17 April 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-31

இந்த ஊருக்கு ஒரு நாள் திரும்பி வருவேன் அதுதான் எனக்குத் திருநாள் என்
 கனவுகள் பலித்திடும்.திருநாள்!
-மாவை வரோதயன் பாடல்!

அன்று பாலம் கடக்கும் போது பலரும் தலையில் சுமந்து சென்றது பொருட்களை மட்டும் மல்ல ஊர் மீதான கடைசி நேர உணர்வுகளையும் தான்.

குடுகுடு பாட்டியும் குமரி சுசந்திக்கா ஜெயசிங்க போல பாலம் தாண்டி ஓடினவேகத்தைப் பார்த்த போது தெரிந்தது! மரணபயமும் யுத்த மோதலில் எப்படியும் தப்பித்து விடவேணும் நேவிக்காரனிடம் இருந்து என்ற கருத்துமே.

பொழுது விடியவிடிய பலரின் அழுகுரல்கள். பாதி நித்திரை இல்லாத அதிகாலையில் பாலத்த்தின் நீளம் 3 கிலோ மீற்றர் எப்படித் நடந்தே கடந்தார்கள் என்று நினைக்கும் போதெல்லாம் நெஞ்சில் சம்மட்டியால் அடித்தது போல இருக்கும்!

.பாலம் கடக்கும் போது பங்கஜம் பாட்டியையும் சின்னப்பாட்டியையும் தனிய விட்டுட்டு வாரதில் விருப்பம் இன்றி இருந்தோம்.
  சின்னத்தாத்தாவிடம்  .
"பங்கஜம் பாட்டி என்ற பேரன் ,பேர்த்திக்கு உதவியா இருப்பா உனக்கு கோடி புண்ணியம்கிடைக்கும் என்று கை எடுத்து அழுததைப்பார்க்க முடியாமல் "

எப்போதும் மச்சாள் பேச்சை மீறாத சின்னத்தாத்தா மெளனமாக நின்ற கனங்கள்.

 தன் கணவனுடன் உடன் போகும்  சின்னப்பாட்டியும் சகலி  பங்கஜம் வராமல்  நானும் பாலம் தாண்ட மாட்டன் என்று சொன்ன குடும்ப ஒற்றுமை .

எங்கேயோ இருந்து  ஒரு வீட்டில் வாழ வந்தாலும் மூத்த மருமகளையும் இன்னொரு சகோதரியாக எண்ணிக்கொள்ளும் பாசம் அடுத்த தலைமுறையிடம் இல்லாமல் போன நிலையை எண்ணும் போதெல்லாம்!

" கோதாரி பிடிப்பாங்கள் சும்மா இருந்த தேன் கூட்டை நொட்டி விட்டாங்கள் கோதாரி அறுப்பாங்கள்"
 என்று திட்டிக்கொண்ட போன சைக்கிள்கடை சின்னராசு மாமாவின் பேச்சுத்தான் ஞாபகம் வரும் .

பாலம் தாண்டும் போதே எங்கோ !இருந்து வந்த வெடிச்சத்தம் கேட்ட அதிர்ச்சியில் சைக்கிளை பாலத்தில் ஓட்டாமல்  சைக்கிளோடு கடலுக்குலுடன்  விழுந்து எழும்பியதும் வந்து விடுகின்றது சேர்ந்தே நினைவுகளாக!

மறுநாள் அதிகாலை ஆதவன் ஒளி கொடுக்கமுன் ஆமிக்காரன் ஷெல் ஒளியும்/ஒலியுமாக  கொடுத்துக்கொண்டு முன்னேறியதும் !

கடைசியில் நின்றவர்கள்  மீது ஹெலிகப்படரில் இருந்து சுட்டதில் சுவையாக எள்ளுப்பாகு விற்கும் பாட்டியும் மோளும் சுட்ட இடத்திலேயே செத்துப் போனார்கள் என்ற செய்தி செவியில் விழுந்தது

.தனியாக நிற்கும் பாட்டிமார் என்ன கெதியோ?
 என்று ஏங்கிக் கொண்டு அன்று விடியும் வேளையில் அடுத்த ஊர் வந்த போது. தெரியாது இனி எங்கள் ஊரில் உறவுகள் சூழ ஒன்றாக இருந்து  ஒரு நாளும் விடியலைப்பார்க்கமாட்டோம் என்று.!

பங்கஜம் பாட்டியும் சின்னப்பாட்டியும் பேரன்களுக்கும், பேர்த்திமாருக்கும் கொடுத்த முத்தம் இனிக்கும் .

அதில் கடைசியாக ரூபன் மச்சானுக்கு கொடுக்கும் போது அழுத்திக்கொடுத்த முத்தம் .அதுதான் அவனுக்கு கடைசி முத்தம் என்று அன்று தெரியாது பாட்டிக்கு!

கழுத்தில் இருந்த சங்கிலியை போட்டுவிட்டு பேர்த்தியிடம் சொன்னா!
" பேரம்பலத்தாரின் பேரன்கள் எல்லாம் கோபக்காரங்கள். என்றாலும் குடித்தனம் யாராவது ஒரு பேரனுடன்  தான் உங்களுக்கு .என்று பல்லவிக்கும் ,சுகிக்கும் சொல்லிய போது!

 முத்தாச்சிப் பாட்டி சொன்னா "
அவனவன் ஓடுகின்ற நேரத்திலும் நீ உன்ர கடைசி ஆசையைச் சொல்லுறீயோ"?

உன்ற பேரன்கள் யாரைக் கூட்டிக் கொண்டு எதிர்காலத்தில் ஓடுறாங்களோ?

" .இந்தப் பங்கஜம்  செம்பு எடுத்து .ஒரு சொட்டுத்தண்ணீர் கொடுக்க மாட்டன்.
"கொள்ளிபந்தமும் பிடிக்கக்கூடாது என்று சொல்லித் தான் வளர்த்திருக்கிறன் என்ற பேரன்களுக்கு.

ஆத்தா நீ தான் இவங்களை பத்திரமாக பார்க்கணும் என்று அந்த நேரத்திலும் கம்பீரமாக நின்றா பங்கஜம் பாட்டி கண்களுக்குள்.

முத்தாச்சிப்பாட்டி,சண்முகம் மாமியின் பிள்ளைகள்,புனிதா மாமி,செல்வம்மாமி,சுகி ஈசன் மாமி பல்லவி யோகன் அண்ணா,தம்பி .அம்மா என எல்லோரும் பங்கஜம் பாட்டியும் சின்னப்பாட்டியும் நிற்க ஊரைவிட்டு ஓடிவந்தோம் நாங்கள் .

அது புரட்டாசிமாதம் .சனியன் வரும் மாதத்தில் சனியன் பிடித்தது எங்கள் வாழ்வில் இடம் பெயர்வு என்ற சனியன்.

அன்று போனவர்கள் ,பார்த்தவர்கள் ,கண்டவர்கள் தெரிந்தவர்கள் என பிறகு பார்க்கமுடியவில்லை பலரை ராகுல் பின் நாட்களில்.!


 என்னடா ராகுல் சத்தம் இல்லை. ஏன் பாட்டியைவிட்டு வாரதில் கவலையோ ?விரைவில் திரும்பிப் போகலாம் என்று சின்னத்தாத்தா தைரியம் சொன்னார்.அப்போது!

தொடரும்!

//கோதாரி அறுப்பாங்கள்-கஸ்ரப்படுத்தும் செயல்-யாழ் வட்டார சொல்
நொட்டி விடுதல்-குழப்பி விடுதல்-யாழ் வட்டாரவழக்கு.

165 comments:

  1. நான் வந்திட்டேன்...எனக்குத்தான் பால்க்கோப்பி.அப்பா,கலை வாங்கோ வாங்கோ !

    ReplyDelete
  2. வந்துப் போட்டேன் அக்கா நானும்

    ReplyDelete
  3. வாங்க விருது தந்த கவிதாயினி ஹேமா அவர்களே! ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!

    ReplyDelete
  4. கலை எங்கயாம் பால்க்கோப்பி.நேசனும் அப்பாவும் அங்க சந்தியில நிக்கினம் !

    ReplyDelete
  5. இரவு வணக்கம் எல்லோருக்கும்!////:ஹேமா said...

    நான் வந்திட்டேன்...எனக்குத்தான் பால்க்கோப்பி.அப்பா,கலை வாங்கோ வாங்கோ!/////இனி வந்தென்ன,நின்றென்ன?பால் கோப்பி தான் பறிபோய் விட்டதே,ஹ!ஹ!ஹா!ஹி!ஹி!ஹி!ஹோ!ஹோ!ஹோ!!!!

    ReplyDelete
  6. வாங்க கலை நலமா,! யோசிக்காதீங்கோ நல்லதாக அமையும் பரீட்சை!

    ReplyDelete
  7. ஹேமா said...

    கலை எங்கயாம் பால்க்கோப்பி.நேசனும் அப்பாவும் அங்க சந்தியில நிக்கினம் !///அது ஒரு காலம்!(சந்தியில நிக்கிறது,ஹி!ஹி!ஹி!)

    ReplyDelete
  8. ஹேமா said...
    கலை எங்கயாம் பால்க்கோப்பி.நேசனும் அப்பாவும் அங்க சந்தியில நிக்கினம் !// இப்படி ஒரு சந்தோசம் சங்கடம் உப்புமடத்தில்!

    ReplyDelete
  9. வாங்க யோகா ஐயா நலம்தானே! விருது பெற்ற புலவரே வருக வருக்

    ReplyDelete
  10. கலை எங்கயாம் பால்க்கோப்பி.நேசனும் அப்பாவும் அங்க சந்தியில நிக்கினம் !///அது ஒரு காலம்!(சந்தியில நிக்கிறது,ஹி!ஹி!ஹி!)

    17 April 2012 11:33 //ஹீ ஹீ நானும்தான்! ஆவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  11. கலைக்கு கவலை வேண்டாம் நல்லது நடக்கும் பரீட்சையில் மனம் தைரியமாக இருக்கனும்!

    ReplyDelete
  12. தனிமரம் said...

    வாங்க யோகா ஐயா நலம்தானே! விருது பெற்ற புலவரே வருக வருக!////நலம்,நலமறிய ஆவல்!விருது...........அது வந்து .........

    ReplyDelete
  13. om அண்ணா ...நீங்கள் பாலக் காப்பி கொடுத்து விட்டினம் போல் அக்காக்கும்ு ...ஒருவாரம் அவர்கள் தரையில் நடக்கா மாட்டினம்

    ReplyDelete
  14. வாங்க யோகா ஐயா நலம்தானே! விருது பெற்ற புலவரே வருக வருக!////நலம்,நலமறிய ஆவல்!விருது...........அது வந்து .........//உங்களுக்கு அந்த தகுதி இருக்கு ஐயா!நான் அறிவேன் !

    ReplyDelete
  15. என்னடா ராகுல் சத்தம் இல்லை. ஏன் பாட்டியைவிட்டு வாரதில் கவலையோ ?விரைவில் திரும்பிப் போகலாம் என்று சின்னத்தாத்தா தைரியம் சொன்னார்.அப்போது!////அப்படி நினைத்துத் தான் நாங்களும் ப்ளைட் பிடித்தோம்,ஹும்..............!

    ReplyDelete
  16. கவிதாயினி சொல்லித் தள்ளி வைக்காதேங்கோ.கூச்சமா இருக்கு !

    விருது படம் வடிவம் பிடிச்சிருக்கோ அப்பா நேசன்.படம் வெளிச்சமா இல்லை.நிலாவுக்குள் கண்ணாடிப்பறவைகள் இருக்கு.கவனிச்சுப் பாருங்கோ !

    ஊர்ல சதியின்ர ஞாபகத்தில தானே உப்புமடச்சந்தியெண்டு பேர் வச்சிருக்கிறன்.பாருங்கோ சந்தியில நிக்கினம் எண்டு சும்மாவாவது சொல்லிக்கொள்ளலாம் !

    ReplyDelete
  17. om அண்ணா ...நீங்கள் பாலக் காப்பி கொடுத்து விட்டினம் போல் அக்காக்கும்ு ...ஒருவாரம் அவர்கள் தரையில் நடக்கா மாட்டினம்//இப்படி ஐரோ]ப்பாவில் இருக்கும் எல்லாரும் குடிப்பினம் என்று நினைக்கக் கூடாது கலை! ஆவ்வ்வ் பிரென்சுக்காதலி சுத்த சைவம் ம்ம்ம்ம் ! யோகா ஐயா கொசுத்தொல்லை தாங்கமுடியல என்று கருக்குமட்டை தேடமுன் ஓடிவிடுறன்!ஈஈஈஈஈ

    ReplyDelete
  18. என்னடா ராகுல் சத்தம் இல்லை. ஏன் பாட்டியைவிட்டு வாரதில் கவலையோ ?விரைவில் திரும்பிப் போகலாம் என்று சின்னத்தாத்தா தைரியம் சொன்னார்.அப்போது!////அப்படி நினைத்துத் தான் நாங்களும் ப்ளைட் பிடித்தோம்,ஹும்..............!// ம்ம்ம் பலர் ஐயா ஊரைவிட்டு வந்தபோது!!!ம்ம்ம்ம்

    17 April 2012 11:41

    ReplyDelete
  19. //" கோதாரி பிடிப்பாங்கள் சும்மா இருந்த தேன் கூட்டை நொட்டி விட்டாங்கள் கோதாரி அறுப்பாங்கள்"//

    திட்டுறது காதில கேக்குது நேசன் !

    முத்தாச்சிப்பாட்டிக்கு கடைசி ஆசையைச் சொல்லவாவது அவகாசம் கிடைச்சுதே.எத்தனை பேருக்கு அடுத்த கணம் தெரியாமல் போனது !

    ReplyDelete
  20. இல்லை அண்ணா ..மனத் தைரியம் எல்லாம் எனக்கு இல்லவே இல்லை ..

    கடவுள் மேல் நம்பிக்கை இருக்கு அண்ணா ...எனக்கு எது நல்லதோ அதை கண்டிப்பாய் கொடுப்பர் ...

    ReplyDelete
  21. விதாயினி சொல்லித் தள்ளி வைக்காதேங்கோ.கூச்சமா இருக்கு !

    விருது படம் வடிவம் பிடிச்சிருக்கோ அப்பா நேசன்.படம் வெளிச்சமா இல்லை.நிலாவுக்குள் கண்ணாடிப்பறவைகள் இருக்கு.கவனிச்சுப் பாருங்கோ !

    ஊர்ல சதியின்ர ஞாபகத்தில தானே உப்புமடச்சந்தியெண்டு பேர் வச்சிருக்கிறன்.பாருங்கோ சந்தியில நிக்கினம் எண்டு சும்மாவாவது சொல்லிக்கொள்ளலாம் !

    17 April 2012 11:42 //வேலையால் வரும் போது சந்தியில் பார்த்துக்கொண்டு வந்தேன் இடையில் வழிப்பறிக்கூட்டம் ஐபோன் முக்கியம் என்பதால் !அனைத்துவிட்டேன் அதுதான் பிந்திவிட்ட்து சந்திக்கு வந்து கதைக்க இடையில் தாயக பாசம்! ம்ம்ம்

    ReplyDelete
  22. சொல்லுங்கோ மாமா ...ஏன் தயக்கம் .. புலவர் எண்டு உலகமே oththuk கொள்ளுதேல்லோ ...ஓம் எண்டு சொல்லிடுங்கோ மாமா ..
    பல விருது வாங்கி போட்டீர்கள் athil ஒண்டு தான் இது எண்டு உரைத்திடுங்கோ

    ReplyDelete
  23. திட்டுறது காதில கேக்குது நேசன் !

    முத்தாச்சிப்பாட்டிக்கு கடைசி ஆசையைச் சொல்லவாவது அவகாசம் கிடைச்சுதே.எத்தனை பேருக்கு அடுத்த கணம் தெரியாமல் போனது !//ம்ம்ம் உண்மைதான் எனக்கு அப்படி ஒரு பாட்டி கிடைக்கவில்லை!ஹீ ஓடி வ்ரும் போது!!

    ReplyDelete
  24. கடவுள் மேல் நம்பிக்கை இருக்கு அண்ணா ...எனக்கு எது நல்லதோ அதை கண்டிப்பாய் கொடுப்பர் //அதுவும் ஒரு நம்பிக்கைதான் கலை ஜோசிக்காதீங்கோ கடவுள் சித்தம் என்று நினையுங்கோ!

    ReplyDelete
  25. இப்படி ஐரோ]ப்பாவில் இருக்கும் எல்லாரும் குடிப்பினம் என்று நினைக்கக் கூடாது கலை! ஆவ்வ்வ் பிரென்சுக்காதலி சுத்த சைவம் ம்ம்ம்ம் ! யோகா ஐயா கொசுத்தொல்லை தாங்கமுடியல என்று கருக்குமட்டை தேடமுன் ஓடிவிடுறன்!ஈஈஈஈஈ///////////////////

    மாமா ரீ ரீ அண்ணா என்ன சொலுறார் எண்டு kelungo ...

    அண்ணி இருக்கையில் பிரஞ்சுக் காதலியாம் ...கருக்கு மட்டை எடுத்துட்டு சிக்கிரம் வாங்கோ

    ஹேமா அக்கா பாருங்கோ படித்துப் போட்டு அப்புடியே பார்க்காத மாறி சீனு....

    ரீ ரீ அண்ணாவை காப்பாற்றுரான்கலாம் அக்கா ...

    ReplyDelete
  26. சொல்லுங்கோ மாமா ...ஏன் தயக்கம் .. புலவர் எண்டு உலகமே oththuk கொள்ளுதேல்லோ ...ஓம் எண்டு சொல்லிடுங்கோ மாமா ..
    பல விருது வாங்கி போட்டீர்கள் athil ஒண்டு தான் இது எண்டு உரைத்திடுங்கோ

    17 April 2012 11:50 //மாமாவின் பழைய முகம் கலைக்கு தெரியாது! நான் அப்ப வாசகன் இப்ப கிறுக்கும் அளவைவிட வேண்டாம்!!! ம்ம்ம்ம்

    ReplyDelete
  27. ஹேமா said...

    கவிதாயினி சொல்லித் தள்ளி வைக்காதேங்கோ.கூச்சமா இருக்கு !

    விருது படம் வடிவம் பிடிச்சிருக்கோ அப்பா நேசன்.படம் வெளிச்சமா இல்லை.நிலாவுக்குள் கண்ணாடிப்பறவைகள் இருக்கு.கவனிச்சுப் பாருங்கோ !

    ஊர்ல சந்தியின்ர ஞாபகத்தில தானே உப்புமடச் சந்தியெண்டு பேர் வச்சிருக்கிறன்.பாருங்கோ சந்தியில நிக்கினம் எண்டு சும்மாவாவது சொல்லிக்கொள்ளலாம் !////விருது அழகாக் இருக்கிறது,ஹேமா!கந்தசாமி வடிவமைத்தது என்று சொன்னீர்கள்.அவருக்கும் ஒரு விருது!///இங்கேயும் பிரான்சில்,லா சப்பல் என்ற இடத்தில் சந்தி,சந்தியாக நிற்பார்கள் பையன்கள்!அப்பா நிற்க முடியாதே,ஹ!ஹ!ஹா!!!அப்பப்போ,இந்தச் சந்தியிலாவது நிற்போம்,ஹி!ஹி!ஹி!

    ReplyDelete
  28. அப்பாவுக்கு நிச்சயம் புலவர் பட்டம்தான்.இல்லையோ கலை.திருவிளையாடல் படத்தில இந்த நகைச்சுவைச்சுவைக் காட்சியில் வரும் தருமியும் புலவரெல்லோ !

    எனக்கு நேசனின் கவிதைகளும் நல்லாவே பிடிச்சிருக்கு.அத்தனையும் மனஉணர்வுகள்.இன்னும் தட்டி நிமிர்த்தினால் அழகான கவிதைகளாகும் கட்டாயம் !

    ReplyDelete
  29. தனிமரம் said...
    விதாயினி சொல்லித் தள்ளி வைக்காதேங்கோ.கூச்சமா இருக்கு !

    விருது படம் வடிவம் பிடிச்சிருக்கோ அப்பா நேசன்.படம் வெளிச்சமா இல்லை.நிலாவுக்குள் கண்ணாடிப்பறவைகள் இருக்கு.கவனிச்சுப் பாருங்கோ !////


    ஓஒ ஓஒ ஹேமா அக்காக்கு வெட்க வெட்கமா வருதாம் ...அக்கா போதும் வெட்கப் படதிங்கோ

    அக்காவை கவி தாயினி எண்டு சொல்லக் கூடாதம் ...
    அப்போ குட்டி அவ்வை எண்டு சொல்லலாமா அக்கா ...

    நாங்க தான் முதலிலே பார்த்துப் போட்டம் அல்லோ ....

    ReplyDelete
  30. அண்ணி இருக்கையில் பிரஞ்சுக் காதலியாம் ...கருக்கு மட்டை எடுத்துட்டு சிக்கிரம் வாங்கோ

    ஹேமா அக்கா பாருங்கோ படித்துப் போட்டு அப்புடியே பார்க்காத மாறி சீனு....

    ரீ ரீ அண்ணாவை காப்பாற்றுரான்கலாம் அக்கா ...//ஹீ நான் அடுத்த தொடருக்கு இப்பவே விளம்பரம் செய்யுறன் என்று ஐய்யாவுக்கும் ஹேமா அக்காளுக்கும் தெரியும் கலை!ஹீ

    ReplyDelete
  31. தனிமரம் said...

    இப்படி ஐரோ]ப்பாவில் இருக்கும் எல்லாரும் குடிப்பினம் என்று நினைக்கக் கூடாது கலை! ஆவ்வ்வ் பிரென்சுக்காதலி சுத்த சைவம் ம்ம்ம்ம் ! யோகா ஐயா கொசுத்தொல்லை தாங்கமுடியல என்று கருக்குமட்டை தேடமுன் ஓடிவிடுறன்!ஈஈஈஈஈ////அடடே!அப்படியா?சுத்த சைவமா?தலை வணங்குகிறேன்!

    ReplyDelete
  32. ஓம் அக்கா ...ரீ ரீ அண்ணா உண்மையா சுப்பரா எழுதிப் போட்டாங்க ...

    மாமா எப்புடி எழுதினாங்க பாருங்க ...செமையா இருந்துச்சி ...செமக் காமெடி எல்லாமே அறிசியாரே ....

    ReplyDelete
  33. எனக்கு நேசனின் கவிதைகளும் நல்லாவே பிடிச்சிருக்கு.அத்தனையும் மனஉணர்வுகள்.இன்னும் தட்டி நிமிர்த்தினால் அழகான கவிதைகளாகும் கட்டாயம் !

    17 April 2012 11:56 // ஹீ அங்க வாரன் ராகுல் நண்பனின் பதிவாளனாக இதுக்கு மேல் தட்டினால் மொட்டை முண்டம் ஆகிவிடும்!இதே ஓவர் கலை சொல்லு ம்ம்

    ReplyDelete
  34. காக்கா கொத்தப் பாக்குது.பயத்திலதான் தள்ளி நிக்கிறன்.

    அடுத்த பால்க்கோப்பியும் எனக்குத்தான் எண்டு சொல்ல விருப்பம்.இனி எனக்கு எப்பவும் பின்னேர வேலையெல்லோ போட்டிட்டாங்கள்.லீவு நாள்ல நேசன் வீட்டு வாசலில காத்துக்
    கிடக்கவேணும் !

    கருக்குமட்டை முடிஞ்சுபோச்சு.ஊருக்குச் சொல்லித்தான் எடுக்கவேணும் கல.அதிராட்ட சொல்லுங்கோ அண்டாக்கிக்காவில இருந்து கொண்டு வரட்டும் !

    ReplyDelete
  35. ஹீ நான் அடுத்த தொடருக்கு இப்பவே விளம்பரம் செய்யுறன் என்று ஐய்யாவுக்கும் ஹேமா அக்காளுக்கும் தெரியும் கலை!ஹீ////

    ஹா ஹா ஹா இப்புடி எல்லாம் சொல்லி அக்காவையும் மாமாவையும் ஏமாற்ற்றாலம் ...என்னை ஏமாத்தற முடியாதாக்கும் .....

    ReplyDelete
  36. கலை said...
    ஓஒ ஓஒ ஹேமா அக்காக்கு வெட்க வெட்கமா வருதாம் ...அக்கா போதும் வெட்கப் படதிங்கோ

    அக்காவை கவி தாயினி எண்டு சொல்லக் கூடாதாம் ...
    அப்போ குட்டி அவ்வை எண்டு சொல்லலாமா அக்கா ...////சீச்சீய் அவ்வளவு வயசா இருக்கும்?

    ReplyDelete
  37. இப்படி ஐரோ]ப்பாவில் இருக்கும் எல்லாரும் குடிப்பினம் என்று நினைக்கக் கூடாது கலை! ஆவ்வ்வ் பிரென்சுக்காதலி சுத்த சைவம் ம்ம்ம்ம் ! யோகா ஐயா கொசுத்தொல்லை தாங்கமுடியல என்று கருக்குமட்டை தேடமுன் ஓடிவிடுறன்!ஈஈஈஈஈ////அடடே!அப்படியா?சுத்த சைவமா?தலை வணங்குகிறேன்!//ஹீ தாலி மாறின பின் தலைகுனிந்து! ம்ம்ம் நண்பன் சொல்லட்டும் கேட்போம் !நான் நல்ல கணவன் மச்சாளுக்கு! ஆவ்வ்வ்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  38. தனிமரம் said...
    எனக்கு நேசனின் கவிதைகளும் நல்லாவே பிடிச்சிருக்கு.அத்தனையும் மனஉணர்வுகள்.இன்னும் தட்டி நிமிர்த்தினால் அழகான கவிதைகளாகும் கட்டாயம் !
    /////

    அண்ணா பார்த்திகல்லோ அவ்வையின் திட்டத்தை ...இப்புடி எல்லாம் சொல்லி உசுப்பேற்றி உங்களை கவி பாட வைத்து உங்கட மண்டையை தட்டி நிமிரித்த திட்டம் போட்டு இருக்கினம்

    ReplyDelete
  39. உங்க்ட ரீ ரீ அண்ணாவை எந்த பிரெஞ்சுக்காரி பாப்பா.அண்ணி தலைவிதியெண்டு வந்திட்டாஆஆஆஆஆஆ....இப்ப எனக்குக் கல்லெறிதான்.அப்பா காப்பாத்துங்கோ.இப்பவே குட்டி ஔவை எண்டு சொல்றா !

    ReplyDelete
  40. ஓம் அக்கா ...ரீ ரீ அண்ணா உண்மையா சுப்பரா எழுதிப் போட்டாங்க ...

    மாமா எப்புடி எழுதினாங்க பாருங்க ...செமையா இருந்துச்சி ...செமக் காமெடி எல்லாமே அறிசியாரே/அரசியாரே இந்த ஓலையை தனிமரம் ,காட்டான். நிரூபன் ம்ம்ம்

    ReplyDelete
  41. கலை said...

    ஹீ நான் அடுத்த தொடருக்கு இப்பவே விளம்பரம் செய்யுறன் என்று ஐயாவுக்கும் ஹேமா அக்காளுக்கும் தெரியும் கலை!ஹீ////

    ஹா ஹா ஹா இப்புடி எல்லாம் சொல்லி அக்காவையும் மாமாவையும் ஏமாற்றலாம் ...என்னை ஏமாத்தற முடியாதாக்கும் .....///அதான,யார் கிட்ட?????பிச்சுப்புடுவேன்,பிச்சி!

    ReplyDelete
  42. ஹா ஹா ஹா இப்புடி எல்லாம் சொல்லி அக்காவையும் மாமாவையும் ஏமாற்ற்றாலம் ...என்னை ஏமாத்தற முடியாதாக்கும் .....//ஹீ விற்பனைத்துறையில் இருந்த என்னிடமா கலை தாயக் அனுபவம் இருக்கும் போது கலையா கொக்கா !ஹி

    ReplyDelete
  43. /சீச்சீய் அவ்வளவு வயசா இருக்கும்?

    17 April 2012 12:03///

    ச சா சா ஹேமா அக்காக்கு வயசு வைத்து கொடுக்கலை மாமா ....ஹேமா அக்காவின் கவி திறமைக்கை சொன்னினம் ...

    உண்மையிலே அக்காக்கு பெரிய வயது எண்டு நினைத்துப் போட்டினம் அவவின் கவிதை ezuthum திறமை பார்த்து ...சின்னா வயசுல அக்கா அப்புடி எழுதுறது உண்மையா எனக்கு ஆச்சர்யம்

    ReplyDelete
  44. கலை said...
    அண்ணா பார்த்திகல்லோ அவ்வையின் திட்டத்தை ...இப்புடி எல்லாம் சொல்லி உசுப்பேற்றி உங்களை கவி பாட வைத்து உங்கட மண்டையை தட்டி நிமிர்த்த திட்டம் போட்டு இருக்கினம்./////ஹ!ஹ!ஹா!!!ஹி!!ஹி!!ஹி!!!!!!(இப்படிச் சிரித்து எத்தனை நாள்?)

    ReplyDelete
  45. இரவு வணக்கம் எல்லோருக்கும்...
    பால்க்கோப்பி ஆறிப்போச்சோ?

    ReplyDelete
  46. அதான,யார் கிட்ட?????பிச்சுப்புடுவேன்,பிச்சி!////



    அண்ணா மாமாவும் உண்மையை கண்டு பிடித்து விட்டினம் ...ஹ ஹா

    ReplyDelete
  47. நேசன்....கலை தென்பா வந்திருக்கிறா.பாருங்கோ உடன் உடன பதில் எப்பிடி வருது.இண்டைக்கு ரீரீ அண்ணாவுக்கும் ஆள் கருக்குமட்டை தேடுது.அதுதான் விளங்கேல்ல.

    நேசன் ஒண்டு தெரியுமோ...கவிதைக்கும் விருதுக்கும் உங்களுக்கும் தனக்கும் தானே வாழ்த்துச் சொல்லிட்டு வந்திருக்கிறா.எனக்கு ஒரே சிரிப்புத்தான்.செல்லக் கருவாச்சி !

    ReplyDelete
  48. அண்ணா பார்த்திகல்லோ அவ்வையின் திட்டத்தை ...இப்புடி எல்லாம் சொல்லி உசுப்பேற்றி உங்களை கவி பாட வைத்து உங்கட மண்டையை தட்டி நிமிரித்த திட்டம் போட்டு இருக்கினம்//மூடி வைத்த நாட்குறிப்பேட்டை திறக்க வைத்த படம் அது கலை !ம்ம்ம் அன்று இரவு ம்ம்ம்! வேண்டாம் என்கிறான் ராகுல் கவிதையே! ஆனாலும் வேனும் என்கிறான் இன்னொரு பிரெஞ்சுக்கார் நண்பன் பார்ப்போம்!

    ReplyDelete
  49. கலை said...

    /சீச்சீய் அவ்வளவு வயசா இருக்கும்?///

    ச சா சா ஹேமா அக்காக்கு வயசு வைத்து கொடுக்கலை மாமா ....ஹேமா அக்காவின் கவி திறமைக்கை சொன்னினம் ...////ஜகா வாங்கிட்டாடா,கிழவா!இது வேணும் உனக்கு!சிண்டு முடியவா பாக்கிற????

    ReplyDelete
  50. ஹா ஹா ஹா இப்புடி எல்லாம் சொல்லி அக்காவையும் மாமாவையும் ஏமாற்றலாம் ...என்னை ஏமாத்தற முடியாதாக்கும் .....///அதான,யார் கிட்ட?????பிச்சுப்புடுவேன்,பிச்சி!

    17 April 2012 12:07 //ஹீ யோகா ஐயாவுக்குத்தெரியும் கொசுக்கடி தீராது என்று்! ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  51. உங்க்ட ரீ ரீ அண்ணாவை எந்த பிரெஞ்சுக்காரி பாப்பா.அண்ணி தலைவிதியெண்டு வந்திட்டாஆஆஆஆஆஆ...
    எங்கட ரீ ரீ அண்ணாக்கு என்னக் குறைச்சல் ...அந்த பிரஞ்சு கார அன்னிக்கு தான் கொடுத்து வைக்கல ...

    தலைவிதால் ஒண்டும் அண்ணி வரவில்லை ஆக்கும் தவமிருந்து அண்ணாவை கல்யாணம் கட்டியவங்கதான் அண்ணி ...

    ReplyDelete
  52. ரெவெரி said...

    இரவு வணக்கம் எல்லோருக்கும்...
    பால்க்கோப்பி ஆறிப்போச்சோ?///இரவு வணக்கம் ரெவரி!!!!அது குடிச்சு இப்ப சமிபாட்டுக்குப் போயிருக்கும்.நல்லாயிருக்கிறீங்களா?

    ReplyDelete
  53. இப்பவே குட்டி ஔவை எண்டு சொல்றா !/////

    ஓகே அக்கா அழதிங்கோ ...உங்க விருப்பப் படி சொல்லிப் போடுறேன் நீங்கள் ஒன்னும் குட்டி அவ்வை கிடையாது ..நீங்கள் தான் பெரிய அவ்வை ..ஓகே

    ReplyDelete
  54. உண்மையிலே அக்காக்கு பெரிய வயது எண்டு நினைத்துப் போட்டினம் அவவின் கவிதை ezuthum திறமை பார்த்து ...சின்னா வயசுல அக்கா அப்புடி எழுதுறது உண்மையா எனக்கு ஆச்சர்யம்

    17 April 2012 12:10 //எனக்கும் தான் கலை அதையும் விட பதிவுலக அரசியலில் அவா அரசிதான்!

    ReplyDelete
  55. வாங்க் ரெவெரி அண்ணா பால்க்கோப்பி ஆறினாலும் ஓலா!

    ReplyDelete
  56. வாங்கோ ரெவரி.கருக்குமட்டை கொண்டு வந்தீங்களோ.காக்கா ஒண்டு சுத்திச் சுத்திக் கொத்துது !

    ReplyDelete
  57. Yoga.S.FR said...
    ரெவெரி said...

    இரவு வணக்கம் எல்லோருக்கும்...
    பால்க்கோப்பி ஆறிப்போச்சோ?///இரவு வணக்கம் ரெவரி!!!!அது குடிச்சு இப்ப சமிபாட்டுக்குப் போயிருக்கும்.நல்லாயிருக்கிறீங்களா?
    //
    நான் நலம்..நீங்க எப்படி அய்யா இருக்கீங்க...?

    ReplyDelete
  58. ஹேமா...கருவாச்சிக்கு பரீட்சை முடிந்தது போல...

    ReplyDelete
  59. இரவு வணக்கம் எல்லோருக்கும்...
    பால்க்கோப்பி ஆறிப்போச்சோ?///இரவு வணக்கம் ரெவரி!!!!அது குடிச்சு இப்ப சமிபாட்டுக்குப் போயிருக்கும்.நல்லாயிருக்கிறீங்க//ஸ்பெயின் மாஸ்டர் நலம்தான் யோகா ஐயா துசோங்க்

    ReplyDelete
  60. கலை said...

    இப்பவே குட்டி ஔவை எண்டு சொல்றா !/////

    ஓகே அக்கா அழதிங்கோ ...உங்க விருப்பப் படி சொல்லிப் போடுறேன் நீங்கள் ஒன்னும் குட்டி அவ்வை கிடையாது ..நீங்கள் தான் பெரிய அவ்வை ..ஓகே?/////இதனைத் தமிழில் "கொடுத்து,வாங்குவது" என்று சொல்வார்கள்!Ha!Ha!Haa!!!!!

    ReplyDelete
  61. தனிமரம் said...
    வாங்க் ரெவெரி அண்ணா பால்க்கோப்பி ஆறினாலும் ஓலா!
    //

    கொமிஸ்தாஸ்..

    ReplyDelete
  62. பரீட்சை முடிந்து விட்டது பதிலுக்கு வெயிட்டிங் கலை ரெவெரி!

    ReplyDelete
  63. ஹேமா விருது கனமா இருக்கு...நன்றி

    ReplyDelete
  64. ஓகே அக்கா அழதிங்கோ ...உங்க விருப்பப் படி சொல்லிப் போடுறேன் நீங்கள் ஒன்னும் குட்டி அவ்வை கிடையாது ..நீங்கள் தான் பெரிய அவ்வை ..ஓகே?/////இதனைத் தமிழில் "கொடுத்து,வாங்குவது" என்று சொல்வார்கள்!Ha!Ha!Haa!!!!!// இதை தமிழ்நாட்டில் போட்டு வாங்குவது எண்பது! ஆவ்வ்வ்

    ReplyDelete
  65. புதிதாய் தனிமரம்...ஒற்றைப்பனைமரமோ?

    ReplyDelete
  66. ஹேமா said...

    வாங்கோ ரெவரி.கருக்குமட்டை கொண்டு வந்தீங்களோ.காக்கா ஒண்டு சுத்திச் சுத்திக் கொத்துது !////ஸ்பெயினில் கிடைக்குமா?அண்டார்டிக்கா போனவரையும் காணவில்லை!

    ReplyDelete
  67. அண்டார்டிக்கா?

    ReplyDelete
  68. கொமிஸ்தாஸ்..//கொம்சிகொம்சா !! இது இத்தாலியானே !ஆவ்வ்வ்வ் கிட்டத்தட்ட வருகின்றது போல்!!!ஐரோப்பிய மொழிகள்§

    ReplyDelete
  69. ஒலோ ரே ரீ அண்ணா ,

    எப்புடி இருக்கீங்க ..தேர்வு எல்லாம் முடிஞ்சிப் போச்சே ..ஜாலி தான் எனக்கு ...தேர்வு எப்புடி பண்ணினா enduk கேக்கதிங்கோ ....தேறினால் அந்த வேலை நல்ல வேலை ...தேறாவிட்டால் அந்த வேலையில் எதோ பிழை இருக்கோணும் அதான் எனக்கு கிடைக்கலை எண்டு ..ஹ ஹாஹ் ஆ எப்புடி ஒழுங்க தேர்வு எழுதலை எண்டாலும் சுப்பரா சமாளித்து மானத்தை காப்பாற்றுவோம் அல்லோ

    ReplyDelete
  70. கொமிஸ்தாஸ்..//கொம்சிகொம்சா !! இது இத்தாலியானே !ஆவ்வ்வ்வ் கிட்டத்தட்ட வருகின்றது போல்!!!ஐரோப்பிய மொழிகள்§//

    ஏதாவது வந்தால் சரி நேசரே...

    ReplyDelete
  71. நான் நலம் ரெவரி!///ரெவெரி said...

    புதிதாய் தனிமரம்...ஒற்றைப்பனைமரமோ?////இந்த மரத்திலிருந்து தான் கருக்கு மட்டை கிடைக்கிறது,ஹோ!ஹோ!ஹோ!!!!!

    ReplyDelete
  72. ஓலா கருவாச்சி...
    சீக்கிரம் எங்களுக்கு ட்ரீட் உண்டு தானே...

    ReplyDelete
  73. ரெவரி...கனநாள் நினைச்ச ஒண்டு விருது குடுக்கவெண்டு.வாழ்த்துக்கு நன்றி.

    கருவாச்சி டபுள் தென்பா வந்திருக்கு.கவனப்பு !

    ReplyDelete
  74. ரெவெரி said...
    அண்டார்டிக்கா?///
    என்னக் கேள்வி இது ...அண்டார்டிக்காவ எண்டு ....
    இஞ்ச இருக்கா இந்தா அண்டர்ட்டிகை பொய் இப்புடி எல்லாம் கேட்டுக் கிட்டு ...
    enda குரு வரட்டும் அண்டார்ட்டிகாவிளிருது அப்போம் பார்ப்பம்

    ReplyDelete
  75. Yoga.S.FR said...
    நான் நலம் ரெவரி!///ரெவெரி said...

    புதிதாய் தனிமரம்...ஒற்றைப்பனைமரமோ?////இந்த மரத்திலிருந்து தான் கருக்கு மட்டை கிடைக்கிறது,ஹோ!ஹோ!ஹோ!!!!!//

    கூடவே கள்ளும்...

    ReplyDelete
  76. புதிதாய் தனிமரம்...ஒற்றைப்பனைமரமோ?

    17 April 2012 12:25 //ஈஈ ஆணிகூட,ரெவெரி அன்ணா! நான் கொஞ்சம் சகோதரமொழியை பற்றிப்]பேசுவதால் பல இடங்களில் / ம்ம்ம் நானும் ஒற்றைப்பனைதான் இன்னும் சில மாதங்கள்§! ஹீ விரைவில் பதிவாக சொல்லுறன்!ஹி

    ReplyDelete
  77. Yoga.S.FR said...
    நான் நலம் ரெவரி!///ரெவெரி said...

    புதிதாய் தனிமரம்...ஒற்றைப்பனைமரமோ?////இந்த மரத்திலிருந்து தான் கருக்கு மட்டை கிடைக்கிறது,ஹோ!ஹோ!ஹோ!!!!!//

    கூடவே கள்ளும்...
    கருவாச்சி விரட்ட கல்லும்...

    ReplyDelete
  78. ரெவெரி said...

    அண்டார்டிக்கா?///அது............கலையின் குரு "அதிரா" விடுமுறைக்கு அங்கு தான் சென்றிருக்கிறா!அதிரா வீட்டுக்கு கலையும்,நானும் காவல்.அண்டார்டிக்காவில் கருக்கு மட்டை கிடைக்கும் என்று போயிருக்கிறா,ஹ!ஹ!ஹா!!!!!

    ReplyDelete
  79. ஹேமா...உங்கட பின்னூட்டம் அம்பலத்தார் வலையில் நான் எதிர்பார்க்காதது...

    ReplyDelete
  80. புதிதாய் தனிமரம்...ஒற்றைப்பனைமரமோ?////இந்த மரத்திலிருந்து தான் கருக்கு மட்டை கிடைக்கிறது,ஹோ!ஹோ!ஹோ!!!!!//பட்ட பனைமரம்/ தறித்தமரத்திலும் கிடைக்கும் கருக்குமட்டை!அவ்வ்வ்

    ReplyDelete
  81. ஓமாம் அக்கா ..நேட்ட்று இண்டு பகல் எல்லாம் பீலிங்க்ஸ் ஒப் இந்தியா இருந்திணன் ...காலையில் ஏன்டா ஜூனியர் முன்னாடி அழுதுக் கூடப் போட்டினம் சரியா பன்னால எண்டு ...அப்புறம் சேம் சேம் bappy சேம் ஆ போச்சி ...

    உங்கட தத்துவத்தில் மூழ்கி தான் தேம்பாகிட்டேனல்லோ .

    ReplyDelete
  82. Yoga.S.FR said...
    ரெவெரி said...

    அண்டார்டிக்கா?///அது............கலையின் குரு "அதிரா" விடுமுறைக்கு அங்கு தான் சென்றிருக்கிறா!அதிரா வீட்டுக்கு கலையும்,நானும் காவல்.அண்டார்டிக்காவில் கருக்கு மட்டை கிடைக்கும் என்று போயிருக்கிறா,ஹ!ஹ!ஹா!!!!!
    //

    அது சரி...

    நீங்க அம்பலதாருக்காக தனியே மட்டை பிடிச்சது பார்க்க கஷ்டமாயிருந்தது...

    ReplyDelete
  83. விடை பெறுகிறேன்,இரவு வணக்கம் எல்லோருக்கும்,நல்லிரவாக அமையட்டும்!!!

    ReplyDelete
  84. அண்டார்டிக்கா?///அது............கலையின் குரு "அதிரா" விடுமுறைக்கு அங்கு தான் சென்றிருக்கிறா!அதிரா வீட்டுக்கு கலையும்,நானும் காவல்.அண்டார்டிக்காவில் கருக்கு மட்டை கிடைக்கும் என்று போயிருக்கிறா,ஹ!ஹ!ஹா!!!/////



    மாமா கருக்கு மாட்டை அடி கொடுங்கோ மாமா ஆருக்காவது ...எனக்குப் பார்க்கணும் ஆசையா இருக்கு ....உங்கட மூத்த மகளுக்கு முதலில் கொடுங்கோளேன்

    ReplyDelete
  85. ஹேமா...உங்கட பின்னூட்டம் அம்பலத்தார் வலையில் நான் எதிர்பார்க்காதது...//புலம் பெயர்ந்தபின் நாம் பல முகம்களைப் பார்க்கின்றோம் ரெவெரி அண்ணா! அது பல தெளிவைக்கொடுக்கின்றது நானும் ஹேமா சொன்னதை வழிமொழிகின்றேன்

    ReplyDelete
  86. கலை said...
    ரெவெரி said...
    அண்டார்டிக்கா?///

    நாங்கல்லாம் சோர்ட்ஸ் போடற இடத்துக்கு மட்டும் தான் போவோம்...

    ReplyDelete
  87. //தலைவிதால் ஒண்டும் அண்ணி வரவில்லை ஆக்கும் தவமிருந்து அண்ணாவை கல்யாணம் கட்டியவங்கதான் அண்ணி ..//

    தவமிருந்து கிடைச்ச அமுதே எண்டா உங்கட அண்ணா ஏன் பிரெஞ்சுக்காரி....

    இண்டைக்குக் கல்லெறிதான் !

    ரெவரி பாருங்கோ அண்ணாவும் தங்கச்சியும் செல்லம் கொஞ்சுறதை !

    ReplyDelete
  88. சந்தியில் யாரையும் காணோம்!

    ReplyDelete
  89. விடை பெறுகிறேன்,இரவு வணக்கம் எல்லோருக்கும்,நல்லிரவாக அமையட்டும்!//ந்ன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும் இனியஇரவாக அமையட்டும்.

    ReplyDelete
  90. ஹேமா said...
    //தலைவிதால் ஒண்டும் அண்ணி வரவில்லை ஆக்கும் தவமிருந்து அண்ணாவை கல்யாணம் கட்டியவங்கதான் அண்ணி ..//

    தவமிருந்து கிடைச்ச அமுதே எண்டா உங்கட அண்ணா ஏன் பிரெஞ்சுக்காரி....

    இண்டைக்குக் கல்லெறிதான் !

    ரெவரி பாருங்கோ அண்ணாவும் தங்கச்சியும் செல்லம் கொஞ்சுறதை !
    //

    பிழைச்சு போகட்டும் ஹேமா..

    ReplyDelete
  91. மாமா நான் இருக்கான் சந்தியில் ..எல்லாரும் இஞ்ச இருந்தாதல் அங்கு அமைதியா இருந்திணன் ..

    இரவு வணக்கம் மாமா

    ReplyDelete
  92. ரெவரி...அம்பலம் ஐயான்ர பக்கத்தில....சில உண்மைகளை மறைக்கமுடியாது.சொல்லக் கூச்சப்படுவமே தவிர சில இடங்களில சொல்லியே ஆகவேணும்.கலாசாரம் பண்பாடு எண்டு சொல்லிச் சொல்லி என்னத்தைக் கண்டோம்.சீரழிஞ்சதுதான் மிச்சம் !

    ReplyDelete
  93. ரெவரி பாருங்கோ அண்ணாவும் தங்கச்சியும் செ/// கலை ஹேமா கடுப்பாகி விட்டா நீங்க ஒவ்வை என்றதால்! ஆவ்வ்வ்

    ReplyDelete
  94. ஹேமா said...
    ரெவரி...அம்பலம் ஐயான்ர பக்கத்தில....சில உண்மைகளை மறைக்கமுடியாது.சொல்லக் கூச்சப்படுவமே தவிர சில இடங்களில சொல்லியே ஆகவேணும்.கலாசாரம் பண்பாடு எண்டு சொல்லிச் சொல்லி என்னத்தைக் கண்டோம்.சீரழிஞ்சதுதான் மிச்சம் !
    //
    வித்தியாசமாக பட்டது..முதலில்...புரிகிறது ஹேமா...

    ReplyDelete
  95. கலை said....... மாமா கருக்கு மட்டை அடி கொடுங்கோ மாமா ஆருக்காவது ...எனக்குப் பார்க்கணும். ஆசையா இருக்கு ....உங்கட மூத்த மகளுக்கு முதலில் கொடுங்களேன்./////முதல்ல வாயாடிகளுக்கு(செல்லமா)குடுத்திட்டு அப்புறமா பெரியவங்களுக்கு,ஓ.கே வா????

    ReplyDelete
  96. ரெவரி பாருங்கோ அண்ணாவும் தங்கச்சியும் செல்லம் கொஞ்சுறதை !
    //

    பிழைச்சு போகட்டும் ஹேமா..////

    ஹ ஹா ஹா .....
    ஹேமா அக்கா பூகச்ச்சலில் சொல்லுறாங்க ..
    ஹேமா அக்காக்கு
    என்ன சொல்லுவேதேன்டத் தெரியாமல் குழம்பி தான் போயினம் ரே ரீ அண்ணா ...

    ReplyDelete
  97. This comment has been removed by the author.

    ReplyDelete
  98. ஹேமா எப்பவும் தெளிவு தான் கருவாச்சி...நீங்க தான் பறந்து தனி மரத்துல ஏறியாச்சு...

    ReplyDelete
  99. ரெவரி...அம்பலம் ஐயான்ர பக்கத்தில....சில உண்மைகளை மறைக்கமுடியாது.சொல்லக் கூச்சப்படுவமே தவிர சில இடங்களில சொல்லியே ஆகவேணும்.கலாசாரம் பண்பாடு எண்டு சொல்லிச் சொல்லி என்னத்தைக் கண்டோம்.சீரழிஞ்சதுதான் மிச்சம் !

    17 April 2012 12:42 //உண்மைதான் ஹேமா அதேதான் ரெவெரி அண்ணா சகோதர மொழி மக்கள் பலர் கஸ்ரம் நேரில் பார்த்தவன் நான்! அம்பலத்தாரிடம் அனைத்தும் பேசலாம் அவர் ஒரு அனுபவம்மிக்க பெரியவர்!

    ReplyDelete
  100. முதல்ல வாயாடிகளுக்கு(செல்லமா)குடுத்திட்டு அப்புறமா பெரியவங்களுக்கு,ஓ.கே வா????////

    ஓமாம் மாமா ஓமாம்
    உங்கள் மகளுக்கு கொடுங்கோ எண்டு சொன்னவும் எப்புடி சொன்னீங்க பாருங்கோ ...மகள் எண்டால் தனி பாசம் தான் ...

    கடைசிக் காலத்தில் மரு மகா தான் நிரந்தரம் மாமா ..நியாபம் வைத்துக் கொண்டு முடிவேண்டுங்கோ

    ReplyDelete
  101. ஹேமா எப்பவும் தெளிவு தான் கருவாச்சி...நீங்க தான் பறந்து தனி மரத்துல ஏறியாச்சு...

    17 April 2012 12:47 //ஹீ கலைக்கு இன்னும் வெளி உலகம் தெரியாத தங்கை ரெவெரி !ஹேமா அக்காள் வானம் வெளித்தபின் கடல் தாண்டிய கவிதாயினி!அவ்வ்

    ReplyDelete
  102. காக்காவை பிடியுங்கோ அப்பா.என்னமா கலாய்க்குது.எனக்கு உண்மையாவே ஒண்டும் சொல்ல வரேல்ல !

    ReplyDelete
  103. பாட்டிக்கு அது தான் கடைசி முத்தமா?

    சரி நானும் கிளம்பறேன்...யோகா அய்யா..ஹேமா...கருவாச்சி...இரவு வணக்கங்கள்...நேசரே உங்களுக்கும் தான்...

    ReplyDelete
  104. கலை said....... மாமா கருக்கு மட்டை அடி கொடுங்கோ மாமா ஆருக்காவது ...எனக்குப் பார்க்கணும். ஆசையா இருக்கு ....உங்கட மூத்த மகளுக்கு முதலில் கொடுங்களேன்./////முதல்ல வாயாடிகளுக்கு(செல்லமா)குடுத்திட்டு அப்புறமா பெரியவங்களுக்கு,ஓ.கே வா????

    17 April 2012 12:44 //அதுவும் உண்மைதான் யோகா ஐயா!

    ReplyDelete
  105. தனிமரம் said...
    ஹேமா எப்பவும் தெளிவு தான் கருவாச்சி...நீங்க தான் பறந்து தனி மரத்துல ஏறியாச்சு...

    17 April 2012 12:47 //ஹீ கலைக்கு இன்னும் வெளி உலகம் தெரியாத தங்கை ரெவெரி !ஹேமா அக்காள் வானம் வெளித்தபின் கடல் தாண்டிய கவிதாயினி!அவ்வ்
    //

    ஹ!ஹா!ஹ!ஹா!

    ReplyDelete
  106. எப்பிடி எப்பிடி..மருமகள்தான் பாப்பினமோ...ஒரு சோடிக்காக்கா வந்திட்டா காக்கா பறந்துபோய்டும்.பிறகு இவவைத்தான் நாங்கள் பாக்கவேணும் !

    ReplyDelete
  107. இரவு வணக்கங்கள்...

    ReplyDelete
  108. பாட்டிக்கு அது தான் கடைசி முத்தமா?

    சரி நானும் கிளம்பறேன்...யோகா அய்யா..ஹேமா...கருவாச்சி...இரவு வணக்கங்கள்...நேசரே உங்களுக்கும் தான்...//ம்ம்ம் அவன் பாட்டி அந்த் பேரனுக்கு கொடுத்து அதுதான் கடைசி முத்தம் ரெவெரி!

    ReplyDelete
  109. எப்பிடி எப்பிடி..மருமகள்தான் பாப்பினமோ...ஒரு சோடிக்காக்கா வந்திட்டா காக்கா பறந்துபோய்டும்.பிறகு இவவைத்தான் நாங்கள் பாக்கவேணும் !

    17 April 2012 12:54 //இதுவும் உண்மைதான் ஆவ்வ்வ்

    ReplyDelete
  110. இரவு வணக்கங்கள்...//நன்றி ரெவெரி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்! இனிய இரவுப் பொழுதாக அமையட்டும்!

    ReplyDelete
  111. ஹீ கலைக்கு இன்னும் வெளி உலகம் தெரியாத தங்கை ரெவெரி !ஹேமா அக்காள் வானம் வெளித்தபின் கடல் தாண்டிய கவிதாயினி!அவ்வ்////

    அக்கா ரீ ரீ அண்ணா வைப் பாருங்கோ ...சரியானா முன்னேற்றம்...பேசும் பொதுக் கூட கவிதை கலந்து பேச ஆரம்பித்து விட்டினம் அண்ணா...

    வெளி உலகம் தெரியாத தங்கை///
    நோஒ நான் ஒட்டுதுக் கொள்ள மாட்டினம் ...எனக்கு சுப்பரா கண்ணு தெரியும் ..வெளி உலகம் நல்லாவேத் தெரியும்
    அப்புடி எல்லாம் இல்லை அண்ணா...நானும் வெளியூரில் அக்கா மாறி தான் இருக்கிரணன் தனியாக .....

    ReplyDelete
  112. அம்பலம் ஐயா சந்தியில தேடுறார் எல்லாரையும்.இப்ப வருவார் இங்க !

    ReplyDelete
  113. ஓம் நேசனில நல்ல முன்னேற்றம் தெரியுது.எழுத்துப்பிழைகூடக் குறைஞ்சிருக்கு !

    ரெவரி...போய்ட்டு வாங்கோ !

    ReplyDelete
  114. வணக்கம் நேசன் ஒருவழியாக இப்பொழுதுதான் இங்கு வரமுடிந்தது.

    ReplyDelete
  115. வெளி உலகம் தெரியாத தங்கை///
    நோஒ நான் ஒட்டுதுக் கொள்ள மாட்டினம் ...எனக்கு சுப்பரா கண்ணு தெரியும் ..வெளி உலகம் நல்லாவேத் தெரியும்
    அப்புடி எல்லாம் இல்லை அண்ணா...நானும் வெளியூரில் அக்கா மாறி தான் இருக்கிரணன் தனியாக .....

    17 April 2012 12:58 //அடிங் கொய்யால அவோக்கா இல்லாதா வெளிநாட்டிலா,,, போடாங்க்க்க்க்க்,,

    ReplyDelete
  116. வாங்க அம்பலத்தார் நலம் தானே !விருது பெற்றவேங்கையே வருக வருக தனிமரம் பாதம் பணிந்தேன்!

    ReplyDelete
  117. அப்புறம் சொடிக்கக்க்வையும் இஞ்ச கூட்டி வந்திடுவேனல்லோ...
    ஹேமா அக்காவிடம் கொஞ்ச நேரம் வம்பு பண்ண ட்ரைனிங் கொடுத்து நானும் அவ்வுகளும் ஷிபிட் போட்டு அக்காவை கலாயிப்போம் அல்லோ ...

    ReplyDelete
  118. அப்பா வீட்டை போய்ட்டீங்களோ !

    பாருங்கோ உங்கட செல்லத்தை.வெளி உலகம் தெரியாது எண்டு சொல்லத் தனக்கு கண் நல்லாத் தெரியுமாம்.அச்சோ அச்சோ !

    ReplyDelete
  119. ஓம் நேசனில நல்ல முன்னேற்றம் தெரியுது.எழுத்துப்பிழைகூடக் குறைஞ்சிருக்கு !//அம்மா கவனமாக பார்க்கின்றா மோனுக்கு யாருக்கும் உள்குத்து போட்டு விடுவாங்களோ என்று ஹேமா! ஹீ

    ReplyDelete
  120. வாங்க அம்பலத்தார் அங்கிள் .. வணக்கம் ..இப்போதான் மாமா கிளம்பி போயினம் நீங்கள் நலம் தானே ..செல்லமா ஆன்டி நலமா

    ReplyDelete
  121. சோடிக்காக்காவை வரட்டும் பாக்கலாம்.அன்பாலயே கட்டிப்போட்டு எங்கட பக்கத்தில வச்சிருக்கவேணும்.

    ReplyDelete
  122. பாருங்கோ உங்கட செல்லத்தை.வெளி உலகம் தெரியாது எண்டு சொல்லத் தனக்கு கண் நல்லாத் தெரியுமாம்.அச்சோ அச்சோ !//யோகா ஐயாவின் நேரம் முடிந்து விட்டது ஹேமா காலையில் வருவார் என் வேலை நேரத்தில் வணக்கம் கூறிக்கொண்டு!

    ReplyDelete
  123. வாங்க அம்பலத்தார் அங்கிள் .. வணக்கம் ..இப்போதான் மாமா கிளம்பி போயினம் நீங்கள் நலம் தானே ..செல்லமா ஆன்டி நலமா

    17 April 2012 13:06 //செல்லம்மா அன்ரி நலம் கலை அம்பலத்தார் நேற்று சொன்னவர் நேற்று இரவு மனம்விட்டு அவருடன் பேசினேன்! இனி கஸ்ரம் வேலை அதிகம்!

    ReplyDelete
  124. அன்று பாலம் கடக்கும் போது பலரும் தலையில் சுமந்து சென்றது பொருட்களை மட்டும் மல்ல ஊர் மீதான கடைசி நேர உணர்வுகளையும் தான்.//
    ரொம்ப மனதைத்தொட்ட வரிகள்.

    ReplyDelete
  125. அடிங் கொய்யால அவோக்கா இல்லாதா வெளிநாட்டிலா,,, போடாங்க்க்க்க்க்,,///

    ஐயோ அண்ணா நான் வெளி நாட்டில் இல்லை ..வெளி ஊரில் எண்டு தானே சொன்னிணன் ...தமிழ் நாட்டில் இல்லை ...வேலைக்காய் கட்டாக்கில் இருக்கிரணன் ...இது இந்தியா vin வடகிழக்கு மாநிலம் அண்ணா ...ஆறு மாதம் ஒருக்கா ஊர்ப் போவினம் அண்ணா ...

    ReplyDelete
  126. கலை said...

    வாங்க அம்பலத்தார் அங்கிள் .. வணக்கம் ..இப்போதான் மாமா கிளம்பி போயினம் நீங்கள் நலம் தானே ..செல்லமா ஆன்டி நலமா//
    ஓம் கலை இரண்டுபேரும் நலமாக இருக்கிறம்.

    ReplyDelete
  127. அன்று பாலம் கடக்கும் போது பலரும் தலையில் சுமந்து சென்றது பொருட்களை மட்டும் மல்ல ஊர் மீதான கடைசி நேர உணர்வுகளையும் தான்.//
    ரொம்ப மனதைத்தொட்ட வரிகள்.//நிஜம் சுடும் தானே !அம்பலத்தார்! கலைஞரின் தென்றல் சுடும் போல!!

    ReplyDelete
  128. ஐயோ அண்ணா நான் வெளி நாட்டில் இல்லை ..வெளி ஊரில் எண்டு தானே சொன்னிணன் ...தமிழ் நாட்டில் இல்லை ...வேலைக்காய் கட்டாக்கில் இருக்கிரணன் ...இது இந்தியா vin வடகிழக்கு மாநிலம் அண்ணா ...ஆறு மாதம் ஒருக்கா ஊர்ப் போவினம் அண்ணா ...

    17 April 2012 13:15 //இதுவரை கேள்விப்பட்டதில்லை கலை தலைநகரம் அல்லது மாநிலம் ,குறிசொல்லில் சொன்னால் விடுமுறையில் வருவோம்! இந்தியாவா நமக்கு தொல்லை இல்லை இல்லை!ஆவ்வ்வ்

    ReplyDelete
  129. நேசன்,கலை கடைசியாக கதவுசாத்துகிற நேரத்தில் வந்தாலும் ஒருசிலருடனாவது பேசமுடிந்தது மகிழ்ச்சி.

    ReplyDelete
  130. நேசன்,கலை கடைசியாக கதவுசாத்துகிற நேரத்தில் வந்தாலும் ஒருசிலருடனாவது பேசமுடிந்தது மகிழ்ச்சி.//அங்க வரஇருந்தேன்! மிச்சம் கதைக்க ஹேமா சொன்னா !நீங்க வாரதா பெரும் புலவருக்காக காத்திருந்தேன்! அடியவன் சின்னவன் உங்க ஆசிபெற்றால் நானும் சொல்லுவேன் சில சங்கடங்கள் இந்த பதிவுலகில்! ஹீ வெட்கம் எனக்கில்லை!

    ReplyDelete
  131. உண்மைதான் அங்கிள் ...எல்லாரிடம் உரையாடினால் மகிழ்ச்சி ஆ இருக்கும் அங்கிள் ...

    அங்கிள் ,ஹேமா அக்கா ,ரீ ரீ அன்ன ,மாமா taataa taataa ...

    ReplyDelete
  132. அண்ணா குறி சொல்லா கண்டு பிடியுங்கோ பார்க்கலாம் கலிங்க நாட்டில் இருக்கிறான் நான் ..இன்னொரு க்குளு கொடுக்கன் ...அசோகர் ,அப்புறம் சூரியக் கோவில் .

    கண்டிப்பாய் சந்திக்க்கலம் அண்ணா இந்தியாவில்

    ReplyDelete
  133. உண்மைதான் அங்கிள் ...எல்லாரிடம் உரையாடினால் மகிழ்ச்சி ஆ இருக்கும் அங்கிள் ...

    அங்கிள் ,ஹேமா அக்கா ,ரீ ரீ அன்ன ,மாமா taataa taataa ...

    17 April 2012 13:33 //நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும்! இனிய் இரவு வணக்கம்!நாளை சந்திப்போம்!

    ReplyDelete
  134. ரெவெரி said...
    அது சரி...

    நீங்க அம்பலதாருக்காக தனியே மட்டை பிடிச்சது பார்க்க கஷ்டமாயிருந்தது...//
    ஆம் ரெவெரி யோகாவிற்கு நன்றி சொல்லவேணும். அவர் அனுபவம் உள்ளவர் பேசட்டும் என்றுதான் நான் அதிகம் குறுக்கிடாமல் இருந்தனான்.அன்று அதை எழுதும்போதே இதற்கு அடிவிழும் என்று தெரிந்துதான் அடிவிழவேண்டும் என எழுதினனான். நிறைய பதில் கருத்துக்கள் இருந்தாலும் பதில்கூறாது காரணத்துடன் தான் under play செய்திருந்தேன்.

    ReplyDelete
  135. அண்ணா குறி சொல்லா கண்டு பிடியுங்கோ பார்க்கலாம் கலிங்க நாட்டில் இருக்கிறான் நான் ..இன்னொரு க்குளு கொடுக்கன் ...அசோகர் ,அப்புறம் சூரியக் கோவில் .

    கண்டிப்பாய் சந்திக்க்கலம் அண்ணா இந்தியாவில்//அங்கே தானா குதிரை ஆஹா வருவோம் நானும் போகனும் என்று ஆசைப்பட்ட இடம் !!பலவருடமாக பின் போகும் .பயணம் .அடுத்த விடுமுறைக்கு முயலுவோம்!!!!கலை ஐயன் வழிவிட்டால்!!

    17 April 2012 13:34

    ReplyDelete
  136. நீங்க அம்பலதாருக்காக தனியே மட்டை பிடிச்சது பார்க்க கஷ்டமாயிருந்தது...//
    ஆம் ரெவெரி யோகாவிற்கு நன்றி சொல்லவேணும். அவர் அனுபவம் உள்ளவர் பேசட்டும் என்றுதான் நான் அதிகம் குறுக்கிடாமல் இருந்தனான்.அன்று அதை எழுதும்போதே இதற்கு அடிவிழும் என்று தெரிந்துதான் அடிவிழவேண்டும் என எழுதினனான். நிறைய பதில் கருத்துக்கள் இருந்தாலும் பதில்கூறாது காரணத்துடன் தான் under play செய்திருந்தேன்.//யோகா ஐயாவின் திறமையே அதுதான்.அனுபவம் அம்பலத்தார் எனக்குத்தெரியும் அவர் யார் என்று!ம்ம்ம்

    17 April 2012 13:42

    ReplyDelete
  137. ஹேமாவிற்கு கவிதாயினி, குட்டி அவ்வையார் எல்லம் சரிவராது எங்கள் ஆஸ்தான கவிதாயினி என்பதுதான் மிகப்பொருத்தமான பட்டம்.
    எங்கே எல்லோரும் சேர்ந்து ஒருதடவை கோசம்போடுங்கோ பார்ப்பம் ஆஸ்த்தானகவி ஹேமா வாழ்க

    ReplyDelete
  138. ஹேமாவிற்கு கவிதாயினி, குட்டி அவ்வையார் எல்லம் சரிவராது எங்கள் ஆஸ்தான கவிதாயினி என்பதுதான் மிகப்பொருத்தமான பட்டம்.
    எங்கே எல்லோரும் சேர்ந்து ஒருதடவை கோசம்போடுங்கோ பார்ப்பம் ஆஸ்த்தானகவி ஹேமா வாழ்க//வாழ்க அரசி ஹேமா ஒரு ஓப்போடுவோம் ஒரு பாடல் பரிசு வார கிழமை அம்பலத்தார்!

    17 April 2012 13:47

    ReplyDelete
  139. நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும் சந்திப்போம்!

    ReplyDelete
  140. நேசன், ரெவெரி இரண்டுபேரும் கூறியது சரிதான்.. இன்று ஹேமா எனது பதிவில் இட்ட பின்னூட்டம் உண்மையிலேயே அவரின் மனத்தைரியத்தை எடுத்துக்காடி இருந்தது. Hats off Hema

    ReplyDelete
  141. நேசன் உங்களிற்கு காலையில் வேலை இருக்குமே படுக்கப்போகவில்லையா

    ReplyDelete
  142. நன்றி அம்பலத்தார் வருகைக்கும் கருத்துரைக்கும்.சந்திப்போம் !

    ReplyDelete
  143. நேசன் உங்களிற்கு காலையில் வேலை இருக்குமே படுக்கப்போகவில்லையா//காலையில் யாழ்தேவி காத்திருக்கும் 5.03 ஆனால் நண்பர்கள் கிடைப்பது சிலநிமிடங்கள் தானே அம்பலத்தார்.

    ReplyDelete
  144. நேசன் சந்தோசமாக கட்டிலிற்கு செல்லுங்கள் மீண்டும் மற்றுமொருபொழுதில் சந்திப்போம்.

    ReplyDelete
  145. நன்றி அம்பலத்தார் சந்திப்போம்!

    ReplyDelete
  146. அம்பலம் ஐயா...உண்மையைச் சொன்னாலும் பெண் ஒருத்தி சொன்னால் அசிங்கமாக நினைக்கிற உலகம் இது.ஆனாலும் ஓரளவு சொல்லச் சுதந்திரம் தந்திருக்கிறீங்கள்.உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லுவன்.என் கருத்தை வெளிப்படுத்தவும் சரி பிழை தெரிஞ்சுகொள்ளவும் தளம் தந்தீங்கள்.நன்றி !

    என்னை வச்சு பெரிய அலசலே நடந்திருக்கு இங்க.சந்தோஷமாவும் இருக்கு.இந்த இடத்தை இப்பிடியே கொண்டுபோற பொறுப்பும் இருக்கு இப்ப !

    கலை,நேசன்,அம்பலம் ஐயா நாளைய பதிவில சந்திப்பம் !

    ReplyDelete
  147. வணக்கம் நேசன்,
    நலத்துடன் சுகமிருக்க என்றும் என்
    பிரார்த்தனைகள்...

    பாலம் கடக்கையில் தூக்கிச் சென்றது மூட்டைகள் மட்டுமல்ல.....
    இந்த வரியை படித்ததுமே எனக்கு அடுத்ததை படிக்க மனம் கனத்தது நேசன்...

    உற்றார் உறவு சொந்தம் வீடு நிலம் உணர்வுகள் அத்தனையும் விடுத்து ...
    நமக்கு அடுத்த சந்ததிகளையாவது பாதுகாக்க வேண்டும் என்ற மன உறுதியுடன்
    பயத்தை நெஞ்சில் சுமந்து கொண்டு சொந்த நாடு விட்டு புலம் பெயர்கையில்
    இருந்த வலிகளை எழுத்துக்களில் பார்க்க முடிகிறது...

    " ஒரு முறை நான் கல்கத்தாவிற்கு பணி நிமித்தம் ஒரு இயந்திர பழுது
    பார்க்கும் பணிக்காக ஆறு மாதம் வேலைக்கு என்று சென்றிருந்தேன்... ஆனால் அங்கே
    உள்ளூர் மாவோயிஸ்டுகள் எங்களுக்கு இல்லாத வேலை உங்களுக்கா என்று என்னுடன்
    துணைப் பணி புரியவந்த ஒருவரை சிறைப்படுத்தி விட்டார்கள்..
    அவரை மீட்டு அங்கிருந்து தப்பித்தால் போதும் என்ற நிலைக்கு வந்து.. கொண்டுவந்ததை எல்லாம் அப்படியே போட்டுவிட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவந்தோம்"
    அதை நினைக்கையில் இன்றும் மனம் பதைக்கிறது...

    இவ்வளவு பெரிய நாடு பெயர்ச்சி எவ்வளவு வலியை கொடுத்திருக்கும் என்பதை என்னால்
    உணர முடிகிறது...
    படித்ததும் பேச்சற்ற பதுமை ஆனேன் நேசன்..

    ReplyDelete
  148. ரெவெரி said...

    நீங்க அம்பலதாருக்காக தனியே மட்டை பிடிச்சது பார்க்க கஷ்டமாயிருந்தது...///அதில் என்ன கஷ்டம் இருக்கிறது?உண்மை சொன்னால் கசக்கும்,என்று புரிந்து கொண்டோம் இருவருமே!எந்தப் புற்றில் எந்தப் பாம்பு என்று கூட!ஆரம்பத்தில் சுய ரூபம் தெரியாமல் மாட்டிய சம்பவங்கள் ஞாபகம் வந்து தொலைக்கிறது,ரெவரி!

    ReplyDelete
  149. காலை வணக்கம்,நேசன்!இன்று எங்கள் தாயாரின் நினைவு நாள்.(ஆண்ண்டுத் திவசம்)

    ReplyDelete
  150. நன்றி சீனி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்

    ReplyDelete
  151. வணக்கம் மகேந்திரன் அண்ணா!
    நலமா?
    உங்களுக்குப் பின்னும் பல கதைகள் இருக்கு என்று இன்று தெரிந்து கொண்டேன்.அனுபவங்கள் ஆசான் தான்.ம்ம்
    நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  152. காலை வணக்கம் யோகா ஐயா!
    கோயில் போய் ஒரு மோட்ச தீபம் ஏற்றுங்கோ பெரியவங்களுக்கு.

    ReplyDelete
  153. ////Yoga.S.FR said...
    காலை வணக்கம்,நேசன்!இன்று எங்கள் தாயாரின் நினைவு நாள்.(ஆண்ண்டுத் திவசம்)////

    வணக்கம் ஐயா,
    அன்னையாருக்கு என் மனமார்ந்த அஞ்சலிகள்.

    ReplyDelete
  154. நேசன்,
    நான் நலமாக இருக்கிறேன்.
    பின் கதைகள் சுவைபட இருந்தால்
    எப்போதும் ரசிக்கும்..
    வலி ஏற்படுத்தும் முன் நிகழ்வுகள்
    ஒரு பாரமாகவே கருத்தினில்
    நிறைந்திருந்தால்..
    ரணமாய் மனதை புண்படுத்திக்கொண்டே இருக்கும்..

    இருக்கவே இருக்கு..


    take it easy ... policy

    ReplyDelete
  155. அப்பா...நான் என் அப்பம்மாவைக் கண்டதில்லை.அப்பா குழந்தையாய் இருந்தபோதே அவர் காலமாகிவிட்டாவாம்.அத்தை,பெரியப்பாதான் வளர்த்ததாம்.ஒரு நிழற்படம்கூட இல்லை.எனவே என் அப்பம்மாவின் நினைவு தினமாய் இன்றைய பொழுதை நினைத்துக்கொள்கிறேன் !

    ReplyDelete
  156. என் அப்பம்மாவின் நினைவு தினமாய் இன்றைய பொழுதை நினைத்துக்கொள்கிறேன்//////

    பாட்டிமா க்கு அஞ்சலி ....

    ReplyDelete
  157. யோகா உங்கள் தாயாரின் நினைவுதினத்தில் அவருக்குச்செய்யவேண்டிய கடமைகளை செய்துவிட்டு மெதுவாக வாருங்கள். அந்த அன்புருவிற்கு எனது அஞ்சலிகள்.

    ReplyDelete
  158. ஹேமா said...

    அம்பலம் ஐயா...உண்மையைச் சொன்னாலும் பெண் ஒருத்தி சொன்னால் அசிங்கமாக நினைக்கிற உலகம் இது.ஆனாலும் ஓரளவு சொல்லச் சுதந்திரம் தந்திருக்கிறீங்கள்.உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லுவன்.என் கருத்தை வெளிப்படுத்தவும் சரி பிழை தெரிஞ்சுகொள்ளவும் தளம் தந்தீங்கள்.நன்றி !//
    பெண்கள் வெறும் பேசாமடந்தைகளாக இல்லாமல் தமதுதரப்பு நியாயங்களை, கருத்துக்களை கூறப்பழகிக்கொள்ளவேண்டும் என்பதுதான் என்போன்றபலரதும் அவா. என்னைப்பொறுத்தவரையில் பெண்களின் வளர்ச்சிக்கு முக்கிய தடையாக இருப்பது அவர்களே தங்களைச்சுற்றி போட்டுக்கொண்ட வட்டங்கள்தான். அதிலிருந்து அவர்கள் வெளிவரமுயற்சிக்கவேண்டும். கைகொடுத்து உதவிசெய்ய எத்தனையோ நல்ல எண்ணங்கள் கொண்ட ஆண்கள் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  159. தனிமரம் said...

    நேசன்,கலை கடைசியாக கதவுசாத்துகிற நேரத்தில் வந்தாலும் ஒருசிலருடனாவது பேசமுடிந்தது மகிழ்ச்சி.//அங்க வரஇருந்தேன்! மிச்சம் கதைக்க ஹேமா சொன்னா !நீங்க வாரதா பெரும் புலவருக்காக காத்திருந்தேன்! அடியவன் சின்னவன் உங்க ஆசிபெற்றால் நானும் சொல்லுவேன் சில சங்கடங்கள் இந்த பதிவுலகில்! ஹீ வெட்கம் எனக்கில்லை!//

    என்ன இது நேசன் நான் ஒன்றும் பெரிய மனிசன் கிடையாது. எல்லோரையும் போல இந்த உலகத்தின்மீது, எமது மக்களின்மீது அன்பு, கோபம், வெறுப்பு, எதிர்பார்பு எல்லாம் கொண்ட ஒருவன்தான்.
    நேசன் எனக்கு உங்களிடம் பிடித்த அம்சமே உங்களிடம் போலி, வரட்டுக்கௌரவம், வெட்கம், அந்தஸ்தெனும் விடயங்கள்கிடையாது. சரியெனப்படுவதை சொல்லத்தயங்குவதில்லை. பலதடவைகளிலும் உங்களது பேச்சு, செயல்களை பார்க்கும்போது உங்களிடம் நான் எனது ஒரு விம்பத்தையே காணுவதுபோலிருக்கும். உங்களிடமிருக்கும் பன்முகப்பட்ட அறிவு, தெளிவு பலதடவை எனக்கு வியப்புத் தந்திருக்கிறது. ஆனால் என்ன ஒரு துரதிஸ்டமென்றால் இப்படியானவர்களை பெரும்பாலான மற்றவர்களால் புரிந்துகொள்ளமுடிவதில்லை. மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப்பற்றிக் கவலைப்படுவதை நான் பலகாலங்களிற்குமுன் கைவிட்டுவிட்டேன். சரியான விடயங்களிற்காக போராடுவதை ஒருநாளும் கைவிடக்கூடாது. சிலவேளைகளில் வாழ்நாள்பூராவும் போராடியும் நாம் எதையும் சாதிக்காமல்போகலாம் ஆனாலும் இறக்கும்போதும் நாம் நல்லவிடயங்களிற்காக போராடினோம் என்ற மனநிறைவாவது இருக்கும்.
    நேசன் நீங்கள் நீங்களாகவே இருக்கவேண்டும் அதுதான் உங்களிற்கு அழகும் பெருமையும் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற கவலையை தூக்கி எறியுங்கோ

    ReplyDelete
  160. என்னை யோகாவையெல்லாம் எங்கள் வயதிற்குரிய அனுபவம் கொஞ்சம் செதுக்கியிருக்கு. அதுபோல எந்தச்சந்தர்ப்பத்திலும் நிதானம் இழக்காமல் பேசப்பழகிக்கொண்டால் எதையும் எந்த இடத்திலும் சிக்கல்கள் இல்லாமல் விவாதிக்கலாம். உங்களிடமும் முன்பைவிட அண்மைக்காலங்களில் அந்தப்பக்குவம் தெரிகிறது. ஆகையால் நீங்கள் துணிந்து எங்கும் எந்தவிடயத்தையும் விவாதிக்கலாம் பயம் வேண்டியதில்லை நேசன்.

    ReplyDelete
  161. take it easy ... policy//உண்மைதான் மகேந்திரன் அண்ணா!

    ReplyDelete
  162. என்ன இது நேசன் நான் ஒன்றும் பெரிய மனிசன் கிடையாது. எல்லோரையும் போல இந்த உலகத்தின்மீது, எமது மக்களின்மீது அன்பு, கோபம், வெறுப்பு, எதிர்பார்பு எல்லாம் கொண்ட ஒருவன்தான்.
    நேசன் எனக்கு உங்களிடம் பிடித்த அம்சமே உங்களிடம் போலி, வரட்டுக்கௌரவம், வெட்கம், அந்தஸ்தெனும் விடயங்கள்கிடையாது. சரியெனப்படுவதை சொல்லத்தயங்குவதில்லை. பலதடவைகளிலும் உங்களது பேச்சு, செயல்களை பார்க்கும்போது உங்களிடம் நான் எனது ஒரு விம்பத்தையே காணுவதுபோலிருக்கும். உங்களிடமிருக்கும் பன்முகப்பட்ட அறிவு, தெளிவு பலதடவை எனக்கு வியப்புத் தந்திருக்கிறது. ஆனால் என்ன ஒரு துரதிஸ்டமென்றால் இப்படியானவர்களை பெரும்பாலான மற்றவர்களால் புரிந்துகொள்ளமுடிவதில்லை. மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப்பற்றிக் கவலைப்படுவதை நான் பலகாலங்களிற்குமுன் கைவிட்டுவிட்டேன். சரியான விடயங்களிற்காக போராடுவதை ஒருநாளும் கைவிடக்கூடாது. சிலவேளைகளில் வாழ்நாள்பூராவும் போராடியும் நாம் எதையும் சாதிக்காமல்போகலாம் ஆனாலும் இறக்கும்போதும் நாம் நல்லவிடயங்களிற்காக போராடினோம் என்ற மனநிறைவாவது இருக்கும்.
    நேசன் நீங்கள் நீங்களாகவே இருக்கவேண்டும் அதுதான் உங்களிற்கு அழகும் பெருமையும் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற கவலையை தூக்கி எறியுங்கோ

    18 April 2012 07:44 //நன்றி அம்பலத்தார் உங்களிடம் இருக்கும் புரிதலே என்னை சோர்வை நீக்கி சில இடங்களில் அதிகம் பேச முடிகின்றது.

    ReplyDelete
  163. என்னை யோகாவையெல்லாம் எங்கள் வயதிற்குரிய அனுபவம் கொஞ்சம் செதுக்கியிருக்கு. அதுபோல எந்தச்சந்தர்ப்பத்திலும் நிதானம் இழக்காமல் பேசப்பழகிக்கொண்டால் எதையும் எந்த இடத்திலும் சிக்கல்கள் இல்லாமல் விவாதிக்கலாம். உங்களிடமும் முன்பைவிட அண்மைக்காலங்களில் அந்தப்பக்குவம் தெரிகிறது. ஆகையால் நீங்கள் துணிந்து எங்கும் எந்தவிடயத்தையும் விவாதிக்கலாம் பயம் வேண்டியதில்லை நேசன்.//நன்றி அம்பலத்தார் உங்களின் ஆசிபூர்வமான வாழ்த்துக்கு! அனுபவம் செதுக்குவது உண்மைதான் என்னை இந்தளவு செதுக்கியது என் தந்தைதான்

    ReplyDelete