31 May 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்!-60

உலாக்களில் பல விழாக்கண்டேன் உறங்கிய மனதுக்குள் நீ இருந்தாய் என் நிலவாக மறந்து போனாய் பின் பறந்து போனாய் !

இப்படி அவன் மனதில் நினைத்துவிட்டு!

வா சுகி போவம் .

"இருடா .உனக்கு எப்பவும் அவசரம் .அம்மாட்டக் காசு வாங்கியாரன் "

ஏன் ? அவிச்ச கடலை வாங்கவோ .வேண்டாம் .அதுதான் வீட்டில் மாமி செய்வாவே .

"இல்ல ராகுல் அது கச்சான் வாங்க இன்று அப்பாவிடம் காசு வேண்டினால் உனக்கு படம் பார்க்க பிறகு தரலாம் தானே"

" மெதுவாக பேசு ஓட்டவாய் "

அவள் அப்போதும் ஒரு குழந்தையைப்போல தான் !
குமரி என்றாலும் ஏனோ அவள் தான் அவனின் உண்மையான நேசிப்புக்கு இருக்கும் ஒருந்தியாக அங்கே இருந்தால்!

ராகுல் படம் பார்க்க தியேட்டரில் இருக்க அவளின் உண்டியல் காசுதான் டிக்கட் வழியாக வெளியே போகும்.

கடன் வேண்டும் போதெல்லாம் அவளுக்கு பள்ளிக்கூடம் புத்தகப்பை தூக்க வேண்டும் . அவளுக்கு கைவீசி வரணும் என்ற ஆசை.

அதையும் விட பிறந்த நாளில் இருந்து அவள் பாரம் ஏதும் சுமக்கக்கூடாது என்று எல்லாரும் அக்கறையோடு இருப்பது அவள் ஒருத்திக்குத் தான் .

எல்லாரும் அந்தளவு மனமும் குணமும் அவளுக்கு .மென்மையான மச்சாள் சுகி!

காசு வேண்டும் போது ராகுல் சொல்லுவான் .

"உன் பெரியப்பாவிடம் சீதனம் வாங்கி உனக்குத் தான் தருவேன் சரியா "

"அப்ப நீ உழைக்க மாட்டியோ?

யார் சொன்னது இல்லை என்று!

உங்க அப்பா சுருட்டுக்கடையில் கல்லாப்பெட்டியில் குந்தணும் என்று அடம்பிடிக்கின்றார் .

இதோ சின்ன மச்சாள் நித்திரை என்று அடம்பிடிக்கின்றாள் .

நீ படம் பார்த்துக் கெட்டுப்போறன் என்று ஒருபக்கம், கடையில் உங்கப்பா புலம்பல்!

யுத்தம் என்று சொல்லி என்ற ஐயா என்னை இங்க அனுப்பினதும்.

நான் படும் பாடும் உன்னைத் தவிர யாருக்குத் தெரியும். .

"சரிசரி மூஞ்சையை தொங்கப் போடாத "ராகுல்.

முதலில் பெரஹரா பார்க்கணும்


மிச்சம் எல்லாம் நாளை மறுநாள் பள்ளிக்கூடம் போகும் போது பேசுவோம் . இல்லை ஆற்றில் குளிக்கும் போதும் பேசலாம்.குண்டா.


இனி பள்ளிக்கூடம் நான் கூட்டி வரமாட்டன் .

இந்தா வாரா உன்ற அக்காளிடம் புத்தகப்பையை கொடுத்துவிடு.

ஏன் ?துரைக்கு யாரவது லைன் போடுகினமோ பள்ளிக்கூடம் போகும் வழியில் .

இல்ல அந்தச் சீலா உங்க அப்பாவிடம் பந்தம் பிடிக்கின்றாள் .

நான் பசங்க கூடஅதிகம் பகிடி பண்ணுகின்றேன் என்று.

அந்த அக்காள் சொன்னாவோ ஓம் நேற்ற உன்ற அப்பா சொல்லித்திட்டியது எனக்கு "

"சுருட்டுக்குப் பாணி போடத் தெரியல போறவார பெட்டைகளுக்கு பகிடியா பண்ணுகின்றாய் கிரகம்."

அந்த கண்ணாடி அவள்தான் என்று நினைக்கின்றேன் .உங்க அக்காளின் புதுத் தோழி! அவாதானே.

ரெண்டு பேருக்கும் பாரன் காட்டுறன் பங்கஜம் பாட்டியின் பேரன் ஆர் என்று.

"உன்ற பாட்டி ஊரில். எங்க அப்பாவை இங்க ஒன்றும் செய்ய முடியாது சொல்லு சுகி உங்க சுருட்டுக்கடை வேலைக்காரனிடம் "

மாமியின் பெரியதங்கை மகள் இவளுக்கு அதிகம் நினைப்பு அவர் அப்பா செல்லன் மாமா கடையில் அவர் சொல்லும் வேலை எல்லாம் ராகுல் செய்வதால் .தங்க வீட்டிற்கு வந்து விடுவேனா உறவு கொண்டாடிக்கொண்டு என்று.

சுகி இவங்க அப்பாவும் நானும் உங்க அப்பாவிடம் சுருட்டுக்கடையில் ஒரே வேலைக்காரங்கள் தான் .

அவர் கல்லாப்பெட்டியில் இருக்கலாம் ஆனால் நான் எல்லாவேலையும் செய்வேன் வெள்ளை வேட்டியில் ஊத்தைபடக்கூடாது என்று இருக்கும் ஆள் இல்லை .


சரிசரி உன்ற தாத்தா பெருமையை சொல்ல வேண்டாம் ."

வா இந்த வீதியால் போகும் பெரஹரா பார்ப்போம்.

வீதியில் புத்தன் உலா வர விழிகளுக்கு வர்ணஜாலம் காட்டும் விளக்கு வெளிச்சம் பலர் போகும் வழிகளில் அதிசயமாக இந்த உலாவைப் பார்க்கும் சிலருக்கு .

தங்கள் இணைக்குயில்கள் வந்தார்களா ,என்றே எட்டிப்பார்ப்பதும் காத்திருப்பதாக இருக்கும் .

கிராமத்தில் இருந்து பலர் வந்து இருப்பார்கள் தங்கள் வீட்டுப் பெரியவர்களுடன் .

இதில் ஊரில் பேசமுடியாத பலருக்கு இந்த பெரஹரதான் வழிகொடுக்கும் .

சில சகோதரமொழியில் இருப்போருக்கும் தாய்மொழிபேசுவோருக்கும் ஜொல்லு விடும் வீதி இது . சிலர் சில்மிச வேட்டைக்கு இருட்டு அடிவிழும் வீதியும் இதுவாகத்தான் இருக்கும்.

அந்தளவுக்கு இங்கே அதிகமானவர்கள் வீதியுலாவை கண்டு ரசிப்பார்கள்!

வீதியில் வரும் போது தான் தென்னக்கோன் தாத்தா வந்தார்.

அவர் பேர்த்தி அனோமா போனபின் செல்லன் மாமாவோடு ஏற்பட்ட மனக்கசப்பால் வீதியில் கண்டால் ராகுலோடு பேசுவார் .

ஆனால் அவரும் கல்கமுவை வாசியாக விட்டார் .இந்த விழாவில் அவரின் சின்னமகளின் சின்னப் பேர்த்தி குசுமா கண்டியன் நடனம் ஆடிவருவாள் .

அவளுக்கும் அனோமாவிற்கும் ஒரு வயது இளமை.

செல்வம் மாமா போனபின் அனோமாவிற்கு பதுளையில் இருந்து கடிதம் போடும் ஒரே ஒரு தோழி அவள்தான் .

இவளைப்பார்க்கும் போதெல்லாம் ராகுலுக்கு இப்போது அனோமா எப்படி எல்லாம் வளர்ந்து இருப்பாள் என்று நினைக்க மட்டுமே முடியும் !

வீட்டில் யாரும் சேர்க்காத உறவாகி அவர்களும் வெளிநாடு போனபின் மறந்த உறவாகிப்போனவர்கள் நினைப்பை ஏதாவது ஒரு சந்திப்புத்தானே சிந்திக்க வைக்குது .

அப்போது தான் தென்னக்கோன் தாத்தா சொன்னார்.

இதில் சுகியைத் தவிர யாருக்கும் தென்னக்கோன் தாத்தாவின் கதையும் தெரியாது, மொழியும் புரியாது.

தென்னக்கோன் தாத்தா ராகுலோடு எப்போதும் சகோதரமொழியில் தான் கதைப்பார் .

காரணம் நல்லா மொழிகற்கின்றேனா என்று கண்டு பிடிக்கத்தான் .அவர் தான் அன்று அந்த விசயத்தைச் சொன்னார்! பெரஹராவுக்கு சந்தோஸத்தோடு போனவன் சிந்திக்க வேண்டியவன் ஆகினான் ராகுல்!

  தொடரும்..........

 ///// பகிடி- ஜாலி
கச்சான்...-வேர்க்கடலை
லைன்.. நூல்விடுதல்/நோக்குதல்!
சீதனம்- வரதட்சனை!
கல்கமுவ  இலங்கையில் ஒரு நகரம் .
துரை-மரியாதை நிமித்தம் தோட்டத்தொழிலாளிகள் பேசுவது /சார் போல

91 comments:

  1. இரவு வணக்கம்,நேசன்!கோப்பி ரெடியா?உங்கள் தங்கை,உப்புமடச் சந்தியில் நிண்டா.கொஞ்ச நேரமாக் காணேல்ல.சொல்லயில்லை எண்டு கத்துவா!

    ReplyDelete
  2. துரை---- என்றால் மேலதிகாரி என்றும் பொருள்படும்.

    ReplyDelete
  3. வணக்கம் யோகா ஐயா நலம்தானே பால்க்கோப்பி ரெடி உப்புமடம் இரவு போறன் கொஞ்சம் உடரட்டை யாழ்தேவி வேகம் எடுக்கனும் இருப்பது பாரிஸ் டிவீயீல்!ஹீஈஈ

    ReplyDelete
  4. வணக்கம் நேசன் அண்ணா! நலமா? எனக்கும் கோப்பி உண்டா?

    ReplyDelete
  5. துரை---- என்றால் மேலதிகாரி என்றும் பொருள்படும்.

    31 May 2012 10:53 // அதுவும் சரிதான்! நன்றி

    ReplyDelete
  6. வாங்கோ மணியத்தாருக்கு இல்லாத கோப்பியா! தாரலமாக!

    ReplyDelete
  7. வணக்கம் மணிசார் முதலில்!

    ReplyDelete
  8. அய்!!!!!!!!!!!!!!கனகா அக்கா,ஹி!ஹி!ஹி!!!!

    ReplyDelete
  9. அய்!!!!!!!!!!!!!!கனகா அக்கா,ஹி!ஹி!ஹி!!// நல்ல நடிகை சேர்ந்த கூட்டத்தால் இப்படி ஆகிவிட்டா!ம்ம்ம்

    ReplyDelete
  10. தனிமரம் said...

    வணக்கம் யோகா ஐயா நலம்தானே பால்க்கோப்பி ரெடி உப்புமடம் இரவு போறன் கொஞ்சம் உடரட்டை யாழ்தேவி வேகம் எடுக்கனும் இருப்பது பாரிஸ் டிவீயீல்!ஹீ!////ஆறுதலாப் போங்க.கலர் காட்டியிருக்கிறா,மகள் கலா உபயமாம்.ஹ!ஹ!ஹா!!!!

    ReplyDelete
  11. முதலில் என்னுடைய ஸ்பெஷல் நன்றியைப் பிடியுங்கோ அண்ணா! எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு - முத்துநகையே! எவ்வளவு கேட்டாலும் அலுக்காது!

    இப்போது நான் வீட்டில் நிற்பதால், வூஃபரில் முத்துநகையே முழங்குது!

    மிக்க நன்றி அண்ணா இந்தப் பாட்டுக்கு!

    கனபேர் நினைக்கிற மாதிரி இதுக்கு மியூசிக் இளையராஜா இல்லை!

    தேனிசைத் தென்றல் தேவா :-)))

    ReplyDelete
  12. இன்று வரை எனக்கு இந்தப் பெரஹரா பார்க்கக் கிடைக்கவில்லை,ஹும்!

    ReplyDelete
  13. அவர் பேர்த்தி அனோமா போனபின் செல்லன் மாமாவோடு ஏற்பட்ட மனக்கசப்பால் வீதியில் கண்டால் ராகுலோடு பேசுவார் .////////

    அண்ணா அந்த ர் ஐ எடுத்துவிடுங்கோ!

    ReplyDelete
  14. முதலில் என்னுடைய ஸ்பெஷல் நன்றியைப் பிடியுங்கோ அண்ணா! எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு - முத்துநகையே! எவ்வளவு கேட்டாலும் அலுக்காது!

    இப்போது நான் வீட்டில் நிற்பதால், வூஃபரில் முத்துநகையே முழங்குது!

    மிக்க நன்றி அண்ணா இந்தப் பாட்டுக்கு!

    கனபேர் நினைக்கிற மாதிரி இதுக்கு மியூசிக் இளையராஜா இல்லை!

    தேனிசைத் தென்றல் தேவா :-)))

    31 May 2012 10:59 // உண்மையில் அது ராஜாவின் தவறு இல்லை ஊடக மேதைகள் ஒலி/ஒளியில் இருப்போர் சொல்லணும்!ம்ம் ஆனாலும் இது தேவாவின் முத்துக்களில் ஒன்று எனக்கு எப்போதும் பிடிக்கும் மணிசார்! இந்தப்பாட்டுக்கு தனியாக கதையே இருக்கு அகல்யா அன்பு இல்லம் போனது போல ஆனால் பேசும் நேரம் குறைவாக இருப்பதால் இதில் திணித்துவிட்டேன்!ஹீஈஈஇ

    ReplyDelete
  15. வீட்டில் யாரும் சேர்க்காத உறவாகி அவர்களும் வெளிநாடு போனபின் மறந்த உறவாகிப்போனவர்கள் நினைப்பை ஏதாவது ஒரு சந்திப்புத்தானே சிந்திக்க வைக்குது .////உண்மை தான்,நேசன்!சில நேரம் காழ்ப்பும் இருக்கும்!

    ReplyDelete
  16. இன்று வரை எனக்கு இந்தப் பெரஹரா பார்க்கக் கிடைக்கவில்லை,ஹும்!

    31 May 2012 11:00 // நான் கொழும்பு கண்டி என பார்த்து இருக்கின்றேன்!யோகா ஐயா!

    ReplyDelete
  17. அண்ணா அந்த ர் ஐ எடுத்துவிடுங்கோ!// மீண்டும் எழுத்துப்பிழையா பார்க்கின்றேன் மணிசார்! அப்ப ஹேமா வருவா கருக்குமட்டையோடு!இன்று!

    ReplyDelete
  18. வீட்டில் யாரும் சேர்க்காத உறவாகி அவர்களும் வெளிநாடு போனபின் மறந்த உறவாகிப்போனவர்கள் நினைப்பை ஏதாவது ஒரு சந்திப்புத்தானே சிந்திக்க வைக்குது .////உண்மை தான்,நேசன்!சில நேரம் காழ்ப்பும் இருக்கும்!// ஆனாலும் அந்த விடயத்தை மறந்து சேர்க்கலாம் தானே அவர்கள் அடுத்த தலைமுறைக்காக!ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  19. பேர்த்தி/பேத்தி இரண்டுமே சொல்லலாம்,பிழை இல்லை!

    ReplyDelete
  20. உங்கள் தங்கை வருவதாகச் சொன்னா!நெட் மக்கர் பண்ணுகிறதோ?

    ReplyDelete
  21. பேர்த்தி/பேத்தி இரண்டுமே சொல்லலாம்,பிழை இல்லை!// அது பாசம் பொழியும் உறவைப்பொறுத்து யோகா ஐயா படிக்காத பாட்டிமார் என்ன இலக்கணம் கற்ற பண்டிதர்களோ பேச்சு வழக்கில் எல்லாம் சரியா பேச அது உணர்வு! !ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  22. மாமா ஆஅ வந்துட்டேன்

    ReplyDelete
  23. உங்கள் தங்கை வருவதாகச் சொன்னா!நெட் மக்கர் பண்ணுகிறதோ?// இருக்கலாம் யோகா ஐயா பகல் பார்த்தேன் நலம் அது போதும்!ம்ம்ம் இந்தப்பாட்டு புரிஞ்சா அண்ணாவின் ஆசை போதும்!ம்ம் அழ கண்ணீர் இல்லை இனியும்! சில உறவுகளுக்காக உயிர் போன பின்!

    ReplyDelete
  24. அட ஆயுசு நூறு தாயி நம்ம உறவு வாழும் தொடர்கதை பாட்டே சொல்லுது!ம்ம்ம்

    ReplyDelete
  25. உங்கள் தங்கை வருவதாகச் சொன்னா!நெட் மக்கர் பண்ணுகிறதோ?///


    மாமா நான் தான் முதலில் வந்திணன் ....வரும் போது சீரோ கமெண்ட்ஸ் மாமா ...
    ஆஆஆ எண்டு கத்தாமல் பதிவை படிச்சிட்டு வந்திணன் மாமா ...


    அண்ணனா எம்மா பெரிய பதிவு ....

    ReplyDelete
  26. கலை said...

    மாமா ஆஅ வந்துட்டேன்////வந்துட் டீங்க சரி.படிங்க மொதல்ல,பாட்டுக் கேளுங்க!உங்களுக்குத் தான் இன்னைக்கி டெடிகேட் பண்ணியிருக்காரு,அண்ணா!

    ReplyDelete
  27. கலை said...

    உங்கள் தங்கை வருவதாகச் சொன்னா!நெட் மக்கர் பண்ணுகிறதோ?///


    மாமா நான் தான் முதலில் வந்திணன் ....வரும் போது சீரோ கமெண்ட்ஸ் மாமா ...
    ஆஆஆ எண்டு கத்தாமல் பதிவை படிச்சிட்டு வந்திணன் மாமா ...


    அண்ணனா எம்மா பெரிய பதிவு ...///இப்ப என்ன,கோப்பி தான கேக்குறீங்க?இந்தாங்க,குடிங்க!ஹ!ஹ!ஹா!!!!!

    ReplyDelete
  28. அண்ணனா எம்மா பெரிய பதிவு ....//ம்ம் என்ன செய்ய இடையில் நிறுத்த முடியாது கலை ஆனால் போகவும் வேணும் வேலை முக்கியம் இங்கு! அதுதான்! ம்ம் பார்க்கலாம் தனியாக மின்நூல் போட முடியுமா என்று பெரியவர்கள் சொல்லட்டும்!

    ReplyDelete
  29. /வந்துட் டீங்க சரி.படிங்க மொதல்ல,பாட்டுக் கேளுங்க!உங்களுக்குத் தான் இன்னைக்கி டெடிகேட் பண்ணியிருக்காரு,அண்ணா!///


    படித்துப் போட்டிணன் மாமா ..ஆனால் பாட்டுக் கேக்கமுடியல மாமா ..கொஞ்சம் ஓபன் ஆறது இல்லை ..நெட் கொஞ்சம் மக்கர் பண்றது ....

    ReplyDelete
  30. மாமா ஆஅ வந்துட்டேன்////வந்துட் டீங்க சரி.படிங்க மொதல்ல,பாட்டுக் கேளுங்க!உங்களுக்குத் தான் இன்னைக்கி டெடிகேட் பண்ணியிருக்காரு,அண்ணா!

    31 May 2012 11:24 // ஹீ பாட்டை ஆழ்ந்து அனுபவித்து ரசித்துக் கேட்டால் தான் அதன் அர்த்தம் உள்ளீடு புரியும் ஐயா போகிற போக்கில் சூப்பர் என்றால் பொதுவில் ஒன்றும் பேசமுடியாது ஏன்னா வேட்டி எல்லாரும் அழகாய் கட்டுவார்கள் ஆனால் விளக்கு அணையாமல் பார்க்கணும் குத்துவிளக்கு வெறும் நெருப்பாக இருக்கக்கூடாது!ம்ம் ஐயா எனபதால் மனம் விட்டுச் சொல்லுறன் ஏன்னா நாங்க இப்ப அட்வைஸ் சொல்லும் காலத்தில் இல்லையே!ம்ம்

    ReplyDelete
  31. தனிமரம் said...
    அட ஆயுசு நூறு தாயி நம்ம உறவு வாழும் தொடர்கதை பாட்டே சொல்லுது!ம்ம்ம்////



    தாயி யா ...மாமா என்ன அண்ணான் இப்போலாம் தாயி தாயி எண்டு சொல்லுறாங்கள் .....


    பாட்டு நாளைக் கேப்பேன் அண்ணா ..


    மாங்குயிலே பூங்குயிலே பாட்டு இன்டைக்கு டவுன்லோட் பண்ணினேன் அண்ணா உங்கட ப்லோக்கில்.....

    ReplyDelete
  32. கலை said...

    படித்துப் போட்டன் மாமா ..ஆனால் பாட்டுக் கேக்கமுடியல மாமா ..கொஞ்சம் ஓபன் ஆறது இல்லை ..நெட் கொஞ்சம் மக்கர் பண்றது//////....சரி,இன்னிக்கு கேக்காட்டி என்ன,நாளைக்கிக் கேளுங்க!

    ReplyDelete
  33. மாமா ஆஅ வந்துட்டேன்////வந்துட் டீங்க சரி.படிங்க மொதல்ல,பாட்டுக் கேளுங்க!உங்களுக்குத் தான் இன்னைக்கி டெடிகேட் பண்ணியிருக்காரு,அண்ணா!.///


    ஹைஈஈஈஈஈஈஈஈஇ எனக்கு டேடிகட் ஆ ...ஜாலி ஜாலி ....மிக்க நன்றி அண்ணா ...

    பாட்டுக் கேக்க முடியல அண்ணா ..நாளை கேக்குறேன் ....

    ReplyDelete
  34. படித்துப் போட்டிணன் மாமா ..ஆனால் பாட்டுக் கேக்கமுடியல மாமா ..கொஞ்சம் ஓபன் ஆறது இல்லை ..நெட் கொஞ்சம் மக்கர் பண்றது ....

    31 May 2012 11:31 // ஆஹா சில நேரத்தில் இணையம் இப்படித்தான் மக்கர் பண்ணும் இதையத்துளை போல கொஞ்சம் ஜோசித்தால் இனிமையாக நாளையும் கேட்கலாம் பாட்டை ஆனால்!ம்ம் அவசரம் உலகில் என்ன செய்ய தாயி !

    ReplyDelete
  35. கலை said...

    தனிமரம் said...
    அட ஆயுசு நூறு தாயி நம்ம உறவு வாழும் தொடர்கதை பாட்டே சொல்லுது!ம்ம்ம்////
    தாயி யா ...மாமா என்ன அண்ணான் இப்போலாம் தாயி தாயி எண்டு சொல்லுறாங்கள்.////தமிழ் நாட்டுல வயசுக்கு வந்த,பெரிய பொண்ணுங்கள தாயீ ன்னு மருவாதியா,பாசமா கூப்புடுவாங்க,தெரியாது?

    ReplyDelete
  36. ம்ம் பார்க்கலாம் தனியாக மின்நூல் போட முடியுமா என்று பெரியவர்கள் சொல்லட்டும்!///


    அண்ணா மின் நூல் போடுங்கள் அண்ணா ....நல்லா இருக்கும் ...

    மாமா நீங்க சொல்லுங்கோளேன் அண்ணா கிட்ட அப்போ தான் அண்ணா கேப்பாங்க

    ReplyDelete
  37. கலை said...
    மாங்குயிலே பூங்குயிலே பாட்டு இன்டைக்கு டவுன்லோட் பண்ணினேன் அண்ணா உங்கட ப்லோக்கில்.....////இப்ப கேட்டமா?இல்ல கேட்டமா?அக்காவை வம்புக்கு இழுக்காட்டி செரிக்காதோ?????

    ReplyDelete
  38. கலை said...

    அண்ணா மின் நூல் போடுங்கள் அண்ணா ....நல்லா இருக்கும் ...

    மாமா நீங்க சொல்லுங்கோளேன் அண்ணா கிட்ட அப்போ தான் அண்ணா கேப்பாங்க.///நான் ரெடி!கொஞ்சம் எழுத்துக்களை(பிழை)சரி செய்து போடலாம்!பார்ப்போம்.

    ReplyDelete
  39. தாயி யா ...மாமா என்ன அண்ணான் இப்போலாம் தாயி தாயி எண்டு சொல்லுறாங்கள் ..// அது ஒன்றும் இல்லை கலை என் பாட்டி ஒரு கிராமத்தவள் யார் என்ன படிச்சாலும் பாசமாக் அப்படிச்சொல்லும் இந்த புதிய் தலைமுறை அது லூசு என்று சொல்லும் என்ன செய்ய அது கஸ்ரப்பட்டு பேரன்/பேர்த்திகளைப்பார்த்துச்சு .ஆனால் விதி போர் அந்த பாட்டியை வில்லியாக பார்க்க வைச்சுட்டுது/ம்ம் ஆனாலும் என்னோட மகராசா/ தாயி அவள் என்றுதான் தொலைபேசியில் வரும் வந்தால் வீடு அழுவாச்சி காவியம் தான்!ஹீஈஈஈ

    ReplyDelete
  40. தமிழ் நாட்டுல வயசுக்கு வந்த,பெரிய பொண்ணுங்கள தாயீ ன்னு மருவாதியா,பாசமா கூப்புடுவாங்க,தெரியாது?///


    இல்ல மாமா ....சென்னை ல லாம் தாயி சொன்ன அம்மாவை தான் அப்புடி சொல்லுவாங்க எண்டு சொல்லுவம் ...

    ஆனால் திருநெல்வேலியில் முன்னாடி லாம் குட்டி தங்கைகளை பாசமாக தாயி எண்டு தான் அண்ணாக்கள் அழைப்பிணம் ...ஆனால் அது அப்போ ..இப்போலாம் யாருமே தாயி சொள்ளமாட்டன்களே...

    யாரவது ரொம்ப செட்டை செய்தால் தான் தாயி கொஞ்சம் அமைதியா இருங்கோ அப்படி சொல்லுனம் ...

    ReplyDelete
  41. அண்ணா மின் நூல் போடுங்கள் அண்ணா ....நல்லா இருக்கும் ...

    மாமா நீங்க சொல்லுங்கோளேன் அண்ணா கிட்ட அப்போ தான் அண்ணா கேப்பாங்க

    31 May 2012 11:38 //பார்ப்போம் முடிவில் கலை இன்னும் வேகமாக வரும்! தொடர் ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  42. அது ஒன்றும் இல்லை கலை என் பாட்டி ஒரு கிராமத்தவள் யார் என்ன படிச்சாலும் பாசமாக் அப்படிச்சொல்லும் இந்த புதிய் தலைமுறை அது லூசு என்று சொல்லும் என்ன செய்ய அது கஸ்ரப்பட்டு பேரன்/பேர்த்திகளைப்பார்த்துச்சு .ஆனால் விதி போர் அந்த பாட்டியை வில்லியாக பார்க்க வைச்சுட்டுது/ம்ம் ஆனாலும் என்னோட மகராசா/ தாயி அவள் என்றுதான் தொலைபேசியில் வரும் வந்தால் வீடு அழுவாச்சி காவியம் தான்!ஹீஈஈஈ///


    ஆமாம் அண்ணா ...நானும் என் அம்மாவின் பாட்டியை லூசு எண்டு சொல்லி கிண்டல் செய்வம் சின்ன வயதில் ...ஆனா பூட்டி எங்கட மேல் எல்லாம் உயிர்.....இப்போ வருந்துறேன் ஆனால் அவவை உயிரோடு இல்லை ....

    ReplyDelete
  43. மாமா நீங்க சொல்லுங்கோளேன் அண்ணா கிட்ட அப்போ தான் அண்ணா கேப்பாங்க.///நான் ரெடி!கொஞ்சம் எழுத்துக்களை(பிழை)சரி செய்து போடலாம்!பார்ப்போம்.

    31 May 2012 11:41 // ஹீ அந்த் பிழையைத் திருத்தும் பொறுப்பே ஐயாவிடம் விடுவேன் ஆனால் கருத்து ஒரு சிலருக்காக மாற்றச் சொன்னால் நான் இதை தாங்க மாட்டன் ஏன்னா இது 10 வருசமாக பறனில் இருந்த கதை!ம்ம்ம் முடிவில் பேசலாம்!

    ReplyDelete
  44. கலை said...

    தமிழ் நாட்டுல வயசுக்கு வந்த,பெரிய பொண்ணுங்கள தாயீ ன்னு மருவாதியா,பாசமா கூப்புடுவாங்க,தெரியாது?///


    இல்ல மாமா ....சென்னை ல லாம் தாயி சொன்ன அம்மாவை தான் அப்புடி சொல்லுவாங்க எண்டு சொல்லுவம் ...

    ஆனால் திருநெல்வேலியில் முன்னாடி லாம் குட்டி தங்கைகளை பாசமாக தாயி எண்டு தான் அண்ணாக்கள் அழைப்பினம் ...ஆனால் அது அப்போ ..இப்போல்லாம் யாருமே தாயி சொல்லமாட்டா ங்களே...

    யாரவது ரொம்ப சேட்டை செய்தால் தான் தாயி கொஞ்சம் அமைதியா இருங்கோ அப்படி சொல்லுவினம்.////பாரதிராஜா படங்கள்ள சொல்லுறாங்களே?அவர் படமே கிராமத்தை தானே கண்ணு முன்னாடி நிறுத்திச்சு,அப்போ!

    ReplyDelete
  45. Yoga.S. said...
    கலை said...
    மாங்குயிலே பூங்குயிலே பாட்டு இன்டைக்கு டவுன்லோட் பண்ணினேன் அண்ணா உங்கட ப்லோக்கில்.....////இப்ப கேட்டமா?இல்ல கேட்டமா?அக்காவை வம்புக்கு இழுக்காட்டி செரிக்காதோ?????///


    மாமா இப்போ எதுக்கு எதுக்குன்ரன் இந்த கோவம் ...

    உங்கட மகளை பற்றி நா ஒரு வார்த்தை கூட பேசளையாக்கும் ...



    பாருங்கோ கவிதாயினி நான் மறந்தாலும் உங்க அப்பா மறக்க மாட்டினம் ....

    ReplyDelete
  46. ஆமாம் அண்ணா ...நானும் என் அம்மாவின் பாட்டியை லூசு எண்டு சொல்லி கிண்டல் செய்வம் சின்ன வயதில் ...ஆனா பூட்டி எங்கட மேல் எல்லாம் உயிர்.....இப்போ வருந்துறேன் ஆனால் அவவை உயிரோடு இல்லை ....

    31 May 2012 11:47 //ம்ம் எனக்கும் தான் ஆனால் சின்னப்பாட்டி இன்றும் வருவா லைனில் ஊரில் இருக்கின்றா ஆனால் என்னால்தான் போகா முடியாத நிலை!ம்ம் விதி!

    ReplyDelete
  47. தனிமரம் said...

    மாமா நீங்க சொல்லுங்கோளேன் அண்ணா கிட்ட அப்போ தான் அண்ணா கேப்பாங்க.///நான் ரெடி!கொஞ்சம் எழுத்துக்களை(பிழை)சரி செய்து போடலாம்!பார்ப்போம்.

    31 May 2012 11:41 // ஹீ அந்த் பிழையைத் திருத்தும் பொறுப்பே ஐயாவிடம் விடுவேன் ஆனால் கருத்து ஒரு சிலருக்காக மாற்றச் சொன்னால் நான் இதை தாங்க மாட்டன் ஏன்னா இது 10 வருசமாக பறனில் இருந்த கதை!ம்ம்ம் முடிவில் பேசலாம்!////எழுத்துப் பிழை திருத்துவதுடன்,வசன அமைப்புகள் கொஞ்சம் மாற்ற வேண்டும்,ஆனால் அடிப்படை மாறாது,மாற்றவும் கூடாது,முடியாது!மொத்தத்தில் எழுத்து நடை அப்படியே இருக்கும்.

    ReplyDelete
  48. யாரவது ரொம்ப சேட்டை செய்தால் தான் தாயி கொஞ்சம் அமைதியா இருங்கோ அப்படி சொல்லுவினம்.////பாரதிராஜா படங்கள்ள சொல்லுறாங்களே?அவர் படமே கிராமத்தை தானே கண்ணு முன்னாடி நிறுத்திச்சு,அப்போ!

    31 May 2012 11:48 // ம்ம் ஆனால் அப்போது உண்மைப்பாசம் இருந்திச்சே யோகா ஐயா! ஈரோவும்/பவுண்சும் தெரியாதே!ம்ம்ம்

    ReplyDelete
  49. ஹீ அந்த் பிழையைத் திருத்தும் பொறுப்பே ஐயாவிடம் விடுவேன் ஆனால் கருத்து ஒரு சிலருக்காக மாற்றச் சொன்னால் நான் இதை தாங்க மாட்டன் ஏன்னா இது 10 வருசமாக பறனில் இருந்த கதை!ம்ம்ம் முடிவில் பேசலாம்!///


    அண்ணா நாந்தேன் புத்தகத்துக்கு வரவேர்ப்புரை எழுதுவனாக்கும் .....

    மாமா தெளிவுரை எழுதுவாங்க என் வரவேர்ப்புரைக்கு ....
    (சும்மா சொன்னிணன் அண்ணா ...)

    மின்னூல் புத்தகம் வந்தால் ரொம்ப சந்தோசப் படுவிணன் அண்ணா ...

    துஷி அண்ணா வினர மின் நூல் புத்தகம் புடிச்சி இருந்தது ,,,,

    ReplyDelete
  50. கலை said.....மாமா இப்போ எதுக்கு எதுக்குன்ரன் இந்த கோவம்? ...

    உங்கட மகளை பற்றி நான் ஒரு வார்த்தை கூட பேசலையாக்கும் ...

    பாருங்கோ கவிதாயினி நான் மறந்தாலும் உங்க அப்பா மறக்க மாட்டினம்.///போட்டுக் குடுக்குறீங்களோ????நம்பிட்டாலும்??????????????????????

    ReplyDelete
  51. தனிமரம் said...

    யாரவது ரொம்ப சேட்டை செய்தால் தான் தாயி கொஞ்சம் அமைதியா இருங்கோ அப்படி சொல்லுவினம்.////பாரதிராஜா படங்கள்ள சொல்லுறாங்களே?அவர் படமே கிராமத்தை தானே கண்ணு முன்னாடி நிறுத்திச்சு,அப்போ!

    // ம்ம் ஆனால் அப்போது உண்மைப்பாசம் இருந்திச்சே யோகா ஐயா! ஈரோவும்/பவுண்சும் தெரியாதே!ம்ம்ம்////உண்மைதான்.எடை போடுவதே "அது" தானே????

    ReplyDelete
  52. கலை said...

    ஹீ அந்த் பிழையைத் திருத்தும் பொறுப்பே ஐயாவிடம் விடுவேன் ஆனால் கருத்து ஒரு சிலருக்காக மாற்றச் சொன்னால் நான் இதை தாங்க மாட்டன் ஏன்னா இது 10 வருசமாக பறனில் இருந்த கதை!ம்ம்ம் முடிவில் பேசலாம்!///


    அண்ணா நாந்தேன் புத்தகத்துக்கு வரவேற்புரை எழுதுவனாக்கும் .....

    மாமா தெளிவுரை எழுதுவாங்க என் வரவேற்புரைக்கு ....
    (சும்மா சொன்னன் அண்ணா ...)////இப்பவே தெளிவுரை பாத்து சிரிக்கிறாங்க!!!!!

    ReplyDelete
  53. மாமா நான் கிளம்பட்டா ...தூக்கம் வருது ,,,,

    நாளை சந்திப்பம் மாமா ,,,,டாட்டா


    அண்ணா டாட்டா

    கவிதையினி ககாகக்கா வணக்கம் அண்ட் டாட்டா


    ரேரீ அண்ணா வணக்கம் அண்ட் டாட்டா


    மகி அண்ணா வணக்கம் டாட்டா

    ReplyDelete
  54. பாருங்கோ கவிதாயினி நான் மறந்தாலும் உங்க அப்பா மறக்க மாட்டினம் ....// ஹீ அவா கோபமாக வேலைக்கு போய் விட்டா என்னோட கோபமாக நான் அவங்களுக்கு/ சிங்களவருக்கு சாதகம் போல சிந்திக்கின்றேன் என்று சொல்லிவிட்டுப்போய்விட்டா ஆனால் நம் கலை அழிய நாமும் துணைபோகின்றோம் என்ற உண்மையைச்சொன்னால் எல்லாரும் வீட்டைவிட்டு ஓடு என்றால் நான் சந்தியில் நிற்பேன் ஏன் என்றால் தனிமரம் அப்படித்தான் எனக்கு நம்ம விடயம் பேசணும் அதுதான் முக்கியம் இப்போது!மதமும் மொழியும் இல்லை எனக்கு சண்டை போட கலைமுக்கியம் போல இருக்கு என் தேடலுக்கு!ம்ம்ம்

    ReplyDelete
  55. கலை said...

    மாமா நான் கிளம்பட்டா ...தூக்கம் வருது ,,,,////ஓமடா!நான் கூட மணியப் பாக்கல.மன்னிச்சிடுங்க!நல்ல சந்தோஷமா தூங்குங்க!அக்கா வந்து ரெண்டு வீட்டிலையும் பாப்பாங்க!நல்லிரவு!!!குட் நைட்!!!

    ReplyDelete
  56. ம்ம் ஆனால் அப்போது உண்மைப்பாசம் இருந்திச்சே யோகா ஐயா! ஈரோவும்/பவுண்சும் தெரியாதே!ம்ம்ம்////உண்மைதான்.எடை போடுவதே "அது" தானே????

    31 May 2012 11:56 // ம்ம்ம் என்ன செய்வது யுத்தம்!ம்ம்ம்

    ReplyDelete
  57. அண்ணா நாந்தேன் புத்தகத்துக்கு வரவேர்ப்புரை எழுதுவனாக்கும் .....

    மாமா தெளிவுரை எழுதுவாங்க என் வரவேர்ப்புரைக்கு ....
    (சும்மா சொன்னிணன் அண்ணா ...)

    மின்னூல் புத்தகம் வந்தால் ரொம்ப சந்தோசப் படுவிணன் அண்ணா ...

    துஷி அண்ணா வினர மின் நூல் புத்தகம் புடிச்சி இருந்தது ,,,,

    31 May 2012 11:53 // ஆஹா அவரு வயசுப்பையன் நான் ஒரு தனிமரம் ம்ம் அவன் நல்லாக எழுதியிருந்தான் அந்த கதையை நானும் ரசித்துப்படித்தேன் கலை!

    ReplyDelete
  58. ஹீ அந்த் பிழையைத் திருத்தும் பொறுப்பே ஐயாவிடம் விடுவேன் ஆனால் கருத்து ஒரு சிலருக்காக மாற்றச் சொன்னால் நான் இதை தாங்க மாட்டன் ஏன்னா இது 10 வருசமாக பறனில் இருந்த கதை!ம்ம்ம் முடிவில் பேசலாம்!///


    அண்ணா நாந்தேன் புத்தகத்துக்கு வரவேற்புரை எழுதுவனாக்கும் .....

    மாமா தெளிவுரை எழுதுவாங்க என் வரவேற்புரைக்கு ....
    (சும்மா சொன்னன் அண்ணா ...)////இப்பவே தெளிவுரை பாத்து சிரிக்கிறாங்க!!!!!

    31 May 2012 11:59 //ஹீ என்னையே பார்த்து அதுதானே செய்யிறாங்க சிலர் கவலைவேண்டாம் நாம் வாத்து மேய்ப்போம் இல்லை ஆடு சரி. கலை! ஹீஈஇ

    ReplyDelete
  59. சாப்பாடு முடிஞ்சுதோ,நேசன்?இல்லையெண்டா சாப்பிடுங்கோ,கொஞ்ச நேரம் கழித்து வருவேன்!

    ReplyDelete
  60. அண்ணா டாட்டா //நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும் நாளை இரவு சந்திப்போம்!குட் நைட்!

    ReplyDelete
  61. சாப்பாடு முடிஞ்சுதோ,நேசன்?இல்லையெண்டா சாப்பிடுங்கோ,கொஞ்ச நேரம் கழித்து வருவேன்!// இன்னும் இல்லை யோகா ஐயா சில நிமிடத்தின் பின் முக்கிய அழைப்பு அரபுலக்த்தில் இருந்து வரும் அதுக்காக காத்துக்கொண்டு இருக்கின்றேன் நண்பேண்டா !ம்ம், இவன் முகத்திலும் முதுகிலிம் குத்தாத உறவு!ஹீ படம் வரும் தொடர்முடிவில்!ஹீஈஈஈஈஈ

    ReplyDelete
  62. ஆராச்சும் இருக்கிறீங்களோ...களைச்சுப்போய் வந்திருக்கிறன்...வெறும்கோப்பி இல்லாடி ஒரு அப்பிள் வேணும்...அப்பா...இருப்பார் எனக்காக.நேசனும் வேலை இடத்தில இருப்பார்.காக்கா நல்லா நித்திரை கொள்ளும்.ரெவரி...வந்தாரோ இனித்தானே ஒரு சுற்றுச்
    சுற்றவேணும் !

    ReplyDelete
  63. வாங்க,மகளே!இரவு வணக்கம்!அப்பிள் ரெண்டு கிழமையா வாங்கயில்லை.சுடு கோப்பி குடியுங்கோ!

    ReplyDelete
  64. குடிச்சாச்சோ?முகம் அலம்பீட்டு பாருங்கோ!ஐஞ்சு நிமிசத்தில வருவன்.உ.ம. தில ....................நீங்களே பாருங்கோ,அநியாயத்த!

    ReplyDelete
  65. வாங்கோ ஹேமா வேலைக்களைப்பை போக்க ஒரு பால்க்கோபி குடியுங்கோ!ஹீஈஈஈ

    ReplyDelete
  66. குடிச்சாச்சோ?முகம் அலம்பீட்டு பாருங்கோ!ஐஞ்சு நிமிசத்தில வருவன்.உ.ம. தில ....................நீங்களே பாருங்கோ,அநியாயத்த!

    31 May 2012 13:31 // ஏன்ன்ன்ன்ன்ன் ஏன் ஆவா கோபத்தில் பதிவைப்படிக்காமல் கருக்கு மட்டை எடுக்கவோஒ ஓஓஓஒ வேண்டாம் ஐயா விரைவில் தொல்லை நீங்கும்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  67. இருப்பார்.காக்கா நல்லா நித்திரை கொள்ளும்.ரெவரி...வந்தாரோ இனித்தானே ஒரு சுற்றுச்
    சுற்றவேணும் !

    31 May 2012 13:27// ரங்க ராட்டினமோ வேண்டாம் போய் ஓய்வு எடுங்கோ!ஹேமா ஹீஈஈஈஈஈஈஈஈஈ!

    ReplyDelete
  68. குடிச்சாச்சோ?// ஹீஈஈ விரைவில் யோகா ஐயாவுக்கும் உள்குத்தும் வரும் எழுத்துப்பிழைக்கு!அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  69. //ராகுல் படம் பார்க்க தியேட்டரில் இருக்க அவளின் உண்டியல் காசுதான் டிக்கட் வழியாக வெளியே போகும்.

    கடன் வேண்டும் போதெல்லாம் அவளுக்கு பள்ளிக்கூடம் புத்தகப்பை தூக்க வேண்டும் . அவளுக்கு கைவீசி வரணும் என்ற ஆசை.

    அதையும் விட பிறந்த நாளில் இருந்து அவள் பாரம் ஏதும் சுமக்கக்கூடாது என்று எல்லாரும் அக்கறையோடு இருப்பது அவள் ஒருத்திக்குத் தான் .//

    அன்பை எவ்வளவு அழககாகச் சொல்லியிருக்கிறீங்கள் நேசன்...எனக்கும் சில ஞாபக ஓட்டங்கள் இருக்கு.ஆனால் சொல்லமாட்டேனே !

    ReplyDelete
  70. நன்றி ஹேமா நாளை இரவு சந்திப்போம் யோகா ஐயாவோடு பேசுங்கோ குட் நைட் !சாரி கொஞ்சம் தனிமரம் யாழ்தேவியில் பயணிக்கவேண்டிய நிலை!ம்ம்ம்

    ReplyDelete
  71. பாட்டுக் கொஞ்சம் சோகம்தான் என்றாலும்...எனக்கும் பிடிச்ச பாட்டு நேசன்.பாடல் தெரிவுக்கு உங்களை மீற ஆருமில்லை.எப்பவும் பாராட்டலாம் !

    ReplyDelete
  72. அன்பை எவ்வளவு அழககாகச் சொல்லியிருக்கிறீங்கள் நேசன்...எனக்கும் சில ஞாபக ஓட்டங்கள் இருக்கு.ஆனால் சொல்லமாட்டேனே !

    31 May 2012 13:56 // ம்ம்ம் சொல்லாதீங்கோ ஹேமா! பாவம் அவங்கள் பாசம் அழுதே ஓடும் ஆற்றில் எள்ளும் தண்ணியுமாக !ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  73. பாட்டுக் கொஞ்சம் சோகம்தான் என்றாலும்...எனக்கும் பிடிச்ச பாட்டு நேசன்.பாடல் தெரிவுக்கு உங்களை மீற ஆருமில்லை.எப்பவும் பாராட்டலாம் !

    31 May 2012 13:59 // ஆஹா அது எல்லாம் என் பாட்டி கொடுத்த வானொலிக்குச் சேரனும்!ம்ம்ம் அவாதானே எல்லாம்! அது ஒரு கிழவி ஆனால் பாசக்காரி!அம்முக்குட்டிபோல தந்த அன்பு கிழவன் ஆனாலும் குழந்தைதான் அவாவுக்கு நான்!ம்ம்ம்

    ReplyDelete
  74. பாட்டுக் கொஞ்சம் சோகம்தான் என்றாலும்//ம்ம்ம் சுமை வேற அது சிலருக்கு!ம்ம்ம் விதியா/ இல்லை யுத்தமா வேலி தாண்டி சந்தியில்!ம்ம்ம் என்னமோ போங்கோ இதையத்துளையாம் எல்லாம் அவசரம்!ம்ம்ம் புரியாத வயசு!ம்ம் அழுவது எல்லாம் தோலில் தாங்கி மடியில் வளர்த்தவர்கள் முதுகில் தாங்கியவரும் தானே! எத்தனை பேருக்கு கிடைக்கும் தேவதையை பார்க்கும் வரம்! ம்ம்

    ReplyDelete
  75. நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துக்கும் பேசலாம் தொடர் முடிய சில ஆதங்கம்

    ReplyDelete
  76. அவ்வ்வ்வ் என்னை மன்னிச்சிடுங்க.. எப்பவுமே நான் லேட்தான்...:(((.. பால் கோபி குடிச்சு கழுவி வைத்தபின்பு தான் வரமுடியுது என்னால:).

    ReplyDelete
  77. தொடர், தொடர்ந்து கலக்குது... இம்முறை பாட்டும் சூப்பர்.

    யோகா அண்ணன், நான் பெரகரா ஊர்வலம் பார்த்திருக்கிறேனே... யானைகளும் லைட்சும் சொல்ல முடியாத அழகாக இருக்கும்.

    ReplyDelete
  78. thodarattum anupavangal!

    ReplyDelete
  79. ////காரணம் நல்லா மொழிகற்கின்றேனா என்று கண்டு பிடிக்கத்தான் .அவர் தான் அன்று அந்த விசயத்தைச் சொன்னார்! பெரஹராவுக்கு சந்தோஸத்தோடு போனவன் சிந்திக்க வேண்டியவன் ஆகினான் ராகுல்!////
    என்னவென்று அறிந்துகொள்ள ஆவலாக இருக்கோம் பாஸ்

    ReplyDelete
  80. பதிலின் நடுவே இடையிடையே நல்ல பாடல்களை கொடுத்து மெருகூட்டுறிங்க பாருங்க அண்ண சூப்பர்.....

    ReplyDelete
  81. காலை வணக்க,நேசன்!

    ReplyDelete
  82. காலை வணக்கம்,நேசன்!

    ReplyDelete
  83. ஓலா நேசரே...நலமா?

    யோகா அய்யா..கவிதாயினி...கருவாச்சி...காலை வணக்கங்கள்....

    நேற்றே வந்தேன்..மணியண்ணன் கூட சீரியஸா பேசிட்டு இருந்தீங்க...

    தொடர் முடியும் வேகம் தெரிகிறது துரை...


    மாலை இருந்தால் சந்திக்கிறேன்...

    ReplyDelete
  84. வணக்கம் நேசன் அண்ணா.நலம்தானே?மன்னிக்கவும்.ரொம்ப நாளைக்கப்புறம் வலைக்கு வந்திருக்கேன்.இன்றிலிருந்து எல்லோர் வலைக்கும் ஒரு வலம் வரலாமென்று நினைக்கிறேன்.வலையுலகம் எப்பிடி இருக்கிறது?

    ReplyDelete
  85. அவ்வ்வ்வ் என்னை மன்னிச்சிடுங்க.. எப்பவுமே நான் லேட்தான்...:(((.. பால் கோபி குடிச்சு கழுவி வைத்தபின்பு தான் வரமுடியுது என்னால:)// வாங்கோ அதிரா! ஏன் மன்னிப்பு எல்லாம் நேரம் இருக்கும் போது வாங்கோ!

    ReplyDelete
  86. தொடர், தொடர்ந்து கலக்குது... இம்முறை பாட்டும் சூப்பர்.

    யோகா அண்ணன், நான் பெரகரா ஊர்வலம் பார்த்திருக்கிறேனே... யானைகளும் லைட்சும் சொல்ல முடியாத அழகாக இருக்கும்.// நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  87. thodarattum anupavangal!// நன்றி சீனி அண்ணா! வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  88. காரணம் நல்லா மொழிகற்கின்றேனா என்று கண்டு பிடிக்கத்தான் .அவர் தான் அன்று அந்த விசயத்தைச் சொன்னார்! பெரஹராவுக்கு சந்தோஸத்தோடு போனவன் சிந்திக்க வேண்டியவன் ஆகினான் ராகுல்!////
    என்னவென்று அறிந்துகொள்ள ஆவலாக இருக்கோம் பாஸ்

    31 May 2012 19:34 // நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  89. பதிலின் நடுவே இடையிடையே நல்ல பாடல்களை கொடுத்து மெருகூட்டுறிங்க பாருங்க அண்ண சூப்பர்.....// நன்றி எஸ்தர்-சபி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  90. யோகா அய்யா..கவிதாயினி...கருவாச்சி...காலை வணக்கங்கள்....

    நேற்றே வந்தேன்..மணியண்ணன் கூட சீரியஸா பேசிட்டு இருந்தீங்க...

    தொடர் முடியும் வேகம் தெரிகிறது துரை...


    மாலை இருந்தால் சந்திக்கிறேன்...

    1 June 2012 05:17 // வாங்க ரெவெரி சந்திப்போம்.

    ReplyDelete
  91. வணக்கம் நேசன் அண்ணா.நலம்தானே?மன்னிக்கவும்.ரொம்ப நாளைக்கப்புறம் வலைக்கு வந்திருக்கேன்.இன்றிலிருந்து எல்லோர் வலைக்கும் ஒரு வலம் வரலாமென்று நினைக்கிறேன்.வலையுலகம் எப்பிடி இருக்கிறது?

    1 June 2012 08:03 //வாங்க சித்ரா மன்னிப்பு ஏன் நேரம் இருக்கும் போது வாங்கோ வலையுலம் அப்படியே தான் இருக்கு!

    ReplyDelete