08 May 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-42

யாழ் விளக்கமறியல்,பதுளை விளக்கமறியல்,தாய்லாந்து,மலேசியா,சிங்கப்பூர்,பிரெஞ்சு விளக்க மறியல் பார்த்தவன் தனிமரம் ஆனால் ரவியின் சித்திரவதை கொடுமையானது. குடாட்டருக்கும்,புரியாணிக்கும் பதிவு எழுதும் அபி அப்பாவைவிட நான் குறைந்து போக வில்லை ஈழத்தவனாக!வெட்கப்படவும் இல்லை இந்த தேசத்தில் பிறந்ததுக்கு இனவாத
ம் பேசும் நாட்டில் இருந்து ஓடிவந்த அகதியாக!


//வரலாற்றில் ஹிட்லர்,முசேலினி,சுலோபோடன் மிலேசிவிக்,கடாபி போன்றோரை குற்றவாளியாக்கி தண்டித்துவிட்ட அனைத்துலக சமுகம் .

அந்த தலைவர்களை வழிநடத்திய அரச கரும முக்கிய பணியாளரை தப்பிக்க விடுவது ஏன் ?

இன்றும் பலரை தூக்கில் போட வேண்டும் என கூறும் பலரும் .

அந்த தலைவரின் பின் இருந்து இயக்கியவர்கள் நல்லவர்கள் என்று எப்படி நினைப்பது?

இப்படித்தான் பேரினவாதம் தமிழர் மீது எத்தனை அட்டூழியங்கள் செய்தது. என்று வெளியுலகம் அறியாது!

 அந்த மலையகம் தாங்கிக் கொண்டு இருக்கும் எரிமலைக் குழம்புகள் அதிகம்.

 பதுளையில் வியாபாரிகளிடம் பேரினவாத சட்டத்தின் காவலர்கள் கப்பம் கோரிக்கொண்டு இருந்தார்கள் .

பலர் மெளனமாக கொடுத்துவிட்டு சுருட்டுக்கடைவியாபாரம் வேண்டாம் என்று ஓடிக்கொண்டு இருந்தார்கள்.

பிரேமதாசாவின் ஆட்சியில் இருந்த சட்டக்காவலர்கள் நாட்டில் ஏற்பட்ட எழுச்சியை அடக்க .
பலரை களை எடுத்தார்கள் .

வடக்கில் புலிகளின் செயல் என்று ஒருபுறம் தெற்கில் இருந்த விடுபட்ட கீழ்மட்ட மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களை தேடிக்கண்டு பிடித்துக் கொண்டு இருந்தார்கள்.

எரியும் நெருப்புக்கு எண்ணெய் வார்ப்பது போல யாராவது மனதில் ஏற்படும் வன்மத்தை எழுத்தில் பெட்டிசமாக எழுதிவிட்டு.

 அதில் புலி என்று ஒரு வாக்கியம் சேர்த்துவிட்டால் .சிங்கக் கண்கள் சிலிர்த்துக்கொண்டு வந்து  சிறை எடுத்துச் செல்லும்.

  அப்படித்தான் ஒரு புலியிடனும் தொடர்பு இல்லாத ரவி அண்ணா .

புலி உறுப்பினர் என்று பெட்டிசம் போட்ட இக்பாலுக்குத் தெரியாமல் போன பட்டதாரி அறிவுதான் !

சட்டக்காவலர்களுக்கு சன்மானம் அதிகம் கொடுத்தால் .

சாட்சியாக வந்த கடிதம் பிரதி எடுக்கலாம் என்றும்.

 அதை சுருட்டுக்கடையில் இருக்கும் அடுத்த தலைமுறை அதில் என்ன எழுதியிருந்தது என வாசிக்கும் அளவுக்கு கற்பித் திருந்தார்கள் .தங்கள் வம்சத்தை என்றும் புரியாமல் போனதேன்.?

அதுதான் அந்த போக்கிரியின் பட்டதாரி படிப்பா?

ரவி அண்ணாவை கொண்டு போனவர்கள் 5 மாதமாக நீதிமன்றம் கொண்டு வரவில்லை.

 விளக்கமறியல் என்ற போர்வையில்  வைத்திருந்து செய்த சித்திரவதையை நினைக்கும் போதெல்லாம் பேரினவாதம்  மீது வரும் வெறுப்பைவிட.கோபம். இக்பால் மீது.

விளக்கமறியலில் செய்த சித்திரவவைதை எப்படி எழுத்தில் வடிப்பது .

அசோகவனத்தில் சீதை அனுபவிக்காத கொடுமை ரவி அண்ணா அனுபவித்தது. அவர் கொஞ்சம் சிங்களம் கதைப்பார் .ஆனால் எழுத மாட்டார் .

அவர் மேனியில் சிங்களப் பேரினவாதம் எப்படி எல்லாம் சித்திரம் கீறீயது.

 மங்கையைத் தழுவ வேண்டி கையை மண்ணிறைந்த ஸ்லோன் பைப்பினால் அடித்து இயக்கம் இல்லாமல் வரும் வரைக் கேட்டார்கள். நீ ?இயக்கத்துக்கு வேலை செய்யவா இங்கு வந்தாய்  என்று?

கொடுமையிலும் கொடுமை புத்தன் போதித்தான் ஆசையைத் துறந்து வா .என்று ஆனால் இந்த அன்பைப் போதித்த மதத்தில் பிறந்தவர்கள் .

மதி கெட்டுச் செய்த அருவருப்புச் செயல் .ரவி அண்ணாவை நிர்வானத்துடன்  விளக்க மறியலில் வைத்திருந்த காட்சியைக் கண்ட கண்களுக்கு வெறுப்பு பேரினவாதம் மீதல்ல.

   தன் ஆசைக்காக்க ஒரு அப்பாவியை பலி கொடுத்தானே இக்பால். என்ற அயோக்கியன் மீது வன்மம் இன்னும் கொடுத்தது.

 ரவி அண்ணாவுக்கு விளக்கமறியலில் இருந்து  வெளியில் கொண்டு வர செல்லம் மாமா இறைத்த பணமும், ஓல்ட் அறக்கும் கணக்குப் பார்த்தால் .

அப்போது இன்னொரு உறவை புலம் பெயர ஏஜேஸ்ன்சிக்கு  கொடுக்கும் தொகைக்கு போதுமான அளவு.

 5 மாத இருண்டவாழ்வில் இருந்து வெளியில் வர உதவியவர் ஒரு புத்த பிக்கும்  இன்னொரு இராணுவ அதிகாரியும் தான்.

 வந்த கையோடு ரவி அண்ணா போய்ச் சேர்ந்தார் உண்மையில் இயக்கத்துக்கு.

அவரை மீண்டும் ராகுல் பார்த்தது 2003 ஆண்டு முகமாலை பின் அரங்க பாதுகாப்புச் சாவடியில்.

 அவரின் துணைவியும் ஒரு போராளி .விழுப்புண் பட்டு ஒரு கால் செயல் இழந்து இருந்தவருக்கு மறுகால் அகவாழ்வு அந்த வன்னிப் போராளி நங்கை .

ஆசையோடு முன்னல் நண்பன் என்று பரிமாறின சாப்பாடு சாப்பிட்ட போதும். சொல்லவில்லை .

ஓடிப் போன சிந்துஜா அக்காள் ஒரு விலைமாது ஆகி கொழும்பு யூனியன் பிளேஸ் கேக் வீதியில் இரந்து நின்ற காட்சியைப் பற்றி

.அவள் குழந்தையையும் தவிக்க விட்டு ,அவளுக்கு போதைப் பழக்கத்தையும் கொடுத்து விட்டு ஓடிய இக்பால் பற்றியும்.

ராலுகுலுக்கும் நம்பிக்கை இருக்கு. அல்லா அவனை தண்டிப்பார் என்று ஏன்னா அவனுக்கும் !!இந்த தனிமரத்துக்கும் மதவாதிகளை விட மதக்கடவுள் மீது நம்பிக்கை அதிகம்!
////


தொடரும்
பெட்டிசம்- மனுப்போடுதல்.
---ஓல்ட் அறக்கு-மதுபான குடிவகை
ஸ்லோன் பைப்-பிளாஸ்றிக்குழாய்
சன்மானம்-ஊழல்.
காசு கொடுத்தால் விளக்கமறியல்/லாக்கப்பில் இருப்போரைப்பார்க்க  முடியும் இலங்கையில் அது எனக்கு சொந்த அனுபவம்.

88 comments:

  1. இரவு வணக்கம் நேசன்,நலமா?

    ReplyDelete
  2. இப்படியுமா இருப்பார்கள் மனிதர்கள்?கேட்கும்/படிக்கும் எங்களுக்கே....................................ஹும்!யாரை நோக,யார்க்கெடுத்துரைக்க?????விதி வலியது நேசன்!

    ReplyDelete
  3. இரவு வணக்கம் யோகா ஐயா நான் நலம் நீங்கள் எப்படி இருக்கிறீங்க ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.

    ReplyDelete
  4. மீ யும் வந்துட்டேன் ...


    இனிய இரவு வணக்கம் மாமா ,அண்ணா

    ReplyDelete
  5. படித்துப் போட்டு வாறன் அண்ணா

    ReplyDelete
  6. இப்படியுமா இருப்பார்கள் மனிதர்கள்?கேட்கும்/படிக்கும் எங்களுக்கே....................................ஹும்!யாரை நோக,யார்க்கெடுத்துரைக்க?????விதி வலியது நேசன்!//ம்ம்ம் விதியா அது சதி இழிமகன் செயல்.கடந்த காலத்தில் ராகுல் ,நண்பன் வாழ்வில்.

    ReplyDelete
  7. மீ யும் வந்துட்டேன் ..//வாங்க கலை நெல்லைப் புத்திரியே.ஹீஈஈஈஈ

    ReplyDelete
  8. படித்துப் போட்டு வாறன் அண்ணா

    8 May 2012 10:48 //அழுதால் நான் பொறுப்பு இல்லை!

    ReplyDelete
  9. காசு கொடுத்தால் விளக்கமறியல்/லாக்கப்பில் இருப்போரைப்பார்க்க முடியும் இலங்கையில் அது எனக்கு சொந்த அனுபவம்.///மூன்றாம் உலக நாடுகளில் சகஜம் தான்.ஊழல் இல்லா உலக நாடு எது?இன்னும் பத்து நாட்களில் எங்கள் ஜனாதிபதிக்கும்(தற்போதைய)ஆப்பு காத்திருக்கிறது!

    ReplyDelete
  10. காசு கொடுத்தால் விளக்கமறியல்/லாக்கப்பில் இருப்போரைப்பார்க்க முடியும் இலங்கையில் அது எனக்கு சொந்த அனுபவம்.///மூன்றாம் உலக நாடுகளில் சகஜம் தான்.ஊழல் இல்லா உலக நாடு எது?இன்னும் பத்து நாட்களில் எங்கள் ஜனாதிபதிக்கும்(தற்போதைய)ஆப்பு காத்திருக்கிறது!// ஹீஈஈஈஈ ,இன்னும் காலம் பிடிக்கும் அவருக்கு சிராக் கேஸ் முடியவில்லை.

    8 May 2012 10:50

    ReplyDelete
  11. இரவு வணக்கம்,கலை!கவிதை அருமை.போன் பண்ணி உங்க அம்மாவிடம் சுத்திப் போடச் சொல்லுங்க.

    ReplyDelete
  12. ஊழல் இல்லா உலக நாடு எது?//என்றாலும் சில நேரம் உயிரோடு வெளியில் வாரோமே அதே பெரிய விடயம்!ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  13. என்ன அண்ணா காயம் படுத்தும் பதிவு ..

    ReplyDelete
  14. இரவு வணக்கம்,கலை!கவிதை அருமை.போன் பண்ணி உங்க அம்மாவிடம் சுத்திப் போடச் சொல்லுங்க// எழுத்துப்பிழை பார்த்த குருவுக்கும் தான் ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்.

    ReplyDelete
  15. அவர் உள்ளூரில் கட்சி வளர்க்க,அரச பணத்தை பயன்படுத்தினார்!இவர்,அரச தலைவர் பதவிக்கு போட்டியிட வெளிநாட்டுப் பணத்தை................ஹ!ஹ!ஹா!!!!!!

    ReplyDelete
  16. மீ யும் வந்துட்டேன் ..//வாங்க கலை நெல்லைப் புத்திரியே.ஹீஈஈஈஈ///


    அவ்வவ் திருநெல்வேலி தான் சொந்த ஊர் அண்ணா ...

    ReplyDelete
  17. தனிமரம் said...

    என்றாலும் சில நேரம் உயிரோடு வெளியில் வாரோமே அதே பெரிய விடயம்!ம்ம்ம்ம்ம்ம்ம்////உண்மை தான்!மறந்து விட்டேன்:அந்த பிரியாணிக்கும்,குவாட்டருக்கும் எழுதுற ஆள் இப்பவும் "இருக்கிறாரா?"

    ReplyDelete
  18. இரவு வணக்கம்,கலை!கவிதை அருமை.போன் பண்ணி உங்க அம்மாவிடம் சுத்திப் போடச் சொல்லுங்க.///


    ஹஈஈஈஈ ஜாலி ஜாலி !! மிக்க நன்றிங்க மாமா ...நான் எப்புடி எழுதினாலும் உங்களுக்கு கண்டிப்பா உங்கட கண்களுக்கு அழகா மட்டும் தான் தெரியும்மாமா காக்கைக்கு தன் குஞ்சு தான் பொன்குஞ்சாம்

    ReplyDelete
  19. என்ன அண்ணா காயம் படுத்தும் பதிவு ..//ம்ம் அந்தக் காலத்தில் நடந்த சகலதையும் சொல்லு என்கிறான் ராகுல் கூடவே அவன் நண்பர்கள் நண்பிகள் நான் என்ன செய்வேன் பாதுகாப்பான நாட்டில் இருக்கின்றேன் கலை அவர்கள்! ம்ம்ம்

    ReplyDelete
  20. கலை said...

    மீ யும் வந்துட்டேன் ..//வாங்க கலை நெல்லைப் புத்திரியே.ஹீஈஈஈஈ///


    அவ்வவ் திருநெல்வேலி தான் சொந்த ஊர் அண்ணா!///அது தான் எப்பவோ தெரியுமே?திருநெல்வேலித் தமிழ் கிட்டத்தட்ட யாழ்ப்பாணத் தமிழ் போலவே இருக்கும்!

    ReplyDelete
  21. அவர் உள்ளூரில் கட்சி வளர்க்க,அரச பணத்தை பயன்படுத்தினார்!இவர்,அரச தலைவர் பதவிக்கு போட்டியிட வெளிநாட்டுப் பணத்தை................ஹ!ஹ!ஹா!!!!!!// பாவம் கத்தி போய் வாள் வந்த நாட்டுத்தலைவரையும் ம்ம்ம்

    ReplyDelete
  22. அந்தக் காலத்தில் நடந்த சகலதையும் சொல்லு என்கிறான் ராகுல் கூடவே அவன் நண்பர்கள் நண்பிகள் நான் என்ன செய்வேன் பாதுகாப்பான நாட்டில் இருக்கின்றேன் கலை அவர்கள்! ம்ம்ம்///

    அப்போ ராகுல் அண்ணனும் படித்துக் கொண்டு இருக்காங்களா அண்ணா இந்தப் பதிவை

    ReplyDelete
  23. அவ்வவ் திருநெல்வேலி தான் சொந்த ஊர் அண்ணா ...

    8 May 2012 10:55 //ம்ம்ம் பல தடவை எல்லாம் ஆன்மீகப் பயணம்! இனி தங்கை வீடு இருக்கு!ஹீ

    ReplyDelete
  24. உங்க கவிதாயினி(அம்மு)அக்கா வந்து வானத்துக்கும்,பூமிக்குமா குதித்து,உச்சி முகரப் போகிறா,பாருங்கள்!

    ReplyDelete
  25. அப்போ ராகுல் அண்ணனும் படித்துக் கொண்டு இருக்காங்களா அண்ணா இந்தப் பதிவை

    8 May 2012 11:00 //ம்ம் முகநூல் வழியாக.

    ReplyDelete
  26. திருநெல்வேலித் தமிழ் கிட்டத்தட்ட யாழ்ப்பாணத் தமிழ் போலவே இருக்கும்!//

    ஓமாம் மாமா ...எனக்கு யாழ் தமிழ் தான் ரொம்ப பிடிச்சி இருக்கு ....நான் யாழ் தமிழ் முழுமையா கற்றுக் கொள்ள ஆசை மாமா ...

    ReplyDelete
  27. உங்களுக்கென்ன நேசன்?அப்படியாவது சொந்தங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டும்!நான் மருமகளை கூப்பிட்டுப் பார்க்கலாம் என்று யோசிக்கிறேன்!

    ReplyDelete
  28. உங்க கவிதாயினி(அம்மு)அக்கா வந்து வானத்துக்கும்,பூமிக்குமா குதித்து,உச்சி முகரப் போகிறா,பாருங்கள்!// ஆனால் வெளியில் சிலர் காக்கா பிடிக்குது காகம் என்று சொல்லப்போறார்கள்.

    ReplyDelete
  29. ஓமாம் மாமா ...எனக்கு யாழ் தமிழ் தான் ரொம்ப பிடிச்சி இருக்கு ....நான் யாழ் தமிழ் முழுமையா கற்றுக் கொள்ள ஆசை மாமா ...

    8 May 2012 11:02 // ஏன் யோகா ஐயாவுடன் சண்டை போடவோ!

    ReplyDelete
  30. கலை said...
    ஓமாம் மாமா ...எனக்கு யாழ் தமிழ் தான் ரொம்ப பிடிச்சி இருக்கு ....நான் யாழ் தமிழ் முழுமையா கற்றுக் கொள்ள ஆசை மாமா.///இப்போ வரைக்கும் பாதி கற்று விட்டீர்கள்!!!!! ..

    ReplyDelete
  31. செங்கோவி பதிவு போட்டிருக்கிறார்!

    ReplyDelete
  32. ம்ம்ம் பல தடவை எல்லாம் ஆன்மீகப் பயணம்! இனி தங்கை வீடு இருக்கு!///


    கண்டிப்பாக அண்ணா இனிமேல் நீங்கள் தங்கை வீட்டுக்கு வரமால் சென்று வீடுவீர்களோ ....


    எப்போ வருவீர்கள் எண்டு முன்னரமே சொல்லி விடுங்கள் அண்ணா ...நானும் அப்ப தமிழ் நாட்டுக்கு வந்துடுறேன் ..ஜாலி யா எங்க ஊரை சுற்றி காண்பிப்பேன் அண்ணா ...இப்போ நான் கட்டாக்கில் இருக்கிறேன் அண்ணா .....

    வரும்போது அண்ணியை கூட்டி வாருங்கள் ...


    மாமா .ஹேமா அக்கா நீங்களும் என்னைப் பார்க்க இந்திய வரணும் ...


    கண்டிப்பா என்னோட கல்யாணத்துக்கு எல்லாரும் கண்டிப்பா கண்டிப்பா வரணும் ,................

    ReplyDelete
  33. அந்த பிரியாணிக்கும்,குவாட்டருக்கும் எழுதுற ஆள் இப்பவும் "இருக்கிறாரா?"

    8 May 2012 10:57 // கொஞ்ச நாள் கானவில்லை வருவார் தாத்தா ஏதாவது புலம்பினால்.

    ReplyDelete
  34. உங்களுக்கென்ன நேசன்?அப்படியாவது சொந்தங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டும்!நான் மருமகளை கூப்பிட்டுப் பார்க்கலாம் என்று யோசிக்கிறேன்!

    8 May 2012 11:03///


    இப்புடில்லாம் சொல்லி எஸ்கேப் ஆகக் கூடாது மாமா ....கண்டிப்பாய் நீங்களும் வரணும் சொல்லிட்டேன்

    ReplyDelete
  35. வரும்போது அண்ணியை கூட்டி வாருங்கள் ...// ஃநான் நிச்சயம் வருவேன் அண்ணி அனுமதி விடயங்கள் சிக்கல் இருக்கு விரைவில் முடிந்தால் நிச்சயம் அழைத்து வருவேன்.

    ReplyDelete
  36. உங்க கவிதாயினி(அம்மு)அக்கா வந்து வானத்துக்கும்,பூமிக்குமா குதித்து,உச்சி முகரப் போகிறா,பாருங்கள்!//

    உண்மையாவே அக்கா சந்தோசப் படுவான்கள் மாமா ....அக்காவுடைய சந்தோசம் தான உங்களுக்கும் மிகப் பெரிய சந்தோசம் மாமா ....


    ஆனால் வெளியில் சிலர் காக்கா பிடிக்குது காகம் என்று சொல்லப்போறார்கள்.////
    ரீ ரீ அண்ணா அப்புடி எல்லாம் சொல்வார்களா ...யாரையும் எனக்குத் தெரியாது அண்ணா அதிரா அக்கா ,அஞ்சு அக்கா ,கிரி அக்கா அப்புறம் இங்க இருக்குற நாமல் வேறு யாரும் சொல்லுறதுக்கு ரைட்ஸ் கிடையாது ...

    ReplyDelete
  37. உங்களுக்கென்ன நேசன்?அப்படியாவது சொந்தங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டும்!நான் மருமகளை கூப்பிட்டுப் பார்க்கலாம் என்று யோசிக்கிறேன்!// அதுவும் நல்ல ஐடியா நான் போறதும் வாரதுமாக இருக்கும் பயணம் அது விடுமுறை கஸ்ரம் தையில் எடுப்பது ஏதோ அவன் வழிவிட்டான் இதுவரை வார மாதம் பின் ......ம்ம்ம்,.

    ReplyDelete
  38. 8 May 2012 11:02 // ஏன் யோகா ஐயாவுடன் சண்டை போடவோ!///


    மாமா வோடு நான் என்னைக்கு சண்டைப் போட்டு இருக்கேன் ....மாமா விடம் எப்போதுமே என் மனதுக்குள் பெரிய மரியாதை உண்டு அண்ணா

    ReplyDelete
  39. ஆனால் வெளியில் சிலர் காக்கா பிடிக்குது காகம் என்று சொல்லப்போறார்கள்.////
    ரீ ரீ அண்ணா அப்புடி எல்லாம் சொல்வார்களா ...யாரையும் எனக்குத் தெரியாது அண்ணா அதிரா அக்கா ,அஞ்சு அக்கா ,கிரி அக்கா அப்புறம் இங்க இருக்குற நாமல் வேறு யாரும் சொல்லுறதுக்கு ரைட்ஸ் கிடையாது ..// கருவாச்சிக்கு இன்னும் பதிவுலக அரசியல் பிடிபடவில்லை. குருவிடம் படியுங்கோ!ஹீஈ.

    ReplyDelete
  40. அண்ணா நீங்கள் இண்டு சீக்கிரம் பதிவு போட்டு வீடிங்கள் ..தினமும் சீக்கிரமமாய் போட்டால் நல்லா இருக்கும் அண்ணா ...

    ReplyDelete
  41. கலை said...
    இப்புடில்லாம் சொல்லி எஸ்கேப் ஆகக் கூடாது மாமா ....கண்டிப்பாய் நீங்களும் வரணும் சொல்லிட்டேன்//////நாங்களா?அச்சச்சோ!மொத்தம்,ஐஞ்சு!அத வுட ஒண்ணு சீப்பா முடிஞ்சிடும்!

    ReplyDelete
  42. கருவாச்சிக்கு இன்னும் பதிவுலக அரசியல் பிடிபடவில்லை. குருவிடம் படியுங்கோ!ஹீஈ.///


    இண்டைக்கு அதிரா அக்கா தான் அண்ணா என்னோட பதிவில் இருந்த எழுத்துப் பிழை எல்லாம் நீக்கிக் கொடுத்தங்கள் ....

    ReplyDelete
  43. மாமா எஸ்கேப் ஆகி செங்கோவி அன்னான் பதிவுக்கு போய்ட்டாங்கள் போல்

    ReplyDelete
  44. அண்ணா நீங்கள் இண்டு சீக்கிரம் பதிவு போட்டு வீடிங்கள் ..தினமும் சீக்கிரமமாய் போட்டால் நல்லா இருக்கும் அண்ணா ...//நான் தயார் ஆனால் நண்பன்skipe வரணும் பிறகு என் அம்மா எழுத்துப்பிழை பார்க்க கொஞ்சம் அதிக நேரம் எடுப்பா வயசாயிடுச்சு இல்ல! ஹீஇ முயல்கின்றேன் இனி நேரத்துக்கு.கலை.

    ReplyDelete
  45. கலை said...

    உண்மையாவே அக்கா சந்தோசப் படுவான்கள் மாமா ....அக்காவுடைய சந்தோசம் தான உங்களுக்கும் மிகப் பெரிய சந்தோசம் மாமா //////என்னமோ தெரியவில்லை,மருமகளே!அக்கா..............ஹும்!அக்டோபரில் கனடா போக இருக்கிறா போல,அண்ணாவையும் நிலாக்குட்டியையும் பார்க்க!

    ReplyDelete
  46. இப்புடில்லாம் சொல்லி எஸ்கேப் ஆகக் கூடாது மாமா ....கண்டிப்பாய் நீங்களும் வரணும் சொல்லிட்டேன்//////நாங்களா?அச்சச்சோ!மொத்தம்,ஐஞ்சு!அத வுட ஒண்ணு சீப்பா முடிஞ்சிடும்!

    8 May 2012 11:17 // உண்மைதான் ஐயா டிக்கட் செலவு அப்பாடா என்ன செய்வது.

    ReplyDelete
  47. இண்டைக்கு அதிரா அக்கா தான் அண்ணா என்னோட பதிவில் இருந்த எழுத்துப் பிழை எல்லாம் நீக்கிக் கொடுத்தங்கள் ....

    8 May 2012 11:19 //குரு எனக்கும் உதவினால் அடுத்த தொடரையும் ஒன்றாக பயணிக்கலாம். ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்

    ReplyDelete
  48. மாமா எஸ்கேப் ஆகி செங்கோவி அன்னான் பதிவுக்கு போய்ட்டாங்கள் போல்

    8 May 2012 11:21 //கருவாச்சி புலன் விசாரனைப்புலி.

    ReplyDelete
  49. கலை said...

    மாமா எஸ்கேப் ஆகி செங்கோவி அண்ணன் பதிவுக்கு போய்ட்டாங்கள் போல்?////அங்கெல்லாம் போகாதீங்க,அது பதினெட்டு பிளஸ்,!!!!!!இங்க தான் இருக்கேன்.பதினெட்டு பிளஸ் போட்டதால நானே படிக்கல,ஹி!ஹி!ஹி!!!

    ReplyDelete
  50. மாமா எஸ்கேப் ஆகி செங்கோவி அண்ணன் பதிவுக்கு போய்ட்டாங்கள் போல்?////அங்கெல்லாம் போகாதீங்க,அது பதினெட்டு பிளஸ்,!!!!!!இங்க தான் இருக்கேன்.பதினெட்டு பிளஸ் போட்டதால நானே படிக்கல,ஹி!ஹி!ஹி!!!// ஹீ சாப்பாட்டையுமா.படிக்கவில்லை.

    ReplyDelete
  51. கருவாச்சி புலன் விசாரனைப்புலி.
    ///இங்க தான் இருக்கேன்.பதினெட்டு பிளஸ் போட்டதால நானே படிக்கல,ஹி!ஹி!ஹி!!!///

    நான் உண்மையா மாமா வைத் தேடி அங்க தான் போயினன் ....அவ்வ்வ்வ் நானும் உங்களை போலவே படிக்கவே படிக்கலா ...எப்புடீஈஈஈஈஈஇ

    ReplyDelete
  52. நான் உண்மையா மாமா வைத் தேடி அங்க தான் போயினன் ....அவ்வ்வ்வ் நானும் உங்களை போலவே படிக்கவே படிக்கலா ...எப்புடீஈஈஈஈஈஇ

    8 May 2012 11:31 // நான் படிச்சிட்டன் அவர் பதிவை. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  53. அப்போ அஞ்சு நிமிஷம் என்ன பண்ணினீங்க?

    ReplyDelete
  54. அப்போ அஞ்சு நிமிஷம் என்ன பண்ணினீங்க?

    8 May 2012 11:34 // ஹாண்சிகா பாட்டியின் படம் பார்த்தாங்க போல ஹீ

    ReplyDelete
  55. கலை said...
    நான் உண்மையா மாமா வைத் தேடி அங்க தான் போயினன் ....அவ்வ்வ்வ் நானும் உங்களை போலவே படிக்கவே படிக்கலா ...எப்புடீஈஈஈஈஈஇ//////ஆடு கத்தின சத்தம் கேட்டுச்சா??????

    ReplyDelete
  56. அப்போ அஞ்சு நிமிஷம் என்ன பண்ணினீங்க?.///

    ஒன்டுமே பண்ணல மாமா ...நான் அப்புடியே கண்ணை மூடிக்கிட்டேன் அந்த ப்ளாக் போகும்போது ... ..நீங்க என்ன கமென்ட் போட்டேன்கள் ரீ ரீ அண்ணா கமென்ட் அதை தான் பார்த்தேன் எண்டு மட்டும் ஓரக் கண்ணில் பார்த்துட்டு சமத்த வந்துட்டேன் மாமா

    ReplyDelete
  57. யோகா ஐயா தொடரை அவசரமாக நகர்த்த வேண்டி இருப்பதால் தொடர்ந்து பதிவு போட வேண்டிய நிலை சிரமத்துக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  58. தனிமரம் said...
    நான் படிச்சிட்டன் அவர் பதிவை. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்/////அதில முதல் பந்தியில வாருப்பட்ட பதிவர் யார்??????எனக்குத் தெரியுமே!

    ReplyDelete
  59. ன்டுமே பண்ணல மாமா ...நான் அப்புடியே கண்ணை மூடிக்கிட்டேன் அந்த ப்ளாக் போகும்போது ... ..நீங்க என்ன கமென்ட் போட்டேன்கள் ரீ ரீ அண்ணா கமென்ட் அதை தான் பார்த்தேன் எண்டு மட்டும் ஓரக் கண்ணில் பார்த்துட்டு சமத்த வந்துட்டேன் மாமா//முன்ன்ர் அவர் வலையில் கும்மியடிப்போம் கலை அது ஒரு காலம் .

    ReplyDelete
  60. அதில முதல் பந்தியில வாருப்பட்ட பதிவர் யார்??????எனக்குத் தெரியுமே!//


    யாருங்க மாமா அவர் ...நீங்களா ..உங்களை நாங்க தேடினோமா நேற்று ...அதுக்காகவோ ன்னு கொஞ்சம் எனக்கு டவுட்டு வந்தது மாமா

    ReplyDelete
  61. தனிமரம் said...
    நான் படிச்சிட்டன் அவர் பதிவை. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்/////அதில முதல் பந்தியில வாருப்பட்ட பதிவர் யார்??????எனக்குத் தெரியுமே!

    8 May 2012 11:39 //ம்ம்ம் இப்படித்தான்.

    ReplyDelete
  62. முன்ன்ர் அவர் வலையில் கும்மியடிப்போம் கலை அது ஒரு காலம் .///


    ஹோ ...இப்பம் ஏன்னா அங்கு கும்மி அடிக்க மாட்டுகிரிங்கள்

    ReplyDelete
  63. யாருங்க மாமா அவர் ...நீங்களா ..உங்களை நாங்க தேடினோமா நேற்று ...அதுக்காகவோ ன்னு கொஞ்சம் எனக்கு டவுட்டு வந்தது மாமா// ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் ஐயாவே சொல்லிப். போட்டார்!

    ReplyDelete
  64. அவரும் வெளி நாட்டில் தான் இருக்கிறார்!அண்மையில் ஊருக்குப் போனார்!ரணகளம் ஆகி விட்டது,ஹி!ஹி!ஹி!!!

    ReplyDelete
  65. ஹோ ...இப்பம் ஏன்னா அங்கு கும்மி அடிக்க மாட்டுகிரிங்கள்

    8 May 2012 11:44 // செங்கோவி ஐயாவுக்கு வேலை அதிகம் அதனால் ஒன்லைனில் இருப்பது இல்லை விரைவில் வந்தால் எப்படியும் ஒரு பத்துப்போர் இருப்போம் வேலை நேரத்திலும் ஜாலியா.

    ReplyDelete
  66. கலை said...

    முன்ன்ர் அவர் வலையில் கும்மியடிப்போம் கலை அது ஒரு காலம் .///


    ஹோ ...இப்பம் ஏன்னா அங்கு கும்மி அடிக்க மாட்டுகிரிங்கள்?////அது வந்து,அவர் குவைத்தில் இருக்கிறார்.இப்போது கொஞ்சம் நேரப் பற்றாக்குறை.அதனால்................

    ReplyDelete
  67. மாமா டாட்டா

    ரீ ரீ அண்ணா டாட்டா

    ரே ரீ அண்ணா மிஸ் பண்ணுறோம்


    ஹேமா அக்கா செல்லமே அம்முக் குட்டியே டாட்டா

    ReplyDelete
  68. மாமா டாட்டா

    ரீ ரீ அண்ணா டாட்டா

    ரே ரீ அண்ணா மிஸ் பண்ணுறோம்


    ஹேமா அக்கா செல்லமே அம்முக் குட்டியே டாட்டா
    //நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும் ரெவெரி பயணம் போய் இருக்கின்றார் பார்க்கலாம் விரைவில் ஹேமா பின்னிரவில் வருவா.குட் நைட்
    8 May 2012 11:48

    ReplyDelete
  69. நான் சொல்ல நினைத்தேன்,மருமகளே!மணியாகிறது என்று.நல்லிரவு மருமகளே!நாளை பார்ப்போம்.உறங்குங்கள்,அக்கா வந்து பார்த்து உச்சி முகர்வா.காலையில் பாருங்கள்!

    ReplyDelete
  70. நான் சொல்ல நினைத்தேன்,மருமகளே!மணியாகிறது என்று.நல்லிரவு மருமகளே!நாளை பார்ப்போம்.உறங்குங்கள்,அக்கா வந்து பார்த்து உச்சி முகர்வா.காலையில் பாருங்கள்!

    8 May 2012 11:52 //காலையில் வேலையில் இருப்பேன் இரவு வந்து வணக்கம் சொல்லுகின்ரேன்.கலை/யோகா ஐயா.

    ReplyDelete
  71. நல்லிரவு நேசன்.கொஞ்சமாவது பேசியது நிம்மதி!உறங்குங்கள்,நாளை சிந்திப்போம்!இப்போ போய் விட்டு பின்னர் வருவேன்!மகளைப் பார்க்க!!குட் நைட்!!!

    ReplyDelete
  72. நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும். நாளை சந்திப்போம்.குட் நைட்.

    ReplyDelete
  73. அவ வரமாட்டா,வரமாட்டா!வரமாட்டா!வரமாட்டா!வரமாட்டா!வரமாட்டா!வரமாட்டா!வரமாட்டா!வரமாட்டா!வரமாட்டா! நீ போய்ப் படு,கிழவா!

    ReplyDelete
  74. அப்பா.....பாத்துக்கொண்டிருந்தீங்களே.ஏன் ஏன் ஏன்....தெரியும்தானே.பிந்தித்தான் வருவன் வேலையால.பிறகு குளிப்பு,போன் எண்டு இன்னும் பிந்தும்.பிறகுதான் உங்களைப் பாக்க ஓடி வருவன்.

    என்னில இவ்வளவு பாசம் வைக்காதேங்கோ.பயமாயும் இருக்கு.எனக்குத் திரும்பவும் திரும்பவும் எதையும் இழக்கமுடியுமா எண்டு தெரியேல்ல.என் அதிஷ்டம் அப்பிடித்தான்.நீங்கள் கலை,நேசன்,கணேஸ்.ரெவரி எல்லாரும் எனக்குக் கிடைக்கமுடியாத பொக்கிஷங்கள்.அதுவும் நீங்களும் கலையும்....முற்றுப்புள்ளிக்குப் பக்கத்தில வச்ச தொடர்புள்ளிகள் போல.பாசத்தால கட்டிப்போட்டு அழவைக்கிறீங்கள் ரெண்டு பேரும் !

    ReplyDelete
  75. நேசன் சுகம்தானே.பதிவு போர்க்கலங்களில் எம் மலையக மக்கள் பட்ட பாட்டையும் சொல்கிறது.எத்தனை ’ரவி’ களின் வாழ்க்கைகள் வரலாறாய்ப்போனது.வலிகளைச் சுமக்கிறோம்.இறக்கிவிடுவோம் என்றுதான் நம்பியிருந்தோம்.பெருமூச்சின் நடுவில் பிசிறாகிப்போன நாற்றம்.எங்களுக்குதான் எல்லாம் !

    ReplyDelete
  76. கருவாச்சி வாலு இப்பிடி ஒரு கவிதை போடுமெண்டு எதிர்பார்க்கவே இல்லை.இப்படி ஒரு பாசம் சாத்தியமோ அப்பா.எப்பிடி.பாசங்களைப் பரீட்சித்துப் பார்க்கிற காலம் இது.தோத்துப்போய் ஒதுங்கியிருகிற என்னை ஈரமாக்கிறா காக்கா.சந்தோஷமா நனையிறன்.இதைவிடச் சொல்ல வரேல்ல !

    ReplyDelete
  77. காலை வணக்கம்,நேசன்!

    ReplyDelete
  78. நிறைய இழந்தாகி விட்டது ஹேமா... இனி இப்போது எங்களிடமிருந்து கிடைத்திருக்கும் அன்பையும் பாசத்தையும் எப்போதும் இழக்க மாட்டீர்கள். கருவாச்சி அழகா கவிதை வடிச்சா. என்னால கவிதை எழுத முடியலை. ஒரு கதை எழுதிடலாமெண்டு பாக்கறேன் கவிதாயினிக்காக...

    ReplyDelete
  79. வரலாற்றில் ஹிட்லர்,முசேலினி,சுலோபோடன் மிலேசிவிக்,கடாபி போன்றோரை குற்றவாளியாக்கி தண்டித்துவிட்ட அனைத்துலக சமுகம் .

    அந்த தலைவர்களை வழிநடத்திய அரச கரும முக்கிய பணியாளரை தப்பிக்க விடுவது ஏன் ?//

    அன்று முதல் இன்றுவரை நான் கேட்கும் கேள்வியும் இதேதான், கவர்னர் பதவி கொடுத்து வாழவைக்கிரார்கள் ம்ஹும்.

    ReplyDelete
  80. இனிய காலை மதிய மாலை வணக்கம் அண்ணா ,மாமா அக்கா ...

    ReplyDelete
  81. வணக்கம் அப்பா,நேசன்.காக்கா.பதிவு உப்புமடச்சந்தியில.ஆனால் நான் வேலைக்குப் போறேன்.பக்குவமாகப் பார்த்துக்கொள்ளுங்கோ.இன்னும் கொஞ்ச நேரம் இருப்பன்.வாங்கோ !

    ReplyDelete
  82. அண்ணா அக்காள் பதிவு போட்டு பாசத்தை வாரி இறைத்து விட்டு இருக்கங்கள் பாருங்க ...இன்னைக்கு ஒரே பாச பீலிங்க்ஸ் ....

    ReplyDelete
  83. ஹேமா said...

    வணக்கம் அப்பா,நேசன்.காக்கா.பதிவு உப்புமடச்சந்தியில.ஆனால் நான் வேலைக்குப் போறேன்.பக்குவமாகப் பார்த்துக்கொள்ளுங்கோ.////நீங்க பத்திரமா போயிட்டு வாங்கோ,மகளே!நாங்கள் பத்திரமா பாத்துக் கொள்ளுறம்!

    ReplyDelete
  84. இரவு வணக்கம் மாமா ,அண்ணா ,அக்கா ...



    எல்லாரும் நல்ல சுகம் ஆ இருக்க வேண்டுகிறேன் ...


    அண்ணா நீங்கள் அக்கவின்ர பதிவில் விடை பெருவீங்கன்னு சொன்னது ஒரு
    மாதிரியா இருக்கு ,,,,அப்புடுடிலாம் சொல்லாதிங்க அண்ணா இனிமேல் ...மாதம் ஒருப் பதவாது போட்டு எங்களோடு எப்போதும் இருக்கணும் அண்ணா நீங்கள் ...

    ReplyDelete
  85. மாமா இஞ்ச ரொம்ப மழை காற்று இருக்குது ,...நெட் யும் சரியா கிடைக்கிறது இல்லை ...


    அண்ணன் பதிவுக்கு வந்தாலும் தான் வருவேன் ...


    அக்காவும் பிந்தி தான் வருவாங்கள் ...


    அண்ணா பார்த்தாலும் மாமா பார்த்தாலும் சொல்லிவிடுங்கள் அக்கவிடமும் சொல்லிடுங்கள்


    எல்லாருக்கும் இனிய இரவு வணக்கம் டாட்டா ....

    ReplyDelete
  86. இரவு வணக்கம்,மருமகளே!அக்கா லேட்டாப் போனா,லேட்டாத் தான வரணும்?அப்புறம்,அண்ணாவுக்கு கொஞ்சம் சிரமமா இருக்கு போலிருக்கு.தொடங்கினத முடிச்சிடுவோம்னு பாக்குறார் போல!பதிவு போடாட்டியும் எல்லா வூட்டுக்கும் வருவேன்னு தான சொல்லியிருக்காரு?ஊருக்கு வந்து கூட பாக்குறேன்னாரே?கவலைப்படாதீங்க.எல்லாம் சரியாயிடும்!

    ReplyDelete
  87. அவ வரமாட்டா,வரமாட்டா!வரமாட்டா!வரமாட்டா!வரமாட்டா!வரமாட்டா!வரமாட்டா!வரமாட்டா!வரமாட்டா!வரமாட்டா! நீ போய்ப் படு,கிழவா!

    8 May 2012 13:43 //தருமியின் ஞாபகம் ஹீஈ

    ReplyDelete