22 August 2012

எடிசன் மாளிகை பார்த்தாலே பரவசம்.!

வசந்தகாலத்தின் இந்த சுகமான நாட்களில் பலர் சுற்றுலா செல்வார்கள் .புலம்பெயர்வாசிகள் போவதும். மீள்வதுமாக இருக்கும் நிலையில் ஒரு கோட்டைக்கு சுற்றுலா செல்வோமா? 

வாருங்கள் "எண்ணங்களாலே இறைவன் தானே .'வண்ணங்களாலே வடிவம் தானே எழில் கொஞ்சும் மலையகமே "என்று ஒரு ஈழத்து மெல்லிசைப்பாடல்  புகழ்பெற்றது ஒரு காலத்தில் .

முத்தழகு பாடிய பாடல் நானும் முணுமுணுத்த பின் ஒரு காலத்தில். இந்த கோட்டையில் நானும் ,நண்பர்கள் சகிதம் ஒரு ஜாலியான சுற்றுலா போன நினைவுகள் இன்னும் மறக்க முடியாது.

முன்னம் இந்தக் கோட்டையை தொடரில் சொல்லி இருந்தாலும் விபரமாக சொல்லவில்லை என்று நண்பன் கூறியதும் ,இல்லாமல் இந்த புகைப்படங்களையும் அனுப்பியிருந்தான்.


உருகும் பிரெஞ்சுக்காரியை ஓய்வு கொடுத்துவிட்டு இந்த கோட்டை பற்றி எழுதச் சொல்லிய நண்பேன்டா.

 இந்தவாரம் அரபுலகில் இருந்து தாயகம் போகின்ற நிலையில் அவனை சந்திச்ச இந்த கோட்டையை மறக்கமுடியாது .


வாருங்கள் இந்தக்கோட்டைதான் எடிசன் பங்களா. இலங்கையின் எழில் கொஞ்சும் ஊட்டியைப்போல குளிர்தேசமான அப்புத்தளையில் இருக்கின்றது .

அப்புத்தளையில் இருந்து வெலிமட போகும் பேரூந்தில் போனால் இந்த மாளிகையை தருசிக்கலாம்.

 மனதுக்குப் பிடித்தவர்களுடன் உடரட்டை ரயிலில் வருபவர்கள் .அப்புத்தளை தரிப்பிடித்தில் இறங்கி "பொடிநடையக போறவரே "என்று டூயட் பாடி வந்தால்.

 சிலமணித்தியாலத்தில் உள்நுழைய முடியும்.


ஆங்கிலேயர் ஆட்சியில் ஆளுநர் ஆக இருந்த சேர் எடிசன் வாழ்ந்த இந்த மாளிகையில்.



 அவரின் ஆட்சியதிகாரம் ;அதில் இவர் செய்த கட்டுமான செயல்பாடுகள் எல்லாம் கோட்டோவியமாக காட்சியளிக்கின்றது.

எடிசனின் இரண்டாம் தார மனைவி அவரை வரைந்த கோட்டோவியம் மிகமுக்கியம் இந்த அரன்மனையில்.


அதிகமான அறைகள், கண்ணாடிபேழைகள் ,முற்கால நினைவுச் சின்னங்கள் எல்லாம் இன்றும். அவரின் நினைவாக சுற்றுலாப்பயணிகளை கவரும் வண்ணம் மாகானசபை மூலம் பராமரிக்கப்படும் இந்த மாளிகை .அப்புத்தளையில் அதிகம் சுற்றுலாவாசிகளை ஈர்க்கும் ஒரு சிறப்பான இடம்.


மனதிற்கு பரவசம் தரும் மலைப்பகுதியில் இது இருப்பதால் ஆடி ,ஆவணியில் அதிகம் சூரிய ஒளி தெரியும் பகல் பொழுதில் போனால் மிகவும் நேர்த்தியாக இயற்கையோடு அமைந்திருக்கும் இந்த எடிசன் பங்களாவை பார்வையிடலாம்! விரும்பியவரை கைபிடித்துச்செல்லும் போது இந்த மலைமாளிகையில் டூயட்பாடச் சொல்லி மனது ஏங்கும் என்பது போய் வந்தவர்களின் அனுபவம் ஆகும். ஆனால் தனிமரத்திற்கு அந்த அனுபவம் இல்லை !ஹீஈஈஈஈஈ. நாங்கள் குழுவாக  போனபோது நான் ரொம்பச் சின்னப்பையன்!



சுற்றுலா போகும் போது பேச்சுத்துணைக்கு ஆட்கள் இல்லையா? கவலை வேண்டாம் .இருக்கின்றது வானொலி விரும்பிய பாடல் கேட்கலாம் ஒரு தபால் அட்டை போட்டால் அது ஒரு காலம்.





 இன்று கைபேசி மூலம் இணையத்தில் விரும்பிய பாடலுக்கு மெயில் போட்டால்,;முகநூலில் தகவல் அனுப்பினால் பாடல் கேட்கலாம் புரட்சி எப்.எம்மில். ராகவன் குரலில் வரும் காதலா காதலா நிகழ்ச்சியில் நீங்களும் இனிய பாடல்களை கேட்டு மகிழ இணையுங்கள் புதுமையின் புரட்சியில்!

26 comments:

  1. இரவு வணக்கம்,நேசன்!நலமா?"எடிசன் மாளிகை" இப்போது தான் கேள்விப்படுகிறேன்.நீங்கள் போகேக்கை சின்னப் பொடியன்,நான் இனிப் போய்!!!!!!!!!!!!!!!!!???????ஹி!ஹி!ஹி!ஹ!ஹ!ஹா!!!!!!!!வடிவாயிருக்கு!////கோப்பி ரெடி பண்ண வேணாம்!நான் கொண்டு வந்தனான்!ஹ!ஹ!ஹா!!!!!

    ReplyDelete
  2. எண்டாலும் தாருங்கோ!ஓசியில குடிக்கிறதிலையும் ஒரு டேஸ்ட் இருக்கு,ஹோ!ஹோ!ஹூ!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  3. ரெண்டு,மூண்டு நாளையில கூட்டம்(குடும்பம்)ஒண்டு சேரும்!

    ReplyDelete
  4. இரவு வணக்கம் யோகா ஐயா நலமா வாங்க ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!

    ReplyDelete
  5. ரெண்டு,மூண்டு நாளையில கூட்டம்(குடும்பம்)ஒண்டு சேரும்!//ம்ம் ஆவலோடு காத்துக்கொண்டு இருக்கின்றேன் மீண்டும் ஐயா ஜாலியாக சபையை நடத்த வேண்டும் என்று ஒரு கொசு உருகுது!ஹீ

    ReplyDelete
  6. எண்டாலும் தாருங்கோ!ஓசியில குடிக்கிறதிலையும் ஒரு டேஸ்ட் இருக்கு,ஹோ!ஹோ!ஹூ!!!!!!!!!!!!!!!// நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  7. ஆமா எல்லோரு ரயில் பயணங்களை அழகாகவும் மறக்க முடியாததாகவும் கூறுகிறார்கள்....எனக்கு அந்த அனுபவம் கிடையவே கிடையாது..

    ReplyDelete
  8. முயற்சிக்கிறேன் எடிசன் பக்கம் போவதற்கு

    ReplyDelete
  9. ஆமா எல்லோரு ரயில் பயணங்களை அழகாகவும் மறக்க முடியாததாகவும் கூறுகிறார்கள்....எனக்கு அந்த அனுபவம் கிடையவே கிடையாது..

    22 August 2012 12:09 //போய்ப்பாருங்க சிட்டுக்குருவி புரியும் ரயில் சிநேகம்!ம்ம்

    ReplyDelete
  10. முயற்சிக்கிறேன் எடிசன் பக்கம் போவதற்கு

    22 August 2012 12:09 //ம்ம் நன்றி சிட்டுக்குருவி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  11. naan ariya mudiyaathavaikalaiyum-
    ariya seythida ungal pathivu!
    uthavukirathu!

    mikka nantri!

    ReplyDelete
  12. வணக்கம் நேசன்...நல்லா ஊர் சுத்துறீங்கபோல ...ஹிஹிஹி....நல்லது மனசுக்கும் ஒரு ஆறுதல் அழகான இடங்களைப் பார்க்கிறதுகூட !

    அப்பா....வந்தாச்சு....அப்போ சுடச் சுட பால்க்கோபி சீனி போடாமல் தாங்கோ....சந்தோஷம் அப்பாவைக் கண்டது !

    ReplyDelete
  13. அப்புத்தளை...நானும் போயிருக்கிறன்.ஆனால் இந்த இடம் பார்த்ததாய் நினைவில்லை.எவ்வளவு அழகு எங்கள் நாடு !

    ReplyDelete
  14. ’எடிசன் பங்களா’ கேள்விப்பட்ட பெயராவும் இருக்கு.இனிப் போகும்போது கட்டாயம் போவேன் !

    ReplyDelete
  15. ஆஆஆஆஆ இவ்வளாவு அழகான மாளிகையா.. ஹப்புத்தளையிலோ?... சூப்பர்... நாம் மலைநாடு போயிருக்கிறோம், ஹப்புத்தளை சுற்றிப் பார்த்ததில்லை.

    ReplyDelete
  16. இலங்கை ரெயில்வே ஸ்டேஷன் பார்க்கவே நெஞ்சுக்குள் என்னவோ செய்யுது:)

    ReplyDelete
  17. உடரட்டை ரயிலில் வருபவர்கள்///


    ஹையோ உடரட்டை பெயரைக் கேட்டிருக்கிறேன் ஏறியதில்லை.

    ReplyDelete
  18. சுற்றுலா போகும் போது பேச்சுத்துணைக்கு ஆட்கள் இல்லையா? கவலை வேண்டாம் .இருக்கின்றது வானொலி விரும்பிய பாடல் கேட்கலாம் ////

    என்னாது?:) சுற்றுலாவில புரட்சி எஃப் எம்மோ முடியல்ல:))).. ஹையோ இதை ரேடியோ ஓனர் பார்த்திடப்பூடா:).

    ReplyDelete
  19. இன்று கைபேசி மூலம் இணையத்தில் விரும்பிய பாடலுக்கு மெயில் போட்டால்,;முகநூலில் தகவல் அனுப்பினால் பாடல் கேட்கலாம் புரட்சி எப்.எம்மில். ராகவன் குரலில் வரும் காதலா காதலா நிகழ்ச்சியில் நீங்களும் இனிய பாடல்களை கேட்டு மகிழ இணையுங்கள் புதுமையின் புரட்சியில்!///

    ம்ம்ம் எனக்கும் கேட்க ஆசைதான்... பார்ப்போம்..

    ReplyDelete
  20. ////. ஆனால் தனிமரத்திற்கு அந்த அனுபவம் இல்லை !ஹீஈஈஈஈஈ. நாங்கள் குழுவாக போனபோது நான் ரொம்பச் சின்னப்பையன்!////

    என்ன ஒரு ஒற்றுமை எனக்கும் உங்களுக்கும் ஆனால் நான் ரொம்ப சின்ன பையன் இல்லை ஓரளவு வளர்ந்த பையன் தான் ஹி.ஹி.ஹி.ஹி......

    இலங்கையில் உள்ள சுற்றுலா தளங்களில் இதுவும் ஒன்று அதுவும் மலையகத்தில் இருப்பது மேலும் அழகு

    ReplyDelete
  21. அறிந்தேன்...

    பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...(TM 4)

    ReplyDelete
  22. அடடா இங்கதான் ஈருக்கா...நேசண்ணா இவ்வளவு நாளும் தெரியாமல் போய்டே!!பகிர்விற்கு நன்றி!வாழ்த்துக்கள் அண்ணா.பாத்து உருகும் பிரஞ்சுக்காதல் அதிகம் உருக முன்னாடி கூட்டிட்டு வாங்கோ...!
    சந்திப்போம்.

    ஒரு தேநீரும் அவன் நினைவுகளும்.!!!!! !

    ReplyDelete
  23. இதெல்லாம் பாக்கனும்னு ஆசைதான் :)
    எங்க பாக்காமல் விட்டிடுவேனொன்னு பயம்மா இருக்கு :P

    ReplyDelete
  24. அருமையான பகிர்வு! நன்றி! வலைச்சரம் மூலம் முதல் வருகை! தொடர்கிறேன்!

    இன்று என் தளத்தில்
    அஷ்டமி நாயகன் பைரவர்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html

    ReplyDelete
  25. எடிசன் பங்களாவுக்கு எங்களையும் அழைத்துச்சென்றதற்கு நன்றி.

    ReplyDelete
  26. எடிசன் பங்களாவை பற்றி அறிந்து கொண்டேன்.
    வலைச்சரத்தில் இருந்து இங்கு வந்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.

    ReplyDelete