன் கலை!

    ReplyDelete
  45. //என்னைக் காதலிக்காத சாந்தியை நினைத்து இயக்கத்துக்குப் போறன் என்று எழுதிவைத்துவிட்டுப் போவது அப்போதுதான் ஊருக்குள் புதிய வழிமுறையாக !ஒருதலையாக காதலித்த காதலர்கள் கண்டு கொண்ட விடயம்.//
    காதலில் தோல்வியால், பரீட்சையில் சித்தியடையாததால், தகப்பன் கண்டித்ததிற்காக, அடித்ததற்காக என்பதுபோன்ற காரணங்களிற்காக போராட்டத்தில் இணைந்துகொண்டவர்களால் இயக்கத்தின் நற்பெயருக்கு கெடுதல் உண்டான சந்தர்ப்பங்களும் உண்டு.
    /உண்மைதான் அம்பலத்தார்!

    ReplyDelete
  46. கிளம்பும் நேரம் வந்து விட்டது!பாய்!!!!!!(Revoir!)
    -//மீண்டும் சந்திப்போம்.

    ReplyDelete
  47. மேளக்கச்சேரி, வில்லுப்பாட்டு, கூத்து, கதாப்பிரசங்கம், சின்னமேளம்.... கோயில் திருவிழா என்றால் இப்படி எத்தனை நிகழ்வுகள் கண்முன் வருகிறது.

    //ம்ம் என்னசெய்வது எல்லாம் காலமாற்றமும்  கண்டுக்காம விட்டதும் இப்படி ஒரு உலகம் இருந்தது பலருக்குத் தெரியவில்லை என்று எழுதச்சொல்லும் ராகுல் இன்னும் சொல்லுவான் பல விடயங்கள்!

    ReplyDelete
  48. இன்னைக்கும் மாம்ஸ் இல்லை ..சோ ஜாலியா கும்மி அடிக்கலாம் எண்டு நினித்து வந்தேன் அனால் ஆருமே இல்லை போல ...

    //வேலை நேரத்தில் அடிக்கடி வெளியில் போகமுடியாது கலை இனி வெய்யில்காலம் இங்கு!

    ReplyDelete
  49. சின்னமணி வில்லிசையை மறக்க முடியுமோ?

    /:நிச்சயமாக மற்றவர்கள் மறந்தாலும் ராகுல் மறக்கமாட்டான் என்று சொல்லச் சொன்னான் வரோ அண்ணா.
    நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  50. உந்த வில்லுப்பாட்டு நேற்றே நடந்திட்டுதோ.நான் நினைக்கவே இல்ல.அதுவும் எனக்குத் தெரியாமல் எல்லாரும் வில்லுப்பாட்டுக் கேட்டிருக்கிறீங்கள்.யோகா அப்பா,அம்பலம் ஐயா,கருவாச்சி...மனசுக்குள்ள திட்றனாம்.ஆரெண்டாலும் என்னைத் தேடினவையோ !
    //எல்லாரும் தேடினவை திட்டாதீங்கோ .ஹேமா.

    ReplyDelete
  51. சின்னதா ஞாபகம் இருக்கு.ஒருவேளை அவர்தானோ தெரியேல்ல.அவரின்ர வில்லுப்பாட்டு யூ ட்யூப்ல இல்லயோ ?

    முந்தி நடா மோகன்ர ரேடியோவில அவரின்ர மகன் இல்லையெண்டா மருமகன் அறிவிப்பாளரா இருந்தவர் !//புதிய தகவல் ஹேமா.யூட்டியூப்பில் தேடுவதற்கு என் நேரங்கள் சரியாக அமையாது. 

    ReplyDelete
  52. யோகா அப்பா 4 நாள் லீவாமோ.அதுக்கிடையில நிறையப் பதிவு போடுங்கோ நேசன்.கருவாச்சியைக் கலைச்சுப்போட்டு எனக்கு மட்டும் பால்கோப்பியும் வடையும் தாங்கோ.அவர் வாறதுக்கிடையில பாருங்கோ 4 நாளையில 8-10 கோப்பி குடிச்சிடுவன் !
    // ஏழுதிவைத்திருக்கும் பதிவுகளை வெளியிட்டு விடுவேன் அம்பலத்தார் கொலைவெறியோடு பிளாஸ்டர் தேடுகின்றார் தினமும் பதிவு போட்டு என்னை ஓடவிடுகின்றாய் எந்த யாழ்தேவியில் போய் வாரனி நானும் டிக்கட் போட்டுவிட்டன் ஆகஸ்ரில் வந்து அறைப்போறன் பாரு என்று இப்பவே அடிக்க வாரார்! ஓடப்போறன் என்றதற்காக ஒரேடியாக தொடரா என்று காட்டான் கடுப்பாகின்றார் ஹேமா .ம்ம்ம் பார்க்கலாம்.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete