14 November 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -நாற்பது!!!

உன்னைப்பற்றி 
எழுதுகையில்
நிகழ்ந்துவிடுகிற
எழுத்துப்பிழைகளைப்
பார்த்து
முறைத்துக்கொண்டிருக்கின்றது 
பிழையில்லாத
என் காதல்!
(விழியீர்ப்பு விசை கவிதைத் தொகுப்பு -தபுசங்கர்)
சத்தியத்தின் சோதனைக்கு எத்தனைபேர் சாட்சி என்று கவியரசர் கவிதையின் ஆழம் புரியும் நேரம் வந்தது. நூடில்ஸ் எடுத்துக்கொண்டு மேலே வந்த ஜீவனுக்கு அதிர்ச்சி! பாரிஸ் உணவகங்களில் இடைக்கிடை வரும் பரீசோதகர்களில் சட்டரீதியான சுகாதார உணவுப்பரிசோதகர்கள் ,அரச கணக்காய்வாளர்கள் மற்றும் காவல் துறையினர் ஒன்றாக வருவார்கள், திடீர் விஜமாக..! அன்றும் அப்படித்தான் நடந்தது. வேலைத்தளத்தில் 8 பணியாளர்களில் ஜீவனுக்கு சொந்த விசா இல்லாதநிலை; பரீட்சித்த காவல்துறையினர் அழைத்துச் சென்றது விளக்க மறியலுக்கு!
பாரிஸ்சில் மட்டுமல்ல, ஐரோப்பா தாண்டி பல நாடுகளில் அகதியாக அலையும் நம்மவர்களின் விசா இல்லாத வேதனை வாழ்க்கையை வெளியில் சொன்னால் வெட்கம் என்றுவிட்டு, பூசி மொழுகாக்கினால் நம்மைப்போல இனியும் தாயகத்தில் இருந்து புலம்பெயரும் இளையவர்களுக்கு எப்படி வழிகாட்டமுடியும்??
வந்த நாட்டில் விசா கொடுப்பதில் ஆயிரம் சட்டத்திருத்தங்கள் வந்து விட்டது! இங்கு வராமல் இருந்துவிடு என்று சொல்லியிருக்கலாம். முன்னர் தெரிந்த உறவுகள் என்று இந்த விளக்க மறியலில் இருக்கும் போது ஞானம் பிறந்தது என்றாலும், இந்த விளக்கமறியல் கூடம் சாவச்சேரி காவல்துறை விளக்கமறியல் போலவோ கொம்பனித்தெரு காவல்துறை விளக்கமறியல் போலவோ இல்லை என்பதால் நிம்மதி!
ஆனால் மனதில் சஞ்சலம்; இதுவரை எகிப்திய நாட்டில் பிறந்தவரும் இந்தநாட்டு குடிமகனுமான என முதலாளிக்கு இது வரை சொல்லியது இல்லை எனக்கு விசா இல்லை; நான் நண்பனின் விசாவில் தான் உங்களிடன் வேலை பார்க்கின்றேன் என்று...! ஏன் தாயகத்தில் இருக்கும் எந்த உறவுக்கும் என்நிலை புரியாது. மாதாமாதம் உண்டியலில் பணம் அனுப்பி அம்மாவை ,ஐயாவை பத்திரமாக பார்த்துக்கொள் வயதான காலத்தில் தனியாக இருந்தால் நோய் நொடி வந்தால் எனக்கு எப்படித்தெரியும் என்று கேட்கும் சகோதர்களின் கவலைக்குப் பின், ஆயிரம் கனவு இருக்கும் என்று எந்த உடன் பிறந்த தாயக உறவு அறியும்?
 
 
ஜீவன் அண்ணா விளக்கமறியலில் இருக்கும் செய்தி தெரியாமல் ரவியிடம் தனக்கு ஒருத்தனைப்பிடித்திருக்கு அவனை சட்டப்படி திருமணம் செய்யப்போறன், நீங்கதான் அண்ணாவுக்கு புத்திமதி சொல்ல வேண்டும் என்று எப்படி ஒரு தங்கை முடிவு எடுக்க முடியும்? என்று விளக்கமறியல் முடிய வெளியில் வந்தவுடன் ரவி கேட்டபோது தான் நான் புரிந்துகொண்டேன்..நாட்டில் நான் இல்லாத நிலையில் குடும்பத்தின் மானம் காற்றில் சந்திசிரிக்கும் நிலையை எண்ணி..!
என்ன நண்பா நல்லா கழி தந்தாங்களா?
 
இரண்டுநாள் இல்லடா ஒரு ஒரேஞ்சு யூஸ்தான் சாப்பாடு, ஒரு பக்கட் பிஸ்கட் உனக்கு அதிஸ்ரம் பாரிஸ் விளக்கமறியலும் பார்க்கின்றாய் !ஜீவன் பாரிசில் இது எல்லாம் சகஜம். நண்பா வேலையிடத்தில் விசா இல்லை என்று பிடிப்பதும் பின் காவல்த்துறையினர் விசாரித்துப்போட்டு விடுவதும் இயல்புதானே! காவல்துறைக்கு தெரியும் சட்டவிரோதம் இப்படி மோசடி செய்வது, என்றாலும் வந்தவர்கள் சாப்பிட உடுப்பு வாங்க குடியிருக்க அரசாங்கம் தரும் உதவித்தொகை என்னத்தைக்காணும் ?என்றாலும் நம்மவர்கள் களவு எடுக்காமல் கஞ்சா விற்காமல் உடல் உழைப்பில் வாழ்கின்ற நிலைபுரிந்தவர்கள்!
இனி உனக்கு இத்தாலியன் குசினி வேலை கிடைக்குமோ தெரியாது! வெள்ளிக்கிழமை விளக்கமறியலுக்கு உள்ளே போனால் வார இறுதிகொண்டாட்டம் முடிந்து திங்கள்தான் விளக்கமறியலில் இருந்து வெளியில் விடுவாங்க என்று தெரியும்!
 
 
 ஊரில் இருந்து உங்க வீட்டில் தொலைபேசி தொல்லை பேசியாக ஆகிவிட்டது! நான் நீ தொடர்ந்து வேலை அதனால் கதைக்கமுடியாது என்று பொய் சொல்லிவிட்டேன். எதுக்கும் ஜோசிக்காத, நல்ல வழிகிடைக்கும் இந்தா முதலில் கோப்பி குடி ! ஞாபகம் இருக்கா நானும் நீயும் ராகுலும் அசங்கவுடன் அடிப்பட்டு வாழைத்தோட்ட காவல்துறை விளக்கமறியலில் இருந்தது? அங்க உள்ளாடையுடன் நிற்க்கவிட்டது போலவா இங்க விட்டாங்க? உனக்கு நக்கல் பாரிசில் அப்படி இல்லை; என்ன மூடிய அறை பாட்டு இல்லை. வெளியில் வருவதுயார் போவது யார் என்று விடுப்பு பார்க்க முடியாது! சொல்ல மறந்திட்டன், நிசாவிடம் நீ என்ன கேட்டனி ? உனக்கு எல்லாத்திலும் அவசரம் மலத்துக்கு முந்திய அது போல சோதி மாமா வீட்டை வந்தார் வீடுகிடந்த நிலையைப்பார்த்துவிட்டு
 
 
, பிறகு என்ன சொன்னார்? நிசாட முடிவு சொல்லு மச்சான்..
 
 
 
 
 
ஆ அதுவோ இந்த கோப்பியைப்விட சூடாக இருக்கும் எதுக்கும் ஒரு பியர் குடி உள்ளே இருந்து அதிகம் மன உளைச்சல் பட்டு இருப்பாய் விசா இல்லாத நிலை எனக்கு இருக்கவில்லை. உனக்கு ஏண்டா இப்படி ??

விளையாடாமல் சொல்லு நிசா என்னவாம் ? சோதி மாமா என்ன சொன்னார் ? என்னவாமோ தன்ர மோளை ஒரு கணக்காய்வாளர்வர் பட்டதாரி ஆக்கவேண்டுமாம் ! உனக்கு என்ன தகுதி இருக்கு!!
தொடரும்!

18 comments:

  1. நேசன் உள்ளதை உள்ளபடி சொல்லும் உங்க பண்பு எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கு தனிமரத்திற்கு எவ்வித சோதனைகள் வந்தாலும் உங்க பாதையில் துணிந்து செல்லுங்கோ உங்களிற்கு தோள்கொடுக்க என்போன்ற நண்பர் பலர் உள்ளோம்.

    ReplyDelete


  2. நேசன் உள்ளதை உள்ளபடி சொல்லும் உங்க பண்பு எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கு தனிமரத்திற்கு எவ்வித சோதனைகள் வந்தாலும் உங்க பாதையில் துணிந்து செல்லுங்கோ உங்களிற்கு தோள்கொடுக்க என்போன்ற நண்பர் பலர் உள்ளோம். //வாங்க அம்பலத்தார் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ முதலில் பலநாட்களின் பின்:)))



    Posted by அம்பலத்தார் to தனி மரம் at 14 November 2012 13:12

    ReplyDelete


  3. நேசன் உள்ளதை உள்ளபடி சொல்லும் உங்க பண்பு எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கு தனிமரத்திற்கு எவ்வித சோதனைகள் வந்தாலும் உங்க பாதையில் துணிந்து செல்லுங்கோ உங்களிற்கு தோள்கொடுக்க என்போன்ற நண்பர் பலர் உள்ளோம். // அம்பலத்தார் ஐயா நாங்க வெளிப்படையா பேசுவேம் அப்பி அம்பஜாலுவோ:)) நமக்கு திரட்டி ஒரு ஹீரோ இல்லை ஹீ அப்பி ரஜோதமாய் :)) விஜய்குமாரதுங்க ஹீரோ:))



    Posted by அம்பலத்தார் to தனி மரம் at 14 November 2012 13:12

    ReplyDelete
  4. குறை நினைச்சிடாதையுங்கோ தனிமரம்... என் பக்கத்தில் உங்கள் புளொக்கை இணைத்ததே உடனே பார்த்துவிட்டு வருவதற்காகத்தான், ஆனா நான் வராமல் இருந்திட்டேன்ன்.. போதிய நேரம் கிடைக்குதில்லை.

    ReplyDelete
  5. தொடர் அழகாக நகருது... தபு சங்கரின் கவிதை சூப்பர்.

    பாட்டு அருமையாக இருக்கு.

    ReplyDelete
  6. athira has left a new comment on your post "உருகும் பிரெஞ்சுக்காதலி -நாற்பது!!!": 

    குறை நினைச்சிடாதையுங்கோ தனிமரம்... என் பக்கத்தில் உங்கள் புளொக்கை இணைத்ததே உடனே பார்த்துவிட்டு வருவதற்காகத்தான், ஆனா நான் வராமல் இருந்திட்டேன்ன்.. போதிய நேரம் கிடைக்குதில்லை. 



    Posted by athira to தனி மரம் at 14 November 2012 13:50//வாங்கோ அதிரா பிந்திய  தீபாவளி நல்வாழ்த்துக்கள்  !ஆறுதலாக வாங்கோ கோபம் ஏது அவசரம் இல்லை :)))

    ReplyDelete
  7. athira has left a new comment on your post "உருகும் பிரெஞ்சுக்காதலி -நாற்பது!!!": 

    தொடர் அழகாக நகருது... தபு சங்கரின் கவிதை சூப்பர்.

    பாட்டு அருமையாக இருக்கு. 



    Posted by athira to தனி மரம் at 14 November 2012 13:51://நன்றி அதிரா அக்காள் பாட்டு பிடிச்சு இருக்கே :)) ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  8. sonthame....!

    thodarungal.....

    ReplyDelete
  9. வணக்கம் நேசன்....
    பிரெஞ்சுக் காதலி
    ஒவ்வொரு பாகத்திலும்
    பாகத்துடன் உறைந்து போகிறாள்....
    ஆரம்பத்தில் அழகிய கவிதையுடன்
    தொடரைக் கொண்டு செல்வது
    மிக அழகு....
    ..
    உங்களிடம் ஒரு வேண்டுகோள்..
    அந்தக் கவிதையை
    நீங்களாக உங்கள் நடையில் எழுத
    முயற்சி செய்யுங்கள்..
    அதன் தாக்கம் இன்னும்
    தொடருக்கு அழகு சேர்க்கும்....
    இது எனது தாழ்மையான வேண்டுகோள்....

    ReplyDelete
  10. நிகழ்வுகள் மனத்தைக் கனக்கச் செய்கின்றன.

    ReplyDelete
  11. ////விளையாடாமல் சொல்லு நிசா என்னவாம் ? சோதி மாமா என்ன சொன்னார் ? என்னவாமோ தன்ர மோளை ஒரு கணக்காய்வாளர்வர் பட்டதாரி ஆக்கவேண்டுமாம் ! உனக்கு என்ன தகுதி இருக்கு////

    என்ன செய்வது காதல் என்றாலே பலரின் கேள்வி இதுவாகத்தான் இருக்கும்

    ReplyDelete
  12. கவிதையும் பாடலும் அருமை... தொடர்கிறேன்...

    ReplyDelete
  13. sonthame....!

    thodarungal.....

    14 Novembe// நன்றி சீனி அண்ணா வருகைக்கும் தொடர் கருத்துக்கும்.

    ReplyDelete
  14. வணக்கம் நேசன்....
    பிரெஞ்சுக் காதலி
    ஒவ்வொரு பாகத்திலும்
    பாகத்துடன் உறைந்து போகிறாள்....
    ஆரம்பத்தில் அழகிய கவிதையுடன்
    தொடரைக் கொண்டு செல்வது
    மிக அழகு....// நன்றி மகி அண்ணா வருகைக்கும் பாராட்டுக்கும்.

    ReplyDelete
  15. உங்களிடம் ஒரு வேண்டுகோள்..
    அந்தக் கவிதையை
    நீங்களாக உங்கள் நடையில் எழுத
    முயற்சி செய்யுங்கள்..
    அதன் தாக்கம் இன்னும்
    தொடருக்கு அழகு சேர்க்கும்....
    இது எனது தாழ்மையான வேண்டுகோள்....

    14 November 2012 16:29 //இனி முயல்கின்றேன் மகி அண்ணா ! நன்றி கருத்துக்கு.

    ReplyDelete
  16. நிகழ்வுகள் மனத்தைக் கனக்கச் செய்கின்றன.// நன்றி முரளிதரன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  17. விளையாடாமல் சொல்லு நிசா என்னவாம் ? சோதி மாமா என்ன சொன்னார் ? என்னவாமோ தன்ர மோளை ஒரு கணக்காய்வாளர்வர் பட்டதாரி ஆக்கவேண்டுமாம் ! உனக்கு என்ன தகுதி இருக்கு////

    என்ன செய்வது காதல் என்றாலே பலரின் கேள்வி இதுவாகத்தான் இருக்கும்/ம்ம் அதில் தவறும் இல்லைத்தானே பாதுகாப்பு முக்கியம் ராச்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.


    14 November 2012 23:23

    ReplyDelete
  18. கவிதையும் பாடலும் அருமை... தொடர்கிறேன்...// நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete