24 April 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்!-34

பெட்டிக்கடை நாராயாணன் மஹாகவியின் கவிதையிலும், ஆனந்தம் லிங்குசாமியின் கதையிலும் இந்த பெட்டிக்கடை அல்லது செலவுகடை (மளிகைக்கடை)கொஞ்சம் அதிகம் பேசப்பட்டாலும்!

 இன்னும் பல கதைகள் இங்கே உறங்கிக் கொண்டிருக்கின்றது .

நல்ல தேடல் அல்லது வியாபாரம் அதனைப்பின்புலமாக கொண்டவர்கள் இலக்கிய வானில் மலராத காரணத்தாலா? என நினைக்க வைக்கவும் செய்கின்றது !

இந்த வியாபாரத்தை  மலையக பாஷையில் மற்றும் சகோதரமொழியில் சுருட்டுக்கடை என்றால் பலருக்குத் தெரியும் !

கோப்பிக்கடை என்று சகோதரமொழியில் ஒரு சின்னத்திரைத் தொடர் விசித்திரமாக  வம்பு பல பேசினாலும் .

இந்த சுருட்டுக்கடை பல இருக்கும் பதுளை உங்களை அன்புடன் வரவேற்கின்றது. என்ற நினைவுக்கல் வரவேற்றது. அதிகாலை 5.15 .

 உடரட்டையில் இருந்து சின்னத்தாத்தா ராகுல்.மற்றும் முருகேசன்,ரவி ஆகியோர் இறங்கியது 1991 ஒக்டோபர் மாதம் 4 வாரத்தில் ஒரு வெள்ளிக்கிழமை

.ரயிலில் இருந்து வெளியேறி வரும் வழியில் தான் தொடங்குவது பெரிய பாலம்.
 அதன் கீழ் ஓடுவது ஆறு .

இந்த ஆறு போய் முடியும் இடம் மட்டக்களப்பு

.பாலம் தாண்டிச் சென்றால் !

மலையகம் எங்கும் இப்படி ஒரு நகர அமைப்பு இருந்ததில்லை என்பான் மலையகத்தின் பல நகரங்களை பின் நாட்களில் வலம் வந்த ராகுல் .

இந்தப்  பாதை நேராக நடந்தால் முதலில் வருவது அரண்மனை ஆசையைத் துறந்து ஞானம் தேடிச் சென்ற புத்தனின் விகாரை.
 17ம் நூற்றாண்டில் தேவநம்பிய திஸ்ஸன் கட்டிய முத்தியங்கணை ரஜாமஹா விகாரை(புத்தகோவில்).

 அதனை எத்தனை    மணிக்குப் பார்வையிடலாம் என நினைத்தால் !கையில் மணிக்கூடு இல்லாதவர்கள் நிமிர்ந்து எதிரே பார்த்தால் அழகிய மணிக்கூட்டு கோபுரம் தெரியும் .

அதனைப் பார்த்து யாரும் நம்பி ரயிலுக்குப் போனால்! பின் ராமராஜனின் ரயிலுக்கு நேரமாச்சுப் படம் போல "போறவளே பொன்னுத்தாயி "என்று முகாரி பாடனும்.

அதைத் தாண்டி நல்ல  நேரம் என வாழ்வில் முதலில் அதிஸ்ரம் இருக்கா ?என்று கேட்கும் அதிஸ்ரலாபச்சீட்டுக்கடை(லாட்ரிச் சீட்டு) .

அது ஆரம்பிக்கும் வீதியில் (ராகுலின் வேண்டுகோளின் படி வீதியை கூறாமல்  விடுகின்றேன்  ஒரு வீதி என்று பொருள் கொள்க) பல கடைகள் அன்நாட்களில் !

.சுருட்டுக்கடைகள்,

தளபாடக்கடைகள்,ஹோட்டல்கள்,புடவையகம்கள் நகைக்கடைகள் நகைஅடைவு பிடிக்கும் கடைகள் ,என நீண்டு செல்லும் ஒரு சராயக்கடை(டாஸ்மார்க்க) கொஞ்சம் கடந்தால்  .

இரு தியேட்டருக்கு வழிகாட்டும் உள்வீதி அதுவிடுத்து .நேரே பார்க்கும் விழிகளுக்கு சூரனுக்கு மோட்சம் கொடுத்த முருகன் இரண்டு மனைவிகளுக்கு இதயத்தில் இடம் கொடுத்த முருகன் கோவில் வரும்.


 அது கடந்து போனால் சட்டத்தின் பார்வையில் குற்றம் செய்தவர்களை சட்டப்பேனா சொன்ன தீர்ப்பில் தண்டனை பெற்ற கைதிகள் இருக்கும் சிறைச்சாலை .


அவர்களின் "ஓ என் தேவனே கல்வாரியில் நீ சுமந்த சிலுவையை மறந்தேனே மரியதாஸ்  "

அதனால் தான் என்னை இங்கே சிறைவைத்தாயா ?என்று கேட்பவரின் குரலுக்கு செவிகொடுக்கும் கிறிஸ்தவ ஆலயம் அருகில் இருக்கும்  .

அந்த தேவன் ஆலயத்துடன் முடியும்.இந்த வீதி.

 இந்த வீதியில் தான் ராகுலும் அன்று !

சின்னத்தாத்தா முன் செல்ல முருகேசன்,ரவியைத் தொடர்ந்து இரண்டாவது தடவையாக அந்தப்பாதை யூடாக  நடந்து வந்தான் .

கனவுகள் ,கற்பனைகள் தொலைநேர திட்டம் ஏதுமற்ற விளையாட்டுச் சிறுவனனின் குழந்தை மனதோடு .யுத்தவலியைத் தாங்கிக் கொண்டு.

 இந்த வீதியில் இருக்கும் யாழ்ப்பாணத்தவர்கள் சுருட்டுகடை வைதிருப்போர்  என்று சொல்லுவார்கள் மலையக உறவுகள் .

அவர்களிடம் மூன்று தலைமுறைதாண்டி வாழ்ந்து கெட்டவர்களும் வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கும் இந்த !(?)வீதியில் தான் அதிகம்  இருந்தார்கள். சுருட்டுக்கடைகள் போட்டு .

அவர்களின் மூன்றாவது சந்ததிகள் சிலருக்கு  வியாபாரத்தில் மட்டுமல்ல  பதுளை புகுந்த வீடாகவும்  போனது. சினத்தாத்தா முன்னே சென்றார்  செல்வன் மாமா கடைக்கு  செல்வன் மாமா கடையும் இருந்தது இந்த வீதியில்  தான்!    

யுத்தம் தந்த சாபம் என்றாலும்! அதற்கு முன் இங்கு (1954 )முதல் வியாபார நிலையகள் நடத்தப் போனவர்கள்  தீவான்கள் என்று சொல்லும் வடக்கில் இருந்தோருக்கு  தெரியாத பல சங்கதிகளில் இந்த தொலைந்தவன் இந்த வீதியில் ஒரு சாமானியவன் ராகுல் அவனின் பார்வைகள் கடந்து வந்தவையைச் சொல்லும் இனி விரைவாக.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


குறிப்பு-மீண்டும் சொல்வது தான் தனிமரத்திற்கும் நேசனுக்கும் இந்த தொடர் தொடர்பு இல்லை!        

56 comments:

  1. இரவு வணக்கம்,நேசன்!கோப்பி ரெடியா?

    ReplyDelete
  2. வாங்க யோகா ஐயா பால்க்கோப்பி தயாராக மிகவும் சூடாக இருக்கு வாசிக்கும் இடத்தைப் போல முதலில் நலம் தானே! தொடர்ந்து வண்க்கம் கூறமுடியாத அளவு பணி மற்றும் விழாக்கள் .மன்னிக்கவும்.

    ReplyDelete
  3. குறிப்பு-மீண்டும் சொல்வது தான் தனிமரத்திற்கும் நேசனுக்கும் இந்த "தொடருக்கும்" தொடர்பு இல்லை! ////ஒருவரும் நம்பவில்லை என்று உங்கள் உள்ளுணர்வு சொல்கிறதோ,ஹ!ஹ!ஹா!!!!!!!

    ReplyDelete
  4. நான் பூரண நலம்,நீங்கள் நலமாகவே இருப்பீர்கள் என்று தெரியும்,இருந்தாலும் வந்தோரை வரவேற்க முடியாத ஆதங்கம் "எல்லோருக்கும்"இருக்கிறது என்றும் எனக்குத் தெரியும்!வேலை இல்லையேல்.............????

    ReplyDelete
  5. குறிப்பு-மீண்டும் சொல்வது தான் தனிமரத்திற்கும் நேசனுக்கும் இந்த "தொடருக்கும்" தொடர்பு இல்லை! ////ஒருவரும் நம்பவில்லை என்று உங்கள் உள்ளுணர்வு சொல்கிறதோ,ஹ!ஹ!ஹா!!!!!//ஹீ ஹீ உள்ளுணர்வு அப்படியா!!! எனக்குத்தெரியாது நண்பன் சொல்லியது நான் அறிக்கைவிடுகின்றேன் அவ்ன் சார்பில். .ஹீ

    ReplyDelete
  6. நான் பூரண நலம்,நீங்கள் நலமாகவே இருப்பீர்கள் என்று தெரியும்,இருந்தாலும் வந்தோரை வரவேற்க முடியாத ஆதங்கம் "எல்லோருக்கும்"இருக்கிறது என்றும் எனக்குத் தெரியும்!வேலை இல்லையேல்.............????

    24 April 2012 11:11 //உண்மைதான்.

    ReplyDelete
  7. மற்றவர்கள் வரட்டும்,தொடர்வேன்!

    ReplyDelete
  8. ராஜ் பதிவுலகை விட்டு விலகுகிறாராம் ,வலிக்கிறது!

    ReplyDelete
  9. மற்றவர்கள் வரட்டும்,தொடர்வேன்!// இப்படி நடுவில் ஓடுவது நியாயமோ பதிவு பற்றி கருத்து !!!!!

    ReplyDelete
  10. ராஜ் பதிவுலகை விட்டு விலகுகிறாராம் ,வலிக்கிறது!//ம்ம்ம் அதிகம் எனக்கு இருக்கு நாளை பேசலாம்.

    ReplyDelete
  11. நலமா நேசரே?

    ReplyDelete
  12. யோகா அய்யா கோப்பி குடித்து ஓடியாச்சா?

    ReplyDelete
  13. ஓலா ரெவெரி நீங்கள் எப்படி நலம் தானே!

    ReplyDelete
  14. அவர் கோப்பி வாங்கிக் கொண்டு அயல் வீட்டுக்குப் போட்டார்..ம்ம்ம்

    ReplyDelete
  15. நான் நலம்..இன்று நேரமே வந்தாச்சா...?

    ReplyDelete
  16. கருவாச்சியும் ஹேமாவும் உங்களை நேற்று வலை வீசி தேடினார்கள் போல...

    ReplyDelete
  17. நான் நலம்..இன்று நேரமே வந்தாச்சா...?

    24 April 2012 11:36 //ஓம் கொஞ்சம் இந்த வார நேரத்தை கவர் பண்ண வேண்டுமே அதனால் கிரேட் எஸ்கேப்! ஹீ

    ReplyDelete
  18. கருவாச்சியும் ஹேமாவும் உங்களை நேற்று வலை வீசி தேடினார்கள் போல...

    24 April 2012 11:38 // நேற்று எதிர்பாராத வேலை தட்ட முடியாது சமையல் வேலையில் இது ஒரு தலையிடி வந்தேருகுடிகளுக்கு அதுவும் முதல் தலைமுறைக்கு.! ரெவெரி.

    ReplyDelete
  19. ராகுலின் வேண்டுகோளின் படி வீதியை கூறாமல் விடுகின்றேன்...//

    ஏன்?

    ReplyDelete
  20. ராகுலின் வேண்டுகோளின் படி வீதியை கூறாமல் விடுகின்றேன்...//

    ஏன்?//இந்த வீதியில் அவனின் உறவுகள் இன்றும் வாழ்கின்றார்கள் ஆனால் பாதுகாப்பு வேலி உயிர் அச்சுறுத்தல் ம்ம்ம் இன்னும் பல ஏங்கே! அவன் கேள்வி அதிகம் முடியாது அது.

    ReplyDelete
  21. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் உள்ள நிலை புரிகிறது...

    பொருளாதாரம் முன்னேற்றம் உண்டா..ஐரோப்பில்...?

    ReplyDelete
  22. பொருளாதாரம் முன்னேற்றம் உண்டா..ஐரோப்பில்...?

    24 April 2012 11:52 //ம்ம்ம் ஹீ இல்லை ஆனால் உடலில் உயிர் இருக்கு நேசனுக்கு. பார்ப்போம்.

    ReplyDelete
  23. Hang in there...தொழில் அழைக்கிறது...பிறகு சந்திக்கலாம் நேசரே..

    ReplyDelete
  24. Hang in there...தொழில் அழைக்கிறது...பிறகு சந்திக்கலாம் நேசரே..//ஹாஸ்தாலா விஸ்தா ரெவெரி. நன்றி ,மீண்டும் சந்திப்போம்!

    ReplyDelete
  25. கலை வரவில்லை யோகா ஐயா நாளை சந்திப்போம்..

    ReplyDelete
  26. இப்பத்தான் வந்திருக்கிறன்.குட்டீஸ் எல்லாரும் சுகமோ.மூண்டு குட்டீஸ்தானே இங்க இருக்கினம்.

    இன்னொரு வாலில்லாக் குட்டி எங்க வரேல்லையோ.ஏன் ஏன் ஏன் !?

    அப்பா,நேசன்,ரெவரி கோப்பி எனக்கில்லாமல் குடிச்சிட்டுப் போய்டீங்களோ !

    ReplyDelete
  27. குறிப்பு-மீண்டும் சொல்வது தான் தனிமரத்திற்கும் நேசனுக்கும் இந்த தொடர் தொடர்பு இல்லை!

    நம்புறோம் நம்புறோம்...நம்பினபடியாத்தானே தொடர்ந்தும் வாசிக்கிறோம் !

    வீதியைச் சொன்னால் யாரெண்டு கண்டிபிடிச்சிடுவமெண்டு....பச்சைக்கள்ளர் இந்த நேசனும் ராகுலும் !

    ReplyDelete
  28. வீதியைச் சொன்னால் யாரெண்டு கண்டிபிடிச்சிடுவமெண்டு....பச்சைக்கள்ளர் இந்த நேசனும் ராகுலும் ! 
    //இல்லை ஹேமா இந்தவீதியில் இருந்த இன்னொரு நண்பரைன்கானஒரு போட்டி நடக்கின்றது முகநூலில் ராகுலின் நண்பன் அவன் பார்ப்போம்  !

    ReplyDelete
  29. நேசன்....இருக்கிறீங்களோ.சுகமோ?அப்பா,கலை,ரெவரி,அம்பலம் ஐயா எல்லாரும் குறட்டை விடப் போட்டினம்போல !

    ReplyDelete
  30. malaiyakathodu-
    naanum payanikkiren!

    ReplyDelete
  31. ஆகா இன்னைக்கு பெரிய ஆச்சரியமாக இருக்குதே ??? கலையை காணோமே....

    ReplyDelete
  32. நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும் கண்ணைக்கட்டியதால் நானும் போய் விட்டேன்.

    ReplyDelete
  33. நன்றி சீனி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  34. நன்றி எஸ்தர்-சபி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  35. இனிய காலை வணக்கம் ஹேமா அக்கா ,மாமா ,ரே ரீ அண்ணா ,ரீ ரீ அண்ணா ...


    அக்கா நேற்று இரவு தூங்கி விட்டினம்...அதான் வர முடியல ...

    ReplyDelete
  36. குறிப்பு-மீண்டும் சொல்வது தான் தனிமரத்திற்கும் நேசனுக்கும் இந்த தொடர் தொடர்பு இல்லை!
    ///


    எனக்குத்தான் காத்து குத்தி கம்மல் போட்டாச்சே ...என்னை எல்லாம் ஏமாத்த முடியாதக்கும் ...


    ஆபீசில் இருக்கிரணன் ..இரவு வந்து படித்துப் போட்டு கமென்ட் போடுறன்

    ReplyDelete
  37. காலை வணக்கம்,நேசன்!ஹேமா&கலை&ரெவரி&அம்பலத்தார் எல்லோருக்கும் கூடவே!நேற்று கொஞ்சம் பிள்ளைகள் பள்ளிக்கூட வேலை செய்தார்கள்,அதனால் மீள வர முடியவில்லை,மன்னிக்கவும்.

    ReplyDelete
  38. கலை said...
    ஆபீசில் இருக்கிரணன் ..இரவு வந்து படித்துப் போட்டு கமென்ட் போடுறன்////ஆபீசிலேருந்தும் கமெண்டு போடா ஆரம்பிச்சாச்சா?

    ReplyDelete
  39. மீண்டு வந்துட்டேன்...சில பகுதிகளை விட்டுட்டேன்னு நெனைக்கிறேன்...புரட்டி பார்க்கிறேன் மாப்ள்!

    ReplyDelete
  40. காலை வணக்கம் கலை.

    ReplyDelete
  41. எனக்குத்தான் காத்து குத்தி கம்மல் போட்டாச்சே ...என்னை எல்லாம் ஏமாத்த முடியாதக்கும் ...


    ஆபீசில் இருக்கிரணன் ..இரவு வந்து படித்துப் போட்டு கமென்ட் போடுறன் //நீங்க மட்டுமா நானும் தான் தோடு போட்டு இருக்கின்றன் !அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  42. காலை வணக்கம் யோகா ஐயா.

    ReplyDelete
  43. வாங்க விக்கியண்ணா.நலம்தானே?
    நேரம் இருக்கும் போது விடுபட்டதைப் படியுங்கோ.
    நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  44. தினமும் படித்தாலும் 100க்கணக்கான கமெண்ட்டுகளுக்கிடையில் நம்முடையதும் எதற்கு என்று சோம்பேறித்தனத்தில் அப்பீட்டாகிவிடுவேன்.

    ஆனாலும் பதுளையை ஒரு ரசனையுடன் நீங்கள் சொன்ன விதம் வித்தியாசம். ஆனால் அழகு, உண்மை. படித்துவிட்டு யோசித்துப் பார்க்கையில் வேறு கோணத்தில் அழகாக தெரிகிறது.

    நன்றி நேசன்.

    ReplyDelete
  45. இரவு வணக்கம்,நேசன்!ஹேமா&கலை&ரெவரி&அம்பலத்தார் எல்லோருக்கும் கூடவே!

    ReplyDelete
  46. இனிய இரவு வணக்கம் மாமா ,ஹேமா அக்கா ,ரே ரீ அண்ணா ,ரீ ரீ அண்ணா ,அங்கிள் ...


    அண்ணா இண்டைக்கு இன்னும் பதிவிடவில்லை ,...


    மாமா மட்டும் தான் கண்டினனே ..


    அக்கா ,ரே ரீ அண்ணா ,ரீ ரீ அன்னக்க காணுமே

    ReplyDelete
  47. ஹேமா அக்கா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ

    மாமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ

    ரீ ரீ அண்ணாஆஆஆஆஆஆஆஆஆஆ

    ரேரி அண்ணாஆஆஆஆஆஆஆஆஆஆஆ

    ReplyDelete
  48. மீள் இரவு வணக்கம்,கலை!அண்ணா பதிவு போடுவார் போல் தெரியவில்லை!இங்கே பிரான்சில் கொஞ்சம் நல்ல கால நிலை.அதனால் சுற்றுலாப் பயணிகள் அதிகம்!கூடவே இங்கே பாரிஸ் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பாடசாலை ஈஸ்டர் விடுமுறை!அதனால் அண்ணாவுக்கு வேலை அதிகம்.நல்லாயிருக்கீங்களா?வேலை எப்படிப் போகிறது?"அவர்கள்" பதில் சொல்லவில்லையா?

    ReplyDelete
  49. கூவாதீங்க!காது டமாரமாயிடுமில்ல?ஹி!ஹி!!!இங்க தான் இருக்கேன்.ஹேமா அக்கா வேலை முடிஞ்சு வர நேரமாகும்!

    ReplyDelete
  50. உங்க குரு வந்தது ரொம்ப சந்தோசம் போல?இனிப்புத்தான்.......................ஹும்!!!இரவு பகலா கண்ணு முழிச்சு காவல் காத்தும்..............................!

    ReplyDelete
  51. வாங்கோ மாமா ..நல்ல சுப்பரா இருக்கினம் ..நீங்கோல் நல்ல சுகம் தானே ...

    அண்ணா போடுவார் எண்டு தான் தூண்கள் விழிக்கிராணன் ...பரவாயில்லை வேவ்லை செய்து வரட்டும் அது தானே முக்கியம் ...

    ஹேமா அக்காவும் நேற்று பேச முடியல ,,,அக்கா வோடு இண்டும் சண்டை போடா முடியாத ...


    அவர்கள் ஒன்டுமே சொல்லவில்லை மாமா ..நாளை நானே ஒரு மெயில் போட்டுப் பார்க்கலாம் எண்டு இருக்கிரணன் ...

    ReplyDelete
  52. கூவாதீங்க!காது டமாரமாயிடுமில்ல?ஹி!ஹி!!!இங்க தான் இருக்கேன்.ஹேமா அக்கா வேலை முடிஞ்சு வர நேரமாகும்!///

    அப்படி இம்புட்டு கத்தி கூப்பிடத்தான் என்ன எண்டு கேக்குரிங்க ..இல்லை எண்டால் ஒரே அமைதியா இருப்பினம் ..அதான்

    ReplyDelete
  53. உங்க குரு வந்தது ரொம்ப சந்தோசம் போல?இனிப்புத்தான்.......................ஹும்!!!இரவு பக கண்ணு முழிச்சு காவல் காத்தும்..............................!///


    கவலைக் கொள்ளதிங்கோ மாமா ..இனிப்பு நமக்குத் தான் ....ஹேமா அக்காவை பார்தீங்கல்லோ ..முதல் ஆளா ....... இனிப்பு கேட்டு .................

    ReplyDelete
  54. தினமும் படித்தாலும் 100க்கணக்கான கமெண்ட்டுகளுக்கிடையில் நம்முடையதும் எதற்கு என்று சோம்பேறித்தனத்தில் அப்பீட்டாகிவிடுவேன்.

    ஆனாலும் பதுளையை ஒரு ரசனையுடன் நீங்கள் சொன்ன விதம் வித்தியாசம். ஆனால் அழகு, உண்மை. படித்துவிட்டு யோசித்துப் பார்க்கையில் வேறு கோணத்தில் அழகாக தெரிகிறது.

    நன்றி நேசன்.//நண்றி ஹாலிவூட் ரசிகன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  55. கவலைக் கொள்ளதிங்கோ மாமா ..இனிப்பு நமக்குத் தான் ....ஹேமா அக்காவை பார்தீங்கல்லோ ..முதல் ஆளா ....... இனிப்பு கேட்டு .................// அவா அதிராவிடம் சங்கிலி கேட்டவா.அவ்வ்வ்

    ReplyDelete
  56. அப்படி இம்புட்டு கத்தி கூப்பிடத்தான் என்ன எண்டு கேக்குரிங்க ..இல்லை எண்டால் ஒரே அமைதியா இருப்பினம் ..அதான்/ ஹீ கத்திக் கத்தி களைச்சுப் போனேன் . ஆவ்வ்வ்வ்

    ReplyDelete