15 June 2012

மலையகத்தில் முகம் தொலைந்தவன்...-78

இந்தத்தொடரில் யாரையும் புண்படுத்தும் நோக்கம் தனிமரத்திற்கு  இல்லை கதையின் காலப்பகுதியில் இப்படி எல்லாம் நடந்ததை காட்சியாக சொல்லவே  என் நட்புச் சகோதரிகளின் படக்காட்சியை இணைத்தது. இனவாதம் மூடிய பக்கத்தை சொல்லவேண்டியது காலத்தின் கட்டாயம். யாரையும் நிந்திக்கவில்லை  மீண்டும் மன்னிப்போடு  தொடருக்குள்!


தலைவன் தவிப்போடு காத்திருக்க தலைவி வராத நிலையை வழியில் என்னாச்சு என்றதை குறுந்தொகைப் பாடலில் சொல்லியதை குழைந்து கொடுத்த கண்ணதாசன். நான் மலரோடு தனியாக என்ற இரு மலர்கள் சிவாஜி படப்பாடல் போல அடுத்த நாள் பள்ளி செல்லும் வழியில் தயாளன்,தினேஸ்,சுகுமார்,ராகுல் எல்லாறும் வீட்டில் வீசிய சூறாவளியை கடந்து இயல்பு வாழ்வுக்குத் திரும்பும் மக்கள் போல பள்ளிக்குள் நுழைந்தோம்.




 வீட்டில் நடந்த அறிவுறுத்தல் போர், ஆலோசனைக்கூட்டம், காதல் இல்லை இது காமம் ,குலப் பெருமை ,மதப்பெருமை ,குடும்பப் பெருமை, அண்ணாகடமை ,வீட்டுக்கடன் ,நம்பிக்கை நட்சத்திரம், வீட்டில் இருந்து கடைக்கு மாற்றம் என பட்டியல் இட்ட காதல் பல பிரச்சனைக்கு மூல காரணியான அஞ்சகம் அம்மாவும் அவ பெற்ற அடுத்த வாரிசு பிரகாஸ்சும். . யுத்தக்களத்தின் இழப்புக்களை பார்வையிட வருவார் அரச அதிகாரி போல என காத்திருந்தோம். வயிற்கதவு பூட்டியதும் கலைந்து போகும் மனுக்கொடுக்க !மந்திரியைப் பார்க்க வந்த வாக்குப் போட்டவர்கள் போல காதிருந்தும் பிரகாஸ் வரவில்லை. மக்கள் பணத்தை திவாலாக்கின சீட்டுக்கம்பனி அதிபர் போல தலைமறைவு . அதனால் அன்று தப்பி விட்டான் இல்லை என்றால் பங்கு மூலதனம் ஒதுக்கியது போல அவன் உடம்பில் ஒவ்வொருத்தரும் கைகள் ஒப்பம் இட்டு விளம்பரம்படுத்தி இருப்போம் .இனி மேல் எங்களுடன் உறவா இருக்க உனக்கு தகுதியில்லை என்று தப்பி விட்டான் பள்ளி வராமல். ஒவ்வொருத்தரும் வீட்டில் விழுந்த !ஆர்ச்சனைப்பூக்களை ஆளாளுக்கு மாலையாக கட்டிப் போட்டோம் வார்த்தைகள் கொண்டு. 




கலைந்து போக பள்ளி முடிந்த போது டியூசன் வகுப்புக்கு அறிவுச் சோலைக்கு வரவில்லை சுகுமார் .உணர்ச்சிக்கொதியில் இருந்தான் அலை போல




 . தனியாக ராகுல் அறிவுச் சோலைக்குப் போனான் ".வசந்தா டீச்சர் என்னதம்பி ஒற்றை மாடு வருகின்றது? வழமையாக இரட்டைமாட்டு வண்டி இல்லையோ ? 


இன்று ஒற்றைமாட்டு வண்டிதான் டீச்சர். இந்த மாட்டை யுத்தம் என்ற மூக்கனாங்கயிறு இல்லையோ அடக்கி வைச்சிருக்கு .அறுத்துட்டு ஓடாமல் . ஒற்றை மாடும் ஊரில் தண்ணீர் வண்டியும் இழுக்கும் ,ஊரில் குடும்ப திருவிழாவுக்கு ஊறவுகளையும் இழுத்துச் செல்லும் டீச்சர்.. அவன் குமரன் சேரிடம் போய்விட்டான் படிக்க.


 ஓ !அப்படியா ! "சரி நாங்க இன்று பாராளமன்றத்தில் பாதீடு பார்வை பற்றி பார்ப்போம். அதாங்க பட்ஜெட் என்று தொடங்கும் போது வந்தாள் அவள்




.முழுமதி நிலவாம் அன்னை ஹதீயா என்று நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு படித்த தமிழ் பாடத்தில் நிலவுக்கும் கறை உண்டு என்று சொல்லிவிட்டுப் போனவள் . அவள் பெயரைக்குகூட ஜாமீலா எழுதக்கூட மனதில் வன்மம் வருகின்றது .




 "மதம் ஒரு அபின் என்றார் லெனின் மதம் என்பது மனதை பண்படுத்தும் ஒரு விடயம் ஆனால் மதவாதிகள் இனவாதிகள் ஆனால் எப்படி நாடு இருக்கும் என்றால் இலங்கையை ஒரு உதாரணம் சொல்லுவான் ஐரோப்பிய குடிமகன். 


" மதம் என்ற கோடு ஒரு குடும்பம் போல இருந்த நண்பர்கள் நண்பிகளுக்கு கோடு போடமுடியுமா ?அண்ணா என்றும் பாய் என்றும் அன்போடு சொல்லிய உதடுகள் எல்லாம் பெய்யா ??என்ற தாத்தா போலஎன்று சொல்லிய விமலாவுக்கும் அயிசாவுக்கும் இடையில் நீ ஒரு முஸ்லிம் நான் ஒரு இந்து என்ற மதக்கோட்பாடு எவ்வாறு சிந்திக்காமல் சித்தாந்தம் ஆனது ?




உண்மையில் இதில் யார் யார் எல்லாம் பாதிக்கப்பட்டார்கள் என்று எத்தனை பேர் சிந்தித்தார்கள் ?? 


மதம் என்ற தீ முதலில் அறிவுச் சோலையில் பற்றியது. அது எப்படி நாட்டின் தேசிய நாளிதழ்களில் சந்தியில் நின்று திரிச்சு சிரித்தது என்று எத்தனை மாணவர்கள் அறிவார்கள்??


 சட்டம் இயற்றும் பாராளமன்றத்தில் இனவாத ஆட்சியில் இருந்த சிறுபான்மையின் தமிழ் இந்துக்களும் ,முஸ்லிம்களும் ஒத்துக் கொண்டு வாக்குப் போடும் போது தெரியவில்லை? மதக்கட்டுப்பாடு என்ன, நிர்வாக கட்டுப்பாடு என்ன என்று ? ஏன் வாக்கு போட வேண்டிய பெட்டியில் வந்த பணம் சொல்லவில்லையா இந்துத்துவவாதிக்கு பணம் ஒரு இலக்சுமி இந்துக்கடவுள் என்று? அதே நிலை பாய்க்குத் தெரியாத அராம் இது தப்பான வழியில் வந்த பணம் என்று ஏன் இவர்கள் சிந்திக்கவில்லை?




 மதவாதிகள் எப்படி எல்லாம் ஒரு அறிவு வளக்கும் இடங்களில் எல்லாம் கல்லும் ,காடைத்தணமும் செய்ய முடிந்தது அந்தளவு ஒரு மதவெறியா ? அந்த வெறியில் பலியானது எத்தனை முஸ்லிம் மாணவிகளின் பல்கலைக்கழகக் கனவு ,எத்தனை ரவிக்களின் அறிவிப்பாளர் கனவு ,கணக்காய்வாளர் கனவு ,வெளிக்கள ஆய்வாளர் கனவு எல்லாம் மதத்தீயில் மரித்துப் போன நிலை பேசமாட்டார்கள் பலர் . 


.நாட்டில் போர்க்கால நிலையில் சந்திரிக்கா ஆட்சியில் இனவாதிகள் செய்தது பாடசாலைக்குள்ளும் வெடிகுண்டு தேடி எடுத்தது. இதில் எந்தளவு அரசியல் பாதாள உலகம் இருந்தது என்று பலரும் ஜோசிப்பார்கள் ?ஆனால் பள்ளியின் பாதுகாப்புக்கு முன் எச்சரிக்கையாக பள்ளியின் வாயில் கதவில் சகல மாணவர் மாணவிகளும் கொண்டு வரும் புத்தக்கப்பை மற்றும் உடமைகள் சோதனை செய்ய வேண்டும் என்றும் உடல் சோதனை என்றும் பல இடங்களில் பாதுகாப்பு உஸ்தியோகத்தர்களை ஈடுபடுத்தியது .




அப்போது தான் பர்தா அணிந்தும் வெடிகுண்டு வரலாம் என்ற பிரச்சாரம் செய்தார்கள் இனவாதிகள் . வடக்கில் எத்தனை பள்ளிகள் மீதும் மதத்தலங்கள் மீதும் தாக்குதல்!நடத்தினார்கள் என்பதை தனிக்கை மூலம் மறைத்து விட்டு. சோதனை என்ற நிலையை இராணுவப் பகுதியில் நடைமுறைப் படுத்தினார்கள் .




.அப்போது பள்ளி நிர்வாகம் கூறியிருந்தது .பள்ளியின் உள்ளே வரும் போது பர்தா விலக்கிவிட்டு வாருங்கள் வெளி வாசலில் அணிந்து செல்லுங்கள் என்று .




 வெடிகுண்டு வீசும் அரசியலில் பாதுகாப்புக்கு முக்கியம் ஆன நிலையில் சில மதவெறியர்களின் பின் தூண்டலில் அறிவுச் சோலை கல்லூரியில் ஆரம்பித்தார்கள் இஸ்லாமிய மாணவிகள் தங்கள் மத அடையாளத்தை இந்து நிர்வாகம் சீண்டுகின்றது .அதுக்கு எதிராக பகிஸ்கரிப்பு என்று. அன்று தான் மதியம் தொடங்கிய நிலையில் அமைதியாக இருந்த அறிவிச் சோலைக்குள் மாலை வகுப்புக்கு ராகுல் நுழைந்தது.


 . அப்போது வசந்தா டீச்சர் மீது! இஸ்லாமிய மாணவி அவரிடம் மாலை வகுப்பு படித்த மாணவியின் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் மிகவும் நாகரிகம் அற்றது


 "நீங்க தான் தூண்டிவிடுகின்றீங்க இந்த பர்தா கழற்றணும் என்று" 


இத்தனைக்கும் அது பெண்கள் கல்லூரி மாலை வகுப்பில் ஒரு சில ஆண்கள் இந்துக்கள், முஸ்லிம்கள் படிக்க வருவது. மாலையில் பிரச்சனை இல்லையே அணிந்து தான் இருந்தார்கள் . அடுத்த நாள் முதல் இனி அறிவுச் சோலைக்குள் கால் வைக்க முடியாத நிலை வரும் என்று அன்று ராகுலுக்குத் தெரியவில்லை.




 இனிவரும் நாட்கள் படிப்பு கெட்டுப் போகும் என்று

56 comments:

  1. மாலை வணக்கங்கள் நேசரே...

    ReplyDelete
  2. இரவு வணக்கம் ரெவெரி வாங்க ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! நலம் தானே..

    ReplyDelete
  3. அடிக்கடி மன்னிப்பு கேட்கிறீர்கள்...தேவை இல்லை தானே...

    ReplyDelete
  4. நான் நலம்...நீங்கள் சுகமா?

    ReplyDelete
  5. அடிக்கடி மன்னிப்பு கேட்கிறீர்கள்...தேவை இல்லை தானே.//ம்ம் என்ன செய்வது ரெவெரி அண்ணா சிலர் போடும் குத்துக்கு முந்திவிட்டால் முகம் தப்பிவிடும் அதுதான்!ஹீ

    ReplyDelete
  6. நான் நலம் ரெவெரி ஏர்மானோ.

    ReplyDelete
  7. பேசி ரொம்ப நாளாச்சு...எல்லா நட்புக்களும் சுகம் தானே...

    ReplyDelete
  8. பேசி ரொம்ப நாளாச்சு...எல்லா நட்புக்களும் சுகம் தானே...

    15 June 2012 12:09 //ம்ம் எல்லாரும் நலம் வாத்து திருநெல்வேலி போய் இருக்கின்றா குட்டிஸ்கூட ஹேமா வேலை அஞ்சலின் கொஞ்சம் பிசி, கலா, அதிரா ,யோகா ஐயா எல்லாரும் நலம்!

    ReplyDelete
  9. இன்று ஒருவரும் வரும் ப்ளான் இல்லை போல...

    ReplyDelete
  10. இன்று ஒருவரும் வரும் ப்ளான் இல்லை போல...

    15 June 2012 12:13 //எல்லாருக்கும் இணையம் கொஞ்சம் சிக்கல் போல இன்று!

    ReplyDelete
  11. உங்கள் வலையில் பழைய படங்கள் மிஸ் ஆகின்றனவா?

    ReplyDelete
  12. சாரி...தொலைபேசியில் நண்பர்...

    ReplyDelete
  13. உங்கள் வலையில் பழைய படங்கள் மிஸ் ஆகின்றனவா?// அப்படி ஏதும் இல்லையே ரெவெரி.

    ReplyDelete
  14. சாரி...தொலைபேசியில் நண்பர்...// ம்ம் நிச்சயம் நண்பருடன் பேசுங்க நான் இருப்பேன் இன்னும் சில மணித்தியாலம் !

    ReplyDelete
  15. என் வலையில் பெரும்பாலான படங்கள் ஆச்சர்யக் குறியுடன் கருப்பாகிப்போயின...

    ReplyDelete
  16. தனிமரம் said...
    சாரி...தொலைபேசியில் நண்பர்...// ம்ம் நிச்சயம் நண்பருடன் பேசுங்க நான் இருப்பேன் இன்னும் சில மணித்தியாலம் !
    //
    இல்லை முடித்துவிட்டேன்...உங்களை இன்று விட்டால் இனி செவ்வாய் தான் பிடிக்க முடியும்...

    ReplyDelete
  17. யோகா அய்யா காலையில் சில வலைகளில் பார்த்தேன்...உறங்கிவிட்டார் போல...

    ReplyDelete
  18. என் வலையில் பெரும்பாலான படங்கள் ஆச்சர்யக் குறியுடன் கருப்பாகிப்போயின...//mm பளாக்கர் மாற்றம் வரப்போவதாக முன் அறிவிப்பு செய்வதால் ஏற்பட்ட தடங்களாகஇருக்கலாம் பழைய பதிவை பார்த்து விட்டுச் சொல்லுகின்றேன் இன்னொரு தடவை ரெவெரி!

    ReplyDelete
  19. இல்லை முடித்துவிட்டேன்...உங்களை இன்று விட்டால் இனி செவ்வாய் தான் பிடிக்க முடியும்...

    15 June 2012 12:27 //ம்ம் நானும் கொஞ்சம் வேலை மாற்றம் அது இழுக்கின்றது போக இந்த தொடர் இடையில்!ம்ம் தாமதமாகின்றது வேகம் !ம்ம்

    ReplyDelete
  20. யோகா அய்யா காலையில் சில வலைகளில் பார்த்தேன்...உறங்கிவிட்டார் போல...// வார இறுதி பிள்ளைகள் கணனியில் இருப்பார்கள் அவசியமான வேலை செய்ய!

    ReplyDelete
  21. எல்லாம் இனிதே முடியும்..கவலை வேண்டாம்...

    ReplyDelete
  22. உங்கள் வர இறுதி ப்ளான் என்ன?

    ReplyDelete
  23. ஜனவரி மாதத்தில் வந்த படங்கள் மாற்றம் ஏதும் இல்லை ரெவெரி சரியாக இருக்கு என் வலையில்.

    ReplyDelete
  24. எல்லாம் இனிதே முடியும்..கவலை வேண்டாம்...//ம்ம் நன்றி.

    ReplyDelete
  25. ஜனவரி மாதத்தில் வந்த படங்கள் மாற்றம் ஏதும் இல்லை ரெவெரி சரியாக இருக்கு என் வலையில்.//

    நன்றி நேசரே...போய் போய் திரும்ப வருகின்றன படங்கள்...கூகுல் மாற்றங்கள் போல...

    ReplyDelete
  26. உங்கள் வர இறுதி ப்ளான் என்ன?// நாளை முக்கிய வெளி வேலை வங்கியில் ஒருவரைச் சந்திக்க வேண்டும் ஞாயிறு மட்டும் ஒரு 10 மணித்தியாலம் கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒருவார வேலை நேரத்தைச் சேர்த்து வைத்து!ஹீ

    ReplyDelete
  27. நன்றி நேசரே...போய் போய் திரும்ப வருகின்றன படங்கள்...கூகுல் மாற்றங்கள் போல...

    15 June 2012 12:37 //ம்ம் இருக்கலாம் மாற்றம் பல சிக்கல் தருகின்றது!

    ReplyDelete
  28. உங்களுக்கென்ற நேரம் வலையில் மட்டும்தான் போல...

    ReplyDelete
  29. உங்களுக்கென்ற நேரம் வலையில் மட்டும்தான் போல...//ம்ம் நாலுவிடயம் அறியும் இடம் பல உறவுகள் மூலம் !ம்ம்

    ReplyDelete
  30. குடும்ப வருகைக்கு வீடு எல்லாம் பார்த்தாச்சா?

    ReplyDelete
  31. குடும்ப வருகைக்கு வீடு எல்லாம் பார்த்தாச்சா?

    15 June 2012 12:44 //ம்ம் சொந்த வீட்டுக்குப் போக சேர்ந்து போக காத்துக்கொண்டு இருக்கின்றேன் இப்போது வாடகைக்கு விட்டு இருக்கின்றேன்!

    ReplyDelete
  32. விருப்பப்பட்டால் உங்கள் தொலைபேசி எண் என் ஈமெயில்க்கு அனுப்புங்கள்...வார இறுதியில் பேசலாம் நேசரே...

    ReplyDelete
  33. விருப்பப்பட்டால் உங்கள் தொலைபேசி எண் என் ஈமெயில்க்கு அனுப்புங்கள்...வார இறுதியில் பேசலாம் நேசரே...

    15 June 2012 12:50 // நிச்சயம் அனுப்புகின்றேன் ரெவெரி அண்ணா!

    ReplyDelete
  34. நீங்கள் ஒய்வு எடுங்கள்...உங்களை நாளை மறு நாள் அழைக்கிறேன்..

    ReplyDelete
  35. இரவு வணக்கங்கள்...

    யோகா அய்யா...கருவாச்சி...கவிதாயினி...
    Hello & Bye...

    ReplyDelete
  36. இரவு வணக்கம்,நேசன்&ரெவரி!கொஞ்சம்..........அல்ல நிறையவே பிந்தி விட்டது.நேசன்,ரெவரி நலமா?நான் நலம்.

    ReplyDelete
  37. இரவு வணக்கம்,நேசன்&ரெவரி!கொஞ்சம்..........அல்ல நிறையவே பிந்தி விட்டது.நேசன்,ரெவரி நலமா?நான் நலம்.

    15 June 2012 12:57 // இரவு வணக்கம் யோகா ஐயா சாப்பிட்டாச்சா!

    ReplyDelete
  38. .பள்ளியின் உள்ளே வரும் போது பர்தா விலக்கிவிட்டு வாருங்கள் வெளி வாசலில் அணிந்து செல்லுங்கள் என்று ///பிரான்சில் வரு முன்பே,இலங்கையில்?அதிலெல்லாம் முன்னேற்றம் தான்!

    ReplyDelete
  39. நீங்கள் ஒய்வு எடுங்கள்...உங்களை நாளை மறு நாள் அழைக்கிறேன்..// நன்றி ரெவெரி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும் காத்திருக்கின்றேன் சந்தோஸத்துடன்.

    ReplyDelete
  40. சாப்பிட்டதில் தான் கொஞ்சம் தாமதம்.பால் குடிக்கிறேன்,பசும்பால்!

    ReplyDelete
  41. /பிரான்சில் வரு முன்பே,இலங்கையில்?அதிலெல்லாம் முன்னேற்றம் தான்!

    15 June 2012 12:59 //ம்ம் சில முன்னேற்றம் தான். இலங்கையில்.

    ReplyDelete
  42. பசும்பால்!// ஹீ

    ReplyDelete
  43. பிரச்சினையின் வேரை அறியாதது போல் இப்போதும்..........................ஹும்!!!!!!

    ReplyDelete
  44. தனிமரம் said...

    பசும்பால்!// ஹீ!!///என்ன,ஹீ?உங்களுக்கும் வேணுமா???

    ReplyDelete
  45. பிரச்சினையின் வேரை அறியாதது போல் இப்போதும்..........................ஹும்!!!!!!// என்ன செய்வது.

    ReplyDelete
  46. செங்கோவி வீட்டுக்கு முதல் ஆளா போயிருக்கிறீங்க?

    ReplyDelete
  47. என்ன,ஹீ?உங்களுக்கும் வேணுமா???// இலை ஒருநாளைக்கு 8 பால்க்கோப்பி அதே போதும்.ஹீ

    ReplyDelete
  48. செங்கோவி வீட்டுக்கு முதல் ஆளா போயிருக்கிறீங்க?

    15 June 2012 13:05//ம்ம் இன்று நேரம் கிடைத்து இருந்திச்சு!

    ReplyDelete
  49. அலுக்கவில்லை?எனக்கு வெண் சுருட்டு போல் உங்களுக்குப் பால்கோப்பி!

    ReplyDelete
  50. அலுக்கவில்லை?எனக்கு வெண் சுருட்டு போல் உங்களுக்குப் பால்கோப்பி!// ம்ம் இரண்டும் உட்ம்புக்கு கூடாது ஆனால் ப்ழக்கதோஸம்!ம்ம்

    ReplyDelete
  51. நீங்கள் சாப்பிடவில்லை போல் தெரிகிறது,சாப்பிடுங்கள் நான் இருப்பேன்!

    ReplyDelete
  52. நீங்கள் சாப்பிடவில்லை போல் தெரிகிறது,சாப்பிடுங்கள் நான் இருப்பேன்!// நன்றி யோகா ஐயா நான் விடைபெறுகின்றேன் ஹேமா வந்தால் பேசுங்க நாளை மதியம் பேசுவோம். குட் நைட்!

    ReplyDelete
  53. குட் நைட் நேசன்!பார்கிறேன்.

    ReplyDelete
  54. தொடர் தொடர்தான்ன் வழமிபோல் நன்று.

    எனக்கு பால் கோப்பியும் வாணாம் ரீயும் வாணாம்ம்ம்... ஃபுல்லாஆஆஆஆ இருக்கு குட்லக் பாட்டுக் கேட்டு..:))

    ReplyDelete
  55. //இன்று ஒருவரும் வரும் ப்ளான் இல்லை போல...//




    இதோ வந்திட்டேனே :)) ஆனா .இப்போ இங்கே யாருமில்லை .
    பாடலும் பதிவும் அருமை நேசன் .
    யோகா அண்ணா ஹேமா கலா ரெவரி நேசன் கலை அதிரா அனைவருக்கும் நல்லிரவு வணக்கம் .
    வெள்ளிகிழமைகளில் மகளை பாடல் பயிற்சிக்கு அழைத்து செல்வேன் ,எனவே தாமதம் ..
    மீண்டும் சந்திப்போம்

    ReplyDelete
  56. வணக்கம் சகோதரர் நேசன்,
    நலமா?
    " மதமது இங்கே
    மனிதனின் வாழ்விற்கு
    நன் மார்க்கம் அருளும்
    நற்பொருளே..
    அதன் கூறுபாடுகளை
    நன்கறிந்து செயல்பட்டால்
    நன்மை விளையும்
    மதமாய்
    மதம்பிடித்த யானை
    ஏற்றுக்கொண்டால்
    தன்னையே அழித்துவிடும்"

    நாம் சொல்ல வந்த கருத்துக்களை
    சொல்லலாம் சகோதரரே..
    எழுத்துரிமை..
    யார் மனதும் புண்படுத்தாது இருந்தால்
    வரவேற்கப் பட வேண்டியதே..
    மன்னிப்புகள் தேவையில்லை என்பது
    என் கருத்து...

    ReplyDelete