27 November 2012

பிரெஞ்சுக்காதலியும் பிரியும் தனிமரமும்.

....கனவரம் தாருங்கள்
தெய்வங்களே!

நன்றி கவிதாயினி ஹேமா கவிதை!
////////////////////////////////////////////////தெய்வங்களை வணங்கிய வண்ணம்!

 உறவுகளே நலமா??

என்னச்சு தனிமரம் ஒரே மூச்சில் பிரெஞ்சுக்காதலியை வலையில் எழுதுகின்றதே ?என முகநூல் மற்றும் நேரில் சில உறவுகள் கேட்ட போது தனிமரம் ஒன்றும் சொல்லவில்லை .

காரணம் என் தனிப்பட்ட ஆன்மீக பயணத்திற்கான பல தனிப்பட்ட ,தடைகளினால் கொஞ்சம் அமைதி நிறைய அவஸ்த்தையை இந்த தொடர் தந்தது .பின்னனியில் .

எது எப்படியோ என் வலையுலக பயணத்தில் இந்த ஆண்டு இரண்டு தொடரினை எழுதிய மனத்திருப்தி நிறைவான சந்தோஸம்.அதில் ஒன்று மின்நூல் கண்டு அடுத்த கட்டமாக அச்சில் வரும் முதல்கட்டத்தில் தற்போது நண்பனிடம் சென்று இருக்கின்றது.விரைவில் நூலாக வரும் என்ற நம்பிக்கையில் தனிமரம்!

இந்த உருகும் காதலிக்கு எந்த திரட்டியில் எத்தனை வாக்கு வாங்கியதோ ?இல்லை எத்தனை பின்னூட்டம் குறைநிறைகளை சுட்டிக்காட்டியதோ ?

என்று திரும்பி பார்க்காமல் முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் ஓடிவிட்டேன்
பல இடத்தில் .
என் ஓட்டத்துக்கு ஈடுகொடுத்து பின்னூட்டமாக கருத்துரைக்க ஓடிவந்த தின்டுக்கல் தனபாலன் சாருக்கு என் மனம்கனிந்த நன்றிகள் முதலில்!


இப்படி ஒரு தொடரினை எழுத தூண்டிய என் உயிர் நண்பன் டெனிலுக்கு நன்றி .

அவனைத்தொடர்ந்து இந்த விசா வலியை புலம்பெயர் வாழ்வின் சமூகநிலையை சாடி எழுத பின்னனியில் இருந்த அன்பு நண்பர் மாத்தியோசி மணி .அவரின் வழிக்காட்டல் தான் இந்த தொடரில் என் நண்பன் ஜீவனின் கதையை தனிமரம் பதிவு செய்ய உதவியது!

அதே போல இனவாத ஆட்சியில் இருந்து புலம்பெயரும் பலரின் அவலத்தையும் அவர்கள் பயண முகவர்களினால் கைவிடப்படும் கையறு நிலையை நிச்சயம் இனிவருவோருக்கு பாடமாகும் வண்ணம் பதிவுலகில் கருத்து அவசியம் என்று சொன்ன நெற்கொழுதாசன் இன்னொரு உதவியாளர் .

இவர்களுக்கு என் மனம்கனிந்த நன்றிகள் வாழ்த்துக்கள்!


தொடரில் சங்கவியின் புலம்பெயர் அவலத்தின் நிலையை செதுக்க காரணம் அன்பு நண்பி கவிதாயினி ஹேமாவின் வழிகாட்டல்! ஒரு சில விடயம் பேசமுயன்றேன் புலம்பெயர்வின் வழியில் சபலத்தில் போய் சகதியில் விழும் யுவதிகள் பற்றி .

இந்த விடயத்தை அதிகம் பேச நினைத்தாலும் சமூக கடமையில் இருந்து விலகக்கூடாது என்ற ஆதங்கத்தில் தொட்டுவிட்டுச் சென்ற திருப்பதி போதும்.

இந்த தொடரில் ஜீவன் காத்திருந்த காலம் நிஜம் ஒரு நண்பனாக தனிமரம் அவனை அறியும் 5 வருடம் காத்திருந்த போது பிடிக்கும் என்று வாய்மொழி சொல்லாத நிசா !மாயாவுக்கு சம்மதம் சொல்லிய பின்
அவன் சிங்கப்பூர் போவதற்கு முதல் நாள் பிடிக்கும் என்றதை ஏற்க முடியாத துரதிஸ்ரம் !என்றாலும் படிப்பு முக்கியம் என்ற நிசாவின் நிலைப்பாடும் தெளிந்த முடிவினை சுதந்திர தேச மங்கை எடுக்காத நிலையுமே இந்த காதல் உருக காரணம் !

ஜீவன் நிசாவை விட்டு தன் குடும்பத்தார்களின் வார்த்தைகளுக்கு மதிப்புக்கொடுத்தான் நண்பர்கள் அவனுக்கு முக்கியம் என்ற தீர்மானம் சரியாக இருந்தது..

படிப்பு முக்கியம் அதே நேரம் குடும்பமும் முக்கியம் படிப்பைச் காரணம் சொல்லி காதலை வெறுப்பது நியாஜம்மில்லை என்ற ஜீவனின் கருத்துச் சரி

என்ற பார்வையில் இதில் ஒரு மூன்றாம் தரப்பாக என் பங்குக்கு பாடலும் சேர்ந்த

நண்பர்களின் கூட்டு உழைப்புத்தான் நீங்கள் தனிமரம் வலையில் படித்த தொடர்!



இந்த தொடருக்கும் தனிமரம் நேசனுக்கும் எந்த தொடர்பும் இல்லை .

இந்த தொடரில் எழுத்துப்பிழை திருத்தி அழகிய படத்தினை தன் தொழில் நுட்ப திறமையால் வடிவமைத்த நண்பன் நிகழ்வுகள் கந்தசாமிக்கு நன்றி.

அவருடன் இன்னும் சமயத்தில் அவசரத்துக்கு எழுத்துப்பிழை தீர்க்க உதவிய
என் அம்மாவுக்கும் ,இன்னொரு பதிவாளினி தங்கைக்கும் ,மற்றும் பாலா சோபிக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்!

பதிவுலகில் பல நண்பர்களின் அன்பான பின்னூட்டம் இன்னும் எழுத தூண்டியது .தனிமரத்தை!

இடையில் யோகா ஐயாவின் உறவில் ஏற்பட்ட துயரம், மற்றும் என் நண்பன் டெனில் புகும் வீட்டில் ஏற்பட்ட துயரம் என பலது என்னைப்பாதித்த போதும் !

வலை உறவுகளின் அன்பான வாக்கும் ஊக்கிவிப்பும் என்னை இந்தளவு தூரம் எழுத வைத்தது.

சோர்ந்து போகும் போதெல்லாம் தொடரை இடைநிறுத்தாமல் இருக்க.!

அஞ்சலின்,அதிரா,ராச்,சிட்டுக்குருவி(ஆத்மா),ரெவெரி,துசியந்தன்,முரளிதரன்,முத்தரசு,செங்கோவி,நாஞ்சில் மனோ,மகேந்திரன்,தென்றல்,எஸ்தர்-சபி,கலை,மாத்தியோசி மணி,மைந்தன் சிவா,ஹேமா,யோகா ஐயா,குட்டன்,சுரேஸ்,அம்பலத்தார் ஐயா,ஏரம்பமூர்த்தி,இரவின் புன்னகை,சொரூபன்,பாலகணேஸ்,ஹரி,சீனு,அவர்களும் உண்மை, மாலதி, காற்றில் என் கீதம் தோழி! இன்னும் என் முகநூல் நண்பர்கள் மற்றும் குழுமங்கள் ஆன இன்னும் என்ன தோழா,நண்பர்கள், நீ வருவாய் , விவாதமேடை,பதுளை- சரஸ்வதி தேசிப்பாடசாலை குழு, என்பனவற்றில் இருக்கும் உறுப்பினர்கள் இந்த தொடரினை லைக் பண்ணி ,ஆதரித்த அன்பு உள்ளங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள் உங்களின் தொடர் ஊக்கிவிப்புத்தான் தனிமரம் வலையில் வலம் வர உந்து சக்தி!

உங்கள் எல்லோருக்கும் என் நன்றிகள் !பல பின்னூட்டத்துக்கு இன்னும் பதில் போடவில்லை அவைக்கு பதில் தருவேன்.

தனிப்பட்ட ஆன்மீகப்பயணத்தினால் பதிவுலகில் இருந்து வெளியேறிச் செல்வதால்.


இனி தனிமரம் தோப்பாகிய குதுகலத்துடன் வரும் ஆண்டில் உங்களுடன் இணையத்தில் இணைந்து இருக்கும்.

மீண்டும் சந்திக்கும் வரை என் உறவுகளுக்கு நன்றி சொல்லிக்கொண்டு முன்கூட்டிய கிருஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

. இந்தப்பாடலுடன் !


மீண்டும் வலையில் இணையும் வரை


என்றும் அன்புடன்

தனிமரம் நேசன்!


37 comments:

  1. We will miss you...Comeback soooon.....

    ReplyDelete
  2. நன்றி சொந்தமே...

    மீண்டும் வாங்க....

    விரைவாக.....

    ReplyDelete
  3. வணக்கம் நேசன்
    ஆன்மீகப் பயணத்தை
    அழகாய் நிறைவேற்றி வாருங்கள்....

    நாங்கள் காத்திருக்கிறோம்...

    ReplyDelete
  4. காலை வணக்கம்,நேசன்!என்னை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.இருப்பினும் சிறு நெருடல் கூசல்,அப்படி என்ன தான் செய்து விட்டேன்,என்று.உங்களுக்கும்,முற்கூட்டிய பிறக்க இருக்கும் புதிய ஆண்டு வாழ்த்துக்கள்.ஒற்றை மரத்துக்கு டாட்டா,சந்தோஷமாய் இருக்கிறது!

    ReplyDelete
  5. மின்சாரம் இருக்கும் போது உங்கள் தளத்தை முதலில் படித்து விடுவது வழக்கம்... அதே போல் கண்ணொளி பாடல்களையும் ப்ளே செய்து விட்டு, முழுவதும் load ஆனவுடன், பாடல் கேட்டுக் கொண்டே மற்ற தளங்களையும் படிப்பேன்...

    என்னை ஞாபகம் வைத்துக் கொண்டு எழுதியதற்கு மிக்க நன்றி சார்... விரைவில் மற்றொரு தொடரை எதிர்ப்பார்க்கிறேன்...

    வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  6. மீண்டும் வாருங்கள்.

    ReplyDelete
  7. இனி தனிமரம் தோப்பாகிய குதுகலத்துடன் வரும்
    //////////////////////////

    நீண்ட நாட்களாக இதைத்தான் எதிர்பார்த்தேன் உங்களிடன்..
    சோகம் நிறைந்த பதிவுகளை தனிமரம் தாங்கி வருவது எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது நிறைய இடங்களில் நிறைய நபர்களிடம் சொல்லியிருக்கிறேன் ஏன் இன்னமும் நடந்தவற்றை எண்ணி......
    அவைகளால் மேலும் சோகமேதான்

    சிறந்த தீர்மானம் ஆத்மீகம் மீண்டு நலமுடன் வர வாழ்த்துகிறேன்.
    என்னையும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி நேசன் அண்ணா

    ReplyDelete
  8. //இந்த தொடருக்கும் தனிமரம் நேசனுக்கும் எந்த தொடர்பும் இல்லை .//// நம்பிட்டோம்...

    என்ன பிரியாவிடைபோல சொல்லிப் போறீங்க.. விரைவில் வாங்கோ.. கிரிஸ்மஸ் எல்லாம் முடிய காலம் இருக்கே.

    ReplyDelete
  9. We will miss you...Comeback soooon.....//வாங்க ரெவெரி அண்ணா முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ கொஞ்சம் ஆன்மீகம் கடந்து வருவேன்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  10. நன்றி சொந்தமே...

    மீண்டும் வாங்க....

    விரைவாக.....// வாங்க சீனி அண்ணா மன்னிக்கவும்என்னை முதலில் உங்கள் பெயர் மற்றும் இமா, அருணா என சில உறவுளை குறிப்பிடாம்ல் விட்டு விட்டேன்!நிச்சயம் சீனி கவிதையை ரசிப்பேன்!நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!

    ReplyDelete
  11. வணக்கம் நேசன்
    ஆன்மீகப் பயணத்தை
    அழகாய் நிறைவேற்றி வாருங்கள்....

    நாங்கள் காத்திருக்கிறோம்...

    27 November 2012 18:21 // வணக்கம் மகி அண்ணா! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!மீண்டும் சந்திப்போம்.

    ReplyDelete
  12. காலை வணக்கம்,நேசன்!என்னை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.இருப்பினும் சிறு நெருடல் கூசல்,அப்படி என்ன தான் செய்து விட்டேன்,என்று.உங்களுக்கும்,முற்கூட்டிய பிறக்க இருக்கும் புதிய ஆண்டு வாழ்த்துக்கள்.ஒற்றை மரத்துக்கு டாட்டா,சந்தோஷமாய் இருக்கிறது!

    27 November 2012 22:28 //மாலை வணக்கம் யோகா ஐயா!உங்களைப்போன்றவர்களின் ஊக்கி விப்புத்தான் இப்படி தொடர் விரும்பிகளை இன்னும் தொடர் எழுத பதிவுலகில் ஊக்கி விக்கின்றது!வாழ்த்துக்கு நன்றி ஒற்றை மரம் என் முகவரி நோ டாட்டா!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ! நன்றி வருகைக்கும் கருத்துக்கும் ஐயா!மீண்டும் வருவேன்!ம்ம்

    ReplyDelete
  13. மின்சாரம் இருக்கும் போது உங்கள் தளத்தை முதலில் படித்து விடுவது வழக்கம்... அதே போல் கண்ணொளி பாடல்களையும் ப்ளே செய்து விட்டு, முழுவதும் load ஆனவுடன், பாடல் கேட்டுக் கொண்டே மற்ற தளங்களையும் படிப்பேன்...

    என்னை ஞாபகம் வைத்துக் கொண்டு எழுதியதற்கு மிக்க நன்றி சார்... விரைவில் மற்றொரு தொடரை எதிர்ப்பார்க்கிறேன்...

    வாழ்த்துக்கள்... நன்றி...

    27 November 2012 23:22 // நன்றி தனபாலன் சார் தனிமரம் சாமானியன் என்னை எல்லாம் சார் என்று அழைக்காதீங்க!ம்ம் அடுத்த தொடர் வரும் சார் அடுத்த வருடம்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  14. மீண்டும் வாருங்கள்.//நன்றி பாலா சார் மீண்டும் வருவேன்! வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  15. இனி தனிமரம் தோப்பாகிய குதுகலத்துடன் வரும்
    //////////////////////////

    நீண்ட நாட்களாக இதைத்தான் எதிர்பார்த்தேன் உங்களிடன்..
    சோகம் நிறைந்த பதிவுகளை தனிமரம் தாங்கி வருவது எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது நிறைய இடங்களில் நிறைய நபர்களிடம் சொல்லியிருக்கிறேன் ஏன் இன்னமும் நடந்தவற்றை எண்ணி......
    அவைகளால் மேலும் சோகமேதான்//ஹீ சிட்டு இது நண்பன் கதை!ஹீ!நேசன் ஒரு ஜொல்லுப்பார்ட்டி!ஹீ

    சிறந்த தீர்மானம் ஆத்மீகம் மீண்டு நலமுடன் வர வாழ்த்துகிறேன்./
    நன்றி வாழ்த்துக்கு பாய்!
    என்னையும் நினைவு கூர்ந்தமைக்கு !
    நன்றி நேசன் அண்ணா// உங்களின் பல பின்னூட்டம் இந்த தொடரை அதிகம் எழுத உந்து சக்தி பாய்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் சிட்டுக்குருவி பின் ஆத்மா!ம்ம்

    28 November 2012 01:51

    ReplyDelete
  16. இந்த தொடருக்கும் தனிமரம் நேசனுக்கும் எந்த தொடர்பும் இல்லை .//// நம்பிட்டோம்...//ஹீ வாங்க அதிரா நலமா!ம்ம்ம்

    ReplyDelete
  17. என்ன பிரியாவிடைபோல சொல்லிப் போறீங்க.. விரைவில் வாங்கோ.. கிரிஸ்மஸ் எல்லாம் முடிய காலம் இருக்கே.//ஹீ அடுத்த வருடம் தான் தனிமரம் வலைப்பக்கம்!ஹீ ஆன்மீகம் கொஞ்சம் அதிக நாட்கள்!ம்ம் நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  18. வணக்கம் பாஸ் மலையகத்தில் முகம் தொலைத்தவன் புத்தகமாக வெளிவர வாழ்த்துக்கள்.மீண்டும் பதிவுலகில் உங்களைக்கான

    ஜ ஆம் வெயிட்டிங்..............

    ReplyDelete
  19. there is a problem in our wireless router nesan .
    just now saw this post .
    inge library vanthen .nallavelai unga post parthen .


    neenga payanam prayaanam ellaam mudinthu santhoshamaa vaanga
    .veettil sagothariyai kettathaaga sollunga ,,

    ReplyDelete
  20. vanakkam anjelin!nalamaa?ippo thaan paarththen.blog problem therinthathu.sariyaanappuram vaangka!

    ReplyDelete
  21. வணக்கம் பாஸ் மலையகத்தில் முகம் தொலைத்தவன் புத்தகமாக வெளிவர வாழ்த்துக்கள்.மீண்டும் பதிவுலகில் உங்களைக்கான

    ஜ ஆம் வெயிட்டிங்.......// வாழ்த்துக்கு நன்றி ராச்!மீண்டும் சந்திப்போம்!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  22. there is a problem in our wireless router nesan .
    just now saw this post .
    inge library vanthen .nallavelai unga post parthen .


    neenga payanam prayaanam ellaam mudinthu santhoshamaa vaanga
    .veettil sagothariyai kettathaaga sollunga ,,

    30 November 2012 01:38 // நன்றி அஞ்சலின் அக்காள் வருகைக்கும் கருத்துரைக்கும் மீண்டும் சந்திப்போம்!

    ReplyDelete
  23. நன்றி யோகா அண்ணா ..மிகவும் பிசி மகளுடன் படிப்பு வேலை என்று கண்டிப்பா பின்னூட்டங்களில் சந்திப்போம் நேசன் மற்றும் யோகா அண்ணா அனைத்து நண்பர்களுக்கும்

    ReplyDelete
  24. இன்று தான் படித்து முடித்தேன்..

    உண்மை எப்போதும் கசப்பானது என்பார்கள். அதைப் படிக்கும்போது உணர்ந்தேன்.

    ஆன்மீகப் பயணம் முடித்துவிட்டு வந்தவுடன், அடுத்த தொடரை ஆரம்பியுங்கள்.

    இந்தப் படைப்புக்கு நன்றி.

    ReplyDelete
  25. நன்றி யோகா அண்ணா ..மிகவும் பிசி மகளுடன் படிப்பு வேலை என்று கண்டிப்பா பின்னூட்டங்களில் சந்திப்போம் நேசன் மற்றும் யோகா அண்ணா அனைத்து நண்பர்களுக்கும் // நன்றி அஞ்சலின், அக்காள் மீண்டும் சந்திப்போம்.

    ReplyDelete
  26. s best of luck.//நன்றி மதுரை சரவணன் சார் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்!

    ReplyDelete
  27. இன்று தான் படித்து முடித்தேன்..

    உண்மை எப்போதும் கசப்பானது என்பார்கள். அதைப் படிக்கும்போது உணர்ந்தேன்.

    ஆன்மீகப் பயணம் முடித்துவிட்டு வந்தவுடன், அடுத்த தொடரை ஆரம்பியுங்கள்.

    இந்தப் படைப்புக்கு நன்றி.// வணக்கம் செங்கோவி ஐயா.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!மீண்டும் சந்திப்போம்.

    ReplyDelete
  28. நலமா நேசரே?

    சகோதரி உங்கள் வசம் சேர்ந்தது குறித்து மட்டில்லா மகிழ்ச்சி...

    மீண்டும் சந்திப்போம்...



    ReplyDelete
  29. இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...

    ReplyDelete
  30. தங்களது எந்தத் தொடரையுமே முழுமையாக படிக்கும் சநதர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லை அண்ணா...

    வரும் வருடம் நிச்சயம் சந்திப்போம்

    ReplyDelete

  31. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    ReplyDelete
  32. இனிமேலதான் உங்க பதிவு எல்லாம் படிச்சுப்பார்க்கணும். நான் நேத்துதான் புதிதாக வலைப்பூ தொடங்கி இருக்கிறேன்.

    ReplyDelete

  33. வணக்கம்!

    தொடா்ந்து பதிவுகளைச் சூட்டித் தமிழில்
    படா்ந்து வலையைப் பரப்பு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு

    ReplyDelete
  34. அன்பு நண்பர் நேசன் வணக்கம். காலம் தாழ்த்திய புது வருட வாழ்த்துக்கள்!

    இப்பொழுதான் உங்கள் பக்கம் வந்துள்ளேன். நேரத்தை சிறைப்பிடித்து வைத்துக்கொண்டு அமைதியாக படிக்க ஏராளமாக இங்கு இருக்கிறதே....
    ஒவ்வொன்றாகப் படித்து உங்கள் படைப்புக்களுக்கு கருத்தளிக்க முயல்கிறேன்.

    தொடரட்டும் உங்கள் பணி....

    ReplyDelete
  35. வணக்கம் நேசன்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  36. இன்றை வலைச்சர அறிமுகப்படுத்தலில் உங்கள் பதிவை பற்றியும் சொல்லியிருக்கிறேன்..

    முடிந்தால் வருகை தாருங்கள் நன்றி.

    http://blogintamil.blogspot.com/2013/01/blog-post_25.html

    ReplyDelete