15 August 2012

மின்நூலும் அன்பு மழையும் -3


விமர்சனங்கள் தான் எழுத்தினை சீர்படுத்தும் !ஆனால் சீர்படுத்துவதை விட சீண்டுவதும், இருட்டடைப்பு செய்வதும் எஸ்.பொன்னத்துரை முதல் அந்தனி ஜீவா வரை தொடரும் ஒரு கதை நம்தேசத்தில் !பதிவுலகில் தனிமரம் ஆத்ம திருப்திக்கு எழுதுகின்றேன் .

எழுத்துப்பிழை எனக்கு ஒரு தடைக்கல் உண்மைதான் .

இந்தத்தொடரில் வரும் கல்பனாவைப்பற்றிய ஏடாகூடமான கற்பனை இன்னும் மனதில் இருக்கு எழுதவில்லை . ராகுல் வீட்டிலும் ஒரு மலைமகள் திருமகள் மருமகள் .என்பதால் கொஞ்சம் நடுநிலையில் !:))))என்றாலும் என் உணர்வுகளை எங்கோ ஒரு மூலையில் பதிவு செய்கின்றேன்.

ஆனால் பல விடயம் நம்தேசம் பற்றி பேச இருக்கு சுதந்திரதேசத்தில் இருப்பதால்

ஆனால் நேரம் குறைவு இந்த ஐபோனில் பதிவு எழுத என் நண்பன் இவன் தான் பதிவுலகில் இந்த ஐபோன் போல ஒரு நண்பன் என்னை புரிந்து கொண்ட விமர்சனம் இது!

அனைவருக்கும் வணக்கம்
இணைய இணைப்பின் பிரச்சனையால் மலையகத்தில் முகம் தொலைத்தவன் மின்நூல் வெளியீட்டு விழாவில் முழுமையாக பங்கெடுக்க முடியவில்லை அதற்கு மன்னிக்கவேண்டும்.

எனது முழுமையான கருத்து ஒன்றை இங்கே பதிவு செய்ய நினைத்தேன் தனிமரம் நேசன் பதிவுலகில் இருக்கின்ற ரசனை மிக்க பதிவர்களில் ஒருவர்.பதிவுலகில் எத்தனை பேருக்கு தனிமரம் அவர்களை தெரியும் என்றால் நிச்சயம ஏனைய பதிவருடன் ஓப்பிடும் போது அந்த விகிதாசாரம் குறைவுதான் காரணம் அவர் எப்போதும் மொய்க்கு மொய் என்ற கலாச்சாரத்தை விரும்பியவர் இல்லை.

ஒரு பதிவு பிடித்திருக்கா அதை எழுதியவர் அவருடன் முரண்படுபவராக இருந்தாலும் அதை பாராட்டும் மனநிலை உடையவர்.ஒரு பதிவு பிடிக்கவில்லையா அந்தப்பதிவுக்கான மாற்றுக்கருத்தை அது நண்பனாக இருந்தாலும் முகத்துக்கு நேரே விமர்சனம் செய்பவர் இதனால் அவர் பதிவுலகில் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம்.

பதிவுலகில் எம் பதிவுகள் பலரால் படிக்கப்படவேண்டும் அதிகம் ஹிட்ஸ் அடையவேண்டும் என்று விரும்பாத பதிவர்கள் யார் இருக்கமுடியும் நான் உட்பட அப்படித்தான்.

ஆனால் தனிமரம் நேசன் அண்ணா வித்தியாசமானவர் ஹிட்ஸ் என்ற மாயையை தள்ளிவிட்டு தமது படைப்புக்கள் ஒருவர் படித்தாலும் பரவாயில்லை அதை எழுதும் போது ஒரு ஆத்ம திருப்தி ஏற்படவேண்டும் என்பது அவரது கொள்கை.

பதிவுலகில் ஒரு தொடர் எழுதுவது என்பது அவ்வளவு இலகுவானது இல்லை ஒரு 3,4 தொடர் எழுதியவன் என்ற முறையில் அதன் கஸ்டங்கள் எனக்கு புரியும் ஆனால் ஒரு தொடரை சிறப்பாக எழுதும் போது அதற்கான அங்கீகாரம் பதிவுல் சிறப்பாக இருக்கும்.என் நண்பர்கள் தளம் பலருக்கு தெரிய காரணம் நான் எழுதிய மறக்கமுடியாத பாடசாலைநாட்கள் என்ற தொடர்தான்.இந்த தொடரில் தான் நேசன் அண்ணா எனக்கு அறிமுகமானார்.

ஒரு தொடருக்கு தொடர்ச்சியாக படிக்கும் வாசகர்கள் கருத்துரையை சராமாரியாக வழங்கினால் 50,100 கமண்ட்கள் இலகுவாக வந்துவிடும் பார்பவருக்கு அந்த தொடர் பலரால் படிக்கப்படுவது போல ஒரு மாயை தோன்றும்.ஆனால் உண்மையில் அந்த தொடரை சில நூறு பேர்தான் படிப்பார்கள் ஏன் வெரும் 20 பேர் மட்டும் படித்த சந்தர்பங்களும் என் அனுபவத்தில் உண்டு.

ஆனால் எத்தனை பேர் படிக்கின்றார்கள் என்பதைவிட நாம் எத்தனை பேரை நம் எழுத்தால் கவர்கின்றோம் என்பது முக்கியம்.அந்தவகையில் திரு நேசன் அண்ணாவின் தொடர்கள் பலரை கவர்ந்துவிட்டது என்பது நிச்சயம் வாழ்த்துக்கள் பாஸ்

இந்த மலையகத்தில் முகம் தொலைத்தவன் என்ற தொடர் எதிர்காலத்தில் ஒரு புத்தகமாகவேண்டும். இணையம் என்பதை தாண்டி சாதாரன மக்களையும் சென்று சேறும் போது இதற்கான வரவேற்பு சிறப்பாக அமையும் எனவே எதிர்காலத்தில் இது புத்தகமாக வெளிவரவேண்டும் என்பது என் ஆசை

அவரது ஆரம்ப கால தொடர்களுடன் ஓப்பிடும் போது அவர் தற்போது எழுதும் உருகும் பிரஞ்சுக்காதலி தொடரில் அவரது எழுத்து இன்னும் மேம்பட்டுள்ளது.தொடர்ந்து தரமான படைப்புக்களால் பதிவுலகில் மேலும் சிறந்த பல அங்கீகாரங்கள் தனிமரம் அவர்களுக்கு கிடைக்கவேண்டும் என்று வாழ்த்தி நிற்கின்றேன்.

அன்புடன்
ஒருவாசகனாக கூடவே பயணிக்கும்
அன்புத் தம்பி
கே.எஸ்.எஸ்.ராஜ்
 இந்த பெருமை எல்லாம் இந்த வலை தந்த உறவு இன்றுவரை நண்பனை தனிமரம் முகம் பார்த்தது இல்லை ஆனால் இவன் பதிவில் நான் எப்போதும் வருவேன் பால்க்கோப்பி கேட்டு நண்பனும் கலாய்த்தாலும் கோபிக்க மாட்டான் தனிமரம் குடிக்க கேட்கின்றது வாந்தி எடுக்க இல்லை என்று :)))))



ராஜ் விமர்சனத்தைத்தொடர்ந்து மின்நூல் நீண்ட விமர்சனத்தை


விழியில் விழுந்தவை பதிவாளினி கலைவிழியின் உரை காட்சிப்படுத்தப்பட்டது!
பதிவர் நேசனின் மலையகத்தில் முகம் தொலைந்தவன், மின்நூல் வெளியீட்டு நிகழ்வில் கூடியிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். இந்நிகழ்வில் எனது கருத்துக்களும் பகிர கிடைத்தமை மிக்க மகிழ்ச்சியே.

மலையகத்தில் முகம் தொலைத்தவன் ராகுலிடம் மனதை தொலைத்தவர்கள் பலர். அந்த வரிசையில் தனிமரம் நேசன், கதை ஆசிரியர் வாசகர்களையும் இச் சமுத்திரத்தினுள் முத்தெடுக்க அழைத்துச் சென்று ராகுலுடன் இரண்டறக் கலக்க வைத்து விட்டார். ஒவ்வொரு இலங்கைத் தமிழர்களின் வரலாற்றிலும் ஏதோ ஒரு மூலையில் யுத்தத்தின் வடுக்கள் ஆறாமல் இருப்பது நிதர்சனம். அதிலும் இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதி மற்றும் தீவுப்பகுதிகளில் இயக்கங்கள் செய்திட்ட வக்கிரகங்களை சொற்களால் விபரிக்கவோ மழுங்கடிக்கவோ முடியாது.

மலையகத்தில் முகம் தொலைத்தவன் நாயகன் ராகலும் அப்படியானதொரு கால பாதிப்பில் இளமைக் கனவுகளை, தாயினன் அன்பை, சகோதர பாசத்தை, பிறந்த ஊரை தொலைத்து மலையகம் செல்கிறான். அங்கு அங்கு ராகுல் முகங் கொடுக்கும் பிரச்சினைகள், சவால்கள், இதேவேளை அவன் மலையகத்தில் பெற்றும் கொள்ளும் சாதக விடயங்கள் என அனைத்தையும் ஆசிரியர் சொல்லிவிட மறக்கவில்லை.

இத்தொடர் கதையில் குடும்ப பாசம், கூட்டுக் குடும்பம், தீவு பகுதி மக்களின் பழக்கவழக்கங்கள், உணவுமுறை, திருவிழாக்கள் என அனைத்து விடயங்களையும் ஆசிரியர் மிக லாவகமாக கதையினை கொண்டு சென்று படம்பிடித்துக் காட்டிவிட்டார். அந்த காலப்பகுதியில் பிரபலமானவை, அக்கால நடமுறை என்பவற்றை இத்தொடர் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

அதேபோல் மலையக சூழலையும் ஆசிரியர் நேசன் சிறிய சிறிய அசைவுகளினூடாகவும் எளிவாக விபரிக்கிறார். தமிழ் சினிமாவைப் பார்த்தால் எப்படி இலகுவில் விளக்கம் கொள்ள முடியுமோ அவ்வாறு நேசன் தனது எழுத்தின் மூலம் வாசகர்களுக்கு விளக்கம் கொடுக்கிறார். ஒவ்வொரு சம்பவங்களையும், காட்சிகளையும் அவரது வசனநடை இலகுவில் கண்முன் கொண்டு வருகிறது. தொடரை வாசிக்கும் போதே காட்சிகள் மனத்திரையில் காட்சிப்படுத்தப்படுகின்றன.

உவமைகளைக் கையாழ்வதில் ஆசிரியர் நேசன் தனித்துவம் கொள்கிறார். கதை நகரும் காலப்பகுதிக்கு ஏற்றாட் போல், அக்கால பிரபல சம்பவங்களையும் மக்களின் நடைமுறையில் உள்ள எளிய சம்பவங்களையும் கொண்டு உவமைகளை கொடுக்கிறார். இது கதையை வாசிக்கும் வாசகர்களுக்கு கதையுடன் நெருக்கத்தை மேலும் அதிகரிக்கிறது.

சிங்கள மக்கள் மத்தியில் அன்றாட நடைமுறை, மலையக மக்களின் அன்றாட போராட்டகள் என அனைத்தையும் தனது வாசகனுக்கு ஆசிரியர் வளமே வளங்கியிருக்கிறார். யாழ்ப்பாண அதுவும் தீவுப்பகுதி மக்களின் மொழிநடையை கையாண்டுள்ளதில் ஆசிரியர் வெற்றி பெற்றுள்ளார். கதையில் ராகுல் எவ்வாறு மனதில் பதிகிறானோ பங்கஜம் பாட்டியும் நம் மனதில் ஒரு தாக்கத்தை எற்படுத்தி வடுகிறார். பங்கஜம் பாட்டியின் பாத்திர படைப்பு மிக அருமை. அவரது இயல்புகளை பல சவால்களுக்கு மத்தியில் அசிரியர் படைத்திருப்பதை மறுக்கமுடியது.

உண்மைச் சம்பவங்களை இலக்கியமாக தொகுத்து அதனை ஒரு சுவைமிக்க கதையாகவும் தந்த ஆசிரியர் சில சூடான காட்சிகளுக்கு திரையிட்டு மறைத்து விட்டார் அல்லது தொட்டும் தொடாமலும் தனது கதையை நகர்த்தி விட்டார் என என்னத் தோன்றுகிறது. ராகுலைப் போலவே ஆசிரியரும் வானெலி மீதும் அறிவிப்புத்துறை மீதும் கொண்ட ஈடுபாடு கதையின் ஆரம்பம் முதல் இறுதிவரை காண்பிக்கப்படுகிறது. அந்த விடயத்தில் ஆசிரியர் சற்று தன்னிலை மறந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

மலையகத்தில் முகம் தொலைத்தவன் உண்மைச் சம்பவங்களை கொண்டு நம்மத்தியில் வந்திருப்பவன். இவன் இலக்கியத்தில் முகம் தொலையக் கூடாது. ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பது என் கருத்து. எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு இலங்கைத் தமிழன் வாழ்வும் சாவும் ஒவ்வோர் வரலாற்றுமச் சுவடுகள். அவற்றை காலங் காலமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பது எனது அவா. கற்பனைக் கதைகள் போல் அல்லாது தொடர் நாயகன் ராகுல் ஒரு தனி நபராக இங்கு விளிக்கப்படவில்லை. அவன் ஒரு வரலாற்று உண்மை.

பதிவர் நேசன் அவர்களின் எழுத்துப் பயணம் தொடர மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

நன்றி




தொடரும்!!   

4 comments:

  1. அன்பர்களின் கருத்தையும் பதிவாக்கித் தந்தமைக்கு பாராட்டுக்கள்... நன்றி... தொடர வாழ்த்துக்கள்... (TM 2)

    ReplyDelete
  2. மச்சி டவுன் லோட் பண்ணிடன் நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக வாசிக்கிறேன்.. ஆனால் உங்க சில பதிவுகளிலே உங்க எழுத்தின் வலிமை தெரிது.. வாழ்த்துக்கள்.. தனிமரம் என்றிங்க ஆனா உங்கள பார்த்தா தோட்டம் போல இருக்கு.. கலக்குங்க நேசன்

    ReplyDelete
  3. ஆ .....மி நூலையும் தளத்தில சேர்த்துட்ட்டீங்க இனி நிறைய வாசகர்கள் மின் நூல் பற்றி கருத்துச் சொல்ல இலகுவாக இருக்கும் ...இலக்கிய வாதிக்கு விமர்சனம் தானே அடிப்படை.....

    ReplyDelete